ராவணன் பற்றியும் அவருடைய விமானம் பற்றியும் முத்துக்குமார் சுப்பு ரெட்டி என்பவர் FB-ல் பதிந்த தகவல்களை அப்படியே இங்கு பகிர்கிறேன்
அவருடைய பதிவில் இருந்து,
இராமாயணத்தில் இராவணன் பயன்படுத்தியது எந்த வகை விமானம்.?என்ன 1500 வருடங்களுக்கு முன்பு விமான ஓடுதளமா? என்று ஆச்சர்யமாக இருக்கிறதா?
அருகில் இருக்கும் படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். அந்த பெரிய மலைச் சிகரங்கள் அழகாக தட்டி, தட்டையாக்கி விமானம் தரையிறங்கத் தேவையான நீளம், அகலம் என்று மிகத் தெளிவாக ஒரு விமான ஓடுதளத்தையே உருவாக்கியிருக்கிறார்கள்.
இது தானாக உருவானதல்ல என்று புவியியல் ஆய்வாளர்கள் உறுதியாக கூறுகிறார்கள். அப்படியானால் யார் இதனைச் செய்திருப்பார்கள்? இங்கே வாழ்ந்த பண்டைய மக்களா? எதற்காக செய்தார்கள்? அவர்கள் கடவுள் (வேற்றுக்கிரகவாசிகள்) இங்கே தரையிரங்கியிருப்பாரோ? ஒருவேளை அவர்கள்தான் இந்த விமான ஓடுதளத்தை நிறுவியிருப்பார்களோ? அப்படியானால் உலகின் பழமையான விமான ஓடுதளம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.