பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 30 அக்டோபர், 2013

எப்படித்தான் யோசிப்பாங்களோ ?


சீனாவுல ஆண், பெண் பாலின விகிதாசாரத்துல ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை குறைவா இருக்கு இதனால கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்குறது பெரும் பாட இருக்காம்.அதேசமயம் 18 கோடிப் பெண்கள் துணையின்றி தனியே வசித்து வருவதா சொல்றாங்க. இதனால சீனப் பெண்களுக்கு உள்நாட்டில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக சீனாவில் பெண்களுக்கெதிராக கடத்தல் மற்றும் பாலியல் சம்பவங்களும் அதிகரிச்சு வருது .

இந்தச் சூழ்நிலையை சாதகமாக்கி, சீனாவின் முக்கிய ஆன்லைன் விற்பனை நிலையமான, ‘தோபோ டாட்.காம்’ (Taobao.com) என்கிற நிறுவனம், ஒரு புதுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கு. அதுதான், பெண்களுக்கு துணையாகச் சென்று வர, ஆண் நண்பர்களை வாடகைக்கு அனுப்பி வைக்கும் திட்டம்.

இத்திட்டத்தின்படி, வெளியூர், கடைகள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் எந்தவொரு இடத்திற்கும் தனியாக செல்லத் தயங்கும் பெண்கள், இந்த நிலையத்தை அணுகி ஆண்களை அழைத்துச் செல்லலாம். இதற்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக, 3,000 யுவான்கள் ( இந்திய மதிப்பில் 29,000 ரூபாய்) சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படுதாம்..

இந்த வேலையை  சில  கல்லூரி மாணவர்கள் பகுதி நேரமாகசெய்றாங்க . மேலும், வேலை தேடும் இளைஞர்களும் தற்காலிகமாக இங்கு பணிபுரியிறாங்கலாம்..
                        நல்லா யோசிக்க்குறாங்கயா .....

திங்கள், 28 அக்டோபர், 2013

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 7

இந்த வாரம் காஃபி வித் DD( 10/27/2013 ) நிகழ்ச்சியில் தனுஷ்கூட  கலந்துகிட்டு நம்ம சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியையே கலகலப்பாக்கிட்டார் ...அந்த எபிசோட்  இங்க....
நல்ல செய்தி

இப்போலாம் குழந்தைங்க அதிகம் செலவு செய்றது மொபைல் போன்ல தான்.
எவ்ளோ சொன்னாலும் கேக்குறது இல்ல..இதனால கவலைப்படாத,கோவப்படாத பெற்றோர்கள்  இருக்கவே முடியாதுங்குற நிலைக்கு வந்தாச்சு..இந்த பெற்றோர்களுக்குநிம்மதி குடுக்குற விதமா குழந்தைகள் அளவுக்கு அதிகமாக மொபைல் போனைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவும் டொரோண்டோவில் செயல்பட்டு வரும் நிறுவனமொன்று புதியதொரு ஆன்ட்ராய்டு மென் ஒருங்கியை உருவாக்கியிருக்கு.


KYTEPHONE என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஒருங்கியை யார் வேண்டுமானாலும் (இன்டர்நெட் வசதியுடன்) தங்களின் மொபைல் போனில் டவுன்லோட் செஞ்சு ,இன்ஸ்டால் பண்ணிக்கலாம்.
.
இந்த ஒருங்கியை மொபைல் போனில் பயன்படுத்துவதற்கு ஒரு யூசர்நேம்,பாஸ்வேர்ட்  ஒன்றையும் புதிதாக உருவாக்கி, SIGN UP / IN பண்ணனும்.

உடனே ஆன்ட்ராய்டு பயன்பாட்டிலுள்ள மொபைல் போன் KYTEPHONE ஒருங்கியின் புதிய முகப்பு, திரைக்கு மாறிடுது (PARENT மோடிலிருந்து CHILD மோடுக்கு மாறிடுது). இந்தப் புதிய முகப்புத் திரையிலிருந்து குழந்தைகள் வெளியேற முடியாது. மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்து, ஆன் செஞ்சாகூட இந்தத் திரையை விட்டு குழந்தைகளால வெளிலவர முடியாது .

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

குடும்ப அட்டை எப்படி பெறுவது?

குடும்ப அட்டையை விண்ணப்பிக்குறதுக்கான விண்ணப்பபடிவம் எல்லா தாலுகா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் விண்ணப்பப் படிவங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் கிடைக்கும் . தமிழக அரசின் இணையதளத்தில கூட டவுன்லோட் பண்ணிக்கலாம். http://www.consumer.tn.gov.in/pdf/ration.pdf


சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவங்க அவங்க வசிக்குற பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்கணும் .

மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவங்க வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்கணும் விண்ணப்பத்தைப் பதிவுத் தபாலிலும் அனுப்பலாம். நேர்ல கொடுத்தா கொடுத்ததுக்கான ரெசிப்ட் கண்டிப்பா வாங்கிக்கோங்க.

புதிய குடும்ப அட்டை வாங்கும்போது ரூ10 கட்டணமாக வாங்கிக்குறாங்க.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செஞ்சு அதோட கீழ்கண்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்னோட ஜெராக்ஸ் சேர்த்து தரனும்.

1.தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை, மூன்று மாசத்துக்கான வீட்டு வரி / மின்சாரக் கட்டணம் / தொலைபேசிக் கட்டணம் செலுத்திய ரசீதுகளில் ஏதாவது ஒன்னு அல்லது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க ஜெராக்ஸ் / பாஸ்போர்ட் ஜெராக்ஸ்/ வாடகை ஒப்பந்தம் இதுல ஏதாவது ஒன்னு மட்டும் போதும் . ஒரு வேளை இந்தச் சான்றுகள் ஏதும் இல்லையென்றால், நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் வாங்கி கொடுக்கலாம்.
v 2. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கப்பட்டிருப்பின் குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பளிப்புச் சான்று.

3. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கும் அதிகாரியிடம் (TSO) பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.

4.முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் குடும்ப அட்டை இல்லை என்ற சான்று.

5.எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர் போன்றவை அடங்கிய விவரங்களை தரனும் .

6.விண்ணப்பத்தை கொடுத்ததுக்கு அப்பறம் விண்ணப்பத்தோட வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி இது எல்லாம் சேந்த ஒப்புகைச் சீட்டை மறக்காம வாங்கிக்கணும் . பதிவுத் தபாலில் அனுப்புறவங்க தன்னோட முகவரியிட்ட தபால் தலையோட இருக்குற தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

குடும்ப அட்டை தொலைஞ்சு போச்சுன்னா புது குடும்ப அட்டை வாங்க

தொலைஞ்சு போன குடும்ப அட்டையோட ஜெராக்ஸ் மற்றும் ஏதாவது ஓர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ்யைம் சேர்த்து கிராமப்புறங்களில் வட்டார உணவுப்பொருள் வழங்கு அலுவலரையும், நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணைய அலுவலரிடம் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்ங்க குடுக்குற விண்ணப்பத்தைப் பூர்த்தி செஞ்சு தரனும் .அவங்களோட விசாரணைக்குப் பிறகு புதுக் குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டைகிடைச்சிடும் . இதற்கு ரூ.10 கட்டணம் செலுத்தணும்.

விண்ணப்பித்த 30 நாட்கள்ல அதிகாரிகள் நேர்ல வந்து ஆய்வு செஞ்சு 60 நாட்களுக்குள்ல குடும்ப அட்டை கொடுக்கணும் அல்லது குடும்ப அட்டை கொடுக்கப்படாததற்கு காரணம் சொல்லநம் . அதையும் மனுதாரருக்கு 60 நாட்களுக்குள் தெரிவிக்கணும் .

சரியான காரணம் இல்லாம காலதாமதம் ஆனா நீங்க புகார் செய்யணும்னு நினச்சா மாநில நுகர்வோர் மையத்தை 044 2859 2858 என்ற எண்ணில் தொலைபேசியிலோ, consumertn.gov.in, schtamilnadugmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, 4ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரியில் தபால் மூலமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

தங்கள் பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் பகுதியின் பொது விநியோகக் கடைக்கான பொருட்களின் ஒதுக்க்கீடு குறித்து அறிய http://cscp.tn.nic.in/allotmentver2/repallotmentshopwise.jsp இத்தளத்திற்குச் செல்லவும்.

http://egov-civilmis.pon.nic.in/SearchCardPondyAppNo.aspx புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் இத்தளத்திற்குச் சென்று விண்ணப்பத்தின் நிலையறியலாம்.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ள http://www.consumer.tn.gov.in/fairprice.htm

                                                      --நன்றி வாரஇதழ் 

சனி, 26 அக்டோபர், 2013

டெடி பியர் - பேர் ஏன் வந்ததுன்னு தெரியுமா?

அநேகமான இந்த காலேஜ் படிக்குற பொண்ணுங்களுக்கு டெடி பியர் பொம்மைனா  ரொம்ப பிடிக்கும், பல பெண்களுக்கு ரொம்ப நெருங்கிய ஃப்ரண்ட் இந்த டெடி பியர் பொம்மை தான்.. சின்ன குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும்...

டெடி பியர் பொம்மையை பிடிச்ச வளந்த குழந்தைகள் மற்றும் வளராத குழந்தைகளுக்கு பியர் பொம்மைக்கு 'டெடி பியர்'-னு பேர் ஏன் வந்ததுன்னு தெரியுமா?

கரடி பொம்மை முதல் முதல்லா அமெரிக்காவில் தான் அறிமுகம் ஆச்சு...
அப்போ அமெரிக்க அதிபரா இருந்த 'தியடோர் ரூஸ்வெல்ட்' வேட்டையாடுறதுல ரொம்ப விருப்பமா இருந்தார்.1902-ஆம் வருஷம் நவம்பர் 14 -ல மிசிசிபி பகுதியில அவர் வேட்டையாதிட்டு இருந்தப்போ , ஒரு சின்ன கரடி அடிப்பட்டு இருக்குறதை பாத்துருக்கார்..அவர் கூட வந்தவங்க அந்த கரடியை சுட்டுட சொல்லி சொல்லிருக்காங்க ..ஆனா அதிபர் அதை சுடாம விட்டுட்டார்.

இந்த செய்தி நாடு முழுக்க பரவி ,பத்திரிக்கைல அந்த கரடிக்குட்டியோட புகைப்படத்தோட  செய்திகள் வந்துருக்கு..
அதிபர் 'தியடோர் ரூஸ்வெல்ட்' -க்கு 'டெடி ' -னு செல்லப் பேரும் இருந்துருக்கு...அந்த நேரத்துல அதிபர் 'தியடோர் ரூஸ்வெல்ட்' -டையும் கரடிக் குட்டியையும் சேத்து பத்திரிக்கைல கார்ட்டூன் படம் போட்டு அதுக்கு 'டெடி - பியர்'-னு தலைப்பு வச்சுருக்காங்க .அதாவது 'ரூஸ்வெல்ட்டும்  -கரடியும்' - னு அர்த்தம்...

இந்த பெயரை பொம்மை நிறுவனங்கள் எல்லாம் பயன்படுத்திக்கிட்டு இந்த பொம்மைக்கு 'டெடி-பியர்' - னு பேர் வச்சுருக்காங்க.அப்போதிலிருந்து இந்த பெயர் கொண்ட பொம்மை பிரபலம் ஆகிடுச்சு..

அமெரிக்காவுல நவம்பர் 14 - டெடி பியர் தினம்னு கொண்டாடுறாங்களாம்..(ஏம்பா அப்டியா?)

                                                            ---நன்றி நாளிதழ் 

வியாழன், 24 அக்டோபர், 2013

உங்க குழந்தைகள் வீணாபோக நீங்களே காரணம் ஆகிடாதீங்க பெற்றோர்களே!!!!


பிள்ளைங்க காதலிக்க ரெண்டுவிஷயத்தை முக்கிய காரணமா சொல்லலாம்

1. இவங்க தன்னோட அம்மா /அப்பா போலவே இருக்காங்க குணத்துல , அந்த கம்ஃபர்டபெல் இவங்க கிட்டயும் இருக்கும்னு நினைச்சு காதலிக்குறது.

2.அன்பும் அரவணைப்பும் சரியா/சுத்தமா கிடைக்காம ,திடீர்னு அது கிடைக்கும் போது அவங்க மேல காதல் வருவது..

முதல் வகை சாதாரணமானது ஆனா இரண்டாவது வகைல காதலிக்குறவங்கதான் ரொம்ப ஈஸியா ஏமாந்து போகுறது..

இதே அன்பு காலம் முழுக்க கிடைக்கும்னு நினச்சு அது பாதியில கிடைக்காம போகும் போதோ இல்ல / ஒரு கட்டத்துல கிடைக்காம போகுறதோ தான் அவங்களுக்கு மனசுல வலியை இன்னும் இன்னும் அதிகமா உண்டாக்கும்..

இந்த ரெண்டாவது வகைக்கு காரணம் பெத்தவங்கதான்..பெத்தவங்ககிட்ட கிடைக்காததைதான் அவங்க வெளில தேடுறாங்க..சிலபேருக்கு நல்ல விதமா அமையுது பலபேருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுது....இப்படி பல ஏமாற்றம் தான் சமுதாயத்துல அந்த பிள்ளையை தவறான வழிக்கு போக தூண்டுது...நீங்க பெத்து வளத்த உங்க குழந்தைகள் வீணாபோக நீங்களே காரணம் ஆகிடாதீங்க பெற்றோர்களே....

புதன், 23 அக்டோபர், 2013

போர்வெல் ரோபோ

ழ்துளைக் குழிகளில் விழுந்த குழந்தைகளை ஐந்து நிமிடங்களிலேயே பாதுகாப்பா மீட்கும் ‘ போர்வெல் ரோபோ’வை தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின் புத்துரைச் சேர்ந்த மணிகண்டன் வடிவமைச்சு செயல்படுத்திக் காட்டியிருக்கிறாராம் 

சென்னை ஐ.ஐ.டி., நடத்திய தென்னிந்திய அளவிலான இன்னோவேஷன் போட்டியில் இந்த போர்வெல் ரோபோ முதலிடம் பிடித்து, மிகச்சிறந்த கண்டுபிடிப்பு விருதையும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும் மணிகண்டனுக்கு வாங்கி கொடுத்துருக்கு .

இந்த போர்வெல் ரோபோவை இந்தியாவிலேயே முதன்முறையாக வடிவமைத்துள்ள மணிகண்டன், மதுரை டி.வி.எஸ். சமுதாயக் கல்லூரியில் தொழிற்கல்வி ஆசிரியராகப் வேலை செய்றாராம் .

ரேஷன் கடை சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ள..

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.

இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:

குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.


உதாரணமாக :-

PDS 01 BE014

என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.

அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.

திங்கள், 21 அக்டோபர், 2013

நீங்க சிகரெட் பிடிப்பவரா ?

நீங்க சிகரெட் பிடிப்பவரா ?


அப்போ இதப் படிங்க...

- சிகரெட் பிடித்து முடிக்கும் தருவாயில் உள்ள வெப்பநிலை சுமார் 800 டிகிரி செல்சியஸ் ..இந்த வெப்பத்தில் பித்தளையும் துத்தநாகமும் உருகும்.இந்த வெப்பம் தான் உங்க உதட்டை கருப்பாக்குது .

- அதே அளவுள்ள சூடு உங்கள் நாக்கின் மேல் பட்டு ருசி அறியும் நாளங்களை பாதித்து நீங்கள் உண்ணும் உணவின் ருசியை அறிய முடியாமல் செய்கிறது.

-நீங்கள் ஒவ்வொரு முறையும் உள்ளே இழுக்கும் புகையில் சுமார் 2 மில்லியன் எரிந்த நிலையில் கரித்துகள்கள் நுரையீரலை கடுமையாக தாக்குகிறது.

-இந்த கரித்துகள்கள் காற்று ஆக்சிஜனை திரவ ஆக்சிஜனாக மாற்றும் துவாரத்தில் அடைகிறது.காற்று உள்ளே வரவிடாமல் தடுக்கிறது.

-இதனால் தான் சுவாசத்தில் மாறுதல் ஏற்படுகிறது.

-உங்களின் இல்லற வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

நம் டிரைவ்களின் வரிசையை மாற்ற

நம்மோட மை கம்ப்யூட்டர்ல C :  D:  E:  -னு பல டிரைவ்கள் வச்சுருப்போம்...பொதுவா அதோட ஃபார்மட் எப்படி இருக்கும் Local Disk (C:) இப்படித்தானே ...இதை நாம  (C:)  Local Disk -னு மாத்தலாம் ...எப்படி தெரியுமா?

1. Start -> Run  -> RegEdit -னு டைப் செஞ்சு ok பண்ணுங்க

2.HKEY_LOCAL_MACHINE -> SOFTWARE -> Microsoft -> Windows -> CurrentVersion -> Explorer போங்க ..


3. இப்போ ரைட் கிளிக் செஞ்சு New -> DWord குடுத்து அதுல ShowDriveLettersFirst -நு டைப் செஞ்சு என்ட்டர் பண்ணுங்க.

4. இப்போ இதை டபுள் கிளிக் செஞ்சு இதோட Value  4 -னு  கொடுங்க..

5. சிஸ்டம் restart பண்ணுங்க  இப்போ (C:)  Local Disk - னு  மாறியிருக்கும்.

6. இதை மறுபடியும் பழைய படி  மாத்தனும்னா  அத  டபுள் கிளிக் செஞ்சு இதோட Value 0 -னு  கொடுங்க..

7. இது தவிர இதோட Value 1 -னு மாத்தினா நெட்வொர்ட் டிரைவ் லெட்டர் முன்னாடியும் Local Drive பின்னாடியும் வரும்

8. இதோட Value 2 -னு மாத்தினா Drive பெயர் மட்டும் வரும்.

ட்ரை பண்ணி பாருங்க...

வெள்ளி, 18 அக்டோபர், 2013

இதெப்டி இருக்கு?

இதயத்துல கோளாறுனு ஓரளவுக்கு பிரச்சனை பெருசானதுக்கு அப்பறம் தான் நமக்கு தெரியவரும்.இதயத்துல ஏற்படுற மாற்றத்தை டாக்டர்க்கு உடனடியா 24 மணிநேரமும் தானா தெரியப்படுத்தினா எப்படி இருக்கும்?

இப்படியும் கண்டுபிடிச்சு இருக்காங்க.இது ஒரு சின்ன கருவி.தா நம்ம உடம்புல சின்ன ஆபரேஷன் மூலமா பொறுத்திட்டா ,இதயத்தோட செயல்பாடு ,நுரையீரல்ல நீர்கோர்வை ,நாடித்துடிப்பு எல்லாத்தையும் துல்லியமா கணக்கெடுத்திடுமாம் இந்த கருவி.

நாடித்துடிப்பு குறஞ்சா ,அத அதிகரிக்க பயன்படுற பேஸ்மேக்கராவும்,இதயத்தோட செயல்பாடு குறஞ்சா அதை சரி பண்ற 'ரீசிங்கரனைஷேஷன் டிவைஸ்' ஆக ,நாடிதுடிப்பைஉம் இதய துடிப்பையும் சரி பண்ற டீபிப்ரில்லேட்டெர் ஆக இந்த கருவி செயல்படுமாம்.

இந்த கருவி தானாகவே வயர்லெஸ் மூலமா 5 மீட்டர் தொலைவுக்குள்ள இருக்குற செய்தி கடத்தி கருவிக்கு தெரிவிச்சுடுமாம் .அது சர்வரை அடஞ்சு டாக்டரோட செல்போன்  இல்ல ஈமெயில் முகவரிக்கு செய்தி போயிடுமாம் .

அவசர நிலைமைனா சிவப்பு நிறத்துல லைட் ,சீரான நிலைமைனா மஞ்சள் நிற லைட் எரியுமாம் .

எவ்ளோ சிம்பிள் ஆக்கிட்டாங்க வேலையை ..என்ன சொல்றீங்க?

கட்டாயம் நம் செல்போனில் இருக்கவேண்டிய அவசர உதவி எண்கள்

கட்டாயம் நம் செல்போனில் இருக்கவேண்டிய அவசர உதவி எண்கள் :


போலீஸ் - 100
போலீஸ் SMS - 9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS - 9840983832
தீயணைப்புத்துறை - 101
போக்குவரத்து விதி மீறல் - 103
விபத்து -100 , 103
போக்குவரத்து விதி மீறல் SMS - 9840000103
ஆம்புலன்ஸ் - 102,108
பெண்களுக்கான அவசர உதவி - 1091
குழந்தைகளுக்கான அவசர உதவி - 1098
அவசர காலம் மற்றும் விபத்து - 1099
மூதக்குடிமக்களுக்கான அவசர உதவி - 1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி - 1033
கடலோரப் பகுதி அவசர உதவி - 1093
ரத்த வங்கி அவசர உதவி - 1910
கண்வங்கி அவசர உதவி - 1919

புதன், 16 அக்டோபர், 2013

உடல் உறுப்பு,ரத்த தானம் - டோனார் கார்டு

நாம இறந்ததுக்கு அப்பறம் நம்முடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலமா பல பேரின் வாழ்க்கைக்கு நல்லது செஞ்ச திருப்தி மட்டும் இல்லாம அவங்க மூலமா நாம இறந்ததுக்கு அப்பறமும் இந்த உலகத்துல வாழ்ந்துகிட்டே தான் இருப்போம்......

நாம இறந்ததுக்கு அப்பறம் ,யாருக்கும் உபயோகப்படாம எறிஞ்சு சாம்பல் ஆகவோ இல்ல மக்கி அழுகப் போகும் இந்த உடல் உறுப்புகளை தானம் பண்ணலாமே நாம்..


உடல் உறுப்பு தானம் பண்றதை பற்றியான விழிப்புணர்வு இப்போ நிறையவே இருக்கு....

நீங்க உடல் உறுப்பு தான் செய்ய விருப்பப்பட்டீங்கனா  கீழுள்ள இன்டர்நெட் பேஜ்க்கு போங்க அதுல ரெஜிஸ்டர் பண்ணுங்க..அதுல இருக்கும் டோனார் கார்ட் ப்ரிண்ட்அவுட் எடுத்து எப்பவும் உங்க கூட இருக்குற அட்ரஸ் ஃப்ரூப் ,ATM கார்ட் ,கிரெடிட் கார்ட் கூட இதையும் வச்சுக்கோங்க..

செவ்வாய், 15 அக்டோபர், 2013

என்ன சாதிச்சுட்டோம் ?

14 மொழிகளில் 8000-த்திற்கும் அதிகமான பாடல்களை பாடின வாணிஜெயராம் அம்மாவிற்கு ,ஃபிலிம்ஃபேரின் 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது..அப்போ அவங்க பல்வேறு மொழிகள்ல தான் பாடிய பாடிகளில் இருந்து ரெண்டு வரி பாடினாங்க..பாடும்போது அவங்க தன்னோட செருப்பை கழட்டிட்டு பாடினாங்க.பாடி முடிச்சதும் தான் செருப்பை மறுபடியும் காலில் போட்டுகிட்டாங்க....இந்த மரியாதை ,தொழில் பக்தி இந்த கால இளம் பாடகர்களில் எத்தனை பேருக்கு இருக்கு?


20000-த்திற்கும் மேல பாடல்களை பாடின SPB சார்,ஜானகி அம்மா.சித்ரா அம்மா இப்பவும் பணிவா,தன்னடக்கத்தோட தான் இருக்காங்க..ஆனா ஒன்னு ரெண்டு படத்துல ஒன்னு ரெண்டு பாட்ட பாடிட்டு நம்ம இளசுகள் சிலபேர் பண்றத பாக்கும்போது பெரும் அக்கப்போராக அல்லவா இருக்கின்றதுனு புலிகேசி சொல்றமாதிரி சொல்லவேண்டியதா இருக்கு...

எங்க இருந்து வருது நமக்கு இந்த 'தலைக்கனம்'? என்ன அப்படி சாதிச்சுட்டோம் நமக்கு 'தலைக்கனம்' வருது?

திங்கள், 14 அக்டோபர், 2013

பாடலின் வரிகள் - பூக்கள் பூக்கும் தருணம் - மதராசப்பட்டினம்

படம் : மதராசப்பட்டினம் 
பாடல் : பூக்கள் பூக்கும் தருணம் 
பாடியவர் : ஹரிணி,ஆண்ட்ரியா ,ரூப்க்மார் 
இசை : G .V பிரகாஷ் குமார் பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லை
நேற்று வரை நேரம் போகவில்லை
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே

வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை வாழ்வின் ஒளிப்பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே

சனி, 12 அக்டோபர், 2013

ஜாதி தேவையில்லை

அந்த அரசாணை (நிலை) 205-இல், ‘பார்வையில் காணும் (அரசாணை 1210, நாள். 02.07.1973) அரசாணையின்படி - இடைநிலைப் பள்ளிச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றில் ஜாதி இல்லை, சமயம் இல்லை என்று குறிப்பிடவோ, அந்த இரு பத்திகளுக்கும் எதிரான இடத்தைக் காலியாக விடவோ எவரேனும் விரும்பினால், அவ்வாறே செய்யும் உரிமையை அவருக்கு அளிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. பள்ளியில் சேரும்போதும் மற்ற சமயங்களிலும் பெற்றோர் விருப்பப்படாவிட்டாலும் தெரிவிக்க இயலாவிட்டாலும் ஜாதி, சமயக் குறிப்பு தேவையில்லை எனவும் ஆணையிடப்படுகிறது’ என்று தெரிவித்தது.

‘பார்வையில் கண்ட அரசாணையின்படி மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்/பாதுகாவலர் விருப்பப்பட்டால் அந்த மாணவனின் பள்ளிச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் ஜாதியில்லை, சமயமில்லை என்று குறிப்பிடவோ அல்லது அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ எவரும் விரும்பினால் சம்பந்தப்பட்டவரின் விருப்பக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு அவர்களின் விருப்பப்படியே சான்று வழங்கலாம்

இன்னொன்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஜாதியைக் குறிப்பிடாதவர்களின் குழந்தைகள், பொதுப்பிரிவில் உள்ளவர்களாகக் கருதப்படுவார்கள்.இடஒதுக்கீடு போன்ற சில சலுகைகள் அவர்களுக்குக் கிட்டாமல் போகலாம்.

ஜாதி இல்ல ஒண்ணுமில்ல ஜாதியை ஒழிப்போம்னு சொல்றவங்க எல்லாம் எங்க மொதல்ல இத செய்யுங்க பாப்போம் ..

பக்கவாதத்துக்கு பை... பை... சொல்லுங்க

பக்கவாதம் வந்தவங்களை திரும்ப எழுந்து நடக்க வைக்க, புதிய மாத்திரைகளை கண்டுபிடிசிருக்கார், அமெரிக்க ஆராய்ச்சியாளரான பேராசிரியர் பிராங்க் லோங்கோ.

உடல் இயக்கம் முழுசும் நின்னு போன சுண்டெலிகளுக்கு இந்த மருந்தைக் கொடுத்ததுல அவை நடக்கத் ஆரம்பிச்சதோடு, நீச்சல் பயிற்சியைப்போல சில உடல் அசைவுகளையும் செஞ்சு , விஞ்ஞானிகளை வியப்படைய வச்சிருக்கு.

கலிஃபோர்னி யால இருக்குற ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இந்தப் பேராசிரியர், சுண்டெலிகளை வச்சு பரிசோதிச்ச மருந்தின் பெயர் LM11A-31. அடிபட்ட 4 மணி நேரத்தில் ஒரு தடவையும் அதுக்கு அப்பறம் தினமும் 2 வேளை வீதம் 42 நாட்கள் தொடர்ந்து இந்த மருந்தைக் கொடுத்து சோதிச்சபோதுதான் பக்கவாதம் பாதித்த சுண்டெலிகள் நடக்க ஆரம்பிசிருக்கு. இது மனிதர்களுக்கும் கொடுத்துப் பரிசோதிச்ச பாத்ததுக்கு அப்பறம் நடைமுறைக்கு வரும்.

                                      ----நன்றி வார இதழ் 

வெள்ளி, 11 அக்டோபர், 2013

பாடலின் வரிகள் - என் வீட்டுல நான் இருந்தேனே - இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

படம் :இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா  
பாடல் : என் வீட்டுல நான் இருந்தேனே
பாடியவர் : கானா பாலா  
இசை : சித்தார்த் விப்பின்  
பாடலாசிரியர் : லலிதனாத்  
என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல

அவ டாடி மூஞ்சி சரியில்ல
அவ மம்மி பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவளை மறக்க முடியல

நான் லவ்வால பல பல்பு வாங்கின பையன்
அதனால என் லைப் ஒளி வீசுதே
அவள் பின்னால நான் கூட போனேனே லவ்வ சொல்ல
சைனா போனுல சிக்னல் இல்ல போச்சே
வட போச்சே

'Send To' ஆப்ஷன்ல் நமக்கு விருப்பப்பட்டதை சேர்க்க

எதாவது ஒரு ஃபைல் மேல ரைட் கிளிக் பண்ணும்போது 'Send To' -னு ஒரு ஆப்ஷன் பாக்கலாம் ...


இப்போ நாம ஒரு USB டிரைவ் அல்லது பென் டிரைவை ,சிஸ்டம் இல்ல லேப்டாப்ல கனெக்ட் பண்ணினோம்னா அது அந்த  'Send To' ஆப்ஷன்ல தெரியறதை பாக்கமுடியும்..இது மட்டும் இல்லாம நமக்கு வேண்டிய டிரைவ் அல்லது ஃபோல்டர்களை அந்த ஆப்ஷன்ல சேக்கமுடியும் ..
எப்படின்னு பாப்போமா ...

1. Start -> Run -> இதுல 'SendTo' னு டைப் செஞ்சு ok குடுங்க..

2. இப்போ ஒரு விண்டோ ஓப்பன்  ஆகும்  ...


வியாழன், 10 அக்டோபர், 2013

ஃப்ரிட்ஜை பராமரிப்பது எப்படி?

-ஃப்ரிட்ஜின் பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது.அந்த வலையில் தண்ணீர் படக்கூடாது .


-ஃப்ரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றை கொண்டு துடைக்கக் கூடாது.உலர்ந்த துணி கொண்டு துடைக்கவேண்டும்.

-மாதம் ஒருமுறையாவது ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யவேண்டும்.

- ஃப்ரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியதை வைத்துக் குத்தக்கூடாது.

புதன், 9 அக்டோபர், 2013

காலி பாட்டிலுக்கு ரயில் டிக்கெட் !!!!

காலி குடிநீர் பாட்டில்களை குடுத்து ரயில் டிக்கெட் வாங்குற முறையை பீஜிங் அரசு செஞ்சுருக்காங்கலாம்.


சீனாவுல ரயில்ல பயணம் செய்றவங்க ,அங்க அங்க காலி பாட்டில்களை தூக்கி போட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துறாங்கனு அந்த நாட்டு அரசு காலி குடிநீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய ஒரு ஐடியா பண்ணிருக்காங்க.

ரெண்டு சப்வே ரயில் நிலையத்துல காலி பாட்டில்களை சேகரிக்கும் இயந்திரத்தை வச்சுருக்காங்க.ஒரு காலி பாட்டிலை இந்த இயந்திறத்துல போட்டா 0.15 டாலர் தொகை அவங்களுக்கு கிடைக்கும்.15 பாட்டில்களை போட்டால் குறிப்பிட்ட தூரத்துக்கு ரயில்ல பயணம் செய்ய டிக்கெட் எடுக்குற அளவுக்கு பணம் கிடைக்குமாம்.

நல்ல ஐடியா தான்.....

இடத்தை சுத்தமா வச்சுக்க என்ன என்ன தில்லாலங்கடி வேல செஞ்சு மக்களை கவரவேண்டியதா வேண்டியதா இருக்கு..

