பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

இப்படியும் ஒரு ஆட்டோ டிரைவர்

ஒரு தொழில்ல மத்தவங்களை விட வித்தியாசமா இருக்குற இவரப்பத்தி படிச்சப்போ  என்னால ஆச்சர்ய படாம இருக்கமுடியல ...இப்படியும் இருக்காங்களானு தோணுது..யாரப்பத்தி சொல்றேன் ? அப்படி என்ன அவர் பண்ணிட்டாருனு கேக்குறீங்களா?


அண்ணாதுரை -29 வயதே ஆனா இவர் ஒரு ஆட்டோ டிரைவர் .சென்னைல திருவான்மியூர்ல இருந்து சோழிங்கநல்லூர் வரை ஆட்டோ ஓட்றார்..இவர் தன் ஆட்டோவில் பயணிக்குறவங்களுக்கு தனது ஆட்டோவில் என்ன என்ன வசதிகள் செய்துகுடுக்குறாருனு தெரியுமா?


1. மொபைல் பேட்டரி சார்ஜர்
2. டி .வி பார்க்கும்  வசதி
3. இலவச WIFI
4. புத்தகங்கள் இலவசமாக  படிக்க
5. தன்னுடைய கஸ்டமர்களுக்கு , சில கேள்விகளை குடுத்து அதற்க்கான விடைகளை ஃபில் பண்ணினா, சரியான விடைகளை குடுத்தவங்களுக்கு பரிசு, இல்லாம பம்பர் பரிசும் இருக்கு.
6. ஏழை குழந்தையின் படிப்புக்காக உதவ முடிஞ்சவங்க உதவ பரிந்துரை
7. ஆசிரியர்களுக்கு மற்றும் சில சிறப்பு தினங்களில்  குடுக்குற பணத்துல தள்ளுபடி
8. மொபைல் மற்றும் DTH ரீச்சார்ஜ்
9. குழந்தைகள் தினத்தப்போ குழந்தைகளுக்கு இலவசம்
10. மகளிர் தினத்தப்போ மகளிருக்கு இலவசம்
11. அன்னையர் தினத்தப்போ ,குழந்தைக்கூட பயணம் செய்யுற அன்னையர்களுக்கு  இலவசம்
12. காதலர் தினத்தப்போ ஜோடியா பயணம் பண்ணுற காதலர்களுக்கு இலவசம்
13. செப்டம்பர் 15 இவருடைய பிறந்தநாள் . அன்னைக்கு பயணம் பண்ற எல்லாருக்கும் 50% தள்ளுபடி




இத பத்தி இவருக்கிட்ட கேட்ருக்காங்க

ஏன் இந்த இன்டர்நெட் டிவி WIFI புக் வசதியெல்லாம் 

நான் திருவான்மியூர்ல இருந்து சோழிங்கநல்லூர் வரை ஆட்டோ ஓட்றேன் .இந்த ஏரியாவுக்கு  என் ஆட்டோவல பயணம் பண்றவங்க அனேகப்பேர் IT கம்பெனியில வேலை பாக்குறவங்க .நிச்சயம் லேப்டாப் வச்சுருப்பாங்க.அவங்களுக்கு இன்டர்நெட் எவ்வளவு முக்கியம்னு எனக் தெரியும் .திருவான்மியூர்ல இருந்து சோழிங்கநல்லூர் போகறதுக்கு அரை மணி நேரம் ஆகும்..அந்த நேரத்தை உபயோகமா செலவு பண்ணலாமேனு தான் இப்படி ஒரு வசதி.புக் ,நியூஸ் பேப்பர் படிக்க 35 விதமான பப்ளிகேஷன்ஸ் வாங்கி வச்சுருக்கேன் .(லேப்டாப் இல்லாதவங்களுக்கு /கொண்டுவராதவங்களுக்கு தான் வச்சுருக்கும்  10-இஞ்ச் டாப்லேட் குடுத்து உபயோகப்படுத்த சொல்றாரு.)


இதுக்குலாம்  செலவாகலையா

5000 ரூபாய் கிட்ட செலவாகுது..எனக்கு பணம் முக்கியம் இல்ல , என்னோட கஸ்டமர்களோட திருப்த்திதான் முக்கியம்..அவங்க என்னை நியாபகம் வச்சுருக்குறது போதும்.


ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் 

ஒரு நாளைக்கு 1000 ருபாய் வருமானம் கிடைக்குது.(இத்தனைக்கும் கிலோமீட்டருக்கு 15 ரூபாய் தான் வாங்குறாருனா பாருங்களேன்.)


எவ்வளவு நேரம் ஆட்டோ ஓட்றீங்க

காலைல 8 மணியில இருந்து மதியம் 1 மணிவரைக்கும்,மறுபடியும் சாயந்திரம் 5 மணியில இருந்து நைட் 11 மணிவரைக்கும்னு சொல்றாரு .



சோழிங்கநல்லூர் ஏரியா முழுவதும் IT கம்பனிகள் நிறைஞ்ச ஏரியா..சாதாரணமா வாங்குற பணத்தை விட அந்த ஏரியாக்களுக்கு அதிகமாத்தான் பணம் வாங்குவாங்க..பயணம் பண்றவங்களும் சம்பாதிக்குற மிதப்புல ஆர்க்குமெண்ட் பண்ணாம கேக்குற பணத்தை குடுப்பாங்க....ஆனா அந்த ஏரியாவுல ஆட்டோ ஓட்டியும் ,இப்படி ஒரு மனுஷர் இருக்காருனு தெரிஞ்சப்போ இவர எப்படி பாராட்டாம இருக்க முடியும் .சொல்லுங்க..

தொடர்புக்கு - 098 84 123413

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக