பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 25 பிப்ரவரி, 2016

மாசி மகத்தின் விசேஷம் என்ன?

பௌர்ணமி அன்று மாலை மேற்கே சூரியன் அஸ்தமிக்க, கிழக்குத் திசையில் முழு நிலவு அதுவும் கடலிலிருந்து எழும்போது பார்த்தால் தங்கத் தகடு மாதிரி ஜொலிக்கிறது. மேற்கே சூரியன். கிழக்கே முழு நிலவு. நடுவே பூமி. வானவியலின்படி அன்றைய தினம் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் அந்த வரிசையில் நேர்கோட்டில் இருக்கின்றன. எல்லா பௌர்ணமிகளிலும் இப்படித்தான். ஓர் ஆண்டில் மொத்தம் 12 பௌர்ணமிகள் உண்டு. சில ஆண்டுகளில் 13 பௌர்ணமிகள் வருவது உண்டு.சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றையும் சேர்க்கின்ற நேர்கோட்டை, சந்திரனைத் தாண்டி மேலும் இழுத்துக் கொண்டே போனால் அது வானில் ஏதோ ஒரு ராசியில் போய் முடியும். வானை நமது சௌகரியத்துக்காக மேற்கிலிருந்து கிழக்காக 12 ராசிகளாக - பகுதிகளாகப் பிரித்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நாம் மேற்படி நேர்கோட்டை நீட்டித்தால் அந்தக் கோடு ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு ராசியில் போய் முடியும்.


 இந்த ஆண்டு மார்ச் மாதம் 7-ம் தேதி வருகிற பௌர்ணமியன்று அந்த நேர் கோடு சிம்ம ராசியில் போய் முடியும். சிம்ம ராசியில்தான் மக நட்சத்திரம் இருக்கிறது. அன்றைய தினம்தான் மாசி மகம்.இதையே வேறு விதமாகச் சொன்னால் தமிழ் மாதமாகிய மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி அன்று சூரியன், பூமி, சந்திரன், மக நட்சத்திரம் ஆகிய நான்கும் ஒரே வரிசையில் இருக்கும். நாம் ஆண்டுதோறும் அந்த நாளில்தான் மாசி மகம் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். அந்த அளவில் வானவியல் ரீதியிலான ஒரு நிகழ்ச்சியைத்தான் நாம் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம். மாசி மகம் பண்டிகை பல நூறு ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிற பண்டிகை. ஆகவே மிக நீண்ட காலத்துக்கு முன்னரே தமிழர்கள் வானவியல் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருந்தனர் என்று கூறலாம்.மக நட்சத்திரத்துக்கு ஆங்கிலத்தில் Regulus என்று பெயர். இரவு வானில் இதை நன்கு காணலாம். வானவியலின்படி சூரியன் ஆகஸ்ட் - செப்டெம்பர் மாதங்களில் சிம்ம ராசியில் இருக்கும். ஆகவே அந்த மாதங்களில் இரவு வானில் மக நட்சத்திரத்தைக் காண இயலாது. மற்ற மாதங்களில் காணலாம். மார்ச் மாதம் 15-ம் தேதி இரவு எட்டு மணி வாக்கில் அதை கிழக்கு திசையில் அடிவானத்துக்குச் சற்று மேலே தெளிவாகக் காணலாம்.மக நட்சத்திரம் சூரியனை விட மூன்றரை மடங்கு பெரியது. அது பிரகாசமாகத் தெரிந்தாலும் பூமியிலிருந்து 77 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. அதாவது ஒளி வேகத்தில் சென்றால் மக நட்சத்திரத்துக்குப் போய்ச் சேர 77 ஆண்டுகள் ஆகும். அது நடக்காத விஷயம்.மாசி மகம் ஒவ்வோர் ஆண்டும் வருவது. இது அல்லாமல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மகம் வரும். மகா மகத்தின்போது வானவியல் ரீதியில் ஒரு விசேஷம் உண்டு. அதாவது சூரியன், பூமி, சந்திரன், வியாழன், மக நட்சத்திரம் ஆகிய அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும். அதாவது ஆண்டுதோறும் வருகிற மாசி மகத்தில் காணப்படும் அணி வகுப்பில் வியாழன் கிரகமும் சேர்ந்து கொள்வதுதான் மகா மகம்.

திங்கள், 1 பிப்ரவரி, 2016

திருநீறு பூசுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? - அறிவியல் பூர்வ உண்மை!

விபூதி (அ) திருநீறை எந்த காரணமும் இன்றி வெறும் ஆன்மீகத்தின் பெயர் கொண்டு மட்டுமே தினமும் பயன்படுத்த கூறவில்லை. இப்போது நாம் பயன்படுத்தும் விபூதி பெரும்பாலும் போலியாக தான் தயாரிக்கப்படுகின்றன.

உண்மையில் விபூதியை அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டை ஆக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும்.

இப்போது அந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. நம்மை சுற்றி நிறைய அதிர்வுகள் இருக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிந்தது தான். நம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.

இனி ஏன் திருநீறு பூச வேண்டும் என்ற ஐதீகம் வழக்கத்தில் கொண்டு வரப்பட்டது. அதன் பயன்கள் என்ன என்று பார்க்கலாம்...

1 நல்ல அதிர்வுகளை உள்வாங்க

திருநீறானது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மையை கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்வதால் அவ்விடங்களில் வலிமை அதிகமாகும் என்ற கருத்து நிலவுகிறது. இதனால் தான் திருநீறு பூசுவதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.

2 நெற்றி மிகவும் முக்கியம்

மனித உடலிலேயே நெற்றி மிக முக்கிய பாகமாகக் கருதப்படுகிறது. நெற்றியில் தான் அதிகமாக வெப்பம் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் படுகின்றது. சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் அதிர்வுகளை உள்ளனுப்பும் செயலை திருநீறு செய்கிறது. அதனால் தான் திருநீறை நெற்றியில் கட்டாயம் பூசுகிறார்கள்.

3 பசு மாட்டு சாணத்தில் இருக்கும் மருத்துவ தன்மை

பசு மாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு ஏன் செய்கிறார்கள்? ஏனெனில், மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலை நல்ல உடற்சக்தியுடன் வைத்திருக்கிறது. இது இடும் சாணத்தை தீயிலிடும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத் தன்மையாக அமைகிறது.