பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 26 ஜூன், 2013

உத்தர்காண்டில் உறவினர்கள்,நண்பர்கள் பற்றி அறிய சாப்ட்வேர்

கூகிள் அறிமுகபடுத்தி உள்ள சாப்ட்வேர் மூலம் ,உத்தர்காண்டில் இந்த மழை வெள்ளத்தால்  உங்கள் உறவினர்கள்,அல்லது நண்பர்கள் யாரும் காணவில்லையா அவர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்..

 http://google.org/personfinder/2013-uttrakhand-floods/

72 மணி நேரத்தில் 1 லட்சம் பொதுமக்களை உத்தர்காண்டில் காப்பாற்றியுள்ள உண்மையான ஹீரோக்களான
நமது இராணுவ வீரர்களுக்கு 'சல்யூட்'  .


--நன்றி FB 

புதன், 19 ஜூன், 2013

ஒளி ஓவிய புகைப்படக்கலைஞர்

கோவை சேர்ந்த ஜெஸ்வின் ரேபெல்லோ  இவர் ஒரு புகைப்படக்கலைஞர்.இவர் புகைப்படக்கலைத்துறைல வித்தியாசமா ஏதாவது செய்யலாமேனு நினச்சப்போ இவருக்கு வந்த ஐடியா தான் 'ஒளி ஓவிய ' புகைப்படம் .



உலகம் முழுக்க இந்த ஒளி ஓவியத்தை மட்டும் எடுக்குற புகைப்படக்கலைஞர்கள் நிறை பேர் இருந்தாலும் அதுல இருந்து சிறந்த 73 பேர் மட்டும் தேர்வு செஞ்சு அவங்களோட புகைப்படத்தை மும்பைல கண்காட்சியா  வச்சிருக்காங்க.அதுல இடம் பெற்ற ஒரே ஒரு இந்திய  ஒளி ஓவிய புகைப்படக்கலைஞர் இவர் மட்டும் .

செவ்வாய், 18 ஜூன், 2013

ஆடியோவிலும் கேக்கலாம்

இனி 'ஸ்ரீவலைப்பக்கம்' போஸ்ட்களை ஆடியோவிலும் கேக்கலாம்.
Henceforth , you can listen to 'Srivalaipakkam' posts through audio files as well.

பார்வை இல்லைனா என்ன?

'ஸ்பெஷல் பீப்புள் '  அதாவது உடம்பில் எந்தவித ஊனமும் இல்லாதவங்களை விட சில குறைகளோட இருக்கும் இந்த 'ஸ்பெஷல் பீப்புள் '-க்கு திறமை எப்பவுமே அதிகம் தான்.அதுக்கு முக்கிய காரணம் அவங்களோட மிகப்பெரிய பலமான தன்னம்பிக்கை.

எனக்கு இந்த குறை இருக்கு என்னால எதுவும் பண்ண முடியாதுனு ஒருநாளும் அவங்க தளர்ந்துடமாட்டாங்க.அவங்களுக்குள்ள ஒரு உத்வேகம் இருக்கும் எப்பவும்.சாதிக்கணும்னு வெறி சாதாரண மக்களை விட இவங்ககிட்ட கொஞ்சம் அதிகமாவே இருக்கும்.சாதாரண மக்கள் அவங்களப்பாத்து கத்துக்கவேண்டியது நிறையா இருக்கு.


அப்படியாப்பட்ட ஒரு  மாற்றுத்திறனாளி  பத்தி தான் இப்போ சொல்லப் போறேன்.

சனி, 15 ஜூன், 2013

மருத்துவச்சேவை

கண் ,காத்து,மூக்கு,தொண்டை,இதயம்,சிறுநீரகம்ஸ்பெஷலிஸ்ட்னு மதுரைல இருக்குற பிரபல மருத்துவர்கள் மூலமா 'அகில இந்திய வித்யார்த்தி பரிஷித் மற்றும் இளைய  பாரதம் சேவா டிரஸ்ட்' எனும் பேர்ல மதுரைல  ஒரு டிரஸ்ட் 14 வருஷமா,ஞாயிற்று கிழமைகள்ல சிறப்பு முகாம்கள நடத்திகிட்டு வருது.


மதுரைல முனிச்சாலை சீனிவாச பெருமாள் கோவில் சந்தில் இருக்குற இவங்க அலுவலகலத்துல ஞாயிற்று கிழமைகள்ல இந்த முகாம் நடந்துகிட்டு வருது.இந்த சேவைக்கு மூலக்காரணமா இருந்தவர் மதுரை கல்லூரி பேராசிரியர் கே.ஆர்.பரமசிவம்.

பிடிச்ச விளம்பரம் ...

விளம்பரங்கள் ... ரெண்டு , மூணு நிமிஷத்துக்குள்ல சொல்லவந்ததை/அந்த பொருள் பற்றியதை தெளிவா,அழகா,நல்லா அதே சமயம் பாக்குறவங்க மனசுல பதியுற விதத்துல ஒரு விளம்பரத்தை எடுக்குறது சாதாரண விஷயம் இல்ல.ஒரு படத்தை எடுக்குறது விட கஷ்டமான விஷயம் .சின்னவங்களில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ஒரு ஒரு விளம்பரம் கண்டிப்பா பிடிக்கும் .
அப்படி எனக்கு பிடிச்ச விளம்பரம்ங்கள்

 1.தன் மகன் ஜெயிக்கணும்னு ஒரு ஒரு நிமிஷமும் அவனுக்காக அவனோடவே இருந்து அவனுக்கு பயிற்சி குடுத்து அவனோட எண்ணத்தை உயரவைக்கும் ஒரு அம்மாவின் அழகான முயற்சி



2.போன்ல எதிர்முனைல பேசுறவங்க குரல் கேட்டதும் ,தன் குழந்தைகிட்ட அம்மா இங்க இல்லைனு சொல்லுனு ஜாடைகாட்டுறதை பாத்த குழந்தை 'அம்மா சொல்ல சொன்னாங்க இங்க இல்லைனு ' வெகுளியா சொல்லும் , ப்யூர் சுகர் விளம்பரம் .ஆண்ட்ரியா நடிச்ச அந்த விளம்பரம் இப்போ அந்த ஒளிபரப்புறது இல்ல

3.தன்னோட உறவினர்களை காட்டி இது மாதிரி உங்க வீட்ல இருக்காங்களா ?கேட்டு நட்பின் நல்லதோர் ஆரம்பம்னு அழகா சொல்லி முடியும் ,காட்பெரி டயரி மில்க் விளம்பரம்


4.தன்னை பெண் பார்க்க வந்தவரை கிண்டலா தன் அக்காகிட்ட ஸ்லாங் பாரு லண்டன் ,நியூயார்க் ,ஸ்டைவிங்... ஸ்டைவிங் னு சொல்ல ,உனக்கு பிடிச்சுருக்கில்ல-னு அக்கா கேட்டதும் சின்ன வெக்க சிரிப்போடு அந்த சித் இல்லனு சொல்லும் அழகான காட்பெரி டயரி மில்க் விளம்பரம்



5. ஏர்டெல் ஒரு ரூபாயில் வீடியோ பாருங்க விளம்பரம்..ஒரு  சின்ன பொண்ணு விளையாட்டுல ஜெயிக்க ஹனுமனை வேண்டிக்குறா உடனே எதி அணியில இருந்த பொண்ணு தோக்குது ,அத பாத்த எதி அணி பொண்ணு "அவர் ஹனுமான் தானே ...னு சொல்லி பார்வையாலையே கேட்டு அதுக்கு எதிர் அணி பொண்ணு கொஞ்சம் தயங்கி தயங்கி மொபைல் குடுக்க ,இந்த பொண்ணு வேண்டிக்க ,இவளோட எதிர் அணி பொண்ணு தோக்குது"..இந்த  இரண்டு க்யூட் குழந்தைகளின் முகத்துல காட்டுற ரியாக்க்ஷன் அவ்ளோ அழகு..


6.ஏர்டெல் ஒரு ரூபாயில் வீடியோ பாருங்க விளம்பரம்..ரெண்டுபேர் சைகைலையே பேசிக்குற அந்த விளம்பரம்...ஹையோ !!!! அந்த குட்டி பெண்ணின் ஆக்டிங் ,சொல்ல வார்த்தையே இல்ல....


வியாழன், 13 ஜூன், 2013

ஐ.பி முகவரி அப்படீனா ?!!

ஐ.பி முகவரி இத பத்தி பல பேருக்கு தெரிஞ்சு இருக்கும் சில பேருக்கு தெரியாம இருக்கும் .தெரியாதவங்களுக்கு இப்போ ஒரு சின்ன இன்ட்ரோ ..

நாம அனுப்புற ஒரு மெயில் எப்படி பல மைல் தூரத்துல ஏழு கடல் ஏழு மலை தாண்டி இருந்தாலும் நாம அனுப்புறவங்களுக்கு சரியா போய் சேருது?

இதுக்கு காரணம் இந்த ஐ.பி முகவரி(internet  protocal  address )தான்.இப்போ ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் -ஐ இணைக்குறோம்னு வையுங்க , ஒரு ஒரு கம்ப்யூட்டரும் மத்த கம்ப்யூட்டர்-ஐ அடையாளம் காண இருக்குறது தான் இந்த ஐ.பி முகவரி.இப்போ நமக்கு எப்படி பெயர் இருக்கு அது மாதிரிதான் .பிரிண்டர் ,ஐபாட் ,டேப்லட் எல்லாத்துக்குமே இப்படி ஐ.பி முகவரி இருக்கும்.

இன்டர்நெட் இணைப்பு வாங்குற நிறுவனம் நமக்கு இத செட் பண்ணி தருவாங்க.

செவ்வாய், 11 ஜூன், 2013

ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு


ஃபேஸ்புக் பாத்துகிட்டு இருந்தப்போ வித்தியாசமான ஒரு தலைப்பு பாத்தேன்  என்ன தான் இருக்குனு பாப்போமேனு என் ஆர்வத்தை தூண்டிச்சு அந்த தலைப்பு .அந்த பக்கத்தோட பெயர் 'இதையும் கொஞ்சம் பார்த்துட்டு போங்க சார் '.அந்த பக்கத்துல நான் படிச்ச ஒரு சுவாரசியமான விஷயத்தை உங்ககிட்ட அப்படியே ஷேர் பண்றேன் .

 ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு:

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்? இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா? இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன? என்பது குறித்து அறிய சென்னையில் இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளை அணுகினோம். நம் கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தைத் தந்தார்கள் அவர்கள்.

ஏ.டி.எம். ஃபிட் கரன்சி!

ஏ.டிஏம். வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி.எம்.-ல் ரூபாய்த் தாள்களை லோடு செய்வதற்கு முன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM fit currency) மாற்றப்படுகின்றன. இந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப் பட்டுவிடும். ஆர்.பி.ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும்.

ஞாயிறு, 9 ஜூன், 2013

சோலார் பேனல்

சூரியனின் திசைமாற்றத்திற்கேற்ப தாமாகவே சூரியனை நோக்கி திரும்பிக்கொள்ளும் சோலார் பேனல்களை உருவாக்கியுள்ளது தரங்கம்பாடியில் உள்ள ஹைடெக் நிறுவனம்.

கிட்டத்தட்ட 1,000க்கும் மேல கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கும் இந்த ஹைடெக் நிறுவனம், பல பொறியியல் மாணவர்களுக்கு அவங்களோட புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான ஆலோசனைகளை இலவசமாக வழங்குறாங்கலாம் .ஒரு வாட் திறனுள்ள சீனத் தயாரிப்பு சோலார் பேனல்கள் 40 ரூபாய் முதல் விக்கப்படுது .

