பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சினிமா -இந்த படங்கள் நான் பாத்துட்டேன்!! நீங்க?

மிருதன்

ஊட்டில ஒரு மோசமான வைரஸால பாதிக்கப்படுது ஒரு நாய். அது ஒரு மனிதனை கடிக்க அவன் மிருக குணம் உள்ள கொடியவான மாறுறான்.அவனால அவன் குடும்பம் முழுசும் அந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகுறாங்க.அவங்க மூலமா கொஞ்சம் கொஞ்சமா அந்த ஊர் முழுசும் அந்த வைரஸ் பரவி அனேகபேர் பாதிக்கப்படுறாங்க.

ஒரு விபத்துல டாக்டர்  ரேணுகாவை (லக்ஷ்மி மேனன்) சந்திக்குற டிராபிக் போலீசான  கார்த்திக் (ரவி) கண்டதும் அவரை காதலிக்க ஆரம்பிக்குறாரு.ஆனா  ரேணுகா வேற ஒருத்தருக்கு நிச்சயம் ஆனதை தெரிஞ்சதும் தன்னோட காதலை சொல்லாம மனசுலையே வச்சுக்குறார்.தன் தங்கை வித்யா (அனிதா சுரேந்தர்)தான் தன வாழ்க்கையில் எல்லாமும்னு வாழ்ந்துக்கிட்டு இருக்குற கார்த்திக் , ஒருநாள் தன் தங்கையை காணாமல் போக ,ஒரு வேலை தன்னோட தங்கை இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவங்ககிட்ட மாட்டிக்கிட்டாளோனு பதறுற கார்த்திக்கிட்ட உன்னோட தங்கை எங்க இருக்கானு தெரியும் நான் கூப்டுகிட்டு போறேன் ஆனா அதுக்காக நீ ஒரு உதவி செய்யணும் ஊட்டில இருக்குற இந்த டாக்டர்களை கோயம்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கூப்டு போகணும் அப்போதான் இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சிபண்ண முடியும்னு ரேணுகா சொல்ல அதுக்கு சம்மதம் சொல்ற கார்த்திக் அவங்கள கோயம்பத்தூர்  கூப்ப்ட்டுபோறார்.அப்போதான் தெரியுது அங்கையும் அந்த வைரஸ் பரவி பலபேர் பாதிக்கப்பட்டுருக்காங்கனு தெரியவருது.அவங்களை எல்லாரையும் மீறி இந்த டாக்டர்களை அங்க கொண்டுபோய் சேக்கணும்னு அதுக்கான முயற்சிகளை செய்யும்போது  வித்யாவும் அந்த வைரஸால பாதிக்கப்படுறாங்க.ஆனா வித்யா மிருக குணத்துக்கு மாறாததை பாக்குற டாக்டர்கள் வித்யாவோட உடம்புல இருந்து அந்த வைரசுக்கான எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்க முடிவு பண்றாங்க.

இனி கார்த்திக் டாக்டர்களை ஜி.ஹெச்-ல இருக்குற லேப்-க்கு கொண்டுபோய் சேத்தாரா?கார்த்திக்கின் தங்கை வித்யாவோட நிலை என்ன? டாக்டர் ரேணுகாகிட்ட தன்னோட காதலை சொன்னாறானு? சொல்றதுதான் கிளைமாக்ஸ்

தைரியமா ஒரு புது முயற்சி எடுத்து இருக்குற டைரக்டர் சக்தி சுந்தரராஜனுக்கு ஒரு பாராட்டு சொல்லலாம்.

இன்னும் கொஞ்சம் வலுவா கதை இருந்திருந்தா நல்லா  இருந்துருக்கும் அதை  சின்ன சின்ன நகைச்சுவை காட்சி மூலமா கொஞ்சம் ஈடுகட்ட முயற்சி பண்ணிருக்காங்க.

இமானோட இசைல இரண்டு பாடல்களுமே நல்லா இருக்கு .பின்னனி இசையும் நல்ல இருக்கு .


சேதுபதி 

நேர்மையான போலீஸ் அதிகாரியான சேதுபதி (விஜய் சேதுபதி) எப்பவும் போல அந்த ஊருல இருக்குற வாத்தியார்னு ஒரு  கெட்டவன்.அவன் செய்ற ஒரு கொலையை கண்டுபிடிக்க அதுல இருந்து அவன் தன்னை எப்படி காப்பாத்த முயற்சிபண்றான், அதுக்காக சேதுபதியை என்னலாம் பண்றான் /பண்ண முயற்சிக்குறான்அதுல இருந்து சேதுபதி எப்படி தப்பிச்சு அவனுக்கு தண்டனை குடுக்குறார்னு சொல்றதுதான் சேதுபதி படத்தோட கதை.

முழுக்க முழுக்க விஜய் சேதுபதியை ஒரு ஆக்க்ஷன் ஹீரோவா காட்றதுக்காகவே எழுதப்பட்ட கதை மாதிரி இருக்கு.விஜய் சேதுபதி ஆக்க்ஷன்ல பட்டையை கிளப்புறார்.ஆனா டயலாக் டெலிவரி மாடுலேஷனை கொஞ்சம் மாத்திகிட்டா நல்லா இருக்கும்.எல்லா படத்துலயும் ஒரே மாதிரி இருக்கு.


 ரம்யா நம்பீசன் அழகான மனைவியா அம்மாவா தன்னோட கதாபாத்திரத்தை நல்லா பண்ணிருக்காங்க.ஆக்க்ஷன் ,ரொமான்ஸ்,காமெடினு,குடும்ப பாசம்னு எல்லாம் கலந்த ஒரு மசாலா படம்தான் இந்த சேதுபதி.ஒரு தடவை பாக்கலாம் .


பாபநாசம்

பாபநாசத்துல கேபிள் ஆப்பரேட்டரா வேலை செய்யுறாரு சுயம்புலிங்கம்(கமல்) .இவருக்கு படம் பாக்குறதுதான் முழுவேலையும்.கேபிள் ஆப்பரேட்டரா இருக்குறதால எல்லா மொழி படத்தையும் பாத்துடுறாரு .இவரோட நல்ல குணத்தால எல்லார்கிட்டயும் நல்ல பேரும் மரியாதையும் இருக்கு அந்த ஊருமுழுக்க.ஆனா அதுவே கான்ஸ்டபில் பெருமாள்(கலாபவன் மணி)க்கு இவரை பிடிக்காம போக காரணம் ஆகுது. இவரோட மனைவி ராணி(கொளதமி ) .இவங்களோட மகள்கள் செல்வி(நிவேதா) ,மீனா(எஸ்தர்).செல்விக்கு ஏற்படுற ஒரு பிரச்சனை அதனால அந்த குடும்பமே பெரிய சிக்கல்ல மாட்டுது..பிரச்சனையே ஐ.ஜி கீதா சுப்பிரமணியம் (ஆஷா சரத்)குடும்பம் மூலமானு தெரிஞ்சும் தான் பார்த்த படங்களை வச்சே தன்னோட பிரச்சனைகளை சினிமா பாணிலையே சரிபண்ண முயற்சி பண்றார் சுயம்புலிங்கம்..இறுதியா தன்னோட பிரச்சனைகளை சமாளிச்சாரா?இல்லையா?ஜெயிச்சது சுயம்புலிங்கமா இல்ல ஐ.ஜி கீதா சுப்பிரமணியமானு சொல்றது கிளைமாக்ஸ்.

இந்த படத்துல எனக்கு பிடிச்சது:

- முதல்ல வேற என்ன இருக்க முடியும் கமல்சாரோட நடிப்புதான்..

- கதை. இந்த காலத்துல நடக்கக்கூடிய ஒரு பிரச்சனை .. ஒரு குடும்பம் என்ன பண்ணுமோ அததான் பண்றாங்க.ஆனா அது தப்பா போயிடுது.ஆனா தப்ப மறைக்க என்ன என்ன செய்யுறாங்க?என்ன என்ன செய்யவேண்டியதா இருக்கு.??!! போலீஸ் நினச்சா ஒரு மனுஷனை என்ன என்ன பண்ண முடியும்னு அப்படியே சொல்றாரு டைரக்டர் ஜீது ஜோசப்.

- ரொம்ப நாளுக்கு அப்பறம் கொளதமி .. செம கெமிஸ்ட்ரி .. எல்லாரோட இயல்பான நடிப்பு..

- ஐ.ஜி-யாக கலக்கியிருக்குற ஆஷா சரத்.. ஒரு போலீஸ் ஆபீஸரா மிரட்றதும் ஒரு அம்மாவா கலங்குறதும்னு நடிப்புல செம!!! இந்த லேடி.

- கலாபவன் மணியை அடக்கமா நக்கல் பண்றதும், மிட் நைட்ல பலான படம் பாத்து ஒரு மூடோட வீட்டுக்கு போறதும்,வீட்ல கொளதமி கதவைத் தொரந்ததும் ரொமாண்டிக்கா பாத்து பேசுறதும் அதுக்கு கொளதமி இன்னைக்கு என்ன படம்னு கேக்குறதும் .... அட இது கமல் சார் படம்ப்பா ..

முதல்ல மெதுவா ஆரம்பிக்குற மாதிரி இருந்தாலும் போக போக படம் விருவிருப்பா எப்படி எப்படின்னு ரசிகன சீட்ல கட்டிப்போடுது கதையும் அதை எடுத்த விதமும் நடிப்பும் ..


                                          பாபநாசம் -- பாவவும் பாவத்தை ஒழிக்குறதும்.இன்று நேற்று நாளை

        வேலைதேடுறது ,குடிக்குறது,பணக்கார அழகான பொண்ணான  அனுவை  (மியா ஜார்ஜ்) காதலிக்குறதுனு போயிட்டு இருக்குறாரு  நம்ம ஹீரோ இளங்கோ (விஷ்ணு ). எல்லா படத்துலயும் வரமாதிரி இதுலயும் வெட்டியா இருக்குற ஹீரோவுக்கு  ஆதரவா ஆறுதலா நண்பேண்டானு படம் முழுக்க கூடவே இருக்கார் ஜோசியர் புலிவெட்டி ஆறுமுகம் (கருணாகரன்)

   ஒரு விபத்துல இவங்களுக்கு டைம் மிஷின் (கால இயந்திரம்) கிடைக்க , வேலை இல்லாத இவங்க அத வச்சு என்ன என்ன செய்றாங்க !! எப்படி (குறுக்கு வழில) சம்பாதிக்குறாங்க, அந்த டைம் மிஷின் மூலமா உயிருக்கே ஆபத்து வர கூடிய பிரச்சனைகளை எப்படி சமாலிக்குறாங்கனு சொல்றதுதான் இந்த 'இன்று நேற்று நாளை' திரைப்படம்.

2065-ல் இருந்து சோதனையோட்டமா 2015க்கு ஆர்யா மூலமா அனுப்பிவைக்கப்படுற இந்த டைம் மிஷின் ரெண்டு மாசம் கழிச்சு திரும்ப பிற்க்காலதுக்கு போயி ஆர்யா அனுப்பின அதேநாள் அதே நேரத்துக்கு அப்புறம் 2065க்கு ஆர்யாகிட்ட திரும்பி போகுது.

 இந்த படத்துல எனக்கு பிடிச்சது :


   - நிழல்காலம் ,பிற்காலம் ,எதிர்காலம்னு மாறி மாறி டைம் மிஷின் மூலமா போகுறாங்கனு காட்டினாலும் அத எந்த கொழப்பமும் இல்லமா காட்டியிருக்குறது.

- கண்ண விரிச்சு திருதிருன்னு ஒரு திகிலோட படம்முழுக்க கருணாகரன் பண்ற காமெடி.

- மியா ஜார்ஜ் ... அட இந்த பொண்ணு அழகாதான் இருக்குனு மட்டும் நினைக்க வைக்காம நல்லாவும் நடிக்குதேனு சொல்ல வைக்குறாங்க .

-டூயட் , கானானு நம்மள போர் அடிக்காம படத்துல ஏதாவது பாட்டு இருக்குனு யோசிக்குற அளவுக்கு (மட்டுமே) பாடல்கள் பண்ணியிருக்குற ஹிப் ஹாப் தமிழாவின் இசை.

- வில்லன் , அவரோட நடிப்பு.

- படத்தோட விறுவிறுப்பு .

அட இது போதாதுங்களா ஓரி படத்த பாக்க ...

- டைம் மிஷின் பற்றிய கதைங்குறதால சில லாஜிக் கேள்விகள் நமக்குள்ள கேக்க தோணுறதை தவிர்க்கமுடியல.ஜுராசிக் வேர்ல்ட் :

    பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து பார்க்க கூடிய டினோசர்கள் இருக்குற ரொம்ப பெரிய  தீம் பார்க். அந்த தீம் பார்க்ல க்ளோன் மூலமா செயற்கையா உருவாக்கப்பட்டுருக்குற  டினோசர்கள், பாம்பு மாதிரி மனுஷங்களை வாசனை மூலமா கண்டுபிடிக்குற ,மனுஷனை விட புத்திசாலியான ஒரு டினோசர் எல்லாருக்கும் கல்தா காட்டி அதோட இடத்துல அதாவது அது இருக்க வேண்டிய இடத்துல இருந்து தப்பி வெளில வந்துடுது.
அப்பறம் என்ன கண்ணுல தெரியுற நகரக்கூடிய எல்லாத்தையும் ஒழிச்சு கட்டுது இந்த டினோசர்..இத எப்படி அழிக்குறாங்க , தீம் பார்க்குக்கு வந்துருக்கு மக்களை எப்படி காப்பாதுறாங்கனு செம கிராபிக்ஸ்ல சொல்றாங்க.

இந்த படத்துல எனக்கு பிடிச்சது:

   - தீம் பார்க் பார்க்க வந்த  தன்னோட அக்கா பிள்ளைங்களை கூட இருந்து கூட பாத்துக்க முடியாம , அவங்க வயசு என்னனுகூட தெரிஞ்சுக்காம இருக்குற ரொம்ப ஸ்மார்ட்டான பிஸியான பார்க்கோட ஆப்பரேடிங் மேனேஜர் Claire (Bryce) அவங்களுக்கு ஆபத்துன்னு தெரிஞ்சதும்காட்டுக்குள்ள அவங்கள தேடி போறாங்க ..ஒரு கெத்தான அழகான ரோல் ரொம்ப அழகாவே பண்ணிருக்காங்க.

- ஹீரோ Grady (Chris Pratt ) செம ஸ்மார்ட் .. அதுவும் அந்த சின்ன டினோசர்களை அவர் ட்ரைன் பண்ற விதம் , பெரிய டினோசரை பிடிக்க இந்த சின்னதுங்கள கிட்டத்தட்ட நம்ம போலீஸ் நாய் மாதிரி ஒடவச்சு அதுங்கள ஃபாலோ பண்றது , அதுங்க ஓடும் போது அதுங்களை பாத்து ஒரு சொல்றபேச்சை கேக்குறீங்களே குட் பாய் /கேர்ள் -ங்குற ரேஞ்சுக்கு கர்வமா சின்னதா சிரிக்குறதுனு கிளப்பியிருக்கார்.

- அட நம்ம இர்பான் கான் இந்த படத்துலையும் இருக்குறாருயானு சொல்ல வைக்குறாரு .வழக்கம் போல அசால்டான நடிப்பு .என்ன எங்காள சாகடிச்சுட்டீங்களேனு சொல்லவைக்குறார் டைரக்டர்.

- குட்டி குட்டி நக்கலான வசனம் , காட்சிகள்.. உதாரணத்துக்கு இல்ல உங்கள விட்டு போகமாட்டோம் ,போகுறது பாதுகாப்பா தோணலைன்னு சொல்ற அந்த ரெண்டு சின்ன பசங்ககிட்ட அவங்க சித்தி Claire இல்ல உங்கள விட்டு இனி எங்கையும் போகமாட்டேன்னு உணர்ச்சிவசப்பட்டு சொல்றப்போ அந்த பசங்க இல்ல நாங்க இவர சொன்னோம்னு Grady கையை பிடிக்கும்போது சிரிப்ப அடக்க முடியல .

- ஹீரோயின் Claire-யின் மேக்கப்ல இன்னும் கொஞ்சம் கவனம் இருந்துருக்கலாம்.ஒரு சீன்ல லிப்ஸ்டிக் இருக்கு ஒரு சீன்ல இல்ல ,ஒரு சீன்ல ஒரு கலர்ல இருக்கு ஒரு சீன்ல வேற கலர்ல இருக்கு.அதே மாதிரி அவங்க போட்டுருக்குற செருப்பு..அவ்ளோ பெரிய பாயிண்டட் ஹீல் போட்ருக்குற இவங்க காட்டுக்குள்ள ஓடும்போது ஹீல் இல்லாத ஷூ போட்ருக்காங்க.அப்பறம் திரும்ப பெரிய பாயிண்டட் ஹீல்னு டைரக்டர்  பாஸ் மிஸ் பண்ணிட்டீங்களே ...

- உண்மையான ஹீரோ ஹீரோயின் எல்லாமே அந்த டினோசர்கள்தான். அவ்ளோ அற்புதமான கிராபிக்ஸ்..என்னாமா யோசிக்குறாங்கயா நினைக்காம இருக்கமுடியலைதான்.சான் ஆன்ட்ரியஸ்:

   லாஸ் ஏஞ்செல்ஸ்ல ஒரு மலை சரிவுல காரோட மாட்டிக்குற ஒரு பொண்ண காப்பாத்த வரார் லாஸ் ஏஞ்செல்ஸ்லின் தீயணைப்பு துறை விமான மீட்பு துறை விமானியான ஹீரோ ரே (ஜான்சன்) . .அங்க காட்றாங்க கெத்த .. அந்த கெத்து படம் முடியுற வரைக்கும் தொடருது..

நில அதிர்வுத்துறைல இருக்குற Dr. ஹேஸ் ஒரு பெரிய பூகம்பம் லாஸ் ஏஞ்செல்ஸ்ல இருந்து  சான் பிரான்சிஸ்கோ வரை  வரப்போகுதுன்னு தன்னோட ஆராய்ச்சியின் மூலமா கண்டுபிடிக்குறார்..

அதே சமையத்துல டைவஸ் கேட்டு காத்துருக்குற ரே மனைவி எம்மா(கார்லா) தன்னோட புது பாய் ஃப்ரெண்ட்டின் சகோதரியை பாக்க லாஸ் ஏஞ்செல்ஸ்ல ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டடத்துக்கு போறாங்க.அதேசமையம் ரே மற்றும் எம்மாவோட மகளான பிளேக் (அலெக்ஸ்சாண்டர் டட்டரியோ ) தன்னோட அம்மாவின் பாய் ஃப்ரெண்ட்டான டேனியல் கூட சான் பிரான்சிஸ்கோல அவரோட ஆபீஸ்க்கு போறாங்க அங்க அவரோட ஆபீஸ்க்கு இண்டர்வியூக்கு வந்துருக்குற பென் மற்றும் அவரோட தம்பியான ஓல்லி (பார்கின்சன்) கூட பழகுற சந்தர்ப்பம் கிடைக்குது.  அந்த சமையத்துல பூகம்பம் வர எம்மாவை ரே மாடி பகுதிக்கு வரசொல்லி ஹெலிகொப்டர்ல வந்து காப்பாத்திடுராறு .ஆனா தன்னோட பொண்ணு சான் பிரான்சிஸ்கோலபூகம்பத்துல மாட்டிக்குறாங்க.அவரை எம்மாவோட  பாய் ஃப்ரெண்ட்டான டேனியல் அப்படியே விட்டுட பென் மற்றும் அவரோட தம்பியான ஓல்லி பிளேக்கை காப்பாதுறாங்க .

எமெர்ஜென்சி போன் மூலமா தன்னோட அப்பாவை தொடர்புகொள்ற பிளேக் ரே சொல்ற மலைப்பகுதிக்கு போக முயச்சி பண்றாங்க.அதன் மூலமா தன்னோட பொண்ணை ஹெலிகாப்ட்டர்ல வந்து காப்பாத்திடலாம்னு  ரே நினைக்க மலையை அடைய வழி இல்லாம போகுது.

ஒரு வழியா தன அப்பா சொன்ன இடத்துக்கு வேற வழியா வந்து சேருற பிளேக்,ஓல்லி,பென் சுனாமில மாட்டிக்குறாங்க.அந்த சுனாமியெல்லாம் தாண்டி ரே தன்னோட பொண்ணை கண்டுபிடிச்சாரா?காப்பாத்தினாரானு சொல்றது கிளைமாக்ஸ்.

ஜான்சன் ஒரு மலையா இருக்க்கலாம் அதுக்காக ஒரு மனுஷனுக்கு எத்தன சோதனை?முடியல..இதயம் பலவீனமானவர்கள்,கர்பிணிகள் இத பாக்காதீங்கன்னு சொல்ற மாதிரி நெஞ்சுவலியே வந்துடும்போல நமக்கு.அவ்ளோ அடுத்ததடுத்த சோதனை ஹீரோவுக்கு..ஒரு பக்கம் பொண்டாட்டி டைவஸ் கேக்குறது , பூகம்பத்துல இருந்து மனைவியை காப்பாத்துறது..ஹெலிகாப்ட்டர் பழுதாகுறது ,அடுத்து தன்னோட பொண்ணு பூகம்பத்துல மாட்டிக்குறது ,அவர காப்பாத்த போக தானும் தன்  மனைவியும் சுனாமில மாட்டிக்குறது.. ஒரு வழியா பொண்ணை கண்டுபிடிச்சாலும் அவள காப்பாத்த முடியாம போகுறதுன்னு (கடைசியில மனைவியும் மகளும் அவருக்கு கிடச்சுடுறாங்க).. போதும் போதும்னு  சொல்ற அளவுக்கு சோதனை.

கண்டிப்பா எல்லாரும் பாக்க வேண்டிய படத்துல இதுவும் ஒன்னு.அவ்ளோ அழகான கிராபிக்ஸ்..நம்மள டென்ஷன் படுத்துற காட்சிகள்னு ஒரு அருமையான படம்.PK - ஒரு போஸ்டர் மூலமா சர்ச்சையை கிளப்பின படம்தான் இது.

நம்மள மாதிரியே தோற்றமுடைய வேற்று கிரகவாசியான PK(அமீர் கான்) நம்மள பத்தி ஆராய்ச்சி செய்ய அவங்களுடைய 'ஸ்பேஸ் ஷிப்' அவரை இறக்கிவிடுற இடம் இராஜஸ்தான்.அங்க ஒரு திருடன் 'ஸ்பேஸ் ஷிப்பை தொடர்புக்கொள்ற ரிமோட்டை திருடிக்கிட்டு போயிடுறான்.அந்த ரிமோட்டைஅவர் நம்ம நாட்டுல எப்படி கண்டுபிடிக்க என்ன என்ன முயற்சி எடுக்குறார், அந்த ரிமோட் கண்டுபிடிச்சாரா? இல்லையா?அவர் மறுபடியும் அவரோட கிரகத்துக்கு போனாரா ? இல்லையா?-னு சொல்ற படம் தான் இந்த PK .

