பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 10 டிசம்பர், 2021

அன்புள்ள திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு ரசிகையின் கடிதம்

அன்புள்ள திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு ரசிகையின் கடிதம்

எனக்கு விபரம் தெரிஞ்சதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் நான் உங்களுடைய ரசிகை தான். அன்புள்ள ரஜினிகாந்த் படம் பார்த்தப்போ நானும் ரஜினி uncle எங்க இருக்கீங்க ?-னு உங்களை ஒரு uncle -ஆ நினச்சு சந்தோஷப்பட்ருக்கேன். முத்து படத்தை பார்த்தப்போ அறியா வயசுல உங்கள மேல ஒரு க்ரஷ் இருந்ததுன்னு கூட சொல்லலாம். கபாலி படத்தை பார்த்தப்போ உங்கள என்னுடைய அப்பாவுக்கு நிகராதான் பாத்தேன். அதனாலயே அந்த படத்துடைய கிளைமாக்ஸ் என்னால ஏத்துக்க முடியலைன்னு கூட சொல்லலாம்.

"பத்ம பூஷன் " ,"பத்ம விபூஷண்","கலைமாமணி", "தாதா சாஹெப் பால்கே" -னு அத்தனை விருதுக்கும் சொந்தக்காரர் நீங்க ( என்னென்னமோ விருதை உங்களுக்கு குடுத்து அரசியலுக்கு உங்களை இழுக்க ,இல்ல ஒரு வார்த்தையாவது சொல்ல வைக்க முயற்சி பண்றாங்க ஆனா முடியல).

நின்னா விமர்சனம், நடந்தா விமர்சனம் , மூச்சு வேகமா விட்டா விமர்சனம், தும்மினா விமர்சனம்னு உங்க நிலைமையை, உங்க இடத்துல இருந்து பாத்தாதான் தெரியும்.

உங்களுடைய போட்டியாளர்ங்குற ஒரே காரணத்தால சில வருடங்களுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு திரு கமல்ஹாசன் அவர்களை பிடிக்காது.அவர் நடிச்ச படங்களை பாக்கமாட்டேன் பிடிக்காது.(அதுக்கு அப்பறம் அவருடைய படங்களை பார்த்தபோது தான் மனுஷன் என்னமா யோசிச்சு படம் எடுத்துருக்கார் .நாளைய உலகத்தை இன்னைக்கே நம்ம கண் முன்னாடி காட்டி இருக்காரேன்னு ஆச்சர்யப்பட்டு , ச்சே , அறியாமைல தப்பு பண்ணிட்டோமேன்னு ஃபீல் பண்ணி அவருடைய எல்லா படங்களையும் மிஸ் பண்ணாம தேடி தேடி பாத்தது வேற கதை).

இவ்வளவு வெறித்தனமா இருந்த, இருக்குற பொண்ணுதான் நான், இருந்தாலும் சில கேள்விகளை கேக்காம இருக்க முடியல.

எதுக்காக உங்கள தலைவர் அப்டீன்னு கூப்பிடனும்? உங்களை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நீங்க என்ன செஞ்சிருக்கீங்க? என்ன செஞ்சிருக்கீங்க அப்படீன்னா , காசு பணம் குடுத்து உதவுவதை மட்டும் சொல்லல. காசு இருக்குற யார் வேணும்னாலும் யாருக்கு வேணும்னாலும் உதவலாம். நான் 1500 ரூபாய் சம்பளம் வாங்கும்போது கூட 100 ரூபாய்யை சாப்பாட்டுக்கு வழி இல்லாம இருந்தவர்களுக்குனு ஒதுக்கி சாப்பாடு வாங்கி தந்துருக்கேன். நீங்க உங்களுடைய தகுதிக்கு ஏத்தமாதிரி உதவுறீங்க.அவ்ளோதான்.அத பத்தி நான் பேசல.
"மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன்மீது மண்ணுக்காசை மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது -இதை மனம்தான் உணர மறுக்கிறது" ----- "எத்தன சந்தோசம் தினம் கொட்டுது உன் மேலே நீ மனசு வெச்சுபுட்டா ரசிக்க முடியும் உன்னால நீ சிந்தும் கண்ணீரும் இங்கு நிரந்தரம் அல்ல இது புரிஞ்சிக்கிட்டாலே இங்கு நீ தாண்ட ஆளு கையில் கெடச்சத தொலைஞ்சா இன்னும் ரொம்ப புடிச்சது கிடைக்கும்-ஆனா ஆசை அடக்கிட தெரிஞ்சா இங்க எல்லாம் கால் அடியில் கெடக்கும்" இதுமாதிரி தத்துவப் பாடல்கள் மூலமா மக்களுக்கு அறிவுரை சொல்றதையும் சொல்லல.
உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்குற, ஒரு பெரிய 'பிரபலமா' இதுவரை மக்களுக்கு என்ன செஞ்சுருக்கீங்க? நீங்க ஒரு வார்த்தை சொன்னா செய்ய தயாரா இருக்குற , உங்கள பின்தொடருற மக்களுக்கு /ரசிகர்களுக்கு என்ன விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கீங்க?
எத்தனை hollywood Celebrities , awareness documentaries பண்ணிருக்காங்க, பண்ணிக்கிட்டு இருக்காங்கனு தெரியுமா? Will Smith -னுடைய EARTH ,AMEND மற்றும் Chris Hemsworth-ன் Shark Beach documentary-னு எத்தனையோ பேர் ,எத்தனையோ documentaries. Ofcourse அவங்களும் பணம் வாங்கிட்டு தான் செய்றாங்க இல்லைனு சொல்லல but செய்றாங்களே .ஒரு celebirity வச்சு documentary எடுத்து publish பண்ணினா அவங்களுடைய fans /followers பாப்பாங்க .சிறு துளி கூட பெரு வெள்ளமாகும்னு செய்றாங்க. ஆனா நீங்க அப்டி கூட எதுவும் செஞ்சது இல்லையே. அதுக்கான ஒரு அடி கூட எடுத்தது இல்லையே.

அமிதாப் பச்சன் பாருங்களேன் எவ்வளவு வித விதமான கதாபாத்திரங்கள் அவர் வயசுக்கு ஏத்த மாதிரி நடிக்கிறார்.ஹாலிவுட் -ல Liam Neeson எடுத்துக்கோங்க ஹீரோவா மட்டும் தான் நடிக்கிறார்.ஆனா அவருடைய வயசுக்கு ஏத்த கதாபாத்திரங்களில். உங்கள வச்சு படம் எடுக்குறவங்க பணம் பாக்க தான் பாக்குறாங்க. உங்களால மக்களுக்கு அவங்க வாழ்க்கைல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தனும்னு நினச்சு படம் எடுக்கல.ஆனா நீங்க நினச்சா அது எல்லாத்தையும் மாத்தலாமே.
"மாநாடு" படம் பாத்து நல்லா இருக்குனு பாராட்டின நீங்க , "ஜெய்பீம்" படம் பாக்காமலா இருந்துருப்பீங்க.கண்டிப்பா பாத்துருப்பீங்க. personal -ஆ கூட team -ஐ பாராட்டி இருக்கலாம். public -ஆ நீங்க பாராட்டி இருந்தா கூட அது அரசியல் ஆகி இருக்கும்தான் இல்லைனு சொல்லல. ஆனா இன்னும் எத்தனை நாள் மத்தவங்களுக்காக உங்க கருத்து பேச்சு சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கப்போறீங்க. இது கூட சொல்ல யோசிக்கிற ,தயங்குற நீங்க எப்படி அரசியலுக்கு வந்துருப்பீங்க.வந்திருந்தா கண்டிப்பா ஜெயிச்சு இருப்பீங்க . நாங்க ஜெயிக்க வச்சிருப்போம்.ஆனா அப்பறம் ................
உங்க வயதையும் தாண்டி இப்போ வரைக்கும் நீங்க ஹீரோவா மட்டும் தான் நடிக்குறீங்க, டூயட் பாடுறீங்க , எதிரினு ஒருத்தன காட்றாங்க அவனை பொறட்டிப்போடுறீங்க , முடிவுல அவன் திருந்திடுறான். 46 வருஷமா இதையேதான் செய்றீங்க . Producers உங்கள முட்டாள் ஆக்குறாங்களா இல்ல நீங்க மக்கள/ரசிகர்களை முட்டாள் ஆக்குறீங்களானு தெரியல. (இன்னும் எங்கள பைத்தியக்காரங்களுனே நினைச்சுகிட்டு இருக்கீங்க இல்ல)

