பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 7 ஆகஸ்ட், 2013

பார்வையற்றவங்க படிக்க இலவச கம்ப்யூட்டர் டிப்ளமோ..

சென்னையைச் சேர்ந்த தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் (Tamilnadu Association of the Blind) சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக கம்ப்யூட்டர் டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படவுள்ளன. 01.10.2013 முதல் 30.09.2014 வரை ஓராண்டுக்கு நடைபெறும். 21 முதல் 40 வயதுக்குட்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசும் திறமையும், புரிந்துகொள்ளும் திறமையும் பெற்றவர்களாக இருக்கவேண்டும். கம்ப்யூட்டர் டிப்ளமோ படிப்புடன், ஹிந்தி மொழியில் பேச்சுப் பயிற்சியும், தகவல் தொடர்பு போன்ற ஸாஃப்ட் ஸ்கில் பயிற்சியும் அளிக்கப்படும். இந்தப் படிப்பில் மொத்தம் 15 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவர். படிப்பு முடிந்தவுடன், மாணவர்களின் திறமைக்கேற்ப வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும்.


இப்படிப்புக்கான பதிவுக் கட்டணம் ரூ.500-ஐ Tamilnadu Association of the Blind என்ற பெயரில் மணி ஆர்டராகவோ அல்லது வங்கி வரைவோலையாகவோ எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். படிப்பு முடிந்ததும், இந்தப் பதிவுக் கட்டணத்தொகை மாணவர்களுக்கே திருப்பிக் கொடுக்கப்பட்டுவிடும்.

படிப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதத்துக்கு ரூ.200 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணச் சலுகையும் அளிக்கப்படும். தங்குமிடம் மற்றும் சாப்பாட்டுச் செலவும் இலவசம்.

விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

Tamilnadu Association of the Blind,
No.36, Rettaikuzhi Street, Tondiarpet,
Chennai - 600 081.
Phone No. 044 - 25956677, 9444549865, 8925767989

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 15.08.2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக