பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

எங்க இருந்தாலும் நாம அப்டியே இருந்தா எப்படி ?

     சமீபத்துல அமெரிக்கால இருக்குற ஒரு இந்து கோவிலுக்கு போயிருந்தோம். அந்த கோவில்ல குழந்தைகள் விளையாடுறதுக்கு சின்ன பழைய ஏரியா (பார்க் மாதிரின்னு வச்சுக்கோங்களேன் ) இருக்கு. அந்த கோவில் ரொம்ப சுத்தமா இருந்தது. கோவில் சுற்றுப்புறமும் சுத்தமாத்தான் இருந்தது.ஆனா அந்த குழந்தைகள் விளையாடுற பார்க்ல பேப்பர் கப்புகள், பிளாஸ்டிக் தட்டு, தண்ணி பாட்டில் இதுலாம் கிடந்தது.ஹிந்து கோவிலுக்கு நம்ம இந்தியர்களை தவிர யாரு வரப்போறாங்க?

    இந்த நாட்டுல இருக்குற பார்க்குகள்ல பாத்தோம்னா அவ்ளோ சுத்தமா இருக்கும்.நீங்க எங்கப்பாதாலும் குப்பைகளை பாக்க முடியாது. 98% சுத்தமா தான் இருக்கும் எல்லா இடங்களும் முக்கியமா  இந்த மாதிரி பார்க்குகள். இந்த நாட்டுல நான் பாத்து ரொம்ப ஆச்சர்யப்பட்ட விஷயம் இது. எவ்ளோ கோட்டம் இருந்தாலும் எவ்ளோ குலாண்டகிகள் ஒன்னு கூடினாலும் அங்க நாம கீழ குப்பைகளை பாக்க முடியாது. அது ரூல்ஸ் -ஆள இப்படி பழகிருக்கங்களா இல்ல இயற்கையாவே இப்படி  இருக்காங்களான்னு தெரியல. தன் வீடு எப்படி இருக்குமோ தெரியாது ஆனா பொது இடம் சுத்தமா இருக்கும்.

     ஆனா நம்ம கோவில்ல இந்த பார்க்குல அவ்ளோ குப்பைகள் இருந்தது.இத்தனைக்கும் பக்கத்துல ஒரு குப்பை தூட்டி இருந்தது ஒரு 50 ஆதி தள்ளி ஒரு குப்பை தொட்டி இருந்தது. நமக்கு பழக்கம் வரமாட்டுதோனு நினைக்க தோணிச்சு. போன தலைமுறை எப்படி இருந்தாங்களோ போகட்டும் . இந்த தலைமுறை சரியா இருந்தாத்தானே அடுத்த தலைமுறைக்கு நாம அத சரியா கொண்டுபோகமுடியும்.நாமே இப்படி அலட்சியத்தால இருந்தோம்னா நம்ம பாத்து வளருற நம்ம குழந்தைகள் எப்படி சரியா வளருவாங்க? 

    அங்க இன்னொரு விஷயமும் நடந்தது, பிள்ளைகள் ஒரு வளைவுல ஏறி போயி ஸ்லைடு-ல(சறுக்குமரம்) விளையாடுவாங்க . ஒரு பொண்ணு அந்த வளைவுல ஏறிகிட்டு இருந்தப்போ ஒரு பல்பு எங்கயோ இருந்து கீழ விழுந்து உடைஞ்சிடுச்சு. நல்ல வேல அது அந்த பொண்ணு தலையில விழல . பார்க்ல எப்பவும் கீழ மல்ச்-னு சொல்லப்படுற மர தூள் அல்லது துகள்களை போட்ருப்பாங்க. குழந்தைகள் விழுந்தா அடி  படாம இருக்க. இந்த பல்பு அதுல விழுந்து உடைஞ்சிடுச்சு. உடனே அந்த பொண்ணோட அம்மா பல்பு விழுந்துடுச்சு இந்த பக்கம் வா இறங்குனு அந்த பொண்ணை கூப்பிடுறாங்க. இன்னோர் அம்மா தன் பிள்ளையை அந்த பக்கம் போகாதனு சொல்றாங்க. ஆனா யாரும் அந்த உடைஞ்ச பல்ப்பை எடுக்க முன்வரல. அந்த கொஞ்சம் வளைந்த பொண்ணை விட சின்ன குழந்தைகள் அங்க விளையாடிகிட்டு இருந்தாங்க. இன்னும் எதனை குழந்தைகள் வந்து விளையாடுவாங்களோ? எப்படி நம்மால அதை பாத்து நம்மக்கு என்ன வந்ததுன்னு நினைக்கவோ இல்ல நம்ம பிள்ளை மட்டும் பத்திரமா இருந்தா போதும்னு நினைக்கவோ முடியுது? நானும் இன்னோர் gentle man -ம் சேர்ந்து அதை சுத்தம் பண்ணிட்டோம்.ஆண்களை இந்த விஷயத்துல ரொம்ப பாராட்டணும், அவங்க எப்பவும் கொஞ்சம் broad -ஆ தான் யோசிப்பாங்க.

இத நான் இப்போ ஒரு குறையா சொல்லல. நம்ம பாத்து வளருற குழந்தைகள். நாமதான் அவங்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லித்தரணும். நாமே இப்படி இருந்தா எப்படி.