பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 23 டிசம்பர், 2014

PK - படத்த பத்தி !!

PK - ஒரு போஸ்டர் மூலமா சர்ச்சையை கிளப்பின படம்தான் இது.

நம்மள மாதிரியே தோற்றமுடைய வேற்று கிரகவாசியான  PK(அமீர் கான்) நம்மள பத்தி ஆராய்ச்சி செய்ய அவங்களுடைய 'ஸ்பேஸ் ஷிப்' அவரை இறக்கிவிடுற இடம் இராஜஸ்தான்.அங்க ஒரு திருடன் 'ஸ்பேஸ் ஷிப்பை தொடர்புக்கொள்ற ரிமோட்டை திருடிக்கிட்டு போயிடுறான்.அந்த ரிமோட்டைஅவர் நம்ம நாட்டுல எப்படி கண்டுபிடிக்க என்ன என்ன  முயற்சி எடுக்குறார், அந்த ரிமோட் கண்டுபிடிச்சாரா? இல்லையா?அவர் மறுபடியும் அவரோட கிரகத்துக்கு போனாரா ? இல்லையா?-னு சொல்ற படம் தான் இந்த PK .

இந்த படத்துல எனக்கு பிடிச்சது :

- நம்ம நாட்டுல இருக்குற சின்ன சின்ன விஷயம்,கடவுள் ,மதம் பத்தி நம்ம மனுஷங்க கிட்ட இருக்குற குழப்பம் பத்தி உண்மையை நல்லா புட்டு புட்டு வைக்குறார்.

- என் கிரகத்துல இப்படி இல்லையேனு அவர் கேக்குற ஒரு ஒரு கேள்வியும் கண்ணாடி முன்னாடி நின்னு நம்மளையே நாம கேக்குற/கேக்கவேண்டிய விஷயங்கள் தான்.

- Dancing  Car -னு அவர் கிண்டல் பண்றது, மகாத்மா காந்தி ரூபாய் நோட்டுல இருந்தா மட்டும்தான் மதிக்குறாங்க மத்தபடி அவர் போட்டோவுக்கு மதிப்பில்லன்னு அழகா கிண்டல் பண்றது ,அப்போ சாமிக்கு லஞ்சம் குடுத்தாத்தான் நாம கேக்குறத செய்வாறோனு நம்ம மூடத்தனத்த எடுத்து சொல்றது,இந்து கோவிலுக்கு போகும்போது செருப்ப வெளில விடணும்னு சொல்றாங்க, சர்ச்க்கு போகும்போது அப்படி சொல்ல மாட்றாங்க.இந்து கோவிலுக்கு தேங்காய் உடைக்கணும்னு சொல்றாங்க கிறிஸ்டியன் கோவிலுக்கு போனா wine குடுக்கணும்னு சொல்றாங்க wine  முஸ்லீம் கோவிலுக்கு கொண்டுபோனா துரத்துறாங்கனு ஒரு ஒரு மத கடவுளுக்கும் நாம காட்டுற பாகுபாட்டை தெளிவா சொல்றார்.

- இதுக்கு நடுவுல கடவுள் பேற சொல்லி ஏமாத்துற சாமியாருங்களையும் விட்டுவைக்கல.

-பாகிஸ்தான்னு சொன்னா உடனே எல்லாரும் கெட்டவங்க தீவிரவாதிங்க கிடையாது சந்தோஷத்தையும் அன்பையும் பரிமாறிக்க எவ்வளவோ நல்லவங்க இருக்காங்க .அவங்களும் நம்மள மாதிரி மனுஷங்கதான்னு அழகா சொல்றாங்க.

- அனுஷ்கா ஷர்மா படம் முழுக்க அமீர்கான் கூட பயணம் பண்றாங்க.(நல்லா இருந்த அந்த வாயை ஏன்மா இப்படி கொடும பண்ணிருக்கீங்க.என்னமா இப்படி பண்றீங்களேமா !!!)

- கடைசி கட்சியில வரும் ரன்பீர் ..அப்படியே ஏலியன் மாதிரி இருக்காரே.

மொத்துல நம்மள படச்ச கடவுள் ஒருத்தர்தான் அவருக்கு  வேற வேற உருவம் குடுத்து நாமதான் அடிச்சுக்கிட்டு சாகுறோம்னு தெளிவா சொல்றாங்க .திருந்துவோமா???நாமளாவது திருந்துறதாவது!!!

சனி, 20 டிசம்பர், 2014

அஷ்டமி, நவமி கெட்ட நாளா??!

FB-பாத்துட்டு இருந்தப்போ  அஷ்டமி, நவமி பத்தி நான் படிச்ச இந்த போஸ்ட் ,அஷ்டமி, நவமி பத்தி இவங்க கொடுத்திருந்த இந்த விளக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது .அஷ்டமி, நவமி நல்ல நாள் இல்லைன்னு நாம நினைக்குறது தப்பான கருத்துன்னு தெளிவா விளக்கம் கொடுத்துருக்காங்க.அந்த போஸ்ட் உங்க கூட ஷேர் பண்றேன்.

சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள்.ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.

நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட் டேன்.

அதற்கு என் சகோதரி போங்க அண்ணா நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான் இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட் டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.

புதன், 17 டிசம்பர், 2014

வாட்ஸ் அப்-ன் நீல நிற டிக் மார்க்கை நீக்க !!வாட்ஸ் அப்-ல நாம அனுப்பின மெசேஜை யாருக்கு அனுப்பினோமோ அவங்க படிச்சுட்டாங்களானு தெரிஞ்சுக்க நீல நிறத்துல இரண்டு டிக் மார்க்குகள் தெரியுற மாதிரி சமீபத்தில வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு வசதியை கொடுத்துருந்தாங்க.

ஆனா அதை பலபேர் விரும்பல.பலபேருக்கு அது தொந்தரவாதான் இருந்தது.இதை புரிஞ்சுகிட்ட வாட்ஸ் அப் நிறுவனம் அதை சரி பண்ற விதமா செட்டிங்கில் சில மாற்றத்தை கொண்டுவந்துருக்காங்க.அது என்னனு பாப்போம் இப்போ.


Settings -> Account - > Privacy போங்க .இதுல  Message தலைப்புக்கு கீழ Read receipts பக்கத்துல ஒரு சின்ன பாக்ஸ் இருக்கும்.அதுல டிக் மார்க் இருக்கும்.அந்த டிக் மார்க்கை எடுத்துவிட்டுடுங்க .அவ்ளோதான்.இனி நீங்க மெசேஜ் படிச்சுட்டீங்களா இல்லையானு உங்களுக்கு மெசேஜ் அனுப்பினவங்களுக்கு தெரியாது .

திங்கள், 8 டிசம்பர், 2014

வேர்கடலை

வேர்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்து தான். இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்து வருகின்றது.


ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது. காரணம் வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்ற படியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.

முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு இரத்தத்தில் மிக மிக குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆகவே இவர்கள் அன்றாட உணவில் தைரியமாக வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.

வேர்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக ரத்த கொதிப்பு குறையும். வேர்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது. இவை வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பொருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாக்காமல் தடுக்கிறது. வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் வேர்கடலை சாப்பிட்டால் மலசிக்கல் ஏற்படாது. ஆகவே கர்ப்பிணிகள் கூட வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது.

வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் தான் நிறையச் சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம். பொதுவாக உடல எடையை குறைப்பவர்கள் நொறுக்கு தீணிக்கு பதிலாக வேர்க்கடலையை சாப்பிடலாம், ஏனெனில் இவை சாப்பிட்ட திருப்தி விரைவிலேயே கிடைப்பதால் மேலும் மேலும் எதையாவது சாப்பிட்டு உடல் எடையை கூட்டும் நிலை வராது. ஆனாலும் இதில் உடல் எடையைக் கூட்டும் புரத சத்து அதிகமிருப்பதால் அளவோடு சாப்பிடவது தான் இவர்களுக்கு நல்லது. இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் ஆஸடியொபோராசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது.


                                                  -நன்றி சமூகவலைத்தளம் 

சனி, 6 டிசம்பர், 2014

ஒரே கிளிக் -கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் / ஷட்டவுன் ஆகும்

ஒரு ஐக்கான் உருவாக்கி அதன் மூலமா நாம நம்ம சிஸ்டத்தை ஷட்டவுன் அல்லது ரீஸ்டார்ட் செய்யலாம்..


1. முதல்ல ரைட் கிளிக் செஞ்சு New - > ShortCut போங்க ..

2. Create ShortCut -னு ஒரு விண்டோ வரும் அதுல

3. Shutdown -s -t 03 -c "Im Gonna Shutdown"-னு டைப் செஞ்சு Next கிளிக் பண்ணுங்க .
இதுல 03-ங்குறது 3 செகண்ட்க்கு அப்பறம் ஷட்டவுன் ஆகும் அப்போ தெரியவேண்டிய மெசேஜ் "Im Gonna Shutdown".

4. Select a title for the program - என்ற விண்டோல அந்த ஐக்கானுக்கு ஒரு பெயரை கொடுங்க OK குடுங்க.

5.இனி இந்த ஐக்கான் கிளிக் செஞ்சீங்கனா சிஸ்டம் ஷட்டவுன் ஆகும்..

இதே மாதிரி ஒரு ஐக்கான் கிளிக் செஞ்சு விண்டோஸ் ரீஸ்டார்ட் செய்யணும்னு நினச்சீங்கனா ,

1. முதல்ல ரைட் கிளிக் செஞ்சு New - > ShortCut போங்க ..

2. Create ShortCut -னு ஒரு விண்டோ வரும் அதுல

3. Shutdown -r -t 03 -c "Im Back" -னு டைப் செஞ்சு Next கிளிக் பண்ணுங்க .
இதுல 03-ங்குறது 3 செகண்ட்க்கு அப்பறம் ரீஸ்டார்ட்   ஆகும் அப்போ தெரியவேண்டிய மெசேஜ் "Im Back ".

4. Select a title for the program - என்ற விண்டோல அந்த ஐக்கானுக்கு ஒரு பெயரை கொடுங்க OK குடுங்க.

5. இனி இந்த ஐக்கான் கிளிக் செஞ்சீங்கனா விண்டோஸ் ரீஸ்டார்ட்  ஆகும்..

புதன், 3 டிசம்பர், 2014

எந்த நம்பர்??!! எந்த ஊர் ??!!TN01 - சென்னை (மத்திய)

TN02 - சென்னை (வடமேற்கு)

TN03 - சென்னை (வட கிழக்கு)

TN04 - சென்னை (கிழக்கு)

TN05 - சென்னை (வடக்கு)

TN06 - சென்னை (தென்கிழக்கு)

TN09 - சென்னை (மேற்கு)

TN10 - சென்னை (தென்மேற்கு)

TN11 - தாம்பரம்

TN11Z - சோழிங்கநல்லூர்