பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

இனி காஸ்ட்லி -யான மொபைல் போன் தொலஞ்சா 24 மணிநேரத்தில் கண்டுபிடிச்சுடலாம்.மொபைல் போனில் *#06#  என்று டயல் செய்தால் 15 இலக்க எண்கள் தோன்றும்.இதுதான் போன்-நின் ஐ.எம்.ஈ.ஐ (I .M .E .I ) நம்பர் .அதாவது international mobile equipment identity .இந்த நம்பர்-ஐ எங்கயாவது எழுதியோ அல்லது store  பண்ணியோ (மொபைல் இல்லாத வேற எதுலயாவது) வட்சுகனும்.இதுதான் தொலஞ்சா போன்-ஐ கண்டுபிடிக்க உதவியா இருக்கும்.ஒரு வேளை  போன் தொலைந்தால் இந்த நம்பர்-ஐ cop@vsnl.net என்ற மெயில் முகவரிக்கு மெயில் செய்தால் ஜி.பி.ஆர்.ஸ்(G P R S )மற்றும் இன்டர்நெட் உதவியுடன் தொலைந்த  போன்-ஐ தேடி தந்துவிடுவார்கள்.காவல் துறைக்கு செல்ல வேண்டியது இல்லை.அதுமட்டும் இல்லாமல் போன்-ஐ எடுத்த நபர் சிம் கார்டு -ஐ மாற்றி வேறு சிம் கார்டு போட்டிருந்தாலும் போன்-ஐ கண்டுபிடித்துவிடலாம்.

கம்ப்ளைன்ட் செய்வது எப்படி .....

பெயர் :
முகவரி:
போன் மாடல்:
தயாரித்த நிறுவனத்தின் பெர்யர்:
கடைசியாக பயன்படுத்திய போன் நம்பர்:
ஈமெயில் முகவரி:
போன் தொலைந்த தேதி:
ஐ.எம்.ஈ.ஐ நம்பர் .

இதை cop@vsnl.net  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.தொலைந்த மொபைல் வந்து சேரும்.

என் பெயர் ஷானு...............



என் பேரு ஷானு .நா எங்க  பொறந்தேன்னு எனக்கு தெரியாது..ஆனா எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து நா இவங்க கூடத்தான் இருக்கேன்.
என்னுடைய பெரிய எஜமான் ..சின்ன எஜமான்...என்னோட இரண்டு நண்பர்கள் ...ராம்..ஸ்ரீ...

  என்னோட பெரிய எஜமான பாத்தா எனக்கு கொஞ்சம் பயம் தான்..உண்மைய சொன்னா எனக்கு சில நேரம் அவர பாத்தா டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆகிடும்-னு சொல்லாம்.எதுக்குனா எனக்கு சில நேரம் தர்மஅடி விழுகும்..நா முடி அதிகமா இருக்குற இனம்..அதுனால சில நேரம் சிலவிஷயம்  ஒத்துக்காம எனக்கு முடி கொட்டும்...அது என் பெரிய எஜமானுக்கு பிடிக்காது..எனக்கு எதாவது உடம்பு  முடியாம போய்டுட்சுனா எனக்கு மாத்திரை குடுப்பார்..அவர ஏமாத்தவும் முடியாது..வலுகட்டாயமா குடுத்துடுவார்..அதனால தான் அவர பாத்தா பயம்..ஆனா  என் மேல அன்பாவும் இருப்பார்....

  என் சின்ன எஜமான்..எனக்கு சாப்பாடு போடறது என்ன வெளில கூப்பிட்டு போறது எல்லாம் இவங்கதான் அதிகமா செய்வாங்க...என்ன நல்லா
பாத்துப்பாங்க..சில நேரம் நா சும்மா வெளில போகணும்னு நினைச்சேனா  கூட  இவங்கள ஈஸி-யா ஏமாத்திடுவேன்.சில சமயம் எனக்கு விளையாடனும் போல இருந்தா இவங்கள கூப்பிடுவேன்..அவங்க என்ன சாப்பிட்டாலும் எனக்கும் தருவாங்க.எனக்கு பசிச்சா சமையல் செய்ற இடத்துல போய் உக்காந்துபேன்..
எனக்கு கேரட் ,தேங்காய் ரொம்ப பிடிக்கும்.மாம்பழம்,சப்போட்டா,பலாபழம்,வாழைப்பழம் என்ன ரொம்ப இஷ்டம்,ஸ்வீட்-னா எனக்கு உயிரு..ஐஸ் கிரீம்-ம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.காரமா எது குடுத்தாலும்  சாப்பிடுவேன்.அதுக்காக மிளகா சாப்பிடுவியானு   கேக்காதீங்க நாங்க விவரம்மாக்கும் .  உண்மைய சொல்லனும்னா எனக்கு பிடிக்காதது எதுவும் இல்லைன்னு சொல்லலாம்..என்ன குடுத்தாலும் சாப்பிடுவேன்..எப்ப குடுத்தாலும் சாப்பிடுவேன்...எனக்கு அடிக்கடி குடிக்க பால் என் தட்டுல ஊத்திடுவாங்க.அப்பறம் என்ன வயிர் நிரஞ்சதும் படுத்து தூங்கிடுவேன்...

ஆனா சில நேரம் அவங்க சொல்றத கேக்கலைனா தர்மஅடி விழுகும்...நா என்ன பண்ணுவேன்? எனக்கு நைட் பாத்ரூம் போகணும் போல இருக்கும்...சில நேரம் இவங்கள எழுப்புவேன்..இவங்க நல்ல தூங்குவாங்க...எழுந்திரிக்கமாட்டாங்க..சில நேரம் ரொம்ப அவசரமா இருக்குனு உள்ளேயே யூஸ் பண்ணிப்பேன்..இதை எல்லாம் கண்ட்ரோல் பண்ண முடியுமா?ஒரு நாய் எவ்ளோ நேரம் தான் கன்ட்ரோல் பண்ண முடியும் நீங்களே  சொல்லுங்க ...அதுக்கு போய் எனக்கு அடி விழுகும்...ம்...அடிக்கடி வாங்கினதால் பழகி போச்சு...சில சமயம் ,கடிக்குற மாதிரி பாவ்லா பண்ணினா பயந்து அடிக்கமாட்டாங்கனு நம்பி கடிக்கபோவேன் ஆனா அப்போ விழுகும்   பாருங்க அடி என் வாயிலையே ..உனக்கு தேவையா இதுனு என்ன நானே கேட்டுகிட்டு அமைதியா படுத்துடுவேன்...என்ன பன்றது வலி...ஒரு தரம் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்   இவன்  ரொம்ப நல்லவன்னு சொன்னதால அப்பறம்  இருந்து நா கடிக்கவும் போறது இல்ல..அடிக்குறீங்களா  அடிங்கனு வாங்கிப்பேன்...ஒரு நாய் எவ்ளோதான் அடிவாங்குறது சொல்லுங்க .

   நா யாரையும் கடிக்க மாட்டேன்க..சும்மா என்ன பாத்தா ஒரு பயம் இருக்கனும்னு கடிக்குற  மாதிரி போவேன் அவ்ளோதான்.எனக்கு பில்டிங் ஸ்ட்ராங் பேஸ் மட்டம் வீக்.புதுசா யாரையாவது பாத்தா எனக்கு கொஞ்சம் பயம் வரும் அத வெளில காட்டிக்காம இருக்க நா கடிக்குற மாதிரி காட்டுவன் அவ்ளோதான். எனக்கு ஒரு சின்ன சத்தம்நாளும் பயம். ஓடி  வந்து ஒளிஞ்சுப்பேன்.உண்மைய சொல்லனும்னா எனக்கு கரப்பான் பூச்சிய பாத்தாக்கூட பயம்ங்க. 

 
எனக்கு 2 நண்பர்கள் இருக்காங்க.ராம் ,ஸ்ரீ ..எனக்கு இவங்கள ரொம்ப பிடிக்கும்..அவங்களுக்கும் என்ன ரொம்ப பிடிக்கும்.ராம் எனக்கு சாப்பிட நெறைய வாங்கிட்டு வந்து குடுப்பாங்க.எனக்கு பைக்ல போறது பிடிக்கும்.ராமும் ஸ்ரீ-ம்  என்ன பைக்ல கூபிட்டு போவாங்க.கார்ல போறதும் பிடிக்கும்.ஸ்ரீ எனக்கு விளையாட பால், ரிங் எல்லாம் வாங்கிட்டு வந்து குடுப்பா .எனக்கு ஸ்ரீ-ஐ ரொம்ப பிடிக்கும்.ஏன்னா  என்னை  எதுக்காகவும்  அடிக்கமாட்டா.திட்டுவா ஆனா கண்டுக்கமாட்டேன்.கொஞ்ச நேரத்துல என்ன கூப்பிட்டு விளையாட ஆரம்பிச்சிடுவா.என்னோட நெறையா  விளையாடுறது ஸ்ரீ-ம் ராமும்  தான்.எனக்கும் ரொம்ப பிடிக்கும்..


சின்ன வயசுல இருந்து என் பழக்கம் என்னன்னா அரைமணி நேரம் விளையாண்டேனா   ரெண்டு மணி நேரம் தூங்கிடுவேன்.அப்போவே அப்டினா இப்போ சொல்லனுமா?




 
எனக்கு ஸ்ரீ கிட்ட பிடிக்காதது என்ன எப்படியாவது ஏமாத்தி குளிக்க வச்சுடுவா,எனக்கு எந்த பாஷைலையும் பிடிக்காத வார்த்த 'குளி-ங்கறது..எனக்கு தண்ணியை  கண்டாலே பிடிக்காத அப்பறம்   எப்படி நா குளிப்பேன் .




நானும் எங்கயாவது ஒளிஞ்சுப்பேன் எப்படியாவது என்ன கூப்பிட்டுபோயடுவா.



நானும் வரமாட்டேன்னு எவ்ளோ அடம் பண்ணினாலும் அவ கிட்ட இருந்து தப்பிக்க முடியாது.மேல தண்ணியை  ஊத்திடுவா.அப்றம் என்ன சிக்கிடோம் இனி விடவா  போறானு அமைதியா நின்னுடுவேன். ஆனா எப்படித்தான் இந்த மனுஷ பயல்க குளிக்குறான்களோ தினமும்.அப்பப்பா....

  
ஆனா குளிச்சிட்டு வந்ததுக்கு அப்பறம் என்னக்கு நல்ல கவனிப்புதான்.சின்ன எஜமான் பிஸ்கட் ,முட்டை,பால்,இல்ல வேற ஏதாவதுனு என் வயிர் நிரம்ப குடுப்பாங்க.சாப்பிட்டு வழக்கம் போல தூங்கிவேன்.


சோறு கண்ட இடம் சொர்க்கம்னு சொல்றமாதிரி எனக்கு பான்,எ.சி கண்ட இடம் சொர்க்கம்.சில சமயம் ஆண்டவா இதுலாம் அனுபவிகறதா வேணாமா னு இருக்கும்..ஆனா போன ஜென்மத்துல எதோ புண்ணியம் செஞ்சு இருக்கேன் அதான் நா இவங்ககூட சந்தோஷமா இப்படி இருக்கேன்.

எனக்கு எல்லாமே சுத்தமா இருக்கனும்.நான் தூங்குற இடம் ,சாப்பிடு தட்டு ,தண்ணிகுடிக்குற கிண்ணம்னு  எல்லாம் சுத்தமா இருக்கனும்.ஈரம்னாலே எனக்கு பிடிக்காது.மழைபேஞ்சா    வெளில இறங்க கூட  மாட்டேன் .என்ன ஒரு நாள் ராத்திரி கூடதனியா  விடமாட்டாங்க.என்னாலயும் இருக்க முடியாது.

   என் மேல அன்பா இருக்குற என் எஜமான் களுக்காக,என் நண்பர்களுக்காக அவங்கள நான் இருக்குற வரைக்கும் பத்திரமா பாத்துப்பேன்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

பழசு பழசுதான்

"அப்பா ப்ளீஸ் இந்த சம்மர் ஹாலிடேஸ்-கு தாத்தா ,பாட்டி ஊருக்கு போகவேணாம் வேற எங்கயாவது டூர் போகலாம் " என்று கெஞ்சிகொண்டிருந்தான் ராகுல்.

ஏன் ராகுல் தாத்தா,பாட்டியை பாக்க உனக்கு விருப்பம் இல்லையா?உனக்கு விளையாட அங்க ஏரி,தோப்பு,வயல்,மலை-னு எல்லாம் இருக்கு . இங்க இருக்குற வெயில் ,டென்ஷன் நு ஏதும் இல்லாம 20 நாள் சந்தோஷமா இருக்கலாமே என்றான் சந்தோஷ்.அதுலாம் சரிதான் அப்பா,ஆனா பாட்டி சமைச்சு குடுக்குற சமையல் ....அதுதான் அப்பா வேணாம்-நு சொல்றேன் என்றான் ராகுல்.

ஆமாங்க எப்பயும் சம்மர் ஹாலிடேஸ்-கு அங்கதானே போறோம் இந்த முறை வேற எங்கயாவது போவோம்.அதுவும் இல்லாம அத்தை பத்திய சாப்பாடு மாதிரி கேழ்வரகு,கம்பு கூழ் ,மிளகு ரசம்,முடக்கத்தான் கீரை தோசை-னு ...நாக்கே செத்து போய்டும் என்றாள் மலர்.

மலர்,பசங்களுக்கு புரியவைக்கவேண்டிய நீயும் என்ன சின்ன பிள்ளை மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க..நீ ஒரு நாள் புரிஞ்சிப்ப.அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அங்க தோப்பு ,வயல்,தொறவு-நு அத பாத்துக்க நேரம் சரியாய் இருக்கறதால நம்மகூட வந்து இருக்க முடியலை.வருசத்துக்கு ஒரு தடவைதானே போறோம்.நாம போகலைனா அவங்க கஷ்டபடுவாங்க .இந்த நாள் எப்போ வரும் நு காத்துகிட்டு இருக்காங்க .நாம ஏமாத்தலாமா?அதனால நாளைக்கு போறோம்.எல்லாம் எடுத்து வச்சுடு என்றான் சந்தோஷ்.

ஹய்யா நாளைக்கு தாத்தா பாட்டி ஊருக்கு போறோம் - என்று துள்ளி குதித்தவாறே ஓடினால் ராகவி.ராகுலின் தங்கை..

அப்பாவும் ,பொண்ணும் ஒரே மாதிரி இருங்க என்று முனுமுனுத்தவாறே எல்லாம் எடுத்துவைக்க தொடங்கினாள் மலர்.

அடுத்தநாள் ,கிராமத்து வீட்டை அடைந்தனர்.மனம் முழுக்க அன்போடும்,முகம் முழுக்க சந்தோஷாதோடும் சந்தோஷத்தின் பெற்றோர் விசாலாட்சியும் ,கண்ணனும் வரவேற்றனர்.

டே! கண்ணுங்களா பாட்டிய இப்போதான் நியாபகம் வந்ததா?வாப்பா ராஜா நல்லா இருக்கியா?ராஜாதி நல்லா இருக்கியாமா என்று அன்போடு விசாரித்தாள் விசாலாட்சி.நல்லா இருக்கோம் அத்தை.நீங்க எப்படி இருக்கீங்க ?மாமா எப்படி இருக்கீங்க ?என்று விசாரித்தவாறே உள்ளே நுழைந்தனர் .


குளிச்சுட்டு சாபிடுங்கப்பா எல்லாம் தயாரா இருக்கு .சாப்பிட்டு செத்த நேரம் ஓய்வு எடுங்க என்றனர் விசாலாட்சியும் ,கண்ணனும்.
சிறிது நேரத்திற்கு பின் ,பாட்டி ரொம்ப பசிக்குது என்ன இருக்கு சாப்பிட?என்றாள் ராகவி.செல்லத்துக்கு என்ன வேணும் நு சொல்லு பாட்டி செஞ்சு தரேன் என்றாள் விசாலாட்சி.நீங்க என்ன செஞ்சு இருக்கீங்களோ அது போதும் பாட்டி என்றாள் ராகவி.கேழ்வரகு தோசை,கோழி கொழம்பு செஞ்சிருக்கேன் வா சாபிடலாம் என்று அமரவைத்தாள் விசாலாட்சி.
ம் ...உன் சமையலே சமையல் தான் அம்மா ...என்று புகழ்ந்தவரே சாபிட்டான் சந்தோஷ்..ம் பாட்டி சூப்பர் என்று பாராட்டினாள் ராகவி.
பாவம் ராகுலுக்கும்,மலருக்கும் சாப்பிட்டு முடிப்பதற்குள் போதும் என்றாகி விட்டது.
சாப்பிட்டு எழுந்து நிற்க முடியாமல் மெதுவாக காலை பிடித்தவாறே எழுந்தாள் மலர்.ஏன்மா !....உடம்புக்கும் எதுவும் முடியலையா? கால் வலியா?
என்னமா சொல்லு.என்று பதறினாள் விசாலாட்சி.இல்ல அத்தை அதுலாம் ஒன்னும் இல்லை, வீட்ல டேபிள்,சேர், சோபா-னு உக்காந்து கீழ உக்காந்து எந்திரிக்க முடியலை அவ்ளோதான் என்றாள் மலர்.
அப்போ நீ சேர்-லையே உக்காந்து இருக்கலாம் இல்ல.இதுல என்னமா இருக்கு?எங்கள பாரு 60 வயசாகுது எங்களுக்கு. இப்பவும் நாங்க எவ்வளவு திடமா உடம்புலயும் மனசுலயும் தெம்பா இருக்கோம்.நீங்க சின்ன பிள்ளைங்க இப்பவே முடியலைன்னு சொல்றீங்க.
உண்மை தான் அத்தை நகரத்துல இருக்குற சவுகரியம் இங்க வராது இல்ல அத்தை என்றாள் மலர்.அது சரிதான் கண்ணு,இருந்தாலும் நாம உடம்பு முக்கியம் அதான் சொன்னேன்,சரி சரி ராத்திரி முடக்கத்தான் கீரை தோசை செஞ்சு தரேன் முட்டிக்கு ரொம்ப நல்லது என்றாள் விசாலாட்சி..ஐயோ கீரை தோசையா?என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் மலர்.

விசாலம் நீவேற ...பிள்ளைங்கள கீரை தோசை,கேழ்வரகு,கம்பு நு பயமுறுத்தாத.அவங்க அதுலாம் அங்க சாப்பிட்டு இருக்கமாட்டாங்க.கஷ்டபடுத்தாத என்னபா சந்தோஷ் பக்கதுல இருக்குற டாக்டர் கிட்ட கூப்பிட்டு போயிட்டு வா பா என்றார் கண்ணன்.
சும்மா இருங்க..புள்ளைங்க அங்க இதுலாம் சாப்பிட்டு இருகமாட்டாங்கனுதான் இங்க வரும்போது எல்லாம் செஞ்சுதறேன்.இதமட்டும்மா சாப்பிட செய்றேன்.அவங்க விருன்மி சாப்பிடற கரி கொழம்பு,மீன்,முட்டை நு எல்லாம் வேற விதமா வேற ருசியோடதானே செய்றேன். .பாருங்க ஊருக்கு கிளம்பறதுக்குள்ள நா மலரோட கால்வளியை சரி பண்ணி காட்டுறேன் என்றாள் விசாலாட்சி.
இப்படி தினமும் கண் பார்வைக்கு சிறந்த கீரை,வாய்புண் ,வயிற்று புண்ணிற்கு சிறந்த மனத்தக்காளி கீரை ,இரும்பு சத்துள்ள முருங்கை கீரை,வெந்தயக்கீரை ,மிளகு ரசம்,மிளகு கொழம்பு,மிளகு டீ, உடல் ஆரோகியதிர்ற்கு கம்பு ,கேழ்வரகு உணவுகள்,பயதன்கஞ்சி, குளிப்பதற்கு மஞ்சள்,கடலைமாவு பயத்தம்மாவு கலந்த பொடி,தலைக்கு சீகக்காய்,வெந்தயம்,செம்பருத்தி எல்லாவற்றையும் முதல் நாள் இரவே கஞ்சியில் ஊறவைத்து மறுநாள் அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்க சீகக்காய் இப்படி எல்லாம் விசாலாட்சியின் கை பக்குவதிலேயே இருந்தன.
ராகவி,மலர்,ராகுல் எல்லோரையும் கூப்பிட்டு தோப்பு ,வயல் ,மலை அடிவாரம் என்று எல்லா இடமும் சுற்றிக்காட்டினான் சந்தோஷ்..

அத்தை நான் உங்களுக்கு உதவியா இருக்கேன் என்று மலர் சொன்னாலும் இங்க ஒரு வேலையும் இல்லமா எல்லாத்துக்கும் ஆள் இருக்காங்க பாத்துப்பாங்க.சமையல் நான் பண்ணிடுவேன் நீ பிள்ளைங்களோட சந்தோஷமா இரு என்பாள் விசாலாட்சி .
12 நாளும் சென்றது.
சரி அப்பா எனக்கு ஆபீஸ்-இல் வேலை இருக்கு நானும் மலரும் கிளம்புறோம்.பிள்ளைங்க இங்க இருக்கட்டும் 10 நாளுக்கு பிறகு நான் வந்து கூப்பிட்டு போறேன் என்றான் சந்தோஷ்.சரிப்பா என்று வழி அனுப்பினர் கண்ணனும் ,விசாலாட்சியும்.ராகுல்,ராகவி தாத்தா ,பாட்டிக்கு தொந்தரவு தராம சமத்தா இருக்கணும் சரியா?என்றாள் மலர்.நாங்க பாத்துக்குறோம் நீங்க போய்ட்டு வாங்க .டாட்டா டாட்டா ...என்றனர் பிள்ளைகள்.எங்களுக்கு அவங்க என்ன செஞ்சாலும் சந்தோசம் தான் மா ..நாங்க பாத்துக்குறோம் என்றனர் கண்ணனும்,விசாலாட்சியும்.
சந்தோஷும்,மலரும் நகரத்திற்கு திரும்பினர் ..நகரத்தின் எல்லை தொட்டதும் ஆரம்பித்தது போக்குவரத்து நெரிசல்..மாசு,தூசி என நகரத்திற்குள் நுழையவே ஒரு மணி நேரம் ஆனது..பாரு 12 நாள் எவ்ளோ அமைதியான சூழல்ல ,நிம்மதியா இருந்தோம் இங்க வந்ததும் டென்ஷன் தான் என்று புலம்பியவாறே காரை ஓட்டினான் சந்தோஷ்.அதுக்கு என்ன பண்றது என்ன இருந்தாலும் சிட்டி சிட்டிதான் கிராமம் கிராமம் தான் என்றாள் மலர்.
அடுத்த நாள் தன் சிநேகிதி லதாவிடம் பேச லதாவிற்கு போன் செய்தாள் மலர்.
ஹாய் லதா எப்படி இருக்க?நேத்துதான் ஊருல இருந்து வந்தேன் நீ எங்க இருக்க?எப்படி இருக்க? என்றாள் மலர்.ராகுலும் லதாவின் மகன் அகிலனும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள்.ராகுல்,அகிலன் நட்பின் மூலமாகத்தான் லதாவும் மலரும் சிநேகிதி ஆனார்கள் சில வருடங்களுக்கு முன்பு.
அகிலனுக்கு உடம்பு சரி இல்ல மலர் ,ஹாஸ்பிடல்லுக்கும் வீட்டுக்கும் தான் அலையுறேன் என்றாள் கண்ணீருடன் .ஏன் என்னாச்சு எந்த ஹாஸ்பிடல் நான் உடனே வரேன் என்று கிளம்பினாள் ,அடுத்த 40 நிமிஷத்தில் லதாவின் வீட்டை அடைந்தாள்.
வா மலர்...
என்ன நடந்துச்சு லதா ஏன் ஹாஸ்பிடல்? என்று கேட்டாள் மலர்.
டயாபடீஸ் மலர்.நம்ம பாஸ்ட் புட் கலாசாரத்தால இப்படி..மாத்திரை,மருந்து ,ஊசி-னு அகிலனை பாகவே எனக்கு கஷ்டமா இருக்கு.என்று
அழுதாள் லதா..கம்பு,கேழ்வரகு,கோதுமை சத்தான உணவு-னு இப்படி அடிக்கடி சாப்பாட்டுல சேத்துக்காம பிசா,பர்கர்,நூடுல்ஸ்,பாஸ்தா-னு நாமளும் அவங்க போக்குக்கே விட்டு அவங்க ஹெல்த் மேல ரொம்ப அக்கறை எடுத்துக்காம சாப்பிட்டா போதும்-னு விட்டுடுறோம் இப்போ கஷ்டம் நாம கொழந்தைன்களுக்குதான்.அவங்கள பாத்து பாத்து நாமும் கஷ்டபடுறோம் என்று சொல்ல சொல்ல மலரின் நினைவில் அத்தை விசாலாட்சியும் அவரின் சமையல் பக்குவமும் நினைவுக்கு வந்தது.என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதான் என்று நினைத்துக்கொண்டாள்.
அன்று இரவே சந்தோஷிடம் ,ஏங்க பிள்ளைங்கள கூப்பிட்டு வர போகும் போது நானும் வரேங்க.அத்தகிட்ட கேழ்வரகு,கம்பு,கீரை வெரைட்டி சாதம்,தொக்கு எல்லாம் எப்படி செய்யணும்-னு கேட்டு தெரிஞ்சிகிட்டு வரணும் இனி தினம் நாம வீட்லயும் அத்தை செய்றமாதிரி உணவே மருந்து வெரைட்டி ஒன்னு கண்டிப்பா இருக்கும் என்றாள்.பரவாஇல்லையே இப்போதாவது புரிஞ்சுகிட்டியா?அப்படியே செய்யலாம் என்றான் சந்தோஷ் சந்தோஷமாக.
 

உலகிலேயே மிக பெரிய நாய் எது தெரியுமா. சைன்ட் பெர்ணட் நாய் .     இதனுடைய எடை 64  120 kg .இதனுடைய உயரம் 70 - 90 cm .9- 10 வருஷம் வாழும்.
 

 
 
 
-----இதுக்குன்னு தனியா ரூம்  கட்டனும் போல இருக்கே..


 
 
சிஹுஹா  - இது ரொம்ப சின்ன நாய்.இதனுடைய எடை 3  கக்-கும் குறைவு  .இதனுடைய உயரம் 15- 23 cm .
15 - 18 வருஷம் வாழும்.
 
