பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

இதுக்கு தீர்வே கிடையாதா?என்ன தண்டனை கொடுக்கலாம் ?

டிசம்பர் மாதம் தான் டெல்லியில் ஒரு கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளானாள்.அடுத்து இப்போ மும்பைல பத்திரிக்கை துறைல வேலை செய்யும் ஒரு பெண் புகைப்படக்கலைஞரை ஐந்து பேர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி இருக்காங்க..என்ன ஜென்மங்கள் இவன்கள் எல்லாம்?!!!இதுக்கு தீர்வே கிடையாதா?

எவ்வளவு கேவலமான விஷயம்....டெல்லியில நடந்த சம்பவத்துக்கு இந்தியா முழுக்க ஆர்ப்பாட்டம் அது இதுன்னு கொதிச்சிருந்துச்சு. எத்தன நாளுக்கு?அப்பறம் நாமும் அப்படியே மறந்துட்டோம்..இப்போ மும்பைல ....இதையும் மறந்துடுவோம்....

ஆண்மகனா பிறந்துட்டாலோ இல்ல அவனுக்கு ஒரு குழந்தை பிறந்துட்டாலோ/இல்ல பிறக்க வாய்ப்பிருந்துட்டா மட்டும் அவன் ஆண்மகன் ஆகிட முடியாது.விருப்பம் இல்லாத பெண்ணை தொடணும்னு நினைக்குற எவனுமே ஆண்மகன் கிடையாது.

ஒரு பொண்ணுகிட்ட கண்ணியமா நடந்துக்கிறவன் தான் உண்மையான ஆண்மகன்.விருப்பம் இல்லாத ஒரு பெண்ணை தொட பயப்படுற அளவுக்கு கடுமையான தண்டனை குடுக்கவேணாமா?..ஈவு,இறக்கம்,மனிதாபிமானம் இல்லாத இவன்களுக்கு அதே போலவே ஈவு,இறக்கம்,மனிதாபிமானம் பாக்காம தண்டனை குடுக்க வேணாமா?

இன்னொரு பெண்ணை இந்த நிலைமைக்கு ஆளாக்கும் இவன்களோட சகோதரிகளுக்கு இந்த நிலைமை வந்தா என்ன பண்ணுவான்ங்க?சகோதரி அளவுக்கு கூட போகவேணாம், எனக்கு சகோதரிகள் இல்லன்னு கூட பெருமையா சொல்லிப்பாங்க , சகோதரி இல்லாம இருக்கலாம் , ஆனா அம்மா இல்லாத குழந்தை இந்த உலகத்துல இருக்கமுடியாது. .அம்மா யாருன்னு தெரியாம வேணும்னா இருக்கலாம் ஆனா அம்மாங்குற ஒரு பெண்ணோட உதவி இல்லாம யாரும் பொறந்துருக்க முடியாது, தன்னை பெத்தவளுக்கு இப்படி ஒரு நிலை வந்தா என்ன பண்ணுவான்ங்க இவன்ங்க ?

விருப்பம் இல்லாத பெண்ணை தொடுற ஒரு ஒரு ஆண்மகனும் ஒரு நிமிஷம் இத நினைச்சுப்பாப்பான்களா?ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாம அவளை தொடுறது எவ்ளோ பெரிய கேவலமான விஷயம்னு கூட தெரியலையா ?

இதுல ஒருத்தனுக்கு 17 வயசுதான் ஆகுதுனு அவனோட சொந்தக்காரங்க சொல்லிருக்காங்க .. தப்பு பண்ணின ஒருத்தனுக்காக இப்படி பேச அந்த மனுஷங்களுக்கு எப்படி தோணுதுன்னு தெரியல....அப்படியே அது உண்மைனாலும் மத்தவங்கள விட அவனுக்குத்தான் அதிக தண்டனை குடுக்கணும் , தப்பையும் செஞ்சுட்டு 18 வயதுக்கு கீழ இருக்கேன்னு சொல்லி சின்ன பிள்ளைங்களுக்கு குடுக்குற தண்டனை மாதிரி சீர்த்திருத்த பள்ளியில சேர்குற மாதிரி தண்டனை குடுக்குறதைவிட இவனுக்கும் பெரிய தண்டனை குடுத்தாதான் வயசக் காரணம் காட்டி கூட இனி யாரும் தப்பிக்க முடியாதுனு தெரியும்...

தவறான தொழில் பண்ற பெண்கள்ல ,அந்த தொழிலை விருப்பப்பட்டு பணத்துக்காக செய்றவங்க 20 சதவிகிதப் பேர்னா பெத்தவங்களால,கூட பொறந்தவங்களால ,கல்யாணம் பண்ணினவனால ,சொந்தத்தால அந்த தொழிலுக்கு தள்ளப்பட்டவங்க மீதி இருக்குற 80 சதவிகிதம் பேர்...

அவங்களுக்கு பிறந்த குழந்தைகள் கூட எவ்வளவோ ஒழுக்கமாக இருக்காங்களே.. சமுதாயம் தான் அந்த பிள்ளைகளையும் தப்பான கண்ணோட்டத்திலே பாக்குதே தவிர அவங்கள்ளையும் ஒழுக்கமானவங்க இருக்காங்க(ஆமா, ஒரு நல்ல ஒழுக்கமான குடும்பத்துல பிறந்து ஒழுக்கமா வளர்க்கப்பட்ட கண்ணகியை தானே நாம கற்புக்கரசினு சொல்றோம், தாசி குலத்துல பிறந்து வளர்ந்தாளும் ஒழுக்கத்தோட வாழ்ந்த மாதவியையா நாம கற்புக்கரசினு சொல்றோம்?)....இந்த மாதிரி நடந்துக்கிற ஆண்களுக்கு எல்லாம் என்ன கேடு...

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தனபால் அண்ணே ,ரொம்ப நாளுக்கு அப்பறம் உங்க கமெண்ட்ஸ் பாக்க முடியுது....இது என்ன கமெண்ட் ,என்ன திட்டுறீங்களா?

      உங்க ப்ளாக் பாத்தேன் அண்ணே...சூப்பரா இருக்கு...பதிவர் திருவிழாவுக்கு போனீங்களா?எப்படி இருந்தது?

      நீக்கு