பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 28 ஆகஸ்ட், 2013

நம்ம முகம் பதிச்ச தபால்தலை (போஸ்டல் ஸ்டாம்ப்)

'தமிழன்' படம் பாத்தப்போ , ச்ச ...நாமளும் எதாவது செய்யணும் நாட்டுக்கு உபயோகமா...நம்ம முகமும் தபால்தலையில வரணும்னுலாம் ஏக போக ஆசைகள் மனசுக்குள்ள இருந்தது...ஆக்சுவலா அந்த படம் நல்ல கான்செப்ட் உடைய படம் .. அத ஷங்கர் சார் எடுத்திருந்தாருனா மெகா ஹிட் ஆகிருக்கும் ..சில பல சொதப்பல்களால படம் நல்லா போகல..சரி அத விடுங்க , என்ன சொல்ல வந்தேனா , அவ்ளோ எல்லாம் கஷ்டப்படாமலேயே நம்ம முகமும் தபால்தலையில இடம்பெற செய்ய முடியும்...


எப்படி தெரியுமா?

தபால்தலையோட லாபத்தை உயர்த்த , நம்ம முகமும் பதிச்ச தபால்தலையை பயன்படுத்திக்கும் ஒரு திட்டத்தை அறிமுகபடுத்தி இருக்காங்க தபால் துறை...அந்த திட்டத்தின் பெயர் ' எனது அஞ்சல் தலை'...

தமிழ்நாட்ல இருக்குற சிறப்பு தபால் தலை சேகரிப்பு மையத்துல ஒரு விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செஞ்சு ,இந்திய அரசால கொடுக்கப்பட்ட எதாவது ஒரு அடையாள அட்டையின் நகலுடன் ,நம்ம புகைப்படத்தை இணைத்து விண்ணப்ப கட்டணமா 300 ரூபாய் கட்டணும்..அவ்ளோதான்...

விண்ணப்பத்தை கொடுத்த நாளுல இருந்து அதிகபச்சமா 15  நாளுக்குள்ள நம்ம புகைப்படம் அச்சடிக்கப்பட்ட 12 தபால்தலை நமக்கு வந்துடும்..

எப்புடிடிடிடிடிடிடிடிடிடிடி !!!!

1 கருத்து: