பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam
ஊர் சுத்தலாம் வாங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊர் சுத்தலாம் வாங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஜூலை, 2025

அதென்ன motel ? எப்படி இருக்கும் ?என்ன இருக்கும் ?

Hotel கேள்வி பட்ருக்கோம். Star Hotel கேள்வி பட்ருக்கோம் . அதென்ன motel ?-னு நிறையா பேருக்கு சந்தேகங்கள் இருக்கும்.

Motel அப்டீன்னா , பல மாடிகள் இல்லாத road side ஹோட்டல் . அதுவும் நம்ம பைக் அல்லது கார்களை நம்ம ரூமுக்கு வாசல்லையே நிறுத்திக்க கூடியவகையில வசதியான ஒரு சின்ன ஹோட்டல் தான் மோட்டல் அப்படீன்னு சொல்லுவோம்.

ஹோட்டலுக்கும் மோட்டலுக்கும்

https://www.youtube.com/watch?v=OelqYPkm2FE

செவ்வாய், 19 மே, 2020

எல்லா வகை மீனும் இங்க பாக்கலாம் !!

நாங்க இந்த பிளோரிடா trip-ல ICon பார்க்-க்குனு ஒரு இடம் ஒர்லாண்டோல இருக்கு. அங்க போயிருந்தோம். இந்தஜா பார்க்கு உள்ள Sea life -னு ஒரு aquarium இருக்கு .

இந்த aquarium-ல எல்லா வகை கடல் வாழ் உயிரினங்களும் நாம பாக்கலாம்.அவ்ளோ அழகா இந்த aquarium-ஐ maintain பண்ணிருக்காங்க.

ரொம்ப ரொம்ப அழகா , ஒரு நஃபுது அனுபவமா இருக்கும் இத பாக்க .இந்த விடியோவை தான் நீங்க கீழ இருக்குற லிங்க்ல பாக்கப்போறீங்க .

இந்த விடியோவை பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க

                                         ↓

https://www.youtube.com/watch?v=WjGrbCpVy3I




Subscribe :


ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

Rest Area In the USA !

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நாங்க Florida-வுக்கு ஒரு Road Trip போனோம் . அங்க என்ன என்ன விஷயங்கள் பாத்தோம் .எங்க  எங்க தங்கினோம் எப்படி இருந்ததுனு நிறையா விஷயங்கள் இனிவரப்போற  வீடியோகள்ல பாக்க போறோம் . அந்த வரிசையில இப்போ பாக்க போறது Rest Area பத்தி பாக்கபோறோம்.

Rest Area - இதுலையே உங்களுக்கு அர்த்தம் புரிஞ்சிருக்கும் . இங்க பொதுவா High Way -ல ஒரு ஒரு 1 மணி நேரத்துக்கு ஒண்ணுனு விகிதத்துல ஒரு Rest Area இருக்கும். இங்க Rest  Area எப்படி இருக்கும் ?  என்ன என்ன Facility இருக்கும் ?னு Rest Area பத்தி தெரிஞ்சுக்க கீழ  இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க


Rest  Area எப்படி இருக்கும் ? 

            ↓

https://www.youtube.com/watch?v=sNUv5yVZWlM




வியாழன், 6 பிப்ரவரி, 2020

நியூயார்க் நகரம் பற்றிய நிறைய சுவாரசியங்கள் - பகுதி 1

 நியூயார்க் பத்தி நிறைய படங்களில் நாம பாத்துருப்போம் சொல்ல கேட்ருப்போம். நியூயார்க் நகரத்தின் மேல எப்பவுமே மக்களுக்கு அதுவும் இளைஞர்களுக்கு ஒரு craziness இருந்துகிட்டே தான் இருக்கு . அப்படி என்ன அந்த நகரத்துல இருக்கு ?அப்படி என்ன ஸ்பெஷல்? அதனுடைய வரலாறு என்ன?-னு நிறைய விஷயங்களை  ஒரு லட்சியமுள்ள இளைஞனா அந்த ஊருக்கு போயி ,நிறைய விஷயங்களை கத்துக்கிட்டு , நிறையா விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டு , நிறைய நிறைய கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்திச்சு அதை எல்லாம் கடந்து வந்து  இன்னைக்கு ஒரு successful Business man-ஆக தன்னுடைய சொந்த உழைப்பில் முன்னேறி தன்னுடைய company-ன் CEO -வாக இருக்குற என்னுடைய கணவர் தான் ரொம்பவே அழகான எப்பவுமே பிஸியான இந்த நியூயார்க் நகரத்தை பத்தி நிறைய விஷயங்களை என்கூட ஷேர் பண்ணிருக்கார் . பெரிய வீடியோங்கறதால பகுதி பகுதியா பிரிச்சுஷேர் பண்றேன். அந்த வகையில முதல் பகுதி இப்போ ஷேர் பண்ணிருக்கேன்.


இந்த வீடியோவை பாக்க  கீழ இருக்குற இருக்குற இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க

                                ↓         

                   நியூயார்க் பகுதி 1






புதன், 5 பிப்ரவரி, 2020

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு ஒரு visit

எந்த season -லையும் நம்மள வசீகரிக்க தவறாத ரொம்ப ரொம்ப அழகான நயாகரா நீர்வீழ்ச்சி பத்தி நிறைய சுவாரசியமான தகவல்களை இந்த வீடியோல ஷேர் பண்ணிருக்கேன். கண்டிப்பா பாருங்க நாயகராவோட அழகையும் , அத பத்தியான ஆச்சர்யமான விஷயங்களையும் தெரிஞ்சுக்கோங்க . 



இந்த வீடியோவை பாக்க கீழ இருக்குற இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க 

                                        ↓

https://www.youtube.com/watch?v=QNk9kyD1AMQ



புதன், 24 ஏப்ரல், 2013

8 நாள் மஹாராஜா !!!!



'மஹாராஜா எக்ஸ்பிரஸ் '-பேரே நல்லா இருக்குல்ல.2010-ஆம் ஆண்டுல இருந்து இந்தியாவுல இயக்கப்படுற இந்த மஹாராஜா எக்ஸ்பிரஸ்-ல பயணம் பண்றது தான் ஆசியாவிலேயே ரொம்ப காஸ்ட்லியான ட்ரைன் பயணம்.ஏன்னு கேக்குறீங்களா?


இந்த ட்ரைனோட கம்மியான டிக்கெட் எவ்ளோ தெரியுமா ?
ஒரு பயணிக்கு ஒரு நாளுக்கு 800 டாலர்.நம்ம நாட்டோட பணத்தின் படி ,சுமார் 42,600 ரூபாய்(சாப்பாடோட).அதுவும் இதுல இருக்குற டீலக்ஸ் பெட்டிக்கு தான்.அதிகபட்ச கட்டணம் 2500 டாலர் அதாவது இந்திய பணத்தின் படி 1,33,000 ரூபாய்(சாப்பாடோட) .இது பிரசிடன்சியல் சூட் -க்கு .


மொத்தம் 8 நாள் பயணத்துல நாட்ல(இந்தியா) முக்கியமான சுற்றுலா தலங்களை வலம் வருது இந்த மஹாராஜா எக்ஸ்பிரஸ் .


ரயில்வேயின், இந்திய ரயில்வே கேட்டரிங் அன் டூரிசம் கார்பரேஷன் (ஐ ஆர் சி டி சி )நிறுவனமும் ,தனியார் துறையை சேர்ந்த காக்ஸ் அன் கிங்க்ஸ் இந்தியா லிட் நிறுவனமும் கூட்டுத் தொழிலா இந்த ரயிலை இயக்குறாங்க.


தங்குற அறைகள் ,ஓய்வு கூடங்கள் ,நட்சத்திர விடுதி போன்ற உணவு கூடங்கள் என 24 பெட்டிகள், ஏகப்பட்ட வசதிகளோட  இருக்குற இந்த ரயில்ல மொத்தம் 88 பயணிகள் மட்டும் தான் பயணம் செய்ய முடியும்.


எங்க எங்க இந்த 'மஹாராஜா எக்ஸ்பிரஸ் '-ல போகலாம் ?

1.இந்தியாவின் பண்பாடு (ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா )
எத்தனை நாட்கள் :      7 இரவு/9 பகல்
எங்க எங்க போகலாம் : மும்பை - அஜந்தா - உதய்பூர் - ஜோத்பூர்-பிகனேர் -ஜெய்பூர் - ரந்தம்போர் - ஆக்ரா-டெல்லி

2.இந்தியாவின் கருவூலம் (ட்ரஷர் ஆஃப் இந்தியா )
எத்தனை நாட்கள் :      3 இரவு/4 பகல்
எங்க எங்க போகலாம் : டெல்லி-ஆக்ரா- ரந்தம்போர் - ஜெய்பூர்-டெல்லி

3.இந்தியயாவின் பொக்கிஷம் (ஜெம்ஸ் ஆஃப் இந்தியா)
எத்தனை நாட்கள் :      3 இரவு/4 பகல்
எங்க எங்க போகலாம் :டெல்லி-ஆக்ரா- ரந்தம்போர் - ஜெய்பூர்-டெல்லி

4.இந்தியக் கலைக்கூடம் (இந்தியன் பனோரமா )
எத்தனை நாட்கள் :      7 இரவு/8 பகல்
எங்க எங்க போகலாம் : டெல்லி-ஜெய்பூர்- ரந்தம்போர் -பாடேஹ்பூர் - ஆக்ரா-கலிலோர் -ஒர்ச்ஹா -கஜுரஹோ -வாரனாசி-லக்னோ -டெல்லி

5.ஒளிரும் இந்தியா  (இந்தியன் ஸ்ப்லண்டர்)
எத்தனை நாட்கள் :      7 இரவு/8 பகல்
எங்க எங்க போகலாம் : டெல்லி-ஆக்ரா- ரந்தம்போர் -ஜெய்பூர்-பிகனெர் - ஜோத்பூர்-உதய்பூர் -பலசினோர்-மும்பை


மேலும் விவரங்களுக்கு http://www.maharajas-express-india.com/


வெள்ளி, 5 ஏப்ரல், 2013

டீட்டிகாகா ஏரி

தென் அமெரிக்காவின் பெரு மற்றும் பொலிவியா நாட்டோட எல்லைல டீட்டிகாகா-ங்கற அழகான பிரமாண்டமான ஏரி இருக்காம்.தென் அமெரிக்கால இருக்குற முக்கியமான ஏரிகள்ல இதுவும் ஒன்னாம்.இதுல 27 ஆறுகள் வந்து கலக்குதாம்.


கடல் மட்டத்துல இருந்து 3812 மீட்டர் உயரத்துல இந்த ஏரி இருக்குறதால பாக்க ரொம்ப ரொம்ப அழகா இருக்குமாம்.இந்த மலையை சுத்தி ஏராளமான பழங்குடியினர் வசிக்குறாங்கலாம் .இவங்க தங்கள எதிரிகிட்ட இருந்து எப்படி காப்பாதிக்குறாங்கலாம் தெரியுமா ?

இந்த ஏரிகளை சுத்தி இருக்குற இடத்துல அடர்ந்து வளரும் நாணல் செடிகள் தான் இவங்களுக்கு தற்காப்பு கவசமா இருக்காம்.

இந்த நாணல்கள வெட்டி உலர வச்சு பக்குவபடுத்தி அழகான குடில்கள செய்ராங்கலாம் .ஒவ்வொரு பத்து குடிலுக்கு கீழையும் நாணல்களாலே கட்டு மரம் மாதிரி ஒரு அமைப்பை செஞ்சு ஏரிகளில் மிதக்க விட்ராங்கலாம் .தூரத்துல இருந்து பாக்குறப்போ ஏரிக்குள்ள அழகான குட்டி தீவு இருக்குற மாதிரி ஒரு அமைப்பு இருக்குமாம்.எதிரிங்க வந்துட்டா படகை எப்படி துடுப்பு மூலமா இயக்குறோம் அதே போல இந்த குடிலையும் இயக்கி அங்க இருந்து தப்பிச்சிடுவாங்கலாம் .

ஆரம்ப காலத்துல வெறும் நாணலை மட்டும் பயன் படுத்தின இவங்க இப்போ தெர்மாகோல் மாதிரி மத்த பொருளை எல்லாம் பயன்படுதுறாங்கலாம்.

நாணல் புதருல இருந்து அயோடின் தயாரிச்சு அத விக்குறாங்கலாம்.இதுல இருக்குற பூக்கள பக்குவபடுத்தி பானங்கள் தயாரிக்குறாங்கலாம் ,மருந்து பொருளாவும் இத பயன் படுத்துறாங்கலாம்.

சமீபகாலமா இங்க சூரிய சத்தியில் மின்சாரம் தயாரிக்குற தகடுகளை பாக்க முடியுதாம் .இதன் மூலமா இவங்க டி.வி ,ரேடியோ,விளக்கு போன்ற நவீன வசதிகளையும் பயன்படுதுறாங்கனு சொல்றாங்க.