பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 31 டிசம்பர், 2013

பாடலின் வரிகள் - வலியே என் உயிர் வலியே - தாம் தூம்

படம் : தாம் தூம் 
பாடல் : வலியே என் உயிர் வலியே 
பாடியவர்கள் : பாம்மே ஜெயஸ்ரீ ,க்ரிஷ் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : பா.விஜய் 

வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் எனை துரத்துறியே
மதியே என் முழு மதியே
வெண் பகல் இரவாய் நீ படுத்துரியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ  உரசுரியே

யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை
பாட சொல்கின்றதோ
மூங்கிளுக்குள் வார்த்தையில்லை
ஊமை ஆகின்றதோ

திங்கள், 30 டிசம்பர், 2013

மார்பக புற்றுநோய்


ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்பு சதைகளாலானது. ஒவ்வொரு சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் குமிழ்களாக முடியும். இந்த  மடிப்புத்தொங்கு சதைகள், சதைகள், சிறு இதழ்கள் முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்று சேர்க்குது . இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோலா (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்று சேருது . சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும் இடையேயுள்ள இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன. மார்ப்கத்தில் சதைப்பற்று ஏதும் இருக்காது. ஆனால் மார்ப்கத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை மறைக்கின்றன.

ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும் லிம்ப் (lymph) எனப்படும் வர்ணமற்ற நிணநீர் திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes )எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன. இத்தகைய லிம்ப் நோட்ஸ்கள் கூட்டமாக அக்குகளின் மேழேயும் தோற்பட்டை எலும்புகளின் மேலும் மார்ப்கங்களிலும் உள்ளன. இத்தகைய லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் உள்ளன.

சனி, 28 டிசம்பர், 2013

படத்த பத்தி - மெமரீஸ் (மலையாளம் ) மற்றும் தூம் 3 (ஹிந்தி )

மெமரீஸ் (மலையாளம் ) மற்றும் தூம் 3 (ஹிந்தி )


&

   மெமரீஸ் (மலையாளம் ) -  இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம்.
தூம் 3 (ஹிந்தி ) - இது ஒரு ஆக்க்ஷன் த்ரில்லர் படம்.

இந்த படங்களை  பத்தி மேலும் படிக்க கீழ குடுத்துருக்குற லிங்க்கிற்கு போங்க

http://srivalaipakkam.blogspot.in/p/4.html



இதற்கு பெயர் தான் காதல் ...

ஆஞ்சலோ  மெரண்டினோ இவர் நியூயார்க்ல இருக்குற ஒரு போட்டோகிராஃபர் இவர் ஜெனிபரை காதலிச்சு கல்யாணம் பண்ணினார்.அவரோட காதல் வாழ்க்கையை பத்தி அவர் சொல்றப்போ "அது ஒரு அழகான காதல் ,ஜெனிபரை முதன்முதல்லா பாத்த அந்த அடுத்த நொடி தான் என்னோட வாழ்கையின் அற்புத நொடி .அப்போவே முடிவு பண்ணிட்டேன் ஜெனிபர் தான் என் உலகம்னு ,நான் ஜெனிபர் கிட்ட என் காதலை சொன்னப்போ ஜெனிபர் மனசுலையும் அதே எண்ணம் இருக்க எங்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது".


இதுல என்ன பெரிய ஆச்சர்யம்னு கேக்குறீங்களா?ஜெனிபர் -ஆஞ்சலோ திருமணம் முடிஞ்ச அஞ்சாவது மாசத்துலயே ஜெனிபர்க்கு மார்பகப்புற்றுநோய் இருக்குறது தெரியவந்துருக்கு.

வியாழன், 26 டிசம்பர், 2013

விகடனில் சிவகார்த்திகேயன் இன்டர்வியூ

விகடனின் 2013 டாப் 10 மனிதர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயன் ...

குபீர் ஹீரோவாகக் கிளம்பி தமிழ் சினிமாவையும் அதன் ரசிகர்களையும் தன்வசப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். கமர்ஷியல் கலெக்ஷனில் கல்லா கட்டுவதால், தயாரிப்பாளர்கள் சிவாவின் கால்ஷீட்டுக்கு வரிசை கட்டுகின்றனர். ஃபேமிலி ஆடியன்ஸ், டீனேஜ் பட்டாளம், 'சி’ சென்டர்... என அத்தனை பேரையும் பாக்கெட் செய்கிறது சிவகார்த்திகேயனின் மெஸ்மரிசம். சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து முன்னணி இடம் பிடித்திருக்கும் இவரது ஒவ்வோர் அத்தியாயத்திலும் ஒளிந்திருக்கிறது கடும் உழைப்பு!
                                     --விகடன்
வாழ்த்துக்கள் சார் ....


விகடனில் சிவகார்த்திகேயன் இன்டர்வியூ ...

புதன், 25 டிசம்பர், 2013

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


இந்த கிறிஸ்தமஸ் நாளுல கிறிஸ்தமஸ் பத்தியான சில சுவாரசியமான விஷயங்களை தெரிஞ்சுப்போம்.

கால்லால செய்யப்பட்ட பைபிள் :

ஸ்காட்லாந்துல ,ருத்வெல்-ங்குற இடத்துல கால்லால செய்யப்பட்ட பைபிள் இருக்காம்.இதனோட மாதிரி வடிவ வார்ப்பு ,லண்டன்ல இருக்குற விட்டோரியா ஆல்பர்ட் அருங்காசியகத்துல இருக்காம்.இதனோட உயரம் 8 அடி.இதுல ஏசுபிரானோட வாழ்க்கை நிகழ்சிகள் செதுக்கப்பட்டு இருக்காம்.

முதல் கிறிஸ்துமஸ் கார்டு :

  1843-ம் வருஷம் முதல் முதல்ல இங்கிலாந்துல 'கிறிஸ்துமஸ் கார்டு' உருவாக்கினாங்கலாம் .ஜே.ஸி ஹார்ஸ்லி என்பவர் அவரோட நண்பர் சர்ஹென் கோல் என்பவருக்கு இதை தயார் செஞ்சு தந்தாராம்.

கிறிஸ்துமஸ் மரம்:

கி.பி எட்டாம் நூற்றாண்டு போல போனியாஸ் என்ற கிறிஸ்து பாதிரியார் ஜெர்மனிக்கு இறை சேவை செய்றதுக்காக வந்தாராம். ஒரு கிறிஸ்தமஸ் நாளில் இவர் ஒரு பர் மரத்தை ஆசீர்வதிச்சு குழந்தை இயேசுவுக்கு அத ஒப்பு கொடுத்தாராம் அப்போ இருந்து பர் மரம் கிறிஸ்தமஸ் மரம் ஆகிடுச்சாம். அதுல இருந்து ஒவ்வொரு கிறிஸ்தமஸ் கொண்டாட்டத்தின் போதும் இந்த மரம் வீடுகளில் நடபட்டுச்சாம்.

இதுக்கு அப்பறம் ஜெர்மானிய இளவரசர் ஆல்பர்ட்டுக்கும் இங்கிலாந்து இளவரசி விக்டோரியாவுக்கும் திருமணம் நடந்துச்சாம். 1841 ஆம் வருஷத்தில் ஆல்பர்ட் இங்கிலாந்து அரண்மனையில ஒரு கிறிஸ்தமஸ் மரத்த நட்டு அதுல பல பரிசு பொருளை கட்டி தொங்க விட்டாராம். மரத்த சுத்திலும் நெறைய மெழுகு வர்த்திய ஏத்தி வேசாராம். அப்பறமா இந்த பரிசு பொருள்கள எல்லாருக்கும் கொடுத்தாராம். இதுக்கு அப்பறம் தன கிறிஸ்தமஸ் மரம் இங்கிலாந்து முழுதும் வெக்குற வழக்கம் வந்துச்ச்சாம்.
இத்தாலில கிறிஸ்தமஸ் மரத்தோட பேரு ப்ரெஸ் பியோ.

செவ்வாய், 24 டிசம்பர், 2013

கீரோபோ ..

உலகிலேயே முதன்முதலாகப் பேசும் ரோபோவை ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.


விண்வெளிக்குப் பயணம் செய்யும் விஞ்ஞானிகளுக்குப் பேச்சுத்துணையாக இருக்கவே இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. 2,452 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு இறுதியில் இந்த ரோபோவுக்கு விஞ்ஞானிகள் வைத்த பெயர், ‘கீரோபோ’. கீரோபோ என்கிற வார்த்தை ஜப்பானிய மொழியில் கீபோ மற்றும் ரோபோ என்கிற வார்த்தைகளின் கூட்டு. கீபோ என்றால் நம்பிக்கை என்று அர்த்தம்.

34 செ.மீ. உயரம் மற்றும் 1 கிலோ எடையுள்ள இந்த ரோபோவால் மனிதனின் குரல் மற்றும் உணர்ச்சிகளைக் கண்டறிதல், புகைப்படம் எடுத்தல் மற்றும் ஜப்பானிய மொழியில் பேசுதல் போன்ற காரியங்களைச் செய்யமுடியும்.

இந்த ரோபோவுடன் உரையாடும் முயற்சியில் இறங்கிய விஞ்ஞானிகள் ரோபோவிடம் உன்னுடைய கனவு என்ன என்று கேட்டதற்கு, ‘மனிதர்களும் ரோபோக்களும் சேர்ந்து ஒற்றுமையாக வாழும் உலகத்தை உருவாக்குவதே தனது லட்சியம்’ என்று பதிலளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மனிதர்கள் ஸ்மார்ட்போனை எப்படி பாக்கெட்டில் வைத்துச் செல்கிறார்களோ, அதே போல் சிறிய அளவிலான ரோபோவையும் வைத்துச் செல்லும்படி உருவாக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறுகிறார், இந்த ரோபோவை உருவாக்கிய விஞ்ஞானி டக்காஹாஷி.

கீரோபோ வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி விண்ணிற்குச் சென்று, தனது முதல் உரையாடலை ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சியாளர் வகாடாவுடன் தொடங்கவுள்ளது. 2014 டிசம்பர் வரை இது விண்வெளியில் இருக்கும்.

                                                                 --நன்றி வார இதழ் 

திங்கள், 23 டிசம்பர், 2013

வல்க்ரோ ( Velcro )

வல்க்ரோ ( Velcro ) ,அதாவது நம்ம செருப்பு,bag இதுலலாம் ஒரு ஒட்டும் பட்டை இருக்கு இல்லையா அதுக்கு பேர் தான் இந்த வல்க்ரோ ...இத யார் கண்டுபிடிச்சாங்கனு தெரியுமா?
ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால்-ங்குற பிரெஞ்ச் என்ஜினீயர் ,ஒரு சமயத்துல காட்டுப் பகுதியில நடந்துபோயிட்டு இருந்தப்போ அவரோட சாக்ஸுல காட்டுத் தாவரங்களோட விதைகளும் முட்களும் ஒட்டிக்குறத கவனிச்சுருக்கார்..

தாவரத்தோட பகுதிகளால எப்படி இப்படி ஒட்ட முடிஞ்சதுனு ஒரு லென்ஸ் மூலமா  அதப்பாத்தப்போ துணில ஒட்டிகுற வகைல அதுல சின்ன சின்ன முட்கள் இருக்குறதை கண்டுபிடிச்சுருக்கார்.இதே ஐடியா வச்சு ஒட்டுற பட்டையை உருவாக்க முடியுமான்னு யோசிச்சார்..இதுக்காக பல வருஷம் கடுமையா உழச்சார் ...

ரெண்டு துண்டு துணிகளை பயன்படுத்தி ஒன்னுல நூத்துக்கணக்கான சின்ன கொக்கிகள் இன்னோன்ணுல நூத்துக்கணக்கான சின்ன வளைவுகள் இருக்குறமாதிரி அமைச்சு அது ரெண்டையும் ஒன்னு சேத்து பாத்தப்போ அது அருமையா ஒட்டிக்குச்சு .இழுத்தா ரெண்டு துணியும் பிரிஞ்சது..

இந்த கண்டுபிடிப்புக்கு வல்க்ரோ ( Velcro )-னு பேர் வச்சு 1957-ல  டீ மெஸ்ட்ரால் அதுக்கு காப்பி ரைட் வாங்கிட்டார்..

இந்த  வல்க்ரோ  பலவகையான உடைகள்ல கூட பயன்படுத்தப்படுதுங்குறது கூடுதல் விஷயம்...

சனி, 21 டிசம்பர், 2013

பரம்பரை என்றால் என்ன?

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது, பரம்பரை பரம்பரையாய் என்று சொல்வதுண்டு...

பரம்பரை என்றால் என்ன?

வழி வழியாக என்று சொல்லலாம் என்றாலும்,
"தலைமுறை தலைமுறையாக"
என்பதே உண்மை பொருள் ஆகும்.
அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!..

பரன் + பரை = பரம்பரை

வியாழன், 19 டிசம்பர், 2013

இந்திய ரயில்வே இணையதளம்


இந்திய ரயில்வே சமீபத்தில் ரயில் ராடார் (www.railradar.trainenquiry.com) என்கிற புது இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் தளத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்தியா முழுவதும் செயல்பாட்டில் உள்ள ரயில்களின் நிலையை அதாவது இந்த நிமிடத்தில் எந்தெந்த ரயில்கள் எங்கெங்கு சென்றுகொண்டிருக்கின்றன என்கிற தகவலை கூகுள் வரைபடத்தின் மூலம் மிகவும் எளிமையான முறையில் அறிந்துகொள்ளலாம்.

செவ்வாய், 17 டிசம்பர், 2013

தமிழ் கம்ப்யூட்டர் புத்தகத்தில் வெளியான எனது படைப்புகளில் ஒன்று...

தமிழ் கம்ப்யூட்டர் புத்தகத்தில் வெளியான எனது படைப்புகளில் ஒன்று...
இது ரெண்டாவது தடவையா பப்ளிஷ் ஆகுது.சில வருஷத்துக்கு முன்னாடி நான் எழுதியது முதல் தடவையாக தமிழ் கம்ப்யூட்டர் புத்தகத்தில் வெளியானது .அப்பறம் எழுதல எதுவும் நான்.இப்போ மறுபடியும்எழுத ஆரம்பிச்சேன் .

இந்த ஆர்டிகல் நான் எழுதிபோட்டு ஒரு மாசத்துக்கும் மேல ஆகுதுன்னு நினைக்குறேன்.

இதை எழுதி போட்ட அடுத்த வாரத்துல இருந்து ஆர்வமா இந்த புக் வாங்கி நான் எழுதினது இருக்கானு பாப்பேன்.இல்லைனதும் கொஞ்சம் சோகமா சரின்னு போயிட்டேன்..

அடுத்த இதழை வாங்கினேன் அதே ஆர்வம். தேடினேன்.இல்ல.சோகமா போயிட்டேன்.

திங்கள், 16 டிசம்பர், 2013

தஞ்சை கோவில்

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்...

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

வெள்ளி, 13 டிசம்பர், 2013

இன்டெர்வியூ - என்ன வாழ்க்கங்க இது..

நீ போய் இன்டெர்வியூ அட்டெண்ட் பண்ணிடுவ இல்ல ,கண்டிப்பா போறதானேனு ரெண்டு நாளா , நச்சரிச்சு இன்டெர்வியூ  அன்னைக்கு காலைல அலாரம் வச்சு எழுப்பிவிட்டு பல்லு தேச்சுவிட்டு குளிச்சுட்டு சீக்கிரம் கிளம்புனு சொல்லாத கொறையா கன்சல்டன்சிக்காரன் ஒரு பக்கம் ..

சரின்னு காலைல 7 மணிக்கே அவசர அவசரமா சாப்பிட்டும் சாப்டாமலேயும் இந்த பஸ் விட்டுட்டா அடுத்து 20 நிமிஷம் கழிச்சுத்தானே அடுத்த பஸ்னு ஓடினா ,ரோடு கிராஸ் பண்ண முடியாத அளவுக்கு எல்லாவித வாகனமும் கொஞ்சம் கூட கருணை காட்டாம போய்கிட்டே இருப்பாங்க ,இதோ கிராஸ் பண்ணிடலாம்னு நின்னுகிட்டு இருக்குறசமயம் 'கெலம்பிட்டியா'னு ஒரு கால் கன்சல்டன்சிகாரங்கிட்ட இருந்து வரும்,கெலம்பிட்டேனு சொல்லி போன் வைக்குற நேரம் பாத்து என்னைக்கும் 10 நிமிஷம் லேட்டா வர நாம ஏற வேண்டிய பஸ் இன்னைக்கு 5 நிமிஷம் முன்னாடியே வந்து நிக்கும் ,இதுல ஏறினாதானே இந்த டிராஃபிக்ல ரெண்டு மணி நேரத்துக்குள்லையாவது அங்க போய் சேர முடியும்னு ரோட்ல வர வண்டிக்கெல்லாம் கைகாட்டி நிறுத்திட்டு ரோடு கிராஸ் பண்ணி ஆப்போசிட் ரோடு கிராஸ் பண்ணி ,கடைசி படிக்கெட்டுல தொத்திகிட்டு கொஞ்சம் உள்ள நகருங்க ப்ளீஸ்னு கெஞ்ச 'எங்க இருக்கனு' ஒரு கால் கன்சல்டன்சிகாரங்கிட்ட இருந்து வரும்,அவனுக்குபதில் சொல்லிட்டு போன் வச்சா , பொம்பள புள்ள இவ்ளோ கூட்டத்துல கடைசி படிகெட்டுல இப்படி நிக்குறியேம்மா அடுத்த பஸ்ல வரக்கூடதானு ஒரு பெருசு சவுண்ட் குடுப்பாங்க ,

வியாழன், 12 டிசம்பர், 2013

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா ..!!!

நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்னைக்கு.தலைவரோட பிறந்தநாள்ல அவர் ரசிகர்களாகிய நமக்கு சொன்ன சில அறிவுரைகள் ,அவர் பத்தி அவர் கூட பழகினவங்க,அவர் பக்கத்துல இருந்து பாத்தவங்க சொன்ன விஷயங்கள் மேலும் அவர பத்தி சில சுவாரசியமான விஷயங்களை உங்க கூட ஷேர் பண்றேன்..
மது, சிகரெட் பழக்கத்தை விட்டுவிடுங்கள். இதனால், எனது வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இப்போது மறுபிறவி எடுத்துள்ளேன். வாழ்க்கையில் சந்தித்த, கெட்ட நண்பர்கள் மூலம், குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன். என் திருமணத்திற்கு பிறகு, குடியை குறைத்துக் கொண்டேன்.ஆனால், முழுமையாக விடவில்லை. அதே போல், சிகரெட் பழக்கமும், என்னை விட்டு, அகலவில்லை.கடந்த ஆண்டு, எனது நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுயநினைவை இழந்துவிட்டேன்.இதற்கு சிகிச்சையளிக்கும் நேரத்தில், எனது சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இரண்டிற்கும் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றேன். இதற்காக, அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளினால், எனது உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது.இந்த எதிர்விளைவில் இருந்து, கடந்த இரு மாதங்களாகத்தான், விடுபட்டுள்ளேன். எனவே, ரசிகர்கள் மது மற்றும் சிகரெட் பழக்கத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள்
                                      -ரஜினிகாந்த்


காஸ்ட்யூம் ஆர்கனைசர் முருகன் இந்து தமிழ் நாளிதழின் தீபாவளி மலரில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கட்டுரையிலிருந்து ..

செவ்வாய், 10 டிசம்பர், 2013

இவர் - ஒரு அறிமுகம் - 2

ரவி - சிவகங்கைல கால்நடை மருத்துவரா வேலைபார்க்குற இவர் தன்னுடைய தொழிலுக்கு அடுத்து அதிகமா நேசிக்குறது புகைப்படம் எடுக்கும் கலையை. இவருடைய ஆர்வமும் விருப்பமும் இவருடைய ஒரு ஒரு புகைப்படத்துலையும் அழகா தெரியுது.

சேலத்தை சொந்த ஊராக கொண்ட டாக்டர்.ரவியின் புகைப்படங்களை பாத்து அசந்தே போனேன்..உங்களுக்கு எப்படி புகைப்படம் எடுக்குறதுல ஆர்வம் வந்ததுன்னு கேட்டப்போ 'கால்நடை மருத்துவரா இருக்குறதுனால எனக்கு இயல்பாவே விலங்கினங்களை பத்தி தெரிஞ்சுக்க ஆர்வம் இருந்தது...எனக்கு டிராயிங் (வரைதல்) பண்றது ரொம்ப பிடிக்கும் இப்படி ஆரம்பிச்சதுதான் புகைப்படம் எடுக்குறதுல எனக்கு ஆர்வம் வரக்காரணம் ஆனது"னு சொன்னார்.

இயற்கையை புகைப்படம் எடுக்குறதுல அதிக ஆர்வம் காட்ற இவரோட புகைப்படங்களும் இயற்கை சம்மந்தமாக தான் அதிகமாக இருக்கு. அவ்வளவும் அழகா இருக்கு.

"இப்போ தான் புகைப்படம் எடுக்குற கலையை கத்துக்க ஆரம்பிச்சுருக்கேன் ,இயற்கையோட எல்லா அழகையும் போட்டோ மூலமா காட்டணும்னு ஆசைப்படுறேன் ,இந்த புகைப்படத்துறைல எதாவது சாதிக்கணும்ங்குறது என்னுடைய ஆசை"னு சொல்ற டாக்டர் ரவியை மனதார வாழ்த்துவோம் .

டாக்டர்.ரவி-யின் சில 'கிளிக்'கள் இதோ  ....

வெள்ளி, 6 டிசம்பர், 2013

பாடலின் வரிகள் - சற்று முன்பு - நீதானே என் பொன்வசந்தம்

படம் : நீதானே என் பொன்வசந்தம்
பாடல்: சற்று முன்பு
பாடியவர்:ரம்யா NSK
இசை:இளையராஜா
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்


சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

நெஞ்சம் துடிப்பதும்
மின்னல் அடிப்பதேன்  சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட
என்னை எரித்து நீ செல்
எல்லாமே  பொய் என்று சொல்வாயா .. ஒ.. ஒஹோ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

ஏங்கி ஏங்கி நான் கேட்பது
உன்னை தானடா
தூங்கி போனதாய் நடிப்பது
இன்னும் ஏனடா
வாங்கி போன என் இதயத்தின்
நிலைமை என்னடா
தேங்கி போன ஓர்  நதி என
இன்று நானடா ..
தாங்கி பிடிக்க உன்
தோள்கள் இல்லையே
தன்னந்தனி தனி காட்டில் எந்தன் காதல் வாட..

வியாழன், 5 டிசம்பர், 2013

இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த

இன்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் இருக்கு அது என்னனு பாக்கலாம்  இப்போ ...ட்ரை பண்ணி பாருங்க..

1. முதல்ல start ->Run போய்ட்டு  regedit.exe -னு டைப் பண்ணி என்ட்டர் பண்ணுங்க..

மாற்றத்தை செய்றதுக்கு முன்னாடி பழைய செட்டிங்க்ஸ் -ஐ backup எடுத்துக்கணும் .அதுக்கு File -> Export குடுங்க..எங்க Save பண்றீங்கன்னு பாத்துக்கோங்க.


2. HKEY_LOCAL_MACHINE -> SYSTEM - >CurrentControlset - >Services ->Dnscache                        - >Parameters போங்க


3. வலது பக்கத்துல ரைட் கிளிக் பண்ணி DWORD செலக்ட் பண்ணுங்க
அதுல "Cache Hash Table Bucket size" - னு டைப்  பண்ணுங்க

புதன், 4 டிசம்பர், 2013

படத்தை பற்றி - கோலியோன் கி ராஸ்லீலா - ராம் லீலா

கோலியோன் கி ராஸ்லீலா - ராம் லீலா  படத்தை பற்றி -"படத்த பத்தி "தலைப்பின் கீழ் படிக்க

இந்த  http://srivalaipakkam.blogspot.in/p/4.html லிங்க்கிற்கு போங்க .

செவ்வாய், 3 டிசம்பர், 2013

இவர் - ஒரு அறிமுகம் - 1


தினேஷ்குமார் ராதாகிருஷ்ணன்.மன்னார்குடியை சேர்ந்த 27 வயது இளைஞன்.

நம்முடைய கல்விமுறைல கண்டிப்பா ஒரு மாற்றம் தேவைன்னு சொல்ற எதிர்பாக்குற பலபேர்ல இவரும் ஒருத்தர்.ஆனா அதோட மட்டும் இல்லாம அதற்கான முயற்சிலயும் இறங்கிருக்கார் இவர் .

'Propel Steps'-ங்குற இவரோட வலைப்பூ(propelsteps.wordpress.com) ரொம்ப பிரபலம்.அதுல  கல்விக்காக மட்டும் இல்லாம எல்லா விதமான தலைப்புகளின் கீழ் இவர் எழுதிக்கிட்டுவரார்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

பீர் சாப்பிடுறது தப்பேயில்லை-அப்படியா!!உண்மை என்ன?


குடிக்காதனு சொன்னா , "பீர் சாப்பிடுறது தப்பேயில்லை" -இப்படி பலர்  பேர் சொல்வாங்க..இப்படி சொல்றவங்கலாம் தான் குடிக்குறதுக்கு ஒரு சாக்கு சொல்லி சமாளிக்குறதுக்காகதான்.

உண்மைய சொல்லனும்னா  விஸ்கி, ப்ராண்டி, ரம் போலவே பீர் என்பதும் ஒரு மதுவகை தான். 100 மில்லி Wineல் 4 முதல் 10 கிராம் வரை alcohol இருக்காம் . 100 மில்லி beerல் 6 முதல் 8 கிராம் வரை alcohol இருக்காம் . 100 மில்லி Whiskeyல் 31 கிராம் வரை alcohol இருக்காம் .

Wine, Beer, Whiskey ,Brandy என எல்லாவற்றிலும் alcohol இருக்காம் . ஒவ்வொன்றிலும் Alcohol-ன் அளவு (Concentration) மட்டுமே மாறுபடும் தவிர விஸ்கி, ப்ராண்டி போலவே பீர் குடிப்பதும் உடலுக்கு தீங்கானது சொல்றாங்க .

இப்படி நீங்க குடிக்குறதுக்கு அடுத்தவங்க மேல என்ன காரணம் சொல்லலாம்னு யோசிக்காம, பீர் தானே குடிச்சுட்டு போறாங்கனு விடாம தயவு செஞ்சு அட்வைஸ் பண்ணுங்க குடிக்குறவங்களுக்கு ..

Reference: Substance Use Disorder- Manual for Physicians, National Drug Dependence Treatment Centre, AIIMS.

Thanks - Dr .Karthik Balajee L