திரைப்படத்துல காட்டுவதை தான் மக்கள் உண்மைன்னு நம்புறாங்க. மக்களுடைய எண்ணங்களே திரைப்படங்களின் மூலமாத்தான் உருவாக்கப்படுது. 'பயமா ! எனக்கா !?'-னு வசனம் பேசி நடிக்குறீங்க. நாங்க தொண்டை கிழியுற அளவுக்கு கத்துறோம் ,கைதட்டுறோம். அதே நீங்க 'MAN vs WILD' -ல ஒரு புலி விசிட் பண்ணின இடத்துக்கு இறங்கி போய் பாக்க பயப்படுறீங்க. அது நடிப்புனு சொல்லி யாராவது சமாளிச்சாலும் நீங்க Bear Grylls -னுடைய கையை பிடிச்சுட்டு போனதுல இருந்தே தெரிஞ்சது எங்களுக்கு அது நடிப்பா ! நிஜமானு!!
மக்களை வழி நடத்துறவங்களைதான் தலைவர்னு கூப்பிடனும்.தலைவர் தலைவர்னு உங்கள ஏன் கூப்பிட்டோம்?கூப்பிடுறாங்க இன்னமும்.அரசியலுக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பாத்தோம்தான் ஆனா வரலை. அதுனால என்ன ? ஒரு தாய் தன் குழந்தைமேல வைக்குறது unconditional லவ்-னு சொல்லுவாங்க. அதாவது எந்த நிபந்தனையும் இல்லாத அன்பு.உங்க மேல எங்களுக்கு இருக்குற அன்பும் அப்படித்தான் .அது எப்பவுமே மாறாது அப்படியேதான் இருக்கும்.
' Life is very short ' . 100 வயசுவரைக்கும் நாம வாழ்ந்தாலும் உலகத்துடைய வயதை compare பண்ணி பாக்கும்போது ஒரு ஒரு மனிதருடைய வாழ்க்கையும் short தான். 40 / 50 வருடம் ஆரோக்கியமா இருப்போம் அப்பறம் நம்முடைய செல்களுக்கு வயதாகும் .வயதாக ஆக நம்முடைய உடம்புல ஏற்படுற மாற்றம் நமக்கு பெரிய தடையா இருக்கும். உங்களுக்கும் 70 வயசு ஆகிடுச்சு. இன்னும் எதுக்கு தயக்கம்? இன்னும் எதுக்கு யோசனை? இப்போவும் செய்யலைன்னா இனிமே எப்போ செய்யப்போறீங்க?

நீங்க உயரத்துல இருக்கீங்க.எல்லோரும் உங்கள தலையை தூக்கி பாக்குறோம்.அப்போ உங்களுக்கு (இன்னும்)எந்த அளவுக்கு அதிகமான பொறுப்பு இருக்கும் இருக்கனும்னு பாருங்க. உங்களை நம்புற உங்கள் மேல அன்பு வச்சுருக்குற ரசிகர்களுக்கு/மக்களுக்கு திரைப்படத்தையும் தாண்டி ஏதாவது செய்யலாமே. உண்மையை சொல்லனும்னா செய்யணும்னு எங்களுக்கு ஆதங்கம்னு கூட சொல்லலாம். அவ்வளவுதான்.

அரசியல் மட்டும் power கிடையாது .அரிஸ்டாட்டில் அவர்கள் நாடகங்களை போய் பார்த்தப்போ வியந்துட்டாராம். எவ்வளவு பெரிய விஷயங்களை மக்களுக்கு எவ்வளவு எளிமையா சொல்லிடுறாங்க நாடகத்தின் மூலமான்னு வியந்தாராம். நாடகத்திலிருந்து உருவானது தானே திரைப்படமும். அப்போ மக்களுக்கு நல்ல விஷயங்களை விதைக்குறதுல எவ்வளவு முக்கிய பங்கு திரைப்படங்களுக்கு இருக்கு. விதையா இருங்க .அட்லீஸ்ட் இனியாவது.
IF NOT NOW ,THEN WHEN ?
ஈலான் மஸ்க் -கிட்ட கேள்வி கேட்டா கூட பதில் கிடைக்கும் . நம்ம ஊரு ஸ்டார் கிட்ட கேள்வி கேட்டா எந்த பதிலும் கிடைக்காதுனு எனக்கு தெரியும்.

[உங்கள பத்தி ஒரு சின்ன வார்த்தை கூட தப்பா பேசினா பிடிக்காது எனக்கு.குடும்பத்துல இருக்குறவங்ககிட்ட கூட சண்டை போடுவேன்.என்னை மாதிரி எத்தனையோ பேர் இருக்காங்க.எனக்கு கோவம் வர மாதிரி சிலபேர் உங்களப்பத்தி என்கிட்ட கேட்ட கேள்விகள் எனக்கு நியாயம்னு பட்டதால தான் அதை நான் உங்ககிட்ட இப்போ கேக்குறேன்]