பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam
இவர் - ஒரு அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இவர் - ஒரு அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 ஜூன், 2020

ஒரு நிஜ Iron Man-ன் கதை | Elon Musk : The Real Iron Man

Elon Musk :

 நீங்க Iron  Man படம்  பாத்திருந்தீங்கனா உங்களுக்கு தெரியும் என்ன ஒரு செமையான கேரக்டர் அதுனு.

நான் Iron  Man-யுடைய ரொம்ப பெரிய ரசிகை . ஆனா அந்த கேரக்டரே இவரை பாத்துதான் உருவாக்கினாங்கனு சொன்னா நம்ப ஆச்சர்யமாதான் இருக்கும்.ஆனா இவருடைய வாழ்க்கை பத்தி தெரிஞ்சுக்கிட்டோம்னா , இவருடைய திறமை அறிவு மற்றும் அவருடைய போராட்டம் இவருடைய தீராத ஆசை , அதை இன்னைக்கும் இவர் சக்ஸஸ் ஆகி எல்லாருக்கும் ஒரு முன்னுதாரணமா இருக்காருன்னு தெரியும் பொது கண்டிப்பா அதை நாமா ஏத்துப்போம்.

அப்டி என்ன இவர் செஞ்சார் ? யார் இவர் ? -னு இவரை பத்தி தெரிஞ்சுக்க கேளா இருக்குற இந்த வீடியோ பாருங்க.





Subscribe :

புதன், 5 பிப்ரவரி, 2020

அமெரிக்க தமிழரின் அருமையான product .

அமெரிக்காவில் இருக்குற எங்களோட நண்பர்கள் , அவங்க வீட்லையே இயற்கையான முறையில சோப்பு,லிப் balm ,lotion bar , ப்ளாக்பெர்ரி ப்ளூ பெரி ,ஸ்டாபெரி பழங்களினால் ஆன syrup இதுலாம் செஞ்சு online -ல sale பண்றாங்க.அவங்ககிட்ட இருந்து நாங்க சில products வாங்கினோம் .அது எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது .கண்டிப்பா நிறைய பேருக்கு பிடிக்கும்னு நான் அதை ஷேர் பண்றேன் .நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.உங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும்னு நம்புறேன்.


இந்த வீடியோவை  பாக்குறதுக்கு  கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க
                          ↓
அமெரிக்க தமிழரின் அருமையான product


இவர்களுடைய products பற்றிய details நீங்க Facebook ,Instagram -ல் பார்க்கலாம்.


Lyke Stead Farms in FaceBook : Https://www.facebook.com/lykesteadfarms/?ti=as

Lyke Stead Farms in Instagram : Https://instagram.com/lykestead?igshid=102aupyr0nah8






செவ்வாய், 15 ஏப்ரல், 2014

இவர் - ஒரு அறிமுகம் - 3

இவர் - ஒரு அறிமுகம் தலைப்புல இவங்களை அறிமுகப்படுத்துறதுல நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்.காரணம் !! ஃபேஸ்புக்ல புகைப்படம் சம்மந்தமான ஒரு குரூப்ல இவங்களோட புகைப்படங்களை பாத்து நான் ஆச்சர்ப்பட்டுருக்கேன்.வியந்துருக்கேன்னு கூட சொல்லலாம்.

அவ்வளவு ஒரு அழகான புகைப்படங்கள் ,புகைப்படத்தை எடுக்கும் விதம் அந்த நேர்த்தி சொல்லவார்தையே இல்ல.அந்த அழகிய புகைப்படங்களை பாக்கும் போது நமக்குள்ல ஒரு சந்தோஷம் வருமே அதை இவங்களுடைய புகைப்படங்களில்(லும்)  நான் உணர்திருக்கேன்.

இவங்களை பத்தி "இவர் - ஒரு அறிமுகம்" தலைப்புல எழுதனும்னு ரொம்பநாள் நினச்சதுன்டு.ஆனா கேட்டா என்ன சொல்வாங்களோனு ஒரு தயக்கத்தோட கேட்டுப்பாத்தேன்..சந்தோஷமா சம்மதிச்ச இவங்க பெயர் - வர்ஷினி  ஸ்ரீதர்...இவங்களை மாதிரியே இவங்க எடுக்குற  புகைப்படங்களும் அவ்வளவு அழகு..

அவங்களை பத்தி அவங்ககிட்ட நான் கேட்டு தெரிஞ்சுகிட்ட சில
விஷயங்கள் ....





உங்களை பற்றி :

              "நான் ஒரு  கட்டிடக்கலை பொறியியல்  படிச்சுக்கிட்டு இருக்கேன்.இறுதியாண்டு மாணவி ".

செவ்வாய், 10 டிசம்பர், 2013

இவர் - ஒரு அறிமுகம் - 2

ரவி - சிவகங்கைல கால்நடை மருத்துவரா வேலைபார்க்குற இவர் தன்னுடைய தொழிலுக்கு அடுத்து அதிகமா நேசிக்குறது புகைப்படம் எடுக்கும் கலையை. இவருடைய ஆர்வமும் விருப்பமும் இவருடைய ஒரு ஒரு புகைப்படத்துலையும் அழகா தெரியுது.

சேலத்தை சொந்த ஊராக கொண்ட டாக்டர்.ரவியின் புகைப்படங்களை பாத்து அசந்தே போனேன்..உங்களுக்கு எப்படி புகைப்படம் எடுக்குறதுல ஆர்வம் வந்ததுன்னு கேட்டப்போ 'கால்நடை மருத்துவரா இருக்குறதுனால எனக்கு இயல்பாவே விலங்கினங்களை பத்தி தெரிஞ்சுக்க ஆர்வம் இருந்தது...எனக்கு டிராயிங் (வரைதல்) பண்றது ரொம்ப பிடிக்கும் இப்படி ஆரம்பிச்சதுதான் புகைப்படம் எடுக்குறதுல எனக்கு ஆர்வம் வரக்காரணம் ஆனது"னு சொன்னார்.

இயற்கையை புகைப்படம் எடுக்குறதுல அதிக ஆர்வம் காட்ற இவரோட புகைப்படங்களும் இயற்கை சம்மந்தமாக தான் அதிகமாக இருக்கு. அவ்வளவும் அழகா இருக்கு.

"இப்போ தான் புகைப்படம் எடுக்குற கலையை கத்துக்க ஆரம்பிச்சுருக்கேன் ,இயற்கையோட எல்லா அழகையும் போட்டோ மூலமா காட்டணும்னு ஆசைப்படுறேன் ,இந்த புகைப்படத்துறைல எதாவது சாதிக்கணும்ங்குறது என்னுடைய ஆசை"னு சொல்ற டாக்டர் ரவியை மனதார வாழ்த்துவோம் .

டாக்டர்.ரவி-யின் சில 'கிளிக்'கள் இதோ  ....

செவ்வாய், 3 டிசம்பர், 2013

இவர் - ஒரு அறிமுகம் - 1


தினேஷ்குமார் ராதாகிருஷ்ணன்.மன்னார்குடியை சேர்ந்த 27 வயது இளைஞன்.

நம்முடைய கல்விமுறைல கண்டிப்பா ஒரு மாற்றம் தேவைன்னு சொல்ற எதிர்பாக்குற பலபேர்ல இவரும் ஒருத்தர்.ஆனா அதோட மட்டும் இல்லாம அதற்கான முயற்சிலயும் இறங்கிருக்கார் இவர் .

'Propel Steps'-ங்குற இவரோட வலைப்பூ(propelsteps.wordpress.com) ரொம்ப பிரபலம்.அதுல  கல்விக்காக மட்டும் இல்லாம எல்லா விதமான தலைப்புகளின் கீழ் இவர் எழுதிக்கிட்டுவரார்.