இதற்கு மாறா உள்ளூர்லயே விலை குறைவா சோலார் பேனல்கள் உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு இருக்காங்கலாம் , கண்டுபிடிப்பு குறித்த சந்தேகங்களுக்கு நேரடியாக செயல் விளக்கம் கொடுக்கவும் தயாரா இருக்காங்கலாம் ஹைடெக் நிறுவனத்தினர்.

தொடர்புக்கு- 95666 68066

                                          நன்றி வாரஇதழ்             


இந்த போஸ்ட்-ஐ ஆடியோவிலும் கேக்கலாம்

வெள்ளி, 7 ஜூன், 2013

நாவல் பழம்

நாவல் பழம் ,சிலபேருக்கு பிடிக்கும் சில பேருக்கு பிடிக்காது .ஆனா அதோட சிறப்பம்சம்கள தெரிஞ்சுகிட்டோம்னா நாவல் பழம் எல்லாருக்கும் பிடிக்க ஆரம்பிச்சுடும்.
  • இரத்தத்தை சுத்தப்படுத்தும் .இரத்ததிலிருக்கும் இரும்பு சத்தை அதிகரிக்கும்.இதனால இரத்தத்தின் கடினத்தன்மை மாறிஇரத்தம் இலகுவாகும்.
  • சிறுநீரகத்தை சீரா செயல்படவைக்கும் மூல நோய் இருக்குறவங்க நாவல் பழம் அடிக்கடி சாப்பிட்டா நோயின் தாக்கம் குறையும் பழுத்த நாவல் பழத்தை உப்பு இல்ல சக்கரை சேர்ந்து சாப்பிட்டு வந்தா வாய்ப்புண் ,வயிற்றுப்புண் ,குடற்புண் எல்லாம் சரியாகும். 
  • அஜீரண கோளாறு சரி செய்ய உதவும் 
  • தூக்கம் இல்லாதவங்க மதியம் சாப்பிட்டதுக்கு அப்பறம் நாவல் பழம் சாப்பிட்டா தூக்கம் இன்மை பிரச்சனை சரியாகும். 
  • ஒல்லியா இருக்குறவங்க தினமும் நாவல் பழம் சாப்பிட்டா உடம்பு தேறுமாம்.  

வியாழன், 6 ஜூன், 2013

இன்சுலினா இனி வேண்டாம்

சர்க்கரை நோய்க்குத்தர இன்சுலின், செல் மூலக்கூறில் போய் எப்படி வேலை செய்யுதுங்குறதை ஆஸ்திரேலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க.

இந்த ஆராய்ச்சியோட முடிவு, சர்க்கரை நோய் சிகிச்சையில் புதிய நம்பிக்கையைத் தந்திருக்குறதோட தினமும் இன்சுலின் தேவைப்படும் லட்சக்கணக்கானவங்களுக்கு அதன் தேவையையும் முடிவுக்கு கொண்டுவந்திருக்கு . இந்த ஆராய்ச்சி முடிவுகளை பிரதான ஆராய்ச்சியாளர் மைக் லாரன்ஸ், சர்வதேச மருத்துவ இதழான, ‘நேச்சர்’ (nature) ல் வெளியிட்டு இருக்கார்.

‘இன்சுலினை செலுத்தியவுடன் மூலக்கூறுகள் எப்படி உடம்புல இருக்குற செல்களைத் தூண்டி, இன்சுலின் ஹார்மோனை சுரக்க வைக்குதுங்கறதை இவ்வளவு நாளா புதிராக இருந்தது. 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்ச இந்த முடிவுகள், சர்க்கரை நோய்க்கு இப்போ இருக்குறத விட ரொம்ப சக்தி வாய்ந்த புதிய மருந்துகள் கண்டுபிடிக்க உதவும்’ -னு சொல்றார் மைக் லாரன்ஸ்.


இந்த போஸ்ட்-ஐ ஆடியோவிலும் கேக்கலாம்

புதன், 5 ஜூன், 2013

இது உலக நடிப்புடா சாமி ...

விஜய் டிவியின் 'அது இது எது' நிகழ்ச்சி எனக்கு பிடிக்கும்னு ஏற்கனவே சொல்லி இருந்தேன் .ஒரு எபிசோட்ல 'சிரிச்சா போச்சு' ரவுண்டுல இந்த காமெடி ஆர்டிஸ்ட்ங்க செஞ்ச கலாட்டா இருக்கே ..அத நீங்களும் பாருங்களேன் .


செவ்வாய், 4 ஜூன், 2013

இதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் ?


இது என்ன போட்டோனு பாக்குறீங்களா?ஒரு கேமரா விளம்பரத்துக்கு இந்த போட்டோங்க .எனக்கு சத்தியமாவே ஒன்னு புரியல ,கேமராவுக்கும் இந்த போட்டோக்கும் என்ன சம்மந்தம் சொல்லுங்க. இவங்க இப்படி நிக்குறதுக்கும் என்ன சம்மந்தம் ? அப்போதான் கேமராவை கவனிப்பாங்க-னா?நெஜமா எல்லாரும் கேமராவை தான் கவனிக்குறாங்கலா?கவனிக்குறீங்களா ?

எல்லா விளம்பரத்துக்கும் பொண்ணுங்கல சேத்துக்க வேண்டியது ,அந்த பொருளுக்கும் பொண்ணுங்களுக்கும் சம்மந்தம் இருந்தாலும் இல்லைனாலும் .ஆம்பளைங்க உபயோக்கிகுற பொருளை விளம்பரப்படுத்துறதுக்கும் பொண்ணுங்கதான் மெயின்.அதுவும் அந்த பர்ஃயூம் விளம்பரம் இருக்கே,கொடும கொடும ...

என்னைக்குதான் பொண்ணுங்கள ஒரு போத பொருளாவே பாக்குறதை நிறுத்தபோறாங்களோ..பணம் வந்தா சரின்னு நடிச்சுகுடுத்துட்டு போய்டுறாங்க இவங்களும்.யார தப்பு சொல்றதுனு தெரியல.

திங்கள், 3 ஜூன், 2013

பப்ப்ப்ப்பாம்பு ....

பாம்புனா படையும் நடுங்கும்னு சொல்வாங்க.பாம்புனா அவ்ளோ பயம் .ஏன்னா அது கடிச்சுடுமோ ,விஷம் நம்ம உடம்புல ஏறிடுமோனு பயம்.அந்த தன்மை மட்டும் பாம்புக்கு இல்லைனா நாம யாரும் அத மதிக்கக்கூட மாட்டோம்.

எல்லா பாம்புக்கும் விஷம் இருக்கா ? கண்டிப்பா இல்ல.விஷம் உள்ள பாம்பு விஷம் இல்லாத பாம்புன்னு ரெண்டுவகை இருக்கு.

விஷம் இருக்குற பாம்போட கருவிழிகள் நீளமா இருக்கும்,செதில்கள் சின்னதா இருக்கும்,தலை முக்கோண வடிவத்துல இருக்கும்.

பாம்புவகைல பச்சைப்பாம்பு,மண்ணுளி பாம்பு,இருதலை பாம்பு மட்டும் தான் குட்டி போடும்.மத்த எல்லா வகையும் முட்டை இடும்.

பிறக்கும் போதே பல்லோட பிறக்கும்.

ஞாயிறு, 2 ஜூன், 2013

பழைய பேப்பர்,புட்டி,குப்பைகளுக்கு மளிகைச்சாமான் !!!!!

ஸ்வீடன் நாட்ல பழைய பேப்பர்,புட்டி,குப்பைகளை குடுத்து மளிகைச்சாமான் வாங்கிக்கலாமாம்.

இந்த அரசு அங்க இருக்குற மக்கள் கிட்ட இருந்து 1 கிலோ குப்பைகளை 10 ரூபாய் வீதம் விலைக்கு வாங்குதாம்,இப்படி 45 லட்சம் டன் குப்பைகளை வாங்கி அதை மின் சத்தியா மாத்துதாம்.இதன் மூலமா 250000 வீடுகளுக்கு மின்சத்தி வழங்கப்படுகிறதுனு சொல்றாங்க.

இந்த குப்பை பத்தாதுன்னு வெளிநாட்ல இருந்து 10 லட்சம் டன் குப்பை கழிவுகளை இறக்குமதி செய்யறாங்களாம்.இதுல நார்வே நாடுதான் டன் கணக்குல குப்பையை ஏற்றுமதி பண்றாங்களாம்.

நல்ல ஐடியாவா இருக்குல்ல..

இந்த போஸ்ட்-ஐ ஆடியோவிலும் கேக்கலாம்

பாடலின் வரிகள் - வெள்ளித்திரை - விழியிலே

படம்  : வெள்ளித்திரை 
பாடியவர்கள் : சித்ரா 
பாடல் : விழியிலே 
இசை :G .V .பிரகாஷ் 

விழியிலே என் விழியிலே 
கனவுகள் கலைந்ததே 
உயிரிலே நினைவுகள் தளும்புதே 
கன்னங்களில் கண்ணீர் வந்து
உன்  பெயரை எழுதுதே 
முத்தமிட்ட உதடுகள் உலருதே 
நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன் 
என் கண்ணீர் துளியில் நமக்காக 
ஒரு மாலை சூடினேன் 

விழியிலே என் விழியிலே 
கனவுகள் கலைந்ததே 
உயிரிலே நினைவுகள் தளும்புதே 
கன்னங்களில் கண்ணீர் வந்து

பாடலின் வரிகள் - சிகரம் - வண்ணம் கொண்ட வெண்ணிலவே

படம் : சிகரம் 
பாடல் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே
இசை : S .P .பாலசுப்ரமணியம் 
பாடியவர் : S .P .பாலசுப்ரமணியம் 


வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை

பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை
கண்டு வந்து சொல்வதர்க்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தை பிரித்து விட்டலால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை

சனி, 1 ஜூன், 2013

சந்தானம் 100 !!!!!

சந்தானத்தின்  சதம் !!!

சந்தானம்...இவரோட காமெடி எல்லாருக்குமே பிடிக்கும் .சரிதானே.நல்ல டைமிங் சென்ஸ் இவருக்கு.லொள்ளு சபா பலபேரோட ஃபேவரட் ப்ரோக்ராம்னு நினைக்குறேன்.எனக்கு லொள்ளு சபா பிடிக்கும்.அப்போதுள இருந்தே சந்தானம் அவர்களோட ஜோக்ஸ்-ம் பிடிக்கும்.


சந்தானம் 1999-லையே விஜய் டிவில்-டீ கடை பெஞ்ச் ,2000-ல் சகலை vs ரகளை ,2001-ல் இருந்து லொள்ளு சபா மூலமா பிரபலம் .
2002-ல் பேசாத கண்ணும் பேசுமே படம் தான் முதல் படம்னாலும் 2004-ல் மன்மதன் தான் ரிலீஸ் ஆனது.


பாடலின் வரிகள் - ஜோதா அக்பர் - முழுமதி அவளது முகமாகும்

படம் :ஜோதா அக்பர் 
பாடல் : முழுமதி 
இசை :A .R ரஹ்மான் 
பாடியவர் -ஸ்ரீநிவாஸ் 


முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டில் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்து சென்று விட்டாள்

ஓஹோ முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டில் மான்குட்டி அவளது நடையாகும்

கால்தடமே பதியாத
கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத
மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்

பாடலின் வரிகள் - வெள்ளித்திரை - உயிரிலே என் உயிரிலே

படம்  : வெள்ளித்திரை 
பாடியவர்கள் : நரேஷ் அய்யர் 
பாடல் : உயிரிலே
இசை :G .V .பிரகாஷ் 

உயிரிலே என் உயிரிலே
உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே
விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி

காணாமல் போனாயே
இது காதல் சாபமா ?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா ?

உயிரிலே என் உயிரிலே
உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி