பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam
நல்வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஜனவரி, 2014

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..

"தை பொறந்தா வழி பொறக்கும்"னு சொல்லி நாம எல்லோருமே கேள்விப்பட்டுருப்போம்.இதுக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

அந்த காலத்துல ,எல்லாரும் கிராமத்துல விவசாயம் பண்ணுவாங்க..பெரிய தார் ரோடுகள் இருக்காது..பெரிய பாதைகளும் இருக்காது..நிலத்துல அறுவடைக்கு தயாரா இருக்குற நெல். கரும்பு எல்லாம் நல்லா வளந்து அந்த பாதைகளை மறைக்குற அளவுக்கு இருக்குமாம்..

வெளி கிராமத்துல இருந்து வரவங்களுக்கு பாதை தெரியாம தடுமாறுவாங்கலாம் , தை மாசம் பொறந்துடுச்சுனா/தை மாசத்துக்கு  அறுவடை பண்ணிடலாம் வழி கிடைக்கும்ங்குற அர்த்தத்துல சொன்னதுதான் இந்த வாக்கியம்..

                                         - யாரோ சொல்லி கேள்விப்பட்டது...

பொங்கல் பத்தி இன்னும் பல சுவாரசியமான  விஷயங்களை படிக்க கீழ உள்ள லிங்க் போங்க ...
http://srivalaipakkam.blogspot.in/2013/01/blog-post_3007.html 

புதன், 1 ஜனவரி, 2014

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .


இந்த வருஷம் எல்லாரும் எல்லாவிதத்துலயும் சந்தோஷமா ,நிம்மதியா இருக்கணும்னு ஆசைப்படுறேன்.அதுதான் எல்லோருடைய ஆசையாவும்
இருக்கும்னு நம்புறேன். .மத்தவங்களுக்கு நம்மளால முடிஞ்ச உதவிகளை செய்வோம்.

இந்த வருஷம் உங்களுக்கு ஏதாவது ரெசல்லூஷன் இருக்கா?எனக்கு இருக்கு..எந்த ரெசல்லூஷனும் எடுக்ககூடாதுங்குறதுதான் என்னோட ரெசல்லூஷன் ...எப்படி?


புதன், 25 டிசம்பர், 2013

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


இந்த கிறிஸ்தமஸ் நாளுல கிறிஸ்தமஸ் பத்தியான சில சுவாரசியமான விஷயங்களை தெரிஞ்சுப்போம்.

கால்லால செய்யப்பட்ட பைபிள் :

ஸ்காட்லாந்துல ,ருத்வெல்-ங்குற இடத்துல கால்லால செய்யப்பட்ட பைபிள் இருக்காம்.இதனோட மாதிரி வடிவ வார்ப்பு ,லண்டன்ல இருக்குற விட்டோரியா ஆல்பர்ட் அருங்காசியகத்துல இருக்காம்.இதனோட உயரம் 8 அடி.இதுல ஏசுபிரானோட வாழ்க்கை நிகழ்சிகள் செதுக்கப்பட்டு இருக்காம்.

முதல் கிறிஸ்துமஸ் கார்டு :

  1843-ம் வருஷம் முதல் முதல்ல இங்கிலாந்துல 'கிறிஸ்துமஸ் கார்டு' உருவாக்கினாங்கலாம் .ஜே.ஸி ஹார்ஸ்லி என்பவர் அவரோட நண்பர் சர்ஹென் கோல் என்பவருக்கு இதை தயார் செஞ்சு தந்தாராம்.

கிறிஸ்துமஸ் மரம்:

கி.பி எட்டாம் நூற்றாண்டு போல போனியாஸ் என்ற கிறிஸ்து பாதிரியார் ஜெர்மனிக்கு இறை சேவை செய்றதுக்காக வந்தாராம். ஒரு கிறிஸ்தமஸ் நாளில் இவர் ஒரு பர் மரத்தை ஆசீர்வதிச்சு குழந்தை இயேசுவுக்கு அத ஒப்பு கொடுத்தாராம் அப்போ இருந்து பர் மரம் கிறிஸ்தமஸ் மரம் ஆகிடுச்சாம். அதுல இருந்து ஒவ்வொரு கிறிஸ்தமஸ் கொண்டாட்டத்தின் போதும் இந்த மரம் வீடுகளில் நடபட்டுச்சாம்.

இதுக்கு அப்பறம் ஜெர்மானிய இளவரசர் ஆல்பர்ட்டுக்கும் இங்கிலாந்து இளவரசி விக்டோரியாவுக்கும் திருமணம் நடந்துச்சாம். 1841 ஆம் வருஷத்தில் ஆல்பர்ட் இங்கிலாந்து அரண்மனையில ஒரு கிறிஸ்தமஸ் மரத்த நட்டு அதுல பல பரிசு பொருளை கட்டி தொங்க விட்டாராம். மரத்த சுத்திலும் நெறைய மெழுகு வர்த்திய ஏத்தி வேசாராம். அப்பறமா இந்த பரிசு பொருள்கள எல்லாருக்கும் கொடுத்தாராம். இதுக்கு அப்பறம் தன கிறிஸ்தமஸ் மரம் இங்கிலாந்து முழுதும் வெக்குற வழக்கம் வந்துச்ச்சாம்.
இத்தாலில கிறிஸ்தமஸ் மரத்தோட பேரு ப்ரெஸ் பியோ.

சனி, 2 நவம்பர், 2013

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.




-நீங்க பட்டாசு வெடிக்கலைனா ரொம்ப சந்தோஷம்..

-பட்டாசு வெடிக்க ஆசைப்பட்டா ,மறக்காம காலில் செருப்பு போட்டுக்கோங்க.

-ராக்கெட் வெளில விடணும், உங்க வீட்டுகுள்லையோ இல்ல அடுத்தவங்க வீட்டுக்குள்லையோலாம் விடக்கூடாது ..

-புஸ்வானம்,சங்குசக்கரம்,மத்தாப்புன்னு எத உபயோகிச்சாலும் அது எரிஞ்சு முடிச்சதும் ஓரமா தள்ளிவிட்ருங்க..

-தீபாவளியை சந்தோஷமா ,நீங்க பத்திரமா கொண்டாடுங்க..

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

பாடலின் வரிகள் - வந்தே மாதரம்

ஆல்பம் :வந்தே மாதரம்  
பாடல் : வந்தே மாதரம்  
இசை : A .R .ரஹ்மான் 
பாடியவர் : A .R .ரஹ்மான் 
பாடலாசிரியர் : வைரமுத்து 



அங்கும் அங்கும்  இங்கும் இங்கும்
சுற்றி சுற்றி திரிந்தேன்
சின்ன சின்ன பறவைப்போல்
திசை எங்கும்  பறந்தேன்
வெயிலிலும் மழையிலும்
விட்டு விட்டு அலைந்தேன்
முகவரி எது என்று முகம் துலைத்தேன்
மனம் பித்தை போனதே ...
உன்னை கண்கள் தேடுதே ..
தொட கைகள்  நீளுதே ...
இதயம் இதயம் துடிக்கின்றதே
எங்கும் உன்போல்
பாசம் இல்லை ...
ஆதலால் உன்மடி தேடினேன்...

புதன், 19 ஜூன், 2013

ஒளி ஓவிய புகைப்படக்கலைஞர்

கோவை சேர்ந்த ஜெஸ்வின் ரேபெல்லோ  இவர் ஒரு புகைப்படக்கலைஞர்.இவர் புகைப்படக்கலைத்துறைல வித்தியாசமா ஏதாவது செய்யலாமேனு நினச்சப்போ இவருக்கு வந்த ஐடியா தான் 'ஒளி ஓவிய ' புகைப்படம் .



உலகம் முழுக்க இந்த ஒளி ஓவியத்தை மட்டும் எடுக்குற புகைப்படக்கலைஞர்கள் நிறை பேர் இருந்தாலும் அதுல இருந்து சிறந்த 73 பேர் மட்டும் தேர்வு செஞ்சு அவங்களோட புகைப்படத்தை மும்பைல கண்காட்சியா  வச்சிருக்காங்க.அதுல இடம் பெற்ற ஒரே ஒரு இந்திய  ஒளி ஓவிய புகைப்படக்கலைஞர் இவர் மட்டும் .

செவ்வாய், 18 ஜூன், 2013

பார்வை இல்லைனா என்ன?

'ஸ்பெஷல் பீப்புள் '  அதாவது உடம்பில் எந்தவித ஊனமும் இல்லாதவங்களை விட சில குறைகளோட இருக்கும் இந்த 'ஸ்பெஷல் பீப்புள் '-க்கு திறமை எப்பவுமே அதிகம் தான்.அதுக்கு முக்கிய காரணம் அவங்களோட மிகப்பெரிய பலமான தன்னம்பிக்கை.

எனக்கு இந்த குறை இருக்கு என்னால எதுவும் பண்ண முடியாதுனு ஒருநாளும் அவங்க தளர்ந்துடமாட்டாங்க.அவங்களுக்குள்ள ஒரு உத்வேகம் இருக்கும் எப்பவும்.சாதிக்கணும்னு வெறி சாதாரண மக்களை விட இவங்ககிட்ட கொஞ்சம் அதிகமாவே இருக்கும்.சாதாரண மக்கள் அவங்களப்பாத்து கத்துக்கவேண்டியது நிறையா இருக்கு.


அப்படியாப்பட்ட ஒரு  மாற்றுத்திறனாளி  பத்தி தான் இப்போ சொல்லப் போறேன்.

புதன், 1 மே, 2013

அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்...

அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்..நாம எல்லாருமே ஏதோ ஒரு விதத்துல உழைப்பாளிகள் தாங்க.அதனால எல்லாருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்.

சனி, 12 ஜனவரி, 2013

பொங்கல் நல்வாழ்த்துக்கள்


தமிழ் நாட்ல பொங்கல் திருநாள்  4 நாளுக்கு  ரொம்ப சிறப்பா கொண்டாடுறோம்.இது ஒரு முக்கியமான பண்டிகையும் கூட.

சூரியனோட வடக்கு நோக்கி பயணத்த தான் இந்த திருநாள் குறிக்குது.இதுக்கு 'மகர சங்கராந்தி'-னும் பெயர் இருக்கு.அதாவது சூரியன் மகர ராசியில நுழையுற நாள்.இந்த நாளுலதான் சூரியன் வடக்கு நோக்கி திரும்புது.

புராணத்துல சொல்லனும்னா.பிதாமகர் பீஷ்மர் இந்த நாளுக்காக காத்துருந்து உயிர் விட்டார்னு மகாபாரதத்துல சொல்லப்பட்டு இருக்காம்.

நமக்கு எல்லா நல்லதையும் குடுக்குற இயற்க்கைக்கு விவசாயிகள் நன்றி சொல்ற விழாவா தமிழ்நாட்டில இத சொல்றோம். பொங்கல்னா 'கொடித்தல்' -னு ஒரு அர்த்தம் இருக்கு அப்படினா, அரிசியில் செய்ற சிறப்பான ஒரு உணவை குறிக்குமாம்.

தமிழர் திருநாள்னு சொல்லப்படுற இந்த பொங்கல் தினம் தை மாசம் பிறக்குற நாளில் கொண்டாடப்படுது.இந்த மாசத்துல துன்பால் எல்லாம் போய் வாழ்க்கை வளமா இருக்கும்னு மக்கள் நம்பிக்கை.தை பிறந்தா வழி பிறக்கும்னு ஒரு பழமொழி கூட இருக்கே.(உண்மையா இந்த பழமொழிக்கு அர்த்தம் ,அந்த காலத்துல ரோடு எல்லாம் இல்லாதப்போ ,தை மாசம் அறுவடைக்காக வழி எல்லாம் மறைக்குற அளவுக்கு நிலத்துல நெல்,பயிர்,கரும்பு எல்லாம் வளந்துருக்கும் அதனால பாதைகள் மறஞ்சிருக்கும் ,தை மாசம் பொறந்தா அறுவடை முடிஞ்சு நிலம் சுத்தமா இருக்கும் பாதை தெரியும்னு சொல்றதுக்காக அப்படி சொன்னங்கன்னு எங்கயோ கேள்விப்பட்ட நியாபகம்).

சரி அந்த நாலுநாள் கொண்டாட்டம் என்ன என்ன?

முதல் நாள் போகி.அதாவது மார்கழி மாசத்தோட கடைசி நாள்.'பழையன
கழிதலும் ,புதியன புகுதலும்' னு சொல்வாங்க.இந்த தினத்துல உபயோகள் இல்லாத பழைய பொருள் தூக்கி போட்டுட்டு,
புதுசா வாங்குவாங்க.பழைய பொருள் ,பழைய விறகு எல்லாம் 
போட்டு நெருப்பு மூட்டி அதை சுத்தி குழந்தைகள் ,பெண்கள் எல்லாம் பாட்டு பாடி உடுக்கை 
அடிச்சு ஆடுவாங்க.வீட்ட சுத்தம் பண்ணி,கலர் அடிப்பாங்க. 


ரெண்டாவது நாள் ,பொங்கல் பண்டிகை.இந்த நாளுல விவசாய மக்களோட வாழ்க்கைக்கும் ,வளத்துக்கும் அடிப்படையா இருக்குற சூரியனுக்கு பூஜா செஞ்சு நன்றி சொல்வாங்க.வீட்ல சூரிய ஒளி படுற இடத்துல கலர் கூலம் போட்டு ,அடுப்பு அமைச்சு ,மன்னால செஞ்ச பானைல மஞ்சள் குருத்து சுத்தி,புதுசா விளைஞ்ச அரிசிய இந்த பானைல போட்டு பால் ஊத்தி சமைப்பாங்க.கரும்பு,தேங்காய்,பூ,பழம்,வெத்தல,பாக்கு எல்லாம் வச்சு பூஜா பண்ணுவாங்க.பால் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல்-னு
எல்லாரும் சொல்வாங்க.இது எல்லாத்தையும் சூரிய பகவானுக்கு வச்சு கும்பிடுவாங்க.புது டிரஸ் போடுவாங்க,வெண்பொங்கல் ,சக்கர பொங்கல் இதுதான் அண்ணைக்கு ஸ்பெஷல்.

மூணாவது நாள் ,மாட்டு பொங்கல்.விவசாயிகளோட வாழ்வுக்கும்,வளத்துக்கும் துணையா இருக்குற மாட்டுக்கு நன்றி சொல்ற நாள் தான் இது.மாடுகளுக்கு குளிப்பாட்டி,குங்குமம்,சந்தனம்,
மலர்மாலை,மஞ்சள்னு இது அலங்கரிச்சு கும்பிடுவாங்க.மாடுகளுக்கு பொங்கல்,கரும்புனு எல்லாம் குடுத்து சாப்ட சொல்வாங்க.மாடுகளுக்கு ஆரத்தி எடுப்பாங்க.நோய் நொடி இல்லாம பலநாள் வாழனும்னு மாடுகள வாழ்த்துவாங்க.மாட்டு பொங்கல் அன்னைக்கு பல இடத்துல ஜல்லிக்கட்டு நடக்கும்.இந்த நாளை 'கணுப்பண்டிகை'-னும் சொல்வாங்க.வீட்டு முற்றத்திலையோ இல்ல மொட்டை மாடியிலையோ மஞ்சள் இலை போட்டு அதுல முன்னாடி நாள் செஞ்ச வெண் பொங்கல்,சர்க்கரை பொங்கல், எல்லாம் வச்சு பரிமாறுவாங்க.சிவப்பு,மஞ்சள் கலர்ல சோறு சின்ன சின்ன உருண்டையா வச்சு கரும்பு துண்டு,மஞ்சள் கிழங்கு,வெத்தல ,பாக்கு வாழப்பழ துண்டு எல்லாம் பரிமாறுவாங்கலாம். பெண்கள் அவனக் உடன்பிறந்த சகோதரர்கள் அவங்க குடும்பம் எல்லாம் நல்லா இருக்கணும்னு வேண்டி வணங்குறாங்க.மஞ்சள் நீரால ஆரத்தி எடுப்பாங்க.கிராமத்துல பலவிதமான உணவு செஞ்சு எடுத்துகிட்டு போய் ஆத்தங்கரையிலையோ ,குளத்தங்கரையிலையோ, எல்லாம் சேந்து சாப்பிடுவாங்க.


நாலாவது நாள் ,காணும் பொங்கல் அன்னைக்கு எல்லாரும் குடும்பத்தோட,நண்பர்கள் வீட்டுக்கோ,கடற்க்கரைக்கோ,நதிக்கரைக்கோ,சுற்றுலா கண்காட்சிக்கோ,பூங்காக்களுக்கோ இதுமாதிரி எதாவது பொது இடத்துக்கு போய் சந்தோசமா பேசி விளையாடி பொழுதை போக்குவாங்க.


இந்த பண்டிகையை நாடு முழுசும் எந்த எந்த பெயர்ல சொல்றாங்கன்னு தெரியுமா?

உத்திர பிரதேசம் உள்ளிட்ட வாடா மாநிலத்துல ,அப்பறம் குஜராத்,மகாராஷ்டிரா ,ஆந்திரா,கர்நாடகா,கேரளா போன்ற மாநிலத்துல மகர சங்கராந்தி கொண்டாடப்படுது.பஞ்சாப்ல இது லோஹ்ரினும் ,வங்காளம்,அஸ்ஸாம் மாநிலத்துல பொகாலி பிஹூ-னும் சொல்றாங்க.

மகர சங்கராந்திக்காக பல இடத்துல மேளாக்கள்-னு சொல்ற விழாக்கள் கொண்டாருறாங்க.இதுல ரொம்ப புகழ் பெற்றது கும்ப மேளா.12 வருஷத்துக்கு ஒரு தடவ கங்கை,யமுனை,சரஸ்வதி புண்ணிய நதி எல்லாம் ஒன்னு சேருற பிரயாக் எனும் அலகாபாத்துல கும்ப மேளா நடக்கும்.கோடிக்கணக்கான பத்தர்கள் இந்த நாளுல புனித நீராடுவாங்க.

வட இந்தியாவுல பெரும்பாலான இடத்துல இந்த பண்டிகையை காற்றாடி பறக்கவிட்டு கொண்டாடுறாங்க.பல வடிவத்துல ,வண்ணத்துல இருக்குற இந்த காற்றாடி பகல் முழுக்க பறக்க விடுறாங்க.ராத்திரி  ஆனதும்  மெழுகுவர்த்தி பொருத்தப்பட்ட பல காற்றாடிகல வானத்துல பறக்கவிட்டு ஆகாயத்தையே வெளிச்சமாக்குறாங்க.

இதுதான் பொங்கலோட நாலுநாள் கொண்டாட்டம்.
ஆனா நெஜமாவே இதுமாதிரியா நாம இப்போ கொண்டாடுறோம்.காலத்துக்கு ஏத்தமாதிரி ஸ்டைலா ரொம்ப சிரமம் இல்லாம கொண்டாடுறோம்.பொங்கல் அன்னைக்கு பொங்கல் பத்தி இருக்குற நினப்பவிட டி.வி -ல என்ன என்ன ப்ரோக்ராம் போடுறாங்கனு தான் அதிகமா யோசிக்குறோம்.

திங்கள், 31 டிசம்பர், 2012

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

இந்த வருஷம் எல்லாரும் எல்லாவிதத்துலயும் சந்தோஷமா ,நிம்மதியா இருக்கணும்னு ஆசைப்படுறேன்.அதுதான் எல்லோருடைய ஆசையாவும்
இருக்கும்னு நம்புறேன்.பிரச்சனைகள் இல்லைனா வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்காது அதனால ,பிரச்சனைகளை எப்படி எடுத்துக்குறது ,சமாளிக்குறது ,அதுல இருந்து எப்படி மீண்டுவரதுன்னு பாத்து தன்னம்பிக்கையை அதிகமா வளத்துக்குவோம்.சந்தோஷமா இருப்போம் .மத்தவங்களுக்கு நம்மளால முடிஞ்ச உதவிகளை செய்வோம்.
பிறக்கும் போது பேரோட பிறக்கறது இல்ல.

ஆனா இறக்கும் போது நாம பேரோட இறக்குறோம்.
அந்த பேர் வெறும் பேறாமட்டும் இருக்ககூடாது
அது ஒரு வரலாரா இருக்கணும்.

--சத்தியமா இது நான் சொல்லல திரு.எ.ஆர் ரஹ்மான் அவர்கள் சொன்னதா  ஒருதரம் படிச்சேன் .எனக்கும் ரொம்ப பிடிச்சது இந்த வரிகள்.அத உங்க கூட ஷேர் பண்ணிக்குறேன்.அவ்ளோதான்.

திங்கள், 24 டிசம்பர், 2012

திங்கள், 12 நவம்பர், 2012

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்



பட்டாசு வெடிக்கலைனா ரொம்ப சந்தோஷம் , அதெல்லாம் முடியாது நான் வெடிப்பேன்தான்னு அடம்பிடிக்குறவங்க பாத்து ஜாக்கரதையா வெடிங்க..சந்தோஷமா தீபாவளியை கொண்டாடுங்க .