சனி, 14 செப்டம்பர், 2024
பாடலின் வரிகள் - நெஞ்சமே நெஞ்சமே , மாமன்னன்
பாடியவர்கள் : விஜய் யேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன்
பாடல் எழுதியவர் : யுகபாரதி
இசை : A.R.ரகுமான்
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..
நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..
நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ... ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..
கண்ணோரம்
கொட்டும் மின்னல்
அசைந்தாடும் பூவில்
உயிர் தேனாய் ஊற வெக்கம்
அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே
உன் வாசம் தாயாய் தலை கோத
மனம் பூக்குதே
நெற்றி முத்தம் வைக்குதே
தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே
பாடல் நீ..யே.. ஓஓ ஓஓ ஓ...
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..
இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்
என்னவோ... என்னிலே
வண்ணமாய்... பொங்குதே
ம்ம் துள்ளும் பாட்டிலே எழும் விசை
என்னை மீட்டுதே ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..
நெஞ்சமே நெஞ்சமே
பக்கம் நீ வந்ததால்
திக்கெல்லாம் வெள்ளிமீனே
நீ... தஞ்சமே தஞ்சமே
உன்னை நீ தந்ததால்
முள்ளெல்லாம் முல்லைத் தேனே
ஓ ஓ ஓ ஓ செல்லமே செல்லமே
உள்ளங்கை வெல்லமே
தித்திப்பு முத்தமே கொஞ்சம் தாயேன்
செல்லமே செல்லமே
உள்ளங்கை வெல்லமே
அந்திப்பூ காட்டுக்கே கூட்டிப்போயேன்..
காட்டுக்கே கூட்டிப்போயேன்
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..
நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..
கமல் ஹாசன் எனும் ஒரு யூனிவர்சிட்டி
ஓவியா ஜூலி கலந்துக்கிட்ட பிக் பாஸ் பாத்ததோட சரி , அதுக்கு அப்பறம் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியும் பாத்தது இல்ல .
சமீபத்துல கமல் சார் பிபி பாஸ் நிகழ்ச்சியில இருந்து பிரேக் எடுக்க போறதா நியூஸ் பாத்தேன் . என்னடா இது இப்படி ஆகிடுச்சே எதுக்காக இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலனு பாத்தா மனுஷன் AI டெக்னாலஜி பத்தி 4 மாசம் கோர்ஸ் படிக்க அமெரிக்கா போகுறாராமே .
இவரால இந்த வயசுலயும் எப்படி இவ்ளோ ஆர்வமா எதாவது ஒன்னு படிக்க இல்ல கத்துக்க முடியுது ?
உங்களுக்கு நியாபகம் இருக்கானு தெரியல , நமக்கு Confrence Call-னா என்னனு பஞ்சதந்திரம் படத்தின் மூலமா நமக்கு அறிமுகம் செஞ்சுவெச்சது கமல் சார் தான்.
Bluetooth headphone -னுங்குற கான்செப்ட்-ஐ நமக்கு வசூல் ராஜா MBBS படத்தின் மூலமா அறிமுகம் செஞ்சுவெச்சது கமல் சார் தான் .
சைபர் நெட்வொர்க் மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்த த்ரில்லர் கதை.
அபூர்வ சகோதரர்கள் (1989)
Motion Control Camera:
கமல் ஹாசன் மூன்று வேடங்களில் நடித்தார், இதில் மெர்கல் ஷாட் பயன்படுத்தப்பட்டது. இது காட்சிகளில் மூன்று வேடங்களில் உள்ள கமலை ஒரே காட்சியில் இணைத்து காட்ட உதவியது.
மூன்று கதாபாத்திரங்களை ஒரே காட்சியில் இணைக்கும் தொழில்நுட்பம்.
தேவர்மகன் (1992)
எக்ஸ்ட்ரீம் ஸ்லோ மோஷன் (Extreme Slow Motion):
சண்டைக் காட்சிகளில் ஸ்லோ மோஷன் பயன்படுத்தி காட்சியை மேலும் விவரமாகத் தரம் உயர்த்தியது.
குருதிப்புனல் (1995)
முதல் டிஜிட்டல் ஒலி:
இந்த திரைப்படத்தில் முழுமையான டிஜிட்டல் ஒலித் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
இந்தியன் (1996)
ரூ 100 கோடி கிளப்:
ரூ. 100 கோடி வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம்.
ஹே ராம் (2000)
Polaroid Production:
கதாபாத்திரங்களின் நுணுக்கமான நடிப்புகளை படம்பிடிக்க உதவியது.
ஆளவந்தான் (2001)
ஆனிமேட்ரானிக்ஸ் (Animatronics):
சண்டைக் காட்சிகளுக்கு அதிக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காமிக்ஸ் அனிமேஷனை காட்சிப்படுத்தினர்.
ஸ்டடி-கேம் (Steadicam):
ஸ்டேபிளான (நிலையான) காட்சிகளை உருவாக்க ஸ்டடி-கேம் பயன்படுத்தப்பட்டது.
மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
ஏரோமோபில் கேமரா (Aeromobile Camera):
வானில் இருந்து காட்சிகளை பிடிக்க பயன்படுத்தப்பட்டது.
தசாவதாரம் (2008)
புதிய மேக்கப் தொழில்நுட்பம்:
கமல் ஹாசன் 10 வேடங்களில் நடித்தார், இவ்வேடங்களில் தனித்துவமான தோற்றத்தை பெற மேக்கப் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. Prosthetic makeup
மோஷன் கேப்ச்சர் (Motion Capture):
வேடங்களில் அசைவுகளை நுணுக்கமாக காட்சிப்படுத்த இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
உன்னைப் போல ஒருவன் (Unnai Pol Oruvan) (2009)
Auro 3D Sound:
இந்த படத்தில் பயன்படுத்திய முதன்மையான 3D சவுண்ட் தொழில்நுட்பம்.
விஸ்வரூபம் (2013)
முதல் டிஜிட்டல் படம்:
இந்திய திரையுலகில் முழுமையான டிஜிட்டல் திரைப்படமாக இதைப் பயன்படுத்தினார்.
விஎஃபெக்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்:
போர்க்கள காட்சிகள் மற்றும் நகரத்தின் சிதைவுகளை விஎஃபெக்ட்ஸ் (VFX) மூலம் வடிவமைக்கப்பட்டது.
விஸ்வரூபம் 2
'விஸ்வரூபம் 2' திரைப்படம் இந்திய சினிமாவில் முழுமையான ஸ்டீரியோஸ்கோபிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முதல் படமாகும்.
விக்ரம் (2022):
சினிமா நேரலை (Live Streaming Cinema) – முதன்முறையாக பட ரீலீஸ் நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பினர்.
வெள்ளி, 23 பிப்ரவரி, 2024
I Love you -க்கு என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சி தருணம்
நான் அமெரிக்கால பார்ட் டயம்ல லிஃப்ட் டிரைவர்-ஆ வேல செஞ்சேன் . அதான் நம்ம ஊருல ஊபர் டிரைவர் மாதிரி. இங்கயும் ஊபர் இருக்கு , ஆனா அது போலவே மத்த கம்பெனிகளும் இருக்கு.
நான் லிஃப்ட் டிரைவர்-ஆ வேல செஞ்சப்போ நிறைய புது புது அனுபவங்கள் கிடைச்சது.அதுல ஒன்னு கொஞ்சம் பயம், காமெடி கலந்த ஒரு அனுபவம் அதைத்தான் இப்போ ஷேர் பண்ணப்போறேன்.
ஒரு நாள் ஒரு லிஃப்ட் ரெக்குஸ்ட் accept பண்ணினேன். அது ஒரு மோட்டல் . பொதுவா இங்க அமெரிக்கால அதிகம் சம்பாதிக்காதவங்க , கொஞ்சம் வறுமைக்கோட்டுக்கு பக்கத்துல அல்லது கீழ இருக்குறவங்க ஒரு வீடு வாடகை எடுக்குறதுக்கு பதிலா இதுமாதிரி மோட்டல்கள்ல தங்குவாங்க. மாசா மாசம் ரெண்ட் கொடுத்துடனும் . அந்த சின்ன இடத்துலயே ஸ்டவ் வச்சு சமைப்பாங்க வேற. அதுமாதிரி ஒரு மோட்டல்ல ஒருத்தரை பிக்கப் பண்ண நா போனேன். அவரு போய் சேர வேண்டிய இடம் 25 நிமிஷ தொலைவுல இருந்தது. வண்டில ஏறினதும் கண்டுப்பிச்சுட்டேன் அவரு கொஞ்சம் குடுச்சிருக்காருனு . மோட்டல்ல விட்டு வெளில வரதுக்கு முன்னாடியே கொஞ்சம் நிறுத்து நிறுத்து நான் பர்ஸ் மறந்துட்டேனு சொல்லி இறங்கி ஓடி எடுத்துட்டு வந்தாரு.
அங்க இருந்து நான் highway -க்கு போகணும் .அதுக்கு நான் ரைட் எடுக்கணும்.ரைட் எடுக்கும்போது வேற யாராவது எதிர்புறம் வராங்களானு செக் பண்ணிட்டு போகணும். நானும் அப்டித்தான் செக் பண்ணினேன். அந்த நின்ன சில வினாடி அவரால வெயிட் பண்ணமுடியல .போலாம் போலாம் நீ போ னு சொன்னாரு. நான் பொதுவா கேட்கமாட்டேன் .கண்டுக்க மாட்டேன். ஏன்னா எனக்கு என் safety, என்ன நம்பி வண்டி ஏறுறவங்களோட safety ,என்னோட கார்-ஓட safety எல்லாமே முக்கியம்.
அதனால நா சில வினாடி வெயிட் பண்ணிட்டுதான் எடுத்துட்டேன். உடனே பின்னாடி இருந்து அவரு உச்சு கொட்டி தன்னோட அதிருப்தியை வெளிப்படுத்தினார். நான் கண்டுக்கல. highway-ல போய்க்கிட்டு இருக்கும் போது ஒரு மாதிரி பரபரப்பாவே உக்காந்துட்டு இருந்தார். highway -ல இருந்து அவரு வேல செய்ற இடத்துக்கு ரெண்டு மூணு சிக்னல் தாண்ட வேண்டி இருந்தது . ஒரு சிக்னல்-ல ஆரஞ்சு இருக்கும் போது நான் ஸ்டாப் பண்ண ரெடி ஆனேன் ஆனா அவர் பின்னாடி உக்காந்து போய்டு போய்டு-னு சொன்னார். நான் தான் சொன்னேனே கேட்கமாட்டேன்னு , நா போகல. நின்னுட்டேன் .ரெட் விழுந்துடுச்சு. மறுபடியும் அவருக்கு அதிருப்தி . நான் தான் சொன்னேனே போகலாம்னு, போயிருக்கலாம்னு கொஞ்சம் எரிச்சலோட சொன்னார். நான் பதில் சொல்லல.
அவர் ஒரு இண்டஸ்ட்ரி-ல வேல செய்றவர் போல. அதுக்குள்ள போக left, right -னு ரெண்டு சைடு இருக்கு . நான் left எடுத்துட்டேன் . சரி போ போ-னு சொன்னார். உள்ளபோயி gate கிட்ட நிறுத்திட்டேன். அவர் கார் விட்டு முழுசா இறங்கல . ஒரு கால் உள்ள ஒரு கால் வெளில இருக்கு . அவர் என்ன பாத்து 'hey thanks . you did a good job. I love you ' அப்டினு சொன்னாரு.
அவ்ளோதான் எனக்கு வௌ வெளுத்து போச்சு. விவேக் காமெடி -ல சொல்றமாதிரி I love you-சொன்னா அப்பன் அருவாளோட வருவாரு-னு , வளந்த புள்ள . I love you -ஒரு காதலன் காதலிக்கிட்ட சொல்லணும் அல்லது ஒரு காதலி காதலன்கிட்ட சொல்லணும் அவ்ளோதான்.இப்படி சினிமா பாத்து கேட்டு வளந்த புள்ள தான் நானு. என்னபாத்து இவரு இப்படி சொன்னதும் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.
நா அப்டியீ பாக்குறேன் அவரை. அவரு போகமாட்றாரு . hey , i said I love you-னு வேற சொல்றாரு. எனக்கு என்ன சொல்றதுன்னு அப்பவும் தெரியல . ஆனா அந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்பனும்னு மட்டும் நினைக்குறேன். இந்த மனுஷன் இறங்கவும் மாட்டறாரே கார் விட்டு. என்ன பண்றதுனு அவரையே பாக்குறேன்.என்னையும் அறியாம love you too -னு சொல்லி மண்டைய ஆட்டுறேன் பயத்துல. அப்பறம் தான் அவரு இறங்குறாரு. கைப்புள்ள எடுடா வண்டிய-னு reverse -லயே போய் வண்டிய திருப்பிக்கிட்டு அந்த இண்டஸ்ட்ரி -தாண்டினதுக்கு அப்பறம் தான் ரிலாக்ஸ் ஆகி ஒரு ஓரமா நிறுத்தி என்ன நடந்ததுன்னு யோசிச்சேன்.
என்னது love you too -னு சொன்னியா அவன்கிட்ட . அறிவிருக்கா. உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. இப்படி நீ அவன்கிட்ட சொல்லிட்டு வந்து இருக்கனு என்ன திட்டுறேன். first வீட்டுக்கு போவோம்னு வண்டியை எடுத்துகிட்டு கிளம்பியிட்டேன். offline -போய்ட்டேன் ,so எனக்கு எந்த வண்டி request -ம் வராது.
வழியெல்லாம் இதே மண்டையில ஓடிக்கிட்டு இருக்கு . இப்படி சொல்லிட்டானே பாவி . அதுக்கு நீ பதிலுக்கு இப்படி சொல்லிட்டியே படுபாவினு திட்டிக்கிட்டே வரேன்.
அப்பறம் தான் எனக்கு புரிஞ்சது , நாம நினைக்குற லவ் வேற அவரு சொன்ன லவ் வேற. என் மேல கடுப்பு அடிச்சுக்கிட்டே வந்தாரே அதுக்கு சாரி சொல்லாம அந்த மனுஷன் இப்படி சொல்லிருக்காருனு எனக்கு புரிஞ்சது. அது இந்த நாட்டுல சகஜம் . யாரு யாருக்கு வேணும்னாலும் சொல்லலாம். அது அன்ப சொல்ற விதம் அவ்ளோதான். இளம் வயசுல சொல்ற காதல் இல்ல . அட லூசு பயலே இப்படியா என்ன பயமுறுத்துவனு சொல்லிக்கிட்டு , அட லூசு இப்படியா நீ பயப்படுவ -னு என்ன நானே திட்டிக்கிட்டு வந்தேன். உடனே என் புருஷனுக்கு கால் பண்ணி நடந்ததை சொல்லி ரெண்டுபேரும் சிருச்சுக்கிட்டு இருந்தோம். அப்பறம் மறுபடியும் online -போயிட்டு வேலைய தொடர்தேன் .
இப்படி நிறைய சுவாரசியமான அனுபவங்கள் இருக்கு அந்த வேலையில .