பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 18 ஜூன், 2021

குக் வித் கோமாளி - ஒரு ரசிகையின் பார்வையில்

இந்த நிகழ்ச்சியை பாக்க  சொல்லி என்னை வற்புறுத்தியது என்னோட அண்ணி கார்த்திகா தான்.ரொம்ப நல்லா  இருக்கு stress relief ஆ இருக்கு கண்டிப்பா பாருங்க உங்களுக்கு பிடிக்கும்னு என்கிட்ட பலதடவை சொன்னாங்க.ஆனா நான்தான்  கேக்கல.

ஐயோ இரிட்டேட்ஆ இருக்க போகுது.எனக்கு வேண்டாம் நீங்க பாருங்க இது மாதிரியே சொல்லி மழுப்பிகிட்டு இருந்தேன்.

இன்ஸ்டாக்ராம்ல பாத்தா எங்க பாரு இந்த நிகழ்ச்சியோட கிளிப்பிங்ஸ்-ஆ போட்டுக்கிட்டே இருந்தாங்க. என்னடா அப்படி இருக்கு இந்த நிகழ்ச்சியிலன்னு பலதரம்  நினச்சேன்.

ஒருதரம் ஸ்ரேயா கோஷல் ஷிவாங்கிக்கு விஷ் பண்ணி ஒரு போஸ்ட் இன்ஸ்டாக்ராம்ல போட்டு இருந்தாங்க .அட யாருடா இந்த ஷிவாங்கினு அப்போதான் first time ஷிவாங்கிய பத்தி  பாத்தேன். 

அப்பறம் நாங்க ட்ரிப் போயிருந்தப்போ இந்த ஷோ-வோட பைனல் எபிசோட் பாத்தேன். காதுல ஹெட் போன் போட்டுக்கிட்டு டிரைவ் பண்ணிகிட்டே கேட்டுகிட்டு போனேன். லூசு மாதிரி சிரிச்சுகிட்டே வண்டி ஓட்டிக்கிட்டு  இருந்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சியிருந்தது. அன்னைக்கு நைட் என் அண்ணிக்கு கால் பண்ணி நான் பைனல் எபிசோட் பாத்தேன் ரொம்ப பிடிச்சியிருந்ததுனு அது பத்தி பேசிக்கிட்டே இருந்தோம் நானும் அண்ணியும்.பேசுனோம் சிரிச்சோம் ஷேர் பண்ணிக்கிட்டோம்.

சரி அடுத்தது  பாப்போமேன்னு பைனலுக்கு முன்னாடி எபிசோட் பாத்தேன். ஓகே அடுத்தது பாப்போம் னு அதுக்கு முன்னாடி எபிசோட்னு reverse-ல  பாத்துகிட்டே வந்தேன். நாங்க ரெண்டு மாசம் ட்ரிப் முடிஞ்சு வந்தப்போ எல்லா எபிசோட்டும் பாத்து முடிச்சியிருந்தேன்.சொன்னப்போலாம் நம்பள. 

ஆனா நிஜமாவே இந்த ஷோ மனசுக்கு சந்தோஷத்தை தருது. நிறைய positivity  கொடுக்குது. நம்மளையே மறந்து சிரிக்க முடியுது.சந்தோஷமா தூங்க முடியுது.
இப்போ இந்த ஷோ first -ல இருந்து இப்போ ரெண்டாவது தரம் பாத்துகிட்டு இருக்கேன்.டெய்லி ஒன்னு கண்டிப்பா பாத்துடனும்னு தினம் தினம் ஒன்னு ஒண்ணா பாத்துகிட்டு இருக்கேன்.

நிகழ்ச்சியப்பத்தி சொல்லும்போது இந்த நிகழ்ச்சியில இருக்குறவங்களைப் பத்தியும் சொல்லனுமா இல்லையா.

யாரு இந்த ஷிவாங்கினு பாக்க ஆரம்பிச்சதால ஷிவாங்கில இருந்தே ஸ்டார்ட் பண்ணுவோம்.

ஷிவாங்கி : கள்ளம் கபடம் இல்லாத இந்த சின்ன பொண்ணு குணத்தை பாக்கும் போது இந்த பொண்ணு மாதிரியே எல்லாரும் இருந்தா  உலகமே அழகாயிருக்கும்னு ஆசையா இருக்கு. crush -ஆ இருந்தாலும் அந்த crush win  பண்ணும்போது எல்லாம் ,தானே win  பண்ணின மாதிரி சந்தோஷமா இருக்குறது . crush -ஓட சின்ன சின்ன சந்தோஷத்தையும் பாத்து ரசிக்கிறதுனு இந்த பொண்ணு நிஜமாவே வேற லெவல்- ங்க .

ஷிவாங்கி பத்தி பேசினா அடுத்து அஸ்வின் பத்தி சொல்லலைனா சாமி குத்தமாகிடுமே.
சோ அடுத்து அஸ்வின் 

அஸ்வின்: பாக்க ஸ்மார்ட்-ஆ  செய்யும் தொழிலே தெய்வம்னு செய்யிற சமையல்ல அலெர்ட்-ஆ , செஞ்ச எந்த சமையலும்  நோ ரிப்பீட்டா  எல்லா பொண்ணுங்க கண்ணுக்கும் இவரு ஹாட்-ஆ (சொன்னேன்ல நா ரெண்டாவது தடவை எல்லா எபிசோடும் பாக்குறேன்னு).  ஜோக்ஸ் அப்பார்ட் ,  சமையல்லாம் ஆம்பளைங்களுக்கு  ஒன்னும் கஷ்டமான வேலை இல்லனு கான்டினென்ட்  வகையில விதவிதமா செஞ்சு அசத்துனது ஒருபக்கம்னா,crush  crush-னு ஒரு பொண்ணு (இல்ல ரெண்டு  பொண்ணு) தன்னை சுத்தி சுத்தி வந்த போதும்கூட ஒரு சின்ன அளவுல கூட மனசை காயப்படுத்தாம சஞ்சலம் இல்லாம கண்ணியமா நடந்துக்கிட்டு , இம்யூனிட்டி-ல தோத்தாலும் பரவா இல்லாம விடு விடு-னு  சொல்லுமா ,என்னமா, செய்யும்மானு ... செம ப்ரோ..உங்கள ரொம்ப நல்லா வளத்து  இருக்காங்க உங்க வீட்ல. உங்ககிட்ட முதல் 10 எபிசோடுக்கு அப்பறம் நல்ல மாற்றம் தெரிஞ்சது.இறுக்கமா இருந்த நீங்க செமி பைனல் கிட்டலாம் ரொம்பமே ஜாலியா மாறிட்டீங்க.ஷிவாங்கிக்கிட்ட ,ஹோ  அப்போ உங்க அண்ணாதான் முக்கியம் ஹும் ஹும் -னு சேட்டை பண்ற அளவுக்கு மாறிட்டீங்க.

ஷிவாங்கி பத்தி அஸ்வின் பத்தி சொன்னா அப்போ மச்சானை பத்தி சொல்லாம இருக்க முடியுமா?

புகழ் : புகழ பாக்கும் போது , இது உலக நடிப்புடா சாமின்னு சொல்லாம இருக்க முடியல.  ஆமா எங்க கத்துக்கிட்டீங்க இந்த நடிப்பை? நடிப்பு மட்டும் இல்ல வேலைனு வந்துட்ட வெள்ளைக்காரனா இருக்கீங்க புகழ் . என்னதான்  ஷோ-ல கோமாளியா இருந்தாலும் நீங்க pair ஆகுற குக்குக்கு செமையா ஹெல்ப் பண்றீங்க எந்த வேலைனாலும் full effort போடுறீங்க. அதுதான் உங்கள  இன்னைக்கு இந்த இடத்துல இருக்க வச்சுருக்குனு தோணுது பாக்கும்போது. பேருக்கு யேத்த மாதிரி புகழோடு வாழுங்க என்னைக்கும்.

பாபா பாஸ்கர்: இந்த மனுஷனுக்கு எப்படித்தான் இவ்வளவு எனர்ஜியோனு பாத்து பொறாமை படுற அளவுக்கு இருக்காரு இவர். முடியும்டா முடியும்டா , தெரியலைனாலும் முயற்சி பண்ணுவேண்டானு முயற்சி பண்ணிகிட்டே இருந்தீங்க பாருங்க செம மாஸ்டர்.  உங்க எனர்ஜியை உங்கள சுத்தி இருக்குறவங்களுக்கும் கொடுத்தீங்க. 

பாலா : இந்த உடம்புக்குள்ல எங்க இருந்து இவ்ளோ கவுண்டர் வருதுன்னு தெரியல. ஏற்கனவே யோசிச்சு வச்சுருப்பீங்களா இல்ல on  தி sopt எல்லாம் வருதான்னு தெரியல. ஆனா உங்க கவுண்ட்டர் எல்லாம் வேற ரகம் தம்பி.life -ல  முன்னுக்கு வந்துடனும் வந்துடனும்னு  துடிப்பும் தவிப்பும் டயமிங் மிஸ் ஆகும்போது  உங்க வார்த்தைகள்ல தெரியுது. கண்டிப்பா உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கடவுள் கொடுப்பார்.

பவித்ராலட்சுமி : cute-ஆனா அழகான தமிழ் பேச தெரிஞ்ச பொண்ணு . effort எடுத்து சமைக்க முயற்சி பண்ணினீங்க. எல்லா புகழும் புகழுக்கேனு சொன்னீங்க பாருங்க அங்க நிக்குறீங்க நீங்க. பெரிய ரசிகர் பட்டாளமே உருவாக்கிட்டீங்க உங்களுக்குனு.

ரித்திகா :  இவங்கள பாத்ததும் நான் ஸ்ரீதிவ்யானு நினச்சேன். behindwoods award -ல தான் இவங்கள பாத்தேன்.இவங்களவச்சு  பாலா ஒரு பாட்டு பாடினாரு, மூணாவது ரவுண்டுல எலிமினேட் ஆகிடுச்சேனு அப்போ தான் ஹோ , இவங்க இந்த ஷோ-ல இருக்காங்க போலன்னு நினச்சேன்.show பாத்தபோது பாலாவுக்கே கவுண்டர் கொடுத்து off பண்ணின பெருமை இந்த பொண்ணுக்கே போய்சேரும். ஸ்ரீதிவ்யா  மாதிரியே நீங்க சினிமால ஒரு ரவுண்டு வரணும்.

ஷகிலா :  வேற வாழ்க்கையை ,வேற விதமான ரசிகர்களை இந்த நிகழ்ச்சி உங்களுக்கு கொடுத்துருக்கு. உங்களுடைய இன்னொரு முகமும்  ,உங்களுடைய கோவமும் ,பாசமும் நாங்க தெருஞ்சுக்க முடிஞ்சது .வாழ்க்கைல எல்லாமும் நமக்கு அமையுற சந்தர்ப்பங்கள் தான்னு உங்களை பாக்கும்போது தெரிஞ்சுக்க முடியுது.  

கனி : கனி நீங்க ஏன் இன்னும் சினிமாவுல நடிக்கலைனு தெரியல. எதார்த்தமா , எதார்த்தமான வம்பு பேச்சோடு அழகா நடிப்பு வருது உங்களுக்கு. முயற்சி பண்ணலாமே! உங்களுடைய சமையல் எல்லாம் அருமை .

சுனிதா : சுனிதாவை எனக்கு ஜோடி நம்பர் ஒன் -ல இருந்தே ரொம்ப பிடிக்கும். எப்படி சிவகார்திகேயனுக்காக ஜோடி நம்பர் ஒன் பாப்பேனோ அதுமாதிரி சுனிதாவுக்காகவும் பாப்பேன். அது ஒரு அழகிய கானா காலம். அழகா  தமிழ் பேசுறீங்க. தமிழ் பேச தெரியாதவங்க தமிழ் பேசுற அழகே தனிதான். (பேசத்தெரியாதவங்க மாதிரி நடிக்குறவங்க இல்ல) . சூப்பர் சுனிதா.

மணிமேகலை : உங்கள சன் டீவில காம்பியர் பண்ணி பாத்துருக்கேன்.ஆனா இவ்ளோ வாயா இருப்பீங்கனு தெரியாது. எல்லாருகிட்டயும் ரொம்ப உரிமையா அதே நேரம் எல்லாத்தையும் சகஜமா எடுத்துக்கிட்டு ஒரு வேலைபாக்குறது பெரிய விஷயம். நல்லா இருக்கணும்  ..நீங்க நல்லாலாலாலாலா வருவீங்க. 

மதுரை முத்து , தங்கதுரை :  முடியலடா சாமி.இப்போ  நான் ஒருகேள்வி கேக்கட்டா  : பாம்புக்கு ஒரு  வடைன்னா ரொம்ப பிடிக்கும் அது என்ன வடை தெரியுமா? ...
தவளை வடை .. ( தெரியுதா !தெரியுதா ! அப்டித்தான் இருக்கும் எங்களுக்கும்).

சக்தி : இன்னும் நிறையா கத்துக்கோங்க நல்ல எதிர்காலம் உங்களுக்கு .

தீபா (கா) :  ஆனாலும் , எப்படி அக்கா ஒண்ணுமே சமைக்க தெரியாம இந்த ஷோ-க்கு நீங்க வந்தீங்கன்னு தான் தெரியல. செம guts -கா. ஆனா ஒரு சந்தோஷம் என்ன விட சமையல்ல எதுவும் தெரியாத ஒருத்தங்க இருக்காங்கப்பா இருக்காங்க.  

செஃப் - தாமு சார், பட் சார்
  என் அம்மா தாமு சாரோட பெரிய fan . வியாழக்கிழமை  சாயந்தரம் 6 மணி ஆனாலே ஜெயா டிவி போட்டு உக்காந்துப்பாங்க . அவருடைய ரெசிபி தான் அவங்க குக்கிங் டிப் நோட்-ல அதிகமா இருக்கும்.அப்டித்தான் நானும் அவங்க கூட சேந்து பாத்துருக்கேன். பட் சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் போலன்னு தான் நினைச்சுட்டு இருந்துருக்கேன்.ஆனா வேற மாதிரி இருக்காங்க இந்த ஷோ-ல ரெண்டு பேரும். இவ்வளவு ஜாலியா ஈஸியா கூலான ஒரு காம்போ எங்கயும் கிடைக்காது. 

Rakshan : இவருடைய KPY பாத்துருக்கேன்.ஆனா அதை எல்லாம் தூக்கி சாப்பிடுறமாதிரி இந்த ஷோ இவருக்கு . பெரிய தூண் நீங்க தான் இந்த ஷோ-வுக்கு 

எல்லாருக்கும் மேல , அந்த எடிட்டர் : செம செம செம . எங்க வெட்டணும் எங்க ஒட்டணும் எங்க எந்த பாட்ட போடணும் எங்க எந்த டயலாக் போடணும்னு , வேற மாறி, வேற மாறி.  இந்த ஷோ இந்த அளவுக்கு ரீச் ஆனதுக்கு மெயின் ரீசன் நீங்கதான். 

டைரக்டர் பார்த்திபன் : ஒரு 50 பேர் கொண்ட குழு இப்படியெல்லாம் டாஸ்க் கொடுக்க  யோசிப்பீங்கனு நினைக்குறேன் . (மூக்கு பொடப்பா இருந்தா இப்படி எல்லாம் தான் யோசிக்க தோணுமாம்) . எப்படி யோசிக்கிறீங்க இதையெல்லாம் ? 

எப்படி இந்த ஷோ எடுக்குறாங்க? scripted -ஆ , முன்னாடியே சொல்லிடுவாங்களா? எப்படி அந்த நேரத்துல யோசிச்சு சமைக்குறாங்க இப்படி பல கேள்வி வரும். அதுவும் ஒரு எபிசோட்ல இம்மூனிட்டி challenge அப்போவே  பாலா ஷகிலா கிட்ட என்ன மெயின் டிஷ் சமைக்க போறீங்கன்னு கேப்பாரு , ஷகிலா மட்டன்னு சொல்லுவாங்க .
அப்போ இது முன்னாடியே முடிவு பண்ணிடுவாங்களா? அப்போ இவங்க செலக்ட் பண்றமாதிரி காட்டுறாங்களேன்னுலாம் யோசிச்சு இருக்கேன். 
எது எப்படி இருந்தா என்ன ,  நம்மள சந்தோஷமா சிரிக்க வைக்குறாங்களே அது போதும்.

ஆமா இவ்ளோ சொல்றீங்களே யாருங்க  நீங்க -னு எனக்கு ஒரு backgroud டயலாக் போட்டீங்கனா , இந்த ஷோ-வோட பல கோடி ரசிகர்கள்ல நானும் ஒருத்தி .