வியாழன், 3 அக்டோபர், 2013

பிரின்டரின் வேகத்தை அதிகப்படுத்துறது எப்படி?

பிரின்டரின் வேகத்தை அதிகப்படுத்துறது எப்படின்னு தெரிஞ்சுப்போமா?

பிரின்டர் ஸ்பூலர் (Printer Spooler )-னு  ஒரு ஆப்ஷன் இருக்கு..பொதுவா இது என பண்ணும்னா ,நாம பிரின்ட் எடுக்க கொடுத்தப் பக்கங்களை கொஞ்ச நேரம் தன்கிட்ட வச்சுக்கிட்டு(அதுக்கு என்னகவலையோ ஏக்கமோ :) ) அப்பறம் தான் ப்ரின்ட் எடுக்க வேண்டிய பக்கத்தை பிரின்டருக்கு அனுப்பும் ..

பொதுவா எல்லா பிரின்டர்ளையும்  ஸ்பூலர் ஆப்ஷன் Enable ஆகித்தான் இருக்கும்..அத disable பண்ணிட்டா பிரின்ட் எடுக்குற வேகம் அதிகமாகும்...

அத எப்படி செய்றதுன்னு சொல்றேன் இப்போ...

முதல்ல ,Start -> Settings  -> Printers ஆப்ஷன்  போங்க...
நீங்க உபயோகிக்கும் பிரிண்டரின் பெயரின் மேல கர்சர் வச்சு ரைட் கிளிக் பண்ணி ப்ரோபர்ட்டீஸ் போங்க ...


அங்க , 'Print directly to the printer ' - னு  ஒரு ஆப்ஷன் இருக்கா ..அதை செலக்ட் செஞ்சு 'Apply ' , 'Ok ' குடுங்க...

இப்போ உங்க ப்ரின்டர் வேகமா வேல செய்யுதான்னு பாருங்க....

புதன், 2 அக்டோபர், 2013

அரசு தரும் ஐஏஎஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சி..

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளில் சேருவதற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி அளிக்கிறது.


சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசுத் துறை நிறுவனமான சென்னையிலுள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தின் கீழ் இயங்கும் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம், இலவசப் பயிற்சியை அளித்து வருகிறது. இப்பயிற்சி மையம் தமிழகத்தில் உள்ள, குறிப்பாக பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும்.

இங்கு பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு இலவச தங்கும் வசதியும் செய்து தரப்படுகிறது. பெண்களுக்கென தனி விடுதி வசதியும் உண்டு. 24 மணி நேரம் இணையதள வசதி, 21 ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகம், நேர்த்தியான வகுப்பு, ஒளி,ஒலி வகுப்பறை, தங்குமிடம் என அனைத்தையும் இலவசமாகக் கொடுத்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு உங்களை முழுமையாக தயார் செய்கிறது இப்பயிற்சி மையம். தரமான ஆசிரியர்கள், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் வழிகாட்டுதல்கள், தன்முனைப்புப் பயற்சிகள், ஊக்குவிப்புப் பயிற்சிகள், பாடவாரியான பயிற்சிகள், குழு விவாதம் உள்பட அனைத்தும் இங்கு உண்டு.

செவ்வாய், 1 அக்டோபர், 2013

கொசுவை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுப்போமா?

-கொசு அதிகமா கடிச்சா நம்ம வீட்ல இருக்குறவங்க கொசுவுக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்காம் அதான் கடிக்குதுன்னு கிண்டல் பண்ணுவாங்க..உண்மையில கொசு நம்ம கடிக்க காரணம் நாம வெளியிடற கார்பன்டை ஆக்ஸைடுனால அது கவரப்பட்டு நம்மளநோக்கி வருது...


-கொசுவுக்கு பல் கிடையாது..அதனால கொசு கடிக்காது..அதன் தலைப்பகுதியில ஊசி போன்ற கூர்மையான குழல் இருக்கு இதை மூலமா இது மூலமா தான் நம்ம உடம்புல குத்தி ரத்தத்தை உறிஞ்சுது..

-ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறஞ்சிடக்கூடதுங்குறதால அதோட எச்சில் போன்ற திரவத்தை வெளிப்படுத்துது.இதுல இருக்குற ரசாயனம் தோள்ல பட்டதும் நமக்குஎரிச்சலும் அரிப்பும் ஏற்படுது.

-ரத்தம் உறிஞ்சும் அளவு கொசுவுக்கு கொசு மாறுபடும்.ஒரு கொசு தனது உடல் எடைல 1 1/2 மடங்கு அளவு ரத்தத்தை உறிஞ்சும்.

-பெண் கொசுதான் மனிதனோட ரத்தத்தை உறிஞ்சி நோயை பரப்புது.