பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

தொடுதிரை

தொடுதிரை  (டச் ஸ்க்ரீன்) தொழில்நுட்பம்தான் இப்போ எங்க பாத்தாலும் உபயோகத்துல இருக்கு .இத கண்டுபிடிச்சது யாருன்னு தெரியுமா?

இந்த பிரபஞ்ச தோற்றம் பத்தின ஆய்வுகள நிகழ்த்திகிட்டு இருக்குற செர்ன் ஆய்வுக்கூடத்துல தான் இந்த தொடுதிரை  (டச் ஸ்க்ரீன்) தொழில்நுட்பம் முதல்ல உருவானது.

இது இந்த ஆய்வுக்கூட அறிவியலாளர் பென் ஸ்டம்பெ (Bent stumpe) மற்றும்
ஃபிரான்க்  பெக் (Frank Beck ) 1970-ல இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினாங்க.

இப்போ இந்த தொழில்நுட்பத்துல 3 வகையான தொடுதிரைகள் இருக்கு.

* கொஞ்சம் அழுத்தி தொடுறமாதிரி இருக்குறதுக்கு ரெசிஸ்ஸ்டிவ்  (Resistive ) வகை .இதுல மெல்லிய பாலியஸ்டர் ஃபிலிம் அல்லது பூச்சு பூசபட்ருக்கும்.இது வேகமா இருக்காது .
*அடுத்து கேப்பாசிடிவ் ( Capactive ).இது நாம திரையை எந்த இடத்துல தொடுறோம்னு மின் அதிர்வின் மூலம் உணருது.இது வேகமா இருக்கும்


*மூணாவது ,நம்ம விரல்ல இருக்குற சூடு மற்றும் கண்ணுக்கு தெரியாத நுண்ணிய கட்டங்கள் இருக்குற சின்ன சின்ன நகர்வை கூட அடையாளம் காணுற ஆப்டிகல் உணர்திறன் கொண்ட இன்ப்ராரெட் ( infrared ) தொடுதிரை.இது வேகமா இருக்கும் .


*இன்னொன்னு ,மைக்ரோசாப்ட் மற்றும் மிட்சுபிசி நிருவனம் இணைந்து தயாரிச்சுகிட்டு இருக்குற நானோரிச்  தொழில்நுட்பம் .இதுல திரை கண்ணாடி போல இருக்கும்.முன் பின்னுனு  ரெண்டு பக்கமும் திரையை தொடலாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக