பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 25 மே, 2013

'பாடகர் திலகம்' T.M சௌந்தராஜன்

'பாடகர் திலகம்' ,'காந்தக்குரலோன்'  T.M சௌந்தராஜன் - மார்ச் 24 1922 -மார்ச் 25 2013(91 வயது)


மார்ச் 24 1922 அன்று பிறந்த T.M சௌந்தராஜன் 1945ஆம் வருஷம் திரை உலகத்திற்க்கு அறிமுகமானார் .தனது 6 வயசுலயே இருந்து முறையான இசையை கத்துக்க ஆரம்பிச்சார்.பல மேடைக்கச்சேரிகளை செஞ்சுருக்கார்.தியாகராஜா பாகவதரை போல ஆகணும்னு ஆசைப்பட்டார்.

இவரோட முதல் பாடலில் இசையமைப்பாளரால நிராகரிக்கப்பட்டவர் இவர் ,பின்னர் 1945ஆம் வருஷம் 'கிருஷ்ணா விஜயம்' படத்துக்காக பாடினார்.ஆனா அந்த படம் 1950ல் தான் வெளியானது.அன்றிலிருந்து இன்றுவரை 'பாடகர் திலகம்' T.M சௌந்தராஜன் இசை உலகத்துல கொடிக்கட்டி பறந்தார்.

அடுத்த சமந்தா?


நஸ்ரியா நஸீம் -நேரம் படத்தின் கதாநாயகி .பளிச் முகத்தோட ,அழகான சிரிப்போட 'நேரம்' படத்தின் மூலமா என்ட்ரி குடுத்துருக்காங்க .மேக்அப் இல்லாத போதும் கூட இந்த முகத்தை பார்த்துகிட்டே இருக்கலாம் போல அவ்ளோ பொலிவு .

நம்ம பக்கத்துக்கு வீட்டு பொண்ணு மாதிரியே இருக்குறதாலவோ என்னவோ சட்டுன்னு மனசுல பதிஞ்சுட்டாங்க.

க்யூட்ட்ட்ட்ட் சமந்தா ,சித்தார்த் கூட காதல் அடுத்த வருஷம் கல்யாணம்னு  கிசுகிசுக்க படுற சமயத்துல நஸ்ரியா கரெக்ட் என்ட்ரி குடுத்துருக்காங்க.பாக்க லைட்-ஆ சமந்தா மாதிரியும் இருக்காங்க.(என் அத்தப்பொண்ணு கூட லைட்-ஆ நஸ்ரியா மாதிரிதான் இருப்பாங்கங்க)

இன்னம் கொஞ்ச நாளுக்கு இவங்க தான் இந்த பசங்களோட கனவு கன்னியா இருப்பாங்கனு நினைக்குறேன்.

இந்த நேரம் படத்தோட கதாநாயகன் ,கதாநாயகியான இந்த நஸ்ரியா  நஸீம் நடிச்ச மலையால ஆல்பம் ஒன்னு, ரொம்ப அழகான பாடல் எனக்கு பிடிச்ச பாடல் பேஜ்ல சேர்த்திருக்கேன் .பாருங்களேன் ...நீங்களும் நான் சொல்றத ஒத்துபீங்க .

நீங்களே பாருங்க பொண்ணு அழகா இல்ல ,

Test
நஸ்ரியா நஸீம்

வியாழன், 23 மே, 2013

சூப்பர் MLA ...

படிக்குற பிள்ளைங்களுக்கு எக்ஸாம் ,செமஸ்டர் மார்க்ஸ்,கிரேட்ஸ்னு வச்சு அவங்க படிப்பை கணிக்குறோம் .ஐ.டி துறைல வேலை பாக்குறவங்களுக்கு 'எம்ப்ளாயி ஆஃப் தி இயர்' அப்படீன்னு அவார்ட் குடுத்து பெருமை படுத்துறோம் நம்ம அரசியல்வாதிகளுக்கு இப்படி ஏதாவது எக்ஸாம் வச்சு அதுக்கு மார்க்கும் குடுத்தா எப்படி இருக்கும் .அத தான் 'புதிய தலைமுறை' தொலைகாட்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க ரெண்டு நாளா.

மக்கள் கிட்ட கருத்து கேட்குற அடிப்படையில நம்ம அத்தனை MLA-களுக்கும் மதிப்பெண் குடுத்துருக்காங்க இவங்க.
எல்லா MLA -க்களையும் 'தொகுதி', 'ஆட்சி'னு வகைப்படுத்தி,

1.வாக்குறுதியை நிறைவேற்றுதல் - இதுக்கு 20 மார்க்

2.தொகுதிக்கு வருதல் -இதுக்கு 10 மார்க்

புதன், 22 மே, 2013

அட்டகாகமான அவசியமான ‘ஃபைட்பேக்’ மென்பொருள்


ஒரு பெண், பாலியல் வன்முறைக்கு ஆளாகும் போது அவருக்காக உதவி கேட்டு, அவரது நண்பர்களுக்குத் தகவல் அனுப்புது ஒரு மென்பொருள்.
இந்த ‘ஃபைட்பேக்’ மென்பொருள் 2011ல் கண்டுபிடிக்கப்பட்டதாம் . அப்போ இது கட்டணச் சேவையாக இருந்தது. டெல்லியில் நடந்த கொடூரமான பாலியல் வன்முறைக்குப் பிறகு, டெக் மகிந்திரா நிறுவனம் இதனை இலவச சேவையாக மாற்றி இருக்கிறது. இந்த மென்பொருள் ஜிபிஆர்எஸ் (GPRS), எஸ்ஒஎஸ் விரைவு எச்சரிக்கை செய்தி (SOS Alert Message)ஜிபிஎஸ் (GPS) மேப்ஸ், இ-மெயில் மற்றும் ஃபேஸ்புக் முதலியவற்றைப் பயன்படுத்தி, ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாத்த உதவுதாம்.

ஃபைட்பேக், ஜிபிஎஸ்ஸை பயன்படுத்தி பயனாளர் இருக்குற இடத்தை தெரிஞ்சுக்க முடியுதாம் . பின்னர் ஃபைட்பேக் பட்டனை அழுத்தியதும் எச்சரிக்கைத் தகவலை, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்குற நண்பர்களோட செல்பேசிகளுக்கு, பயனாளர் இருக்கும் இடத்தைக் குறுஞ்செய்தியாக அனுப்புதாம் . மின்னஞ்சல், ஃபேஸ்புக் முகவரி பதிவு செய்திருந்தால் அதுக்கும் இந்த தகவலை அனுப்புதாம் .

1) ஃபைட்பேக் மென்பொருளை பயன்படுத்துவது ரொம்ப சுலபம் .

சனி, 18 மே, 2013

இதையும் இனி சொல்லி தரனும்

சமீபகாலமா ,பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறையா நடந்துகிட்டு இருக்கு.ஒரு ஒரு நாளும் பேப்பர்ல படிக்குறது ,டிவி-ல பாக்குறது,யார் சொல்லியாச்சம் கேக்குறதுன்னு நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே தான் போகுது தவிர குறைந்த பாடில்ல .

ஒரு சில ஆண்களால மொத்த ஆண் வர்கத்துக்கும் அவமானம் .ஒரு பெண்ணை வம்பு பண்ணி வற்புறுத்தி அதுல சந்தோசம் பாக்குறது என்ன ஜென்மங்களோ தெரியல.ஒரு பெண் இஷ்டப்படாம அவளை அடையணும்னு நினைக்குற எவனும்,அவனோட அல்ப சந்தோஷத்துக்கு பெண்ணை வம்பு பண்ற எவனும் மனுஷனே இல்ல.

வியாழன், 16 மே, 2013

கூகிள் பிளஸ்-ன் புது வடிவம்

கூகிள் பிளஸ் தன்னுடைய பேஜ் ஸ்டைலை மாத்திருக்காங்க இன்னைல  இருந்து .

பழைய வெர்ஷனில் இடது பக்கம் இருந்த 'Profile','About','Posts' etc  எல்லாம் இப்போ 'Top'-ல வருது.

 

போட்டோஸ் அப்லோட் பண்றது இப்போ இன்னும் எளிமையா இருக்கு.எங்க இருந்து அப்லோட் செய்யணும்னு ஆப்ஷனும் இருக்கு.அப்படியே போட்டோவை ட்ராக் செஞ்சு போட்டுக்கலாம்ங்குற ஆப்ஷனும் இருக்கு.


ஒரு பக்கத்துக்கு ஒரு ஒரு போஸ்ட் -ஆகத்தான் ஒன்றின்  கீழ் ஒன்றாக இருக்கும் .ஆனா இப்போ ரெண்டு காலத்துல, ரெண்டு ரெண்டு போஸ்ட்-ஆக 
டிஸ்ப்ளே ஆகுது.


மேலும் கூகிள் பிளஸ் ஹாங்அவுட்ஸ்,கூகிள் ப்ளே மியூசிக்- னு சில சேன்ஜ் பண்ணிஇருக்காங்க. கூகிள்  பிளஸ்-ன் புது வடிவம் பாக்க நல்ல தான் இருக்கு.இதுக்கு போட்டியான முக நூல் (ஃபேஸ்புக்)-ம் கூடிய சீக்கிரம் தனது வடிவத்துல அதிரடியா மாற்றத்தை செய்யும்னு எதிர் பாக்கலாம் .

புதன், 15 மே, 2013

பாடலின் வரிகள் - மரியான் - சோனாபரியா

படம்  : மரியான்  -mariyaan song lyrics
பாடியவர்கள் : ஜாவிட் அலி,ஹரிசரண்,நகாஷ் அசிஸ் 
பாடல் : சோனாபரியா 
இசை : A.R .ரஹ்மான் 
பாடலாசிரியர் : வாலி 

ஓஹ் ய ..ஓயல
எந்த நாளும் ஓயல
என்ன படச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓஹ் ய ..ஓயல
எங்க வேல காயல
நீ சொக்கும் படி சிரிச்சா சோனாபரியா

சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா
சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா

ஓஹ் ய ..ஓயல
எந்த நாளும் ஓயல
என்ன படச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓஹ் ய ..ஓயல
எங்க வேல காயல
நீ சொக்கும் படி சிரிச்சா சோனாபரியா

பாடலின் வரிகள் - மரியான் - நெஞ்சே எழு

படம்  : மரியான்  -mariyaan song lyrics
பாடியவர்கள் : A.R .ரஹ்மான் 
பாடல் :  நெஞ்சே எழு 
இசை : A.R .ரஹ்மான் 
பாடலாசிரியர் : குட்டி ரேவதி , A.R .ரஹ்மான் 

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான்வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே....

 நெஞ்சே எழு
 நெஞ்சே எழு
 நெஞ்சே எழு
 நெஞ்சே எழு
 நெஞ்சே எழு
 நெஞ்சே எழு
 காதல் என்றும் அழிவதில்லை...

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 3


சிவகார்த்திகேயன் பங்குபெற்ற 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -எபிசோட் 2'  
(மே -13-13) வீடியோவை பார்க்கனும்னு விரும்புறவங்க இந்த   http://srivalaipakkam.blogspot.in/2013/05/blog-post_4.html லிங்க்கில் பார்க்கலாம்.

பாடலின் வரிகள் - மரியான் - எங்கபோன ராசா

படம்  : மரியான்  - mariyaan song lyrics
பாடியவர்கள் : சக்திஸ்ரீ கோபாலன் 
பாடல் : எங்கபோன ராசா 
இசை : A.R .ரஹ்மான் 
பாடலாசிரியர் : குட்டி ரேவதி, A.R .ரஹ்மான்

எங்கபோன ராசா
சாயங்காலம் ஆச்சு
எங்கபோன ராசா
சாயங்காலம் ஆச்சு
கஞ்சி ஆரி போச்சு
நெஞ்சு அறிவாயே

நீயும் நானும் சேர்ந்தா ..
நீயும் நானும் சேர்ந்தா
வானம் கொண்டாடும்
அந்த வானம் கொண்டாடும்
நீயும் நானும் சேர்ந்தா
வாழ்க்கை வரமாகும்
இந்த வாழ்க்கை வரமாகும்

என்ன செய்ய ராசா
உண்மைத்தாம் ஆச்சே
எங்கபோன ராசா

செவ்வாய், 14 மே, 2013

பாடலின் வரிகள் - மரியான் - இன்னும் கொஞ்ச நேரம்

படம்  : மரியான்  - mariyaan song lyrics
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ் , ஸ்வேதா மோகன்
பாடல் : இன்னும் கொஞ்ச நேரம்
இசை : A.R .ரஹ்மான் 
பாடலாசிரியர் : A.R .ரஹ்மான் ,கபிலன் 


இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இன்னும் பேசக்கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நிரையலயே
இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாதே
இன்னும் பேசக்கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நிரையலயே
இப்போ மழ போல நீ வந்தா கடல் போல நான் இருப்பேன்

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

விபூதி,சந்தனம்,குங்குமம் இதுலாம் ஏன் பூசுறோம் ?



குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள்.
நம் உடம்புல எல்லா நாடி நரம்புகளும் மூளையோட இணைக்கப்பட்டுருக்கு . உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாக தான் போகுது .அதனாலதான் நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாவே இருக்கும். நம்ம அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கு . ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில கைவைச்சு பாக்குறோம்.சந்தனம் பூசுரதால அது   மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்யும் .

 தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி பூசுரதோட நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கு . கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள் பூசுறோம்.

ஞாயிறு, 12 மே, 2013

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 2

'விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் ' என்ற தலைப்புல ஏற்கனவே ஒரு போஸ்ட் பப்ளிஷ் பண்ணி இருந்தேன்.

மே -10-13 அன்று 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -எபிசோட் 1'  நிகழ்ச்சியில அவர் கலந்துகிட்டாரு .அந்த வீடியோவை அதே போஸ்டில் சேர்த்துருக்கேன்.அதை பார்க்கனும்னு விரும்புறவங்க இந்த   http://srivalaipakkam.blogspot.in/2013/05/blog-post_4.html லிங்க்கில்
பார்க்கலாம்.மே -13-13.அடுத்த எபிசோட் மே -13-13

சனி, 11 மே, 2013

சோலார் பாலம்

சோலார் பாலத்தை மதுரை கே.எல்.என். தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டடத்துறை மூன்றாம் ஆண்டு மாணவர்களான அஜய் குமார்,தனசேகரன்,சிவசங்கர்,கார்த்திக் ஸ்ரீனிவாஸ் மற்றும் ஸ்ரீராம் கண்டுபிடிச்சு இருக்காங்களாம். 

சோலார் பாலங்களில அமைக்கப்படுற சாலைகளுக்காகப் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள்ரொம்ப உறுதியானவையா இருக்கும். CHEM GLASS என அழைக்கப்படும் இந்த பிரத்யேக கண்ணாடிகள் கனரக வாகனங்களின் எடையைகூட தாங்கும். கண்ணாடிச் சாலைகள்ல போற வாகனங்கள் வழுக்காமல் இருக்க , கண்ணாடியின் மேற்பரப்பில் சொரசொரப்பான படலம் ஒன்று அமைக்கப்படுதாம்.

 மூன்று பகுதிகள் கொண்ட இந்தச் சாலைகளின் அடிப்பகுதி பிளாஸ்டிக் போன்ற மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் மூலம் அமைக்கப்படுது. நடுப்பகுதியில சோலார் பேனல் அமைக்கப்படுது. அதன் மேல் ஃபேவர் பிளாக் கற்கள் கொண்டு கண்ணாடியிலான சாலை அமைக்கப்படுது. இந்தக் கண்ணாடிச் சாலையில் சூரிய ஒளி விழும்போது, கீழே உள்ள சோலார் பேனல் மூலமாக மின்சாரம் தயாரிக்கப்படுது. பாலத்தின் அருகிலுள்ள மின்சார நிலையத்துக்கு நேரடியாக சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை அனுப்பலாமாம் . மின்சாரத்தை நேரடியாக மின் நிலையத்துக்கு அனுப்புவதால் பேட்டரி அவசியமில்லைனு சொல்றாங்க.

 இந்த சோலார் பாலத்தில் அமைக்கப்படும் கண்ணாடிச் சாலைகள் 35 முதல் 40 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொண்டவை இருக்குமாம் . மேலும் தண்ணீர் தேங்காது. இதனால், கண்ணாடிச் சாலைகளைப் பாரமரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த சோலார் தொழில்நுட்பத்தைப் பாலங்களில் மட்டுமின்றி, எல்லா வகையான சாலைகளிலும் பயன்படுத்தலாம்.சோலார் பேனல்கள் கொண்ட கண்ணாடிச் சாலைகள் அமைக்க அதிக செலவாகும் என்றாலும் தார்ச் சாலைகளை விட அதிக ஆயுட்காலம்னால 4 முறை தார் ரோடுகள் அமைப்பதும், ஒரு முறை சோலார் ரோடுகள் போடுவதும் ஒன்னுதான்னு சொல்றாங்க இத கண்டுபிடிச்சவங்க. மின்சாரமும் கிடைப்பதால் வருங்காலத்தில் சோலார் கண்ணாடி சாலைகள் முக்கியத்துவம் பெறலாம்.

 சோலார் பேனல்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதைக் கண்காணிக்க, பாலங்கள்ல ஒவ்வொரு 12 அடி இடைவெளியில ஒரு சென்சார் அமைக்கப்படுது. இதன் மூலம் பழுது ஏற்பட்டுள்ள சோலார் பேனல் அமைந்துள்ள பகுதியை மட்டும் மாற்றிக் கொள்ளலாம்.

 தற்போது அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த சோலார் பாலங்கள் மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டுறுக்கு . 1.6 கி.மீ. (1 மைல்) தூரத்திற்கு அமைக்கப்பட்ட சோலார் சாலைகள் மூலம் 1.4 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இந்த மின்சாரம் 1,500க்கும் மேற்பட்ட இந்திய வீடுகளின் மின்சாரத் தேவையை தீர்க்கப் போதுமானது.

 தற்போது விற்பனையில் உள்ள பேட்டரி கார்களை எங்காவது ஓர் இடத்தில் சார்ஜ் செய்துதான் ஆகவேண்டும். ஆனால்,' induction plating’என்ற தொழில்நுட்பத்தை பேட்டரி கார்களில் பொருத்தினால், சோலார் சாலைகளில் பயணம் செய்யும்போதே பேட்டரி கார்களை சார்ஜ் செய்ய முடியும். ஒரு சதுர அடி சோலார் பேனல் தற்போது 160 ரூபாய் விலை.

 சமீபத்தில இவர்களோட கண்டுபிடிப்பைப்பாத்து பாராட்டிய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, சோலார் பாலம் தொழில்நுட்பத்தை மதுரையில செயல்படுத்த முழுமுயற்சி எடுப்பதா சொல்லி இருக்காறாம் .

 இந்த மாணவர்களுக்கு நம்மோட வாழ்த்துக்களையும் சொல்லுவோம் .

 தொடர்புக்கு: 89030 05026


                                      ---நன்றி வாரஇதழ் 

பாடலின் வரிகள் - எதிர் நீச்சல் - நிஜமெல்லாம் மறந்து போச்சு


படம் :எதிர்  நீச்சல் 
பாடல் :நிஜமெல்லாம் மறந்து போச்சு
இசை : அனிருத் 
பாடலாசிரியர் :தனுஷ் 
பாடியவர்கள் : தனுஷ் ,அனிருத் 


நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவை காணம்
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே
(நிஜமெல்லாம்)

ஏ... பார்க்காமல்  பார்க்காதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
போதைகள் தராதே பெண்ணே போதும்
பெண்ணே போதும்....

ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரமா
யேதேதோ நெஞ்சுக்குள்  வச்சிருக்க நான் வாரேமா
கூடாத எண்ணங்கள் கூடுதம்மா
தாங்காத என் கூடுமா
பட்டாலும் கெட்டாலும்  கேட்காதுமா என் நேரமா
ஒ விட்டில் பூச்சு
விளக்க சுடுது
வெவரம் புரியாம விளக்கும் அழுது


ஏ... பார்க்காமல்  பார்க்காதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
போதைகள் தராதே பெண்ணே போதும்
பெண்ணே போதும்....



நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவை காணம்
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே

வெள்ளி, 10 மே, 2013

பாடலின் வரிகள் - எதிர் நீச்சல் - மின் வெட்டு நாளில்


படம் :எதிர்  நீச்சல் 
இசை : அனிருத் 
பாடல் :மின் வெட்டு நாளில்
பாடலாசிரியர் :வாலி 
பாடியவர்கள் : மோஹித் சொவ்ஹன் ,ஸ்ரேயா கோஷல்  



ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்கே  மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
உயிர் தீட்டும் உயிலே  வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே
காதல் காதல் ஒரு ஜூரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம், ஏவால் தொடங்கிய  கலை
தொடர்கதை அடங்கியதில்லையே

காதல் காதல் ஒரு ஜூரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம், ஏவால் தொடங்கிய  கலை
தொடர் கதை அடங்கியதில்லையே


ஓ... ஜப்பானில் விழித்து எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த ஹைகூவே
ஓ... ஜவாது மனதை உன் மீது தெளிக்கும்
ஹைகூவும் உனகோர் கை பூவே
விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்ம்ம்
ஓ... பிரியாத வண்ணம் புறாக்கள் தோல் சேரும்...
ஈச்சம் பூவே தொடு தொடு
கூச்சம் யாவும் விடு விடு
யேக்கம் தாக்கும் இளமை ஒரு
இளமையில் தவிப்பது தகுமா...

ஹ... மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா

உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே

காதல் காதல் ஒரு ஜூரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம், ஏவால் தொடங்கிய  கலை
தொடர்கதை அடங்கியதில்லையே

வியாழன், 9 மே, 2013

பாடலின் வரிகள் - :எதிர் நீச்சல் - உன் பார்வையில்


படம் :எதிர்  நீச்சல் 
இசை : அனிருத் 
பாடல் :உன் பார்வையில்
பாடலாசிரியர் :துரை செந்தில் குமார் 
பாடியவர்கள் : அனிருத் ,விவேக் 


உன் பார்வையில் விழுந்த நாள் முதல்
என் துன்பங்கள் மறந்து போனது
உன் கைவிரல் சேர துடிக்குது
அன்பே அன்பே


 உன் பார்வையில் விழுந்த நாள் முதல்
என் துன்பங்கள் மறந்து போனது
உன் கைவிரல் சேர துடிக்குது
அன்பே அன்பே



காலேஜ்க்கு போகாமலே ...


கல்லூரி பக்கம் போகாம ,உலகத்திலையே முக்கியமான நபர்களாக , அதிக செல்வாக்குள்ள நபர்களாக ,பில்லியனர்களாக இருக்கும் சில பேர் பத்தி ஒரு கட்டுரை படிச்சேன் .

நீங்களும் பாருங்களேன் அவங்களாம் யாருனு.

Test
மைக்ரோசாப்ட் உரிமையாளர் பில் கேட்ஸ்

சரிதாங்க ,டிகிரி மட்டும் வச்சுக்கிட்டு ஒன்னும் பண்ண முடியாது.எந்த துறையா இருந்தாலும் அதுல ஜெயிக்க சில அனுபவம்,சில தந்திரம் , திறமை இருந்தா போதும்.வெறும் படிப்பு மட்டும் நமக்கு எதுவும் தராதுங்குறது உண்மைதான்.இதை படிக்கும் போது நம்ம தமிழ் பாட்டு ஒன்னு நியாபகத்துக்கு வந்தது எனக்கு ,

 டெண்டுல்கர் படிச்சது பத்தாவது
ஆனாலும் அடிச்சா நூறாகுது
அம்பானி காலேஜ் போனதில்லை
ஆனாலும் பேரு வானம்போல
சைக்கிள் கடைதான் வச்சாங்க பசங்க
ஃப்ளைட்டு கண்டு புடிச்சாங்கப்பா
தானா படிச்சி தனியாளா ஒருத்தன்
ட்ரெய்னு செஞ்சி முடிச்சானப்பா

+2 ரிசல்ட் வந்துருக்குற இந்த சமயத்துல இந்த போஸ்ட் சரியாதான் இருக்கும்னு நினைக்குறேன்.

புதன், 8 மே, 2013

பாடலின் வரிகள் - உதயம் NH4 - யாரோ இவன்

படம் :உதயம் NH4 
இசை : G .V பிரகாஷ் குமார் 
பாடல் :யாரோ இவன்
பாடலாசிரியர் : லா.ராஜ்குமார் 
பாடியவர்கள் : G .V பிரகாஷ் குமார் ,சைந்தவி


யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன் 
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன் 
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்


யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்


எங்கே உன்னை கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே 
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன் 
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ
உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ
நதியினில் ஒரு இலை விழுகிறதே 
அலைகளில் மிதந்தது தவழ்கிறதே
கரைசேருமா உன் கைசேருமா எதிர்காலமே

எனக்காவே பிறந்தானிவன்
எனை காக்கவே வருவானிவன் 
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

செவ்வாய், 7 மே, 2013

மின்சார நிலையம் !!!

என்ன இது ,ரயில் நிலையம் பேருந்து நிலையம் மாதிரி மின்சார நிலையம்னு சொல்றேன்னு பாக்குறீங்களா?

பின்ன..அவரவருக்கு தேவையான மின்சாரத்தை அவரவரே ஒரு இயந்திரம் மூலமாக தயார் செஞ்சுக்கலாம்னா மின்சார நிலையம்னு சொல்லலாம் இல்ல.

கே.ஆர் ஸ்ரீதர் - யார் இவர் ?


ஊர் - திருச்சி
படித்து - ரீஜினல் இன்ஜினியரிங் காலேஜ் (இப்போ NIT )
பிரிவு -மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
மேற்படிப்பு - இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தில் நியூக்ளியர் இன்ஜினியரிங் -அமெரிக்கா ,மேலும் அங்கேயே ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் .
வேலை-நாசா விண்வெளி மையத்தில் ,அரிசோனா பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குனர் .

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா ?அதற்க்கு தேவையான சாத்தியக்கூறுகளை கண்டுபிடிக்குறது தான் இவரோட வேலை.அதுலயும் முக்கியமா மனிதன் சுவாசிக்க தேவையான ஆக்சிஜன் தயார் செய்ய முடியுமா-னு ஆராய்ச்சி பண்ணினார்.ஆனா அமெரிக்க அரசாங்கம் ஆராய்சியை கைவிட்டுடுச்சு.

அரசாங்கம் கைவிட்டாலும் ,தான் செய்த ஆராய்சியை கைவிட விருப்பம் இல்ல இவருக்கு. என்ன செஞ்சார் ? அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்சில் செஞ்சு பாத்தார்.அதாவது ,எதோ ஒன்னுல இருந்து ஆக்சிஜனை உருவாக்கி வெளிய எடுக்குறதுக்கு பதிலா ,அத ஒரு இயந்திரதுக்குள்ள அனுப்பி அதோட இயற்கையா கிடைக்குற எரி சத்தியை சேர்த்தா என்ன நடக்குதுனு பாத்துருக்கார் .அவருக்கு கிடச்ச அவுட்புட் என்ன தெரியுமா ? மின்சாரம்.


இனிமே அவரவர் அவரவருக்கு தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலமா தயார் செஞ்சுக்கலாம்.

ஆனா, இந்த இயந்திரத்தை வர்த்தக ரீதியா தயாரிக்கணும்னா அதுக்கு பணம் அதிகமா செலவு ஆகும்.இவருக்கு ஜான் டூர் -அப்டீங்குற ஒரு ஸ்பான்சர் கிடச்சுருக்கார் .

இவரோட கண்டுபிடிப்பு சிறப்பு என்னனா - சுற்று சூழலுக்கு உகந்தது.மின் இழப்பு இல்ல.

8 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்கு பின்னர் , 'ப்ளும் பாக்ஸ்' -எனும் மின்சார உற்பத்தி பெட்டி தயாராகிடுச்சு.

10 முதல் 20 அடி உயரம் உள்ள இரும்புப் பெட்டிதான் இவர் உருவாக்கி உள்ள இயந்திரம்.இதுல ஆக்சிஜனையும் இயற்க்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் மின்சாரம் கிடைக்குது.

பெட்ரோலிய எரிவாயுவுக்கு பதிலா மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாமாம் .

சூரிய ஒளியை பயன்படுத்தலாம்.

கட்டடத்துக்கு வெளில வச்சுக்கலாம்.இந்த 'ப்ளும் பாக்ஸ்' மூலமா எந்த மூலையிலும் மின்சாரம் தயாரிக்கலாம்.

இப்போ ஒரு 'ப்ளும் பாக்ஸ்' இருந்தா ரெண்டு வீடுக்கான மின்சாரம் தயாரிக்கலாம்.

இப்போ அமெரிக்காவுல 20 நிறுவனங்கள் இந்த 'ப்ளும் பாக்ஸ்' மூலமா மின்சாரம் தயாரிக்குறாங்க.கூகிள் ,வால் மார்ட் ,கோக்கோ  கோலா ,அடோப் சிஸ்டம்,சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனம் இந்த 'ப்ளும் பாக்ஸ்'  உபயோகிக்குறாங்க.

இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .


படத்தை பற்றி.... இந்த படம் எப்படி ?

எதிர் நீச்சல் படம் பத்தி

 படிக்க  - http://srivalaipakkam.blogspot.in/p/4.html


ஞாயிறு, 5 மே, 2013

பாடலின் வரிகள் - தாண்டவம் - ஒரு பாதி கதவு

படம் :தாண்டவம் 
இசை : G .V பிரகாஷ் குமார் 
பாடலாசிரியர் :நா.முத்துக்குமார்
பாடியவர்கள் : ஹரிசரண் ,வந்தனா 
பாடல் :ஒரு பாதி கதவு 

நீ என்பதே ...நான் தாணடி..
நான் என்பதே.. நாம் தாணடி...

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்

நீ என்பதே ...நான் தாணடி..
நான் என்பதே.. நாம் தாணடி...

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி......

இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சேர்த்து விடும்
ஓ... கதவுகளை திருடி விடும்
அதிசயத்தை காதல் செய்யும்
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பொய் பூட்டு போனது
வாசல் தல்லாடுதே திண்டாடுதே கொண்டாடுதே

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி...

ஓ... இடி இடித்தும் மழை அடித்தும்
அசையாமல் நின்றிருந்தோம்
ஓ... இன்றேனோ நம் மூச்சின்
மென் காற்றில் இணைந்து விட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே
கதவே  இல்லாமல் ஆனதே
இனிமேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே


ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்


நீ என்பதே ...நான் தாணடி..
நான் என்பதே.. நாம் தாணடி...

சனி, 4 மே, 2013

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 1

மே தினத்துக்கு ,விஜய் டிவி-ல் ,மே 1-ல் ரிலீஸ் ஆன 'எதிர் நீச்சல்' படத்தோட சிறப்பு பார்வை ஒளிபரப்பினாங்க.

எனக்கு சிவகார்த்திகேயனை விஜய் டிவி-ல் காம்பியர் பண்ணும்போது இருந்து பிடிக்கும்.அவரோட அந்த டைமிங் சென்ஸ்-காகத்தான் 'அது இது அது' நிகழ்ச்சி பாக்கவே ஆரம்பிச்சேன்.இப்போ அது எனக்கு பிடிச்ச ப்ரோக்ராம்ல ஒன்னு.(அதே மாதிரி சந்தானமும் பிடிக்கும் )

சரி, என்ன சொல்ல வந்தேனா ,சிவாகார்த்திகேயன் இந்த படத்துல நெஜமாவே நல்லா நடிச்சுருக்கார்.ரொம்ப மெச்சூர்டா தெரியுறார்.படம் சீக்கிரம் பாத்துடனும்னு ஒரு ஆவலை ஏற்படுத்திடுச்சு இந்த நிகழ்ச்சி.

எனக்கு தனுஷும் பிடிக்கும் ப்ரியா ஆனந்தும்( வாமனன் ,இங்கிலீஷ் விங்க்லிஷ் ,180,சில தெலுகு படத்துல பாத்துருக்கேன் )அவங்களையும் பிடிக்கும், அனிருத் இசை .ஸோ ,ஒரு நல்ல காம்பினேஷன் இருக்கு இந்த படத்துல.எதிர்பாப்போம்.

இப்போ அந்த நிகழ்ச்சி பாருங்க.


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி :(மே -10-13 - மே -13-13)

போனவாரம் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சில  கலந்துகிட்டாரு சிவா.அவருக்கான கேள்விகள் ஈஸியா தான் இருந்தது.ஆனா ஒரு ஒரு கேள்விக்கும் ஆவர் பதில் சொன்ன விதம் ,சிரிச்சு சிரிச்சு போதுன்னு ஆகிடுச்சு..எல்லாராலயும் எல்லாரையும் சிரிக்க வச்சுட முடியாது.அதுவும் மத்தவங்கள புண்படுத்தாம ,அதே நேரம் டயமிங்கும் மிஸ் ஆகாம சிரிக்க வைக்குறது ரொம்ப கஷ்டம்.ஆனா இவருக்கு இந்த விதம் ஈஸியா வருது.இது சிவகார்த்திகேயனோட ஸ்பெஷாலிட்டி.'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - எபிசோட் 1 'இங்க உங்களுக்கு

மே -10-13 எபிசோட்  :




நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி :(மே -13-13)


சிவா அவர்கள்  மேலும் மேலும் பெரிய நிலைக்கு வருவதற்கு வாழ்த்துக்கள் 

வெள்ளி, 3 மே, 2013

நமக்குள்ள இருக்குற இசைஞானியை வெளில கொண்டுவாங்கப்பா !!!!

 நாம் எழுதி மெட்டமைக்குற பாடலுக்கு, இலவசமாக இசையமைச்சு தருதாம் உஜம் இணையதளம் .

புகழ் பெற்ற மேற்கத்திய இசைக் கலைஞர்களான பீட்டர் கோர்ஜஸ், பரேல் வில்லியம்ஸ் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோரால் தொடங்கப்பட்டதுதான் இந்த உஜம், இணைய உலகின் முன்னணி இசையமைப்புத் தளம். ஒரு பாடல் உருவாகத் தேவையான அத்தனை கம்போசிங் வசதிகளும் இதில் இருக்காம் .
இந்தத் தளத்தில் இலவசப் பயனாளர் கணக்கு ஒன்றை உருவாக்கிக்கணும் . இந்த இணையதளத்தைப் பயன்படுத்த Adobe flash player என்ற மென்பொருள் கணினியில்கண்டிப்பா இருக்கணும் . Create song என்பதை கிளிக் செஞ்சு , பயனாளர் கணக்கு பாஸ்வேர்டு கொடுத்து உள்ள நுழையனும் .

 இப்போது மியூசிக் ஸ்டூடியோ திரையில் தோன்றும். சிவப்பு நிற இணைப்பை கிளிக் செஞ்சு கணினி மைக்ரோபோனில் பாடத் துவங்கனும் .அப்லோட் செஞ்சும் பாடல்களை ஸ்டூடியோவில் சேர்க்கலாம். 30 நிமிடங்கள்வரை பாடலாம். பாடி முடித்ததும், பின்னணி இசை சேர்ப்பதற்கான முகப்பு வரும். தாள இசைக்கருவிகள் (Percussion Instruments) நரம்பு இசைக்கருவிகள் (Stringed Instruments), காற்று இசைக் கருவிகள் (Brass Instruments), விசைப்பலகை இசைக்கருவிகள் (Keyboard Instruments) என வகைவகையான இசைக்கருவிகள் இங்கு இருக்கு . வயலின், வீணை, மிருதங்கம் போன்ற இந்தியாவின் தொன்மையான இசைக்கருவிகளும் இதில் கிடைக்குது . மேலும், ஹிப் ஹாப், பேபி லவ், டெக்னோ என்பது மாதிரியான 50க்கும் மேற்பட்ட இசைக் கோப்புகள்இருக்கு . பிடித்தமானவற்றை உங்கள் பாடலுடன் சேர்த்துக்கொள்ளலாம். உஜம் வல்லுநர்கள் தொகுத்த படிம அச்சு எனப்படும் டெம்ப்லட் (template) ஒன்றை தேர்ந்தெடுத்துக்கோங்க .

 ஒவ்வொரு இசைக்கோப்புடனும் உங்கள் பாடல் எப்படி கோர்வையாகியிருக்கிறது என்பதை உடனுக்குடன் சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

 உங்கள் குரலை உங்கள் விருப்பத்துக்கேற்ப எந்த மாதிரியாகவும் மாற்றிக் கொள்ளும் வசதியும் இதில்இருக்கு . இதில் பாட, ‘நல்ல குரல் வளம்’ இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இறுதியாக Custom Style, Customize Style செலக்ட் செய்து, டெம்போவை சரியான அளவில்கொடுக்கணும் .

 இசை சேர்ப்பு முடிந்து விட்டது என்றால், எம்.பி.3 கோப்பு வடிவில் சேமித்துக் கொள்ளலாம். நீங்கள் இயற்றிய பாடலை, உஜம் தளத்திலேயே வெளியிடலாம். முக நூல், யூ டியூப் ஆகியவற்றிலும் பகிர்ந்துகொள்ளலாம். 

மேலும், இந்த ஸ்டூடியோவை எப்படிப் பயன்படுத்துவது, எப்படி இசையமைப்பது என்பதைப் பற்றிய ஒரு அறிமுக வீடியோவும்இருக்கு . அதனால், அடிப்படை இசை நுட்பம் தெரியாதவர்களும்கூட, இந்த இசையமைப்புத் தளத்தை எளிதாகப் பயன்படுத்தமுடியும் .

 இணையதள முகவரி: www.ujam.com

வியாழன், 2 மே, 2013

பாடலின் வரிகள் - தாண்டவம் - உயிரின் உயிரே

படம் :தாண்டவம் 
இசை : G .V பிரகாஷ் குமார் 
பாடலாசிரியர் :நா.முத்துக்குமார் 
பாடல் : உயிரின் உயிரே உனது விழியில்
பாடியவர்கள் : சைந்தவி ,சத்ய பிரகாஷ் 


உயிரின் உயிரே உனது விழியில் 
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய்  நானாகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

உயிரின் உயிரே உனது விழியில் 
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

சாயங்காலம் சாயும் நேரத்தில் தோழி போல மாறுவேன்
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில் தாயை போல தாங்குவேன்
வேறு பூமி வேறு வானம் தேடியே நாம் போகலாம்
சேர்த்து வைத்த ஆசையாவும் சேர்ந்து நாமங்கு பேசலாம்
அகலாமலே அனுகாமலே இந்த நேசத்தை யார் நெய்தது
அறியாமலே புரியாமலே இரு நெஞ்சுக்குள் மழை தூவுது

உயிரின் உயிரே உனது விழியில் 
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல் 
கனவிலே நீ தோன்ற வேண்டும்

தண்டவாளம் தள்ளி இருந்தது தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது என்னுள் உன்னை தேடத்தான்
ஐந்து வயது பிள்ளை போலே உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும் செல்ல முத்தம் பாதிக்கவா
நிகழ் காலமும் எதிர் காலமும் இந்த அன்பெனும் வரம் போதுமே
இறந்தலுமே இரவாமலே இந்த ஞாபகம் என்றும் வாழுமே

உயிரின் உயிரே உனது விழியில் 
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

புதன், 1 மே, 2013

படத்தை பற்றி.... இந்த படம் எப்படி ?

உதயம் NH 4,சேட்டை ,சென்னையில் ஒரு நாள் ,குண்டே ஜாரி கல்லந்தயிந்தே (தெலுகு) மேலும் பல படங்களின் விமர்சனம் இந்த லிங்க்-இல் பார்க்கலாம்

http://srivalaipakkam.blogspot.in/p/4.html

சாதனா சிறப்புப் பயிற்சிப் பள்ளி !!!- கண்டிப்பா இதை ஷேர் பண்ணுங்க ப்ளீஸ் ....

‘சாதனா சிறப்புப் பயிற்சிப் பள்ளி’ங்குற பெயர்ல , பார்வை திறன் இல்லாத மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை மதுரையில் இருக்குற Indian Association for Blind (IAB) நிறுவனம் ஆரம்பிச்சு இருக்காங்க.பார்வை திறன் இல்லாத மாணவர்களுக்கு ,கணினி, பர்சனாலிட்டி டெவலெப்மெண்ட், ஸ்போக்கன் இங்கிலீஷ் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி எல்லாம் இலவசமா சொல்லி தராங்கலாம் .


ரெண்டு மாசம் நடக்குற இந்த பயிற்சியில ,வெளியூர் மாணவர்களுக்குத் தேவையான தங்குமிடம், உணவு வசதிகள் , IAB வளாகத்திலேயே இலவசமா செஞ்சு தராங்களாம்.மதுரையிலையே இருக்குற மாணவர்கள் இந்த வகுப்புக்கு வரதால அவங்களுக்கு ஊக்கத்தொகையா 1000 ரூபாய் மாச மாசம் தராங்கலாம்.


United Way of Chennai என்ற நிறுவனத்தோட உதவியோட சுமார் 25 கணினிகள் மற்றும் அனைத்து வசதிகளையும் உடைய பார்வையற்றவர்களுக்கான கணினி மையம் IAB -இல்இருக்காம் .சீக்கிரமே பார்வைத் திறனற்றவர்களுக்கான ‘placement’-ம் அமைக்கப்போறாங்கலாம் 


தொடர்புக்கு-96008 02223.

அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்...

அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்..நாம எல்லாருமே ஏதோ ஒரு விதத்துல உழைப்பாளிகள் தாங்க.அதனால எல்லாருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்.