இந்த படத்துல எனக்கு பிடிச்சது :

- நம்ம நாட்டுல இருக்குற சின்ன சின்ன விஷயம்,கடவுள் ,மதம் பத்தி நம்ம மனுஷங்க கிட்ட இருக்குற குழப்பம் பத்தி உண்மையை நல்லா புட்டு புட்டு வைக்குறார்.

- என் கிரகத்துல இப்படி இல்லையேனு அவர் கேக்குற ஒரு ஒரு கேள்வியும் கண்ணாடி முன்னாடி நின்னு நம்மளையே நாம கேக்குற/கேக்கவேண்டிய விஷயங்கள் தான்.

- Dancing Car -னு அவர் கிண்டல் பண்றது, மகாத்மா காந்தி ரூபாய் நோட்டுல இருந்தா மட்டும்தான் மதிக்குறாங்க மத்தபடி அவர் போட்டோவுக்கு மதிப்பில்லன்னு அழகா கிண்டல் பண்றது ,அப்போ சாமிக்கு லஞ்சம் குடுத்தாத்தான் நாம கேக்குறத செய்வாறோனு நம்ம மூடத்தனத்த எடுத்து சொல்றது,இந்து கோவிலுக்கு போகும்போது செருப்ப வெளில விடணும்னு சொல்றாங்க, சர்ச்க்கு போகும்போது அப்படி சொல்ல மாட்றாங்க.இந்து கோவிலுக்கு தேங்காய் உடைக்கணும்னு சொல்றாங்க கிறிஸ்டியன் கோவிலுக்கு போனா wine குடுக்கணும்னு சொல்றாங்க wine முஸ்லீம் கோவிலுக்கு கொண்டுபோனா துரத்துறாங்கனு ஒரு ஒரு மத கடவுளுக்கும் நாம காட்டுற பாகுபாட்டை தெளிவா சொல்றார்.

- இதுக்கு நடுவுல கடவுள் பெற சொல்லி ஏமாத்துற சாமியாருங்களையும் விட்டுவைக்கல.

-பாகிஸ்தான்னு சொன்னா உடனே எல்லாரும் கெட்டவங்க தீவிரவாதிங்க கிடையாது சந்தோஷத்தையும் அன்பையும் பரிமாறிக்க எவ்வளவோ நல்லவங்க இருக்காங்க .அவங்களும் நம்மள மாதிரி மனுஷங்கதான்னு அழகா சொல்றாங்க.

- அனுஷ்கா ஷர்மா படம் முழுக்க அமீர்கான் கூட பயணம் பண்றாங்க.(நல்லா இருந்த அந்த வாயை ஏன்மா இப்படி கொடும பண்ணிருக்கீங்க.என்னமா இப்படி பண்றீங்களேமா !!!)

- கடைசி கட்சியில வரும் ரன்பீர் ..அப்படியே ஏலியன் மாதிரி இருக்காரே.

மொத்துல நம்மள படச்ச கடவுள் ஒருத்தர்தான் அவருக்கு வேற வேற உருவம் குடுத்து நாமதான் அடிச்சுக்கிட்டு சாகுறோம்னு தெளிவா சொல்றாங்க .திருந்துவோமா???நாமளாவது திருந்துறதாவது!!!ஜிகர்தண்டா

டைரக்டர் ஆகுனும்குற ஆசைல தயாரிப்பாளர் எதிர்பாக்குற மாதிரியான ஒரு ஆக்க்ஷன் படத்தை எடுக்க ஒரு நிஜ தாதாவை மையமா வச்சு அந்த தாதாவோட வாழ்க்கையை படமாக்க மதுரைக்கு போறாரு ஹீரோ அங்க அவர் அந்த தாதாவை பற்றி விஷயங்களை எப்படி சேகரிக்குராறு, எப்படி அந்த தாதாவே அந்த படத்துல ஹீரோவா நடிக்குறாரு ,எப்படி அந்த தாதா அடிதடியில இருந்து ஒரு சினிமா ஹீரோ இமேஜ்க்கு மாறுராறுனு செம சிரிப்பு ரகளையா சொல்லிருக்குற படம் தான் ஜிகர்தண்டா ..

இந்த படத்துல எனக்கு பிடிச்சது :

ஹீரோ சித்தார்த்னு சொன்னாலும் படம் முழுக்க தாதாவாக ஒரு ஒரு சீன்லையும் கலக்குறது சிம்ஹா தான்.ஹீரோவைவிட இவருக்குதான் வலுவான கதாப்பாத்திரம்...சித்தார்த் அதை பத்தி எல்லாம் கவலைப்படாம இந்த படத்துல நடிச்சதுக்கே அவர பாராட்டலாம்.

சேது கதாப்பாத்திரத்துல சிம்ஹாவை பாத்ததும் சூது கவ்வும் படத்துல நயன்தாராவுக்கு கோவில் கட்டின அந்த அப்பாவியா இவருனு சொல்ற அளவுக்கு அசதி இருக்காரு..கருணாகரனும் சித்தார்த்தோட நண்பனா கச்சிதமா நடிச்சிருக்காரு . லக்ஷ்மி மேனனுக்கு அவருடைய மத்த படங்களை ஒப்பிடும்போது இதுல பெருசா வேல இல்ல..

காமெடி படமா சீரியஸான படமானு யோசிக்குறமாதிரி சேது கதாப்பாத்திரம்.

சந்தோஷ் நாராயணன் இசையில கண்ணமா பாடல் ஓரளவுக்கு இருக்கு.பின்னணி இசை நல்லா இருக்கு.

பிடிக்காதது :

ரொம்ப நல்லா போன முதல் பாதி அளவுக்கு பின் பாதியில இல்ல..ஒரு 20 நிமிஷம் கொஞ்சம் போர் அடிக்குது..

மனம் (தெலுங்கு) :  ராதா மோகன் (நாக சைத்தன்யா)னும் , கிருஷ்ணவேணி (சமந்தா)யும் கணவன் மனைவி .இவங்களுடைய மகன் நாகேஸ்வர ராவ் என்னும் பிட்டு..ராதாவுக்கும் கிருஷ்ணாவுக்கும் புரிதல் இல்லாம அடிக்கடி பிரச்சனை வருது..ஒரு கார் விபத்துல ராதாவும் கிருஷ்ணாவும் இறந்துடுறாங்க.அந்த நாள் பிப்ரவரி 14 ,1983,10.20 a.m .

அவங்களுடைய மகனான நாகேஸ்வர ராவ் வளந்து ஒரு பெரிய பிஸினெஸ் மேன் ஆகுறாரு.ஒரு விமானப் பயணத்துல எதேர்சையா நாகார்ஜுனா (நாக சைத்தன்யா)வை பாக்குறார்.அவர் தன்னுடைய அப்பா போலவே இருக்க அவர்கிட்ட ரொம்ப நெருங்கி பழக நினைக்குறார்.அதை தவறா புரிஞ்சுக்குற நாகார்ஜுனா அவர பாது பயந்து ஓட ,அப்பறம் அவர் ஒரு பெரிய பிஸினெஸ் மேன்னு தெரிஞ்சு அவருகிட்ட தன்னோட காலேஜ் ப்ராஜெக்ட்க்காக உதவி கேட்டுவறார்..தன்னுடைய அப்பா இவரை மாதிரியே தான் இருப்பார்னு சொல்லாமாலேயே நாகேஸ்வர ராவ் நாகார்ஜுன் கிட்ட ஒரு அப்பாகிட்ட பழகுற மாதிரியே பழகுறார்.

அப்பா மறுபடியும் பிறந்திருந்தா அம்மாவும் மறுபடியும் பிறந்திருப்பாங்கனு நம்பிக்கைல பல இடங்கள்ல தன அம்மா சாயல்ல யாராவது இருக்காங்களான்னு தேட அவர் நம்பிக்கை பொய் ஆகாம தன அம்மா சாயலில் இருக்கும் ப்ரியா(சமந்தா)வை பாக்குறார்.காலேஜ் படிக்குற ப்ரியாவை தன்னுடைய அம்மா மாதிரியே நடத்துறார்.

இந்த சமயத்துல ரோட்ல முடியாம இருக்குற ஒரு 80 வயசு மதிக்கத்தக்க பெரியவர் சைத்தன்யா (நாகேஸ்வர ராவ் )வுக்கு ஹாஸ்பிடல்லுக்கு கூப்பிட்டு போக லிஃப்ட் கொடுத்து உதவ சொல்லி கேட்டு வராங்க டாக்டர் அஞ்சலி(ஸ்ரேயா).

ஹாஸ்பிடல்ல தான் சைத்தன்யாவுக்கு தெரியவருது அஞ்சலியும் நாகேஸ்வர ராவும் பிப்ரவரி 14 ,1920ல் அதே 10.20 a.m மணிக்கு கார் விபத்துல இறந்து போன தன்னுடைய அப்பா சீதாராமுடு(நாகார்ஜுன்) அம்மா ராமலக்ஷ்மி (ஸ்ரேயா) போலவே இருக்குறது தெரியவருது.இவரும் அஞ்சலியையும் நாகேஸ்வர ராவையும் தன்னுடைய அப்பா அம்மாவாவே நினைக்குறார்.அவங்களை ஒன்னு சேத்து வைக்க முயற்சி பண்றார்.அதே போல நாகேஸ்வர ராவும் தன்னுடைய அப்பா அம்மாவின் மறு ஜென்மமான நாகார்ஜுனாவையும் ப்ரியாவையும் சேர்த்துவைக்க முயற்சி பண்றார்.

இரண்டுபேருடைய அப்பா அம்மாவும் இறந்தது ஒரே மாதம் ஒரே நாள் வேற வேற வருஷம் .ஆனா விபத்துல இறந்த இடம் அதே மணிக்கூண்டு பக்கத்துல.

ஒரு கட்டத்துல ப்ரியாவுக்கு தன்னுடைய பழைய ஜென்மம்பத்தி நினைவுக்கு வர , நாகர்ஜுனாவுக்கும் அது தெரியவருது .முதல்ல சண்டையில இருந்தாலும் ரெண்டுபேரும் புரிஞ்சுக்கிட்டு காதலிக்க ஆரம்பிக்குறாங்க.அதே சமயம் அஞ்சலி நாகேஸ்வர ராவ் கிட்ட தன்னுடைய காதலை சொல்ல அவரும் சந்தோஷமா ஏத்துக்கிறார் .தன்னுடைய அம்மா அம்மா சேந்த சந்தோஷம் நாகேஸ்வர ராவுக்கு .தன்னுடைய அம்மா அப்பா ஒன்னு சேந்த சந்தோஷம் சைத்தன்யாவுக்கு .

பிப்ரவரி 14,2013 அப்போ ப்ரியாவும் நாகர்ஜுனாவும் கார்ல கோவிலுக்கு போக ,அந்த கார்ல பிரேக் பிடிக்காதுனு நாகேஸ்வர ராவ் ,அஞ்சலிக்கு தெரியவருது.இதே நாளுல தான் தன்னுடைய அப்பா அம்மா இறந்தாங்கன்னு இந்த தடவ அது நடக்க விடமாட்டேன்னு அவங்களுக்கு உதவ இவங்க போக, இதே நாளுல தான் தன்னுடைய அப்பா அம்மா இறந்தாங்கன்னு இந்த தடவ அது நடக்க விடமாட்டேன்னு இவங்களை காப்பாத்த பெரியவர் சைத்தன்யா போறார்..

அதே மாசம்,அதே நாள், அதே நேரம் அதே மணிக்கூண்டு பக்கத்துல இரண்டு ஜோடியும் விபத்தை எதிர்கொள்ளப்போகுற சமயம் ,அந்த விபத்து நடந்ததா , ரெண்டு ஜோடியும் தப்பிசாங்களா?பெரியவர் சைத்தன்யா தடுத்தாறா?அவருக்கு உதவினது யாருன்னு சொல்றதுதான் கிளைமாக்ஸ்.

இந்த படத்துல எனக்கு பிடிச்சது :- ஒரே குடும்பத்தை சேர்ந்த நாகேஸ்வர ராவ் சார்,நாகர்ஜுனா,நாக சைத்தன்யா,ஒரே ஒரு காட்சியில அமலா மற்றும் அகில்னு மொத்தக்குடும்பமும் நடிச்சிருக்குறது.

- எப்பவும் போல அழகான, க்யூட் ,துறு துறு சமந்தா.

- ஆபாசம் இல்லாம , அன்பு,காதலை மட்டும் மையமா வச்சு குடும்பத்தோட பாக்குற வகைல எடுத்திருக்குறது .

- பேரன் பெயரை தாத்தாவுக்கும் அப்பா பெயரை மகனுக்கு மாத்தி படத்துல வச்சு கொஞ்சம் நம்மை குழப்பினாலும் அழகான புதுசான ஐடியா இது.

-அருமையா நடிச்சிருக்காங்க ஸ்ரேயா உட்பட எல்லாருமே .

-வித்யாசமான கதை.

-சமந்தா,நாகர்ஜுனா,நாக சைத்தன்யா,ஸ்ரேயா எல்லாருக்கும் ஒரே படத்துல ரெண்டு ரோல்..இப்படி எத்தனை பேருக்கு அமையும் சொல்லுங்க?!!

- நாகார்ஜுனா ஸ்ரேயாவின் பழைய கதாபாத்திரம் காட்சிகள் கொஞ்சம் மெதுவா போகுறமாதிரி இருந்தாலும் சந்தோஷமா பாக்கலாம் இந்த படத்தை..

ரேஸ் குர்ரம் (தெலுங்கு) :

அண்ணன் தம்பிகளான ராம் (ஷாம்) ஒரு போலீஸ் ஆபீசர் ,லக்ஷ்மன் என்கிற லக்கி (அல்லு அர்ஜுன்) மேல் நாட்டுக்கு போகணும்னு நினைக்குற எத பத்தியும் கவலைப்படாத ஒரு ஆள்.இவங்க ரெண்டுபேரும் சின்ன வயசுல இருந்தே ஒரு எதிரிங்க மாதிரியே வளருறாங்க.ஒருத்தரை இன்னோர்த்தர் போட்டுக்குடுக்குறது வாரி விடுறதுன்னு இருக்காங்க.

இந்நிலையில அரசியல்வாதியாகனும் ஆசைப்படுற ஒரு ரவுடி சிவா ரெட்டி(ரவி கிருஷ்ணன்)யை அரசியலுக்கு வந்துடக்கூடாதுன்னு தடுக்க நினைக்குறார் போலீஸ் ஆபீசர் ராம்..இதுனால ராமை கொல்ல ஏற்பாடு செய்யுறாரு சிவா ரெட்டி.எப்பவும் போல அண்ணனோட வம்புக்கு போற லக்கியை தவறுதலா ராம்னு நினச்சு கொல்ல முயற்சி பண்ண,தன் அண்ணனை கொல்ல நினச்சது யாருனு தெரிஞ்சு அவரை அடிச்சு துவம்சம் பண்றார் லக்கி.இதனால கோவமான ரவுடி சிவா ரெட்டி லக்கியையும் அவரோட குடும்பத்தை எப்படி பழிவாங்க நினைக்குறார், அத எப்படி எல்லாம் லக்கி தடுக்குறார்னு சொல்றதுதான் ரேஸ் குர்ரம்.

- படங்கள பாத்து பாத்து செலக்ட் செய்யுற ஸ்ருதி ஹாசன் எப்படி தனுக்கு ஸ்கோப் இல்லாத இந்த படத்துக்கு ஓகே சொன்னாங்கனு ஆச்சர்யமா இருக்கு. இருந்தாலும் தான் வரும் காட்சிகள்ல பாடல்கள்ல தன்னுடைய வேலையை சரியா முழுசா செஞ்சிருக்காங்க.


- ஸ்ருதி ஹாசன் அப்பாவ பிரகாஷ் ராஜ் அவரும் வழக்கம்போல அவரோட வேலையை சரியா பண்ணிட்டார்.

- வம்ச வம்சமா பகைல இருக்குறது ,பழிவாங்குறது, பொண்ணுக்கு ஆசைப்பட்டு எல்லாரையும் அஜிக்குறது அதை/அதுக்கு ஹீரோ பழிவாங்குறது,பில்லி சூனியம்,சாமி,ரெத்தக்கலறி இதுலாம் இல்லாம தெலுங்கு படமே இருக்காது போல.

- வழக்கம் போல அல்லு அர்ஜுன் டான்ஸ் இந்த படத்துலயும் சூப்பர்னா அவரோட ஸ்ருதி ஹாசன் சேந்ததால இன்னும் சூப்பர்.

- ரௌடி சிவா ரெட்டி பணத்தின் மூலமா மந்திரி ஆகிட ,லக்கி வேற ஒரு மந்திரியின் மூலமா போலீஸ் ஆகி சிவா ரெட்டியை ஓட ஓட விறட்டுரதுலாம் கொஞ்சம் ஓவர்.

- ஆளுங்க,கார்,லாரி,ஜீப்னு எல்லாம் பறக்குது...ஸப்ப்பா முடியல சாமி..

- லாஜிக் பாக்காம, இல்ல இல்ல லாஜிக் பத்தி நினைக்காம கூட பாக்கணும் இந்த படத்தை.


கோச்சடையான்:
கோட்டைப்பட்டின அரசின் தளபதியான கோச்சடையா(ரஜினி)னோட வீரத்தையும் திறமையையும் பாத்து அந்த நாட்டின் அரசனான ரிஷிகோடகன்(நாசர்) பொறாமை படுறார்,அவரை அழிக்க சமயம் பாத்து காத்திருக்க,எதிரி நாடான களிங்கபுரி அரசன் ராஜ மகேந்திரன் (ஜாக்கி ஷெராப்)னுடைய சதியால தன்னுடைய வீரர்களை அங்க அடிமைகளாக விட்டு வரவேண்டிய சந்தர்ப்பம் கோச்சடையானுக்கு அமையுது.அதுதான் சமயம்னு ரிஷிகோடகன் கோச்சடையானுக்கு மரணதண்டனை வழங்குறார்.

கோச்சடையானின் மகன்களான ராணா, சேனா இருவர்ல சேனாக்கிட்ட தனக்கு அப்பறம் தன்னுடைய நாட்டின் அரசரையும் நாட்டையும் நீதான் பாதுகாக்கணும்னு சொல்லிட்டு தண்டனையை ஏத்துக்க போறாரு.

தன்னுடைய அப்பாவின் கடைசி ஆசை களிங்கபுரியில் அவர் விட்டுட்டு வந்தவங்களை போய் மீட்க்கனும்னுகுறதை தெரிஞ்சுக்கும் ராணா சிறுப்பிள்ளைக்கே உண்டான ஆவேசத்தோட போக தண்ணியில சிக்கிக்குறாரு .அவர் காப்பாத்தும் களிங்கபுரி ஆளுங்களால அங்கேயே வளருறாரு ராணா (ரஜினி). ராஜ மகேந்திரனோட நம்பிக்கைக்குறிய ஆளாக மாறி அந்த நாட்டோட தளபதி ஆகுறாரு.சந்தர்ப்பம் பாத்து இத்தனை வருஷம் காத்திருந்த ராணா , தன்னுடைய அப்பா அங்க விட்டுட்டு வந்த போர் வீரர்களை சமயம் பார்த்து தன்னுடைய சொந்த நாடான கோட்டைப்பட்டினத்துக்கே கூப்பிட்டு வரார்.தன்னுடைய தங்கை காதலிக்கும் ரிஷிகோடகன் மகனான செங்கோடகன்(சரத்குமார்) காதலிக்கஅதுக்கு ராணா சம்மதிச்சாரா அவர்களுடைய திருமணம் நடந்ததா?அரசனோட மகளான வதனா தேவி(தீபிகாவை படுகோன்)யை காதலித்த ராணா அவரை கல்யாணம் பண்ணினாரா?தன் அப்பாவுடைய சாவுக்கு காரணமான அரசனை பழிவாங்கினாரா?தன்னுடன் பிறந்த சேனாவை கண்டுபிடித்தாரா?னு சொல்றதுதான் மீதி கதை..


இந்த படத்துல எனக்கு பிடிச்சது :

- ஆரம்பத்துல நானும், என்னடா இது தலைவரோட படம் இப்படி சின்ன பிள்ளைங்க பாக்குற பொம்மை படம் மாதிரி இருக்க போகுதேன்னு வருத்தப்பட்டதை ஒத்துக்குறேன்.ஆனா படம் நீ நினச்சது தப்புனு புரியவச்சது.

- படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல அனிமேஷன் படம்னு மறந்து படத்தோட ஒன்றிடுறோம்.

- எல்லா நடிகர்களும் அப்படியே தத்ரூபமா அவங்கள போலவே இல்லைனாலும் அவங்கதான் இவங்கன்னு சரியா யூகிக்க முடியுதே..அதுவே பெருசு.

- நல்ல விறுவிறுப்பான கதை.

- சௌந்தர்யா ரஜினிகாந்த் எவ்வளவு மெனக்கெட்டுருக்காங்கனு படம் பாக்கும் போது தெரியுது.

- படத்துல மத்ததை ஒப்பிடும்போது பாடல் கட்சிகள் ரொம்ப நல்லா இருக்கு.சின்ன சின்ன அசைவுகள்,ஆடைகள் காத்துல அசையுறது , அழகான அருவி,மலைகள்,தூசு,மணல்னு ஒன்னு ஒன்னும் அவ்வளவு அழகா அனிமேட் பண்ணிருக்காங்க..முக்கியமா எல்லோருடைய உடைகள்..

- பாடல்கள் ஆடியோவா கேக்கும் போது அவ்வளவு மனசை கவரல.ஆனா அதை காட்சியா பாக்கும்போது ஒரு ஒரு பாட்டும் ஒரு ஒரு விதத்துல மனசுல நிக்குது...உதாரணம் எங்கேபோகுதோ வானம்,மெதுவாகத்தான்,சத்தியம் பாடல்கள்.

- அனிமேஷன் படம்னாலும் தீபிகா க்ளாமரா தான் இருக்காங்க. :)

ஹாலிவுட் கூட எல்லாம் நாம ஒப்பிடக்கூடாது.என்னதான் ஹாலிவுட்ல வேலை செஞ்ச தொழில்நுட்பக் கலைங்ஞர்கள் இதுல வேலை செஞ்சிருந்தாலும் படத்துக்கான பட்ஜெட்டையும் காலத்தையும் ஒப்பிட முடியாது..நம்மாளுங்கள நாமளே ஊக்குவிக்கலைனா எப்படி??

எவடு (தெலுங்கு) :

    எப்பவும்போல , ஹீரோயின் தீப்தி(காஜல் அகர்வால்) மேல ஆசைப்படுறார் வில்லன் வீரு பாய் (ராகுல்) .அதனால வில்லனுடைய ஆளுங்களை அடிச்சு துவம்சம் பண்றார் சத்யா (அல்லு அர்ஜுன்).இதுனால கோவம் ஆகுற வீருபாய் தீப்தியையும் கொன்னுடுறார் ,சத்யா உயிருக்கு போராடுற நிலையில ஹாஸ்பிட்டல்ல இருக்கார் இருந்தாலும் அவருடைய உடல் 70 சதவிகிதம் தீயால வீணாகிடுது..

அந்த மருத்துவமனை மருத்துவரான சாரதா (ஜெயசுதா) சத்யாவுக்கு ஆப்ரேஷன் மூலமா வேறு ஒருவருடைய தோலை சத்யாவுக்கு வைக்குறாங்க.முகமும் மாறிடுது.அது யாருன்னு பாத்தா ராம் சரண்(ராம் சரண்).

தீப்தியின் சாவுக்கு காரணமான எல்லாரையும் சாகடிக்குறார் சத்யா..எல்லாம் முடிஞ்சதுனு நினைக்குற சமயத்துல சத்யாவை வேற ஒரு குரூப் துரத்துது..அது யாருன்னு தெரிஞ்சுக்க நினைக்கும் போதுதான் அவங்க தன்னை துரத்தல இப்போ தனுக்கு இருக்கு முகத்துக்கு உண்டான ஆளை கொல்ல நினைக்குற கூட்டம் அதுன்னு தெரியவருது.


யாருடைய முகம் இது?ஏன் தன்னை அவங்க துறத்துராங்கனு தனுக்கு ஆப்ரேஷன் செஞ்ச டாக்டர் சாரதாவை கேட்க்கும் போதுதான் தெரியவருது அது சாரதாவின் மகனான சரண் (ராம் சரண் தேஜா )னின் முகம்.

லோக்கல் தாதாவை  எதிர்த்ததால தன்னுடைய பையன் சாகடிக்கப்படுறான்.சத்யாவும் ராமும் தாக்கப்படுறது ஒரே பஸ்ல ஒரே இடத்துல ஒரே நேரத்துலனு  தெரியவருது.

அதனால அதே ஊருக்கு ராம் போறார் சாரதாகூட .அங்க ராமுக்கு இருக்குற எதிரிகளை அவரை கொன்னவங்களை கொன்னு அந்த மக்களை தாதாகிட்ட இருந்து காப்பாத்துறார்.

- ஒரு லைன் கதையா பாக்கும் போது நல்லா இருந்தாலும் ரத்தக்களரியான சண்டைகாட்சிகள், லாஜிக் இல்லாத காட்சிகள் ,எல்லாரும் பறக்குறது, பறந்து பறந்து அடிக்குறது அல்லது அடிவாங்குறதுனு ...அடபோங்கையானு சொல்லவச்சுடுது நம்மள..

- காஜலும் ,அல்லு அர்ஜுனும்  சில நிமிஷங்களே வராங்க .

- எமிக்கு அதிக வேல இல்ல..ஸ்ருதி ஹாசனுக்கு இவங்க ரெண்டுபேரை விட கொஞ்சம் பரவா இல்லங்குற நிலை.

- ராம் சரண் தேஜா ஒரே படத்துல காஜல் கூட, எமி ஜாக்சன் கூட,ஸ்ருதி ஹாசன் கூட டூயட் பாடிருக்கார்..(நீங்க அசத்துங்க பாஸ் )

தெனாலிராமன்:விகட நாட்டு மாமன்னரோட அமைச்சரவையில இருக்கும் ஒரு காலி இடத்தை நிரப்ப மன்னர் சரியான ஆள் தேர்ந்தெடுக்க நினைக்க ,அவர் மக்களுக்குஎந்த நல்லதும் செய்யலனு அவர கொலைசெய்ய போராளியான தெனாலிராமன்(வடிவேலு) தன்னோட சாமார்த்தியம் மற்றும் சமயோகித புத்தியால அந்த இடத்தை அடையுராறு.பின்னர் தான் மன்னர்மேல தவறில்ல,அவருடைய அமைச்சர்கள் தான் எல்லாத்துக்கும் காரணம்னு தெரியவர ,எப்படி அமைச்சர்களின் சுயரூபத்தை மன்னருக்கு தெரியபடுத்தி ,மக்களுக்கு நல்லது செய்யுறாருனு சொல்ற கதைதான் இந்த தெனாலிராமன்.

தெனாலிராமன் பத்தியும் அவரோட புத்திசாலித்தனத்தை பத்தியும் நாம நிறையா படிச்சிருக்கோம்.தெனாலிராமன் கதைகளை படிக்கும்போது கூட அவ்வளவு ஆர்வம் இருக்கும்.ஆனா அதுல ஒரு சின்ன அளவு கூட நிரைவேற்றல இந்த படம் மூலமானு நினைக்கும்போது வருத்தமாதான் இருக்கு.

முழுநீள நகைச்சுவை படமா எடுத்திருந்தாகூட அர்வமா பாத்திருப்போம். கருத்து + நாட்டு நடப்பு + நாட்டுல முன்னாடி நடந்த விஷயம்+தேவையில்லாத காதல் காட்சி +அதிகமா ரசிக்கமுடியாத பாடல் + ரொம்ப கொஞ்சமா காமெடினு நம்மள ஒரு வழி ஆக்கிட்டாங்க.

மனோபாலா,ராதாரவி,சிங்,சண்முகராஜன்,மனோகர்,நமோநாராயனான்னு இத்தனைபேர் இருந்தும் அட,,கஷ்டப்பட்டு சிரிக்குறமாதிரியான காட்சிகூட வடிவேலு சாரின் இந்த படத்துல இல்லைன்னு சொல்ல வருத்தமாதான் இருக்கு.

இவ்வளவுதான் தெனாலிராமனா? அவருடைய மன்னரோட திறமை இவ்வளவுதானானு நினைக்குற மாதிரி இருக்கு இந்த படத்தை பாத்தா..

                               தெனாலிராமன் - கட்டதுரைக்கு கட்டம் இன்னும் சரியில்ல..

நான் சிகப்பு மனிதன்சந்தோஷம்,துக்கம்,அதிர்ச்சி,பயம்னு எத கேட்டாலும் /உணர்தாலும் உடனே தூங்கிடுற "நார்கோலெப்சி"-ங்குற தூக்க வியாதியால கஷ்டப்படுறாரு இந்திரன்(விஷால்).ஆனா தூக்கத்துலையே இருந்தாலும் மத்தவங்க பேசுறது அவரோட மூளையில பதிஞ்சுடும்.இருந்தாலும் இதனால அவருக்கு எங்கேயும் வேலைகிடைக்காம போகுது,கல்யாணமும் தடையாகுது..

இந்திரனின் இந்த குறை தெரிஞ்சும் அவரை காதலிக்குறாங்க பணக்கார பொண்ணான மீரா (லக்ஷ்மி மேனன்).ஆனா மீராவோட அப்பா (ஜெயப்ரகாஷ்)க்கு இதுல சம்மதம் இல்லாம போக , யார் எதிர்த்தாலும் உன்னத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு முடிவு பண்றா மீரா..இந்த சமயத்துல மீராவுக்கு சில இன்னல்கள் ஏற்பட , தான் கூட இருந்தும் தன்னோட தூக்கவியாதியால எதையும் செய்ய முடியாம போகும் இந்திரன் ,யாரால எதுக்காக மீராவுக்கு அந்த இன்னல்கள் ஏற்பட்டுச்சுனு கண்டுபிடிச்சு பழிவாங்குற கதைதான் இந்த "நான் சிகப்பு மனிதன்".இதை எப்படி தன்னோட தூக்க வியாதியை மீறி செஞ்சுமுடிக்குறாருங்குறதுதான் படத்தோட பிளஸ்.

இந்த படத்துல எனக்கு பிடிச்சது :

- விஷால் நடிப்பு

- நார்கோலெப்சி-ங்குற ஒரு தெரியாத விஷயத்தை பத்தியும் அவங்க வாழ்க்கைல எவ்வளவு கஷ்டப்படுவாங்கங்குறது பத்தியும் தெரியவச்சது.எந்த பிரச்சனையில இருந்தும் வெளில வர ஏதாவது ஒரு வழி இருக்கும்னு அவங்களுக்கு தன்னம்பிக்கைக்கு வழிசொன்னது..

பிடிக்காத விஷயம் :

- ரொம்ப ஆர்வமா நல்லாதானே போயிட்டு இருக்குனு நினைக்குற சமயத்துல 'யோவ்!! இதுக்காயா இப்படி செய்வீங்க'ன்னு நினைக்க வைக்குற ஒரு ஃப்ளாஷ் பேக்

டைரக்டர் சார்...ஒரு டவுட் ..!!

- சந்தோஷம்,துக்கம்,அதிர்ச்சி,பயம்னு எத கேட்டாலும் தூங்கிடுறது ஹீரோ கேரக்டரா? அல்லது இது எதையும் நினச்சாலே தூங்கிடுறது ஹீரோ கேரக்டரா?.கேட்டா தூங்கிடுறதுனு தான்னு சொன்னா ...சில 'உணர்வு பூர்வமான' இடத்துல தூங்காம எப்படி இருக்காருன்னு நினைக்க தோணுது... இல்ல உணர்ந்தா தூங்கிடுவார்னு சொன்னா ,அவர் அதை எதுவும் கேக்காம இருக்க 'அப்படி' ஒரு வழியைதேர்ந்தெடுக்க வேண்டாமேனு தோணுது..எப்படியும் இது ரெண்டும் பல இடத்துல யோசிக்கவைக்குது .


இது கதிர்வேலன் காதல்:


வழக்கம் போல 'கண்டதும் காதல்' கதைதான்..அதை தவிர பெருசா இல்ல சிறுசா சொல்லிக்குறமாதிரி கூட எதுவும் இல்ல..

வீட்ட எதிர்த்து காதல் கல்யாணம் பண்ணிக்கிட்ட அக்கா வினீத்ரா (சாயா சிங்) சின்ன சண்டையால அம்மாவீட்டுக்கு வராங்க.பொண்ணுமேல கோவமா இருக்குற அப்பா நரேன்கிட்ட பொய் சொல்லிட்டு அக்காவையும் மாமாவையும் சேத்து வைக்க மதுரைல இருந்து கோயம்புத்தூர்க்கு கிளம்புறார் ஹீரோ கதிர்வேலன் (உதயநிதி).தீவிர ஆஞ்சநேயர் பக்தரான கதிர்வேலன் அக்கா வீட்டுக்கு எதிர் வீட்ல இருக்கும் பவித்ராவை(நயன்தாரா) கண்டதும் காதலிக்க(வரணும் இல்ல..இத தவிர வேற என்ன இருக்கு..அதெப்படிதான் சினிமாவுல மட்டும் பாத்ததும் காதல் பத்திக்குதுன்னு தெரியல) ஆரம்பிக்குறார். இதுக்கு தன்னோட கல்லூரி நண்பனான மயில்வாகன் (சந்தானம்) உதவுறாரு.(அதெப்படி திடீர்னு மயில்வாகனத்தை கதிர்வேலன் பாத்தாரு அவர் இருக்குற டம் எல்லாம் சரியா கண்டுபிடிக்குறாருனு தெரியல)
ஆரம்பத்துல தன்னோட நண்பன் கெளதமை(சுந்தர்) காதலிக்க தொடங்குற சமயம் கதிர்வேலன் மூலமா கெளதமின் சுயரூபம் பவித்ராவுக்கு தெரியவர, விலகுற பவித்ரா கதிர்வேலனின் குணத்தை பார்த்து கதிர்வேலனை காதலிக்க ஆரம்பிக்குறாங்க. ஒரு கட்டத்துல அக்காவின் கணவரும் பவித்ராவின் அப்பாவும் உறவுக்காரங்க ஒரு சின்ன சில்லி சண்டைல பேசாம இருக்காங்கனு தெரியவர கதிர்வேலனும் மயில்வாகனனும் சின்ன தந்திரத்தால ரெண்டுபேரையும் பேசவைக்குறாங்க.ஒருபக்கம் ரூட் க்ளியர் ஆக, காதலையே வெறுக்கும் கதிர்வேலனின் அப்பா கடைசியா கதிர்வேலனின் காதலுக்கு சம்மதிச்சாரா இல்லையானு கிளைமாக்ஸ்.

-உதயநிதிக்கும்,டைரக்டர் பிரபாகரனுக்கும் இது ரெண்டாவது படம்ங்குறதால,உதயநிதியின் முதல் படம் ஓகே ஓகே-வையும் பிரபாகரனின் முதல் படம் சுந்தரபாண்டியனையும் கலந்துகட்டி கொடுத்துருக்காங்க.

-சில சமயம் சுந்தரபாண்டியன் படத்தை கொடுத்தவரா இந்த டைரக்டர்னு நினைக்க தோணினாலும் எந்த ஆபாசமும் ,அருவருப்பும் இல்லாம குடும்பத்தோட பார்க்குற அளவுக்கு இந்த படத்தை கொடுத்ததுக்கு நன்றி.

-சந்தானம் சார் ,எப்பப்பாரு ஒருத்தங்க முகத்தையும் , உடல்வாகையும் பாத்து கிண்டல், கேலி செஞ்சு வசனம் பேசுறதை எப்போத்தான் நிறுத்தப் போறீங்க?உங்க முகத்தை கண்ணாடியில் பாக்குற பழக்கம் உங்களுக்கு உண்டுதானே..ஒரே ஆறுதல் உங்க டபுள் மீனிங் வசனம் இல்ல.

-நயன்தாரா,சரண்யா,சாயாசிங்,பரத் ரெட்டி,ஜெயப்ரகாஷ்,நரேன் எல்லாருமே அவங்க அவங்க வேலைய ரொம்ப அலட்டிக்காம அளவா பண்ணியிருக்காங்க.

-உதயநிதி சார் ரெண்டாவது படத்துல எமோஷனல் விஷங்களை முயற்சி செஞ்சிருக்கீங்க..ஆனா உங்க கிட்ட இருந்து இன்னும் நல்லா எதிர்பாக்குறோம் நாங்க.

-ஹாரிஸ் ஜெயராஜோட இசையில பாட்டு நல்லா இருக்கு.அன்பே அன்பே பாடலும் விழியே விழியே பாடலும் எனக்கு பிடிச்சப்பாட்டு.

-கடைசி 7 நிமிஷத்துக்காக படத்தை பாக்கலாம்.பெத்தவங்க தங்களோட மானம் கவுரவம் தான் முக்கியம்னு நினைச்சு அடுத்தவங்களுக்காக வாழாம இனியாவது உங்களுக்காக உங்க பிள்ளைங்களுக்காக வாழுங்கனு மெசேஜ் சொல்லி முடிக்குறார் டைரக்டர்..

இந்த படத்துல எனக்கு பிடிச்சது 

- எந்த ஆபாசமும் ,அருவருப்பும் இல்லாம குடும்பத்தோட பார்க்கக்கூடிய படம்.

- கடைசியா நல்ல  மெசேஜ்.

'இது கதிர்வேலன் காதல்' - ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான காதல் .

தூம் 3 (ஹிந்தி) :
சிக்காகோவுல 'இண்டியன் சர்க்கஸ்'-ங்குற பெயர்ல சர்க்கஸ் கம்பெனி நடத்திக்கிட்டு வரும் இக்பால் (ஜாக்கி ஷெராஃப்) தன்னுடைய கம்பெனிக்காக சிக்காகோவுல இருக்குற வெஸ்டெர்ன் பேங்க்கில் லோன் கேட்டு தன்னுடைய மகன் மூலமா மேஜிக் கலந்த சர்க்கஸ் ஒன்னு செஞ்சுக்காட்ட அதுல திருப்த்தி ஆகாத பேங்க் ஆளுங்க லோன் தர முடியாதுனு சொல்லிடுறாங்க.இதனால மனமொடஞ்சி போகுற இக்பால் தற்கொலை பண்ணிக்குறார். தன் அப்பா தன் கண்ணு முன்னாடியே துப்பாகியால சுட்டுக்கிட்டடு தற்கொலை செஞ்சுக்கிட்டதை பார்த்த சின்ன வயசு சாஹிர் (அமீர்கான்) பெரியவன் ஆனதும் ,தன் அப்பாவுக்கு லோன் குடுக்க மறுத்த பேங்க்கையே திவாலாக்க நினச்சு அந்த பேங்க்கோட ஒரு ஒரு கிளைகள்லையா கொள்ளையடிக்குறார்.

தனுக்கு தேவையான பணத்தை எடுத்துக்கிட்டு மீதி பணத்தை பணமழையா பொழியவைக்குறார் .அவர் பிடிக்க சிக்காகோ போலீஸ் எவ்வளவோ முயற்சி பண்ணியும் தன்னுடைய மேஜிக் வித்தையால எல்லார் கண்ணுலையும் மண்ணை தூவிட்டு போய்டுறார்.

தான் ஒரு ஒரு முறை கொள்ளையடிக்கும்போதும் ஹிந்தியில் ஒரு வாசகத்தை எழுதிவச்சுட்டு பக்கத்துலையே ஒரு மாஸ்க்கையும் தொங்கவிட்டு போறார்.ஹிந்தியில் எழுதிருக்குறதால அவர் ஒரு ஏசியன்னு முடிவு பண்ணி மும்பை போலீஸ் அதிகாரிகளான ஜெய்(அபிஷேக் பச்சன்),அலி (உதய் சோப்ரா)யை  வரவைக்குறாங்க.

கொள்ளையடிக்குறவனை தூண்டிவிட மறுபடியும் கொள்ளையடிப்பான் அதன் மூலமா அவனை பிடிச்சுடலாம்னு பிளான் பண்ணி டிவியில் இண்டர்வியூ குடுக்க ,சாஹிரே ஜெய் கிட்ட வந்து தனக்கு அந்த கொள்ளைக்காரனை தெரியும்னு சொல்லி தான் உதவுறதா சொல்லி அந்த பேங்க்கை வேவு பார்த்து மறுபடியும் கொள்ளையடிச்சிடுறாரு. அவர் பிடிக்க இந்த முறை இந்தியன் போலீஸும் சேந்து முயற்சிபண்ண தன்னுடைய கண்கட்டி வித்தையால எல்லாருக்கும் அல்வா கொடுத்துட்டு போய்டுறார்(நமக்கும் தான்).

இது எப்படி சாத்தியம்னு தெரிஞ்சுக்க ஜெய் இந்தியன் சர்க்கஸ்ல சாஹிருக்கு தெரியாம நுழைய அப்போதான் அவருக்கு (நமக்குதான்) தெரியவருது சாஹிர் இரட்டையன்னு,சாஹிர் உருவத்திலையே இருக்கும் இன்னோருவரோட பெயர் சமர்(அமீர்கான்).ஒரே வித்தியாசம் சமரின் உடல் மொழி (பாடி லாங்க்வேஜ்),சமரின் வெகுளியான (எப்படி சொல்றது,கொஞ்சம் மனநிலை சரியில்லாத மாதிரின்னு சொல்லலாம்) குணம்.ரெண்டுபேரும் சேந்துதான் கொள்ளையடிசிருக்காங்க இத்தனை தடவையும்.ஒரு முனையில சாஹிர் இருக்க மறுமுனைல இருந்து வெளில வருவது சமர்.சர்க்கஸ்லயும் இதே வித்தையைத்தான் உபயோகப்படுதுறாங்க.

அந்த பேங்க்ல கடைசியா கொள்ளையடிக்க திட்டம் போடுறார் சாஹிர்.சமரை வேவுபாக்குற ஜெய் ,சமர் வாரவாரம் ஒரு தீம் பார்க்குக்கு வருவதை தெரிஞ்சுக்கிட்டு தான் யாருன்னு காட்டிக்காம சமர் கூட நட்பாகுறார். தன்னோட சர்க்கஸ்ல வந்து சேருற ஆலியா (கத்ரீனா கைஃப்)வை காதலிக்குறார்  சமர் .அதை தெரிஞ்சுக்கிற ஜெய் சமர்கிட்ட ஆலியா உன்னை பாக்கல சாஹிரை தான் பாக்குறானு தூண்டிவிட ஜெய் வீசுற வலைல விழுறார் சமர் .சமரை தப்பை ஒத்துக்க சொல்லி சரண் அடைய சொல்றார். சமர் சரணடஞ்ஜாரா?சாஹிர் பேங்க்கை கொள்ளையடிச்சாராறுனு  சொல்றதுதான் கிளைமாக்ஸ்.

இந்த படத்துல எனக்கு பிடிச்சது :

-ஸ்டன்ட் சீக்குவன்ஸ்

-அந்த பைக் தாங்க ஹீரோ.

-சமர் கேரக்டர்ல நடிச்சிருக்குற அமீர்கான் (ஆனா இந்த நடிப்பு கொஞ்சம் தெய்வத் திருமகள் விக்ரம் கொஞ்சம் க்ரிஷ் படத்துல அப்பா கேரக்டர் ஹிரித்திக்கை பாக்குறமாதிரி (கொஞ்சம் தான்) எனக்கு தெரிஞ்சது).

இந்த படத்துல எனக்கு பிடிக்காததுனா:

-பெரிய ஹீரோக்கள் நடிச்சிருக்குற ஒரே காரணத்துக்காக ஹீரோ அறிமுகமாகுற சீன்கள்.அமீர்கான் என்னனா , 120 மாடி கட்டடத்து சுவர்ல இருந்து நடந்துவறார்.பைக் ஓட்டுறார்னு சொல்லமாட்டேன் பறக்குறாருனு தான் சொல்வேன்.தண்ணியில பைக் ஓட்டுறார்,கம்பியில பைக் ஓட்டுறார்,சர்க்கஸ்ல வளையத்தை பிடிச்சு சுத்துறார்.

-இவருக்கு மட்டும் இவ்ளோ அறிமுகம்  குடுத்தா எப்படி அடுத்து ஹீரோ அபிஷேக் இருக்காரே.இவர் அறிமுகம் ஆகுற காட்சிங்குறதுக்க்காகவே ஒரு தேவையில்லாத சண்டை காட்சி.அதுல அவரு என்னனா , தரைலஆட்டோவை ஓட்ட மாட்டேன்னு வீட்டு மேலலாம் ஓட்றார் ,செவுரை உடைச்சுக்கிட்டு தான் (அதுவும் எத்தனைதடவ??) என்ட்ரி ஆகுறார்.பைக்ல இருந்து பறந்து போய் எதிரியை அடிச்சுட்டு வந்து மறுபடியும் பைக்ல உக்காருறார்.(சத்தியமா முடியலை பாஸ்).

-அடுத்து கத்ரீனா கைஃப் அறிமுகம்  .அய்யயோ இவங்க என்னத்த ஒடைக்கப் போறாங்களோ ,இவங்க என்னத்தை கிழிச்சுட்டு வரப்போறாங்கலோனு பயந்து பாக்க ,ஜிம்னாஸ்டிக் கலந்த ஒரு டான்ஸ் மூலமா ஒரு ஒரு ட்ரெஸ்ஸா கழட்டி அறிமுகம் ஆகுறாங்க.ஜிம்னாஸ்டிக்காக உழச்சிருக்காங்க நிறையா இல்லைன்னு சொல்லமுடியாது ஆனா உண்மைய சொல்லனும்னா அதிகமா வேலை இல்ல இவங்களுக்கு இந்த படத்துல.

-எனக்கென்னவோ சாஹிர்,சமர் ரெண்டுபேரையும் ஒண்ணாகக் காட்டுற காட்சிகள் பாக்கும் போது இந்த படத்தை விட நம்ம மாற்றான் படத்துல அருமையா ரெட்டையர்களை காட்டிருந்தாங்கனு தோணிச்சு.

(ஸாரி..எவ்வளவோ சுருக்கி எழுதனும்னு தான் நினச்சேன்..இதுக்குமேல சுருக்கமா எழுத முடியல.)

                                தூம் 3 - நமக்கே வித்தக்காட்டுறாங்கப்பா

மெமரீஸ்   (மலையாளம்) :

தொடர்ச்சியான அடுத்தடுத்து மர்மக்கொலைகள் நடக்குது.குற்றவாளி யாருன்னு தெரியாம திண்டாடும் போலீஸ், எப்போதும் பாட்டிலும் கையுமா இருக்குற முன்னாள் போலீஸ் அதிகாரியான சாம் அலெக்ஸ் (ப்ரித்திவிராஜ்) கிட்ட உதவி கேக்குறாங்க.ஒரு குடிகாரன் இந்த கேஸ் பாக்குறதானு பத்திரிக்கையாளரான வர்ஷா (மியா ஜார்ஜ்) தன்னுடைய பத்திரிக்கைல எழுத ஒரு நல்ல போலீஸ் அதிகாரியான சாம் எதிரிகள்கிட்ட தன்னோட மனைவி டீனா (மேக்னா ராஜ்),மகளை இழக்க, வேலையை விட்டுட்டு பெரும் குடிகாரர் ஆனாருன்னு போலீஸ் உயர் அதிகாரியான அரவிந்தாக்க்ஷமேனன் (விஜயராகவன்) வர்ஷாகிட்ட சொல்றார்.முதல்ல இந்த கேஸ் -ஐ எடுத்து நடத்த மறுக்குற சாம் தன்னுடைய அம்மாவின் வற்புறுத்தாலால சம்மதம் சொல்றார்..யார் இந்த கொலைகாரன் எதுக்காக இந்த கொலையை செய்றான்னு சாம் அலெக்ஸ் கண்டுபிடிக்குறதுதான் மீதி கதை.

இந்த படத்துல எனக்கு ரொம்ப பிடிச்சவிஷயம்

-ஒரு சாதாரண சைக்கோ த்ரில்லர் படம் தான்.ஆனா கதை கொண்டுபோன விதம் அருமை .

-படம் முழுக்க யாரா இருப்பான் கொலைகாரன்னு  நம்மளையும் யோசிக்க வைக்குற காட்சிகள்.

-கொலையை ஹீரோ கண்டுபிடிக்குற புத்திசாலித்தனம்.

-போலீஸ் மூளைன்னு சொல்வாங்களே அப்படி ஒரு ஒரு சின்ன சின்ன தடயத்தையும் யோசிச்சு லாஜிக் மீறாம கதையை நகர்துற டைரக்டர் 'ஜீது ஜோசெப்'-ன் திறமை.

-சுஜித் வாசுதேவ்-ன் சினிமாட்டோகிராஃபி

-நல்ல கிராபிக்ஸ்

-ப்ரிதிவிராஜின் பலமான நடிப்பு...

-விறுவிறுப்பா போய்க்கிட்டு இருக்குற படத்துல பாட்ட போட்டு பொறுமையை  சோதிக்காம அளவான பாட்டு அதை அழகா எடுத்து தேவையான இடத்துல சேர்த்திருக்குற விதம் .

-கொலைகாரன் கைக்கு எட்டும் தூரத்துல இருக்குறப்போ குடிச்சு குடிச்சு தன் உடம்பை வீணாக்கிக்கிட்டதால  அவனை பிடிக்கமுடியாம போகும் அந்த காட்சி ,குடிகாரங்களுக்கு நல்ல பாடம்.

பிடிக்காத விஷயம்னு சொன்னா

-கண்ணுமுன்னாடி தன்னுடைய மனைவி மகள் சாகுறதை ஹீரோ பாக்குறார் அதனால தான் வேலைய விட்டுட்டு குடிக்க ஆரம்பிக்குறார்னு சொல்ற லாஜிக் ஓகே அதுக்காக இப்படியா குடிக்க வைக்குறது??.

-சைக்கோ கொலைகாரன் தொடர்ந்து கொலை செய்ய காரணத்தை இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா சொல்லிருக்கலாம்னு தோணிச்சு..

மத்தபடி சரியான ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர் பாத்த திருப்த்தி இருந்தது .

                        மெமரீஸ் 2013-ன் மெமரில இருக்க வேண்டிய படமே...

கல்யாண சமையல் சாதம் :


தமிழ் சினிமாவுல கதைக்கு ரொம்ப பஞ்சம் போலனு "கல்யாண சமையல் சாதம் " படம் பாத்தப்போ தெரிஞ்சது.முகம் சுழிக்குற காட்சிகள் இருக்குற படத்துக்கும் முகம் சுழிக்குற கதை இருக்குற படத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லையே.அப்படி ஏதாவது காட்சி இருந்திருந்தாகூட ஒரு மூணு நிமிஷமோ இல்ல அஞ்சு நிமிஷமோதான் முகம் சுழிச்சிருப்போம்.இந்த கதைக்காக படம் முழுக்க முகத்தை சுழிக்க வேண்டியதா இருக்கு.

கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாரும் ஒரு ட்ரை பண்ணி பாருங்கனு சொல்லித்தராங்களா இல்ல, லைஃப்ங்குற ஒரு பெரிய ஜர்னில இந்த ஒரு விஷயம் மட்டும் தான் வாழ்க்கைனு சொல்றாங்களா?னு தெரியல

படம் பேரு பாத்து ஏதோ நல்ல குடும்பத்தோட உக்காந்து பாக்க கூடிய படம்னு நினச்சேன்.

பிரசன்னா ஸார் , இன்னும் ஒரு வருஷம் கழிச்சு வேணும்னாலும் உங்க படம் ரிலீஸ் ஆகட்டும் அதுக்காக இந்த மாதிரி படங்களை எல்லாம் ஏத்துக்காதீங்க.

'காமம்'தான் 'டி' - வாழ்க்கைனு 'காமெடி'ங்குற பேர்ல சொல்றமாதிரி இருக்கு இந்த படம்.

கோலியோன் கி ராஸ் லீலா -ராம் லீலா (ஹிந்தி):குஜராத்ல பல தலைமுறையா பல வருஷமா சண்டை நடந்துக்கிட்டு இருக்கு ரெண்டு குரூப்க்கு .எதிர் எதிர் குரூப்ல ஒரு குரூப்போட தலைவனனின் தம்பி   ஹீரோ ராம் (ரன்வீர் சிங் )  இன்னோர் குரூப்போட தலைவியின் பொண்ணு  ஹீரோயின் லீலா (தீபிகா படுகோன்) கண்டதும் காதல் , குரூப் மோதல் கடைசியா ஹீரோவும் ஹீரோயினும் சேந்தாங்களா அவங்க மூலமா ரெண்டு குரூப்பும் சேந்ததா , ஊரு ஒத்துமையாச்சானு GUNணும் கையுமா ஸாரி GUNணும் காட்சியுமா(பின்ன அசால்ட்டா எல்லாரும் GUNஐ சீப்பு மாதிரி இடுப்புல சொருகி வச்சுருக்காங்க) சொல்ற படம் தான் ராம் லீலா .(ஷேக்ஸ்பியரோட நாவளில் இருக்குற மாதிரியான காதல் காட்சிகள்னு சொல்றாங்க.ஷேக்ஸ்பியரோட நாவளை படிக்குற அளவுக்கு மண்டைல எனக்கு ஒன்னும் இல்லாததால எனக்கு தெரியலப்பா அத பத்தி).

படத்துல எனக்கு ரொம்ப பிடிச்சது

1. இந்த படத்துல எனக்கு ரொம்ப பிடிச்சதுனா அது ரவி வர்மன் சாரோட ஒளிப்பதிவு.செம்ம்ம்ம்மையா இருக்கு.ப[படம் முழுக்க கலர்ஃபுல்லா இருக்கு.ஒரு ஒரு ஃப்ரேம் ஒரு ஒரு ஆங்கிளும் அவ்ளோ அழகு முக்கியமா பாடல் காட்சியில.


2.காஸ்ட்டியூம் டிசைனர் -மக்ஸ்ஸிமா பாஸு,அஞ்சு மோடி ,இவங்களோட கைவன்னதுல அந்த கலாச்சாரத்துக்கு தகுந்த காஸ்ட்டியூம் , அந்த உடைகளுக்கு தகுந்தமாதிரி கைல,கால்ல,கழுத்துல தலைலனு அக்சஸ்சரீஸ்

3.ரிதேஷ் நாயக்-ன் மேக்கப் .

4.கணேஷ் ஆச்சார்யா,சமீர் தன்னா,அர்ஷ் தன்னா,விஷ்ணு தேவா,டெர்ரன்ஸ் லவிஸ் இவர்களின் கோரியோகிராப் (நடனம்).அந்த கலாச்சாரத்துக்கு தகுந்தமாதிரியான அசத்தலான நடனம்.சில பாட்டுக்கு கலர்ஃபுல்லான  டான்ஸும் காஸ்ட்டியூமும் பிரமாதம் .

5. வாசிக் கான்-ன் ஆர்ட் டைரக்க்ஷன் (கலை).அவ்ளோ அழகா அந்த தெருக்களாகட்டும் ,வீடாகட்டும்,வீட்ல இருக்குற பொருளாகட்டும் எல்லாமே அழகா செட் பண்ணிருக்காங்க

​​6. தீபிகா படுகோன் -நானும் இவங்களோட ஒரு ஒரு படம் பாத்ததும் சொல்ற அதே டயலாக்தான் இப்பவும்.என்ன அழகா இருக்கு இந்த பொண்ணு.என்ன டிரஸ் போட்டாலும் அழகா இருக்காங்க.ரொம்ப நல்லாவும் நடிக்குறாங்க.இந்த படத்துலயும் நல்லா நடிச்சிருக்காங்க.(என்ன இருந்தாலும் தென் இந்திய முகம் இல்லையா).

7.இந்த படத்துல ரன்வீருக்கும் தீபிகாவுக்கும் கெமிஸ்ட்ரியா!!? அட போங்க பிஸிக்ஸ்,மேத்ஸ் ,பாட்டனி,ஜூவாலஜினு எல்லாம் வொர்க் அவுட் ஆகிருக்கே...

நான் ஏன் இங்க இவங்க எல்லார் பெயரையும் சொல்லி இருக்கேனா , வேற ஒரு கலாச்சாரத்தை பத்தி எடுக்குற படம்,வேற ஒரு கால கட்டத்த பத்தி(பீரியட் ஃபிலிம்) எடுக்குற படம் எல்லாம் ஈஸி இல்ல.ஒரு ஒரு விஷயத்துலயும் ஃபர்பெக்டா இருக்கணும்.அதுக்காக ரொம்ப மெனக்கெடனும் . நார்மலா எடுக்குற ஒரு படத்துக்கு உழைக்குரதை விட பல மடங்கு அதிகமா உழைக்கனும் கஷ்டப்படனும் .இந்த படத்துக்காக இவங்க எல்லாம் அவ்ளோ கஷ்டப்பட்டு உழச்சிருக்காங்கனு இதை எல்லாம் பாத்தபோது தெரிஞ்சது.

என்னதான் படமா இருந்தாலும் கிளைமாக்ஸ்ல கதவ தட்ராங்காலே ஒரு நிமிஷம் என்னதான்  சொல்றாங்கன்னு கேளுங்களேன் இல்ல கதவ தட்ரவங்கலாவது விஷயத்தை சொல்ல கூடாதானு படம் பாக்குற நமக்கு மனசுல தோணுது
டைரக்டர் ஸார்கிட்ட எனக்கு சில டவுட் ...

1. என்ன சார் ,எதுக்கு எடுத்தாலும் GUN-எடுத்து சுடுறாங்க ,ராம் நினைச்சப்போ லீலாவ பாக்கபோராறு லீலா நினைச்சப்போ ராமை பாக்கபோறாங்க, முத்தம் (முத்தங்கள் - பின்ன பொசுக்கு பொசுக்குனு கிஸ் பண்றாங்கயா ..ஹாலிவுட் தோத்துடும் போங்க ) குடுக்குறாங்க அத்தன பேர்ல இதை எல்லாம் யாருமே பாக்காம இருக்காங்களா?

2.இவ்ளோ செலவு பண்ணிருக்கீங்க படத்துக்காக முக்கியமா காஸ்ட்டியூம்க்காக ஆனா  ரன்வீருக்கு ரொம்ப குறைஞ்ச பட்ஜெட்லயாவது ஒரு சட்டை  குடுத்துருக்கலாம் இல்ல. 6 Pack வச்சிருக்குற ஒரே காரணத்துக்காக சும்மா சும்மா அவர சட்டை இல்லாம நடிக்க வச்சுருக்குறதை நான் வன்மையாக கண்டிக்குறேன்.

                        துப்பாக்கி குண்டின் சத்தத்துடன் கூடிய ரொமாண்டிக் .(GUN பாயிண்ட்ல ரொமாண்டிக் )

பாண்டிய நாடு


அப்பா அம்மா அண்ணன் அண்ணி அண்ணன் குழந்தைனு அமைதியா தான் உண்டு தான் வேலை உண்டுனு செல்போன் சர்வீஸ் கடைல வேலை பாத்துகிட்டே தன் மேல் வீட்ல குடியிருக்குற மலர்(லக்ஷ்மி மேனன்) டீச்சர்யை காதலிக்குறதுனு மிடில் கிளாஸ் குடும்பமா மதுரைல வாழ்த்துக்கிட்டு இருக்குற சிவகுமார் (விஷால்) ,தன்னோட அண்ணன் மதுரையின் பெரிய தாதாவான சிம்மக்கல் ரவி(சரத் லோஹித்அஷ்வா) யை எதிர்த்ததால கொல்லப்படுறார் தெரிஞ்சதும் அந்த தாதாவை எப்படி பழி வாங்குறார்னு சொல்ற எப்பவும் பாக்குற சாதாரண படம் தான்..ஆனா அதை சொன்ன விதம் தான் பாண்டியநாட்டு படத்தோட ஸ்பெஷல் .அதுக்கு காரணம் சுசீந்திரனின் ஸ்கிரிப்ட்..


இந்த படத்துல எனக்கு பிடிச்சது...

- சுசீந்திரன் சாரின் ஸ்கிரிப்ட்...அடுத்து என்ன அடுத்து என்ன ஹீரோ மாட்டிப்பாரா?என்ன ஆகபோகுதுன்னு பரபரன்னு யோசிக்கவச்ச ஸ்கிரிப்ட்..

- பாரதிராஜா சாரின் நடிப்பு...ஒரு சாதாரண அப்பாவா அவர் நடிச்சிருக்கும் விதம்..

- கண்ண உறுத்தாத காட்சிகள் பாடல்கள்..

-கொஞ்ச நேரமே வந்தாலும் கெத்தா வர 'விக்ராந்தின்' கேரக்டர் ..

-எல்லாத்துக்கும் மேல அளவா அடக்கமா அழகா நடிச்சுருக்குற விஷால் .. ஆறடி வளந்த ஒரே காரணத்துக்காக எத்தன மெயின் வில்லன் சப் வில்லன் வந்தாலும் பறக்க பறக்க அடிச்சு பொரட்டிப் போட்ட விஷாலை பார்த்து பார்த்து ஒரு கட்டத்துல "அட போங்க பாஸ்"னு சொல்ல ஆரம்பிச்ச நேரத்துல ,முழுக்க அமைதியா,நல்ல நடிப்போட ,ஒரு சாதாரண ஆள் எப்படி யோசிப்பானு நினைக்குற அளவுக்கு நடிச்சுருக்குற விஷால் (ஸார் இப்படியே அடக்கமா பணிவா நடிங்க ஸார்...இந்த பணிவு உங்கள எங்கயோ கொண்டுபோகபோகுது...)

-லக்ஷ்மி மேனனுக்கு மத்த படத்த விட இதுல நடிப்பு குறைவுதான்..இமான் இசைல எல்லா பாட்டும் நல்லா இருக்கு.

- மதியின் ஒளிப்பதிவு,ஆண்டனியின் எடிட்டிங்..

டைரக்டர் ஸார்கிட்ட எனக்கு சில டவுட்:

- பரணியை சேதுவும் சிவாவும் சேந்து அடிக்க போற சீன்ல சிவா அவரோட பைக் தானே கொண்டுவறார்..பைக் நம்பர் பாத்தாலே யாருன்னு தெரிஞ்சிருக்குமே..இல்ல சேதுவோட முகத்தை தான் சப் வில்லன் பரணி பாதுட்றாரே அவரோட நண்பர்கள் யாருன்னு விசாரிச்சிருந்தாலே டவுட் ,சிவா மாட்டிருப்பாங்களே ..

- வக்கீல் வீடு பூட்டி இருந்தா அவரோட ஊரு எது எங்க இருக்காரு அவரோட நண்பர்கள் யாருன்னு அவ்ளோ செல்வாக்குள்ல தாதாவால கண்டுபிடிக்க முடியாதா?

- கடைசியா ஹீரோ ஒன் ருபி காயின் போட்டு போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணினது யாருன்னு போலிஸ்சால கண்டுபிடிக்க முடியாதா?

- இன்டர்வெல்க்கு அப்பறம் படத்தோட ஸ்பீட்க்கு பிரேக் போட்ற பாட்டு ஃபை ஃபை ..

இதுலாமும் சரி பண்ணியிருந்தா "பாண்டிய நாடு" போர்ல மிகப்பெரிய வெற்றி கண்டதுன்னு இன்னும்  பெருமையா சொல்லலாம்.

வணக்கம் சென்னை


ஏமாந்தவங்க வீட்டை அடுத்தவங்களுக்கு வித்து காசுபாக்குற சந்தானத்துகிட்ட ஏமாறுற தேனியில இருந்து வேலைக்காக சென்னை வரும் அஜய் (சிவா) ,புகைபடத்துறைல சாதிக்கணும்னு லண்டன்ல இருந்து சென்னை வரும் அஞ்சலி (ப்ரியா ஆனந்த்) வேற வழி இல்லாம ஒரே வீட்லஇருக்க வேண்டிவருது .ஏற்கனவே நிச்சயம் ஆனவர்னு தெரிஞ்சும் அஜய் அஞ்சலியை காதலிக்க அஞ்சலி அஜய்யை ஏத்துக்கிட்டாங்களா இல்லையானு சொல்ற படம் தான் 'வணக்கம் சென்னை'.

- மறுபடியும் சென்னை 28-ல பாத்த சிவாவை இந்த படத்துலயும் பாக்க முடிஞ்சது..

-ப்ரியா ஆனந்தின் நடிப்பு ,சில காட்சிகள் மட்டும் வந்தாலும் எதார்த்தமான நடிப்பை குடுத்துருக்குற ரேணுகா,ஊர்வசி,நாசர்,மனோபாலா ..

- சொதப்பாம கொண்டுபோன ஸ்க்ரீன் ப்ளே , எடிட்டிங் ...

- டபுள் மீனிங் இல்லாத சந்தானத்தின் காமெடி..

-ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமா அனிருத்தோட இசை ..
(அனிருத் - ஆள் பலவீனமா இருக்குறமாதிரி தெரிஞ்சாலும் இசை 'பலமா' தான் இருக்கு..)

- குடும்பத்தோட பாக்கலாம் ...

- முதல் படம்னு தோணாத அளவுக்கு எடுத்துருக்குற கிருத்திகா உதயநிதி.....வெல்கம் கிருத்திகா மேடம்....

ராஜா ராணி ...

விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ற ரெண்டுபேர் விருப்பத்தோட எப்படி ஒன்னு சேருறாங்கனு சொல்றப் படம் இந்த ராஜா ராணி...

இந்த படத்துல எனக்கு பிடிச்சது...

-கரெக்ட்டான கேரக்டர்ஸ் ச்சூஸ் பண்ணிருக்குறது..

-மூணு விதமான காதலை அழகா குழப்பம் இல்லாம காட்சிகள்ல காட்டி இருக்குறது..

-கேரக்டர்க்கு தகுந்தமாதிரி நயன்தாரா,ஆர்யா,ஜெய்,நஸ்ரியா,சத்தியராஜ்,சந்தானம் எல்லாரும் நடிச்சுருக்குறது .

-பிடிக்காத ரெண்டுபேர் கல்யாணம் பண்ணிகிட்டா எப்படி இருப்பாங்கனு நயன்தாரா,ஆர்யா அழகா நடிச்சுருக்காங்கனா, செம்ம இன்னொசென்ட் ஆளா ஜெய்யும் ,துறு துறு அழகு பொண்ணா நஸ்ரியாவும் கலக்கலா நடிச்சுருக்காங்க ..

-வித்யாசமான, வேற வேறையான, மூணு விதமான காதலுமே அழகா இருக்கு..

-சத்தியராஜ் சாரின் கதாப்பாத்திரம் நெஜமாவே இப்படி ஒரு அப்பா நமக்கு இருக்குமாட்டாரானு நினைக்க வைக்குறமாதிரி இருக்கு. சார் இதுவரைக்கும் செஞ்சதுலையே நிஜமாவே வித்யாசமான கதாப்பாத்திரம் .

-கண்டிப்பா ,கடைசி சீன் ஒரு ட்விஸ்ட் தான்

-சந்தானத்தோட காமெடி படத்தோட காட்சியோட சேந்தே வருது,முக்கியமா ரொம்ப டபுள்மீனிங் டயலாக் இல்லப்பா இந்த படத்துல.

-அட்லீயோட ஒப்பனிங் அமோகமா இருக்கு..வெல்கம் அட்லீ..

-ஆசைப்பட்டு நயன்தாராவ சுத்திவர்ற ஆர்யாவை கடைசிவரை நயன்தாரா அவமானப்படுதுறது திட்றது அடிக்குறது எல்லாம் ஓவர் பாஸ்..பாவம் ஆர்யா..

டைரக்டர் ஸார்கிட்ட எனக்கு சில டவுட்...

-ஜெய்யோட மனசு மாறக் காரணம் என்ன?கடைசி காட்சியில ஜெய் மோதிரத்தை பாக்குறதுக்கு அர்த்தம் என்ன?

இந்த படத்துல ஏதாவது ஒரு சீனுக்காவது உங்க கண் கலங்காம இருந்தா கண்டிப்பா நீங்க மனசே இல்லாதவங்க தான்.சந்தானத்தோட ஒரு காமெடி டயலாக்காவது ஜெய்யோட ஒரு சின்ன பர்ஃபாமென்ஸ்க்காவது உங்கள மறந்து நீங்க சிரிக்காம இருந்தா நீங்க சிரிக்க தெரியாதவங்கனு அர்த்தம்.

 காதல் தோல்விக்கு அப்பறமும் வாழ்க்கை இருக்கு..காதல் தோல்விக்கு அப்பறமும் காதல் இருக்கு..ஆனா காதல் இல்லாம வாழ்க்கை இல்லன்னு மெசேஜ் சொல்லிருக்காரு அட்லீ..

த்ரிஷா இல்லைனா திவ்யா ,சுரேஷ் இல்லைனா நரேஷ்னு போயிட்டு இருக்குற இந்த காலத்துல எதுக்கு இந்த மெசேஜ்னு தான் தெரியல எனக்கு.


சென்னை எக்ஸ்பிரஸ் (ஹிந்தி): தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைக்கபோறதா சொல்லி கோவாவுக்கு பிளான் பண்ற ராகுல் (ஷாருக்) சென்னை எக்ஸ்பிரஸ்-ல கிளம்ப , எதேர்ச்சையா மீனலோக்க்ஷனி (தீபிகா)வை ரயில்ல ஏற உதவி செய்ய , தான் இறங்க வேண்டிய இடத்தை மிஸ் பண்ணிடுறார்.

மீனம்மாவை நாலு பேர் பின் தொடர , அப்போதான் மீனம்மா விருப்பம் இல்லாதவனை கல்யணம் பண்ண சொன்னதால வீட்ட விட்டு ஓடிவந்துட்டாங்கனும் அவரை மறுபடியும் கூப்பிட்டு போக வந்தவங்கதான் இந்த நாலு பேருனும் ராகுலுக்கு தெரியுது.வேற வழி இல்லாம மீனம்மாகூட அவரோட ஊருல இறங்குறாரு ராகுல் .தன் அப்பா துர்கேஸ்வர அழகு சுந்தரம் (சத்யராஜ்)கிட்ட ராகுலை காதலிக்குறதா மீனம்மா தமிழ்ல சொல்ல என்னனு புரியாமலே தலையாடிட்ராறு ராகுல்.

மீனம்மாவை கல்யாணம் பண்றதா இருந்த தங்கபல்லி(நிகிதின் )ராகுலை பார்த்து மோதி பாக்கலாம் யார் ஜெயிக்குறாங்களோ அவங்களுக்கு தான் மீனம்மானு சொல்ல ,கடைசியா வில்லனை வீழ்த்தி மீனலோக்க்ஷனியின் கரம் பிடிக்குறார் ராகுல்.


செம்மமம எண்ட்டர்டையின்மென்ட் மூவி...லாஜிக் பாக்காம ,கேள்வி கேக்காம படம் பாத்து ரசிச்சுட்டுவரனும் அவ்ளோதான்.

ஒருஒரு சீன்லயும் ஷாருக் பக்காவா நடிச்சுருக்கார்.அவர் முகத்துல குடுக்குற ஒருஒருஎக்ஸ்பிரஷனும் ரசிக்கலாம்.கடைசி சண்டைல மனுஷன் நிஜமாவே விழுந்து எந்திருச்சு செம்மையா அடி வாங்கி இருப்பார் போல... ,

தீபிகா , ஹையோ இந்த பொண்ணுக்கு சவுத் இண்டியன் ஸ்டைல்ல டிரஸ் பண்ணினாலும் அழகா இருக்கு நார்த் இண்டியன் ஸ்டைல்ல டிரஸ் பண்ணினாலும் அழகா இருக்கு தன் சொந்தக் குரல்ல தமிழலை கொலப்பண்ணினாலும் ரசிக்கலாம் .எவ்ளோ அழகா எதார்த்தமா டயலாக் டெலிவரி பண்றாங்க

ஹிந்தி தெரியாத மத்தவங்க முன்னாடி இதுதான் சிட்ஷுவேஷன் இதுதான் பிளான்னு தீபிகாவும் ஷாருக்கும் பாட்டு பாடி ஒருத்தருக்கொருத்தர் புரியவைக்குறது காமெடினா ...என்னனு புரியாம மீனம்மா இப்போ நீங்க பாடுங்கன்னு அடியாளுங்க சொல்றது அதவிட காமெடி .தீபிகாவும் ஷாருக்கும் சொந்தக் குரல்ல பாட்டு பாடுறாங்க அத கொஞ்சம் பொறுத்துகிட்டு தான் ஆகணும்.

அவ்ளோ அழகான சினிமாட்டோகிராபி.

கில்லி படத்துல த்ரிஷாவின் கழுத்துல கத்தியை வச்சு தப்பிக்குற சீன் மாதிரியே இதுலயும் ஒரு சீன் இருக்கு அத பாத்தப்போ..இதல்லாம் நாங்க கில்லிலையே பாத்துட்டோம்னு சொல்லாம இருக்க முடியல...

நிறையா தமிழ் ஆளுங்க நிறையா தமிழ் டயலாக்குகள் இருக்குறதால முழுசா ஹிந்தி படம் பாத்த நினைப்பு வரல..

                   சென்னை எக்ஸ்பிரஸ் ரோஹித் ஷெட்டியின் எக்ஸ்பிரஸ்...

சூது கவ்வும்


சில்லற வியாபாரம் செஞ்சுகிட்டு இருக்குற ஒருத்தனுக்கு பல்க்கா ஆர்டர் வந்தா எப்படி இருக்கும்?அது மாதிரி , மாச செலவுக்கு சின்ன சின்ன கிட்னாப் பண்ணிக்கிட்டு இருக்குற தாஸ்(விஜய் சேதுபதி) அண்ட் கோ(அசோக் செல்வன்,ரமேஷ்,சிம்ஹா) -வுக்கு நேர்மையான  மந்திரியின் (m .s பாஸ்கர்) மகனான அருமை பிரகாசம்(கருணாகரனை) கடத்தினா ரெண்டு  கோடி குடுக்குறதா டீல் வர சம்மதிக்குறாங்க.ஒரு கட்டத்துல தங்களால முடியலைன்னு பின்வாங்க , அருமை பிரகாசமே ஐடியா குடுத்து பணத்த வாங்க வைக்குறார்.பணம் கைக்கு வந்ததும் பணத்தோட எஸ்கேப் ஆகிடுறார் அருமை பிரகாசம்.மந்திரியின் தூண்டுதலால அருமை பிரகாசத்தை  கடத்தினவங்களை கனுபிடிக்க சொல்லி கேஸ் என் கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்பிரம்மா (யோக் ஜெபி)கிட்ட போகுது.பிரம்மா கிட்ட இருந்து இந்த தாஸ் அண்ட் கோ தப்பிசாங்களா இல்லையாங்குறது  மீதி கதை .

இப்படி ஒரு கிட்னாபிங்கை இது வரைக்கும் எந்த மொழியிலையும் பாத்ததில்லைங்க நான்.சிரிச்சு சிரிச்சு போதும்னு ஆகிடுச்சு.

விஜய் சேதுபதி - இவருக்குள்ள எவ்ளோ திறமை இருக்கு பாரேன்னு ,மனுஷன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கார்.அவர் மட்டும் இல்ல அசோக் செல்வன்,ரமேஷ்,சிம்ஹா,கற்பனை கதாபாத்திரம் ஷாலு (ஷஞ்சிதா ஷெட்டி)-னு எல்லாருமே நல்லா நடிச்சுருக்காங்க.அதுவும் யோக் ஜெபி-க்கு ஒரு டயலாக் கூட இல்ல ஆனா மனுஷன் கடைசி சீனல அதன பேரையும் எதிர்பாக்காம சிரிக்க வச்சுருக்கார் .

காசு பணம் துட்டு மணி குடுத்து சந்தோஷமா சிரிச்சுட்டு வர கேரண்டி குடுத்துருக்கார் இயக்குனர்  நலன் குமாரசாமி.

தீயா வேலை செய்யணும் குமாரு


தன்னோட குடும்பத்துல எல்லாரும் காதல் கல்யாணம் பண்ணியும் ,தனக்கும் லவ்வுக்கும் மட்டும் செட் ஆகம இருக்கும் குமார்(சித்தார்த்)க்கு தன ஆபீஸ் -லயே புதுசா ஜாயின் பண்ணும் சஞ்சனா(ஹன்சிகா) மேல காதல் வர,ஆனா ஹன்சிகாவோ ஆபீஸ்ல இருக்குற மோஸ்ட் ஹான்ட்சம் பெர்சனான ஜார்ஜ்( கணேஷ் வெங்கட்ராம் )யை காதலிக்குறாங்க.சீரியல் செட்டா இருக்குற சித்தார்த், காதலுக்கு ஹெல்ப் பண்ணி காசு பாக்கும் மோக்கியா(சந்தானம்) உதவியோட இவங்க காதலை எப்படி பிரிச்சு ஹன்சிகா தன்னை லவ் பண்ண வச்சு ,பிரகாசமான குண்டு பல்ப்பா மாறுராருங்குறதுதான் படத்தோட கதை.

ஒரு ட்யூப் லைட் ஹீரோவா சித்தார்த் கச்சிதமா பொருந்தி நடிச்சுருக்கார்.ஹன்சிகா வழக்கம் போல அழகு + கொஞ்சம் நடிப்பு ..மத்தபடி எல்லாமே சந்தானம் தான்.

காதலிக்க ஐடியா குடுத்துட்டு சித்தார்த் காதலிக்குறது தன்னோட தங்கையைனு தெரிஞ்சதும் அந்த காதலை பிரிக்க பல ஐடியா பண்ணி அதுல தானே போய் மாட்டுறது நல்ல காமெடி..

கலகலப்பு அளவுக்கு சுந்தர்.C இந்த படத்தை குடுக்கலைனாலும் ,பார்க்கலாம்.

தில்லு முல்லு

ரஜினிகாந்த்+தேங்காய் சீனிவாசன்+பாலச்சந்தர் +MSV காம்பினேஷன்ல வந்த அந்த பழைய தில்லு முல்லு ரீமேக்.ஒரிஜினலோட கம்பேர் பண்ணும் போது ஒரு 20% கூட இல்லைன்னு எனக்கு தோணுது.

தீவிர முருகர் பக்தரான கிளாசிக் மினரல் வாட்டர் கம்பெனி முதலாளி சிவகுருநாதன்(பிரகாஷ் ராஜ்) கிட்ட பொய் சொல்லி வேலைக்கு சேருறார் பசுபதி(சிவா).20/20 மேட்ச்ல் முதலாளி பாத்துட தனக்கு ஒரு தம்பி இருக்குறதா பொய் சொல்றார் பேரு கங்குலி கந்தன் .கராத்தே தெரிஞ்ச  கங்குலி கந்தனை தன பொண்ணுக்கு கராத்தே சொல்லி தர சொல்லி சொல்றாரு.கங்குலி கந்தனும் தன பொண்ணும் காதலிக்குறாங்கனு தெரிஞ்சதும் பசுபதிக்கு தன பெண்ணை பேசி முடிச்சுடுறார்.

இதனால வீட்டை விட்டு போகும் ஜனனி (இஷா தல்வார்)க்கு ரெண்டு பேரும் ஒண்ணுதான்னு தெரியவருது.தன தங்கையை காதலிக்கும் மனோவை (சூரி) பசுபதிக்கு பிடிக்கலைனாலும் திருமணம் செஞ்சு வைக்க முடிவு பண்ணி கோவிலுக்கு போறாங்க.தன் மகளுக்கும் கங்குலி கந்தனுக்கும் தான் கல்யாணம்னு நினச்சு கல்யாணத்தை நிறுத்த சொல்றார் தன ஆளுங்க மூலமா சிவகுருநாதன்.அங்க கல்யாணம் நடக்குறது மனோவுக்குனு தெரியாத அவங்க மனோவை கட்டி போட்டுடுறாங்க.

பசுபதிதான் சம்மதிக்குற மாதிரி சம்மத்திசுட்டு இப்படி பண்ணிட்டானு நினச்சு ஆள் மாறாட்ட வேலை எல்லாத்தையும் சிவகுருநாதன் கிட்ட சொல்லிடறாரு.விருப்பம் இல்லாத பொன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வம்பு பண்றதால பொண்ணுவீட்டுகாரங்களுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிகிட்டு இருக்குறாரு  சந்தானம் .ஒரே மாதிரி பட்டு வேஷ்டி சட்டையால ஆள் மாறி மாறி  கடைசியா எல்லாம் ஒன்னு சேந்தாங்களானு சொல்லி இருக்கார் இயக்குனர் பத்ரி .

பழைய தில்லுமுல்லுல தேங்காய் ஸ்ரீனிவாசனுக்கு முருகன் மட்டும் இல்ல கதரையும் பிடிக்கும் அதனால ரஜினி கதர் டிரஸ்ல இருப்பார்.இந்த படத்துல ஏன் சிவா கதர் டிரஸ்ல இருக்கார்?

யுவனோட இசைல பாட்டும் சுமார்தான்.

எதிர் நீச்சல்

   தன் பெயரால நிறைய கேலி ,கிண்டலுக்கு ஆளாகும் ஹீரோ  தன் பெயரை ஹரீஷ்(சிவகார்த்திகேயன்)னு மாத்திக்குறார்.

 பெயரை மாத்தினதும் ஸ்கூல் குழந்தைங்களுக்காக டொனேஷன் கேக்கும்   கீதா (ப்ரியா ஆனந்த்) ,ஹரீஷ் 'நைஸ் நேம் 'னு சொல்ல (இது ஒரு குத்தமா) முதல் தடவையா தன் பெயரை நல்ல இருக்குனு சொல்லிடாங்கலேனு சந்தோஷப்படுறார்.தன் பெயரை மாத்தினதாலதான் தன் வாழ்க்கைல எல்லாம் நல்லதா நடக்குது அதிஷ்டமா இருக்குனு நினைக்குறார் ஹரீஷ்.

வீட்டு ஓனர் பையனை ஸ்கூல் -ல் விட போக அங்க மறுபடியும் கீதாவை பாக்குறார்.பாத்ததுல இருந்து காதலிக்குறார்.அவரை பாக்குறதுக்காகவே தினமும் பையனை ஸ்கூல்-ல விட போகுறார்.ரெண்டுபேரும் பேசுறாங்க பழகுறாங்க காதலிக்குறாங்க.

ஒரு நாள் தன்னோட பழைய பேர் கீதாவுக்கு தெரியவர , 'ஒரு பேருக்காகவே இப்படி ஓடுறியே உன்னை நம்பி நான் எப்படி உன்கூட வருவது?உன் பெயரை கோர சொல்றியே அந்த பேருக்காக நீ என்ன பண்ணி இருக்கனு கேக்க ', தான்
ஏதாவது சாதிக்கணும் அப்போதான் தன்னோட பழைய பேர் எல்லாரும் மறந்து தன்னோட புது பேரும் தானும் நிலைச்சு இருப்போம்னு முடிவு பண்றார் ஹரீஷ்.

சின்னவயசுல இருந்தே விளையாட்டில் பல பரிசுகளை வாங்கின ஹரீஷ் ,சென்னைல நடக்குற மாரத்தானில் கலந்துக்க முடிவு பண்றார்.

தனக்கு சரியான கோச் தேடும்போது ,வள்ளி (நந்திதா) கிடைக்குறாங்க.தடகளத்துல சாதிக்க நினைக்குற கிராமத்து பெண் வள்ளியை தன் பணத்தால விளையாட விடாம அவர் எதிர்காலத்தையே வீணாக்குறாங்கங் எதிர் கோச் ராஜா சிங்(ரவி பிரகாஷ்)-ங்கறதை ஒரு சின்ன பிளாஷ் பேக் -ல சொல்றாங்க.
இதை தெரிஞ்சுக்கும் ஹரீஷ் ,தனது கோச் -காகவாவது இந்த போட்டியில் ஜெயிக்கணும்னு முடிவு பண்ணி உழைக்குறார்.

கடைசில ஹரீஷ் போட்டியில் ஜெயிக்குறாரா(ஆபியஸ்லி ஹீரோ ஜெயிக்காமளா)?தனது கோச் -வள்ளிக்கு மறுபடியும் விளையாட்டில் சாதிக்கும் வாய்ப்பு கிடைச்சதானு சொல்றது கிளைமாக்ஸ் .

சிவகார்த்திகேயன் இந்த படத்துல ரொம்பவே மெட்ச்சூர்ட்-ஆ ஸ்மார்ட் -ஆ இருக்கார்.ஹீரோங்கறதால அவரோட வழக்கமான டைமிங் சென்ஸ் காமெடி மிஸ்ஸிங்(நமக்கு) ,ஆனா அவருக்கு குடுத்த வேலையை ரொம்ப சரியா சிறப்பாவே செஞ்சுருக்கார்.கண்டிப்பா நல்ல நடிகனா வருவார்.(அங்க அங்க லைட்-ஆ சிவாவோட நடிப்புல தனுஷோட சாயல் தெரியுது,சில சமயம் லைட்-ஆ தலைவர் சூப்பர் ஸ்டார் மாதிரியும் இருக்கார்.லைட்டா தாங்க.ஒரு வேலை அந்த ஹேர் ஸ்டைலால இருக்குமோ )

ப்ரியா ஆனந்த் ,வள்ளி அவங்க கதாபாத்திரத்துக்கு சரியா நடிச்சுருக்காங்க.

வள்ளியோட அப்பா ,தான் பொண்ணு தடகளத்துல சாதிக்கணும்னு அவர் வாத்தியார் வீட்ல நிக்குறதும்,பொண்ணு சாப்பிட்டு வைக்குற பாதாம் ,பிஸ்தா பருப்பின் தோலை ,கொண்டுபோய் கடைல காட்டி,அது வேணும்னு  அதை வாங்கிட்டு வந்து தரதும்,சக விளையாட்டு வீரர்கள் குடிச்சுட்டு போடும்   பெப்ஸி கோக் டப்பாவை  கொண்டுபோய் கடைல காட்டி,அது வேணும்னு  அதை வாங்கிட்டு வந்து தரதும்னு தான் பொண்ணு கேக்காமலே அவளுக்காக செய்ற அந்த அப்பா  கேரக்டர் ரொம்ப நல்ல இருந்தது.

சதீஷ் காமெடி நல்லா இருக்கு.

அனிருத்தோட  இசைல பாட்டு ரிலீஸ் ஆனதுல இருந்து ஹிட்னு தெரியும்.அதை நல்லாவே காட்சிகளாக்கியும்  இருக்காங்க.

காமெடிங்குற பேர்ல ஆர்த்தி வர்ற சீன் ரொம்ப போர்.

தன் படத்தை ப்ரொமோட் பண்றதுக்காகவே தனுஷ் நயந்தாராவோட ஒரு பாட்டுக்கு ஆடி இருக்கார்.


உதயம் NH 4


தான் காதலிச்சவனோட தன் பொண்ணு ஓடி போய்ட்டானு தெரிஞ்சதும் ,எப்படியாவது தன் பொண்ணை கண்டுபிடிச்சு தர சொல்லி போலீஸ் மனோஜ் மேனன் (கே.கே.மேனன்) கிட்ட சொல்றார்,பொண்ணோட அரசியல்வாதி அப்பா . அதுவும் அந்த நாள் இரவு 12 மணிக்குள்ள கண்டுபிடிக்கணும் ஏன்னா அடுத்த நாளில் இருந்து பொண்ணு மேஜர் ஆகிடுவானு சொல்றார்.ஒரு கட்டத்துல பொண்ணை திரும்ப அழைச்சுகிட்டு வர முடியலைனா அந்த பையனோட சேத்து கொண்ணுடவும் சொல்றார்.பெங்களூரில் இருந்து சென்னைக்கு போக காதலர்கள் நினைக்குறதால ஹைவேயில் பயணிக்குது கதை.

காதலர்களான பிரபு (சித்தார்த்),ரித்திகா(அர்ஷிதா ஷெட்டி) போலீஸ் கண்ணுல மண்ணை தூவிட்டு எப்படி எல்லாம் தப்பிக்க நினைக்குறாங்க.அதை எப்படி எல்லாம் போலீஸ் கண்டுபிடிக்குறாங்க.கடைசில காதலர்கள் ஒன்னு சேந்தாங்களா இல்லையாங்கறதை ரொம்ப சுவாரசியமா ,விறுவிறுப்பா சொல்லி இருக்கார் இயக்குனர் மணிமாறன்.

என்னதான் தான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்-டான போலீஸ்னாளும் அவருக்கும் ஒரு குடும்பம் இருக்குஅவருக்கும் மனசுல அன்பு இருக்குனு அடிக்கடி அவருக்கு வர போன் கால் மூலமா அழகா தெரியப்படுத்துறார் இயக்குனர்.
போன் கால் எப்படி ட்ரேஸ் பண்ராங்கங்கறதை தெளிவா காட்டி இருக்கார் இயக்குனர்.ஒரு சாஃட்டான காதல் ,அதுல காதலர்களா சித்தார்த்தும் ,அர்ஷிதாவும் கரெக்ட் சாய்ஸ்.
சித்தார்த்தின் நண்பர்களாக வரும் எல்லாருமே நல்லா நடிச்சு இருக்காங்க. வெற்றிமாறனின் வசனங்கள் அளவா, அழகா இருக்கு.G .V .பிரகாஷின் இசையில் பாட்டும் நல்ல இருக்கு.வேல்ராஜின் சினிமாஆட்டோகிராஃபி,கிஷோரின் எடிட்டிங் எல்லாம் சூப்பர்.

படத்துல பிடிக்காதது இவ்ளோ தண்ணியும் ,மப்பும் ,டிஸ்கோதே காட்சிகளும் தேவையாங்கரதுதான்.அதை எல்லாம் கம்மி பண்ணி இருந்தா இன்னம் கொஞ்சம் டீசென்டா இருந்து இருக்கும் படம்னு எனக்கு தோணிச்சு .

குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தே (தெலுகு): நண்பனின் கல்யாணத்துக்கு போகும் கார்த்திக் (நித்தின்) ,அங்க ஸ்ருதி(இஷா தல்வார் )-ஐ பார்த்ததும் பிடிச்சுப்போய் காதலிக்க ஆரம்பிக்குறார்.அவர் பெயரை நண்பனின் மனைவியின் மூலமாக தெரிஞ்சுக்குறார்.நண்பனிடம்(ஆலி) ஸ்ருதியின் போன் நம்பர் கேக்க ,அதை நண்பனும் தர ,நம்பரை தப்பாக சேவ் பண்ணிடுறார் கார்த்திக்.

மனசை மட்டும் பார்த்து காதலிக்குறவன் கிடைக்கணும்னு நினைக்குற ஷ்ரவானி (நித்யா மேனன்)-யின் நம்பரை தவறுதலா சேவ் பண்ணிக்குற கார்த்திக் ஷ்ரவானிக்கு போன் பண்ணி பேச ,கார்த்திக்கை ஃபேஸ் புக்-ல் கண்டுபிடிச்சுடுறாங்க ஷ்ரவானி.ஸ்ருதிகிட்ட தான் பேசுறோம்னு நினச்சு சந்தோஷபட்ர கார்த்திக் ,தன் நன்பனுக்கு அவன் விரும்பும் பெண் அவனை காதலிக்க நிறையா ஐடியா டிப்ஸ் எல்லாம் தராரு அது தான் காதலிக்கும் பெண் ஸ்ருதிதான்னு தெரியாம.

 ஒரு கட்டத்துல நண்பன் காதலிக்கும் பெண் ஸ்ருதிதான்னு தெரியவர , ஷ்ரவானியிடம் தனக்கு நம்பர் வாங்கிதங்க நண்பனின் மூலமாக மன்னிப்பு கேட்டு இனி இந்த தவறு நடக்காதுன்னு சொல்ல சொல்ராறு கார்த்திக்.ஆனா கார்த்திக் தன்னோட நட்பை விடமுடியாம ஷ்ரவானியிடம் போனிலே பேசிகிட்டே இருக்கார். கார்த்திக்கை விரும்பி ஏமாந்த ஷ்ரவானி ,கார்த்திக்கும் அந்த வலியை உணரனும்னு நினச்சு தன் அப்பாவின் பதவியை பயன்படுத்தி கார்த்திக் வேலை செய்யும் அதே ஆபீஸ்-ல் பாஸ் -ஆக சேருறாங்க.
கார்த்திக்கை தன நடவடிக்கை மூலமா தன்னை காதலிக்க வைக்கநினைக்குற ஷ்ரவானி,கார்த்திக்கின் தோழியாக மற்றொரு நம்பரில் இருந்து பேசி தன்னை காதலிக்க , தானே ஐடியா சொல்லித்தராங்க .

 கார்த்திக் தன்னை விரும்புறத சொல்ற சமயம் ,தான் அதை நிராகரிக்கனும்னு நினைக்குறாங்க ஷ்ரவானி .கார்த்திக்கிற்கு ரெண்டுபேரும் ஒண்ணுதான்னு உண்மை தெரிஞ்சதா,ஷ்ரவானி கார்த்திக்கின் காதலை ஏத்துகிட்டாங்கலா இல்ல பழிவாங்கினாங்களானு கிளைமாக்ஸ்யை சீரியஸ்யா இல்லாம ஜாலியா கலகலப்பா சொல்லி இருக்குறார் இயக்குனர் விஜய் குமார் கோண்டா .

தான் காதலிக்கும் ஸ்ருதியை தான் நண்பன் காதலிக்குறான் ,அதுக்கு தான் நாம இத்தன நாள் ஐடியா குடுத்துருக்கோம்னு தெரிஞ்சு நண்பனின் காதலை பிரேக் பண்ண செய்ற கலாட்டா எல்லாம் காமெடி ரகள.

நித்தினும் நித்யாமேனனும் சின்ன சின்ன எக்ஸ்ப்ரெஷன்ல கூட அசத்துறாங்க.'இஷ்க்' படம் அளவுக்கு ரெண்டு பேருக்கும் ரொமான்ஸ் இல்லைனாலும் நல்லா தான் இருக்கு.அனூப் ரூபன்ஸ் இசைல பாடல்கள் சுமார் ராகம் தான்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா

 வெட்டியா அப்பாவையும் அம்மாவையும் கிண்டல் பண்ணிக்கிட்டு ,அரசியலில் ஜெயிக்கபோறோம்னு சொல்லி சுத்திக்கிட்டு இருக்குற ரெண்டு நண்பர்கள் வேற யாரு சிவகார்த்திகேயனும்,விமலும் ,இவங்ககூட பொண்டாட்டி ,மாமனார்,மாமியார்னு பாரபட்சம் பாக்காம எல்லாருகிட்டயும் திட்டு வாங்கி எல்லாரையும் திருப்தி படுத்துடற இன்னோர் நண்பன் அது நம்ம சூரி இவங்க மூணு பேரும் சேந்து பொழுதை கழிக்குறாங்க.ஹீரோ இருந்தா ஹீரோயின் இருக்கணும் இல்ல அதுக்காகவே ரெண்டு ஹீரோயின் காதல் கலாய்த்தல்னு இருக்காங்க.கடைசியா எலக்க்ஷனும் வருது ,தேர்தலில் ஜெயிச்சாங்களா ,பெத்தவங்களை புரிஞ்சிக்கிட்டு அவங்களை மதிச்சாங்களானு மீதி கதை.

 பாண்டி ராஜ் சார் ,நல்லா தானே படம் எடுத்தீங்க என் இப்படி திடீர்னு.கடைசி கால் மணிநேரம் ரொம்ப சோகத்த கொடுத்து ரெண்டே கால் மணிநேரம் ஓரளவுக்கு ரிலாக்ஸ் பண்ண வச்சுருக்கார் இயக்குனர்.

 சிவகார்த்திகேயன் ,விமல் காமெடிங்குற பேர்ல பேசுறாங்க.சிவகார்த்திகேயன் பஞ்ச் டயலாக் பேசுறேன்னு பஞ்சராகுறார்.போர் அடிக்குதுங்க நெஜமாவே.ஒரே ஒரு ஆறுதல் சூரி .

 பல படத்துல சொன்ன அதே கதைக்கரு,அப்பா திட்டறது நல்லதுக்குதான்-னு அதே தான் இதுலயும்.எங்க இவங்கள அரசியல்ல ஜெயிக்குறமாதிரி காட்டி ,அது அவ்ளோ ஈஸி-னு சொல்லிடுவாரோனு பாத்தேன்.நல்லவேல அப்படி இல்ல.

சேட்டை

 ஒரு வைரம் கடத்துற கும்பல் , கும்பல் கிட்ட இருந்து ஹன்சிகாகைல கிடைக்குற அந்த வைரம் ,ஹன்சிகாமூலமா ஆர்யாகிட்ட ,ஆர்யாகைல இருந்து சந்தானம்கிட்ட ,சந்தானம்கைல இருந்து பிரேம்ஜிகிட்ட ,பிரேம்ஜி கைல இருந்து ஹாஸ்பிடலுக்கு,ஹோச்பிடலில் இருந்து மறுபடியும் சந்தானத்துகிட்ட ,சந்தானம்கைல இருந்து இருந்து வைரம் கடத்துற கும்பல் + தலைவன் நாசர்கிட்ட,நாசர்கைல இருந்து மறுபடியும் சந்தானம்கிட்ட ,ஆர்யா+சந்தானம்+பிரேம்ஜி கைகளில் இருந்து சேட்டு சாயாஜி ஷிண்டேகிட்ட ,சாயாஜி ஷிண்டேகைல இருந்து மறுபடியும் ஆர்யாகிட்ட,இவங்க கிட்ட இருந்து ஹவுஸ் ஓனர் ஆலி கிட்ட வந்து கடைசியா அவங்க வீட்டு ஷோ கேஸில் போய் இடம் பிடிக்குது இந்த வைரம்.

 தல சுத்துது இல்ல .பாக்குற எங்களுக்கும் அப்படிதான்.ஹீரோ ஆர்யா ரொம்ப வேல இலாத கேரக்டர் ,பிரேம்ஜி எதுக்குனு தெரியல,சந்தானம் பாவம் பாத்ரூமே கதினு இருக்கார்.(அதுக்குபேர் ஜோக்காமாம் ),ஹன்சிகா ஆர்யாவை லவ் பண்ண,ஆமா இந்த அஞ்சலி எதுக்கு?ரெண்டு ஹீரோயின் வச்சதாலவோ என்னவோ கடைசியா ஹன்சிகா வேணாம்னு அஞ்சலியை கை பிடிக்குறார் சாரி உதட்டை பிக்குறார்(அப்படிதாங்க காட்றாங்க).

எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்கமாட்டோமானு பாத்தேன் இந்த படத்தை.

                                      சேட்டை விட்டுட்டாங்க கோட்டை.....

சென்னையில் ஒரு நாள்


லஞ்சம் வாங்கியதால் சஸ்பென்ட் ஆகி மறுபடியும் வேலையில் ரீஜாயின் செய்யப்போகும் டிராபிக் கான்ஸ்டபல்,தன் திருமண நாளில் தன் மனைவிக்கு பரிசாக புது கார்-ஐ வாங்கி கொண்டுபோகும் டாக்டர்,தன்  மகளை  மருத்துவமனைக்கு பார்க்க போகும் முன்பு கூட மீடியாவிற்கு பேட்டி குடுக்கபோகும் நடிகர் ,தனக்கு விருப்பமான ஜர்னலிஸ்ட் வேலையை  சேர்ந்து முதல் முதலாக செய்ய கனவுகளோடு போகும் ஒரு இளைஞன் .இவங்கள் அனைவரும் எதிர்பாராத நிகழ்வுகளால் சந்திக்கும் அந்த நாள் தான் இந்த 'சென்னையில் ஒரு நாள்'

சில வருஷத்துக்கு முன்னாடி ,ஒரு விபத்தில் மூளை சாவு காரணமா தன் இதயம் முதல்கொண்டு தனது உடல் உறுப்புகளை தானம் செஞ்சதன் மூலமா 6 பேருடைய வாழ்க்கைல ஒளி ஏத்திவச்ச ,ஹிதேந்திரன் அவர்களின் அந்த நிகழ்வை தான் இந்த படத்துல சொல்லி இருக்காங்க.

ஒரு விபத்தில் மூளை சாவு அடைந்த கார்த்திக் (சச்சின்)கின் இதயத்தை ,வேலூரில் இருக்குற ஹாஸ்பிட்டலில் இதய கோளறு காரணமாக வேறு இதயம் மாத்தனும்ங்குற நிலைல இருக்கும் நடிகர் கவுதம் கிருஷ்ணா (பிரகாஷ் ராஜ்)வின் மகள் ரியா (கப்ரில்லா)வுக்கு ,சென்னையில் இருந்து வேலூர் 170 கி.மீ தூரத்தை 1 1/2 மணி நேரத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு சவாலான காரியத்தை தன் மேல விழுந்த களங்கத்தை துடைக்கறதுக்கு ஒரு வாய்ப்பாக எடுத்துகிட்டு தானே முன்வந்து செய்ய ஆர்வம் காட்டும்  டிராபிக் கான்ஸ்டபல் சத்தியமூர்த்தி (சேரன்) அவருக்கு துணையாக உடன் வரும் கார்த்திக்கின் நண்பன் அஜ்மல் (மிதுன்) மற்றும் டாக்டர் ராபின் (பிரசன்னா) ,இவங்க சரியான நேரத்துக்கு இதயத்தை கொண்டு போனாங்களா ,ரியாவின் உயிர் காபாத பட்டதானு கொஞ்சம் திருப்பம் ,கொஞ்சம் விருவிருப்புன்னு  அழகா சொல்லி இருக்கார் இயக்குனர் ஷகீத் காதர்.

படத்துல நடிசுருக்குற எல்லாருமே தன்னோட கதாபாத்திரத்தை ரொம்ப சிறப்பா சேசு இருக்காங்க.கார்த்திக்கின் பெற்றோராக வரும் லக்ஷ்மி , ஜெயபிரகாஷ் ரொம்ப நடிப்பால அசரவைக்குறாங்க.பார்வதி மேனன் ,ராதிகா,இனியா,பிரகாஷ்ராஜ் எல்லாருமே சிறப்பா நடிச்சு இருக்காங்க.

டிராபிக் போலீஸ் கமிஷனராக சரத்குமார் ,இந்த வேலை ரொம்ப ரிஸ்க் செய்ய முடியாதுனு முதல்ல ஒதுங்குறதும் அப்பறம் டாக்டர் விஜயகுமார் இந்த வேலையை செய்யலைனா இந்தநாளும் மத்த நாள் மாதிரியே சாதாரண நாளாக போகும் நீ சம்மதிச்சா நாளை இது ஒரு வரலாறு ஆகும்னு சொல்ல   சம்மதிக்குற சரத்குமார் டிராபிக் போலீஸ் கமிஷனராக கச்சிதமா பொருந்துரார்.


தன் மனைவி தனக்கு துரோகம் செஞ்சுட்டானு கோவப்படுறதும் ,கோவத்துல மனைவி மேல கார் ஏத்தி கொள்ள நினைக்குறதும் பின்னர் தப்பு பண்ணிட்டேனேனு தவிக்குறதும்னு பிரசன்னா நடிப்புல கலக்குறார்.
என்னதான் டிராபிக் க்ளியர் பண்ணி இருந்தாலும் ,போன் பேசிக்கிட்டு வண்டி ஓட்டகூடாதுன்னு சொல்ற அவங்களே , டிரைவ் பண்ற சத்தியமூர்த்திக்கு அடிக்கடி கால் பண்ணி எங்க இருக்கார்னு கேக்குறதுக்கு பதிலா வேற ஏதாவது  யோசிச்சு இருந்தா சமூக அக்கறை எல்லா விதத்துலயும் இருக்குறது தெரிஞ்சிருக்கும்.

ஆனா டைரக்டர் சார், கடைசியா ஜிந்தா காலனி சீன் எல்லாம் ,போங்க சார் ரொம்ப ஏமாத்துறீங்க.சின்னதா பூ காதுல வச்சுருந்தா படத்தோட விறுவிறுப்புல நாங்க கண்டுகிட்டு இருந்துருக்கமாட்டோம் .நீங்க மொழம் கணக்குல பூ சுத்திடீங்களே.அந்த காட்சியை மாத்தி இருந்தா இன்னம் நிறைவா இருந்துருக்கும் படம்.

பலபேர் பலவிதத்துல உடல் உறுப்பு தானம் பத்தி சொல்லிகிட்டே தான் இருக்காங்க.நாம எல்லாரும் மனசுவைக்கணும் இருந்த பிறகு உடல் தானம் பண்றதால பலபேர் வாழ்க்கைக்கு நாம நல்லது செய்றோம் அதுமட்டும் இல்லாம இறந்த பிறகும் நாம வாழ்ந்துகிட்டு இருப்போம்.


சீதம்மா வாகிட்லு சிரி மல்லி செட்டு (தெலுங்கு).
ரொம்ப நாளுக்கு அப்பறம் ஒரு அடிதடி,ரெத்த கலரி,ஹீரோயிசம்,ஒரு பன்ச்ல ஒரு மையில் தூரத்துக்கு வில்லன் பறக்குறது,சுழண்டு சுழண்டு சண்டபோடுறதுனு ஏதும் இல்லாம ஒரு அமைதியான குடும்ப படம் தெலுங்குல பாக்க முடிஞ்சது.

அண்ணன் வெங்கடேஷ் தன் கோவத்தால ஒரு வேலையிலையும் நிரந்தரமா இருக்கமாட்டேன்குறாரு.தம்பி மகேஷ்பாபு படிப்பு முடிச்சிட்டு வேல தேடிக்கிட்டு இருக்கார்.அண்ணனும் தம்பியும் ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப ரொம்ப அன்பை வச்சிருக்காங்க.அப்பா பிரகாஷ்ராஜ் தன்,அன்பால அன்பான நடவடிக்கையால,எல்லாருக்கும் நல்லதே செய்யணும்னு நினைக்குற மனசால பணம் அதிகமா சேத்து வைக்கலைனாலும் மனுஷங்களை சேத்து வச்சுருக்குறாரு.

இவரோட தங்கச்சி பொண்ணு சீதா (அஞ்சலி) .சீதா பொறந்ததும் அவங்க அம்மா இறந்துட்ரதால கொழந்தைல இருந்து சீதா தன் மாமா வீட்ல தான் வளருறாங்க.சின்ன வயசுல இருந்தே சீதா வேங்கடேஷுக்குனு முடிவு

வெங்கடேஷுக்கும் சீதாவுக்கும் மனசுல விருப்பம் இருந்தாலும் வெளில காட்டிக்காமலே இருக்காங்க.

சீதாவின் இன்னொரு மாமன் ராவ் ரமேஷ் பிரகாஷ் ராஜின் குடும்பத்தை வசதிய வச்சு மட்ட படுத்திகிட்டே இருக்க ,அவரின் மகளான சமந்தாவுக்கும் ,மகேஷ் பாபுவுக்கும் காதல்
ஏற்பட அவரயும் அவரோட குடும்பத்தையும் சுத்தமா பிடிக்காத வெங்கடேஷ் தம்பிகிட்ட பேசுறதையே நிறுத்த,சீத்தாவின் இன்னொரு மாமன் தன் சொந்தகார பையனுக்கு சீதாவை கல்யாணம் பண்ணிகுடுக்க பேச,மகேஷ் பாபு சமந்தா கல்யாணம் நடந்ததா?வெங்கடேஷ் சமாதனம் ஆனாரா?சீதா வெங்கடேஷ் கல்யாணம் நடந்ததா?சீதாவின் இன்னோர் மாமன் பிரகாஷ் ராஜின் குடும்பத்தை மதிச்சாரானு சொல்றதுதான் படம்.
குடும்பத்துல இருக்குற ஒரு ஒருதங்களுக்கும் எந்த நேரத்துல என்ன என்ன வேணும் செய்யணும்னு சரியா பம்பரமா சுத்திக்கிட்டு இருக்குற கேரக்டர் அஞ்சலிக்கு.சொல்லவாவேனும் வழக்கம் போல நல்லா பண்ணி இருக்காங்க.

சமந்தாவுக்கு மகேஷ் பாவுவை போன்-இல் லவ் பண்றது தவிர பெரிய ஸ்கோப் இல்ல.

ரொம்ப நாளுக்கு அப்பறம் அடி தடி ,ஆக்ரோஷமான வசனம் ஏதும் இல்லாம ஒரு ஒரு சீனுக்கும் சிரிச்ச முகத்தோட இருக்குற மகேஷ் பாபுவை பாத்துகிட்டே இருக்கலாம்.

வெங்கடேஷ் கோவக்கார மகனா,பாசமான அண்ணனா,மனசுல இருக்குற அன்பை வெளில காட்ட தெரியாத மாமனா ஸ்கோர் பண்றாரு.

பணம் மட்டும் பெருசில்ல மனுஷங்களும் முக்கியம்னு அழகா சொல்லி இருக்கார் டைரக்டர்
ஸ்ரீகாந்த் அட்டல.

இஷ்க் (தெலுங்கு):

எப்பவும் கலகலப்பா இருக்குற ராகுல் (நித்தின்) , டெல்லில இருந்து ஹைதராபாத் போகும்போது ஏர்போர்ட்ல ப்ரியா (நித்யா மேனன்)-ஐ பார்க்க ,பாத்ததும் காதல்.துறுதுறுன்னு ப்ரியா கிட்ட ராகுல் வம்புபண்ணிகிட்டே வர , வானிலை சரி இல்லாத காரணத்தால கோவாவில் விமானம் தரை இறக்கப்படுது.ராகுல்ப்ரியாவை கோவாவில் இருக்குற தன் நண்பனோட கல்யாணத்துக்கு கூப்டுகிட்டு போறாரு.ராகுலின் குணமும்,துறுதுறுப்பும்>
ப்ரியாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க ப்ரியாவும் ராகுலை காதலிக்குறாங்க.

ஹைதராபாத்துக்கு போனதும் ப்ரியாவோட அண்ணனை (அஜய்) பார்க்குற ராகுல் ,ராகுலின் அக்கா (சிந்து துலானி) கொஞ்சம் ஷாக் ஆகுறாங்க.தன் அக்கா கல்லூரி படிக்கும் போது தன் அக்காவுக்கு விருப்பம் இல்லைன்னு
தெரிஞ்சும் ஒருதலையாக காதலிச்சு தன்னை தான் கல்யாணம் செய்யணும்னு மிரட்டி வம்பு பண்ணி கடைசியா தன்கிட்ட
அடிவாங்கி ஒதுங்கினவர் தான் இந்த சிவா (அஜய்) அவரின் தங்கைதான் ப்ரியானு ராகுலுக்கு தெரியவருது.

சிவா கண்டிப்பா தன் தங்கை ப்ரியாவோட காதலை ஏதுக்கமாட்டாருன்னு தெரிஞ்சதும் ராகுல் என்ன என்ன செஞ்சு சிவாவின் மனசுலயும் அவங்க அப்பா அம்மாவின் மனசுலயும் இடம்பிடிச்சு கடைசியா
ப்ரியாவை கல்யாணம் பண்றாருங்குறதை கொஞ்சம் சுவாரசியமா நிறையா காமெடியா சொல்லி இருக்கார் விக்ரம் கே.குமார் .

ராகுல் ப்ரியாவின் காதல் காட்சிகள் அவ்ளோ அழகான கவிதைமாதிரி இருக்கு.ரோடு டிராஃபிக்-இல் ப்ரியாவின் கை,கால் மட்டும் பாத்துட்டு பொண்ணோட முகத்தை பார்க்கணும்னு எப்படி இருக்கானு ஆட்டோ டிரைவர் கிட்ட ராகுல் கேக்குறதும்,ஏர்போர்ட்ல பணத்தை வேணும்னே கீழ போட்டுட்டு முன்னாடி வரிசைல நிக்குற பொண்ணுகிட்ட உங்க பணம்னு சொல்லி அவ குனியும் போது பின்னாடி பாத்து,அத ப்ரியா பாத்துட தல குனிஞ்சு நிக்குற ராகுல் தான் ஆட்டோவில் பாக்க நினச்ச பொண்ணோட அதே வளையல் ,அதே கால் மணியை சின்ன டாட்டுவை பார்க்க மெதுவா நிமிர்ந்து ப்ரியா முகத்தை பார்க்குறது,ப்ரியா செய்றது எல்லாம் தானும் போட்டிக்கு செய்றதுனு அழகழகான காட்சிகள்.

ப்ரியா.ராகுல் கிட்ட இருக்குற அந்த சின்ன சின்ன ரொமாண்டிக் சீன் ,சிவாகிட்ட ப்ரியாவின் லவ்வர்னு சொல்லி தன் நண்பனை கோத்துவிடுறதுனு நிறைய சீன்கல்,லட்டு மாதிரி இருக்குற நித்யா மேனன் ,நித்தினின் நடிப்புனுபாத்து பாத்து ரசிக்கலாம்  சிரிக்கலாம் .

                                                        இஷ்க் - ரொமாண்டிக் காமெடி

கண்ணா லட்டு தின்ன ஆசையா !!!

பாக்கியராஜின் 'இன்று போய் நாளை வா' படத்தோட ரீமேக் தான், கண்ணா லட்டு தின்ன ஆசையா.அதே ஸ்டோரி லைன் .மூணு நண்பர்கள் கால்கட்டு கலியபெருமாள் (kk ) (சந்தானம்),பவர் ஸ்டார் dr .ஸ்ரீனிவாசன் (பவர் குமார்),சேது (சிவா) ஒரே பொண்ண(விஷாக்ஹா சிங்க் (சௌமியா)) லவ் பண்றது.அதுக்காக அவங்க வீட்ல போய் டான்ஸ்,பாட்டுனு கத்துக்கிறதுனு,கடைசியா ஹீரோ சிவா கூட ஜோடி சேருறது .

என்னதான் சேது ஹீரோவா இருந்தாலும் சந்தானமும் சந்தானத்தோட டயலாக்கும் தான் ஹீரோ.கலாக்குறதுக்குனே ஒரு ப்ராபெர்ட்டி-ஐ கூட வச்சிருக்கார் சந்தானம் வேற யாரு நம்ம பவர் ஸ்டார் தான்.சில பேர பாத்தா பிடிக்கும்,சில பேரை பாக்க பாக்க தான் பிடிக்கும் சில பேரை பாக்காமலே பிடிக்கும்னு பவர் பேசுற டயலாக்,பவர் அழுகும்போது சந்தானம் அதை மொபைல்ல போட்டோ எடுத்து நல்லா இருக்கானு அவர்கிட்டயே கேட்டுட்டு நல்லா இல்லைல அப்பறம் என் இதுலாம் செய்றனு அவரயே கலாக்குறது,என்கிட்ட இல்லாதது அப்படி என்ன சிம்புகிட்ட இருக்குனு பவர் கேக்குறது,VTV  கணேஷைபாட்டு பாடுறவரா காட்டி அவர் குரலை கிண்டல் பண்றதுன்னு படம் முழுக்க  இப்படியே போகுது.தேவதர்ஷினி,கோவை சரளா ,பட்டிமன்றம் ராஜானு பெரிய பட்டாளமே இருந்தாலும் நம்ம சந்தானமும் சந்தானத்தோட டயலாக்கும் தான் ஹீரோ.
ஆனா நேரம் போனதே தெரியாம வயிர் வலிக்க சிரிக்கலாம்.செம எண்ட்டர்டெயின்மெண்ட் .
எல்லாம் தன்னை பாத்து கிண்டல் பண்றாங்க சிரிக்குறாங்கனு  தெரிஞ்சும் கூச்சப்படாம
பவர் நடிச்சுருக்கார் .நெஜமா அதுக்கும் ஒரு தில்லு வேணும்ங்க.

தமன் மியூசிக்ல பாட்டு எல்லாம் நல்லாவே இருக்கு.கானா பாட்டு வரில கூட சிரிச்சு சிரிச்சு வயிர் வலிக்குதுங்க.

ஆனா சிம்பு ரெண்டு சீன்ல வராருங்குறதுக்காக,சிம்புவை கடத்த தமிழ் நாட்டுல இருக்குற ஒரே ஆளு why this kolaveri di-னு   இன்னோர் ஹீரோவை வில்லன் மாதிரி  ஆக்கி இருக்குறது என்ன நியாயமோ?

நடுவுல கொஞ்சம்  பக்கத்த காணோம்.
கிரிக்கெட் விளையாடும்போது கீழ விழுந்து டெம்ப்ரவரி மெமரி லாஸ் ஆகிடுது பிரேம் குமாருக்கு(விஜய் சேதுபதி).என்ன கொடுமைனா இன்னம் ரெண்டு நாளுல அவருக்கு கல்யாணம்.சமீபத்துல நடந்தது எல்லாம் மறந்துபோக தான் காதலிச்சு
கல்யாணம் பண்ண போற தனலட்சுமி (காயத்ரி)-ஐயும் மறந்துடுறாறு பிரேம்.

இந்த உண்மைய மறச்சு எப்படி பிரேமுக்கு அதே நாளுல அதே பொண்ணோட பிரேமோட நண்பர்கள் பகவதி(பகவதி பெருமாள் ),பாலாஜி(ராஜ்குமார்),சரஸ் (விக்னேஸ்வரன்) எப்படி கல்யாணம்பண்ணிவைக்குறாங்க ,பிரேமுக்கு பழசு எல்லாம் நியாபகம்
வந்ததாங்குறதுதான் கதை.

விஜய் சேதுபதி,பகவதி பெருமாள்,ராஜ்குமார்,விக்னேஸ்வரன்,காயத்ரி மற்றும் எல்லாருமே நல்லா நடிச்சு இருக்காங்க.விஜய் சேதுபதிக்கு ஒரு 4 இல்ல 5 டயலாக் தான் படம் முழுக்க திரும்ப திரும்ப சொல்ற மாதிரி அமைஞ்சி இருக்குனாலும் நல்லாவே நடிச்சு இருக்கார்.சொன்னதயே திரும்ப திரும்ப சொல்லும்போது அவரோட நண்பர்கள் குடுக்குற ரியக்ட்ஷன் சிரிப்ப வரவைக்குது.ரெண்டரை மணி நேரமும் இதே மாதிரி போகுறதால நமக்கு போர் அடிக்குறது என்னவோ உண்மைதான்.

படத்தோட முடிவுல இது ஒரு நிஜக்கதை .இப்படி ஒருத்தருக்கு ஆனது அதை தான் படமா எடுத்து இருக்கோம்னு ஸ்லைட் போடும் போது அந்த நண்பர்களோட நிலமை நமக்கு புரியுது.

நீ தானே என் பொன்வசந்தம்:
சின்ன வயசுல இருந்து நித்யாவும்(சமந்தா),வருணும்(ஜீவா) நண்பர்க .நித்யா பணக்கார பொண்ணு,வருண் ஒரு மிடில் கிளாஸ் பையன். ஒரு சின்ன சண்டைல பிரியுறாங்க மறுபடியும் ஹயர் ஸ்டடீஸ்ல பாக்குறாங்க பழைய சண்டை சமாதானம் ஆகுது மறுபடியும் நண்பர்களாகுறாங்க பள்ளி பருவ காதல் ரெண்டுபேருக்குள்ளையும் வருது ஆனா அந்த வயசுக்குரிய சின்ன சின்ன சண்டைல பிரியுறாங்க மறுபடியும் கல்லூரியில் பாக்குறாங்க சமாதானம் மறுபடியும் காதல்

தன் குடும்ப சூழ்நிலையால ,தானும் தன் குடும்பத்துக்கு ஏதாவது செய்யணும்னு முடிவு பண்ணி மேல MBA படிக்க எக்ஸாமிற்கு தயாராகுராறு வருண்.நித்யாவை விட்டு  கொஞ்சம் கொஞ்சம் விலகுராறு.MBA படிக்க வேற ஊருக்கு வருண் போகபோறாருனு தெரிஞ்சதும் நித்யா தானும் வரேன் ஒன்னா  தங்கலாம்னு சொல்ல அதுக்கு மறுத்துடுராறு வருண்.தன்னை விட்டு விலகரதை  உணரும் நித்யா அழறாங்க வேண்டாம் விட்டுடு என்னைனு  சொல்ல மறுபடியும் பிரியுறாங்க.
மூணு வருஷத்துக்கு அப்பறம் வருண் MBA படிச்சுட்டு நல்ல வேலைல சேந்ததும் நித்யாவை பாக்கணும்னு நினைக்குறாரு.நித்யா சுனாமியால பாதிக்கப்பட்ட ஒரு ஊருல அங்க இருக்குற பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் கட்டி தர பொறுப்பையும் அதுவரை அந்த குழந்தைகளுக்கு பாடம்  சொல்லிதர பொறுப்பையும் ஏத்துகிட்டு அதை செஞ்சுகிட்டும் இருக்காங்க. வருணை பாத்ததும்,பேச மறுக்குறாங்க நித்யா.எல்லாத்தையும் விட்டுட்டு வருண் வர சொல்ல ,தன்னால இதை பாதியில விட்டுட்டு வரமுடியாதுன்னு நித்யா சொல்றாங்க. நித்யா சமாதானம் ஆகலைனதும் வருண் திரும்ப போயிடுறாரு.
வருணை பாக்கணும்னு நித்யா முடிவு பண்ணி பாக்க போறப்போ ,தனக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்னு வருண் சொல்றாங்க.இதை கேட்டு அழுகுற நித்யா,கல்யாணத்துக்கு முதல் நாள் வருணை பாக்க போறாங்க.ரிசப்ஷன் முடிஞ்சு கல்யாணத்துக்கு 3 மணிநேரத்துக்கு முன்னாடி வருணனை பாத்து பேசுறாங்க.வருணுக்கு ஏற்கனவே நிச்சயம் ஆனா பெண்கூட கல்யாணம் ஆனதா இல்ல நித்யாவை கல்யாணம் பண்றாரானு கிளைமாக்ஸ்.

ஈகோ-வால பிரியுர இந்த காலத்து காதலை சொல்லி இருக்கார் கௌதம்.நச்  டயலாக்ஸ்.

ஒரு ஒரு தரமும் வருண் சண்ட போட்டுட்டு பிரிஞ்சிட்டு கடைசியா நித்யாவை அழவைக்குரதுல அப்படி என்ன சந்தோஷமோ கௌதம் சார்க்கு .

ஜீவாவோட நடிப்பு எப்பயும் போல நல்லா இருக்கு.

சமந்தா அழகு மட்டும் இல்ல நடிக்கவும் தெரியும்னு காட்டி  இருக்காங்க.அழகான சிரிப்பு,சின்ன சின்ன வெக்கம்,எதிர்பார்ப்பு,ஆச்சர்யம்,கோவம்,அழுகைன்னு பொண்ணு நல்லாவே முன்னேறி இருக்காங்க நடிப்புல.

சந்தானம் காமெடி மத்த படங்களை விட இதுல கொஞ்சம் சுருதி கம்மியாதான் இருக்கு.சார்,உங்க கிட்ட இருந்து நாங்க இன்னம் நெறையா எதிர்பாக்குறோம்


கௌதம் சார் ,என்ன ஆச்சு உங்களுக்கு உங்க விண்ணை தாண்டி வருவாயா படத்தை நீங்களே சந்தானத்தை வச்சு கலாய்ச்சி இருக்கீங்க.


படம் ஒரு மியூசிகல் ட்ரீட் இளையராஜா சார்னால.ராஜா சாரின் ஒரு ஒரு பாட்டும் ஒரு ஒரு இதம்.சொர்க்கம் மாதிரி இருக்கு ராஜா சாரின் பாடலை கேக்க கேக்க . 
இந்த ஜெனரேஷன்க்கு,ரொமாண்டிக்கை  ரசிக்குறவங்களுக்கு  கண்டிப்பா படம் பிடிக்கும்.

கும்கி:

காட்டு யானையை அடக்குற கும்கி யானையாக ஒரு ரெண்டு நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ண தன சாதுவான கோவில் யானையை(மாணிக்கம்) ,தன் மாமா (கோத்தலி )-ஐயும் கூப்பிட்டுகிட்டு 200 வருஷம் கட்டுப்பாட்டோட இருக்குற ஆதிகாட்டுக்கு போறாரு பூமன்(விக்ரம் பிரபு).அங்க கிராம தலைவர் மகளான அல்லி (லக்ஷ்மி மேனன்)-ஐ கண்டதும் காதலிக்க ஆரம்பிக்குராறு பூமன்.

அதனாலையே ரெண்டுநாலுல திரும்பிடலாம்னு நினச்சு வந்த தன் மாமாவும் வேற வழி இல்லாம தங்குராறு.கும்கி யானையை வர வேண்டாம்னு சொல்லி தன் யானைக்கே கும்கி பயிற்சி குடுக்க ஆரம்பிக்குறார்.பயிற்சியில திணறி திக்குமுக்கு ஆகுது மாணிக்கம் .தன காதலை அல்லி கிட்ட பூமன் சொல்லிடுறாரு.
முதல்ல மறுக்குற அல்லி அப்பறம் சம்மதிக்குறாங்க.ஆனா 200 வருஷ கட்டுப்பாட்டை மீரா முடியாம பிறியுறாங்க .அந்த ஊரையே நாசம் செஞ்ச காட்டு யானை (கொம்பன்)ஐ கடைசியில அழிக்குது மாணிக்கம்.ஆனா அதுக்காக தன் உயிரையே குடுத்துடுது மாணிக்கம்.பூமன் தன காதலையும் இழந்து ,தன் யானையையும் இழந்து,தன மாமாவையும் இழந்து திரும்புறார்.
அடப்பாவி ..உன் காதலுக்காக எல்லாரையும் இப்படி சாகவச்சுட்டியேனு நாம திட்டிக்கிட்டே இருக்கும் போது சரியா அதே டயலாக் -ஐ பூமனும் பேசுறாரு.

ஹீரோ விக்கம் பிரபு முதல் படம் அப்படிங்குற நினைப்பை நமக்கு வரவைக்காத அளவுக்கு ரொம்ப நல்லாவே நடிச்சு இருக்கார்.(நடிகர் திலகத்தின் பேரனாச்சே பின்ன).

லக்ஷ்மி மேனன் அச்சு அசல் கிராம பொண்ணாவே இருக்காங்க.நடிக்கவும் நல்ல ஸ்கோப் .அதை சரியாய் யூஸ் பண்ணியும் இருக்காங்க.

மாணிக்கமா வர யானையின் நடிப்பு சூப்பர்..

தம்பி ராமையா ,அவர் பாடி லாங்க்வேஜ் ,மைண்ட் வாய்ஸ் டயலாக் மூலமா படம் முழுக்க அசத்துறார் .

இமானோட இசைல பாட்டு எல்லாம் நல்ல இருக்கு.ஐயைய்யோ சாங் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு கூட.

பிரபு சாலமன் மறுபடியும் ஒரு நல்ல படாத குடுத்து இருக்கார்.ஆனா சார்,ஏன் சார் உங்க படத்துல சந்தோஷமான முடிவே தரமாட்டீங்களா?சோகமாவே எங்கள வீட்டுக்கு அனுபுரீங்களே .

சுகுமாரோட ஒளிப்பதிவுல ,அந்த அழகான பச்சை பசேலுனு காடாகட்டும்,அழகான அந்த பெரிய அருவியாகட்டும் கண்ணுக்கு அவ்ளோ இதமா இருக்கு.

 ---கும்கி ஒபனிங்க்லாம் நல்ல இருக்கு பினிஷிங்க் சோகமா இருக்கு ...

ஜப் தக் ஹை ஜான்(ஹிந்தி):இந்தியன் ஆர்மியில் பாம் டெப்யூஸ் பண்ணற ஆபீசர்-ஆக வேலை செய்றார் சமர்(ஷாருக்கான்).டிஸ்கவரி சேனலில் ஜெர்னலிஸ்ட் ஆக இருக்கும் அகிரா(அனுஷ்கா ஷர்மா) ,தண்ணிக்குள்ள மூழ்கி போற நிலைல இருக்கும் போது சமரால காப்பாத்த படுறாங்க.அவங்களுக்கு தன்னோட கோட்-ஐ போர்த்தி அனுப்புறாரு சமர்.அந்த கோட்-ல் ஒரு டைரி இருக்க அத படிக்க ஆரம்பிக்குறாங்க அகிரா.அது சமரோட டைரி.சமரின் பிளாஷ் பாக் விரியுது .

லண்டனில் ஸ்ட்ரீட் சிங்கர் ஆக ,ஹோட்டலில் சர்வர் ஆக இப்படி பல வேலை செஞ்சு வாழும் சமருக்கு மீராவை(கத்ரீனா கைப்) கண்டதும் காதல் வருது. மீரா பணக்கார பொண்ணு.ஜீசஸ் கிட்ட எல்லாத்தையும் சொல்லி புலம்புற பேசுற பொண்ணு.

மீராவுக்கு வேற ஒருத்தரோட நிச்சயம் ஆகிடுது.அதற்கு அப்பறம் மீராவோட பழகுற சந்தர்ப்பம் சமருக்கு கிடைக்குது .சமரின் இசையை பலதரம் மீராவும் கேட்டு இருக்காங்க.அதனால தனக்கு இந்துஸ்தானி இசையை சொல்லி தர சொல்றாங்க .அதுக்கு சமர் மீராகிட்ட தனக்கு இங்கிலீஷ் சரளமா பேச சொல்லி தர சொல்றாரு.இப்படி பழக ஆரம்பிக்குற மீரா ஒரு கட்டத்துல சமரை காதலிக்க ஆரம்பிக்குறாங்க.

அமர் ஒரு விபத்துல சிக்கவே,அமர் பிழைச்சுட்டா தன்னோட காதலை விட்டு குடுத்துடுறதா,அதுக்கு அப்பறம் சமரை பாக்குறதே இல்லைனும் வேண்டிகிறாங்க.அடிபட்ட தன்னை மீரா பாக்க வர,அப்படியே தன்னோட முடிவையும் சொல்றாங்க.அது கேட்டு கோவப்படுற சமர் சாவை எதிர்நோக்கி பாம் டெப்யூஸ் பண்ணற ஆபீசர்-ஆக வேலைக்கு சேருறாரு.

இத படிச்சு தெரிஞ்சுக்குற அகிரா ,சமரை பத்தி இரு டாக்குமெண்டரி மூவி எடுக்க ஆர்மிக்கு வராங்க.முதல்ல கெடுபிடியா ஒத்துழைக்க மறுக்குற சமர் போக போக சம்மதிக்குராறு.ஒரு கட்டத்துல அகிரா சமரை காதலிக்குரதா சொல்ல சமர் தான் இன்னம் மீராவை தான் விரும்புறதா சொல்லி மறுத்துடுராறு.

அகிராவின் டாக்குமெண்டரி மூவி பாத்துட்டு டிஸ்கவரி சேனலில் ஹெட் ,அகிராவை பாராட்டி டாக்குமெண்டரி மூவியை ரிலீஸ் செய்றதா சொல்றாங்க.ஆனா அதுக்கு சமரை கூப்பிட்டு லண்டன் போகவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகுறாங்க மீரா.
முதல்ல மறுக்குற சமர் அப்பறம் அகிராவுக்கு அதுதான் வாழ்க்கை,எதிர்காலம் எல்லாம்னு புரிஞ்சுகிட்டு சம்மதிக்குறார்.சந்தோஷத்துல குதிக்குற அகிராவை விபத்துல இருந்து காப்பாதபோக சமர் விபத்துல சிக்கிக்குறார்.பழசு எல்லாம் மறந்து போகுது.முன்னாடி நடந்த விபத்துவரை மட்டும் தான் நியாபகம் இருக்கு.இடையில பத்துவருஷம் என்ன நடந்ததுன்னு அவருக்கு தெரியலை.அகிரா யாருன்னு தெரியலை.அவர் நியாபகத்துல இருக்குறது எல்லாம் மீரா மீரா மீரா மட்டுமே.

மீராவை பாக்க அகிரா போறாங்க.முதல்ல மீராக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு நினைக்குறாங்க அகிரா .அப்பறம் மீரா தனக்கு கல்யாணம் ஆகலைன்னு சொல்லி தான் இன்னம் சமரை தான் விரும்புறதா சொல்றாங்க.

மீரா தன்னோட சத்தியத்தை மீறினான்களா?சமருக்கு கோவம் போனதா?ரெண்டுபேரும் ஒன்னு சேந்தாங்கலானு கிளைமாக்ஸ்ல சொல்றாங்க.

ஸ்ட்ரீட் சிங்கர் ஆகா எல்லாரையும் சிரிக்க வச்சு கலகலப்பா வரும்போதும் சரி,ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ஆகா நெஞ்சை நிமித்திகிட்டு வரும்போது சரி ஷாருக் ஷாருக் தான்.

துறுதுருதுறுனு வெள்ளை முயல் குட்டி மாதிரி அனுஷ்கா ஷர்மா ,அழகான தேவதையா கத்ரீனா..எல்லாருமே அழகான அளவான நடிப்பு.

யாஷ் சோப்ரா அவர்களின் கடைசி படம்.அழகான காதல் கதை.

எ.ஆர் ரஹ்மானின் இசையில் ஜியாரே பாட்டு டான்ஸ் ஆடவக்குதுனா ,சான்ஸ் பாட்டு ஸ்ரேயா கோஷலின் குரலில் கிறங்கடிக்குது.

துப்பாக்கி :
இராணுவத்துல வேல செய்ற விஜய் லீவுக்கு தன் சொந்த ஊரான மும்பைக்கு வராரு .அங்க தற்செயலா ஒரு குண்டுவெடிப்பு நடக்குது .அவன கண்டு பிடிச்சு போலீஸ்-இல் ஒப்படைக்குறாரு .அவன் மூலமா மும்பைல 12 இடத்துல குண்டுவெடிப்பு நடக்கபோகுதுன்னு கண்டுபிடிக்குறாரு .அதை எப்படி தடுக்குராறு,அதற்கு காரணமான ஹெட்-ஐ எப்படி அழிக்குறாருங்கறதை ரொம்ப சுவாரஸ்யமா ரொம்ப பரபரப்பான காட்சிகளில் சொல்றாரு A .R முருகதாஸ் .

எப்பவும் பாக்குற விஜய் படம் மாதிரி இல்லாம இந்த படத்துல விஜய் தன ஸ்டைல்,பாடி லாங்குவேஜ்,டயலாக் டெலிவரி,டான்ஸ் ,சண்ட போடுற ஸ்டைல் எல்லாம் மாத்தி இருக்காருன்னு தான் சொல்லணும்.

முதல் குண்டுவெடிப்பு நடக்கறதுல ஆரம்பிச்சு அடுத்து எங்க எங்க வெடிக்கபோகுது ,யார் செய்யபோறா,ஒரே நேரத்துல அத எப்படி தடுக்கறது,இது மூலமா இந்த வேலைக்குலாம் உரிய ஹெட் தன்னை எப்படி கண்டுபிடிப்பான் அவன் தன்னை கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி தான் எப்படி அவன கண்டுபிடிக்கறது ,எப்படி அவனையும் அவன் திட்டத்தையும் அழிக்குறதுனு வரைக்கும் ரொம்ப சுவாரஸ்யமா , பரபரப்பா நகருது படம்.

விஜய் இந்த மாதிரி ஒரு படத்துல மறுபடியும் நடிக்க முடியுமானு தெரியல.அவரோட பெஸ்ட் படத்துல இதுவும் ஒண்ணுனு சொல்லலாம்.மனுஷன் அவ்ளோ ஸ்மார்ட்-ஆ இருக்கார்.
'கிக்பாக்ஸர்'-ஆக காஜல் அகர்வால் நடிச்சு இருக்காங்கனு சொன்னதுல இருந்து நிறையா எதிர்பார்போட பாத்தா அந்த பேருக்காக ஒரே ஒரு சீன் ,ஒரே ஒரு பாட்டுல மட்டும் தான் 'கிக்பாக்ஸர்' ருங்குர ரோலுக்கு சம்மந்தம் இருக்கு.இதுக்கு அவங்கள எப்பயும் போல ஒரு காலேஜ் படிக்குற பொண்ணா மட்டும் காட்டி இருக்கலாம்.மத்தபடி எல்லா பெரிய ஹீரோ படத்துல வர ஹீரோயின் மாதிரி பாட்டுக்கு முன்னாடி சீன்ல வராங்க.என்ன ஒரு வித்தியாசம்னா காஜல் அகர்வால் வர்ற காட்சி தனியா திடீர்னு சேத்த சீன் மாதிரி இல்லாம படத்தோட சேந்தே அதற்க்கு முந்தைய சீனின் தொடர்ச்சியாகவே வருது.எப்படியும் காஜல் பாத்ததும் இப்போ ஒரு பாட்டு வரபோகுதுன்னு நமக்கு தெரிஞ்சிடுது .
சத்யன் விஜய்யோட நண்பரா படம் முழுக்க வராரு.அவருக்கு ஸ்கோப் குடுத்து இருக்காங்க.
பாட்டு எல்லாமே நல்லா இருக்கு ஆனா விஜய்யோட பாட்டுன்னு சொல்றதுக்கு ஏதோ ஒன்னு கொஞ்சம் குறையுற மாதிரி ஒரு எண்ணம் .

