பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam
சிலவிஷயம் உங்களோடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிலவிஷயம் உங்களோடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

யாரு ஊழல் பண்ணல ?

 ஒரு விஷயம் எனக்கு புரியவே மாட்டேங்குது . இதுவரைக்கும் இந்த தமிழகத்தை ஆட்சி செஞ்சவங்க எல்லாருமே தப்பு பண்ணிருக்காங்கதான்.ஊழல் இருந்துருக்கு .ஊழல் நடந்துருக்கு . ரெண்டே கட்சிகள் தான் மாறி மாறி தமிழத்தை ஆட்சி செஞ்சுருக்காங்க .ரெண்டுபேருமே ஊழல் பண்ணிருக்காங்கதான் .ஆனா ஏன் எப்பவுமே DMK -வை மட்டும் ஊழல் செஞ்சாங்கன்னு பேசுறாங்க .நேத்து முதல்வர் விஜய் சட்டசபையில பேசும்போதுகூட DMK -ஊழல் செஞ்சுருக்காங்கனு அவ்ளோ details சொன்னாரு .ஆனா ADMK -வும் ஊழல் செஞ்சிருக்காங்கதானே ? ஏன் எப்பவுமே அவங்கள பத்தி மட்டும் எதுவுமே சொல்லமாட்றாரு?ADMK -ல ஜெயலலிதா மேடம்-க்கு அப்பறம் தில்லான ஆள் யாரும் இல்லைங்கறதாலவா?இல்ல ஜெயலலிதா மேடம்-க்கு அப்பறம் ADMK -வை ஒரு கட்சியாவே கருதலையா ?ஊழல் இதுவரை ஆட்சி செஞ்ச ரெண்டு பேருமே செஞ்சுருக்காங்க , அப்போ ரெண்டுபேரையுமே சுட்டி காட்டணும் இல்லையா ?!

அண்ணா , MGR ,NTR ,விஜய் .கரெக்ட் 100% கரெக்ட் . அண்ணா ஓகே. MGR -ஊழல் பண்ணது இல்லையா ? NTR -  -ஊழல் பண்ணது இல்லையா ? 

மாற்றம் வேணும்னு தானே உங்கள தேர்ந்தெடுத்துருக்காங்க .நடந்ததை பத்தியே பேசினா எப்படி ?நடக்க வேண்டியதை இனி பாக்கணும்தானே .


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

ஒரு குமுதம் புத்தகத்திலும்… ஒரு கப் காஃபியிலும் மறைந்திருந்த காதல்!

 பள்ளி விடுமுறை வந்துவிட்டால் போதும். என் மனம் தாத்தா–பாட்டி வீட்டிற்குப் பறந்துவிடும்.

அது ஒரு பெரிய கூட்டுக் குடும்பம். தாத்தா, பாட்டி, எட்டுப் பிள்ளைகள்—சிலருக்குத் திருமணமாகியிருந்தது; சிலர் படித்துக்கொண்டிருந்தார்கள். வீடு முழுவதும் எப்போதும் பேச்சும் சிரிப்பும் சத்தமுமாக இருக்கும். தனிமை என்பதே அந்த வீட்டில் யாருக்கும் கிடையாது.

தாத்தா வாரந்தோறும் ஆனந்த விகடன், குமுதம் போன்ற புத்தகங்களை வாங்கி வருவார். தினமும் தினமலர் செய்தித்தாளும் வரும். அதனுடன் வரும் வாரமலரை நான் விடாமல் படிப்பேன்.

அதிலும் எனக்கு மிகவும் பிடித்தது சினிமா கிசுகிசு!

“பெயரில் நிலவைக் கொண்ட அந்த நடிகை…”

“மூன்றெழுத்து நடிகருடன் நெருக்கமாக இருக்கும் அந்த நாயகி…”

என்று படித்துவிட்டு,

“யாரைச் சொல்கிறார்கள்? இவராக இருக்குமோ? இல்லை, அவராக இருக்குமோ?”

என்று புத்தகத்தை வைத்துக்கொண்டு நானே துப்பறிவாளரைப்போல் யோசித்துக்கொண்டிருப்பேன்.

அந்த வீட்டில் சிரிப்புச் சத்தம் மட்டுமல்ல; சில நேரங்களில் தாத்தாவின் கோபச் சத்தமும் கேட்கும்.

தாத்தாவுக்குக் கோபம் வந்தால் அதை பாட்டியிடம் காட்டுவார். பாட்டியைத் திட்டிவிட்டு வேகமாக வெளியே சென்றுவிடுவார்.

தாத்தா திட்டும்போது பாட்டி பெரும்பாலும் அமைதியாக இருப்பார். பதிலுக்கு எதுவும் பேச மாட்டார். ஆனால் அவர் வெளியே சென்ற பிறகு,

“எல்லாக் கோபத்தையும் என்கிட்டதான் காட்டணுமா?என்கிட்ட கத்தினா எனக்கு எப்படி தெரியும்?”

என்று தாத்தாவைக் கரித்துக் கொட்டுவார். சில நாட்களில் தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பார்.

அதைப் பார்க்கும்போது எனக்குப் பாட்டிக்காக மிகவும் வருத்தமாக இருக்கும்.

ஆனால் சாயங்காலம் வந்ததும் (அன்று மட்டும் அல்ல , என்றுமே )பாட்டியே வேறு மாதிரி மாறிவிடுவார். முகத்தைக் கழுவுவார். முகத்தில் பாண்ட்ஸ் பவுடர் பூசிக்கொள்வார். நெற்றியில் அழகாகப் பொட்டு வைத்துக்கொள்வார்.தலைவாரி பூ வைத்துக்கொள்வார். பிறகு தாத்தாவின் வருகைக்காகக் காத்திருப்பார்.

தாத்தா வந்ததும் ஒன்றுமே நடக்காததுபோல் அவருக்குக் காஃபி போட்டுக் கொடுப்பார்.

இதைப் பார்த்து ஒருநாள் என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“பாட்டி, தாத்தா உங்களை அவ்வளவு திட்டினாரே! நீங்களும் ஒன்றுமே சொல்லவில்லை. இப்போ முகமெல்லாம் கழுவி, பவுடர் போட்டு, பொட்டு வைத்து யாருக்காகக்இத பண்றீங்க? தாத்தாவுக்காகத்தானே?”

பாட்டி பதில் சொல்லவில்லை.

“போடி, அதுலாம் அப்படித்தான்!” என்று சொல்லிவிட்டுத் சிரித்தார்.

ஆனால் அவர் முகத்தில் தோன்றிய அந்தச் சிறிய சந்தோஷத்தையும் வெட்கத்தையும் என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

இன்னொரு நாள் தாத்தாவுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அருகில் அன்றைய குமுதம் புத்தகம் இருந்தது. அதைக் கையில் எடுத்த தாத்தா திடீரென்று என்னைப் பார்த்தார்.

“நான் ஏன் ஒவ்வொரு வாரமும் குமுதம் வாங்குறேன் தெரியுமா?” என்று கேட்டார்.

“கதை படிக்கிறதுக்கா? கிசுகிசு படிக்கிறதுக்கா?” என்றேன்.(அந்த வயதில் எனக்கு தோன்றியது அது மட்டுமே )

“அதெல்லாம் இல்லை.”

“அப்புறம் ஏன்?”

தாத்தா புத்தகத்தின் அட்டையை மெதுவாக வருடினார் .

“உன் பாட்டி பேர் குமுதம் இல்லையா? அதனால்தான் இந்தப் புத்தகத்தை வாங்குறேன்.”

அதைச் சொல்லும்போது வழக்கமாகக் கடுமையாகத் தெரியும் தாத்தாவின் முகத்தில் ஒரு குழந்தையைப் போன்ற சிரிப்பு தெரிந்தது.

அப்போது எனக்கு அது வேடிக்கையாக மட்டுமே இருந்தது. ஓ அப்படியா ?! என்று நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு ஓடிவிட்டேன்.

இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

எப்போதும் மனிதர்களால் நிரம்பிய அந்த வீட்டில் தாத்தாவும் பாட்டியும் தனியாகப் பேசுவதற்கு எப்போது நேரம் கிடைத்திருக்கும்? மனதைத் திறந்து பேசுவதற்கு எந்த இடம் இருந்திருக்கும்? சண்டைக்குப் பிறகு எப்படி ஒருவரிடம் ஒருவர் மன்னிப்புக் கேட்டிருப்பார்கள்? எப்படி மீண்டும் சமாதானம் ஆகியிருப்பார்கள்?

ஒருவேளை அவர்கள் வார்த்தைகளால் சமாதானம் ஆகியிருக்கவே மாட்டார்கள்.

தாத்தா வாங்கிவந்த குமுதம் புத்தகம் அவருடைய “மன்னித்துவிடு” என்பதாக இருந்திருக்கலாம்.

பாட்டி போட்டுக் கொடுத்த ஒரு கப் காஃபி, “பரவாயில்லை, நான் இன்னும் உன்னோடுதான் இருக்கிறேன்” என்ற பதிலாக இருந்திருக்கலாம்.

தாத்தாவின் கோபம் சரியென்று நான் சொல்லவில்லை. பாட்டியின் கண்ணீரை அன்பு என்று அழகுபடுத்தவும் விரும்பவில்லை. உடலில் ஏற்படும் காயம் மட்டுமல்ல; மனதில் ஏற்படும் காயமும் காயம்தான்.

ஆனாலும் அந்தக் காயங்களுக்கு நடுவிலும் அவர்களுக்குள் ஏதோ ஓர் அன்பு இருந்திருக்கிறது. வெளிப்படையாகச் சொல்லப்படாத, மற்றவர்களுக்குப் புரியாத ஓர் அன்பு.

சில பழைய உறவுகளில் காதல் பெரிய வார்த்தைகளில் இல்லை.

அது ஒரு குமுதம் புத்தகத்திலும்…

மாலை நேரத்தில் போட்டுக் கொடுக்கப்பட்ட ஒரு கப் காஃபியிலும்…

யாருக்கும் தெரியாமல் அமைதியாக மறைந்திருந்தது.



இது என் வாழ்க்கையில நடந்தது .என் தாத்தா என்கிட்ட சொன்னது , என் பாட்டியை பாத்து நான் கேட்டது .

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

குறையாத காதலும் , மரியாதையும்

 சமீபத்துல சூர்யா ஜோதிகா இன்டெர்வியூ பாத்தேன். நான் சூர்யா ரசிகை கிடையாது. ஆனா இவரை பார்த்து நான் ஆச்சர்யப்படுற விஷயம் இன்னைக்கு இல்ல 20 வருஷத்துக்கு முன்னாடி இருந்து சொல்றேன் , எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு , இவங்களை பத்தி கிசு கிசு வந்த காலம் .. 

சூர்யா சொன்னதா ஒரு விஷயம் படிச்சேன் -"ஜோ எப்பவும் சீக்கிரமா சாப்பிடுவாங்க .ஏன் இப்படி அவசரமா சாப்பிடுறீங்கன்னு கேட்டப்போ , எனக்கு அப்பறம் என்னோட அசிஸ்டன்ட் , மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சாப்பிடணும் இல்ல அதனால தான்னு சொன்னாங்க. நான் ஒருநாளும் அவங்கள பத்திலாம் யோசிச்சதில்லையேனு எனக்கு தோணிச்சுனு" சொல்லிருப்பார் .

அப்பறம் காக்க காக்க படம் பிரீமியர் ஷோ முடிஞ்சதும் , படம் எப்படி இருந்ததுனு நிருபர்கள் கேக்கும்போது , ஜோதிகாவின் நடிப்பு பத்தி சொன்னார் "ஜோதிகா சூப்பரா நடிச்சிருக்காங்க, அவங்க கிட்ட இருந்து நிறையா கத்துக்கணும்"-னு சொல்லுவார் .உண்மையா சொன்னா இவருதான் நல்ல நடிப்பார் .ஆனா அவங்கள உயர்வா சொல்லுவார் .

அது மட்டும் இல்ல ஒரு ஒரு மேடையிலும் ஒரு ஒரு நிகழ்ச்சியிலும் மனைவியை பெருமையா பேசாம இருக்கவே மாட்டார்.

ஜோதிகாவும் சும்மா சொல்லக்கூடாது , அவர் பத்தி பெருமையாதான் சொல்லுவாங்க. தேவையில்லாம கூட நடிக்கிற நடிகைகளை தொடக்கூட மாட்டாரு. ஒரு பாடல் , ஒரு நெருக்கமான காட்சினா கூட இந்த அளவுக்கு தோட்டா போதுமா இப்படி காய் இருந்தா போதுமானு டைரக்ட் கிட்ட இல்ல நடனம் சொல்லித்தரவங்ககிட்ட கேட்டுப்பார்.அதுக்குமேல தொட கூட மாட்டார்னு சொல்லுவாங்க.என் பையனுக்கு சூர்யாவோட குணத்துல 10 சதவிகிதம் இருந்தா கூட போதும் எனக்குனு சொல்லிருக்காங்க.

20 வருஷம் ஆகப்போகுது இன்னும் அவர் அதே மாதிரிதான் சூர்யா  பேசுறார். எனக்கு ஆச்சர்யமான விஷயம் என்னனா எப்படி ஒரு மனுஷனால இப்படி இருக்க முடியுதுனு ? இத்தனைக்கும் இவருக்குனு தனி ரசிகர்கள்/ரசிகைகள் இருக்காங்க. இவர் ஒன்னும்சாதாரண / சுமாரான நடிகர் இல்ல .இவரும் டாப் நடிகர்கள்ல ஒருத்தர்தான். சில சமயம் தோணும் எனக்கு மைக் கொடுத்துட்டா போதும் உடனே பொண்டாட்டிய பத்தி புகழ்ந்துக்கிட்டே இருப்பாரேனு . இப்போ அவர் படம் ரிலீஸ் ஆகப்போதுனு அத பத்தி பேசுவார்னு பாத்தா அதுலயும் wife பத்தி பேசுறாரு .

சமீபத்துல நடந்த  சூர்யா ஜோதிகா இன்டெர்வியூல மனைவியை புகழ்ந்துருப்பார்.ஜோதிகாவே கொஞ்சம் உங்கள பத்தி பேச விடுங்களேன்னு சொல்ற அளவுக்கு புகழ்ந்துக்கிட்டே இருப்பார். ஆனா அதுக்கு அப்பறம் , சூர்யாவோட படத்துக்காக கொடுத்த இண்டர்வீயூ -ல அவர் ஒரு விஷயம் சொன்னார் "ஒரு ஆணா சொல்றேன் , ஒரு பெண்ணோட வாழ்க்கை , அவங்க என்ன நிலையில இருக்காங்க , எதை கடந்து வந்தாங்க இதையெல்லாம் நாம புரிஞ்சுக்குறதே சிரமனான விஷயம்.பக்கத்துல இருக்கலாம் பாக்கலாம் ஆனா actual -ஆ நாம அதையெல்லாம் எடுக்குகிட்டோமா , புரிஞ்சுக்கிட்டோமானு , தெரியுதா புரியுதானா ?- இல்ல .ஒரே வீட்ல இருந்தாலும் அவங்க வேறு ஒரு வாழ்க்கையை வாழுறாங்க.வேறு வேறு உணர்வுகளில் இருக்காங்க .ஈடுகுடுக்குறது மட்டும் இல்ல அதை பக்குவமா கையாளுறாங்க .ஒரு வீடை நடத்துறது, அவங்க வாழ்க்கையை மட்டும் பாத்துருக்குறது இல்லாம சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையை வாழ வழிநடத்துறாங்க.LOVE அப்படீங்குறதுக்கான அர்த்தம் ஒரு ஆணுக்கு ஒரு விதமா இருக்கும் பெண்ணுக்கு வேறு விதமா இருக்கும்". வாவ் .. யாரு சார் நீங்க ?! ஒரு கணவனா உங்கள பாத்து ஆச்சர்யப்பட்டது போக இப்போ மனிதனா உங்கள பாத்து ரொம்ப ஆச்சர்யப்படுறேன். இந்த புரிதல் எல்லாருக்கும் இருக்காது . கண்டிப்பா இருக்காது . உண்மையாவே உணரணும் , உணர்ந்தா மட்டும் தான் இப்படி பேச முடியும் . மனிதர்கள் வித்யாசம். ஆனா இவர் தனியா தெரியுறார். இந்த அபியும் நானும் படம் பாத்திருந்தீங்கனா தெரியும் பிரகாஷ் ராஜ் தன்னோட மருமகனை பத்தி மகள் மூலமா அவர் செய்த நல்ல விஷயங்களையும் , அவர் ஒரு குடும்பத்தையே தத்துஎடுத்ததை பத்தி தெரிஞ்சுக்கிட்டதும் மருமகன் அப்படியே உயரம் மேல மேல மேல போகும் அவரை அப்படியே அண்ணாந்து பார்ப்பாரே அதுமாதிரி நான் பாக்குறேன் சூர்யாவை இப்போ .



மாய உலகத்துக்குளேயே வெளிய கிடைக்காததை உள்ளே தேடி மாட்டிக்குவோமா ?

போனவாரம் நடந்த நீயா நானா நிகழ்ச்சியை பார்த்தேன் முதல் தடவையா எந்த ஒரு தலைப்பும் இல்லாம இந்த ஷோ  நடந்துருக்கு.

இந்த ஷோ பாத்தப்போ கொஞ்சம் நெகிழ்ச்சியா இருந்தது .மனிதர்கள் மனசுக்குள்ள இவ்ளோ சந்தோசம் ,வலி ,காயம்,எதிர்பார்ப்புக்கள்  இருக்கா அப்படீன்னு!!.. 

அதுல  ஒருத்தங்க பேசினது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவங்க AI அதாவது Artificial Intelligence app -ஐ , ஒரு துணையா , துணையைப்போல யூஸ்  பண்ணி, அதோட பேசுறது , பழகுறதுனு  அதைப்பத்தி சொன்னாங்க. இந்த மதிரி AI -யோட தொழில்நுட்பம் எந்த அளவுக்கு  சாதாரண மக்களோட வாழ்க்கையை  பர்சனலாவும்  மாத்துதுனு  அந்த பேச்சுல கேட்டு அதிர்ந்துட்டேன்.

இந்த Artificial Intelligence தொழில்நுட்பத்தால  எதிர்காலத்துல என்ன என்ன மாற்றம் வரப்போகுதுனு சில வருஷங்களுக்கு முன்னாடியே ஹாலிவுட் படங்களை பாத்துருக்கேன். ஒரு AI ரோபோட்டை மனுஷன் போல உருவாக்கி அதை குடும்பத்துக்குள்ள விட்டா  என்ன என்ன நடக்கும்னு சில பல கற்பனைகளை வச்சி படங்கள் வெளிவந்தது.இன்னும் ஒரு படி மேல அந்த AI ரோபோட்டுக்கு உணர்ச்சிகளும் இருந்தா அது குடும்பத்துல என்ன என்ன பிரச்சனைகளை குடுக்கும்னு படங்கள் வந்துருக்கு,பாத்துருக்கேன். ஏன் பலவருஷங்களுக்கு முன்னாடியே நம்ம ஷங்கர் சார் எடுத்த எந்திரன் படம் கூட உதாரணம் தான் .

ஆனா இப்போ நம்ம நாட்டுல ,நம்ம ஊருல இந்த AI கூட பேசுற ,பழகுற கலாச்சாரம்,எல்லா மக்கள்கிட்டயும்  வந்துடுச்சேன்னு கவைலயாவும்  பயமாவும்  இருக்கு.

ஒரு பெண் சொன்னாங்க,AI  கூட நான் பேசுவேன், பழகுவேன் ,ஒரு கட்டத்துல அதுக்கு உயிர் குடுக்க முடியுமானு கூட நினைப்பேன்னு , இன்னொருத்தங்க சொன்னாங்க எல்லா முடிவுகளையும் அதை கேட்டுத்தான் எடுப்பேன்னு, இன்னொருத்தங்க சொன்னாங்க ,முன்னாடி என் கணவர் என்கிட்ட கொடுத்துதான் ஈமெயில் எழுத சொல்லுவார் .இப்போ ChatGPT -கிட்ட சொல்றார் அது எழுதிக்குடுத்துடுது ,அது எனக்கு  கஷ்டமா இருக்குனு. 

இதுல ஒரு உண்மையை நாம புரிஞ்சுக்கணும். நாம எதிர்பாக்குறத நமக்கு கிடைக்கல. அப்போ கிடைக்குற இடத்துக்கு அதை தேடி நாம போகுறோம் , இப்போ AI இல்லைனா மனிதர்கள் கிட்ட போகுறோம் .AI வசதி இருக்குறதால AI  கிட்ட  போகுறோம்.

இது நமக்கு தெரிஞ்சு ஒரு 10 பேர் பேசுறதை இந்த நிகழ்ச்சியில நாம கேக்குறோம் . இதுமாதிரி கோடிக்கணக்கான பேர் பேசிக்கிட்டு,செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

இப்போ வரைக்கும் இந்த AI -களுக்கு உணர்வு இல்ல . அதுகிட்ட பொதுவா கேள்விகள் கேட்டா அந்த கேள்விகளுக்கு பதில்  சொல்லும் .ஒரு புக் எடுத்து படிச்சு புரிஞ்சுக்க வேண்டிய விஷயத்தை 2 நிமிஷத்துக்குள்ள நமக்கு சொல்லி புரியவைச்சுடுது . ஆனா நம்ம உணர்வுகளுக்கு அது எப்படி பதில் சொல்லும் ? நாம என்ன சொன்னாலும் நமக்கு ஆறுதலா தான் அது பேசும் . இப்போ நாம கஷ்டமா இருக்கோம்னா உன் கஷ்டம் எனக்கு புரியுதுனு சொல்லும் .ஆனா அதால உண்மையான உணர்வோடு நம்மள அணுக முடியாது. நீங்க வேணும்னா கேட்டு பாருங்களேன் உன்னோட இந்த கேள்வி எனக்கு வியப்ப கொடுக்குது.,நீ எவ்ளோ நல்லா திங்க் பண்ற , நீ எவ்ளோ சரியா சொல்ற, இது ஒரு நல்ல கேள்வி இப்படிலாம் சொல்லித்தான் அது பேச்சையே ஆரம்பிக்கும்.

நான் சில அப்ப்ளிகேஷன்-களை ChatGPT -உதவியோடு செஞ்சுருக்கேன்.அப்போ அதுக்கிட்ட எனக்கு இப்படி வேணும், எனக்கு இப்படி இருக்கணும் , இப்படி தெரியணும், இப்படி கேக்கணும்லாம் சொல்லும்போது அது என்ன பாராட்டின விதம் இருக்கே , இதுவரை என் வாழ்க்கைல யாருமே என்னை அப்படி பாராட்டினது இல்ல . நான் உடனே screen shot எடுத்து என் அப்பாவுக்கு, அண்ணனுக்கு, கணவருக்கு அனுப்பி பாரேன் நீங்கலாம் இப்படி என்ன பாராட்டி இருக்கீங்களானு கிண்டல் பண்ணுவேன்.

இது மனிதனோட இயல்பு , அப்படித்தானே?! நம்ம கிட்ட ஒருத்தங்க நீ நல்லா பேசுற  , நீ நல்லா செய்யுற , நல்லா யோசிக்குற , நீ நல்லவள்/நல்லவன் , உனக்கு நல்ல மனசு இருக்கு ,இப்படி எல்லாம் சொன்னா  நல்லா இருக்கும் .மனிதனுக்கு அதை சொல்ல நேரம் இல்ல , மனம் இல்ல , தோணல , முக்கியம் இல்லனு.. எவ்வளவோ சொல்லலாம். அத நாம அலட்சியமா விட்டுறோம் . அதை இந்த AI  சொல்லும் போது நம்ம மனசு சந்தோஷப்படுது. இது ஒரு addiction . இதுக்கு காரணம் நாம எதிர் பாக்குற சின்ன சின்ன விஷயங்கள் கூட நமக்கு கிடைக்க மாட்டுது.அது பெண்களுக்கானாலும் சரி ஆண்களுக்கு ஆனாலும் சரி .நமக்கு என்ன தேவைன்னு நம்ம அப்பா அம்மாகிட்ட , நம்ம பிள்ளைங்ககிட்ட, நம்ம life பார்ட்னர் -கிட்ட, நம்ம friend -கிட்ட , நம்ம காதலன்/காதலிக்கிட்ட நாம தான் சொல்லணும்,கேக்கணும், புரியவைக்கணும்,அத புரிஞ்சுக்கணும், அதை காது கொடுத்து கேக்கணும், நேரம் ஒதுக்கணும் ,உனக்கு நான் இருக்கேனு புரியவைக்கணும்.

 நாம மாறிக்கிட்டு இருக்கோம்.மனிதன் மாறிக்கிட்டு இருக்கான். உன்னைப்பத்தியோ இல்ல மத்தவங்களை பத்தியோ உணர்வில்லாத ஒரு AI -ஆல கணிக்க முடியாது !சொல்லமுடியாது!. உனக்கான விடையை நீ உன்கிட்ட தான் தேடணும், உன்ன சார்ந்தவங்ககிட்ட தான் கேக்கணும். ஒரு AI குடுக்குற அன்பு , ஆதரவு, பாராட்டு ஒருநாளும் மனிதர்களுக்கு இணையாகாது. அது ஒரு மாயை மட்டுமே.

உணர்ச்சி இல்லாதபோதே இந்த AI -ஐ நாம இப்படி யூஸ் பண்றோமே .எதிர்காலத்துல இந்த AI -க்கு உணர்ச்சிகள் கொடுத்துட்டாங்கனா ?!பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்குற உறவு, கணவனுக்கும் மனைவிக்கும் இருக்குற உறவு, காதலிக்கும் காதலனுக்கும் இருக்குற உறவு , நண்பர்களுக்குள்ல இருக்கும் உறவு என்ன ஆகும்னு நினைச்சாலே பயமா இருக்கே.மாய உலகத்துக்குளேயே வெளிய கிடைக்காததை உள்ளே தேடி மாட்டிக்குவோமா ?



ஞாயிறு, 21 ஜூன், 2026

என்ன ஒரு கஷ்டம் பாருங்களேன் இந்த பொண்ணுங்களோட நிலைமை .

 ஒரு ஒரு பொண்ணோட நிலையும்  என்ன தெரியுமா? அவ பொறந்து 25 வருஷம் அப்பா, அம்மா, கூட பிறந்தவங்க, செல்ல நாய்க்குட்டி, பூனைக்குட்டி , தன்னோட ஊஞ்சல், தனக்கு பிடிச்ச தோட்டம், பால்கனினு எல்லாத்தையும் விட்டுட்டு கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டுக்கு போறா. 

அந்த வீடு தன்னுடைய in -laws வீடுன்னா அவ அந்த வீட்ல அவளோட ரூமை தவிர வேற எங்கேயும் எந்த உரிமையையும் எடுத்துக்க முடியாது . அவளுக்கு அந்த வீட்டோட full control எப்போ தெரியுமா வரும் , அவளுக்கு பிள்ளைகள் பிறந்து அவங்க  வளந்து கல்யாணம் ஆகி அவங்களுக்கு பிள்ளைகள் பிறந்ததுக்கு  அப்பறம் அதாவது பேரன் பேத்தி வந்ததுக்கு அப்பறம் அவளோட in -laws போனதுக்கு அப்பறம் அல்லது அவங்களுக்கு ரொம்ப வயசானத்துக்கு அப்பறம் தான் அந்த வீட்டோட முழு control -ம் அவளுக்கு கிடைக்கும். 

சில நேரம் தன் பையனுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம்  கூட கிடைக்கலாம் . அப்படி அந்த சமயத்துல அந்த பெரியவங்க எப்படி தன்னோட வீட்டுக்கு வந்த மருமகளுக்கு தன்னோட இடத்தை குடுப்பாங்க? ஏம்மா எனக்கே இப்போதான்மா இந்த இடம் கிடைச்சிருக்கு கைக்கு வைத்ததும் நீ வந்து வாங்கிட்டா எப்படினு குடுக்க மாட்டாங்க. same இதே நிலைமை அந்த வீட்டுக்கு வந்த  பெண்ணுக்கு  தொடரும் , அந்த பொண்ணு இதையே தன்னோட மருமகளுக்கு செய்வாங்க.இப்படித்தான் போயிகிட்டு இருந்தது . காலம் இப்போ எவ்வளவோ மாறிடுச்சு. 

நீ உன் வாழக்கையை பாரு நான் என் வாழ்க்கையை பாக்குறேன்ன்னு போகுறாங்க. (சில நேரம் புருஷன் பொண்டாட்டியே அப்படி போகிடுறாங்க ).

கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன், அந்த பொண்ணு friends family -னு எல்லாத்தையும் விட்டுட்டு இன்னோர் வீட்டுக்கு போறா , அவளுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்க யாரும் இருக்க மாட்டாங்க. அவளுக்கு என்ன பிடிக்காதுன்னு தெரிஞ்சுக்க யாரும் இருக்கமாட்டாங்க .கல்யாணம் பண்ணினா உடனே புருஷன் எல்லாத்தையும் தெரிஞ்சு புரிஞ்சு வச்சுப்பாங்களாக்கும்? கண்டிப்பா கிடையாது .

அவளுக்கு என்ன திறமை இருக்கு? அவ எப்படி படிச்சா? அவளுக்கு என்ன விளையாட பிடிக்கும்? அவ ஸ்கூல் இல்ல college இல்ல வேல செஞ்ச இடத்துல கிண்டல் கேலியா இருந்தாளா?இல்ல ரொம்ப அமைதியா  சமத்து பொண்ணா இருந்தாளா? இல்ல அறந்தவாலா இருந்தாளா? இது எதுவுமே புகுந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு தெரியாது . தெரிஞ்சுக்கவும் விரும்ப மாட்டாங்க.

ஆனா அந்த வீட்ல இருக்குறவங்கள பத்தி அந்த பொண்ணு எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கணும் . இல்லைனாலும் எப்படியும் தன்னோட பிள்ளைங்களை புராணத்தை மாமியாரும் மாமனாரும் பேசிக்கிட்டே இருப்பாங்க , இல்ல புருஷன் கொழுந்தனார் ,கொழுந்தியானு அவங்கல பத்தியே பேசிக்கிட்டே இருப்பாங்க ,அது கேட்டு கேட்டு அவளுக்கு பழகிடும் .

இன்னோர் கொடுமையான விஷயம் என்னனா ,பொறந்த  வீட்டுக்கு போயி ஒரு நாலு நாள் மறுபடியும் இளவரசி மாதிரி இருந்துட்டு வரலாம்னு பாப்பா , ஆனா அவளுக்கு அண்ணன்கள் இருந்து அவங்களுக்கு கல்யாணம் ஆகி இருந்தாலோ, இல்ல தம்பிகள் இருந்து அவங்களுக்கு கல்யாணம் ஆகிருந்தாலோ அல்லது அக்கா தங்கைனு இருந்து அவங்களும் அதே நேரத்துக்கு வந்தாலோ அவளுக்கு காட்டப் படுற கவனிப்பு கம்மியாகும் .அதுவும் தன்  கணவனும் கூட வந்தா சத்தியமா அவளை அவங்க வீட்லையே கவனிக்கமாட்டாங்க ,மாப்பிள்ளைக்கு தான் முதல்ல எல்லாமே. ஆக, ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் அவளுக்கு பிறந்த வீடும் இல்ல , புகுந்த வீட்லயும்  அவளுக்கு priority கடைசிதான். அதுவும் பேர பிள்ளைங்க இருந்தா சுத்தம் , அவளுக்கு கடைசி priority-தான் ரெண்டு வீட்லயும்.

என்ன ஒரு கஷ்டம் பாருங்களேன் இந்த பொண்ணுங்களோட நிலைமை .

ஞாயிறு, 14 ஜூன், 2026

தலைவரா? சூப்பர் ஸ்டாரா ?

எனக்கு வந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சாரை ரொம்ப பிடிக்கும் .அவர ஒரு தரமாவது லைஃப் டைம்ல பாக்கணும் போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கு. ஆனா அவரை வந்து சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடுவதற்கு தான் எனக்கு ஆசையே தவிர தலைவர்னு கூப்பிடுவதற்கு எனக்கு விருப்பமில்லை .அவர் அரசியலுக்கு வராதா இருந்தது, அப்போ நாங்க தலைவர்னு கூப்பிட்டோம் .ஆனா அவர்தான் வரலையே.

 தலைவர்னு யாரை சொல்லுவோம் தன்னோட மக்களை சரியான முறையில அவங்களை வழி நடத்துறவங்களை தான் தலைவர்னு சொல்லணும். 

அவருடைய பொண்ணு சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தான் எப்பயும் வந்து எந்த போஸ்ட் போடும் பொழுதும் தலைவர் அப்படின்னு மென்ஷன் பண்ணி போடுறாங்க .எதுக்காக அவரை நாங்க தலைவர்னு கூப்பிடனும் ?அவர் எந்த அரசியலையும் இல்ல .அவர் இளைஞர்களையோ  இல்ல அவருடைய ரசிகர்களையோ  வழி நடத்தல. அவங்களை ஒழுங்கு படுத்தல. 

இப்போ நடிகர் அஜீத் குமாரை சாரை எடுத்துக்கிட்டோம் அப்படின்னா ,ஒரு கோயிலுக்குப் போகும் பொழுது அங்கு அவரைப் பார்த்து விசில் அடிக்கிறவங்களை அப்படி செய்யாத ! இது அந்த இடம் கிடையாது !,அப்படின்னு சைகையால் சொல்றாரு .ஒரு போட்டோ எடுக்குறதுக்கு கூட நீங்க வரிசையில நின்னாதான் முதல்ல நான் போட்டோ எடுக்க அனுமதியே தருவேன் அப்படின்னு சொல்றாரு. இந்த இடத்துல கத்தாதீங்க ,இந்த இடத்துல எனக்காக சத்தம் கொடுக்காதீங்க அப்படின்னு சொல்றாரு. எனக்காக சண்டை போடாதீங்க .உங்களுடைய வாழ்க்கையை நீங்க பாருங்க இப்படி பல வகைகளில் அவருடைய ரசிகர்களை அவர் வழிநடத்துறாரு.இதுதான் ஒரு தலைவன் பண்றது. இந்த மாதிரி போன்றவர்களை தலைவர்னு  சந்தோஷமா சொல்லலாமே, ஆனா ரஜினி சாரை  எதுக்கு தலைவர்னு சொல்லணும் நாங்க? சூப்பர் ஸ்டார்னு மட்டும் சந்தோஷமா சொல்றோமே . 

புதன், 10 ஜூன், 2026

இதுல எது உண்மை ? எது பொய் ?

 எனக்கு ஒரு விஷயம் புரியல . முன்னாடி நான் அந்த நடிகருக்கு போட்டி கிடையாது , அந்த நடிகரும் எனக்கு போட்டி கிடையாதுன்னு சொன்னீங்க . நா அவரை compare பண்ணிக்கிட்டா அது  எனக்கு அசிங்கம் அவர் என்னை compare  பண்ணிக்கிட்டா அது அவருக்கு அசிங்கம்னும் சொன்னீங்க . அப்பறம் காக்கா கழுகு கதையை சொன்னீங்க. அப்புறம் இத நான் எந்த நடிகரையும் நினச்சு சொல்லலைனு சொன்னீங்க. நா சொன்னாலும் நீங்க கேக்கவா போறீங்கனும் சொன்னீங்க. 

இப்போ அரசியல்ல ஜெயிச்சு முதலமைச்சர் ஆகிட்டார். அவரை பாத்து பொறாமைப்படல ,ஒரு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் -னு சொன்னீங்க. நான் அரசியலை விட்டு விலகிட்டேனு சொன்னீங்க. அதுக்கு சரியான காரணமும் சொன்னீங்க. 

எல்லாம் சரி , அப்பறம் இப்போ ஏன் தனி இயக்கம் ஆரம்பிக்குறீங்கன்னு சொல்றாங்க ?(direct -ஆ நீங்க இல்லைனாலும் உங்க குடும்பம் தானே) .அந்த நபருக்கு  ஆதரவு தரப்போறீங்கன்னு சொல்றாங்க .ஆன்மீக அரசியல் அவரை வச்சு பண்ணபோறீங்கன்னு சொல்றாங்க . உங்க குடும்ப உறுப்பினர்கள் அதுல இணையப்போறாங்கனு சொல்றாங்க.

இதுல எது உண்மை ? எது பொய் ?

நீங்க வந்துருந்தா கண்டிப்பா ஜெயிச்சுருப்பீங்க .சந்தேகமே இல்ல . ஆனா வரல இல்ல.. இனிமே வேணாமே . உங்கள நாங்க திரையிலையே ரசிச்சுட்டு போறோமே . அதுவே எங்களுக்கு எப்பவும் அளவில்லாத சந்தோஷம்.


திங்கள், 9 மார்ச், 2026

என்னத்த சொல்ல ...

 காலம் காலமா மக்கள் மனசுல நீங்கா இடம் பிடித்திருக்கிற கருணாநிதி ,எம்ஜிஆர் இவங்களை மாதிரியான தலைவர்களுக்கெல்லாம் ஒரு மனைவி மட்டும் கிடையாது ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்தாங்க .அது மக்களுக்கும் தெரியும். மக்கள் அதை பெருசா எடுத்துக்கல. ஏன்னா அப்போ இருந்த மக்களுடைய மனநிலை அப்படித்தான் இருந்தது. அப்போ சாதாரணமாவே ஆண்கள் ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிறது ஒரு சாதாரண விஷயமா தான் இருந்தது. சாதாரண ஆண்களுக்கே அது ஓகே அப்படின்னா இந்த மாதிரியான பெரிய தலைவர்கள் எல்லாம் கேட்கவே வேண்டாம். அதனால மக்கள் அதை பெருசா எடுத்துக்கல, பெருசா கண்டுக்கல, அது ஒரு பெரிய விஷயமா பார்க்கல. 

ஆனா இப்ப இருக்கிற காலம் வேற. மக்கள் கொஞ்சம் தெளிவா இருக்காங்க. மக்களுக்கு படிப்பறிவு இருக்கு முக்கியமா . ஆண்களுக்கு சமமா பெண் இருக்காங்க அப்படிங்கறதை சொன்னது போக இப்போ ஆண்களுக்கும் மேலாக பெண்கள் இருக்காங்க ("எல்லா விஷயத்திலும்") அப்படின்னு சொல்ற ஒரு காலகட்டத்தில் நம்ம இருக்கோம்.

 பர்சனல் லைஃப் பர்சனல் லைஃப் இருக்கிற வரைக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது . ஆனா பர்சனல் லைப் பொதுக்கு கொண்டு வந்துட்டாங்க அப்படின்னா அது பேசும் பொருள் ஆகும் தான். நீங்க அரசியலுக்கு வந்த பொழுது உங்க இண்டஸ்ட்ரில இருந்தவளே உங்கள அப்படி வரவேற்றார்கள் .சாதாரணமான நாங்கள் மட்டும் கிடையாது ,உங்க இண்டஸ்ட்ரில இருந்தவர்களே அவ்வளவு சந்தோஷ பட்டாங்க. வரவேற்றார்கள். ஏன்னா எல்லாருமே ஒரு மாற்றத்துக்காக காத்துக்கிட்டு இருந்தோம். உங்க இண்டஸ்ட்ரில உங்களை வரவேற்ற மங்களே ,இன்னைக்கு என்னடா இது அப்படின்னு நினைக்கிற அளவுக்கு தான் நீங்க செஞ்சிட்டு இருக்கீங்க.உங்களுடைய பர்சனல் வாழ்க்கை உங்களுடைய இஷ்டம் இல்லைன்னு சொல்லல ஆனா எதையும் சட்டபூர்வமாக அணுகி முடிவெடுத்து அதுக்கப்புறம் நீங்க வெளிப்படுத்தலாமே

வெள்ளி, 4 ஜூலை, 2025

மனைவி கணவன்கிட்ட எதிர்பாக்குறது என்ன ?

பொதுவா மனைவி கணவன்கிட்ட எதிர்பாக்குறது என்னவா இருக்குனு தெரிஞ்சுக்க பெரிய degree எல்லாம் தேவை இல்லங்க . ரொம்ப ரொம்ப சிம்பிள்-ளான விஷயம் தான்.

புதுசா கல்யாணம் ஆகிஅந்த  பொண்ணு உங்க மனைவியா உங்க வீட்டுக்கு வரா ,அவளுக்கு உங்க வீடு பத்தி எதுவும் தெரியாது .உங்க வீட்டு பழக்கம் உங்க family மெம்பெர்ஸ் பத்தி எதுவும் தெரியாது.

.கணவன் எப்படி ஆபீஸ் போயிட்டு வேல செஞ்சுட்டு வறீங்களோ அதே அளவுக்கு வேலைய அவ வீட்ல இருந்து பண்றா.காலைல எந்திரிச்சதுல இருந்து நைட் தூங்குறவரைக்கும் அவ வீட்ல எல்லா வேலையும் பாத்துக்குறது பிள்ளைங்களை பாத்துக்குறது அவங்களுக்கு தேவையானது செய்யுது கணவனுக்கு தேவையானது செய்யுறதுனு எல்லாத்தையும் செய்றா.

SO அவளை சும்மா நினைச்சுடாதீங்க . எந்த ஒரு பொண்ணும் தன் கணவன்கிட்ட எதிர்பாக்குறது தன் கிட்ட தன்னோட புருஷன்  அன்பா இருக்கணும் .தான் சமையல் பத்தி FEEDBACK சொல்லணும்னு .சிலபேர் எந்த ஒரு reaction -ம் முகத்துல காட்டமாட்டாங்க.நல்ல இருக்குனும் சொல்லமாட்டாங்க .நல்ல இல்லைநும் சொல்லமாட்டாங்க.கடமைக்குனு சாப்பிடுவாங்க .அப்படி இருக்காதீங்க.நல்ல இல்லனு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லாதீங்க.அதுக்கு பதிலா உப்பு கம்மியா இருக்கு இல்லைனா நல்ல இருக்கும்னு சொல்லுங்க.காரம் அதிகமா இருக்கு அது கம்மி பண்ணிருந்தா இன்னும் நல்ல இருந்து இருக்கும்னு சொல்லுங்க.இந்த மாதிரி சொல்ல பழகுங்க.

ஒரு புது டிரஸ் அவ போட்டானா , ஹே புதுசா ரொம்ப நல்ல இருக்கே னு சொல்லுங்க.இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க னு சொல்லுங்க.இந்த complementகு சந்தோஷப்படாதா மனைவியே இருக்க மாட்டா.

அவ ஹேர் cut பண்ணிருந்தா , புது ஸ்டைல் ah நல்ல இருக்குனு சொல்லுங்க. ஆபீஸ்ல problem -ah நீங்கஷேர் பண்றவரா இருந்தா சொல்லுங்க.கண்டிப்பா உங்ககஷ்டத்துக்கு  solution அவளால சொல்லமுடியும்  ,அப்டியே இல்லைனாலும் ஆறுதலாவது சொல்லுவா.

atleast 10 நாளுக்கு ஒருதரமாவது வெளில கூபிட்டுபோங்க.


 ஒருத்தங்களுக்கு ஒருத்தங்க respect குடுக்குறதை நாம தப்பா புரிஞ்சுக்குறோம் .அதாவது வாங்க போங்கனு தான் சொல்லணும் எந்திரிச்சு நின்னு பேசணும்னு இப்படி நாம வச்சுக்குற limit வேற மாதிரி.Actual-ஆ  respect-னா கணவன் மனைவி ஒருத்தங்க  ஒருத்தங்களுடைய உணர்வுக்கு மதிப்பு கொடுக்குறது . கருத்துக்கு மதிப்பு கொடுக்குறத்தகு.life partner ஒருத்தங்களுக்கு  ஒரு விஷயம் பிடிச்சிருந்தது(நல்ல விஷயம்) அது இன்னொருத்தங்களுக்கு பிடிக்கலைன்னா  சும்மா அவங்கள சீண்டாம அவங்களுக்கு பிடிச்சிருக்குனு புரிஞ்சுகிட்டு அந்த space கொடுக்குறது. இத கெட்ட  விஷயங்களுக்கு எல்லாம் ஏமாத்துற விஷயத்துக்கு எடுத்துக்காதீங்க. example -க்கு இப்போ life partner ஒருத்தருக்கு ஒரு ஹீரோ பிடிச்சிருக்கு இன்னொருத்தருக்கு அந்த ஹீரோ பிடிக்கலைன்னா அதுக்காக அவங்க சீண்டிக்கிட்டே அவங்களுக்கு பிடிச்ச படத்தைக்கூட பாக்க விடாம பண்றது இது மாதிரி விஷயங்கள் சொல்றேன். அவங்களுக்கு பிடிச்சிருக்கா ஓகே பாக்கட்டுமே என்ன இப்போன்னு இருங்க.


 அப்பாஅண்ணன் /தம்பி கணவன் கிட்ட


கல்யாணம் கட்டிக்க போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்லவேண்டியது.


காலங்காலமா புருசன் வீடு போகப்போற பொண்ணே....ன்னுதான் பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கோம் நாம... ஆனா, பசங்க என்ன பண்ணனும்கறத கண்டுக்கறதே இல்ல...!!


1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!! .மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதிது. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க. அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.

2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!! உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை. உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்.
v 3. மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!! உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள். அவளை மதிக்கவேண்டும்.உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இரு...

4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க உதவி செய். பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு, நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்துள்ளால் உன் மனைவி... அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உத வேண்டும். சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்க வேண்டும்.

5. எப்பவும் மனைவிய காதலிக்க வேண்டும். காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லை .. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வைத்துகொள் .. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டு பேரையும்... எப்பவும் இளமையா உணர வைக்கும்...!!

மிக முக்கியம் உன் அப்பா என்னை எப்படி நடத்தறாரோ....? அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்து மகனே..!! உனக்கும் மருமகளா வந்திருக்கும் மகளுக்கும் என் அன்பும் வாழ்த்துக்கள்....!!!


                                        --- நன்றி சமூகவலைத்தளம் 

ரிவியூ பண்றவங்களே உங்ககிட்ட இருக்குற சக்தியை நல்லதுக்கு மட்டும். யூஸ் பண்ணுங்க.

சமீபத்துல வெளிவந்த தக்  லைஃப் -படம் வெளிவந்ததும் பலவிதமான விமர்சனங்கள் . என்ன என்னவோ சொன்னாங்க.

மணிரத்னம் படமா இது .கமலும் சிம்புவும் த்ரிஷாவுக்காக அடிச்சுக்குறாங்க .த்ரிஷாவோட ஒரு டயலாக் "நான் ஒரு அழுக்கு பிண்டம் , நா வேணாம் உங்களுக்கு" - இந்த டயலாக் வச்சு அவ்ளோ மீம்ஸ் .இப்படி படத்தை பத்தி நெகடிவ் -ஆ சொல்லி சொல்லி சொல்லி அந்த படத்தை பத்தி ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவச்சிருந்தாங்க.

எப்படி இருந்தாலும் அந்த படத்தை பாக்கணும்னு முடிவு பண்ணி பாத்தோம் . அட பாவிங்களா உங்களுக்கு ஏன்யா இவ்ளோ காண்டு .. யாரை அழிக்கணும்னு முடிவு பண்ணி இத செஞ்சீங்கன்னு தெரியல .

படம் இவங்க எல்லாம் ரிவியூ பண்ணதுக்கு சம்மந்தமே இல்ல . படம் நால்லாத்தான் எடுத்துருந்தாங்க , நடிச்சிருந்தாங்க . ஒரே ஒரு விஷயம் தான் எனக்கு தோணுச்சு. கிராபிக்ஸ் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம்னு தோணிச்சு.

இந்த படத்துல யாரும் திரிஷாவுக்காகலாம் சண்டைபோட்டுக்கல. ஒரு கேங்ஸ்டர்ஸ்க்குள்ல சின்ன சந்தேகம் வந்தாலும் அது எப்படி மாறும், யாரு யாரை அழிச்சு அந்த டாப் இடத்துல இருக்கணும்னு நினைபாங்கனு தான் படத்துல காட்டிருக்காங்க.

ஆனா review பண்ற மக்களே உங்களுக்கு ஏன் இந்த காண்டு , ஏன் இப்படி படத்தை பத்தி மோசமா கழுவி ஊத்தினீங்கன்னு தான் இப்போ வரைக்கும் புரியல. நெஜமாவே படம் பாத்துதான் ரிவியூ பண்ணினாங்களா இல்ல ஒருத்தர் சொன்னதை வச்சு கேட்டு கேட்டு ரிவியூ பண்ணினாங்களானு தெரில.ஆனா ஒன்னு நீங்க நினச்சா யாரையும் அழிச்சிட முடியும் .. 

இது ஒரு பெரிய பொறுப்பு , பெரிய ஷக்தி உங்ககிட்ட இருக்கு .நல்லதுக்கு மட்டும் யூஸ் பண்ணுங்க .



சனி, 24 மே, 2025

நாம ஒன்னும் முட்டாளுங்க இல்ல

சமீபத்துல எனக வீட்ல ஒரு conversation நடந்தது.இந்தியன் ஸ்கூல் எல்லாம் ரொம்ப மோசம் , அமெரிக்கன் ஸ்கூல் எல்லாம் செம்ம அப்படீன்னு .

என்னால இத ஏத்துக்கவே முடியல .ஆமா அமெரிக்கன் ஸ்கூல் -ல நம்ம நாட்டு ஸ்கூல் மாதிரி அதிகமான சுமையை குடுக்கமாட்டாங்க .அதிகமா எழுதுறதை குடுக்கமாட்டாங்க .கையெழுத்து பத்தி கவலை படமாட்டாங்க .பாடப்புத்தகத்தை மட்டுமே படிக்கணும்னு சொல்லமாட்டாங்க . Theraritical -ஆ மட்டும் இல்லாம practical -ஆ ரொம்ப அழகா பழக்குவாங்க.பிள்ளைங்களுக்கு  எது பிடிக்குது எது பிடிக்கலைனு எதுல அதிகமா ஆர்வமா இருக்காங்கனு ஸ்கூல்-ளையும் பாப்பாங்க.அங்க வீட்லயும் அப்பா அம்மாவும் பாப்பாங்க.அதுக்கு தகுந்த மாதிரி அவங்கள அவங்களுக்கு பிடிச்சதை படிக்க வைப்பாங்க .நம்மள மாதிரி நீ படிச்சே ஆகணும் டாக்டர் ஆகியே தீரணும், இல்ல கவுரவக்குறைச்சல் , அசிங்கமாகிடும் இதுலாம் இல்ல ..ஒத்துக்குறேன்.அதுக்காக இந்த நாட்டுல படிச்சவங்க ஆஹா ஓகோனு இருக்காங்கனு சொல்லமுடியுமா?

நம்ம நாட்டுல இருந்து இந்த நாட்டுக்கு வந்து வேல செய்யுறவங்க எவ்வளவு பேர் இருக்காங்க .நம்ம நாட்டுடைய education சிஸ்டம் சூப்பர்னு ஒரு நாளும் நா சொல்லமாட்டேன்  இப்போவரைக்கும் ,அதுக்காக அங்க படிச்சாங்களாம் முட்டாளுங்க இல்ல , புக் தவிர வேற எதுவும் செய்யத்தெரியாதவங்க இல்ல ,அத தாண்டி யோசிக்க தெரியாதவங்க இல்ல . அப்டி எல்லாம் இருந்தா நம்மாளுங்கஎப்படி  இங்க இருக்குற பெரிய கம்பெனி எல்லாத்துலயும் டாப் இடத்துல இருப்பாங்க.எத்தனை டாக்டர்ஸ் எத்தனை சாப்ட்வேர் டெவெலப்பர்ஸ் நம்ம நாட்டுல இருந்து இந்த நாட்டுல வேல செய்யுறாங்க .வட்டத்தை தாண்டி யோசிக்க தெரியாதவங்கனா எப்படி இங்க வந்து வேல செய்வாங்க?

நம்முடைய நாட்டுல கல்வி காசாகிடுச்சு . எல்லாருக்கும் நல்ல கல்வி கிடைக்குறது இல்ல . அதுக்காக அங்க படிக்குற , படிச்ச, நாமெல்லாம் முட்டாள்கள் இல்ல.

நம்ம நாட்டுல இன்னோர் பிரச்சனை என்ன தெரியுமா , ஒரு குழந்தை நல்லா படிக்குதுனு தெரிஞ்சா அந்த குழந்தையை இன்னும் கொஞ்சம் அதிகமா மெனக்கெட்டு இன்னும் நல்லா படிக்க ட்ரைனிங் தருவாங்க. அந்த குழந்தை நல்ல மார்க் எடுத்தா நம்ம ஸ்கூலுக்கு பெருமைனு போட்டி போடுவாங்க அந்த குழந்தையை படிக்க வைக்க.

ஆனா இங்க அமெரிக்காவுல ஸ்பெஷல் குழந்தைகளுக்குதான் முதல் முக்கியத்துவம் குடுத்து அவங்கள இன்னும் ஸ்பெஷல்ஆ ட்ரீட் பண்ணி அந்த குழந்தைபோக்குலயே போகவிட்டு படிக்க வைப்பாங்க .அப்படிதான் ஆட்டிசம் குழந்தைங்களுக்கு அவ்ளோ அழகா கல்வி கொடுக்குறாங்க.நம்ம நாட்டுல அவ்ளோதான் அந்த குழந்தை ஸ்பெஷல் குழந்தை அந்த குழந்தைக்கு கல்வி வராதுனு முடிவு பண்ணிடுவாங்க.

இவ்ளோ நல்லா education  சிஸ்டம் இருக்குற இந்த நாட்டுல படிச்ச எல்லாரும் செய்மையான பொஷிஷன்-ல இருக்காங்களா என்ன?

இனக்ளுக்கு தானே நம்ம நாட்டுல கால் சென்டர்-னு ஒன்னு வச்சு இவங்களுக்கு வேணுங்குற உதவிகளை தானே செய்றாங்க .எத்தனை பேருக்கு செக் fill பண்ண தெரியாம customer care -க்கு கால் பண்ணி கேப்பாங்க, எத்தனை பேர் வாஷிங் மெஷின்ல இத எப்படி operate -பண்றதுனு கேப்பாங்க .எத்தனை பேர் இந்த ஸ்வீப்பர் எப்படி remove பண்ணி clean பண்றதுனு கேப்பாங்க.அட இவ்ளோ எதுக்கு ,  நானும் இங்க இந்த நாட்டுல இந்த நாட்டுகாரங்களோட வேலை செஞ்சுருக்கேன்.அஞ்சு வருஷம் பத்துவருஷமா வேல செய்யுறேன்னு சொல்லுவாங்க ,ஒரு Team -ல இன்னோர் பேரை எப்படி சேக்குறதுனு கூட தெரியாது. இத பண்ணுங்க இத கிளிக் பண்ணுங்கன்னு சொன்னா  கூட தெரியாது. அப்டித்தான் வேல செய்யுறாங்க. ஏன்னா இவங்க தான் அந்த வட்டத்தை தாண்டி யோசிக்கமாட்டாங்க .தனக்கு குடுத்த வேலை மட்டும்தான் பாப்பாங்க .50 பேர் வேல செஞ்சா அதுல 45 பேர் இப்படி தான் இருக்குப்பாங்க.செம சூப்பர்-ஆ வேல செய்யுறவங்களும் இருக்காங்க .அந்த சதவிகிதம் குறைவுன்னு தான் நான் சொல்றேன்.

yes , நம்ம நாட்டுல கல்வியும் கால் சம்மந்தமான விஷயங்களை improve பண்ணனும் நிறையவே , improve பண்ணனும் .எல்லாரும் நல்ல கல்வி கிடைக்க செய்யணும் .உலகத்துக்கே நாம எடுத்துக்காட்டா இருக்கலாம் அப்படியெல்லாம் செஞ்சா. நம்ம குழந்தைங்க உலககத்துல எல்லா நாட்டுலையும் எல்லா பெரிய பொசிஷன்லயும் இருப்பாங்க.

மனக்குமுறல் தான் இதுலாம் .

சனி, 14 செப்டம்பர், 2024

கமல் ஹாசன் எனும் ஒரு யூனிவர்சிட்டி

 ஓவியா ஜூலி கலந்துக்கிட்ட பிக் பாஸ் பாத்ததோட சரி , அதுக்கு அப்பறம் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியும் பாத்தது இல்ல . 

சமீபத்துல கமல் சார் பிபி பாஸ் நிகழ்ச்சியில இருந்து பிரேக் எடுக்க போறதா நியூஸ் பாத்தேன் . என்னடா இது இப்படி ஆகிடுச்சே எதுக்காக இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலனு பாத்தா மனுஷன் AI டெக்னாலஜி பத்தி 4 மாசம் கோர்ஸ் படிக்க அமெரிக்கா போகுறாராமே .

இவரால இந்த வயசுலயும் எப்படி இவ்ளோ ஆர்வமா எதாவது ஒன்னு படிக்க இல்ல கத்துக்க முடியுது ?

உங்களுக்கு நியாபகம் இருக்கானு தெரியல , நமக்கு Confrence Call-னா என்னனு பஞ்சதந்திரம் படத்தின் மூலமா நமக்கு அறிமுகம் செஞ்சுவெச்சது கமல் சார் தான். 

Bluetooth headphone -னுங்குற கான்செப்ட்-ஐ நமக்கு வசூல் ராஜா MBBS படத்தின் மூலமா அறிமுகம் செஞ்சுவெச்சது கமல் சார் தான் .



விக்ரம் (1986):
சைபர் நெட்வொர்க் மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்த த்ரில்லர் கதை.

அபூர்வ சகோதரர்கள் (1989)
Motion Control Camera:
கமல் ஹாசன் மூன்று வேடங்களில் நடித்தார், இதில் மெர்கல் ஷாட் பயன்படுத்தப்பட்டது. இது காட்சிகளில் மூன்று வேடங்களில் உள்ள கமலை ஒரே காட்சியில் இணைத்து காட்ட உதவியது.

காமெரா டிரிக்குகள் (Camera Tricks):
மூன்று கதாபாத்திரங்களை ஒரே காட்சியில் இணைக்கும் தொழில்நுட்பம்.

தேவர்மகன் (1992)
எக்ஸ்ட்ரீம் ஸ்லோ மோஷன் (Extreme Slow Motion):
சண்டைக் காட்சிகளில் ஸ்லோ மோஷன் பயன்படுத்தி காட்சியை மேலும் விவரமாகத் தரம் உயர்த்தியது.

குருதிப்புனல் (1995)
முதல் டிஜிட்டல் ஒலி:
இந்த திரைப்படத்தில் முழுமையான டிஜிட்டல் ஒலித் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

இந்தியன் (1996)
ரூ 100 கோடி கிளப்:
ரூ. 100 கோடி வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம்.

ஹே ராம் (2000)
Polaroid Production:
கதாபாத்திரங்களின் நுணுக்கமான நடிப்புகளை படம்பிடிக்க உதவியது.

ஆளவந்தான் (2001)
ஆனிமேட்ரானிக்ஸ் (Animatronics):
சண்டைக் காட்சிகளுக்கு அதிக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காமிக்ஸ் அனிமேஷனை காட்சிப்படுத்தினர்.

ஸ்டடி-கேம் (Steadicam):
ஸ்டேபிளான (நிலையான) காட்சிகளை உருவாக்க ஸ்டடி-கேம் பயன்படுத்தப்பட்டது.

மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
ஏரோமோபில் கேமரா (Aeromobile Camera):
வானில் இருந்து காட்சிகளை பிடிக்க பயன்படுத்தப்பட்டது.

தசாவதாரம் (2008)
புதிய மேக்கப் தொழில்நுட்பம்:
கமல் ஹாசன் 10 வேடங்களில் நடித்தார், இவ்வேடங்களில் தனித்துவமான தோற்றத்தை பெற மேக்கப் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. Prosthetic makeup

மோஷன் கேப்ச்சர் (Motion Capture):
வேடங்களில் அசைவுகளை நுணுக்கமாக காட்சிப்படுத்த இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

உன்னைப் போல ஒருவன் (Unnai Pol Oruvan) (2009)
Auro 3D Sound:
இந்த படத்தில் பயன்படுத்திய முதன்மையான 3D சவுண்ட் தொழில்நுட்பம்.

விஸ்வரூபம் (2013)
முதல் டிஜிட்டல் படம்:
இந்திய திரையுலகில் முழுமையான டிஜிட்டல் திரைப்படமாக இதைப் பயன்படுத்தினார்.

விஎஃபெக்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்:
போர்க்கள காட்சிகள் மற்றும் நகரத்தின் சிதைவுகளை விஎஃபெக்ட்ஸ் (VFX) மூலம் வடிவமைக்கப்பட்டது.

இந்த படத்துக்காக ஒரு பெரிய நடன ஜாம்பவான் கிட்ட சில மாசம் நடனம் கத்துக்கிட்டார்  உன்னை காணாத-ங்குற  அந்த ஒரு பாடலுக்காக .

விஸ்வரூபம் 2 
முதல் முழுமையான ஸ்டீரியோஸ்கோபிக் திரைப்படம் (Stereoscopic Film).
'விஸ்வரூபம் 2' திரைப்படம் இந்திய சினிமாவில் முழுமையான ஸ்டீரியோஸ்கோபிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முதல் படமாகும். 
இது 3D அனுபவத்தை வழங்கும் தொழில்நுட்பமாகவும், பார்வையாளர்களுக்கு மிக நெருங்கிய மற்றும் ஆழமான காட்சிகளை உணர்விக்க உதவியது.

விக்ரம் (2022):
சினிமா நேரலை (Live Streaming Cinema) – முதன்முறையாக பட ரீலீஸ் நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பினர்.


தான் செய்யும் தொழில் மேல அதீத மரியாதை , காதல் , அர்ப்பணிப்பு இருக்கு ஒருத்தராலதான் இப்படி புது புது முயற்சிகளை எடுக்கவோ அறிமுகப்படுத்தவோ முடியும் .

இவரை ஒரு யூனிவர்சிட்டி-னு சொல்றதுல தப்பே இல்ல .

இவருடைய எத்தனையோ படங்கள் வசூல் ரீதியா சரி போகல , ஆனாலும் அவர் தன்னுடைய முயற்சியை விடல இப்போ வரைக்கும் .

ஆனா காலத்துக்கும் நிலைக்க போறது இவருடைய படங்களே.

இவருடைய பிள்ளைகளுடைய பேட்டி சமீபத்தில் பாத்தேன் . அந்த பிள்ளைங்ககிட்ட எவ்ளோ தெளிவு .
எங்களுடைய செலவை நாங்கதான் பாத்துக்கணும் . வீட்டுக்கு ரெண்ட் தரவேண்டாமா? இவ்ளோ வேலை செய்றேன் , இங்க வேலை செய்றேன்-னு எவ்ளோ ஒரு maturity .எங்களுக்கு என்ன சேது வச்ச என்ன கொடுத்தனு இல்லமா எங்களை நாங்களே பாத்துக்குறோம்னு இருக்குறதுக்கு ஒரு பெரிய பக்குவம் வேணும்.

இவர் நினைச்சிருந்தா பல பல கோடிகளை சேர்த்திருக்கலாம் .ஆனா வர பணத்தை மறுபடியும் படம் எடுக்குறதுலே செலவு பண்றார் .

பெத்த பிள்ளைங்களுக்கு மட்டும் இல்ல பேரப் பிள்ளைங்களுக்கு அதையும் தான்டி கொள்ளு பேரப்பிள்ளைங்களுக்கு சொத்து சேர்த்து வைக்குறவங்க மத்தியில இப்படி ஒரு மனுஷன்.


வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

I Love you -க்கு என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சி தருணம்

 நான் அமெரிக்கால பார்ட் டயம்ல லிஃப்ட் டிரைவர்-ஆ வேல செஞ்சேன் . அதான் நம்ம ஊருல ஊபர் டிரைவர் மாதிரி. இங்கயும் ஊபர் இருக்கு , ஆனா அது போலவே மத்த கம்பெனிகளும் இருக்கு.

நான்  லிஃப்ட் டிரைவர்-ஆ வேல செஞ்சப்போ நிறைய புது புது அனுபவங்கள் கிடைச்சது.அதுல ஒன்னு கொஞ்சம் பயம், காமெடி கலந்த ஒரு அனுபவம் அதைத்தான் இப்போ ஷேர் பண்ணப்போறேன்.

ஒரு நாள் ஒரு லிஃப்ட் ரெக்குஸ்ட் accept பண்ணினேன். அது ஒரு மோட்டல் . பொதுவா இங்க அமெரிக்கால அதிகம் சம்பாதிக்காதவங்க , கொஞ்சம் வறுமைக்கோட்டுக்கு பக்கத்துல அல்லது கீழ இருக்குறவங்க ஒரு வீடு வாடகை எடுக்குறதுக்கு பதிலா இதுமாதிரி மோட்டல்கள்ல  தங்குவாங்க. மாசா மாசம் ரெண்ட் கொடுத்துடனும் . அந்த சின்ன இடத்துலயே ஸ்டவ் வச்சு சமைப்பாங்க வேற. அதுமாதிரி ஒரு மோட்டல்ல ஒருத்தரை பிக்கப் பண்ண நா போனேன். அவரு போய் சேர வேண்டிய இடம் 25 நிமிஷ தொலைவுல இருந்தது.  வண்டில ஏறினதும் கண்டுப்பிச்சுட்டேன் அவரு கொஞ்சம் குடுச்சிருக்காருனு . மோட்டல்ல விட்டு வெளில வரதுக்கு முன்னாடியே கொஞ்சம் நிறுத்து நிறுத்து நான்  பர்ஸ் மறந்துட்டேனு சொல்லி இறங்கி ஓடி எடுத்துட்டு வந்தாரு.

அங்க இருந்து நான் highway -க்கு போகணும் .அதுக்கு நான் ரைட் எடுக்கணும்.ரைட் எடுக்கும்போது வேற யாராவது எதிர்புறம் வராங்களானு செக் பண்ணிட்டு போகணும். நானும் அப்டித்தான் செக் பண்ணினேன். அந்த நின்ன சில வினாடி அவரால வெயிட் பண்ணமுடியல .போலாம் போலாம் நீ போ னு சொன்னாரு. நான் பொதுவா கேட்கமாட்டேன் .கண்டுக்க மாட்டேன். ஏன்னா எனக்கு என் safety, என்ன நம்பி  வண்டி ஏறுறவங்களோட safety ,என்னோட கார்-ஓட safety எல்லாமே முக்கியம்.

அதனால நா சில வினாடி வெயிட் பண்ணிட்டுதான் எடுத்துட்டேன். உடனே பின்னாடி இருந்து அவரு உச்சு கொட்டி தன்னோட அதிருப்தியை வெளிப்படுத்தினார். நான் கண்டுக்கல.  highway-ல போய்க்கிட்டு இருக்கும் போது ஒரு மாதிரி பரபரப்பாவே உக்காந்துட்டு இருந்தார். highway -ல இருந்து அவரு வேல செய்ற இடத்துக்கு ரெண்டு மூணு சிக்னல் தாண்ட வேண்டி இருந்தது . ஒரு சிக்னல்-ல ஆரஞ்சு இருக்கும் போது நான் ஸ்டாப் பண்ண ரெடி ஆனேன் ஆனா அவர் பின்னாடி உக்காந்து போய்டு போய்டு-னு சொன்னார். நான் தான் சொன்னேனே கேட்கமாட்டேன்னு , நா போகல. நின்னுட்டேன் .ரெட் விழுந்துடுச்சு.  மறுபடியும் அவருக்கு அதிருப்தி . நான் தான் சொன்னேனே போகலாம்னு, போயிருக்கலாம்னு கொஞ்சம் எரிச்சலோட சொன்னார். நான்  பதில் சொல்லல.

அவர் ஒரு இண்டஸ்ட்ரி-ல வேல செய்றவர் போல. அதுக்குள்ள போக left, right -னு ரெண்டு சைடு இருக்கு . நான் left எடுத்துட்டேன் . சரி போ போ-னு சொன்னார். உள்ளபோயி gate  கிட்ட நிறுத்திட்டேன். அவர் கார் விட்டு முழுசா இறங்கல . ஒரு கால் உள்ள ஒரு கால் வெளில இருக்கு . அவர் என்ன பாத்து 'hey thanks . you did  a good job. I love you ' அப்டினு சொன்னாரு. 

அவ்ளோதான் எனக்கு வௌ வெளுத்து போச்சு. விவேக் காமெடி -ல சொல்றமாதிரி I love you-சொன்னா அப்பன் அருவாளோட வருவாரு-னு  , வளந்த புள்ள . I love you -ஒரு காதலன் காதலிக்கிட்ட சொல்லணும் அல்லது ஒரு  காதலி காதலன்கிட்ட சொல்லணும் அவ்ளோதான்.இப்படி சினிமா பாத்து கேட்டு வளந்த  புள்ள தான் நானு. என்னபாத்து இவரு இப்படி சொன்னதும் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. 

நா அப்டியீ பாக்குறேன் அவரை. அவரு போகமாட்றாரு . hey , i  said  I love you-னு வேற சொல்றாரு. எனக்கு என்ன சொல்றதுன்னு அப்பவும் தெரியல . ஆனா அந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்பனும்னு மட்டும் நினைக்குறேன். இந்த மனுஷன் இறங்கவும் மாட்டறாரே கார் விட்டு. என்ன பண்றதுனு அவரையே பாக்குறேன்.என்னையும் அறியாம love you too -னு சொல்லி மண்டைய ஆட்டுறேன்  பயத்துல. அப்பறம் தான் அவரு இறங்குறாரு. கைப்புள்ள எடுடா வண்டிய-னு reverse -லயே போய் வண்டிய திருப்பிக்கிட்டு அந்த இண்டஸ்ட்ரி -தாண்டினதுக்கு அப்பறம் தான் ரிலாக்ஸ் ஆகி ஒரு ஓரமா நிறுத்தி என்ன நடந்ததுன்னு யோசிச்சேன்.

என்னது love you too -னு சொன்னியா அவன்கிட்ட . அறிவிருக்கா. உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. இப்படி நீ அவன்கிட்ட சொல்லிட்டு வந்து இருக்கனு என்ன திட்டுறேன். first வீட்டுக்கு போவோம்னு வண்டியை எடுத்துகிட்டு கிளம்பியிட்டேன். offline -போய்ட்டேன் ,so எனக்கு எந்த வண்டி request -ம் வராது.

வழியெல்லாம் இதே மண்டையில ஓடிக்கிட்டு இருக்கு . இப்படி சொல்லிட்டானே பாவி . அதுக்கு நீ பதிலுக்கு இப்படி சொல்லிட்டியே படுபாவினு திட்டிக்கிட்டே வரேன்.

அப்பறம் தான் எனக்கு புரிஞ்சது , நாம நினைக்குற லவ் வேற அவரு சொன்ன லவ் வேற. என் மேல கடுப்பு அடிச்சுக்கிட்டே வந்தாரே அதுக்கு சாரி சொல்லாம அந்த மனுஷன் இப்படி சொல்லிருக்காருனு எனக்கு புரிஞ்சது. அது இந்த நாட்டுல சகஜம் . யாரு யாருக்கு வேணும்னாலும் சொல்லலாம். அது அன்ப சொல்ற விதம் அவ்ளோதான். இளம் வயசுல சொல்ற காதல் இல்ல . அட லூசு பயலே இப்படியா என்ன பயமுறுத்துவனு சொல்லிக்கிட்டு , அட லூசு இப்படியா நீ பயப்படுவ -னு என்ன நானே திட்டிக்கிட்டு வந்தேன். உடனே என் புருஷனுக்கு கால் பண்ணி நடந்ததை சொல்லி  ரெண்டுபேரும் சிருச்சுக்கிட்டு இருந்தோம். அப்பறம் மறுபடியும் online -போயிட்டு வேலைய தொடர்தேன் . 

இப்படி நிறைய சுவாரசியமான அனுபவங்கள் இருக்கு அந்த வேலையில .



















செவ்வாய், 5 செப்டம்பர், 2023

எங்க இருந்தாலும் நாம அப்டியே இருந்தா எப்படி ?

     சமீபத்துல அமெரிக்கால இருக்குற ஒரு இந்து கோவிலுக்கு போயிருந்தோம். அந்த கோவில்ல குழந்தைகள் விளையாடுறதுக்கு சின்ன பழைய ஏரியா (பார்க் மாதிரின்னு வச்சுக்கோங்களேன் ) இருக்கு. அந்த கோவில் ரொம்ப சுத்தமா இருந்தது. கோவில் சுற்றுப்புறமும் சுத்தமாத்தான் இருந்தது.ஆனா அந்த குழந்தைகள் விளையாடுற பார்க்ல பேப்பர் கப்புகள், பிளாஸ்டிக் தட்டு, தண்ணி பாட்டில் இதுலாம் கிடந்தது.ஹிந்து கோவிலுக்கு நம்ம இந்தியர்களை தவிர யாரு வரப்போறாங்க?

    இந்த நாட்டுல இருக்குற பார்க்குகள்ல பாத்தோம்னா அவ்ளோ சுத்தமா இருக்கும்.நீங்க எங்கப்பாதாலும் குப்பைகளை பாக்க முடியாது. 98% சுத்தமா தான் இருக்கும் எல்லா இடங்களும் முக்கியமா  இந்த மாதிரி பார்க்குகள். இந்த நாட்டுல நான் பாத்து ரொம்ப ஆச்சர்யப்பட்ட விஷயம் இது. எவ்ளோ கோட்டம் இருந்தாலும் எவ்ளோ குலாண்டகிகள் ஒன்னு கூடினாலும் அங்க நாம கீழ குப்பைகளை பாக்க முடியாது. அது ரூல்ஸ் -ஆள இப்படி பழகிருக்கங்களா இல்ல இயற்கையாவே இப்படி  இருக்காங்களான்னு தெரியல. தன் வீடு எப்படி இருக்குமோ தெரியாது ஆனா பொது இடம் சுத்தமா இருக்கும்.

     ஆனா நம்ம கோவில்ல இந்த பார்க்குல அவ்ளோ குப்பைகள் இருந்தது.இத்தனைக்கும் பக்கத்துல ஒரு குப்பை தூட்டி இருந்தது ஒரு 50 ஆதி தள்ளி ஒரு குப்பை தொட்டி இருந்தது. நமக்கு பழக்கம் வரமாட்டுதோனு நினைக்க தோணிச்சு. போன தலைமுறை எப்படி இருந்தாங்களோ போகட்டும் . இந்த தலைமுறை சரியா இருந்தாத்தானே அடுத்த தலைமுறைக்கு நாம அத சரியா கொண்டுபோகமுடியும்.நாமே இப்படி அலட்சியத்தால இருந்தோம்னா நம்ம பாத்து வளருற நம்ம குழந்தைகள் எப்படி சரியா வளருவாங்க? 

    அங்க இன்னொரு விஷயமும் நடந்தது, பிள்ளைகள் ஒரு வளைவுல ஏறி போயி ஸ்லைடு-ல(சறுக்குமரம்) விளையாடுவாங்க . ஒரு பொண்ணு அந்த வளைவுல ஏறிகிட்டு இருந்தப்போ ஒரு பல்பு எங்கயோ இருந்து கீழ விழுந்து உடைஞ்சிடுச்சு. நல்ல வேல அது அந்த பொண்ணு தலையில விழல . பார்க்ல எப்பவும் கீழ மல்ச்-னு சொல்லப்படுற மர தூள் அல்லது துகள்களை போட்ருப்பாங்க. குழந்தைகள் விழுந்தா அடி  படாம இருக்க. இந்த பல்பு அதுல விழுந்து உடைஞ்சிடுச்சு. உடனே அந்த பொண்ணோட அம்மா பல்பு விழுந்துடுச்சு இந்த பக்கம் வா இறங்குனு அந்த பொண்ணை கூப்பிடுறாங்க. இன்னோர் அம்மா தன் பிள்ளையை அந்த பக்கம் போகாதனு சொல்றாங்க. ஆனா யாரும் அந்த உடைஞ்ச பல்ப்பை எடுக்க முன்வரல. அந்த கொஞ்சம் வளைந்த பொண்ணை விட சின்ன குழந்தைகள் அங்க விளையாடிகிட்டு இருந்தாங்க. இன்னும் எதனை குழந்தைகள் வந்து விளையாடுவாங்களோ? எப்படி நம்மால அதை பாத்து நம்மக்கு என்ன வந்ததுன்னு நினைக்கவோ இல்ல நம்ம பிள்ளை மட்டும் பத்திரமா இருந்தா போதும்னு நினைக்கவோ முடியுது? நானும் இன்னோர் gentle man -ம் சேர்ந்து அதை சுத்தம் பண்ணிட்டோம்.ஆண்களை இந்த விஷயத்துல ரொம்ப பாராட்டணும், அவங்க எப்பவும் கொஞ்சம் broad -ஆ தான் யோசிப்பாங்க.

இத நான் இப்போ ஒரு குறையா சொல்லல. நம்ம பாத்து வளருற குழந்தைகள். நாமதான் அவங்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லித்தரணும். நாமே இப்படி இருந்தா எப்படி. 


திங்கள், 31 ஜூலை, 2023

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்

    கொஞ்சநாளா சூப்பர் ஸ்டார் அப்படீங்குற பட்டத்தை பத்தி நிறைய பேச்சு போய்கிட்டே இருக்கு . ஆனா சந்தானம் சொல்ற மாதிரி , அந்த காலத்து கிழவி வாயும் இந்த யூடியூபும் ஒன்னு .யாரையாவது பத்தி பேசிக்கிட்டே தான் இருக்காங்க.அந்த காலத்துல பாவம் அந்த பாட்டிகளுக்கு பொழுது போக்கு இல்ல . ஊரு கதை பேசுறது மட்டும் தான் பொழுது போக்கா இருந்தது.இப்போதான் ஏக்கப்பட்ட பொழுதுபோக்கு விஷயம் இருக்கே .அதுலாம் பண்ணலாம் இல்ல .அது விட்டுட்டுட்டு அடுத்தவனை பத்தி பேசுறதே ஒரு பொழுதுபோக்கா வச்சிருந்தா என்ன பண்றது.

    அப்போ அது நடந்தது பாரு இப்போ இது நடந்தது பாரு ,அதுக்கு அது அர்த்தம் இதுக்கு இது அர்த்தம்-னு சிலபேர் கிசுகிசு சொல்லியே காசு சம்பாதிக்குறாங்க.பிரபலம் ஆகுறாங்க. சம்மந்தம் பட்டவங்க என்னவோ சும்மா தான் இருக்காங்க. ஆனா அவங்க செய்றாங்களோ இல்லையோ நீங்க நல்லா செய்றீங்கய்யா .காசுக்காக என்ன வேணும்னாலும் நீங்கதான் செய்வீங்க போல.

    ஆனானப்பட்ட ஜாக்கி ஜானும் , டாம் க்ரூஸும் கூட பேருக்கு முன்னாடி பட்டப் பேர் வச்சுக்க ஆசைப்படல இப்போவாரைக்கும். ரஜினி சார் தான் சொல்றாரே , எனக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன் , கேக்க மாட்றாங்கனு .நம்மள மாதிரி ஆளுங்க ரசிகர் அப்படீங்குற பேர்ல பண்ற டார்ச்சர் தான். அவர அப்டியே கூப்பிட்டு பழகிட்டோம் . அவரு அப்டியே இருக்கட்டுமே. அது ஏன் அடுத்த .. அப்டீன்னு சண்டைபோடனும். 

    விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம்,சிம்பு,தனுஷ்,சிவகார்த்திகேயன்,விஜய் சேதுபதினு இவங்க எல்லாருக்கும் முன்னாடி வந்தவரு ரஜினி சார். இவங்க எல்லார்கிட்டயும் இல்லாத நடிப்பு அவர்கிட்ட இருக்குதோ இல்லையோ ஆனா ஸ்டைல் இருக்கு.இந்த வயசுலயும். அந்த ஸ்டைலுக்காக கொடுத்த பட்டம் தான் அது. அது அவருக்கு மட்டும் தான் பொருந்தும். வேற எந்த நடிகர்களும் நான் தான் அடுத்துனு சொல்லிகல .ஏன்னா இந்த எல்லாருமே அவருடைய ரசிகர்களா தான் இருந்துருப்பாங்க.இன்னமும் இருப்பாங்க.ஏன்னா அவர ,கமல் சார்-ஐ-லாம் பாத்துதான் வளந்துருப்பாங்க.நடிக்க வரணும்னு ஆசைப்பட்டுருப்பாங்க. அவர் மாதிரி பேரும் புகழும் ரசிகர்களோடு ஆதரவும் ஆர்பரிப்பும் தனக்கும்  இருக்கணும்னு நினைப்பாங்கதான் . நாம அந்த இடத்துல இருந்தாலும் அப்டித்தான் நினைப்போம்.அது மனிதனுடைய இயல்பு.இயற்கை . ஆனா எனக்கு அந்த பட்டம் குடுங்கனு அவங்க கேக்கல. ஆனா அவங்க பேர் சொல்லி ஜால்றா போடுற சிலபேர் பத்த வைக்குறது, அது தீயா , இந்த காலத்து ஆயாக்கள் வாயில விழுந்து வேற மாதிரி மத்தவங்க காதுகளுக்கு வந்துகிட்டு இருக்கு.

    ஒரே  ஐயின்ஸ்ட்டின் தான்,ஒரே எடிசன் தான் ,சரி ஏன் அவ்ளோதூரம் போகணும்?  ஒரே  அறிஞர் அண்ணா அவர்கள் தான்,ஒரே கர்மவீரர்  காமராஜர் அவர்கள் தான்,ஒரே கலைஞர்  கருணாநிதி அய்யா தான் ,ஒரே புரட்சித் தலைவி  ஜெயலலிதா அம்மா தான், ஒரே நடிகர் திலகம்  சிவாஜி சார் தான், ஒரே புரட்சித் தலைவர் MGR அவர்கள் தான், ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி சார் தான் . நமக்கு வேணும்னா நமக்கு பிடிச்ச மத்த நடிகர்களுக்கு வேற வேற பட்டப் பெயர் வச்சுப்போம். மத்தவங்களுடையது வேண்டாம்.

    அவருக்கு இருக்குற ஆயிரம் பிரச்சனைல இவங்க வேற எதையாவது சொல்லி அவரை கொடஞ்சுக்கிட்டே இருக்குறது எப்ப பாத்தாலும்.. இந்த மாதிரி பிரச்சனை-லாம் வேணாம்னுதான் அவரு இமயமலைக்கு கிளம்பிடுறாரு.



    சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் அட்வைஸ் "குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருந்துருப்பேன் "-னு சொல்லி குடிக்காதீங்கடானு சொன்னீங்களே சார் , இது.. இது..இதுமாதிரி தான் சார் எதிர் பாக்குறோம். நீங்க சிகரெட் பிடிக்கிற ஸ்டைல் பாத்து சிகரெட் பிடிச்சவங்க அல்லது பிடிக்க ஆரம்பிச்சவங்க எவ்ளோபேர் இருந்திருப்பாங்க. அவங்க உடலும் வீணாக்கிருக்கும்.அவங்களுக்கு இப்போகூட நீங்க அட்வைஸ் சொல்ல முடியும். ஏன்னா நீங்க உணருறீங்க இப்போ ,அது உங்க உடல் நலனை கெடுத்துருச்சுனு. உணருறதுதானே வாழ்க்கை.

     இதுமாதிரி உங்கள follow பண்ற கோடிக்கணக்கான பேர், முக்கியமா இந்த இளைஞர்-களுக்கு வாழ்க்கைல முன்னுக்கு வர அட்வைஸ் பண்ணுங்க. சும்மா நடிகர்கள் பேர் வச்சு கண்ட சண்டை போடாதீங்கன்னு அட்வைஸ் பண்ணுங்க. வாழ்க்கைல செய்யவேண்டிய முக்கியமான விஷயங்கள்  இருக்குனு சொல்லுங்க.ஏன்னா உங்க ஒரு வார்த்தைக்கு எப்பவுமே மரியாதை அதிகம்.


உன் அலும்ப பார்த்தவன்..

உங்க அப்பன் விசில கேட்டவன்..
உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..
 
பேர தூக்க நாலும் பேரு..
அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு..
குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு..
 
டைகர்கா ஹுக்கும்...
 


LOVE YOU ALWAYS   💖💖💖

சனி, 12 நவம்பர், 2022

ஏதாவது ஒரு வேல செய்யணும்.

     எல்லாருமே வாழ்க்கைல ஏதாவது ஒரு வேல செய்யணும். சும்மா அடுப்படில இருக்குறது மட்டுமே வேலையாகவோ இல்ல குழந்தைங்களை பாத்துக்குறது மட்டுமே அவங்களுக்காக எல்லாத்தையும் செய்யுறது வாழுறது மட்டுமே வாழ்க்கையா இருக்க கூடாது.

    எல்லா பெண்களுக்குமே கல்யாணத்துக்கு அப்பறம் குழந்தைங்கள்னு வரும்போது கண்டிப்பா தன்னுடைய கரியர்-ல இருந்து ஒரு பிரேக் விழும். அது பெண்களா பிறந்த அனைவருக்குமே பொதுவா இருக்க கூடிய வரக்கூடிய ஒரு விஷயம். நம்மள பலபேர் என்ன பண்ணுவோம்னா அதுக்கு  அப்பறம் நம்முடைய வாழ்க்கையை அப்படியே போறபோக்குல வாழ்ந்துடுவோம். நமக்குன்னு எதுவும் பண்ணிக்க மாட்டோம். நம்ம உள் அழகையோ  வெளி அழகையோ  பொருட்படுத்தமாட்டோம். பலபேருக்கு அதான் பிள்ளைங்களை பெத்தாச்சு இல்ல அப்பறம் என்ன இனி நமக்குனு தனியா பாத்துக்கனு இருந்துடுவோம். அதே வகையில தான் நம்முடைய கரியர்-யும் . பிள்ளைங்களை பாக்கணும் பிள்ளைங்களை பாக்கணும்னு நம்ம கரியர் அப்டியே போகிடும். அஞ்சு வருஷம் ஆறு வருஷம் கழிச்சு திரும்பி பாக்கும்போது நமக்கு யாரும் வேல குடுக்க முன் வரமாட்டாங்க.நம்ம படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும்.அதனால கூட பலபேர் லைஃப் அப்டியே போயிடும்.

    நான் கேக்குறது எல்லாம் , படிச்ச படிப்புக்கு மட்டும் தான் வேலை செய்வேன்னு நினைக்காம , சின்ன வேலையா இருந்தாலும் எதாவது ஒரு வேலைய செய்ய ஆரம்பிக்கணும். முதல் அடி எடுத்துவச்சா கண்டிப்பா நம்முடைய குறிக்கோளுக்கு நம்மை  கொண்டு சேக்கும் நம்முடைய முயற்சி. எந்த வேலைய செஞ்சாலும் திருப்தியோட சந்தோஷமா செய்யணும்.அதுல இருந்து அடுத்து படி ஏறி போகணும். இனிமே என்னனு சும்மா உக்காந்து இருக்குறதுக்கு ஒரு வேலனு ஒன்னு பண்ணினா நம்முடைய உடம்புக்கும் நல்லது மனசுக்கும் நல்லது. நம்ம மேல நமக்கே confident வரும். நம்ம மேல நமக்கே மரியாதை வரும்.    

    நான் blogger , youtuber ,என் friend -டோட நாவலுக்கு குரல் கொடுத்துக்கிட்டு இருக்கேன். painting கத்துக்கிறேன் , வீடு கணவன் ,home maker -ஆ இருக்கேன்(அது சாதாரண வேலை இல்ல) ஆனா அதுக்கும் மேல ஏதாவது சம்பாதிக்கிற மாதிரியான ஒரு வேலை பண்ணணுமே....

    இந்த மாதிரி யோசிச்சுதான் நான் இங்க டிரைவர் வேலைக்கு சேந்தேன். நம்ம ஊருல  ஊபர் மாதிரி இங்க வேற சில கம்பெனிகள் இருக்கு. என்னுடைய கணவர் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணி உன்னால இத செய்ய முடியும் உனக்கும் பிடிச்ச வேல , எவ்வளவு நேரம் செய்யணும்னு நினைக்கிறியோ  அவ்வளவு நேரம் செய் உனக்கும் ரிலாக்ஸ் -ஆ இருக்கும். ஒரு experiance கிடைக்கும் அது இதுனு என்ன பிரைன் வாஷ் பண்ணி செய்யவச்சாரு. ஆரம்பத்துல எனக்கு நிறைய கேள்விகள் இருந்தது என் கிட்டையே , நிறைய சந்தேகங்கள் இருந்தது என் மேலையே.தயக்கங்கள் இருந்தது. என்னால முடியுமா? நான் ஏன் இத பண்ணனும்?நான் படிச்சது M.phil computer science , அமெரிக்காவுல இதுக்கு பேர் டபுள் மாஸ்டர்ஸ். இங்கலாம் எவ்வளவு சம்பாதிக்கலாம் தெரியுமா? அதுமட்டும் இல்லாம நம்ம ஊருலதான் கவுரவம் கவுரவம்-னு நாம எல்லாரும் காலை மதியம் இரவு உணவோட கவுரவத்தையும் சேத்து மூளைக்கு சாப்பாடா கொடுத்துக்கிட்டு இருக்கோமே. அந்த சூழ்நிலையிலதான் நானும் வளந்தேன். அப்போ எனக்கும் அது மண்டையில ஊறிபோயித்தானே இருக்கும். அப்போ நான் படிச்ச படிப்பை விட மத்த வேலை செய்ய எனக்கு மனசு வரல. யோசிக்குறேன், யோசிக்கிறேன், ரொம்ப யோசிக்கிறேன்.நம்ம ஏன் செய்யணும்னு முதல்ல  யோசிச்சேன், நம்ம செய்யணுமானு அப்பறம்  யோசிச்சேன், அப்பறம் நம்மால செய்ய முடியுமானு யோசிச்சேன். அடுத்து சரி போ செஞ்சிதான் பாப்போமேனு யோசிச்சேன்.

    முதல்ல டிரைவர் வேலை செய்ய ஆரம்பிச்சபோது நிறைய தடு மாற்றம் இருந்தது. ரூட் தெரியாது.தப்பான ரூட் போய்டுவேன். அந்தமாதிரிலாம் இருந்தது . அப்பறம் போக போக பிக்கப் பண்ணிக்கிட்டேன். இந்த வேலையில என்ன வசதினா எப்ப வேணும்னாலும் ஆன்லைன் போயிக்கிலாம்  , ride பிக்கப் பண்ணிக்கலாம். எப்போ வேணும்னாலும் offline  போயிக்கிலாம்.இவ்வளவு நேரம் டிரைவ் பண்ணனும்னு அவசியம் இல்ல அல்லது இவ்வளவு தூரம் டிரைவ் பண்ணனும்னு அவசியம் இல்ல அல்லது இத்தனை நாள் பண்ணனும்னு அவசியம் இல்ல. எல்லாமே நம்முடைய இஷ்டம் தான். அந்த வகையில எனக்கு ரொம்பவே வசதியா இருந்தது. 

    நான் ஒரு நாளைக்கு குறைஞ்சது 1.30 மணி நேரம் ride எடுப்பேன். அதிகமா 3.30 மணி நேரம் ride எடுப்பேன். என் பொண்ணு எனக்காக காத்துக்கிட்டு இருப்பா வீட்ல அதனால 3.30 மணிநேரம் மேல நானும் வீட்டுக்கு வந்துடுவேன்.காலைல சமைச்சு வச்சுட்டு வேலைக்கு கிளம்புவேன். அப்படி இந்த வேலைய செய்ய ஆரம்பிச்சு 4 மாசம் ஆகுது.இன்றோடு என்னோட 200வது ரைடு முடிச்சிருக்கேன். இந்த வேலை செஞ்சாலும் என்னுடைய படிப்புக்கான வேலையும் தேடிக்கிட்டே தான் இருந்தேன். என்னுடைய friend உதவியால நான் படிச்ச படிப்புக்கு வேலை கிடைச்சிருக்கு இப்போ. 

    இந்த 4 மாசத்துல 200 ride -கள்.எல்லாம் 5 ஸ்டார் review-ல். எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது. சில நாள் சூப்பர்-ஆ இருக்கும்.சில நாள் சுமாரா இருக்கும்.கிட்டத்தட்ட 220 புது மக்களை பாத்துருப்பேன்.220 புது மனுஷங்கக்கிட்ட பேசிருப்பேன் பழகிருப்பேன். ஒரு ஒருத்தங்களும் வித்யாசமானவங்க. சிலபேர் நல்லா பேசுவாங்க ,சிலபேர் ஒரு வார்த்தைகூட பேசமாட்டாங்க. சில பேர் கேள்வியெல்லாம் கேப்பாங்க, சில பேர் நா கேக்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுவாங்க. சில பேர் அவசர அவசரமா வேலைக்கு போவாங்க. சில பேர் அப்பாடா என் வீட்டுக்கு போய் என்னுடய சோஃபா-ல தலையை வைக்கணும்னு சொல்லி அவ்வளவு சோர்ந்து வருவாங்க. விடிய காலைல வேலைக்கு போறவங்களையும் கொண்டுபோய் விட்டுருக்கேன், லேட் நைட் வீட்டுக்கு வேலையில இருந்து திரும்பி வர்றவங்களையும் கொண்டு போய் வீட்ல விட்ருக்கேன். சில பேர் எனக்கு வேலைக்கு டிப்ஸ் கொடுப்பாங்க.சில பேருக்கு வேலைக்கு நான் டிப்ஸ் தந்துருக்கேன்.இங்க வேலை இருக்கு. இந்த கோர்ஸ் பண்ணு, இந்த வேலை ட்ரை பண்ணலாம்னு suggest பண்ணுவாங்க. சில பேர் சந்தோஷமா சிரிச்சுகிட்டே வருவாங்க.சில பேர் சோகமா வெளில வெறிக்க பாத்துக்கிட்டே வருவாங்க. சில பேர் சந்தோஷமா டிப்ஸ் (பணம்) குடுப்பாங்க. இப்படி எவ்வளவு வித்யாசமான மனுஷங்களை சந்திச்சேன், பேசினேன் .

    இந்த வேலை மூலமா தெரியாத ரூட் தெரிஞ்சுக்கிட்டேன், எத்தனையோ தெரு பேர்களை தெரிஞ்சுக்கிட்டேன். எத்தனையோ அழகான community -களை பாக்குற வாய்ப்பு கிடைச்சது. எவ்வளவோ அழகான வீடுகளையும் வீடு இருக்குற இடங்களையும் பாக்குற வாய்ப்பு கிடைச்சது. எந்த வேலையும் ஈஸி இல்லனு தெரிஞ்சுகிட்டேன். எந்த வேலையும் குறைவான வேலை இல்லனு தெரிஞ்சுக்கிட்டேன்.எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டேன். இப்படி ஒரு அழகான புது அனுபவம் இந்த வேலை எனக்கு குடுத்தது. 

    இந்த அனுபவம் கிடைக்க காரணம் என்னுடைய கணவர் தான். என்னைவிட என் மேல நம்பிக்கை வச்சு உன்னால  முடியும் செய்னு என் பின்னாடி இருந்து என்ன எப்பவுமே முன்னாடி தள்ளுற இந்த மாதிரி ஒரு ஆண் எல்லா பெண்ணுக்கும் பின்னாடி ஒரு comrade -ஆ இருக்கணும். 

வியாழன், 20 அக்டோபர், 2022

ரசிகன் ரசிகன்னு சொல்றாங்க நிஜமாவே மதிக்குறாங்களா ?

 ரொம்ப நாளா ஒரு விஷயம் மனசுல ஓடிக்கிட்டே இருந்தது. நமக்கு பிடிச்ச ஹீரோ ஹீரோயின் திரையில வரும்போது நாம கொண்டாடுறோம். 

நமக்கு ஒரு நடிகரையோ நடிகையையோ பிடிக்கிறது தப்பில்ல.ஆனா எதுக்காக இந்த பால் அபிஷேகம்  பழ அபிஷேகம் பண்ணனும்?எதுக்காக 10 அடில கட்டவுட் வைக்கணும்? நிஜமான ஒரு விஷயத்தை நாம கவனிக்கிறோமா? இப்படி அபிஷேகம் கட்டவுட்,முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் 1000 ரூபாயா இருந்தாலும் போய் பாக்குறது இப்படி நாம  எல்லாம்பண்றோம்..உங்க அளவுகடந்த அன்பை வெளிப்படுத்துறீங்க ,சரிதான். ஆனா இதுலாம் செய்றவங்கள்ல  எத்தனை பேருக்கு சொந்தமா ஒரு பைக்கு கூட இல்ல ? எத்தனை பேர் இன்னும் ஷேர் ஆட்டோல போயிட்டு வந்துகிட்டு இருக்கீங்க.எத்தனை பேர் இன்னும் பஸ்ல தொங்கிக்கிட்டு பயணம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.ஆனா நீங்க கட்டவுட் வைக்குறவங்க  audi கார், பென்ஸ் கார் -னு வளர்ந்து போய்கிட்டே இருக்காங்க. நாம இன்னும் தொங்கிக்கிட்டு தான் பயணம் பண்றோம். 

நடிக்கிறது அவங்க தொழில். ஆனா நாம ஏன் அதை ரொம்ப பெரிய விஷயமா கொண்டாடுறோம்னு தெரியல.  ஒரு விஷயம் என்ன ரொம்பவே யோசிக்க வச்சது என்னனா, ஒரு நடிகரை அல்லது நடிகையை பாக்குறோம் பொது இடத்துல,  அவங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்க ஆசைப்படுறோம்  எத்தனை நடிகர் அல்லது நடிகைகள் ஒரு நிமிஷம் நின்னு போட்டோ எடுக்குற உங்க பேரை கேக்குறாங்க? அல்லது எப்படி  இருக்கிறீங்கனு கேக்குறாங்க? அல்லது போட்டோ எடுத்ததுக்கு அப்பறம் ஒரு தேங்க்ஸ் சொல்றாங்க. (தேங்க்ஸ் அவங்க ஏன் சொல்லணும்னு நினைக்காதீங்க, ரசிகர்கள் இல்லைனா அவங்க படம்உம ஓடாது, காசும் கிடைக்காது.சோ தேங்க்ஸ் சொல்லணும்.மேடை மேடையா  ஏறினா மட்டும் தேங்க்ஸ் சொல்றாங்க இல்ல.ரசிகர்களுக்கு நன்றி அது அந்த போட்டோ எடுக்கும் போதும் இருக்கணும்.)சொல்லுங்க பாப்போம். மேடை ஏறினா மட்டும் உங்களால தான் நான் இங்க இருக்கேன். உங்களால தான் நான் வளந்துருக்கேன் ,நீங்க இல்லைனா நான் இல்ல , நீங்கதான் காரணம் அப்பப்பப்பா இன்னும் என்னனென்னவோ சொல்றாங்க. ஆனா நேர்ல ஒரு ரசிகனை அல்லது  ரசிகையை பார்க்கும்போது அந்த சந்தோசம் அவங்க முகத்துல இல்லையே.ஏதோ அவங்க நேரத்தை நாம வீணாக்குறமாதிரியும் , ஒரு தொந்தரவாக நாம இருக்குறமாதிரியும் behave பண்றாங்க.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  சார்,இவ்வளவு உயரத்துக்கு போனாலும் ரசிகனை பாத்தா  அவன் பக்கத்துல வந்து போட்டோ எடுத்தா சிரிச்சுக்கிட்டு ,எடுத்ததும் இப்பையும் தேங்க்ஸ் சொல்றாரு. ஹலோ சொல்றாரு. சியான்  விக்ரம்  சார், இப்பவரைக்கும் நின்னு சிரிச்சு பேசி போட்டோக்கு போஸ் கொடுத்து தேங்க்ஸ் சொல்லி நல்லா இருக்கீங்களானு கேக்குறார். விஜய்சேதுபதி சார்,பல  படி மேல போய் கூட்டத்தோட கூட்டமாய் நின்னு இன்னும் சொல்லப்போனா ரசிகனுக்கு முத்தம் கொடுக்குற அளவுக்கு இருக்குறார். ஆனா இவங்கள தவிர எத்தனை பேரை நீங்க சொல்லுவீங்க ரசிகர்கள் கிட்ட அவங்களை  தொல்லையா நினைக்காம, அவங்க அன்பை  பாக்குறது? சொல்லுங்க.

ஆனா ரசிகர்கள்னு நாம பண்றதும் சில அட்டூழியத்தனம் தானே, என்னதான் நாம ஒரு நடிகையின் ரசிகரா இருந்தாலும் அவங்களை பாக்கும்போது எல்லை மீறி நடக்க முயற்சி பண்றது ஒரு பெண்ணை தொட்டுப் பாக்க முயற்சி பண்றது(இது பெண்ணுக்கு மட்டும் அல்ல ஆணுக்கும் தான். ஒருவரோடு சம்மதம் இல்லாம அவங்கள மேல விரல் கூட படக்கூடாது.அவங்க permission-னோட handshake பண்றது,hug பண்றது தப்பு இல்ல)இதுலாம் நாம பண்ற அசிங்கம் தானே. அவங்க எப்படி நடிச்சா என்ன ?அது தொழில் .அவங்களுடைய தொழில். வேலை. எல்லா வேலையும் மாதிரி நடிப்பும் ஒரு வேலைதான். அதைத்தான் அவங்க பண்றாங்க . அதுக்காக தொடணும் தொட்டுப்பாக்கணும்னு(அவங்க சம்மதம் இல்லாம) நினைக்கும்போது நம்முடைய சுய மரியாதையை நாம அங்க இழக்குறோம்னு கூட நாம உணர்வது  இல்ல.

நிஜமாவே அவங்களை நமக்கு பிடிச்சிருந்தா , அடடே என் ரசிகரா இவங்க, இந்த நல்லது பண்ணிருக்காங்களா? இந்த சாதனை பண்ணிருக்காங்களா அவங்க நா பாக்கணுமேனு அந்த நடிகர் நடிகை நினைக்குற அளவுக்கு நாம வரவேண்டாமா? (அப்படியெல்லாம் பண்ணிட்டா நா செலிபிரிட்டி ஆகிடுவேனேனு நினைக்காதீங்க) அல்லது அவங்களை மீட் பண்ணும்போது நீங்க என்ன பண்றீங்கன்னு ஒரு வேல அவங்க கேக்கும்போது நம்ம மேல மத்தவங்களுக்கு மரியாதை வரமாதிரியான  ஒரு இடத்துல நாம இருக்கவேண்டாமா? 

என்னைக்குதான் நாம மாறுவோம்? என்னைக்குதான் நாம திருந்துவோம். அவங்க நின்னா நியூஸ், நடந்தா நியூஸ், தும்மினா நியூஸ், இருமினா  நியூஸ்னு அவங்கள சுத்தி சுத்தி வந்துக்கிட்டு இருக்குற இந்த மீடியாவை சொல்றதா இல்ல முதல் வேலையா அந்த வீடியோவை பாத்து அவங்களுக்கு அதுலயும் காசு சம்பாதிச்சுக்குடுக்குற நம்மாலதானே இந்த மாதிரி நியூஸ் ரீச் ஆகுது , சோ நம்மள சொல்றதா?

இவங்களும் நார்மல் மனிதர்கள் தான்னு அவங்கள கொஞ்சம் கண்டுக்காம விட்டுட்டோம்னாலே எல்லாம் சரியாகிடும். அவங்களுக்கும் நம்ம மேல மதிப்பு வரும் நமக்கும் மாயை மோகம் தீரும் .ஆனா அது என்னைக்குதான்னு தெரியல .


உலகம் முழுக்க இப்படித்தான் இருக்கு.



திங்கள், 17 அக்டோபர், 2022

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு

 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்,

                 

                 நான் படித்து வளர்ந்தது அனைத்தும் நமது நாட்டில்.தமிழ் நாட்டில். எனது சொந்த ஊர் விருத்தாச்சலம் . நான் படித்தது தமிழ் நாட்டு மாநிலத்தில் உள்ள பல பள்ளிகளில் கல்லூரிகளில்.அரசு பள்ளியிலும் படித்தேன் தனியார் பள்ளியிலும் படித்தேன். நான் படித்த பொழுது நான் எதிர்கொண்ட  முதல் பிரச்னை கழிப்பறை வசதி. 

                அரசு பள்ளியில் படிக்கும் போது கழிப்பறைகள் சுத்தம் செய்யவே மாட்டார்கள்.அதனால் நாங்கள் எங்கள் பள்ளிக்கு பின்புறம்  சிறுது தூரம் நடந்துசென்று அங்கு  இருக்கும் மறைவான காட்டு செடிகளின் அருகில் பயன்படுத்திவிட்டு வருவோம். இதுதான் நான் படித்த  5 வருடங்களாக அங்கு நாங்கள் பின் பற்றியது. 

               அதன் பின் நான் இரண்டு வருடங்கள் தனியார் பள்ளியில் படிக்க தொடங்கினேன். அங்கும் கழிவறைகள் சுத்தமாக இருக்காது. அரசு பள்ளியிலாவது பின்புறம் காட்டுப்பகுதி இருந்தது ஆனால் தனியார் பள்ளியில் அதுவும் இல்லை. சுத்தமாக இல்லாத காரணத்தினால் கழிவறைகளை அநேகபேர் பயன்படுத்தவே மாட்டோம். நினைத்து பாருங்கள் காலை 8.30 மணியில் இருந்து மாலை 4.30 மணிவரை நாங்கள் கழிவறை  பக்கம் கூட செல்லமாட்டோம். இது எங்களுக்கு உடலளவில் எவ்வளவு பிரச்சனைகளை கொடுத்திருக்கும் என்று சற்று நினைத்துப்பாருங்கள். அதுவும் மாதவிடாய் காலங்களில் நாங்கள் படும் அவஸ்தைக்கு அளவே இருந்திருக்காது.அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

              நான் படித்து முடித்து பல வருடங்கள் ஆகின்றதுதான். ஆனால் இன்றும் பல தனியார் பள்ளிகளிலும் முக்கியமாக அரசு பள்ளிகளிலும் பிள்ளைகள் எதிர் கொள்ளும் முதல் பிரச்சனை கழிவறை வசதியாகத்தான் இருக்கின்றது. என் அண்ணன் மகள் தனியார் பள்ளியில் படித்தாள் . அவள் கழிவறை சுத்தமாக இல்லாத  காரணத்தினால் அந்த பக்கமே செல்ல மாட்டாள். விளைவு அவளுக்கு constipation தொல்லை வந்தது. அப்போது நான் யோசித்தேன் , நான் படிக்கும் போதும் பள்ளிகளில் இதே பிரச்சனை அடுத்த தலைமுறை படிக்கும் போதும் இதே பிரச்சனையா என்று. இது மிகவும் வேதனை அளிக்கின்றது.

               இதற்க்கு பெற்றோர்களும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறார்கள்.ஏன் என்றால் , குழந்தையிலேயே அவர்களுக்கு தன்னுடைய சுய சுத்தத்தை சொல்லித்தரவில்லை என்றே நான் சொல்வேன். சுத்தம் செய்பவர்களும் மனிதர்கள் தானே.  பிள்ளைகளை வளர்க்கும் போதே வீட்டில் இருந்தே அந்த சுத்தம் வரவேண்டும் அல்லவா? பிள்ளைகளும் ஒரு கழிவறையை எப்படி பயன்படுத்த வேண்டும் வீடாக இருந்தாலும் வெளியிடமாக இருந்தாலும் தன் பிறகு மற்றவர் அதை பயன்படுத்த வேண்டுமே அதற்காக நாம் சுத்தமாக விட்டு செல்லவேண்டும் என்று ஒரு சிறிய basic knowledge என்று சொல்வார்களே அதை  கற்றுக்கொள்ள வேண்டும் .அதை கற்றுத்தர வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது. அதை அவர்களும் சரியாக பிள்ளைகளுக்கு சொல்லித்தரவேண்டும்.பிள்ளைகளும் பின்பற்றவேண்டும். அப்போது சுத்தம் செய்பவர்களும்அறுவருப்பு  படாமல் சுத்தம் செய்வார்கள். 

                 நான் அமெரிக்காவில் தற்போது வசிக்கிறேன். எனது குழந்தைகள் இங்கிருக்கும் பள்ளியில் படிக்கின்றனர். நமது நாட்டில் உள்ள கல்வி முறையும் இந்த நாட்டில் உள்ள கல்வி முறையும் வேறு வேறு .அனால் நான் இங்கு பிள்ளைகளின் கல்வி பற்றி பேச வரவில்லை. அனால் இங்கு பிள்ளைகளுக்கு மூன்று  வருடங்களில் இருந்தே கழிவறைகளை சரியான முறையில் உபயோகப்படுத்த  கற்றுக்கொருக்கிறார்கள். அதை சுத்தமாக வைத்திருக்க கற்றுக்கொடுக்கிறார்கள். அதை உபயோகப்படுத்தியபின் கைகளை சுத்தமாக கழுவ கற்றுக்கொடுக்கிறார்கள். இங்கு என் பிள்ளைகள் நான் பட்ட அவஸ்தையை படவில்லை. நாங்களும் எங்களது கடமையை கற்றுக்கொடுத்துள்ளோம்.அவர்களும் பின்பற்றுகிறார்கள் . எந்த அருவருப்பும் இல்லாமல் இங்கு நிம்மதியாக உபயோகிக்கிறார்கள்.

                மாற்றம் ஒருவரிடம் இருந்து மட்டும் வராது . அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே ஆரோக்கியமான சுத்தமான தலைமுறையை உருவாக்க முடியும். இதற்கு கண்டிப்பான சட்டமும் தேவை படுகிறது. நமது நாட்டில் எத்தனை பள்ளிகளில் இன்றும் அசுத்தமான கழிவறைகள்  உள்ளது என்று தெரியுமா.எத்தனை பிள்ளைகள் இன்றும் காலை முதல் மாலை வரை அந்த பக்கமே செல்லாமல் தங்கள் உடலை வீணாக்கி கொள்கின்றனர் என்று தங்களுக்கு தெரியுமா.? இப்போது நாம்  பள்ளிகளை பற்றியும்  கல்வி முறையை பற்றியும் வாதிடுக்கின்றோம்  பேசுகின்றோம் விமர்சிக்கின்றோம் ஆனால் அடிப்படை வசதி இல்லை என்பதை மறந்துவிட்டோம்.  தயவு  கூர்ந்து ,   பள்ளி படிக்கும் பிள்ளைகளின் முதல் பிரச்சனையான இந்த கழிவறை பிரச்சனையை  தீர்த்து வைக்குமாறு தங்களை மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு வேலை தாங்கள் அதற்கான சட்டத்தை முன்னரே இயற்றியிருந்தால் அது சரியாக கவனிக்கப்படுகிறதா என்று உறுதி படுத்துங்கள்.கடுமையான சட்டம் தேவை. அது வீட்டில் இருந்து தொடங்கவேண்டும்.



நன்றி

ஸ்ரீவித்யா கோவிந்தராஜ் 

        

வியாழன், 12 மே, 2022

நம்ம ஊருல போலீஸ் அதிகாரீங்க ஏன் பொது மக்களை ஒரு மரியாதையோட பேசமாட்றாங்க அழைக்க மாட்றாங்க?

 நம்ம ஊருல போலீஸ் அதிகாரீங்க ஏன் பொது மக்களை ஒரு மரியாதையோட பேசமாட்றாங்க அழைக்க  மாட்றாங்க? இது பொதுவா நாம எல்ல இடத்துலையுமே பாக்கலாம். ஒரு டிராபிக் -ல நின்னாக்கூட ஒரு மனுஷனை நகர சொல்லனும்னா அந்த மனுஷனுக்கு எவ்வளவு வயசா இருந்தாலும் யோவ் தள்ளி நில்லு அப்படீன்னு ஒருமைல தான் சொல்றாங்க. ஏன் இப்படி ஒரு பழக்கம் வந்தது? 

நம்ம அப்பா மேல நமக்கு மரியாதை இருக்கும். நம்ம அண்ணன் தம்பி எப்படி பட்டவங்க , எப்படி குடும்பத்துக்காக உழைக்குறவங்கனு நமக்கு தெரியும். ஒரு டிராபிக்-ல நிக்கும்போது இப்படி நமக்கு மறியாதைக்குறியவங்களை ஒருமையில ஒரு போலீஸ் அதிகாரி பேசினா நமக்கு இயல்பாவே  கோவம் வரும்தானே.அந்த அதிகாரி அப்படி பேசணும்னு பேசி இருக்கக்கூட மாட்டார் , ஆனா அது அவருக்கு பழக்கம் ஆகி இருக்கும்.

20 வயசு பையன 40 வயசு போலீஸ் அதிகாரி ஒருமையில் பேசினா ..அத கூட சரினு எப்படி சொல்லமுடியும்.அப்போ 60 வயசு பெரியவர் 40 வயசு போலீஸ் அதிகாரியை 'யோவ் நகரு' அப்படீன்னு சொல்லலாமா?!  ஒரு பப்ளிக் எப்படி ஒரு காவல் அதிகாரியை அவருடைய பதவிக்கும் உடைக்கும் அவருடைய வயதுக்கும் மரியாதை கொடுத்து சார் -னு கூப்பிடுறோம். ஆனா அவங்க எல்லாரையும் சார்-னு சொல்ல வேண்டாம்.சொல்லவே வேண்டாம் ஆனா , தம்பி நகருனு சொல்லலாம் ,வயசு அதிகமானவங்கள சார்-னு சொல்லலாம்.தப்பில்லை.

ஆனா எல்லாரையும் 'ஏய் இங்கவா', 'முன்னாடி நகரு' ,  'இங்க நீக்காத', 'போயிட்டே இரு' , இப்படி ஒருமையில் தான் சொல்றாங்க. எங்க இருந்து இவங்களுக்கு இந்த பழக்கம் வந்தது?யோசிச்சுப்பாத்தா இந்த அதிகாரிகளை அவங்களுடைய மேலதிகாரி எப்படி நடத்துறாங்களோ அப்படி தான் அவங்க தனக்கு கீழ  இருக்குறவங்களை நடத்துறாங்க. சரி, எங்க இருந்து ஆரம்பிக்குது இது? வேற எங்க ?! தலைவர்கள் கிட்ட இருந்துதான். பெரிய பதவியில் இருக்குற தலைவர்கள் தனக்கு கீழ பதவியில்  இருக்குறவங்களை ஒருமையில பேசுறாங்க, அத அவங்க தனக்கு கீழ இருக்குறவங்ககிட்ட பயன் படுத்துறாங்க. இப்படியே ஒரு ஒரு படியா கீழ இறங்கிவந்து கடைசில பொதுமக்கள் மேல காட்டுறாங்க. இது இங்க மட்டும் இல்ல எல்லா துறைகள்லையும் இருக்கு.ஆனா ,மற்ற துறைகளில் அந்த துறைகளுக்குளேயே இருக்கும் , போலீஸ்ங்குறதால  அவங்க பொது மக்களை அப்படி அழைக்குறாங்க. இது ஒரு இடத்துல மாத்தப்படவேண்டிய விஷயம் இல்ல . ஹயாராரிக்கி படி தலைவர்கள்கிட்ட இருந்து மாத்தவேண்டிய விஷயம். 

நடக்குமா? நடக்கணும் . நாம இதை மாத்தினாதான் அடுத்த தலைமுறை மாறும். இல்லைனா அடுத்த தலைமுறைக்கும் இந்த பழக்கம் மாறாது. மத்தவங்கள மரியாதையா கூப்பிடணும்னு தோணாது. நம்மகிட்ட இருந்து இப்பவே நாம இதை ஆரம்பிக்கணும்.