பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 30 ஜூலை, 2014

ஆண்டுகளும் விழாக்களும் 01 வது ஆண்டு கடதாசி விழா

 02 வது ஆண்டு பருத்தி ஃ பஞ்சு விழா

 03 வது ஆண்டு தோல் விழா

 04 வது ஆண்டு பூ விழா

 05 வது ஆண்டு மர விழா

 06 வது ஆண்டு சர்க்கரைஃ கற்கண்டு விழா

 07 வது ஆண்டு கம்பளி ஃ செம்பு விழா

 08 வது ஆண்டு வெண்கல விழா

 09 வது ஆண்டு மண்கல விழா

 10 வது ஆண்டு தகரம் ஃ அலுமினிய விழா

 11 வது ஆண்டு எஃகு விழா

 12 வது ஆண்டு லினன் விழா

 13 வது ஆண்டுp பின்னல் விழா

 14 வது ஆண்டு தந்த விழா

 15 வது ஆண்டு படிக விழா

 20 வது ஆண்டு பீங்கான் விழா

 25 வது ஆண்டு வெள்ளி விழா

 30 வது ஆண்டு முத்து விழா

 40 வது ஆண்டு மாணிக்க விழா

 45 வது ஆண்டு நீலக்கல் ஃ இரத்தின விழா

 50 வது ஆண்டு பொன் விழா

 55 வது ஆண்டு மரகத விழா

 60 வது ஆண்டு மணிஃ வைர விழா

 75 வது ஆண்டு பவள விழா

 80 வது ஆண்டு அமுத விழா

 100 வது ஆண்டு நூற்றாண்டு ஃதசரத ஃசகாப்த விழா

திங்கள், 28 ஜூலை, 2014

வாட்ச் ஃபோன் ..


இனி வாட்ச் வழியே மொபைலில் பேசலாம், மெசேஜ் அனுப்பலாம், மின்னஞ்சல் அனுப்பலாம், வழி கேட்கலாம்.

ஸ்மார்ட் வாட்ச்களில் சிம்மைப் பொருத்துகிறார்கள். உடற்பயிற்சிக்கான ஆலோசனைகளை அறிந்து கொள்ள வசதி செய்ய முயற்சி செய்கிறார்கள்.

எழுத்துகளும் எண்களும்நம் எதிரில் கண்ணைச் சிமிட்டும்.

எவ்வளவு கலோரியை எரித்துள்ளோம் என்பதை அறிந்து நடையைக் கூட்டலாம் அல்லது குறைக்கலாம். 

சனி, 26 ஜூலை, 2014

ஐகான்களுக்கு இடையே இடைவெளியை குறைக்க கூட்ட

சில பேர் டெஸ்க்டாப் -ல ஏகப்பட்ட ஐகான்கள் வச்சுருப்பாங்க .சில பேர் டெஸ்க்டாப் முழுசும் ஐகான்களா இருக்கும் .. இந்த ஐகான்களுக்கு இடையில இன்னும் கொஞ்சம் இடைவெளி இருந்தா நல்ல இருக்கும்னு தோணுதா ..தோணுச்சுனா உடனே செய்யல படுத்தி பாத்துடனும் ..எப்படின்னு பாப்போம் ..

1. டெஸ்க்டாப் மேல ரைட் கிளிக் பண்ணுங்க Properties போங்க

2. அதுல Appearance -னு ஒரு Tab இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க..


3 அடுத்து 'Advance' பட்டன் -ஐ கிளிக் பண்ணுங்க.

4. இங்க Item என்ற தலைப்புக்கு கீழ நிறையா ஆப்ஷன்களை பாக்கலாம்.அதுல Icon Spacing -னு இருக்கும் அதை செலக்ட் செஞ்சு அத பக்கத்துல size னு ஒரு பாக்ஸ் இருக்கும் அதுல நமக்கு தேவையான அளவை குடுத்தோம்னா Icon -களுக்கு இடைல இடைவெளி கிடைக்கும் ..

வெள்ளி, 25 ஜூலை, 2014

சுதந்திர தேவி சிலை!!

அமெரிக்கா சுதந்திரம் பெற்று நூறாண்டுகள் ஆனதையொட்டி பிரான்சு நாடு கொடுத்த பரிசுதான் சுதந்திர தேவி சிலை.

1. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் இருக்கிறது லிபர்ட்டி தீவு. இந்தத் தீவில்தான் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்டுள்ளது.

2. இந்தச் சிலையை உருவாக்கியவர் பிரடெரிக் அகஸ்தே பர்தோல்டி. இவருடன் குஸ்டவ் ஈபிள் என்பவரும் வடிவமைப்பில் உதவியிருக்கிறார். இவர்தான் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தையும் உருவாக்கினார்.

3. 1875-ம் ஆண்டு சிலை கட்டுமானம் தொடங்கியது. 1884-ம் ஆண்டு சிலை முழுமை அடைந்தது. பிரான்சில் இருந்து அது கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1886-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி அமெரிக்க மக்களுக்குச் சுதந்திர தேவி சிலை அர்ப்பணிக்கப்பட்டது.

4. சுதந்திர தேவியின் வலது கையில் தீப்பந்தம் உள்ளது. இடது கையில் ஜூலை 4, 1776 என்று எழுதப்பட்ட புத்தகம் இருக்கிறது. இது அமெரிக்கா விடுதலைப் போர் சரித்திரத்தைக் குறிக்கிறது. தலையில் 7 முனைகள் கொண்ட கிரீடம் இருக்கிறது இந்த 7 முனைகள், 7 கண்டங்களையும்,7 கடல்களையும் குறிக்கின்றன.

5. பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர். சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர்.

6. சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன்.


                                                 (தி ஹிந்து தமிழ் :  தெரியுமா உங்களுக்கு நூலில் இருந்து )

வியாழன், 24 ஜூலை, 2014

குப்பைகளின் வகையும் அவை மக்குவதற்க்கு ஆகும் காலமும்

1.காய்கறி ,பழம் மற்றும் உணவுகள் உருவாக்கும் உயிரி கழிவுகள்  - ஒரு வாரம்


2.காகிதம்   -    பத்து முதல் முப்பது நாட்கள்.


3.பருத்தித் துணி     -      இரண்டு முதல் ஐந்து மாதங்கள்


4.மரம்        -      பத்து முதல் பதினைந்து வருடங்கள்


5.கம்பளி       -       ஒரு வருடம்


6.டின்,அலுமினியம்,உலோகக் கழிவுகள்  -   நூறு முதல் ஐநூறு வருடங்கள்


7.பிளாஸ்டிக் பைகள்      -       பத்து லட்சம் வருடங்கள்


8.பிளாஸ்டிக் பாட்டில்கள்       -      கணிக்கமுடியாத காலங்கள் ..


புதன், 23 ஜூலை, 2014

Low Disk Space என்ற செய்தியை நிறுத்த

நாம கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது மெமரியின் இடம் கம்மியானதும் நமக்கு Low  Disk Space என்ற செய்தியை வரும் பாத்துருக்கீங்களா?இந்த செய்தி வராம தடுக்க முடியும்..எப்படின்னு பாப்போம்

1. Start - Run -டயலாக் பாக்ஸில் Regedit -னு டைப் செய்யுங்க.

2. இப்போ ரெஜிஸ்டரில HKEY_CURRENT_USER \Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer போங்க

3. இப்போ வலதுபக்கம் ஒரு DWord புதுசா உருவாக்கி அதுக்கு "No Low  Disk Space Checks" -னு பெயர் கொடுங்க.

4. இப்போ அதோட மதிப்பு 00000001 -னு கொடுங்க.

5. கம்ப்யூட்டர் Restart பண்ணுங்க 

செவ்வாய், 22 ஜூலை, 2014

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 13

விஜய் தொலைக்காட்சியின் "விஜய் விருதுகள்" எனும் விருது விழாவில் 2013-ஆம் வருடத்திற்கான சிறந்த பொழுதுபோக்காளர் என்னும் விருதை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கி கவுரவித்தது விஜய் தொலைக்காட்சி.அந்த காணொளி இதோ..திங்கள், 21 ஜூலை, 2014

வேகத்தடைகளைக்கொண்டு செடிகளுக்கு நீர் ஊற்றும் தொழில்நுட்பம்


இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் நான்குவழிச்சாலைகளின் முக்கிய சிறப்பம்சங்கள் பளபளக்கும் சாலைகளும், சாலைகளின் நடுவில் வளர்க்கப்பட்ட வண்ணமயமான பூச்செடிகளும்தான். ஆனால், பெரும்பாலும் ஆள் அரவமற்ற பகுதிகளில் அமைந்துள்ள நான்குவழிச்சாலைகளில் தண்ணீர் வசதி இருந்தாலும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிப் பராமரிப்பதற்கு ஆளில்லை.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் நான்குவழிச்சாலைகளில் அமைந்துள்ள டோல்கேட்டுகளில் உள்ள வேகத்தடைகளைக்கொண்டு செடிகளுக்கு நீர் ஊற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர், நாகப்பட்டினம் ஈ.ஜி.எஸ். பொறியியல் கல்லூரியின் மூன்றாமாண்டு இயந்திரவியல் மாணவர்கள் முகமது தௌபிக், கார்த்திகேயன், குமரேசன் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர்.

நான்குவழிச்சாலைகளில் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒன்றாக அமைந்துள்ள டோல்கேட்டுகளில் 4 முதல் 6 வேகத்தடைகள் அமைந்திருக்கும். இந்த வேகத்தடைகளின் மீது, வாகனங்கள் ஏறிச்செல்லும் அழுத்தத்தைக்கொண்டு இந்தத் தொழில்நுட்பம் இயங்குகிறது. பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப, டோல்கேட்டுகள் எப்போதும் பிசியாக உள்ளதால், இந்தத் தொழில்நுட்பம் மூலம் 20 முதல் 25 அடி ஆழம் வரை உள்ள நீரை எடுக்க முடியும்" என்கின்றனர், இந்தக் கண்டுபிடிப்புக் குழுவினர். நான்குவழிச் சாலைகளின் நடுவில் செடிகள் அமைக்கப்பட முக்கியக் காரணம், எதிரே வரும் வாகனத்தின் முகப்பு வெளிச்சத்தை இவை பெருமளவில் குறைக்கும் என்பதால்தான். இதனால், பெரும்பாலான விபத்துகளையும் தவிர்க்க முடியும்.

எப்படி இது இயங்குகிறது?

நான்குவழிச்சாலைகளில் உள்ள டோல் கேட்டுகளின் வேகத்தடைகளை தார் மூலம் அமைக்காமல், ரப்பர் மூலம் அமைத்து அதன்கீழ் ஒரு அடி ஆழத்தில் ஸ்பிரிங் போன்ற அமைப்பையும் அதன் அருகில் சாதாரண நீர் இறைக்கும் கைப்பம்பு ஒன்றையும் இணைக்க வேண்டும். வேகத்தடையின் மேல்பகுதியை நீர் இறைக்கும் பம்ப்புடன் முதல் வகை நெம்புகோல் தத்துவத்தைப் பயன்படுத்தி இணைக்க வேண்டும். வேகத்தடைகளில் மீது வாகனங்கள் ஏறி இறங்கும்போது கிடைக்கும் அழுத்தத்தினால் ஸ்பிரிங் கீழ் நோக்கித் தள்ளப்படும். ராக் அண்டு பினியன் முறை மூலம் ஸ்பிரிங்கிற்கு கிடைக்கும் நேர் இயக்குவிசை, சுழற்று இயக்கவிசையாக மாற்றப்பட்டு அருகிலிருக்கும் நீர் இறைக்கும் பம்பு இயங்கத் தொடங்கும்" என்கிறார், கண்டுபிடிப்புக் குழுவினரில் ஒருவரான கார்த்திகேயன்.

இந்தத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், உள்ளூர் சந்தைகளில் எளிதாகக் கிடைக்கும் என்பதால், ஒரு வேகத்தடையில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பொருத்த 1,500 ரூபாய் மட்டுமே செலவாகும். இந்தத் தொழில்நுட்பத்திற்கு மின்சாரம் தேவையில்லை என்பதால், மின்வசதி இல்லாத சாலைப்பகுதிகளிலும் நீர் இறைக்க முடியும்.

தொடர்புக்கு: 95666 68066

ஞாயிறு, 20 ஜூலை, 2014

கங்காரு

-கங்காருகள் ஆஸ்திரேலியா கண்டத்திலுள்ள நியூ கினியா பிரதேசத்தில் அதிகம் காணப்படுகின்றன

-கங்காருவில் நான்கு வகைகள் உள்ளன .. ரெட் கங்காரு , ஈஸ்டர் க்ரே கங்காரு,வெஸ்டர்ன் க்ரே கங்காரு ,ஆண்டிலோப் கங்காரு .

-கங்காரு இரண்டு கால்களை காற்றில் உயர்த்தி குதிக்கும்போது வேகமாக ஓடும் .நான்கு கால்களை தரையில் வைத்து நடக்கும் போது மெதுவாகவே நடக்கும்.

-கங்காருவின் கால்கள் மிக சத்தி வாய்ந்தவை.அந்த கால்களால் தாக்கவும் முடியும்.

-கங்காரு தனது உயரத்தை விட மூன்று மடங்கு உயரம் தாவிக்குதிக்கும் வல்லமை படைத்தது.கங்காருவுக்கு நீந்தும் திறன் உண்டு.

-கங்காரு புல்லை விரும்பி உண்ணும்

-குட்டிக் கங்காருகள் 'ஜோய்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன.

-ரெட் கங்காரு வகைதான் வயிற்றில் பை உடைய உயிரினங்களில் பெரியது.

-காட்டில் வாழக்கூடிய கங்காரு அதிகபட்சம் 6 ஆண்டுகள் வாழும்.

-ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவையான கண்டாஸ் ,கங்காருவை தன சின்னமாக வைத்துள்ளது.

-கங்காரு தாவரங்களில் ஈரத்தன்மை அதிகம் உள்ள தாவரங்களை சாப்பிடும்.
அப்போதுதான் நீண்ட நேரம் நீர் இல்லாமல் அதனால் இருக்க முடியும்.

-ஆடு,மாடுகளை போல கங்காருவும் உணவை அசைபோடும் பண்பு கொண்டது.முதலில் வேகவேகமாக உணவை விழுங்கிவிடும்.பின்னர் மீண்டும் அந்த உணவை ஆசுவாசமாக வயிற்றில் இருந்து வரவழைத்து மெதுவாக மென்று தின்னும்.

-கங்காருவின் பற்கள் விசேஷமானவை.பழுதுபட்ட கடைவாய் பற்கள் முழுமையாக உதிர்ந்து மீண்டும் மீண்டும் வளரும் தன்மை பெற்றுள்ளன.

-கங்காருவின் வால் தசை வலு கொண்டது ,நீளமானது.கங்காரு ஓடிக்கொண்டே திரும்பும் போது விழாமல் சமன்படுத்தும் வேலையை இந்த வால்தான் செய்கிறது.

-கங்காருகள் கூட்டமாக வாழக்கூடியது.ஒரு கூட்டத்தில் 10 முதல் 100 கங்காருகள் வரை இருக்கும்.

-ஏதாவது அபாயச் சூழலை உணர்ந்தால் ஒரு கங்காரு தனது கால்களை பூமியில் வேகமாக அறைந்து மற்ற விலங்குகளை எச்சரிக்கும்.


வெள்ளி, 18 ஜூலை, 2014

சென்னைல ராஜஸ்தான்


 சென்னையில இருந்து 30 கி.மீ. தூரத்துலஇருக்குற தண்டலம் அருகே 15 ஏக்கர் பரப்பளவுல உருவாக்கப்பட்டுள்ள சோக்கி தானி (CHOKI DHANI) என்கிற அழகிய கிராமம் கட்டடக் கலை, கலாச்சாரம், உணவு, கிராமியக் கலைகள்னு எல்லாத்துலையும் ராஜஸ்தானை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துற மாதிரி இருக்காம் .

இந்தியாவுலையே  முதன்முறையா, ராஜஸ்தான் கலாச்சாரத்தை, வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் விதமாக இந்தக் கிராமம் உருவாக்கப்பட்ருக்காம் . புதுமையான இந்த முயற்சிக்கு ராஜஸ்தான் சுற்றுலாத் துறையின் சிறப்பு விருதும் கிடைச்சுருக்காம் .

வியாழன், 17 ஜூலை, 2014

ஜிமெயில் account-ஐ logout செய்ய மறந்துட்டீங்களா?

பிரௌசிங் சென்டர்க்கு போயிட்டு  மெயில் செக் பண்ணுவோம் logout பண்றதுக்குள்ல  கரண்ட் போயிடும் அல்லது ஏதோ அவசரத்துல logout பண்ண மறந்துடுவோம்..

இந்த மாதிரி சமயத்துல நம்முடைய கணக்கை வேற யாராவது தவறா உபயோகிக்க வாய்ப்புகள் இருக்கு..

இதை எப்படி சரிபண்ணலாம்னு பாப்போம்...

1. ஜிமெயில் கணக்கை திறங்க..

2. உங்களுக்கு வந்திருக்கும் மெயில்களை காட்டும் பெட்டிக்கு கீழ Account activity நேரமானது காட்டப்படும்.அதுக்கு பக்கத்துல "Details " -னு இருக்கும் .அதை கிளிக் பண்ணுங்க.


புதன், 16 ஜூலை, 2014

மிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு..!

காலக்கண்ணாடி என்ற வலைப்பக்கத்தில "மிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு..!"-னு பாத்ததும் ஆர்வமா படிச்சேன்..ரொம்ப நல்லா இருந்த அந்த படைப்பை அப்படியே உங்ககிட்ட ஷேர் பண்றேன்...
எல்லோருக்கும் வணக்கம், உலகம் முழுவதிலும் உள்ள கிராமபுறங்களில் வாழும் மனிதர்களுக்கு இன்றளவும் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருப்பது மிதிவண்டி (Cycle) என்று சொன்னால் மிகையில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருந்துவந்த இந்த சைக்கிளை கண்டுபித்தவர்கள் பட்டறையில் உலோகங்களை உருக்கி காய்ச்சி அடிக்கும் சாதாரண கொல்லர்கள் (Blacksmith). என்றால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.

செவ்வாய், 15 ஜூலை, 2014

கணினியில் மின்சாரத்தை மிச்சப்படுத்த !!!

சில சமயம் , சிஸ்டம்ல வேல செஞ்சுகிட்டே இருப்போம் வேற ஏதாவது வேலை காரணாமா அப்படியே எழுந்து போய்டுவோம்..திரும்ப வர சில பல நேரம் ஆகும்னு வையுங்க .சிஸ்டமை Shut Down செய்யாமலே அப்டியே வைக்குறதால மின்சாரம் வீணா செலவு ஆகிட்டு இருக்கும் ( நமக்கு தான் மின்சாரமே இல்லையேனுலாம் சொல்லக்கூடாது..என்னைக்காவது சரியாகாது ?நோ ...நோ .. நம்பிக்கை தளரவிடக்கூடாது)..இது மாதிரி சமயத்துல சிஸ்டம் ஆன்லையே இருந்தாலும் மின்சாரம் செலவாகாம இருக்க சில settings செஞ்சா போதும் .அது என்னனு பாப்போம்..

விண்டோஸ் XP சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தா...

1. டெஸ்க்டொப்ல ரைட் கிளிக் செஞ்சு  Properties செலக்ட் பண்ணுங்க .
2. இப்போ ஒரு டயலாக் பாக்ஸ் வரும் அதுல  Screen Saver என்னும் டேபைசெலக்ட் பண்ணுங்க . அடுத்து Power பட்டனைத்செலக்ட் பண்ணுங்க . பின்னர் Hibernate டேப்ல கிளிக்செஞ்சு Enable Hibernation -ஐ டிக்பண்ணுங்க .

திங்கள், 14 ஜூலை, 2014

கியாஸ் கசிவு புகார் !!!


கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி – ஐ.ஓ.சி அறிமுகம் இந்தியன் ஆயில் நிறுவனம் இன்டேன் கியாஸ் வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச தொலைபேசி வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

அந்த எண் 1800-425-247-247.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் கியாஸ் இணைப்புகள் உள்ளன.

சனி, 12 ஜூலை, 2014

தூக்கம்

என்னுடைய 500-ஆவது போஸ்ட் இது..இந்த 500-ஆவது போஸ்ட்ல எனக்கு பிடிச்ச விஷயத்தை பத்தி ( :) ) பகிர்ந்துக்குறதுல எனக்கு சந்தோஷம் .


தூக்கம் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் ...


-தூக்கத்தை ஒத்திப்போடும் ஒரே பாலூட்டி மனித இனம் மட்டுமே.

-தூக்கத்துக்கு இடையில் சராசரியாக 6 முறை விழிக்கிறோம்.

-ஒரு நாளைக்கு 7 மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால், ஆயுசு குறையும்.

-ஒரு வாரத்துக்கு சரியாகத் தூங்கவில்லை என்றால், 1 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும். தூக்கமின்மை பசியைத் தூண்டும்.

வெள்ளி, 11 ஜூலை, 2014

Chat Shortcuts

சமூக வலைதளங்களில் Chat செய்யும்போது முழு சொல்லையும் டைப் செய்யாம அதை சுருக்கமா டைப் செய்வது வழக்கம்..


அப்படி சுருக்கமாக டைப் செய்யும் வார்த்தைகளும் அதன் உண்மையான விரிவாக்கமும் என்னனு இப்போ பாப்போம்

121 - One to one
182 - I Hate You
2nite - Tonight
2moro - Tomorrow
4ever - Forever
A3 - Anytime,anyplace,anywhere
AEAP - As early as possible
AIMB - As I mentioned before
AKA - Also known as

வியாழன், 10 ஜூலை, 2014

படத்த பத்தி - கோச்சடையான் , மனம் ,ரேஸ் குர்ரம்


கோச்சடையான்: 
                தன் அப்பாவின் சாவுக்கு காரணமான அரசனை மகன் பழிவாங்குற கதைதான் இந்த கோச்சடையான் .

மனம் (தெலுங்கு) : 
                               முழுக்க முழுக்க குடும்பத்தோட பாக்கக்கூடிய ஒரு  அழகான காதல் படம்.

ரேஸ் குர்ரம் (தெலுங்கு):
                                              இது காமெடி,காதல்,ஆக்க்ஷன்,சென்டிமென்ட் எல்லாம் கலந்த செம மசாலாப் படம்..


இந்த படங்களை  பத்தி மேலும் படிக்க கீழ குறிப்பிட்டுருக்குற லிங்க் போய்பாருங்க ..

http://srivalaipakkam.blogspot.in/p/4.html

புதன், 9 ஜூலை, 2014

சைபர் குற்றங்களுக்குத் தொடர்புகொள்ளசென்னையில இருக்குறவங்க சைபர் குற்றங்களுக்குத் தொடர்புகொள்ள:

Assistant Comissioner of Police
Cyber Crime Cell
Commissioner office Campus
Egmore, Chennai - 600 008
Telephone number : 55498211
cyberac@rediffmail.com

CHENNAI FOR REST OF TAMIL NADU

Cyber Crime Cell
CB, CID, Chennai.
Off: 25393359, cbcyber@tn.nic.in


                                                              

சனி, 5 ஜூலை, 2014

கொசு கடிச்ச இடம் சிகப்பாக காரணம் என்ன?கொசு கடிச்ச இடம் சிகப்பாக காரணம் என்னனு தெரியுமா?

