பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

ஆஞ்சநேயரும் அவரோட மாலையும்

ஆஞ்சநேயருக்கு வேண்டிகிட்டு வடைமாலை ,வெற்றிலை மாலை,துளசி மாலைனு சாத்துறோம் இல்லையா.,இந்த மாலைகளுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?

வடைமாலை - எதிரிகளோட தொல்லைகள் நீங்குமாம்,வழக்குகள்ல சாதகமான தீர்வு கிடைக்குமாம்

வெற்றிலை மாலை-சுபநிகழ்ச்சிகள் நடக்குறதுக்கு இருந்த தடைகள் நீங்குமாம்,தொழிலில் வெற்றி கிடைக்குமாம்

துளசி மாலை - சகல பாவங்களிலும் இருந்து நிவர்த்தி கிடைக்குமாம்.

நைட் தூங்குறதுக்கு முன்னாடி 'ராமதாச ஆஞ்சநேயா' அல்லது 'ஸ்ரீராமஜெயம்' அஞ்சு தடவ சொல்லிட்டு தூங்கினா கெட்ட கனவு வராதாம்.

சரி இவருக்கு வடைமாலை அணிவிக்குறோமே அது ஏன்னு தெரியுமா?

ராமரோட பட்டாபிஷேகத்தப்போ சீதாதேவி ஆஞ்சநேயருக்கு முத்து மாலை ஒன்னு பரிசா குடுத்துருக்காங்க.இதை வடநாடுல 'வடமால்யா'-னு சொல்வாங்களாம்.இதத்தான் அப்படியே மருவி தென்னகத்துல 'வடைமாலை' னு சொல்ல ஆரம்பிச்சுருக்காங்க..ஸோ ,வடைல மாலை செஞ்சு சாத்த ஆரம்பிச்சுருக்காங்க ஆளுங்க..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக