பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 10 ஆகஸ்ட், 2013

இதுக்காகவும் தான் கோவிலுக்கு போறோம் !!!!!!தமிழர்களோட வரலாற்றை பத்தி படிச்சுக்கிட்டு இருந்தப்போ என் கண்ணுல பட்ட இந்த போஸ்ட் , படிச்சுட்டு ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே போனேன் நான்...எப்படி பட்ட திறமைசாலிகளா , அறிவாளிகளா இருந்துருக்காங்க நம்ம முன்னோர்கள்..ச்ச...அந்த காலத்துல வாழணும்னு எனக்கு ஆசையே வந்துடுச்சு...அட்லீஸ்ட் ,பிற்காலத்துக்கு போக  ஒரு காலச்சக்கரம் இருந்தா எப்படி இருக்கும் ?????

கோவிலுக்கு போ கோவிலுக்கு போனு ,பெரியவங்க சொல்லும்  போது ..எப்ப பாரு கோவிலுக்கு போக சொல்லுங்க..அப்டியே சாமியாரா போய்டுறேன்னு சொல்லி கிண்டல் பண்ற இந்த காலத்து பிள்ளைங்க ஏன் கோவிலுக்கு போக சொல்றாங்கன்னு அறிவியல் ரீதியா புரிஞ்சுகிட்டாங்கனா இனி அப்படி சொல்லமாட்டாங்க..


இது அந்த காலத்துல கட்டின பழமையான கோவில்களை பத்தி மட்டும் தான் இந்த அறிவியல் பூர்வமான விஷயத்தை இவங்க சொல்றாங்க..

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்கள்  ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே சிலை  கிடைக்க பெறும் அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா?

அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்றுபக்கமும் மூடி, வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரே  வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கச் செய்வதற்காகத்தான் . இது உடனே நம்மால் தெரிந்து கொள்ள முடியாத ஒரு எனர்ஜி.இங்க போனா ஒரு விதமான எனர்ஜி கிடைக்கும்னு சொல்வாங்க இல்லையா அது இதனாலதான்.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதைஅது தான் ..அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை நம்முடனும்  சேர்ந்து அப்படியே நம் உடம்பில் வந்து சேரும்.

இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கும்  (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடியும்  இருக்கும்...அது செயற்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல ,அது அந்த எனர்ஜியை அப்படியே  பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ,ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கப்பட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை கொண்டது மட்டும் இல்லாமல் அது ஒரு ஆன்டிபயாட்டிக் .இந்த தீர்த்தம் வாய் நாற்றத்தை போக்கும் , பல் சுத்தம் செய்யும்  மற்றும் இரத்ததை சுத்தப்படுத்தும்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் திரையை திறப்பார்கள் இதற்கு காரணம். அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர , அது அப்படியே நமக்கும் வந்து சேரும். அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது நம் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வருவதற்க்கு காரணம் இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் ,அந்த எனர்ஜி அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து நம் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.

பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி, சக்தியை  கொடுக்கிறது.

மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து ,மீதம் உள்ள  எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வருவதற்க்கான ஆற்றலைக் கொடுக்கும்  ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த ப்ராகாரத்திற்க்கும்  ஒரு நேரடி  தொடர்பு உண்டு.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இடிதாங்கியாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் கோபுர உச்சியில் கொட்டப்படும் வரகு போன்ற தானியங்களும் அதன் சத்திகளும் சேர்ந்து தான்  சாதாரண கலசத்தையும் இடிதாங்கியாக மாறும் திறன் படைத்ததாக மாற்றுகிறது..

கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம்.. ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ரல் செய்யும் என்பது  சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும்..

புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால்தான்.

 சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே நம்முடன் சேர்ந்து  வெளியே செல்ல வேண்டும் எனறு முன்னோர்கள் நமக்கு வகுத்த ஃபார்முலா தான் இந்த கோயில் டெக்னாலஜி.
                                        ----    நன்றி FB 

2 கருத்துகள்:

 1. ஒரு பதிவின் மூலம் உங்கள் பேச்சு ஒலித் தொகுப்பு எப்படி தயார் செய்றீங்க என்பதை படிப்படியாக விளக்க முடியுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 1.முதல்ல நமக்கு தேவையான ஆடியோவை ரெகார்ட் செஞ்சுக்கணும்.

   2.ப்ளாக் போஸ்ட்களில் ஆடியோ சப்போர்ட் செய்யும் ஒரு மென்பொருள் தான் சவுண்ட் க்லௌட் (Sound cloud )..அந்த தளத்தில் ரெஜிஸ்ட்டர் செஞ்சுகிட்டு .நீங்க ரெகார்ட் பண்ணின ஆடியோவை அதுல ஏற்றணும்(upload ) ..

   3.அதுல பப்ளிக் ,பிரைவேட்-னு ரெண்டு ஆப்ஷன் இருக்கும் ..உங்களுக்கு எது வேணுமோ அதை செலக்ட் பண்ணிக்கலாம்..

   4.இறுதியா 'சேவ்' பண்ணிக்கணும்..இப்போ உங்க ஆடியோ அந்த தளத்துல 'சேவ்' செய்ய பட்டுடுச்சு..

   5.அதை நீங்க விருப்பம் போல அந்த சோஷியல் நெட்வொர்க்கிற்கும் 'ஷேர்' பட்டனை கொடுப்பதன் மூலமா அதற்க்கான ஒரு பார்மெட் திரைல தெரியும்..அது HTML கோடிங்..அதை அப்படியே 'காப்பி' செஞ்சுகிட்டு ,உங்க ப்ளாக் போஸ்ட்ல HTML-பகுதியில 'சேவ்' பண்ணிக்கணும்..அவ்ளோதான்.. ..

   இந்த 'சவுண்ட் க்லௌட் ' தளத்துல இருக்குற குறை என்னன்னா, ஃப்ரீ யூசர்-களுக்கு குறைந்த அளவு (size/time ) இடத்தை மட்டுமே வழங்குறாங்க..அதுக்குள்ள உங்களுக்கு எத்தனை ஆடியோக்களை 'சேவ்' பண்ண முடியுமோ பண்ணிக்கலாம்..அதற்குமேல பண்ணனும்னா குறிப்பிட்ட தொகை செலுத்தனும்..

   நீக்கு