பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 12 ஜனவரி, 2013

பொங்கல் நல்வாழ்த்துக்கள்


தமிழ் நாட்ல பொங்கல் திருநாள்  4 நாளுக்கு  ரொம்ப சிறப்பா கொண்டாடுறோம்.இது ஒரு முக்கியமான பண்டிகையும் கூட.

சூரியனோட வடக்கு நோக்கி பயணத்த தான் இந்த திருநாள் குறிக்குது.இதுக்கு 'மகர சங்கராந்தி'-னும் பெயர் இருக்கு.அதாவது சூரியன் மகர ராசியில நுழையுற நாள்.இந்த நாளுலதான் சூரியன் வடக்கு நோக்கி திரும்புது.

புராணத்துல சொல்லனும்னா.பிதாமகர் பீஷ்மர் இந்த நாளுக்காக காத்துருந்து உயிர் விட்டார்னு மகாபாரதத்துல சொல்லப்பட்டு இருக்காம்.

நமக்கு எல்லா நல்லதையும் குடுக்குற இயற்க்கைக்கு விவசாயிகள் நன்றி சொல்ற விழாவா தமிழ்நாட்டில இத சொல்றோம். பொங்கல்னா 'கொடித்தல்' -னு ஒரு அர்த்தம் இருக்கு அப்படினா, அரிசியில் செய்ற சிறப்பான ஒரு உணவை குறிக்குமாம்.

தமிழர் திருநாள்னு சொல்லப்படுற இந்த பொங்கல் தினம் தை மாசம் பிறக்குற நாளில் கொண்டாடப்படுது.இந்த மாசத்துல துன்பால் எல்லாம் போய் வாழ்க்கை வளமா இருக்கும்னு மக்கள் நம்பிக்கை.தை பிறந்தா வழி பிறக்கும்னு ஒரு பழமொழி கூட இருக்கே.(உண்மையா இந்த பழமொழிக்கு அர்த்தம் ,அந்த காலத்துல ரோடு எல்லாம் இல்லாதப்போ ,தை மாசம் அறுவடைக்காக வழி எல்லாம் மறைக்குற அளவுக்கு நிலத்துல நெல்,பயிர்,கரும்பு எல்லாம் வளந்துருக்கும் அதனால பாதைகள் மறஞ்சிருக்கும் ,தை மாசம் பொறந்தா அறுவடை முடிஞ்சு நிலம் சுத்தமா இருக்கும் பாதை தெரியும்னு சொல்றதுக்காக அப்படி சொன்னங்கன்னு எங்கயோ கேள்விப்பட்ட நியாபகம்).

சரி அந்த நாலுநாள் கொண்டாட்டம் என்ன என்ன?

முதல் நாள் போகி.அதாவது மார்கழி மாசத்தோட கடைசி நாள்.'பழையன
கழிதலும் ,புதியன புகுதலும்' னு சொல்வாங்க.இந்த தினத்துல உபயோகள் இல்லாத பழைய பொருள் தூக்கி போட்டுட்டு,
புதுசா வாங்குவாங்க.பழைய பொருள் ,பழைய விறகு எல்லாம் 
போட்டு நெருப்பு மூட்டி அதை சுத்தி குழந்தைகள் ,பெண்கள் எல்லாம் பாட்டு பாடி உடுக்கை 
அடிச்சு ஆடுவாங்க.வீட்ட சுத்தம் பண்ணி,கலர் அடிப்பாங்க. 


ரெண்டாவது நாள் ,பொங்கல் பண்டிகை.இந்த நாளுல விவசாய மக்களோட வாழ்க்கைக்கும் ,வளத்துக்கும் அடிப்படையா இருக்குற சூரியனுக்கு பூஜா செஞ்சு நன்றி சொல்வாங்க.வீட்ல சூரிய ஒளி படுற இடத்துல கலர் கூலம் போட்டு ,அடுப்பு அமைச்சு ,மன்னால செஞ்ச பானைல மஞ்சள் குருத்து சுத்தி,புதுசா விளைஞ்ச அரிசிய இந்த பானைல போட்டு பால் ஊத்தி சமைப்பாங்க.கரும்பு,தேங்காய்,பூ,பழம்,வெத்தல,பாக்கு எல்லாம் வச்சு பூஜா பண்ணுவாங்க.பால் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல்-னு
எல்லாரும் சொல்வாங்க.இது எல்லாத்தையும் சூரிய பகவானுக்கு வச்சு கும்பிடுவாங்க.புது டிரஸ் போடுவாங்க,வெண்பொங்கல் ,சக்கர பொங்கல் இதுதான் அண்ணைக்கு ஸ்பெஷல்.

மூணாவது நாள் ,மாட்டு பொங்கல்.விவசாயிகளோட வாழ்வுக்கும்,வளத்துக்கும் துணையா இருக்குற மாட்டுக்கு நன்றி சொல்ற நாள் தான் இது.மாடுகளுக்கு குளிப்பாட்டி,குங்குமம்,சந்தனம்,
மலர்மாலை,மஞ்சள்னு இது அலங்கரிச்சு கும்பிடுவாங்க.மாடுகளுக்கு பொங்கல்,கரும்புனு எல்லாம் குடுத்து சாப்ட சொல்வாங்க.மாடுகளுக்கு ஆரத்தி எடுப்பாங்க.நோய் நொடி இல்லாம பலநாள் வாழனும்னு மாடுகள வாழ்த்துவாங்க.மாட்டு பொங்கல் அன்னைக்கு பல இடத்துல ஜல்லிக்கட்டு நடக்கும்.இந்த நாளை 'கணுப்பண்டிகை'-னும் சொல்வாங்க.வீட்டு முற்றத்திலையோ இல்ல மொட்டை மாடியிலையோ மஞ்சள் இலை போட்டு அதுல முன்னாடி நாள் செஞ்ச வெண் பொங்கல்,சர்க்கரை பொங்கல், எல்லாம் வச்சு பரிமாறுவாங்க.சிவப்பு,மஞ்சள் கலர்ல சோறு சின்ன சின்ன உருண்டையா வச்சு கரும்பு துண்டு,மஞ்சள் கிழங்கு,வெத்தல ,பாக்கு வாழப்பழ துண்டு எல்லாம் பரிமாறுவாங்கலாம். பெண்கள் அவனக் உடன்பிறந்த சகோதரர்கள் அவங்க குடும்பம் எல்லாம் நல்லா இருக்கணும்னு வேண்டி வணங்குறாங்க.மஞ்சள் நீரால ஆரத்தி எடுப்பாங்க.கிராமத்துல பலவிதமான உணவு செஞ்சு எடுத்துகிட்டு போய் ஆத்தங்கரையிலையோ ,குளத்தங்கரையிலையோ, எல்லாம் சேந்து சாப்பிடுவாங்க.


நாலாவது நாள் ,காணும் பொங்கல் அன்னைக்கு எல்லாரும் குடும்பத்தோட,நண்பர்கள் வீட்டுக்கோ,கடற்க்கரைக்கோ,நதிக்கரைக்கோ,சுற்றுலா கண்காட்சிக்கோ,பூங்காக்களுக்கோ இதுமாதிரி எதாவது பொது இடத்துக்கு போய் சந்தோசமா பேசி விளையாடி பொழுதை போக்குவாங்க.


இந்த பண்டிகையை நாடு முழுசும் எந்த எந்த பெயர்ல சொல்றாங்கன்னு தெரியுமா?

உத்திர பிரதேசம் உள்ளிட்ட வாடா மாநிலத்துல ,அப்பறம் குஜராத்,மகாராஷ்டிரா ,ஆந்திரா,கர்நாடகா,கேரளா போன்ற மாநிலத்துல மகர சங்கராந்தி கொண்டாடப்படுது.பஞ்சாப்ல இது லோஹ்ரினும் ,வங்காளம்,அஸ்ஸாம் மாநிலத்துல பொகாலி பிஹூ-னும் சொல்றாங்க.

மகர சங்கராந்திக்காக பல இடத்துல மேளாக்கள்-னு சொல்ற விழாக்கள் கொண்டாருறாங்க.இதுல ரொம்ப புகழ் பெற்றது கும்ப மேளா.12 வருஷத்துக்கு ஒரு தடவ கங்கை,யமுனை,சரஸ்வதி புண்ணிய நதி எல்லாம் ஒன்னு சேருற பிரயாக் எனும் அலகாபாத்துல கும்ப மேளா நடக்கும்.கோடிக்கணக்கான பத்தர்கள் இந்த நாளுல புனித நீராடுவாங்க.

வட இந்தியாவுல பெரும்பாலான இடத்துல இந்த பண்டிகையை காற்றாடி பறக்கவிட்டு கொண்டாடுறாங்க.பல வடிவத்துல ,வண்ணத்துல இருக்குற இந்த காற்றாடி பகல் முழுக்க பறக்க விடுறாங்க.ராத்திரி  ஆனதும்  மெழுகுவர்த்தி பொருத்தப்பட்ட பல காற்றாடிகல வானத்துல பறக்கவிட்டு ஆகாயத்தையே வெளிச்சமாக்குறாங்க.

இதுதான் பொங்கலோட நாலுநாள் கொண்டாட்டம்.
ஆனா நெஜமாவே இதுமாதிரியா நாம இப்போ கொண்டாடுறோம்.காலத்துக்கு ஏத்தமாதிரி ஸ்டைலா ரொம்ப சிரமம் இல்லாம கொண்டாடுறோம்.பொங்கல் அன்னைக்கு பொங்கல் பத்தி இருக்குற நினப்பவிட டி.வி -ல என்ன என்ன ப்ரோக்ராம் போடுறாங்கனு தான் அதிகமா யோசிக்குறோம்.

புதன், 9 ஜனவரி, 2013

பாடலின் வரிகள் - சாய்ந்து சாய்ந்து - நீதானே என் பொன்வசந்தம்

படம் : நீதானே என் பொன்வசந்தம்
பாடல்: சாய்ந்து சாய்ந்து

பாடியவர்:யுவன் ஷங்கர் ராஜா ,ரம்யா NSK  
இசை:இளையராஜா   

பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்


சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது
அடடா ஹே ஹே ஹே
விழியோடு..விழி பேச..
விரலோடு..விரல் பேச ,
அடடா... வேறு என்ன பேச..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
அடடா ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது
அடடா ஹே ஹே ஹே..
ஹே ஹே ஹே..

என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
உனை கண்டு கொண்டேன்..
ஓஹோ .. என் தந்தை தோழன், ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்..
அழகான உந்தன் மாக்கோலம்..
அதை கேட்கும் எந்தன் வாசல்..
காலம் வந்து வந்து கோலமிடும்..
உன் கண்ணை பார்த்தாலே..
முன் ஜென்மம் போவேனே..
அங்கே நீயும் நானும் நாம்..

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது
அடடா ஹே ஹே ஹே

கை வீசி காற்றில்  நீ பேசும் அழகில்
 மெய்யாகும் பொய்யும்..
என் மார்பில் வீசும் உன் கூந்தல் வாசம்
 ஏதேதோ செய்யும்..
என் வீட்டில் வரும் உன் பாதம்..
எந்நாளும் இது போதும்..
இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்..
ஆள் யாரும் பார்க்காமல்
தடயங்கள் இல்லாமல்
அன்பால் உன்னை நானும் கொள்வேன்..

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது
அடடா ஹே ஹே ஹே
விழியோடு.. விழி பேச..
விரலோடு.. விரல் பேச ..
 அடடா வேறு என்ன பேச..

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
அடடா ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது
அடடா ஹே ஹே ஹே..


பாடலின் வரிகள் - வானம் மெல்ல கீழ் - நீதானே என் பொன்வசந்தம்

படம் : நீதானே என் பொன்வசந்தம்
பாடல்: வானம் மெல்ல கீழ் இறங்கி 
பாடியவர்:இளையராஜா, பேலோ ஷிண்டே
இசை:இளையராஜா
எழுதியவர் : நா.முத்துக்குமார்



வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

அன்று பார்த்தது அந்த பார்வை வேறடி
இந்த பார்வை வேறடி
நெஞ்சில் கேட்குதே உள்ளம் துள்ளி ஓடிடும்
வண்டு போல தாவிடும்
கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை
உன் பார்வை தானே ஓ...
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்
என் ஆசை என்ன என்ன நீ பேசி
நான் கேட்க வேண்டும்
இங்கே என்  இன்ப துன்பம் நீ தானே
உந்தன் மூச்சு காற்றை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே
அந்த காற்றில் நெஞ்சினுள்ளில்
பூட்டி வைத்த காவல் காப்பேனே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

பாதி வயதிலே தொலைந்த கதைகள் தோனுது
மீண்டும் பேசி இணையுது
பாதை மாறியே பாதம் நான்கும் போனது
மீண்டும் இங்கு சேர்ந்தது
அன்பே என் காலை மாலை உன்னாலே
உன்னாலே தோன்றும்
என் வாழ்வில் அர்த்தமாக வந்தாயே
நில்லாமல் ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே
கண்கள் உள்ள காரணம்
உன்னை பார்க்கத்தானடி
வாழும் காலம் யாவும் உன்னை
பார்க்க இந்த கண்கள் போதாதே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே


பாடலின் வரிகள் - காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் - நீதானே என் பொன்வசந்தம்

படம் : நீதானே என் பொன்வசந்தம்
பாடல்: காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்
பாடியவர்:கார்த்திக்
இசை:இளையராஜா  

எழுதியவர் : நா.முத்துக்குமார்
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
உன்னை தேடி பார்க்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்.
நெஞ்சில்  உள்ளில் பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்.
தள்ளி தள்ளி போனாலும்
உன்னை எண்ணி வாழும் ஓர்
ஏழை எந்தன் நெஞ்சத்தை பாரடி..
தங்க மெத்தை போட்டாலும்
உன் நினைவில் எந்நாளும் 
தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா வா.
மீதி வைத்த கதைகள்  எல்லாம் பேசி தீர்க்கலாம்.. ஹே ஹே ஹே

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.

நேற்று எந்தன் கன்வில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே..
பார்த்து பார்த்து எந்நாளும்
பாதுகாத்த என் நெஞ்சில்
எந்ந மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு
எண்ணம் ஓடும் தறிகெட்டு..
இன்னும் என்ன செய்வாயோ  சொல்லடி
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே..
மீட்டபோது மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
உன்னை தேடி பார்க்க சொன்னேன்
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

காது கேக்காதவங்க இலவசமா படிக்கலாம்!!!!!!!


காது கேக்காதவங்க  இலவசமா படிக்கலாம்- அட  நிஜமாதாங்க .சென்னைல பாடி-ல இருக்குற  'அஜய் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி'
20 வருஷமா காது கேக்காத குழந்தைங்களுக்கு இலவசமா கல்வி,புத்தகம்,சீருடை எல்லாம் குடுத்து ஹெல்ப் பண்ணிக்கிட்டு வராங்களாம்.

முகவரி :   'அஜய் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி' ,பாடி ,சென்னை-50,
போன்:044-26546209/26544969.

                                              ---நன்றி மாத இதழ் .

பாடலின் வரிகள் -சற்று முன்பு - நீதானே என் பொன்வசந்தம்

படம் : நீதானே என் பொன்வசந்தம்
பாடல்: சற்று முன்பு
பாடியவர்:ரம்யா NSK
இசை:இளையராஜா  
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்


சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும்
மின்னல் அடிப்பதேன்  சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட
என்னை எரித்து நீ செல்
எல்லாமே பொய் என்று சொல்வாயா .. ஒ.. ஒஹோ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னை தானடா
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா
தேங்கி போன ஓர்  நதி என இன்று நானடா ..
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாட..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

சேர்த்து போன நம் சாலைகள்
மீண்டும் தோன்றுமா
சோர்ந்து போன என் கண்களின்
சோகம் மாறுமா
ஓய்ந்து போன நம் வார்த்தைகள்
மேலும் தொடருமா
காய்ந்து போன என் கன்னத்தில்
வண்ணம் மலருமா
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா
தொட்டுத்தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும்
மின்னல் அடிப்பதேன்  சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட
என்னை எரித்து நீ செல்
எல்லாமே பொய் என்று சொல்வாயா .. ஒ.. ஒஹோ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

பாடலின் வரிகள் - என்னோடு வா வா - நீதானே என் பொன்வசந்தம்

படம் :  நீதானே என் பொன்வசந்தம்
பாடல்: என்னோடு  வா  வா
பாடியவர்:கார்த்தி  
இசை:இளையராஜா  
எழுதியவர் : நா.முத்துக்குமார்


என்னோடு  வா  வா  என்று  சொல்ல   மாட்டேன்
உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போக  மாட்டேன்
என்னோடு  வா  வா  என்று  சொல்ல   மாட்டேன்
உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போக  மாட்டேன்
செல்ல  சண்டை  போடுகிறாய்
தள்ளி  நின்று  தேடுகிறாய்
அஹ்  அஹ்  அஹ் அன்பே  என்னை  தண்டிக்கவும்
புன்னகையில்  மன்னிக்கவும்
உனக்கு உரிமை  இல்லையா.....

என்னோடு  வா  வா  என்று  சொல்ல   மாட்டேன்
உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போக  மாட்டேன்

கன்னம் தொடும் கூந்தல்  ஒதுக்க நீ சாய்வதும்
என்னை  கொஞ்சம்  பார்க்கதானடி
கண்ணை  மூடி  தூங்குவதை  போல் நீ  நடிப்பது 
எந்தன்  குரல் கேட்கதானடி
இன்னும்  என்ன  சந்தேகம் 
என்னை  இனி  என்னாலும்
தீயாக  பார்க்காதடி
செல்ல  பிள்ளை  போல  நீ 
அடம்பிடிப்பதை என்ன  சொல்ல
என்னை  விட  யாரும் இல்லை 
அன்பு  செய்து  உன்னை  வெல்ல
சண்டை  போட்ட  நாட்களைதான்  எண்ணி  சொல்ல ..
கேட்டுகொண்டால்  கணக்கும்  பயந்து  நடுங்கும்

என்னோடு  வா  வா  என்று  சொல்ல   மாட்டேன்
உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போக  மாட்டேன்

காதலுக்கு  இலக்கணமே  தன்னால்  வரும்
சின்ன  சின்ன  தலைகணமே
காதல்  அதை  பொறுக்கனுமே 
இல்லையெனில் கட்டி  வைத்து உதைக்கணுமே
உன்னுடைய    கையாலே  தண்டனையை  தந்தாலே
என்  நெஞ்சம்  கொண்டாடுமே
கன்னத்தில்  அடிக்குமடி  முத்தத்தாலே  வேண்டும்மடி
மத்ததெல்லாம்  உன்னுடைய  இதழ்களின்  இஷ்டப்படி
எந்த  தேசம்  போனபோதும் 
என்னுடைய சொந்த  தேசம்
உனது  இதயம்  தானே

என்னோடு  வா  வா  என்று  சொல்ல   மாட்டேன்
உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போக  மாட்டேன்
செல்ல  சண்டை  போடுகிறாய்
தள்ளி  நின்று  தேடுகிறாய்
அஹ்  அஹ்  அஹ் அன்பே  என்னை  தண்டிக்கவும்
புன்னகையில்  மன்னிக்கவும்
உனக்கு உரிமை  இல்லையா.....

என்னோடு  வா  வா  என்று  சொல்ல   மாட்டேன்
உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போக  மாட்டேன்

பாடலின் வரிகள் - முதல் முறை - நீதானே என் பொன்வசந்தம்

படம் : நீதானே என் பொன்வசந்தம்
பாடல்: முதல் முறை
பாடியவர்:சுனிதா சாரதி  
இசை:இளையராஜா
எழுதியவர் : நா.முத்துக்குமார்


முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ... ஓர் பாரம்...
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஓர் ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா,மழையா,வலியா,சுகமா எது நீ.....
நீதானே என் பொன்வசந்தம்


நீந்தி  வரும்  நிலாவினிலே
ஓர்  ஆயிரம்  ஞாபகங்கள்
நீண்டநெடும்   கனாவினிலே
நூறாயிரம்  தீ  அலைகள்
நெஞ்சமெனும்   வினாக்களுக்குள்
என்  பதில்  என்ன  பல  வரிகள்
சேரும்  இடம் விலாசத்திலே
உன்  பார்வையின்  முகவரிகள்
ஊடலில்   போனது  காலங்கள்
இனி  தேடிட  நேரங்கள்  இல்லையே
தேடலில்  நீ  வரும்  ஓசைகள்
அங்கு  போனது  உன்  தடம்  இல்லையே
காதல்  என்றால்  வெறும்  காயங்களா
அது  காதலுக்கு  அடையாளங்களா
வெயிலா,மழையா,வலியா,சுகமா எது நீ.....
நீதானே என் பொன்வசந்தம்

பாடலின் வரிகள் - விழிகளில் ஒரு வானவில் - தெய்வ திருமகள்

படம் : தெய்வ திருமகள்
பாடல்:விழிகளில் ஒரு வானவில் 
பாடியவர்:சைந்தவி
இசை:G .V பிரகாஷ்
எழுதியவர் : நா.முத்துக்குமார்


விழிகளில்  ஒரு  வானவில் 
இமைகளைத் தொட்டுப் பேசுதே 
இது என்ன புது வானிலை 
மழை வெயில் தரும் 
உன்னிடம் பார்க்கிறேன் 
நான் பார்க்கிறேன் 
என் தாய் முகம் அன்பே 
உன்னிடம்  தோற்கிறேன் 

நான் தோற்கிறேன் 
என்னாகுமோ இங்கே 
முதன் முதலாய் மயங்குகிறேன் 
கண்ணாடிப் போலத் தோன்றினாய்
என் முன்பு என்னைக் காட்டினாய் 
கனா எங்கும் வினா 

விழிகளில்  ஒரு  வானவில் 
இமைகளைத் தொட்டுப் பேசுதே 
இது என்ன புது வானிலை 
மழை வெயில் தரும் 

நீ வந்தாய் என் வாழ்விலே 
பூ பூத்தாய் என் வேரிலே 
மாலையே நீ போகலாம் 
என் ஞாபகம் நீ ஆகலாம் 
தேர் சென்றப் பின்னாலே 
வீதி என்னாகுமோ 
யார் இவன் ..யார் இவன் 
ஓர் மாயவன் 
மெய்யானவன் அன்பில் 
யார் இவன் ..யார் இவன் 
நான் நேசிக்கும் கண்ணீர் 
இவன் நெஞ்சில் 
இனம் புரியா உறவிதுவோ ..
என் தேதிப் பூத்த  பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது 
மனம் எங்கும் மனம் 

விழிகளில்  ஒரு  வானவில் 
இமைகளைத் தொட்டுப் பேசுதே 
இது என்ன புது வானிலை 
மழை வெயில் தரும் 

நான் உனக்காக பேசினேன் 
யார் எனக்காக பேசுவார்
மௌனமாய் நான் பேசினேன் 
கைகளில் மை பூசினேன் 
நீ வந்தக் கனவெங்கே 
காற்றில் கை வீசினேன் 
அன்பென்னும் தூண்டிலை நீ வீசினால் 
மீன் ஆகிறேன் அன்பே 
உன் முன் தானடா இப்போது நான் 
பெண் ஆகிறேன் இங்கே
தயக்கங்களால் திணறுகிறேன் 
நில்லென்று சொன்ன போதிலும் 
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி 
 
விழிகளில்  ஒரு  வானவில் 
இமைகளைத் தொட்டுப் பேசுதே 
இது என்ன புது வானிலை 
மழை வெயில் தரும் 

செவ்வாய், 8 ஜனவரி, 2013

பாடலின் வரிகள் - மன்னிப்பாயா-விண்ணை தாண்டி வருவாயா

படம் : விண்ணை   தாண்டி வருவாயா
பாடல்:மன்னிப்பாயா
பாடியவர்:ஸ்ரேயா கோஷல் 
இசை:A .R ரஹ்மான்
எழுதியவர் : தாமரை


கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன்
புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

பாடலின் வரிகள் -நீயே நீயே - M .குமரன் S /O மகாலட்சுமி


படம் : M .குமரன் S /O மகாலட்சுமி
பாடல்:நீயே நீயே
பாடியவர்:கே .கே
இசை:ஸ்ரீகாந்த் தேவா

நீயே நீயே நானே நீயே ......
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே 

நீயே நீயே நானே நீயே ...... 
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே 
தாலாட்டிடும் என் தோழி நீயே 

ஏப்ரில் மே வெய்யிலும் நீயே 
ஜூன் ஜூலை தென்ரலும் நீயே ஈ லிகெ யொஉ 
செப்டம்பர் வான் மழை நீயே 
ஒக்டோபர் வாடையும் நீயே ஈ தன்க் யொஉ
உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க 
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க 

you are the love of 
my life and my dreams forever you are
the love of my heart and my love forever 

என் கண்ணில் ஈரம் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால் 
சாய்வேனே உன் தோளிலே 
கண்ணீரே கூடாதென்றும் 
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அன்னாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வன்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய் 
உன் வீட்டு சின்ன குயில்
நே கொஞ்சும் வண்ண குயில் நாந்தானே 
... நான் வயதில் வளர்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேன்டும் ஆட 

ONE a TWO a THREE a FOUR a

வேருக்கு நீரை விட்டாய் 
நீராய் கண்ணீரை விட்டாய் 
பூவாச்சு என் தோட்டமே 
உன் பேரை சொல்லும் பிள்ளை 
போராடி வெல்லும் பிள்ளை 
பூமாலை என் தோளிலே
இளம்பிறை என்று இருந்தவன் என்னை 
முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய் 
வற்றாத கங்கை நதியா
தேயாத மங்கை மதியா நீ வாழ்க
புது விடியல் வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு

திங்கள், 7 ஜனவரி, 2013

விவசாயத்துல உங்களுக்கு ஆர்வம் இருக்கா?!!


விவசாயத்தை நல்ல முறையில செய்யவும்,அதுல இருக்குற சவால்களை எல்லாம் எப்படி சமாளிக்கறதுன்னு தெரிஞ்சிக்கவும் விவசாயத்துல ஆர்வம் இருக்குற இளைஞர்களையும் அதுல ஈடுபடுத்தி வெற்றி காணனும்ங்குற நோக்கத்தோட சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை ஒருநாள் சிறப்பு விவசாய கருத்தரங்கை ஏற்பாடு செஞ்சு இருக்காம்.தமிழ்நாடு அரசு வேளாண்துறை ,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் இந்திய இளைஞர் மற்றும் மேம்பாட்டு துறையோட இணைஞ்சு நடத்தப்படும் கருத்தரங்க ஆலோசனை கூட்டத்தில் ஆர்வம் இருக்குற இளைஞர்களும் விவசாய சம்மந்தப்பட்ட நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிந்துக்களாமாம்.

நாள் : ஜனவரி 12/2013.சனிக்கிழமை காலை 9 -6.

இடம்:திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆண்டவன் கல்லூரி.

போன் : முனைவர் .நா.பரசுராமன் - 9444024037

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

ஆசிரியர் வேலையில் ஆர்வம் இருக்கா உங்களுக்கு?



கிராமங்கள்ல இருக்குற மாணவர்களுக்கு கல்வி கத்துக்குடுக்கனும்னு விருப்பம் இருக்கா?அப்போ உங்களுக்காகவே சென்னையை சேர்ந்த டீச்சர்ஸ் லேப் அமைப்பு,'டீச்சிங் பெல்லொஷிப்' அப்படீங்குற பயிற்சி திட்டத்தை நடத்துறாங்களாம்.

இந்த திட்டத்தின் கீழ 30 பேரை செலக்ட் பண்ணி அவங்களுக்கு பயிற்சி குடுத்து அவங்க நடத்துற ஸ்கூல்லையே ஆசிரியரா நியமிச்சுக்கிறாங்கலாம்.இந்த பெல்லொஷிப்க்காக தேர்ந்தெடுக்கபட்றவங்க ,அதற்கான பயிற்சிக்கு அப்பறம் ஸ்ரீராம் அறக்கட்டளையால சென்னை மற்றும் ஆந்த்ரா மாநிலத்துல நடத்தப்படுற ஸ்கூலில் ஆசிரியரா நியமனப்படுதப்படுறாங்கலாம்.

இதுக்கு என்ன தகுதிகள் வேணும்னு கேக்குறீங்களா?ஏதேனும் ஒரு துறையில பட்டம் பெற்றிருக்கணுமாம்,35 வயசுக்குள்ள இருக்கணுமாம்.குழந்தைங்களுக்கு எப்படி கல்வி கத்துக்குடுக்கணும்,அவங்களோட எப்படி பழகணும்னு எல்லாம் சொல்லிதருவாங்களாம்.

ஆரம்ப பயிற்சி காலத்துல பயிற்சியாளருக்கு மாசத்துக்கு 3 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை உதவி தொகை குடுக்குறாங்களாம்.ஆசிரியரா அவங்களை வேலைல செத்ததுக்கு அப்பறம் தகுதி,மற்றும் பணி முரக்கேத மாதிரி மாச மாசம் சம்பளம் குடுப்பாங்களாம்.

விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமா மட்டும் தான் அனுப்ப முடியுமாம்  .விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி : 01/02/2013.
போன் : 04424527644
வெப்சைட் : www.theteacherslab.org

வரதட்சணை மற்றும் பாலியல் தொல்லையா?புகார் கொடுங்க..



பெண்கள் அவதிப்படுற வரதட்சணை கொடுமைல இருந்து பாலியல் புகார்வரை எந்தவிதமான பிரச்சனைகள் இருந்தாலும் அதை பக்கத்துல இருக்குற மகளிர் காவல் நிலையத்துல புகார் கொடுக்களாமாம் .இல்லைனா 9840983832 நம்பருக்கு கால் பண்ணி சொல்லலாம் இல்ல 9500099100 நம்பருக்கு மெசேஜ் பண்ணி புகாரை பதிவுசெய்யலாமாம் .

பயப்படாதீங்க இது எல்லாமே தமிழக அரசால் கொடுக்கப்பட்டதுதானாம்.சரியா...

                                                           ---நன்றி மாத இதழ் .

சனி, 5 ஜனவரி, 2013

இப்படியும் உதவி செய்றாங்கங்க !!!


புற்று நோயாள பாதிக்கப்பட்டவங்க சென்னைல சிகிச்சை எடுத்துக்கும் போது ,எங்க தங்கறது சாப்பாட்டுக்கு என்ன செய்றதுன்னு தெரியாம தவிக்குறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க அப்படி பட்டவங்களுக்காகவே 'ஸ்ரீ மாதா டிரஸ்ட் ' உதவி பண்ணிக்கிட்டு இருக்காங்களாம் .அதுவும் இலவசமா செய்றாங்களாம்.

முகவரி :    'ஸ்ரீ மாதா டிரஸ்ட் ',ராஜஸ்தானி தர்மசாலா ,அடையாறு ,சென்னை-20.போன் :044-2442 0727/2440 4950,செல் : 90032 47857.

                                                    ---நன்றி மாத இதழ் .

மார்கழி மாச கோலம்


                                              அம்மாவோட மார்கழி மாச கோலம்



மார்கழி மாசத்துல , வீட்டு வாசல்ல  கோலம் போட்டு,  நடுவில்சாணம் வச்சு , அதில, பறங்கி பூவை வைக்கறது நம்ம  வழக்கம். அது ஏன்னு தெரியுமா? 

மஞ்சள் நிறத்துல பறங்கிப்பூ இருக்கறதால , அதை வைக்குற வீட்ல , மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும்ங்கறது  நம்பிக்கை. பூமலர்ந்து இருக்குறதால அது மாதிரி , வீட்ல இருக்குறவங்க சந்தோஷமா இருப்பாங்க . மாட்டுச் சாணம் கிருமி நாசினிங்கறதால , வீட்ல இருக்குறவங்களுக்கு  ஆரோக்கியம் தரும். 

கிருஷ்ண பரமாத்மா கீதையில் “மாதங்களில் நான் மார்கழியாவேன்” சொல்றாரு.

அப்படீன்னு அத ஏன் நல்ல மாசம் இல்ல பீடை மாசம்னு சொல்றோம்னு கேக்கலாம்.அது பீடை மாசம் இல்ல… பீடுடைய மாசம்  (அதாவது செல்வம் நிறைந்த  மாசம்) என்பது தான் கொஞ்சம் கொஞ்சமா  மருவி  பீடை மாசம்னு  ஆகிடுச்சாம்.

நம்மோட சம்பிரதாயப்படி, ஆடி, புரட்டாசி, மார்கழி மாசங்கள்ல கல்யாணம் வேற பல சுப நிகழ்ச்சிகள் நடத்துறது இல்ல. காரணம் என்னனா  இந்த மாசம் எல்லாம் முழுக்க முழுக்க இறைவழிப்பட்டுக்குனு  ஒதுக்கப்படவேண்டிய மாசங்கலாம் . அதிலும் மார்கழி மகத்துவம் நிறைந்ததாம் .

மார்கழி மாசங்கறது தேவர்களது ஒரு நாளுல விடியற்காலை பொழுதாம். விடியற்காலை அப்படீனாலே மங்களகரமானது. அதனாலதான் மாசம் முழுசும்  இறை வழிபாட்டுக்குனே  பெரியோர்கள் ஒதுக்கி வச்சு இருக்காங்கலாம். இந்த மாசத்துல, சுபநிகழ்ச்சி நடத்தினா , வழிபாடு பாதிக்கும்கறதால ,இந்த மாசத்துல விசேஷம் எதையும் நடத்த  மாட்டாங்களாம் . மார்கழி மாசத்த , “மார்கசீர்ஷம்” அப்படீன்னு வட மொழியில் சொல்வாங்களாம். “மார்கம்” அப்படீனா வழி, “சீர்ஷம்” அப்படீனா உயர்ந்த. “வழிகளுக்குள் தலைசிறந்தது” அப்படீங்கறது அர்த்தமாம்.

வருஷத்துல மத்த நாட்கள்ல கோவில்களுக்கு போக முடியாதவங்க இந்த மார்கழி மாசத்துல மட்டும் கோவிலுக்கு போனாலே வருஷம் முழுசும் கோவிலுக்கு போன பலன் கிடைக்குமாம்.

       மார்கழி மாசத்துலஅதிகாலையில் 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குச் போகனும்னு சொல்றதுக்கு ஒரு அறிவியல் காரணமும் இருக்கு . மார்கழி மாதத்தில் அதிகாலைல சுத்தமான ஓசோன் வாயுவை சுவாசிக்க முடியும்  . இது புத்துணர்ச்சி தரும். மார்கழி மாச காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் ரொம்ப நல்லது.கோலம் போடறதால பாட்டு பாட்றதால மனசு ஒருமை படுத்த முடியும் .அரிசி மாவால கோலம் போடறதால எறும்பு,குருவி மாதிரி ஜீவராசிகள் அத சாப்பிட்டு வாழும்.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

மனநல மையம்


'லார்டு  மனநல மையம் ' -இந்த மையம் மனநலம் பாதிக்க பட்டவங்களுக்கு தங்கறதுக்கு இடம் குடுத்து ,சிகிச்சையும் குடுத்துகிட்டு இருக்காங்களாம்.இதுவரை 600 மேலான மனநலம் பாதிக்கப்பட்டவங்களுக்கு இதுமாதிரி சிகிச்சை குடுத்து  அவங்க குணமும் ஆகிஇருக்காங்களாம் .முகவரி : ஜோன் சாந்தகுமாரி ,லார்டு மனநல மையம் ,சி 62,முல்லை தெரு,விவேகானந்தர் நகர் ,அம்பத்தூர் ,சென்னை-53.போன் : 95000 64159

                               ---நன்றி பெண்களுக்கான மாத இதழ் .

இலவச முதியோர் இல்லம்



'ஹெல்ப்பேஜ் இந்தியா '-ங்குற அமைப்பு குடும்பத்தினரால கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இலவச முதிர் இல்ல சேவையை செஞ்சுகிட்டு வராங்களாம் .இதுமட்டும் இல்லாம ரோட்டோரத்துல அனாதையா விடப்பட்ட முதியவர்கள் யாராவது பாத்தோம்னா இந்த இல்லத்துக்கு தெரியபடுத்திநோம்னா அந்த முதியவர்களுக்கு உதவி கிடைக்குமாம்.இந்த அமைப்பு சென்னைல கீழ்பாக்கத்துல இருக்காம்.போன் நம்பர் : 044 25322149,18001801253.

                                                        ---நன்றி பெண்களுக்கான மாத இதழ் .

வியாழன், 3 ஜனவரி, 2013

விருத்தாசலம்



விருத்தாசலம் பத்தியும் விருதாச்ஜலத்துல இருக்குற சிவன் கோவில் பத்தியும் சின்னதா ஒரு வெப்சைட் கிரியேட் பண்ணினேன்.

அத பத்தி படிக்க http://vriddhachalam.webuda.com/ - இந்த லிங்குக்கு போங்க...

இலவசமா படிக்க வழி


கிராமபுறத்துல இருக்குற ஏழை மாணவ மாணவியர் ,முதல் தலைமுறையை சேந்தவங்களா இருந்தா அவங்களுக்கு இலவசமா கல்வி கிடைக்குறதுக்கு சென்னைல 'யுரேகா கல்வி இயக்கம்' கிராமங்களுக்கே நேரா போய் ,தகுதியான மாணவர்களை கண்டுபிடிச்சு 12-ம் வகுப்பு வரைக்கும் இலவசமா படிக்குற  வகையில தேவையான உதவிகளை செய்றாங்களாம் .இந்த இயக்கம் சென்னை ராயப்பேட்டைல இருக்கு .தொடர்புகொள்ள 044-42636125/28350403

                             ---நன்றி பெண்களுக்கான மாத இதழ் .

எப்படி போகறதுன்னு வழி தெரியலையா ?கவலையவிடுங்க !!!!!!!


முன்பின் தெரியாத ஊர்களுக்குச் செல்லும்போது நமக்குச் சவாலா இருப்பவை அங்குள்ள வழித்தடங்கள்தான் . எந்த வழியில போறது ? அந்த ஊருக்கு ரயில் போக்குவரத்து உண்டா?இப்படி நமக்கு தெரியாத தகவல்கள் ஏராளம்.. சிறிய ஊர்கள் தவிர சென்னை போன்ற பெரிய நகரங்களிலும் புதிதாக வருபவர்களுக்கு நிறைய சிக்கல்கள் உண்டு. சென்னைக்குப் புதுசா வரவங்க அதுவும் மொழி தெரியாமல் வெளிமாநிலத்திலிருந்து இங்கு வருபவர்களின் சிரமங்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுள்ளது ‘ரூட்ஸ்’ (routes) எனும் பயண வழிகாட்டிச் சேவை அமைப்பு.

அஷ்வின் குமார், பரத் சோமானி என்ற இரண்டு சென்னை இளைஞர்களின் அக்கறையில் உருவானது இந்த அமைப்பு. இவர்கள் இருவரும் சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி பட்டதாரிகள். சென்னையில் எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டுமானாலும் 08695959595 என்ற எண்ணை அழைத்து பயணத்திற்கான வழிகாட்டுதலை உடனே பெறலாம். காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இச்சேவை வழங்கப்படுகிறது. தொடங்குமிடத்திலிருந்து இலக்கிற்கு இடையில் உள்ள தொலைவு, பேருந்து நிறுத்தம், பேருந்து எண், வரும் நேரம், கட்டணம், சராசரி பயண நேரம் என சகல விவரங்களையும் உடனே அறிந்து கொள்ளலாம். பேருந்து மட்டுமல்ல, சென்னையில் இயக்கப்படும் பறக்கும் இரயில் சேவை விவரங்களும் தரப்படுகிறது.

இரு இடங்களுக்கு இடையே ஆன குறைந்தபட்ச தொலைவு, பேருந்து மற்றும் இரயில் பயணம் இடையேயான தொலைவு, பயண நேர ஒப்பீடு கூட வழங்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
தமிழ்நாட்டுக்குள் எந்த நகரத்திற்கும் செல்ல பேருந்து, இரயில் போக்குவரத்து விவரங்களையும் இந்த அமைப்பு வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவின் வேறு எங்கேயும் செல்ல, அங்கிருந்து தமிழகம் வர இரயில், விமான வசதிகள் குறித்த தகவல்கள் வழங்கப்படுகின்றன. இந்த அமைப்பின் மூலம் பயண முன்பதிவும் செய்யப்படுகிறது. இந்தச் சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதுதான் நம்பமுடியாத சாதனை. பயணச்சீட்டுக் கட்டணத்தை தவிர கூடுதல் செலவு எதுவும் இல்லை.இந்த அமைப்போட உதவியோட இனி பலருக்கும் நேர விரயம், அலைச்சல் குறையப் போவது உறுதி.
இணையதள முகவரி: www.routesindia.co.in.                 

    ----------------------------நன்றி வார இதழ்

புதன், 2 ஜனவரி, 2013

சிலிண்டர் -அட இது புதுசு



சமையல் கேஸ் சிலிண்டர் வாங்கும்போது அத வாடிக்கையாலைகள் முன்னாடி சிலிண்டரின் எடை சரியா இருக்கானு சிலிண்டரை எடை போட்டு காமிச்சுட்டுதான் குடுக்கணும்னு உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டு இருக்காம்.அதனால சிலிண்டரை சப்ளை செய்றவங்க தன்னோட எடை பார்க்கும் கருவியையும் கொண்டுபோகணும்.

கேஸ் சிலிண்டர் சப்ளை 5 கி.மீ-குள்ள இருந்தா எந்த கூடுத கட்டணமும் தரவேனாமாம். ஏன்னா மானிய சிலிண்டர் விலையான 398 ரூபாயிலேயே ஏஜென்சிக்கான கமிஷன், போக்குவரத்து செலவு ,வீட்டுக்கு கொண்டுவந்து கொடுக்கும் செலவு எல்லாமே அடங்கிடுதாம்.சிலிண்டர் விலையை விட அதிகமா குடுக்க சொல்லி கேட்டா சம்மந்தப்பட்ட ஏஜென்சிக்கு  புகார்  கொடுத்துட்டு சம்மந்தப்பட்ட நுகர்வோர் உணவு பொருள் வழங்கல் துறையிலயும் புகார் கொடுக்கணுமாம்

ஓசி

இலவசமா கிடைக்குறதை ஓசி -ல கிடைச்சதுன்னு சொல்றோம்ல இந்த பழக்கம் எப்படி வந்ததுன்னு தெரியுமா?

கிழக்கிந்திய கம்பனியின் ஆட்சியில இந்தியா இருந்தப்போ அவங்க அனுப்புற தபால்களில் O.C .S (on company Service)என்ற முத்திரை குத்தப்பட்டு இருக்குமாம்.
இந்த முத்திரை குத்திய தபால்கள் ஸ்டாம்ப் ஒட்டாமலேயே எங்கவேனாலும் போனதால ஓசில போகுதுன்னு சொன்னாங்களாம்.இதுதான் போக போக சும்மா கிடைகுரத்தை எல்லாம் ஓசில கிடைச்சதுன்னு சொல்லற பழக்கம் வந்துடுச்சாம்.