கொசு உண்மைல கடிக்காது..ஊசி மாதிரி இருக்குற தன்னோட வாயுருப்பால நம்ம உடம்புக்குள்ள இருக்குற ரத்தத்தை உறியுது ..அப்படி உறிஞ்சும்போது அது தன் உமிழ்நீரை நமக்குள்ள செலுத்துது.

சில என்சைம்களும், ரத்தம் உறையாமல் இருப்பதற்குத் தேவையான வேதிப் பொருட்களும் அந்த உமிழ்நீரில் இருக்கும். கொசுவின் உமிழ்நீர் நமக்குள்ள வந்ததும் நம்முடைய செல்களிலிருந்து ஹிஸ்டமைன் என்றொரு வேதிப்பொருள் ரத்த ஓட்டத்தில் அதிக வெள்ளை அணுக்களோட நுழஞ்சு கொசு கடிச்ச இடத்தை நோக்கிப்பாயுது...

கொசு கடிச்ச இடத்துல ரத்தக்குழாய்கள் விரிவடையும் அதனால அதிக ரத்தம் அந்த இடத்துல பாயுது.. அதனால் தோல்சிவக்குது..

வெள்ளி, 4 ஜூலை, 2014

உங்க கணினி பென்டிரைவ்-ஐக்கான் காட்டலையா?

பென் டிரைவை கணினியில் இன்செர்ட் பண்ணும்போது சில சமயம் அதை கணினி காட்டாது..இல்லையா?


இதுக்கு காரணம் அதிகமான USB /நெட்வொர்க் டிரைவ் இருக்குறதுதான்.ஏற்கனவே இருக்குற டிரைவ் பெயருலையே பென் டிரைவ் பெயரும் இருக்கும்.இதை எப்படி சரி பண்ணனும் பாப்போம் ..

- டெஸ்க்டாப்ல 'mycomputer'-ஐ ரைட் கிளிக் பண்ணுங்க.

-'Manage' செலக்ட் பண்ணுங்க ..இப்போ ஒரு விண்டோ வரும் .

- அதுல இடதுபக்கதுல  'Storage'-க்கு கீழ 'Disk Management'-னு இருக்கும் அத கிளிக் பண்ணுங்க.

புதன், 2 ஜூலை, 2014

சுனாமி பேரலையால் பாதிக்கப்படாத கட்டிடங்களுக்கான வடிவமைப்பு

Tsunami Resistant Structures எனும் சுனாமி பேரலையால் பாதிக்கப்படாத கட்டிடங்களுக்கான வடிவமைப்பை கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு அமைப்பியல் மாணவர்களான ராம்குமார், ராம்பிரசாத், ரெங்கநாதன் கார்த்திக், ரெங்கராஜ் கண்டுபிடிச்சுருக்காங்க .


இவங்க கண்டுபிடிசுருக்குற வடிவமைப்பில் வீடு கட்டினா சுனாமி பேரலையால் பாதிக்கப்படாது.

அலைகளின் வேகத்தைக் குறைக்கும் வகையில் கட்டிடங்களின் வடிவமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதே இந்த கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கம். கட்டிடங்களின் வெளிப்பகுதியில் கட்டப்பட்டுள்ள மூன்று அடுக்குகளிலான தடுப்புச் சுவர்கள் சீறி வரும் அலைகளோட வேகத்தைப் பெருமளவு குறைச்சிடும் .அதையும் மீறி கட்டிடத்தை நோக்கி வரும் அலைகளின் வேகம் கட்டிடத்தின் சிறப்பு வடிவமைப்பினால் மேலும் குறைக்கப்படும். இதனால் ராட்சத அலைகளினால் ஏற்படும் சேதம் தடுக்கப்படுகிறது.

இந்த வகைக் கட்டிடங்களை சாதாரணமாக நாம் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் மூலம் கட்டலாம். வடிவமைப்பு மட்டுமே மாற்றமடையும். எனவே சாதாரணமாக ஒரு கட்டிடம் கட்ட ஆகும் செலவே இந்தக் கண்டுபிடிப்பிற்கும் ஆகும்னு சொல்றாங்க.

தங்கள் கல்லூரியில் அமைக்கப் பட்ட தொட்டியில் செயற்கை அலைகளை ஏற்படுத்தி, இந்தச் சோதனையைப் பரிசோதித்து வெற்றி கண்டுள்ளனர். இவர்களின் கண்டுபிடிப்பைப் பார்வையிட்ட தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கழகம் 10,000 ரூபாய் ரொக்கப் பரிசு அளித்து பாராட்டியுள்ளது. காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ள இவர்கள், தற்போது இந்தக் கண்டுபிடிப்பை மேம்படுத்தும் முயற்சியில் உள்ளனர்.

தொடர்புக்கு: 95667-50033

செவ்வாய், 1 ஜூலை, 2014

வானவில்

வானவில்லை  பிடிக்காதவங்க யாருமே இருக்கமாட்டாங்க..பொதுவா நாம வானவில்லை எப்போலாம் பாக்கலாம்?மழை வந்ததுக்கு அப்பறம்னு நமக்கு எல்லாருக்குமே தெரியும்.ஆனா வானவில் தோன்ற மழை மட்டுமே காரணம் இல்ல ..பனிமூட்டம் ,காத்துல மிதக்குற கண்ணுக்கு தெரியாத சின்ன சின்ன தூசு,காத்துல நிரஞ்சிருக்குற நீர்த்துளிகள் ஆகியவையும் வானவில் தோன்ற  காரணம்.

நாம பாக்குற வானவில் பொதுவா அரைவட்ட வடிவத்துல இருக்குற மாதிரி தான் தெரியும் இல்லையா..ஆனா உண்மையில வானவில் அரைவட்ட வடிவம் கிடையாது ,முழு வட்ட வடிவத்துல தான் தோன்றும்.நம்ம கண்ணுக்கு வளிமண்டலத்தோட மேற்ப்பரப்புல இருக்குற அரைவட்டம் மட்டும் தான் தெரியும்.

வானவில் பாத்ததும் அத தொட்டுப் பாக்கணும்னு ஆசை நம்ம எல்லாருக்குமே இருக்கும்.ஆனா வானவில்லை தொடமுடியாது.கானல் நீர் மாதிரி ஒளிச்சிதறல் மற்றும் எதிரொலித்தல் மூலம் நம்ம கண்ணுக்கு தெரியுற ஒரு பிம்பம் தான் இந்த வானவில்.

வானத்துல இருக்குற நீர்த்துளிகள்ல சூரிய ஒளி ஊடுருவி அது சிதறலடைந்து நீர்த்துளிகளோட பின்புறத்துல எதிரொலிப்பதால உருவாகும் நிகழ்வு தான் இந்த வானவில்.

ஒரு குறிப்பிட்ட கோணத்துல பாத்தா மட்டும் தான் வானவில் நமக்கு தெரியும்.

வானவில்லில் நீளம்,கருநீலம்,ஊதா,பச்சை,மஞ்சள்,ஆரஞ்சு,சிவப்பு-னு ஏழு நிறங்கள் இருக்கும்.இத VIBGYOR என்ற வார்த்தை மூலமா அதாவது  V-Violet , I-Indigo , B-Blue , G-Green , Y-Yellow , O-Orange , R-Red என  நிறங்களை நினைவுல வச்சுக்கலாம்.

வானவில்லில் ரெண்டு வகை இருக்கு.முதல் வகைல வெளிப்பக்கம் சிகப்பு நிறமும் உள்பக்கம் ஊதா நிறமும் இருக்கும்.ரெண்டாவது வகைல நீர்த்துளிகளுக்குள் சூரிய ஒளி ரெண்டுமுறை சிதறடிக்கப்படும்போது இந்த வண்ண அமைப்பு அப்படியே தலைகீழா இருக்கும்.


                                             --நன்றி நாளிதழ்