இப்போ நாங்க அமெரிக்கால வாசிச்சுக்கிட்டு இருக்கோம்.இந்த நாட்ல நம்மோட லைஃப் ஸ்டைல் எப்படி இருக்கு, என்ன என்ன விஷயங்கள் comfortable -ஆ இருக்கு ,என்ன என்ன விஷயங்கள் comfortable-ஆ இல்ல .என்ன என்ன விஷயங்களை பாத்து ஆச்சர்யப்படுறோம்னுலாம் சொல்லப்போறேன்.so கண்டிப்பா இந்த விஷயங்கள் உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்.
இங்க இருக்குற ஒரு ஒரு வீடும் ரொம்ப அழகா இருக்கும்.ஒரு ஒரு வீட்டுக்கும் குறைஞ்சது ரெண்டு கார் இருக்கும்.புருஷனுக்கு ஒரு கார் ,பொண்டாட்டிக்கு ஒரு கார்னு .குறைஞ்சது ரெண்டுனு தான் சொல்றேன்.அதிகமா எத்தனை கார் வேணும்னாலும் அவங்க உபயோகிக்கலாம்.ஆனா பைக் அதிகமா இருக்காது.ஒரு 50 வீட்டுக்கு ஒரு பைக்-னு தான் ratio இருக்கும்.
இன்னைக்கு நாம பாக்க போறது ஏன் இங்க பைக் அதிகமா இல்ல ?!ஏன் இவங்க பைக் அதிகமா உபயோகிக்க மாட்டேங்குறாங்கனு .
இதுக்கு ரெண்டு காரணம் இருக்கு.ஒன்னு பைக்குக்கான இன்சூரன்ஸ் பணம் இங்க அதிகம். ஆமா நாம அதிகமான பணம் கட்டணும்.
ரெண்டு இங்க இருக்குறseasons . பொதுவா இங்க நாலு season இருக்கு .
= > வசந்தகாலம் (Spring )
= > கோடைக்காலம் (Summer)
= > இலையுதிர்காலம் (Fall )
= > குளிர்காலம் (Winter)
பொதுவா வசந்த காலம் - > மார்ச் தொடங்கி மே வரைக்கும் இருக்கும்.
கோடைக்காலம் - > ஜூன் தொடங்கி ஆகஸ்ட் வரைக்கும் இருக்கும் .
இலையுதிர்காலம் - > செப்டம்பர் தொடங்கி நவம்பர் வரைக்கும் இருக்கும்.
குளிர்காலம் - > டிசம்பர் தொடங்கி பிப்ரவரி வரைக்கும் இருக்கும்.
இந்த நாட்டுல மழைக்காலம்னு தனியா இல்ல.வருஷத்துல எப்போ வேணும்னாலும் மழை பெய்யும்.நான் இங்க அதிகமா மழை பாத்தது நவம்பர்,, டிசம்பர், ஜனவரி சமயங்கள்ல .
so, இந்த மாதிரி சீசன் காரணமா குளிர்ல ,மழை-லாம் பைக் ஓட்டிக்கிட்டு போக முடியாதுங்குறதாலும் ,கார் இன்சூரன்ஸ் விட பைக் இன்சூரன்ஸ் அதிகமா இருக்குற காரணத்தாலும் தான் இங்க பைக் அவ்ளவா உபயோகிக்க மாட்டேங்குறாங்க.