 
  
 
 
                                                    ----------ஹிஹிஹிஹிஹி ..இத நம்ம காபி கப்குள்ளயே உக்காரவட்சுடலாம்.
பெட்ரோல் விலை ஏறிடுட்சு டீசல் விலை ஏறிடுட்சுனு கவல படுறோமே..ஒரு மோட்டார் வாகனத்துல 30 %  எரிபொருள் மட்டும்   தான் வண்டி ஓடுறதுக்கு பயன்படுமாம்.மீதி 70 % எரிபொருள் கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு பொருளா வெளில போகுதாம்.
                  
                              -----அடபாவமே !!இவ்ளோ விலைகொடுத்து வாங்கியும் 30 % தான் வண்டி ஓட பயன்படுதா??

தாமஸ் ஆல்வா எடிசன் 1368 கண்டுபிடிப்புக்களை மொத்தம் அறிமுகபடுத்தி இருக்கார்.ஆனா அவர்  ஸ்கூல்-கு போனது எத்தனவருஷம்  தெரியுமா? வெறும் 3 மாசம் தானாம்.
 
                              ------ஏதோ ஒரு பாட்டு நியாபகத்துக்கு வருது இல்ல.அதான் அதான்  அதே பாட்டு தான் எனக்கும் நியாபகத்துக்கு
வந்தது...

ஆனந்தம்

சஞ்சு குட்டி இங்க பாரு ...இதோ இதோ இந்த பொம்மை பாரேன் ...திர்ர்ரர்ர்ர்ர் ....அஹஹாஹ் நல்லா இருக்கா ...
என்று சாரதா சஞ்சுவிடம் விளையாடி கொண்டிருந்தாள் .. 

அழகான புன்னகை ..மேலே முன் பக்கம் முளைத்திருக்கும் அழகான 2 குட்டி குட்டி பற்கள் ..அழகாக கன்னத்தில் விழும் குழி என சஞ்சு வை பார்த்தாலே சாரதாவிற்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் துன்பம் மறந்து இன்பம் தொற்றிக்கொள்ளும் ....

பிஸ்கட் சாப்பிடறியா  செல்லம் இந்தா இங்க வா இங்க வா இதோ வாங்கிக்கோ-னு சொல்லவும் சஞ்சு எழுந்து
தத்தி தத்தி தன் சிறிய கால்களால் முதன் முறையாக நடக்க ஆரம்பித்ததும் சாரதா சந்தோஷத்தில்...வேகமாக ஓடி எதிர் பிளாட் இல் இருக்கும் சரிதாவை கூப்பிட்டாள்.

சரிதாவை சீக்கிரம் வா ...சீக்கிரம் சீக்கிரம்...

இதோ வந்துட்டேன் ...என்று மாவும் கையுமாக சரிதா வந்து நிற்க ,

மாவு அரட்சுகிட்டு  இருக்கேன் என்ன சொல்லு வந்துட்டேன் என்று சொல்லிக்கொண்டே வர ..

சஞ்சு தத்தி தத்தி நடப்பதை பார்த்து ஆனந்தம் அடைந்தாள் ..சாரதா அதற்குள் தன் மொபைல் போன் இல் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தாள் ...
எவ்ளோ அழாக நடக்க ஆரம்பிச்சுட்டே தங்கம் என்று சொல்லி சஞ்சுவை கட்டி கொண்டாள் சரிதா ..

சரி சாரதா வேலை இருக்கு வரேன் நான்... என்று சொல்லி அவசரமாக ஓடினால் சரிதா ...

சஞ்சுவை தோளில் போட்டுகொண்டு ...சாரதா தன் கணவனுக்கு போன் செய்து இன்னைக்கு சஞ்சு என்ன செய்தாள் தெரியுமா   என்று ..அனைத்தையும் விளக்கி ..சீக்கிரம் வாங்க உங்களுக்கு இந்த வீடியோ காட்டனும் சீக்கிரம் ப்ளீஸ் ப்ளீஸ் என்று கெஞ்ச ...
சரிமா வேலை இருக்கு இல்ல ..நான் சீக்கிரம் வர ட்ரை பண்றேன் என்று சொல்லி போன்-ய் கட் செய்தான் கணேஷ் ...

அதற்குள் சஞ்சு நன்றாக உறங்கிவிட்டாள் ..
 
மாலை கணேஷ் வந்ததும் ..பரவாஇல்லையே இன்னைக்கு சீக்கிரம் வந்துடீங்களே ..இருங்க காபி போட்டு எடுத்துட்டு வரேன்..

இன்னைக்கு உன்ன வெளில  கூப்பிட்டு  போலாம்-னு  சீக்கிரம் வந்தேன்..
வெளிலையா  எங்க ?

நீயே கண்டுபிடி பாக்கலாம் ...

ம்ம்ம் ...சினிமா ..

இல்ல ...

பீச் ...

இல்ல ...

உங்க சிநேகிதன் வீட்டுக்கு போகணும்-னு  சொல்லிகிட்டே இருந்தீங்களே?...

இல்ல ...

கோவிலுக்கு ...

இல்ல ..

அப்போ தெரியல நீங்களே சொல்லுங்க ...

இதோ பாரு..

காட்டுங்க ..

 டிக்கெட்.. 

உனக்கு ரொம்ப பிடிச்ச s.v.சேகர்  டிராமா டிக்கெட் ..போலாமா ? என்று காபியை  குடித்தான் ..

ஹே !! நெஜமாவா?- என்று இன்ப அதிர்ச்சி மாறாமல் டிக்கெட்-ஐ திருப்பி திருப்பி பார்த்தாள்.

இருங்க முதல்ல இந்த வீடியோ பாருங்க,என்று வீடியோ காட்ட..

சோ cute இல்ல ..என்று சொல்லியவாறே எங்க சஞ்சு குட்டி கானம்
 ,என்று கணேஷ் கேட்டான்....

லேசான வருத்ததுடன் சரிதா தூக்கிட்டு போய் இருக்கா என்றாள்..

பாரேன் ..எதுக்கு உனக்கு இபோ வருத்தம் ...சஞ்சு ..சரிதா ,சரத்-ன் மகள் ...ஆனா

அவங்ககிட்ட விட நமகிட்ட தான் அதிக நேரம் இருக்கா ..அவங்களுக்கு எவ்ளோ பெரியமனசு நீ இப்படி வருத்தப்படலாமா?

போ போ சீக்கிரம் கெளம்பு பாப்போம்-னு என்று சாராதவை அவசர படுத்தினான் கணேஷ் ...

ம் ..சரிங்க ...என்று தயாரானாள் சாரதா ...

இருவரும் கிளம்பிய பின் ..

சரிதா... சரிதா... டிராமா-கு டிக்கெட் வாங்கிட்டு வந்துருக்கார் திடிர்னு சொல்லாம ...அதான்
போய்ட்டு வரோம்..சஞ்சு எங்க இன்னம் தூங்குறாளா ? என்று எட்டி எட்டி உள்ளே பார்த்தாள் சாரதா ..

இல்ல அவங்க அப்பா வந்துட்டாங்க இல்ல ஒரே ஆட்டம் தான் என்று சொல்லி ..சஞ்சு இங்க வா யார் வந்துருகாங்க பாரு என்று சொல்ல ..சரத் சஞ்சுவை தூக்கிகொண்டு வெளியே வந்தான் ..

ஹாய் கணேஷ் ...

ஹாய் சரத் ..

சஞ்சு அப்பா ,சஞ்சு நடக்க ஆரம்பிச்ச வீடியோ பாத்தீங்களா? எங்க வீட்லதான் முதல்ல நடக்க ஆரம்பிச்சுருக்கா என்று சாரதா சந்தோஷமாக சொல்ல , ம்..பாத்தேன் ...அவ முதல் முதல்-ல பேசினதும் உங்க வீட்லதானே என்று சரத் சொன்னான்.
சரி நாங்க கெளம்புறோம் ...சஞ்சு குட்டி டாட்டா என்று கணேஷும் ,சாரதாவும் சொல்லிவிட்டு சென்றனர்.

சரிதா ,நா ஒன்னு உன்னை கேக்கட்டுமா என்று சரத் சொல்ல ..

என்ன கேளுங்க என்றாள்..

ஆமா நீ சஞ்சு நம்ம வீட்ல நம்மகிட்ட முதல் முதலா பேசலையே ,நடக்கலையே னு நீ வருதபட்ரியா?என்று சரத் கேட்க..

என்ன பேசுறீங்க நீங்க..எப்படீங்க அப்படி நினைப்பேன்..என்னைவிட அவங்க சஞ்சு மேல அன்பா இருக்காங்க.அவங்க  குழந்தை 2 வயசா  இருக்கும் போது உடம்பு முடியாம இறந்துடுச்சு அதுக்கு அப்பறம்   கொழந்தை பொறக்க வாய்ப்பில்லைனு  டாக்டர் சொல்லிட்டாங்கனு கேள்வி பட்டதும்  எவ்ளோ வேதனபட்டோம்..
நம்ம சஞ்சு மேல 2 பேரும் உயிரா இருக்காங்க.

கணேஷ் அம்மா சாரதா மேல கோவம் செஞ்சுகிட்டு கணேஷுக்கு வேற கல்யாணம் பண்ண பேச்சு எடுத்தது 
தெரிஞ்சுகிட்டு கணேஷ் அவங்க அம்மா அப்பா கிட்ட கோவிச்சுகிட்டு இனி எனக்கு சாரதா சாரதாக்கு   நான் யாரும் வேண்டாம் எங்களுக்குன்னு சொல்லிடு வந்துட்டாங்க-னு  சாரதா சொன்னப்போ ரொம்ப அழுதாங்க.
அதுல இருந்து இப்போ வரைக்கும் அவங்க அம்மா அப்பாகிட்ட பேசலையாம்.சாரதா பல தரம் சொல்லியும் கணேஷுக்கு இன்னம் கோவம் போகலையாம்.நீ அவங்க மேல இறக்கபடுற. ஆனா அவங்க உன் இடத்துல வேற பொண்ண வைக்க நினைச்சாங்க.இப்பவும் எதுவும் சொல்லமாட்டாங்கன்னு  எப்படி நம்புற.வேண்டாம்-னு  சொல்லிட்டாறாம் .

எனக்கு கஷ்டமா போச்சு.எவ்ளோ நல்ல  மனுஷங்க தெரியுமா   2  பேரும்  . 
எங்க போனாலும் அவளுக்கு எதாவது வாங்கிட்டு வந்து குடுப்பாங்க மறக்காம ..என்று சொல்லி கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தாள் ...

சில நாட்களுக்கு பிறகு ,
 காலையில் வழக்கம் போல சஞ்சு-வை எதிர்பாத்து காத்து இருந்தாள் சாரதா ...
இதோ வந்துட்டா... என்று சஞ்சுவை குடுத்தாள் சரிதா  ...
அனால் எப்போதும் இல்லாத மாற்றமாக சிறிது நேரத்தில் சஞ்சுவை சரி சாரதா குளிபாட்டினேன் தூங்கிடுவா..நா தூக்கிட்டு போறேன் .. என்று சொல்லி தூக்கி சென்றாள் ..

ஆமா 3, 4 நாலா dull ஆ இருக்கியே என்னமா ? . .என்ன ஆச்சு உடம்பு முடியலையா?என்று கணேஷ் கேட்க  ..
 
அதுலாம் இலைங்க..சரிதா 4 நாலா சஞ்சுவை சீக்கிரம் சீக்கிரம் தூக்கிட்டு போய்டரா..தூங்கிடுவா ..சொந்தகாரங்க வராங்கனுலாம் சொல்லி ...இத்தனை  நாள் அவங்க வீட்டுக்கு வர்ற சொந்தகாரங்க நம்மையும் பாத்துட்டு தானே போவாங்க ..இப்போ என்ன புதுசா..ஏதோ மாற்றம் தெரியுது.. 3 வருஷமா இப்படி ஒருநாளும் நடந்துகிட்டது இல்ல அதான் புரியாம தவிக்குறேன் என்று சொல்லி புலம்பினாள் ..
அதுலாம் ஒன்னும் இருக்காது மா....நீ தூங்கு என்று சமாதனம் படுத்தினான் சாரதாவை . ..

சரத் ஆபீஸ் -இல் இருந்து வந்ததும் ..
என்ன நானும் 4 நாலா பாக்குறேன் எப்பயும் நா வந்ததுக்கு அப்பறம் தான் சஞ்சுவை கணேஷ் வீட்ல இருந்து துக்கிட்டு வருவ, 4 நாளா இங்க இருக்காளே என்ன விஷயம் ...என்று கேட்க  ...
அதுலாம் ஒன்னும் இல்லைங்க ..நான் தான் சஞ்சுவை அதிகமா அவங்க கிட்ட நெருங்க விடறது இல்ல இப்பலாம் என்றாள்  சரிதா ....
..
ஏன் இப்படி பண்ற ..இவ மேல உயிரா இருக்காங்கனு உனக்கும் தெரியும் தானே ,என்னை விட நீ தானே இதை அதிகமா சொல்வ. பாவம் அவங்க ..மனசு எவ்ளோ வேதனை படும் ....என்று  கோவத்தில் சரத் சரிதாவை திட்டினான் ..
ஆமாங்க ..அதனாலதான் அப்படி பண்ணினேன் ..நீங்க அடுத்த மாசம் புனே branch -கு மாத்திட்டாங்க போகணும்-னு சொன்னிங்களே ...மறந்துட்டீங்களா ?திடீர்-னு  சஞ்சுவை அவங்க பாக்கலேன்னா அவகூட விளையாடலேன்னா அவங்க தாங்க மாட்டாங்க ..சஞ்சுவும் மனசு பாதிச்சுடுவா ..அதுதான் கொஞ்சம் கொஞ்சமா நான் அவங்களுக்கு எடுத்துக்குற பக்குவத்த வரவைக்குறேன் என்று சொல்ல ...

கண் கலங்கி சரிதாவை அணைத்து முத்தமிட்டான் சரத் ....என்ன மன்னிச்சுடுமா ...நா அவசரபட்டுடேன் ..
நீங்க எப்பயுமே அவசரம்தான் படுவீங்கனு எனக்கு தெரியுமே என்று சொல்லி கண்ணீரை துடைத்து சிரித்து கேலி செய்தால் சரிதா ...
அன்று கொலுவிற்கு அழைக்க வந்த சாரதா ,வாசலில் இவர்களது உரையாடலை கேட்டு ஒன்றும் சொல்வதரியாமல் நின்றாள் .

எதேச்சையாக எட்டி பார்த்த கணேஷ் ஏன் மா வாசல்லையே  நிக்குற உள்ள போய் கூப்பிடு என்று  சொல்ல..இல்லைங்க  நான் சரிதாவை தப்பா நெனச்சுட்டேன் ,என்று அவர்களின் உரையாடலை சாரதா கணேஷிடம் சொன்னாள்..

நா மன்னிப்பு கேக்கணும் அவகிட்ட என்று சாரதா சொல்ல ...
வாசலில் யாரோ நிற்பதை அறிந்த சரத்தும் சரிதாவும் பார்க்க ...கணேஷின் தோளில் சாரதா ,கண்களில் கண்ணீர் வடிய நின்று கொண்டிருக்க சாரதா சரிதாவிடம் மன்னிப்பு கேட்க ,ஒன்றும் புரியாத சரிதா மேலும் கணேஷும் சாரதாவும் நடந்தவற்றை விளக்க
சரிதாவும் தான் அவ்வாறு நடந்து கொண்டதன் காரணத்தை மறுபடியும் சொல்லி கட்டி அணைத்து  மன்னிப்பு கேட்டாள்.  
மன்னிப்பு கேட்க .

சந்தோஷத்தில் கணேஷும் ,சரத்தும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர் ...நால்வரும் சந்தோஷத்தில் சிரிக்க ஏதும் புறியாத அந்த மழலை சஞ்சுவும் தன் 2 பற்களை காட்டி சிரித்தாள்