ஜெயராமை ஏன் இப்படி வேஸ்ட் பண்ணி இருக்காங்கனு தெரியல.எந்த ஸ்கோப்-ம் இல்ல அவருக்கு படத்துல .

வில்லனா வர்ற வித்யுத் ஜாம்வால் கூட அவ்ளோ ஸ்மார்ட்-ஆ இருக்கார்.வழக்கம் போல சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு நீட் .

               தீபாவளி துப்பாக்கியா இல்லாம நிஜ துப்பாக்கியாக வெடிக்குது இந்த துப்பாக்கி..

மாற்றான்
ஒட்டி பிறந்த இரட்டையர்கள் ,அகிலன் விமலன்.இரண்டுபேருக்கும் சேர்த்து ஒரே ஒரு இதயம்.விமலனுக்கு எல்லாமே ஜஸ்ட் லைக் தட், செம ஜாலியான ஆளு,அகிலன் அப்படியே நேர்மாறு, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே-னு சொல்றமாதிரி தப்பு யார் பண்ணினாலும்  தப்பு தப்புதான்னு தண்டிக்கக் படவேண்டியவங்கனு நினைக்குற ஆளு.தன் அப்பா செய்யும் தவறை கண்டுபிடிக்குற சமயத்துல தன் அப்பாவின் மூலமாகவே கொல்லப்படுறார் அகிலன்.அகிலனின் இதயம் விமலனுக்கு பொருத்தப்படுத்து,  அதுவரை விளையாட்டாவே இருந்த விமலன் அதுக்கு அப்பறம் தான் தன் அப்பாவை பத்தி புரிஞ்சிக்குறாரு.தன் அப்பாவை  மட்டும் இல்ல அதுக்கு காரணமான மொத்த சாம்ராஜ்யத்தையும் அழிக்க முடிவுபண்ணி எல்லாரையும்  அழிக்குராறு.இதுதான் மாற்றான் படத்தோட கதை..

அகிலன் விமலன்-னு ரெண்டு கதாபாத்துரதுல சூர்யா அசத்துறாரு.ரெண்டு பேருக்கும் வேற வேற பாடிலேன்குவேஜ் ,ஸ்டைல்-னு சில சமயத்துல நிஜமாவே ரெண்டு சூர்யா சேந்து நடிச்சிருக்குறாங்கனு தோனவைக்குராறு.  அழகான கஜல் அகர்வால் ட்ரான்ஸ்லேட்டர்-ஆகா படம் முழுக்க வராங்க.பிற்பாதியில உக்ரைனுக்கு போகும்போதும் சூர்யாவுக்கு அங்க இருக்குறவங்களோட பேசுறதுக்கும் அவங்க சொல்றதை சூரியாவுக்கும் (நமக்கும் தான்) சூர்யா சொல்றதை அவங்களுக்கும்னு ட்ரான்ஸ்லேட் பணிகிடே இருக்காங்க..

ஒரு பெரிய துணிச்சலான கதைகளத்தை கே.வி ஆனந்த் எடுத்து இருக்காருனு சொல்லலாம்..உக்ரைன்ல நடக்குற சில காட்சிகள் நம்மால நம்ப முடியாம இருந்தாலும் படத்தோட வேகம் ,சூர்யாவோட நடிப்பும் அதை எல்லாம் நம்மள யோசிக்க வைக்காம நகருது வேகமா.எப்படியும்  ஹீரோ தான் ஜெயிபாருனு நாம எல்லாருக்குமே தெரிஞ்சாலும் அத சுவாரஸ்யமா வித்யாசமான கதை களத்துல  சொல்லி இருக்காரு கே.வி ஆனந்த்.பீட்டர் ஹெய்ன் சண்டைகாட்சிகள் எல்லாமே ரொம்ப நல்ல இருக்கு.'கோ' படத்தோட பாடல் லொகேஷன் அடடா அருமையா இருக்கே எங்க இருந்துதான் இப்படி லொகேஷன் கண்டுபிடிப்பாரோனு பேசவச்சது,அதை எதிர்பாத்து பாடலை பாத்தா பாட்டும் கூட முந்தைய படத்தை நியாபகப்படுத்துது

சில நல்ல விஷயத்தை டெக்னாலஜி கலந்து சொல்லி இருக்காங்க.

                                         மாறுபட்டவன்  இந்த மாற்றான்

'காக் டைல்'(cocktail ) (ஹிந்தி) :'ப்ளே பாய்' -ஆக வாழ்கையை சந்தோஷமாக அனுபவிக்கும்  கவுதம்(சைப் அலி கான்), அவரை போலவே ப்ரண்ட்ஸ்,டான்ஸ்,பாய்ஸ், ட்ரிங்க்ஸ் என்று இருக்கும் வெரோனிகா (தீபிகா படுகோனே),மிகவும் சாதுவாக அடக்கமாக வரும் மீரா(டயானா  பெண்டி) இவங்களுக்குள்ள ஏற்படுற ஒரு முக்கோண காதல் கதை தான் 'காக் டைல்' படம்.

தன் கணவனை தேடி லண்டன்-க்கு போறாங்க மீரா.ஆனா அவரோ மீரா கூட இருக்கமுடியாதுன்னு சொல்லி  விவாகரத்து பண்ணப்றதா சொல்லிடுறாரு.என்ன பண்றது எங்க போறதுனு தெரியாம அழுதுகிட்டு  நிக்கும்போது வெரோனிகாவை சந்திக்குறாங்க.வெரோனிகா மீரா பத்தி கேட்டு ,தன் கூடவே   தன் வீட்டை  ஷேர்  பண்ணிக்க சொல்ல வெரோனிகா  கூட தங்குறாங்க மீரா.

சாப்ட்வேர் என்ஜினியரா லண்டனுக்கு வர கவுதம் ஏர் ஹோஸ்ட்ரஸ்ட்-இல் இறந்து தன்னுடைய பாஸ் வரை யாரையும் விட்டு வைகமாட்டேன்குறார்.ஏர்போர்ட்-இல் மீராவை பார்த்து வழக்கம்போல எல்லா பொண்ணுங்ககிட்டயும் பேசுறது மாதிரி பேச  மீராவோ தன் கணவன் வெயிட்  பண்னறாரு வெளிலனு  சொல்லி தப்பிக்குறாங்க.

ஒருநாள் கவுதம்-ஐ மீரா பாக்க வெரோனிகா-கிட்ட நான் சொன்னவன் இவன்தான்னு சொல்ல ,பாஸ் கூட நடந்துக்கிட்டு இருக்குற மீட்டிங் அப்போ வெரோனிகா, கவுதம்-ஐ களாய்குறாங்க.வெரோனிகா,கவதம் ரெண்டு பேரோட குணங்களும் ஒரே மாதிரி ஒத்துபோக ரெண்டு பேரும் விரும்புறாங்க.ஆனா ரொம்ப சீரியஸ்-ஆ எல்லாம் இல்ல.கவுதமின் அம்மா(டிம்பில் கபாடியா) கவுதமுக்கு பொண்ணு பாக்குறதா சொல்ல தான் ஏற்கனவே ஒரு பொண்ணை பாதாட்சுனு கவுதம் சொல்ல கவுதமின் மாமா ஒரு பை மேல போய் ரெண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்காங்கனு   பொய் சொல்லாரு.

இதை உண்மையாக்குற விதமா வெரோனிகா வீட்டை கவுதமும் ஷேர் பணிக்குறார்.மூணு  பேரும் நல்ல நண்பர்களா அதே சமயம் வெரோனிகா, கவுதம் காதலர்களா இருக்காங்க.
கவுதம் அம்மா ,கவுதமை பாக்க அந்த வீட்டுக்கு வர ,அரை குறையா டிரஸ் போட்டுக்கிட்டு இருக்குற வெரோனிகா-வை தன் காதலினு சொன்ன ஒதுக்க மாட்டாங்கலோனு மீராவை தன் காதலின்னு சொல்லறாரு..தன் அம்மா திரும்ப ஊருக்கு போகுரவரை மீரா உடன் அதிக நேரம் இருக்க வேண்டிய  கட்டாயம் ஏற்படுது.அந்த சமயத்துல மீராவின் குணங்கள் ரொம்ப பிடிச்சுபோக மீராவுடனான  தன் உண்மையான காதலை உணருராறு.மீராவிற்கும் பிடிச்சாலும் வெளில காடிக்கமா இருக்காங்க.ஒருகட்டத்தில் கவுதம் வெரோனிகா கிட்ட மீராவுடனான தன் காதலை சொல்ல அப்போ  சந்தோஷமா ஏத்துக்குற  வெரோனிகா ஒருகட்டத்துல கவுதமை தான் சீரியஸ்-ஆகா காதலிப்பதை உண்ருறாங்க.இதனால் மீராவுக்கும் ,வெரோனிகாவிற்கும் இருக்குற நட்புல விரிசல் விழுது.மீரா வீட்டை விட்டு போறாங்க.இதை தெரிஞ்சுக்குற கவுதமும் வீட்டை விட்டு போறாரு.

இந்த சமயம் மீராவா  தேடிவர மீராவின் கணவன்கூட மீரா போறாங்க.அவர் கூட தான் இருக்கறதை பாத்தா கவுதம் தன்னை மறந்து வெரோனிகா கூட இருப்பாருன்னு நினச்சு அவர் கூட அன்பா இருக்கிற மாதிரி நடிக்குறாங்க.

எதிர்பாராத விதமா வெரோனிகா-விற்கு விபத்து ஏற்பட ,வெரோனிகா-கூடவே இருந்து அவரை கவனிச்சுகிறார்   கவுதம்..கவுதம் சந்தோஷமா இருக்குறமாதிரி நடிக்குறாரு மீராவை எந்த அளவுக்கு காதலிக்குறாருனு   புரிஞ்சுக்குற வெரோனிகா தன் காதலை விட்டுக்குடுக்குறாங்க.தன் மனசுல கவுதம் தான் இருக்காருன்னு சொல்லி தன் கணவனை விட்டு இந்தியாவுக்கு போய்டுறாங்க மீரா.மீராவின் கணவன் மூலமா தெரிஞ்சுக்கிற வெரோனிகா,கவுதம் ரெண்டு பேரும் இந்தியா போறாங்க மீராவை பாக்குறாங்க கவுதம் தன் காதலி மீராக்கிட்ட சொல்ல மீரா அதை ஏத்துக்க மரபையும் 3 பேரும் நண்பர்கள் ஆகுறாங்க.

இந்த படத்தோட கதை நம்ம தமிழ் நாட்டுக்கு செட் ஆகுமான்னு சத்தியமா எனக்கு தெரியலை.

இந்த  படத்துல எல்லாருமே ரொம்ப இயல்பா நடிச்சு இருக்காங்க.பொதுவாவே பாலிவுட் படங்களில் எல்லாரும் இயல்பாதா நடிப்பாங்க .சைப் -வோட  குறும்பு தனமான நடிப்பும் சரி, வெரோனிகா-வா வர தீபிகாவின் நடிப்பும்  சரி (எந்த டிரஸ் போட்டாலும் அவ்ளோ அழகா இருகாங்க ),அமைதியா நடிச்சிட்டு போற டயானா-வும்  சரி எல்லாருமே ரொம்ப ரொம்ப இயல்பா நடிச்சி இருக்காங்க. 


முகமூடி:


அர்த்த ஜாமத்துல ,பெரிய வீடா பாத்து அங்க இருக்குற நகையை மட்டும் முகமூடி போட்டுக்கிட்டு  கொள்ளை அடிக்குறது  ,அதை யார் பாத்தாலும் அவங்களை காலி பண்ணிட்ரதுன்னு இருக்கு ஒரு கூட்டம் .பல   ஊர்களில் கொள்ளை அடிக்குற இவங்க சென்னைல கொல்லையைடுக்குறதும் கொலை பண்றதும் னு இருக்குறாங்க.இவங்களை பிடிக்க  ஒரு தனி படை போலீஸ், அதுக்கு  தலைவர் நாசர்.

இவர் தான் ஹீரோ இவர் தான் வில்லன்னு தெரிஞ்சதால பெரிய எதிர்பார்ப்பு இல்ல ..

அனேக  தமிழ் பட ஹீரோ மாதிரியே ஜீவாவும் வேல வெட்டி இல்லாத குங்க்பு (கத்துக்குற) மாணவரா வராரு .  வழக்கம் போல ஹீரோ கூட 4 நண்பர்கள். குரு பக்தி அதிகம் உள்ள மாணவர்கள்  இவங்க எல்லாம்.தன் குருவை பத்தி யாரும் தப்பா பேச விட மாட்டாங்க.எப்பயும் போல வேல வெட்டி இல்லாத மகனை சதா திட்டும் அப்பா,அப்போ கண்டிப்பா வீட்ல வேற யாராவது சப்போர்ட் பண்ணுவாங்களே னு தானே கேக்குறீங்க.கரெக்ட் மகனை சப்போர்ட் பண்ணும் அம்மா.

நான் ப்ரூஸ்லீ மாதிரி ஆகணும் னு சொல்லற ஜீவாகிட்ட ,அவங்க மாதிரி ஆகணும் இவங்க மாதிரி ஆகணும் -னு  சொல்லாம நீ என்னவாகனும்னு நீயே யோசின்னு சொல்ற தாத்தா.

குங்க்பு மாஸ்டர்-ஆ ரொம்ப நாளுக்கு அப்பறம் ரீ- என்ட்ரி  குடுத்து இருக்கார் செல்வா.பணம் வாங்காம குங்க்பு சொல்லிக்குடுக்குற மாஸ்டர் வீட்டை விட்டு காலி பண்ண சொல்லறதை பாத்து students சேந்துடுவாங்க இந்த மாசம்எப்படியும் பணம் குடுதுடுறோம்னு ஜீவா சொல்ல அதுக்காக மீன் மார்க்கெட் -இல் இருக்குறவங்களை குங்க்பு கத்துக்க கூபிட்றது, அவங்களை சண்டைக்கு கூப்பிட்டு  அவங்ககூட போட்டி வச்சு நான் ஜெயிச்சா நீங்க எங்க மாஸ்டர் கிட்ட கத்துக்கணும் நீங்க ஜெயிச்சா  காலம்பூரா உங்களுக்கு வேல செய்றேன்னு சொல்லி மாணவர்களை சேக்குராறு.

மார்க்கெட்-இல் நடக்குற சண்டையை பாத்து எல்லாரும் பயந்து ஓட 2 கால் மட்டும் சடையை நோக்கி ஓட-னு அழகான அறிமுகம் குடுக்குறாங்க ஹீரோயின் பூஜாக்கு.வழக்கமான படங்கள் மாதிரி இல்லாம ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும் மிஷ்கின் அவர்களின் படங்கள்ல-னு எதிர் பாத்தா ஹீரோ காதலிக்கரதுக்காகமட்டும் தான் ஹீரோயின் வராங்க.

மார்கெட் சண்டைல தன்னை போலீஸ்  -இல் போட்டு குடுத்த பொண்ணு யாருன்னு பாக்க ஜீவா போறதும்,பூஜாவின் மேல் கண்டதும் காதல்னு  ஆகுறதும்,தன்னை யாருன்னு காட்டாம பூஜாவை impress பண்ண superman மாதிரி dress  பண்ணிட்டு போய் பலூன் பறக்கவிட்றதும், அந்த சமயத்துல போலீஸ் வண்டியை பாத்து ஜீவா  கிட்ட கொலைகாரங்க 2 பேர் சிக்குறதும் போலீஸ் கிட்ட இருந்து தப்பி ஓடுற அவங்களை superman dress  -ஓட துரத்தி போலீஸ் கிட்ட பிடிச்சு குடுக்குறார் ஜீவா.உன் பேர் என்னனு போலீஸ் கேக்க முகமூடி னு சொல்லிட்டு போறார் .

இப்படி  முதல் பாதி  இதுதான் நடக்க போகுதுன்னு நமக்கு தெரிஞ்சாலும் சுவாரஸ்யமா நகர்த்திகிட்டு போகுற மிஷ்கின் 2 -வது பாகத்தை ஏன் சரியா கவனிக்கலைன்னு தெரியலை.இதுவே ஹாலிவுட்-இல் பண்ணினா ஒத்துபீங்க நம்மாளுங்க பண்ணினா என்ன இது கப்சா னு சொல்வீங்கன்னு கேக்கலாம்.அதுக்காக குங்க்பு மாஸ்டர் மூலமா ஜீவாவின் நண்பர்களை விசாரிக்கும் போலீஸ் ,கமிஷனர் பொண்ணு பூஜாவை லவ் பண்றதால் தான் அந்த வீட்டுக்கு அப்படி டிரஸ் பண்ணி போனான்னு ஒன்னதுக்கு அப்பறமும் இறுதிவரைக்கும் முகமூடி யாருன்னு போலீஸ் -கு தெரியாது முகமூடியாலதான் குழந்தைங்களை காப்பாத்த  முடியும்-னு  சொல்றது எப்படி எதுக்க  முடியும்?

நரேன் வில்லன் அவ்ளவுதான் தவிர நடிக்க பெரிய scope  இல்ல .அவர் spiderman ,superman ,iron man ,பட்டியல்ல முகமூடினு சொல்லும் போது எல்லாம் நமக்கே பொறுமை போய்டறது என்னவோ உண்மைதான்.

சண்டை காட்சி எல்லாம் நிஜமாவே ரொம்ப அருமையா இருக்கு
கே அவர்களின் இசையில் வாயை மூடி சும்மா இருடா பாட்டு நம்மள மறுபையும் மறுபடியும் முனுமுனுக்கவைக்குது .2 பாடல்கள் தான் படத்துல வருது.
2 -வது பாதிலையும் மிஷ்கின் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தா இன்னம் நல்லா இருந்து இருக்கும்..ஹாலிவுட்-க்கு இணையாக எடுக்க ஒரு மிக சிறிய முயற்சினு மட்டும்  தான் சொல்லமுடியும்.

மிஷ்கின் படம்னு எதி பார்த்து போனா ஒரு சின்ன ஏமாற்றம் தான் மிஞ்சுது.

கலகலப்பு:

படத்தோட பேருக்கு ஏத்த  மாதிரி படம் முழுக்க கலகலப்பவே இருக்கு.லாஜிக் மட்டும் பாக்காம படம் பாத்தோம்-னா  ரெண்டரை மணிநேரம் எல்லா டென்ஷன்-யும்  மறந்து ரிலாக்ஸ்-ஆ இருக்கலாம்..கதை முழுக்க கும்பகோணத்துல நடக்குது.
முதல் பாதி முழுக்க சிவா கலக்குறார்.மகாநதி படத்துல சுகன்யா அப்பா பேர் என்ன-னு விமல் கிட்ட கேக்க தெரியாது என் இப்படி சம்மந்தம் இல்லாத கேவியலாம் கேக்குறன்னு விமல் கேக்க அப்படிதான் கேள்வி கேக்குறது ஈசி பதில் சொல்றது கஷ்டம்னு சொல்ல அரங்கமே சிரிப்பு அதிருது.

அஞ்சலி handbag -ஐ திருடிக்கிட்டு போறாங்க-னு நெனச்சு அவங்கள தொரத்திட்டு போய் அடிவாங்குற சீன் ஆகட்டும்,இளவரசு ஒரு ஒரு கெட் அப்-ல் போலீஸ்-கு பயந்து நடமாடுறதும் சிரிப்ப control பண்ண  முடியலை.போதாததுக்கு second  half -இல் நம்ம சந்தானம் entry குடுத்து படம் endcard போடறவரைக்கும் தியேட்டர் முழுக்க சிரிப்பு சத்தம் தான்.

அதுவும் அஞ்சலியை கடத்திகிட்டு போற சீன்-இல் சந்தானம்,விமல் ,மனோபாலா-க்கு இடைல நடக்குற அந்த சேசிங் சீன் சிரிச்சு சிரிச்சு வயிர் வலியே எடுத்துக்குது.கண்டிப்பா லாஜிக் பாக்காம எத்தன தரம் வேணும் நாளும் படத்த பாக்கலாம்.எப்படி சோகத்துல இருக்குறவங்களும் இந்த படத்த பாத்தா சொகத்த மறந்து சிரிப்பாங்க.

                                                           --கலகலப்பு  family  entertainer


 ஒரு கல் ஒரு கண்ணாடி : 

என்ன கதையா?அப்படினா?அதுலாம் நீ ஏன் கேக்குற?அதுலாம் கேக்ககூடாது !! தப்பு !......வந்து இரண்டரை மணி நேரம் குடும்பத்தோட  உக்காந்து சந்தோஷமா எல்லாத்தையும் மறந்து சிரிச்சுட்டு போங்க படத்த பாத்து.

உதயநிதி முதல் படத்துலையே சந்தானத்துக்கு ஈடுகொடுத்து நடுச்சு இருக்கார்..ஹன்சிகா அவ்ளோ அழகா இருக்காங்க..ஹன்சிகாவை உதயநிதி எப்படி காதலிக்க வைக்குறார்.கடைசில ஹன்சிகாவும் உதயநிதியும் ஒன்னு சேந்தான்களானு (அதெப்படி hero heroine சேராம கிளைமாக்ஸ் சொல்றதுதான் படம்.
இந்த படத்துல சந்தனத்துக்கு ஜோடி குடுத்துடாங்க.ஆனா என்ன கடைசியா பிரிச்சுட்டாங்க.அடை தேன் அடை-னு சந்தானம் சொல்றதும்,காதல்லயும் தோத்து,friendship -ளையும் தோத்து சந்யாசியாக ஆஸ்ரமத்துல சாமியாரோட speech கேக்குறது எல்லாம் சிரிப்பு வெடி தான்.பார்த்தாபார்த்தா-னு படம் முழுக்க சந்தானத்தோட ரகளை தான்.

innocent அம்மாவா வராங்க சரண்யா.அவ்ளோ அழகான நடிப்பு.( இப்படி எல்லாம் அம்மாவா படத்துல தான் பாக்க முடியும்).அதுவும் அப்பா என் கிட்ட பேசிட்டாரு ,அம்மா மறுபடியும்  fail ஆகிட்டேன்  சரவணா  சொல்ற scene எல்லாம் சூப்பர் acting .ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாட்டு எல்லாம் நல்ல இருக்கு..ஆண்ட்ரியா ,சினேஹா,ஆர்யா-னு நெறைய ஸ்டார்ஸ் வராங்க ..அப்போ உங்க அடுத்த படத்துல உதயநிதி ,ஹன்சிஹா guest appearance தருவாங்களா சார்??ராஜேஷ் சார் எப்போ சார் இத guest appearance எல்லாம் stop  பண்ண போறீங்க.

ஆனா கதையே இல்லாம ,கோர்வையான காட்சிகள் எடுக்கவும் வசனங்கள் எழுதவும் ஒரு திறமை வேணும்அது ராஜேஷ் சார் கிட்ட நிறைய இருக்க.

                                                    --ஓகே ஓகே டபுள் ஓகே .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக