பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 28 ஜூலை, 2013

இ-போஸ்ட்

ஜூலை மாதம் 15ம் தேதியுடன் தந்தி சேவை நிறுத்தப்பட்டது அதுக்கு பதிலா தபால் துறை இ-போஸ்ட் சேவையை அறிமுகபடுத்தி இருக்காங்க.


இந்த  இ-போஸ்ட் சேவையில, ஏ4 பக்க அளவிலான செய்திக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுது. மின்னஞ்சலின் வேகத்துடன் இணைந்து இச்சேவை வழங்கப்படுது.

கணினிமயமாக்கப்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த  சேவைகுடுக்கப்ப்படுமாம் . அச்சடிக்கப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தகவலை இ-போஸ்ட் மையத்தில் கொடுத்தா, அது ஸ்கேன் செய்யப்பட்டு இணையம் மூலம் மின்னஞ்சல் செய்யப்படுமாம் . விநியோகிக்கப்படும் மையத்தில் அத்தகவல் பிரின்ட் எடுக்கப்பட்டு, உறையிலிடப்பட்டு தபால்காரர் மூலம் உரிய முகவரியில் சேர்க்கப்படுமாம்.

வெள்ளி, 26 ஜூலை, 2013

நம்ம ஆட்டோ

வாடகை டாக்ஸி, கார் போன்று, ‘நம்ம ஆட்டோ’ என்ற பெயரில் புதிய கம்பெனி ஒன்னு சென்னையில் துவக்கி இருக்காங்க . நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், எலெக்ட்ரானிக் மீட்டர், இறங்கும்போது எவ்வளவு தூரம் பயணம் செஞ்ஜோம் ,அதுக்கான கட்டணம் போன்ற விவரங்களைச் சொல்லும் அச்சிடப்பட்ட பில் என்று இந்த ஆட்டோக்களில் கிடைக்குமாம் .முதல் கட்டமா 17 ஆட்டோக்கலும் சீக்கிரமே சென்னை முழுவதும் 350 நம்ம ஆட்டோ ஓட்டத் திட்டமிட்டிருக்குதாம் .

புதன், 24 ஜூலை, 2013

ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது ?

ஃபேஸ்புக் பாத்துகிட்டு இருந்தப்போ வித்தியாசமான ஒரு தலைப்பு பாத்தேன்  என்ன தான் இருக்குனு பாப்போமேனு என் ஆர்வத்தை தூண்டிச்சு அந்த தலைப்பு .அந்த பக்கத்தோட பெயர் 'இதையும் கொஞ்சம் பார்த்துட்டு போங்க சார் '.அந்த பக்கத்துல நான் படிச்ச ஒரு சுவாரசியமான விஷயத்தை உங்ககிட்ட அப்படியே ஷேர் பண்றேன்


உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால்
எப்படி திரும்பப் பெறுவது?

1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்
நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம்
இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட
வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000
ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப
கட்டணம் செலுத்த வேண்டும்.

திங்கள், 22 ஜூலை, 2013

விஜய் டி.வி -கோபிநாத் - நீயா நானா - 2

நேத்து 'நீயா நானா ஷோ' எப்போதும் இல்லாம கொஞ்சம் வித்யாசமா இருந்தது..எப்பவும் ஆண்,பெண் இருபாலரும் கலந்து உக்காந்துருப்பாங்க.அது ரெண்டு டீம்-ஆ இருப்பாங்க..நேத்து பெண்கள் எல்லாம் ஒருபக்கம் ஆண்கள் எல்லாம் ஒரு பக்கம் .பெண்களுக்கு அதிகமா பேச வாய்ப்பு இல்ல..ஆண்களுக்கு தான் அதிகமா பேசும் வாய்ப்பு இருந்தது..ஏன்னா ,அந்த தலைப்பு அப்படி..அது என்ன அப்படி பட்ட தலைப்புனு கேக்குறீங்களா? 'பெண்களை ஆண்கள் எப்படி எல்லாம் வர்ணிக்கிறார்கள் ?' .. பின்ன , இந்த தலைப்புக்கு ஆண்கள் தானே அதிகமா பேசமுடியும்..

இந்த தலைப்புல சாதாரணமா பேச ஆரம்பிச்சு , கடைசில சிறந்த மூணு பேரை பெண்கள் மூலமாவே வோட் பண்ணி  செலக்ட் பண்ணினது  வித்யாசமா இருந்தது..ஒரு சின்ன போட்டியே நடந்ததுனும் சொல்லலாம்..பெண்கள் இந்த தலைப்புல பேசின ஆண்கள் சொன்ன கமெண்ட்ஸ்ல எது நல்லா இருந்தது?யார் நல்லா வர்ணிச்சாங்கனு சொல்லணும் இதுதான் வேல..அதுல கோபி சார் கேட்ட சில கேள்விகளும் அதுக்கு ஆண்கள் சொன்ன சில வித்யாசமான, சிரிக்கவைக்குற,எப்படி எல்லாம் யோசிக்குறாங்கயானு நினைக்க வச்ச பதிலும்(வர்ணனைகளும்) இதோ இங்க...

ஞாயிறு, 21 ஜூலை, 2013

ஷாவ்ளின் கோவில்

தென்னிந்தியாவிலிருந்து புத்த மதத்தை பரப்புறதுக்கு 'போதி தர்மன் ' சீனாவிற்க்கு போனார்.அப்போ அந்த மதத்தை பரப்புறதுக்கு சில சண்டைக்கலையையும் கத்துக்குடுக்க ஆரம்பிச்சார் அதுல ஒண்ணுதான் இந்த குங்ஃபூ. (  'போதி தர்மன் ' பத்தி ஏழாம் அறிவு படம் மூலமா நம்ம எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும்)
 
இந்த குங்ஃபூ -ங்குற தற்காப்பு கலை பிறந்த இடம் தான் இந்த ஷாவ்ளின் கோவில்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

வாலிபக் கவிஞர் வாலி

தமிழ் திரை உலகில் புகழ்பெற்று விளங்கியவர் பாடலாசிரியர் ‪கவிஞர்‬ ‪வாலி‬ -வயது 82. 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி திரைப்பட உலகில் சாதனை படைத்தவர் .

வாலியின் மனைவி பெயர் ரமண திலகம். வாலி இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரமண திலகம் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். வாலி-ரமண திலகம் தம்பதிக்கு பாலாஜி என்ற ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார்.

* திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்கு வந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார் – பொன்னம்மாளின் மகன் வாலி. படித்தது எஸ்.எஸ்.எல்.சி. பிறகு, சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு!.

வியாழன், 18 ஜூலை, 2013

எல்லையை தாண்டாதே

இந்திய கடல் எல்லையை தாண்டினா எச்சரிக்குற வகைல கருவி ஒன்னு வடிவமைசுருக்காங்கலாம் சிவகாசி பி.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியின் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறை மூன்றாமாண்டு மாணவர்கள் ராஜேந்திர பிரசாத், முனியசாமி, முருகேசன், நாகராஜ், நிவாஷ்குமார் மற்றும் ராஜேந்தர் தினேஷ் கண்ணன்.

 ஆர்.எஃப்., டிரான்ஸ்மீட்டர்(சிக்னல் டிரான்ஸ்மீட்டர்) -ஐ கடற்கரையில் பொருத்திடனும் ( இந்த டிரான்ஸ்மீட்டர் அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் சிக்னல்களைக் கொண்டுபோகும்) இந்த சிக்னல், இலங்கை எல்லை ஆரம்பமாகும் 100 மீட்டர் முன்புவரை மட்டும்தான்  இயங்கும்.

ஒவ்வொரு படகிலும் ஒரு ரிசீவர் பொருத்தப்பட்டுருக்கும். இந்த ரிசீவர், டிரான்ஸ்மீட்டர் தரும் சிக்னல்களை உள்வாங்கிக்கிட்டே  இருக்கும். எப்போ நம்ம  படகு இலங்கை எல்லையை நெருங்கப் போகுதோ, அப்போ 100 மீட்டருக்கு முன்னாடியே  சிக்னல் கிடைக்காது. அதேநேரம் மைக்ரோ கண்ட்ரோலர் மூலம் படகுகளில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கரில் எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கும்.இதன் மூலம் , இலங்கை எல்லையின் ஆரம்பத்தை தெரிந்துக்கொள்ளலாம் உடனே  எல்லையைக் கடக்காம திரும்பிடணும். மீறியும் படகைச் செலுத்தினால், 2 நிமிஷத்துக்குள்ள  என்ஜின் தானாவே நின்னுடும். மீண்டும் 2 நிமிஷம்  கழிச்சு என்ஜின் ஆன் ஆகும் .  மீனவர்கள் படகைத் திருப்பி நமது எல்லைக்குள் கொண்டுவர 2 வாய்ப்புகள் தராங்க . எச்சரிக்கை ஒலி நம்முடைய எல்லைக்குள் வரும்வரை சதம் போட்டுகிட்டே இருக்குமாம்.

 இந்தக் கருவியை வடிவமைக்க 6,000 ரூபாய் மட்டுமே செலவாகியது.

 கருவியின் கண்டுபிடிப்புக் குழு தொடர்புக்கு: 81222 20603

                                    ---- நன்றி வாரஇதழ் 

புதன், 17 ஜூலை, 2013

பாடலின் வரிகள் - நினைத்து நினைத்து பார்த்தால் - 7G ரெயின்போ காலனி

படம் :7G ரெயின்போ காலனி 
பாடல் : நினைத்து நினைத்து பார்த்தால் 
பாடியவர் : ஸ்ரேயா கோஷல் 
இசை : யுவன்சங்கர் ராஜா 
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் 

நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறான்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து கொடுத்து படிக்கும் முன்னே
எறியும் கடிதம் உனக்கு தந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறான்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

திங்கள், 15 ஜூலை, 2013

வாழை இலை விருந்து

அந்த காலத்துல ,நம்ம முன்னோர்கள் வாழை இலையிலதான் சாப்பாடு போட்டு சாப்பிடுவாங்களாம் .காலம் மாற மாற இப்போ வித விதமான தட்டுக்கு மாறிட்டோம் .எதவாது விசேஷ நாளுல மட்டும் தான் வாழை இலையில பரிமாருறோம் .அதுவும் நகரத்துல சொல்லவே வேணாம்.
ஆனா இந்த வாழை இலைகளோட பயன்கள நாம முழுசா அனுபவிக்கமுடியல.அப்படி என்ன பயன் வாழை இலையில சாபிட்ரதாலன்னு கேக்குறீங்களா?

வெள்ளி, 12 ஜூலை, 2013

பாடலின் வரிகள் - மாலை மங்கும் நேரம் - ரௌத்திரம்

படம் :ரௌத்திரம் 
பாடல் : மாலை மங்கும் நேரம்
பாடியவர் : ரெய்னா ரெட்டி 
இசை : பிரகாஷ் நிகி 
பாடலாசிரியர் : தாமரை 

மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன
வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம்
அதை நம்ப மாட்டேன் நானும்

புதன், 10 ஜூலை, 2013

ஹாட் நியூஸ்

அக்னி நச்சத்திரம்முடிஞ்சாலும் .வெயில் கொளுத்துது.தினமும் நியூஸ்ல இத்தனை டிகிரி வெப்பம் ,இதனை பாரன்ஹீட் வெப்பம்னு சொல்றதை கேக்குறோம் .ஆமா அதென்ன டிகிரி,பாரன்ஹீட். தெரிஞ்சுப்போமா?

* வெப்பத்தை அளக்க பயன்படுவது வெப்பநிலைமானி அதாவது தெர்மோமீட்டர்  .இது நாம எல்லாருக்குமே தெரியும்.

*இந்த டிகிரி,பாரன்ஹீட்,செல்ஷியஸ் இதை எல்லாம் கண்டுபிடிச்சவங்க ஆண்டர்ஸ் செல்ஷியஸ்,ஜி.டி பாரன்ஹீட்.

செவ்வாய், 9 ஜூலை, 2013

பாடலின் வரிகள் - ஆருயிரே ஆருயிரே - மதராசப்பட்டினம்

படம் :மதராசப்பட்டினம் 
பாடல் : ஆருயிரே ஆருயிரே  (இந்த பாட்டை பாக்க இங்க கிளிக் பண்ணுங்க)
பாடியவர் : சோனு நிகம் ,சைந்தவி  
இசை : G .V பிரகாஷ் 
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் 

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
உயிரே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என்னிலே உறைகிறேன்

திங்கள், 8 ஜூலை, 2013

இசை

இசையை பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது.ஏதோ ஒரு விதத்துலஇந்த இசை நம்மகூட பயணம் பண்ணிகிட்டே இருக்கு.

சந்தோஷமான சமயத்துல துள்ளலான இசை கேக்குறதும் ,மனசு சரியில்லைனா சோகமான பாட்டு கேக்குறதும்,நம்மளோட ஒரு ஒரு உணர்வையும் வெளிப்படுத்த இந்த இசையை விட பெரியது எதுவும் இருக்க முடியாது.

இந்த இசைக்கு பல விதமான நோய்களை குணமாக்கும் ஆற்றல் இருக்குனு உங்களுக்கு தெரியுமா? ஆமாம் ..உண்மைதான் ,இந்த இசை பலவிதமான நோய்களை குணப்படுத்துது .அது என்னனு இப்போ பாப்போம்.

ஞாயிறு, 7 ஜூலை, 2013

பாடலின் வரிகள் - கடவுள் தந்த அழகிய வாழ்வு - மாயாவி

படம் :மாயாவி 
பாடல் : கடவுள் தந்த அழகிய வாழ்வு
பாடியவர் :  spb சரண்,கல்பனா 
இசை : தேவி ஸ்ரீ பிரசாத் 

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர்  துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின்
வாழ்க்கையே நம்பி வாழ்ந்து விடைப்பெருவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

வெள்ளி, 5 ஜூலை, 2013

பாடலின் வரிகள்- ஏதோ ஒன்று என்னை தாக்க - பையா

படம் :பையா 
பாடல் : ஏதோ ஒன்று என்னை தாக்க
பாடியவர் : யுவன் சங்கர் ராஜா 
இசை : யுவன் சங்கர் ராஜா 

ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் நியாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

புதன், 3 ஜூலை, 2013

எப்படி வெளியேறுவது

கூகிள் பிளஸ் , ஃபேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க்ல் இருந்து  எப்படி நம்மோட அக்கவுன்ட்-ஐ நீக்குறதுனு சில பேருக்கு தெரியாம இருக்கும்.அவங்களுக்கு இதோ வழிகள் ,

முதல்ல ஃபேஸ்புக் அக்கவுன்ட்-ஐ எப்படி நீக்குறதுனு பாப்போம் .

ஃபேஸ்புக் அக்கவுன்ட் லாகின் பண்ணிட்டு ,வலதுபுறம் மேல 'செட்டிங்க்ஸ்' போங்க.அதுல 'செக்யூரிட்டி' பிரிவுல 'Delete your account'-னு இருக்கும் ,அத கிளிக் பண்ணுங்க.


திங்கள், 1 ஜூலை, 2013

நேரடி விற்பனை மையங்கள் ...

கடையம் கல்யாணபுரம் கிராமத்தில் விவசாயிகளே நேரடி விற்பனை மையங்கள் மூலம் விளைபொருட்களை விக்குறாங்களாம்.விளைவிக்கும் விவசாயிக்குப் போதுமான லாபம் கிடைக்கணும் என்ற நோக்கத்தில தன் கட்டுப்பாட்டில் இருக்குற பகுதியில வேளாண் நேரடி விற்பனை மையத்தை சாத்தியமாக்கி இருக்குறாராம் , கடையம் தோட்டக்கலை உதவி இயக்குநர் டேவிட் ராஜா பியூலா.

இதன் மூலமா போதுமான லாபம் கிடைக்கும்.நாமளே நேரடியாக விவசாயிடம் வாங்கினால், சூப்பர் மார்க்கெட் விலையைவிட 6, 7 மடங்கு குறைவான விலையில் வாங்கலாம்.இதன் மூலமா விவசாயிக்கும் நுகர்வோருக்கும் இடையில இருக்குற இடைவெளியை குறைக்கமுடியும்னு சொல்றாங்க.

மேலும் விவரங்களுக்கு: டேவிட் - 094862 85704