பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 29 மார்ச், 2014

பாடலின் வரிகள் - கூடமேல கூடவச்சி - ரம்மி

படம் : ரம்மி 
பாடல் : கூடமேல கூடவச்சி
இசை: D .இமான்
பாடியவர்கள் :  பிரசன்னா,வந்தனா 
பாடலாசிரியர் :யுகபாரதி 
கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
உன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா

கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள
நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

வெள்ளி, 28 மார்ச், 2014

மெமரியில் இருக்கும் ஃபைல்களின் இடத்தை நெருக்கிட ..

நாம கம்ப்யூட்டர்ல வேலை செய்ய செய்ய ப்ரோக்ராம் சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்ய செய்ய நினைவகத்துல (மெமரி) இடம் குறைஞ்சுகிட்டே வரும்..

சில நேரம் ஃபைல்கள் கண்ணா பின்னானு இடத்தை அடச்சிருக்கும் ,இதுக்கு நாம அப்போ அப்போ நம்ம கம்ப்யூட்டரின் மெமரியில் இருக்கும் தேவை இல்லாத இடத்தை காலி பண்ணனும்,.

Defragment - மெமரியில் இருக்கும் ஃபைல்களை Re-arrange,ஃபைல்களுக்கு இடையில இருக்குற இடைவெளியை  கம்மிபண்ணி நெருக்கத்தை  ஏற்படுத்தணும் இதுக்கு பேர் தான் Defragment (டீஃராக்மென்ட் )

இத எப்படி செய்யணும்னா ,

1. Start - > Programs - > Accessories - > System Tools -> Disk Defragmenter செலக்ட் பண்ணுங்க..


2. இப்போ ஒரு விண்டோ ஓபன் ஆகும் ..அதுல எல்லா டிரைவ்களும் தெரியும் .அதுல நமக்கு எந்த டிரைவ்யை டீஃராக்மென்ட் பண்ணணுமோ அதை செலக்ட் செஞ்சு Defragment பட்டனை கிளிக் பண்ணுங்க ..இப்போ இது ஃபைல்களை நெருங்கி அமைச்சு இவ்வளவு இடம் காலியா இருக்குனு காட்டும்..

வியாழன், 27 மார்ச், 2014

குளு குளு பேருந்து நிறுத்தம்

வெயில் மண்டையைப் பிளக்கிறது. இதில் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் பேருந்து நிறுத்தத்தில் கொளுத்தும் வெயிலில் காத்திருக்கும் பயணிகள்தான். இந்நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக குளிர்சாதன வசதிகொண்ட பேருந்து நிறுத்தத்தை நிறுவியுள்ளது கும்பகோணம் நகராட்சி.

கும்பகோணம் நான்குவழிச் சாலையின் மயிலாடுதுறை மார்க்கத்தில் இந்த ஏ.சி. வசதி கொண்ட பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. சிட்டி யூனியன் வங்கி மற்றும் கும்பகோணம் நகராட்சி இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளன.

இந்தப் பேருந்து நிறுத்தத்தில் ஏ.டி.எம். இயந்திரம், ஒரு ரூபாய் பொதுத்தொலைபேசி, தொலைக்காட்சி வசதி, கேமரா வசதி ஆகியவையும் உள்ளன.

இந்த வசதி, முழுக்க முழுக்க இலவசமாக மக்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிறுத்தத்தில் விரைவில் கழிப்பறை வசதி, தானியங்கி தேநீர் எந்திரம் ஆகியவை அமைக்கும் திட்டமும் உள்ளது. இந்த ஏ.சி. பேருந்து நிறுத்தத்தில் மின்சாரம் இல்லாத நேரத்தில், இப்போது ஜெனரேட்டர் மூலமாக மின்விசிறி இயக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் இந்தப் பேருந்து நிறுத்தங்களை சோலார் மூலமாக இயக்கும் திட்டமும் உள்ளது. இங்கு ரகசிய கேமரா பொருத்தப்பட்டு, அது காவல்துறைக்கும் நகராட்சிக்கும் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்தப் பேருந்து நிறுத்தத்தை சுகாதாரமாகப் பயன்படுத்தி, இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்" என்கிறார், நகராட்சி ஆணையர் கலைச்செல்வன்.

                                             --- ஒரு வார இதழில் இருந்து...

புதன், 26 மார்ச், 2014

100 வருட சினிமாவில் இன்றும் மாறாதவைகள்

100 வருட சினிமாவில் இன்றும் மாறாதவைகள் .
எனக்கு தெரிஞ்சத நான் சொல்றேன் ஏதாவது விட்டுபோய் இருந்தா நீங்க சொல்லுங்க ..

->டாக்டர் -" இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கள்" ,அவர் உயிர் பிழைச்சதே அதிசயம்.என் இத்தனை வருஷ மெடிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்ல இப்படி ஒரு கேஸ் நான் பாத்ததே இல்ல. இன்னும் 5 நிமிஷம் லேட் ஆகிருந்தாலும் அவர் உயிருக்கே ஆபத்தாப்போயிருக்கும் சரியான நேரத்துல கொண்டுவந்து சேத்துடீங்க.

->போலீஸ் : கிளைமாக்ஸ்ல ஹீரோ எல்லாரையும் அடிச்சு முடிச்சதும் அதுபாட்டுக்கும் இருக்குற வானத்த பாத்து சுட்டு ஒரு குண்டை வேஸ்ட் பண்ணிகிட்டே வருவாங்க. போலிஸால கூட கண்டுபிடிக்க முடியாத கேஸ்களை நம்ம ஹீரோ அசால்ட்டா கண்டுபிடிப்பார்.போலீஸ் மூளையை விட ஹீரோ மூளை பக்காவா வேல செய்யும்.ஆனா பாருங்க நம்ம ஹீரோவுக்கு வேலை இருக்காது.வேல இல்லாத பட்டதாரியா ஊரு சுத்திக்கிட்டு இருப்பார்.

->ஹீரோயின் கண்டிப்பா அழகாதான் இருப்பாங்க.

->ஹீரோ ஹீரோயின் கண்டதும் காதல்.(காதல் இல்லாத கதையே இல்ல)

->கண்ணமூடுவாங்க வேற ஊர்ல இல்ல வேற நாட்டுல டூயட் பாடுவாங்க.(எப்படியாப்பட்ட பேசஞ்சர் ஃப்லைட்டும் இந்த ஸ்பீட்க்கு போகாது.

->நாம பாடினா பக்கத்துக்கு ரூமுக்கு கூட கேக்காது.ஆனா ஹீரோ /ஹீரோயின் பாடினா அடுத்த தெருவுல இருக்குற ஹீரோ/ஹீரோயின்க்கு கேக்கும்.அதுவும் சம்மந்தப்பட்ட இவங்களுக்கு மட்டும் தான் கேக்கும்.அவங்க வீட்ல வேற யார் இருந்தாலும் அவங்களுக்குளாம் கேக்காது.

->கண்டிப்பா ஒரு மெயின் வில்லன் இருப்பார்.அடுத்து ஒரு சப்-வில்லன் இருப்பார்.அவங்களுக்கு ஏகப்பட்ட அல்லக்கைகள் இருப்பாங்க.ஹீரோவுக்கு ஓரளவுக்கு இணையா இருப்பார் வில்லன் எல்லா விஷயத்துலையும் திறமைல,ஸ்மார்ட்ல,அடுத்த சப்-வில்லன் இதுலலாம் கொஞ்சம் கம்மியா இருப்பார்..அல்லக்கைகள் பாக்கவே பயமா இருப்பாங்க..கண்டிப்பா கழுத்துல செயின் இருக்கணும் ,அழுக்காதான் தெரியனும் தொந்தியும் தொப்பையும் இருக்கணும்.

->ஹீரோ/ஹீரோயின் யாராவது ஒருத்தர் பணக்காரரா இருந்து ஒருத்தர் ஏழையா இருந்தா, அந்த பணக்காரா ஹீரோ /ஹீரோயினின் அப்பா ஏழை ஹீரோ/ஹீரோயினின் காதலுக்கு தடையா இருப்பார்.ரெண்டுபேரும் மிடில் கிளாஸ்னா ஹீரோ எதிர்பாராத விதமா வில்லனுக்கு வில்லன் ஆகிடுவார்,ரெண்டுபேரும் லோயர் கிளாஸ்னா கண்டிப்பா ஒரு மொறமாமன் இருப்பான் அவனால பிரச்சனையாகும்.

->ஆனா எப்படியாப்பட்ட வில்லன்/வில்லியும் கடைசி 5 நிமிஷத்துல திரிந்திடுவாங்க.இல்ல ஹீரோ அந்த வில்லன்/வில்லியை கொன்னுடுவார்.அவங்களுக்குளாம் மட்டும் கேஸ் உடனே முடிஞ்சிடும் ... :D :D :D

செவ்வாய், 25 மார்ச், 2014

கோபம் வேணாமே

சமீபத்துல நடந்த ஆய்வுல அதிகமா கோவப்பட்டு கத்துறதால இதயம் மற்றும் மூளை பல மடங்கு பாதிக்கப்படுதுன்னு கண்டுபிடிச்சுருக்காங்க.

கோவம் வந்து கத்தி கூச்சல் போட்டதுக்கு அப்பறம் ஐந்து மடங்கு அதிகம் இதயத்துக்கு பாதிப்பு ஏற்படுதாம்.நெஞ்சுவலி,சிறு மூச்சு,அதிகமா வியர்த்தல் ,நடுக்கம் இப்படி பல அறிகுறிகள் தோன்றுமாம்.இந்த வாய்ப்பு 4.7 மடங்குனா , மூளையில இருக்குற ரத்தக் குழாயில ஏற்படுற அடைப்பு 3.6 மடங்கு அதிகம்.மேலும் மூளையில பல்வேறு பாதிப்புகள் ஏற்பட 6.3  மடங்கு வாய்ப்பு ஏற்படுமாம்.
 

திங்கள், 24 மார்ச், 2014

ஆன்மீக கேள்வி பதில்

சத்தி பீடங்கள் மொத்தம் எத்தனை - 51

சத்தி பீடங்களில் மந்த்ரிணி பீடமாகத் திகழ்வது  - மதுரை

காமாட்சியை ஏலவார் குழலி என்று குறிப்பிடுபவர்  - சுந்தரர் 

சத்தி பீடமான சியாமளா பீடம் தற்போது சிம்லா பீடமாக மாறிவிட்டது

மகிஷினை வதம் செய்த அம்பிகையை போற்றும் துதி - மகிஷாசுற மர்தினி ஸ்தோத்திரம்

வள்ளலாருக்கு அண்ணியாக வந்து உணவிட்டவள்  - திருவொற்றியூர் வடிவுடைநாயகி

காளிதாசருக்கு கவிபாட அருபுரிந்த அம்பிகை  - உஜ்ஜயனி காளி 

அர்ச்சகர் அம்பாளாக வேடமணிந்து சிவபூஜை செய்யும் தலம்  - திருவானைக்காவல்

மகாசத்தி பீடமாக போற்றப்படும் தலம்  - கொடுங்களூர் பகவதி கோவில்

சங்கரர் அம்பிகை மீது பாடிய புகழ் பெற்ற நூல்  - சவுந்தர்ய லஹரி


வெள்ளி, 21 மார்ச், 2014

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள்


தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களும் அந்த கோவிலுக்கு செல்வதற்க்கு தேவையான குறிப்புகளையும் ஆன்மீக மலரில் படித்தேன்..அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கில் இங்கு பகிர்கிறேன்..


தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள்

வியாழன், 20 மார்ச், 2014

புத்தகம் தான் என் செல்வம் -மதுரை முருகேசன்

தமிழில் கிடைப்பதற்கரிய எந்தப் புத்தகமாக இருந்தாலும் முருகேசன் செல்போனிற்கு ஒரு ஹலோ சொன்னால் போதும். அடுத்த இரண்டு நாட்களில் அந்தப் புத்தகம் நம் கையில் இருக்கும். தனி ஓர் ஆளாக கிட்டத்தட்ட இருபதாயிரம் புத்தகங்களுக்குமேல் சேமித்து வைத்திருக்கிறார். இன்னும் சேமித்துக் கொண்டிருக்கிறார். நாம் கேட்கும் புத்தகங்கள் அவரிடம் இல்லாவிட்டாலும் நூலகங்களில் தேடிக் கண்டுபிடித்து எடுத்துத் தருகிறார் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ள முருகேசன் அவர்கள் .

இவர் தற்போது இரண்டு அறைகள் உள்ள ஒரு சிறிய வீட்டில் புத்தகங்களுக்கு நடுவில் வாழ்ந்து வருகிறார். தான் வசிக்க இடம் இல்லையே என்பதைவிட புத்தகங்களை வைக்க இடம் இல்லையே என்பதுதான் இவரின் மிகப் பெரிய கவலை.

தொடர்புக்கு: 95787 97459

புதன், 19 மார்ச், 2014

புத்தகம் வாசிக்கும் கருவி

'ஃபிங்கர் ரீடர் ' என்ற புதிய கருவி ஒன்றை 'மாசாசூசெட்ஸ் இன்ஸ்ட்டியூட்  ஆஃப் டெக்னாலஜீஸ் மீடியா லேப் '  கண்டுபிடிச்சிருக்காங்க.

எழுத்து வரிகளின் மேல விரலை வச்சுகிட்டே போனா இந்த கருவி சத்தமா அதை படிச்சுக் காட்டுமாம்.

இது எப்படிசாத்தியம்னு கேக்குறீங்களா?எழுத்து வரிகளின் மேல விரலை வச்சுகிட்டே போனா இந்த கருவியில இருக்குற ஸ்கேனர் ,மூலமா எழுத்து வரிகள் ஸ்கேன் செய்யப்பட்டு வாசிக்கப்படுது.இது தொடு உணர்வு அழுத்தம்,அதிர்வு,நகர்தல் ஆகியவற்றினால் செயல்பட்டு அவற்றை ஒலியாக கொடுக்கும் புதிய தொழில்நுட்பம் 'ஹேப்டிக் பீட்பேக்' .இந்த தொழில்நுட்பம் மூலமா வார்த்தையின் உச்சரிப்பு ,வரி முடிந்து விட்டதற்கான ஒலி ,வரி ஆரம்பிப்பதற்கான ஒலி மேலும் அடுத்த வரி இருப்பதையும் ஒலி மூலம் தெரியபடுத்துது இந்த ஃபிங்கர் ரீடர் '.


செவ்வாய், 18 மார்ச், 2014

நெல்லிக்காய் சாற்றின் பலன்கள்

நெல்லிக்காயில வைட்டமின் சி இருக்குனு எல்லாருக்கும் தெரியும்.நெல்லிக்காய் சாப்பிடப் பிடிக்காதவங்க அதை ஜூஸ் செஞ்சு சாப்பிடலாம்.நெல்லிக்காய் ஜூஸ்ல என்ன என்ன பலன்கள் இருக்குனு தெரியுமா?

-நீரிழிவு நோயாளிகள் நெல்லிக்காய் சாற்றில் கொஞ்சம் மஞ்சள் தூள்,தேன் சேர்ந்து கலந்து குடிக்கலாம்.

-நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலைல எழுந்ததும் வெறும் வயித்துல குடிச்சா உடம்புல இருக்குற தேவை இல்லாத கொழுப்புகள் குறைஞ்சு உடம்பு எடை குறையும்.

-தினமும் நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்ந்து கலந்து குடிச்சா ஆஸ்துமா குணமாகும்.ரத்தம் சுத்தமாகும்.

வெள்ளி, 14 மார்ச், 2014

தூங்கும்போது கனவு ஏன் வருது ?

தூக்கத்துக்கு காரணம் மூளை தூண்டிவிடுற சில வேதிப்பொருள்கள். மூளையைத் தண்டுவடத்தோடு இணைக்கும் மூளைத்தண்டு, நம் ரத்தத்தில் அடினோசின் என்ற வேதிப்பொருளை அதிகரிக்குமானால் நமக்கு தூக்கம் வரும்.

கனவுகள் வரும் அந்த தூக்க நிலைக்கு பேர் REM-Rapid Eye Movement . கண்கள் விரைவா நகரும். இந்தத் தூக்கத்தின்போது, மூளையின் அடித்தளத்திலிருந்து (அந்த இடத்திற்கு பான்ஸ் (PONS) என்று பெயர்) அப்போப்போ சில சிக்னல்கள் கிளம்பி, தலாமஸ் எனும் மூளையின் நடுப்பகுதியை அடையும் . தலாமஸ் அதை வாங்கி, மூளையின் வெளிப்புறப் பகுதியான செரிபரல் கார்டெக்ஸுக்கு அனுப்பும் .

நாம படிக்குறது,கத்துக்குறது,தகவல்களை ஒழுங்குப்படுதுறதுனு பலதுக்கு காரணம் செரிபரல் கார்ட்டெக்ஸ்தான். மூளையின் அடித்தளத்திலிருந்து வரும் இந்த சிக்னல்களை செரிபரல் கார்ட்டெக்ஸ் ‘புரிந்து’ கொள்ளும் முயற்சிதான் கனவு என சில விஞ்ஞானிகள்சொல்றாங்களாம் . இந்தக் கனவுகள் நம் மூளையில தங்கிவிட்ட சில பழைய நினைவுகளை சுத்தப்படுத்தும் முயற்சினும் , சிலர் நம்முடைய மூளை தன்னுடைய திறன்களைத் தீட்டிக் கொள்ளுதுனும் சொல்றாங்க.

இந்த REM– தூக்கம் சிறு குழந்தைகளுக்குரொம்ப நல்லது. ஏன்னா அப்போது வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன் உற்பத்தியாகுதாம் .                                                           -- நன்றி வார இதழ் 

செவ்வாய், 11 மார்ச், 2014

கண்மாய் சீரமைத்த மதுரை இளைஞர்கள்

மதுரையைச் சேர்ந்த பல்வேறு இளைஞர் அமைப்பினர் ஒன்றிணைந்து கண்மாய் ஒன்றை சீரமைத்துள்ளனர் இளைஞர்களின் எண்ணமும் செயலும் ஒன்றிணைந்தால் இன்னமும் செய்யலாம், இதற்கு மேலும் செய்யலாம் என்பதை நிரூபித்திருக்கின்றனர் மதுரையைச் சேர்ந்த பல்வேறு இளைஞர் அமைப்பினர்.

மதுரை நகர்ப்பகுதியில் உள்ள முக்கியமான கண்மாய்களில் ஒன்று செல்லூர்க் கண்மாய். ஜன நெருக்கடி மிகுந்த செல்லூர்ப் பகுதி மக்களின் முக்கிய நீராதாரம்இந்தக் கண்மாய்தான். ஆனால் பல காலமாக கண்மாயில் தண்ணீர் நிரம்புவதற்குப் பதிலாக முள்காடுகளும் குப்பை மேடுகளும்தான் நிரம்பியிருந்தன.கண்மாய்க்கான தண்ணீர் வரத்துக் கால்வாய்களும் சேதமடைந்து விட்டன. விளைவு, கண்மாயில் தண்ணீர் தேங்காததால் செல்லூர்ப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் 900 அடிக்கும் கீழ் இறங்கியது.

இதை அறிந்த ஐ லீட் மதுரை, யூத் லீட் இந்தியா, நாணல் நண்பர்கள் குழு, விதை அறக்கட்டளை, நம்ம மதுரை முகநூல் பக்கம், கியூர் அறக்கட்டளை போன்ற மதுரையைச் சேர்ந்த பல்வேறு இளைஞர் அமைப்பினர் ஒன்றிணைந்து அந்தக் கண்மாயை சீரமச்சிருக்காங்கலாம்.

பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெற்றவுடன், கண்மாயை சீரமைக்க சேவை மனப்பான்மை உடைய இளைஞர்களைத் திரட்டும் வேலையைத் தொடங்கியுள்ளனர். மதுரையிலுள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் சென்று, அங்கு ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்களிடம் பேசி, ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைத்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்தில் மதுரை மேயர், காவல்துறைக் கண்காணிப்பாளர், மதுரை பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் என மதுரையின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் செல்லூர்ப் பகுதிக்கு வந்திருந்து சீரமைப்புப் பணிகளைத் தொடக்கி வைத்துள்ளனர்.

மதுரை முழுவதும் கல்லூரி மாணவர்களை இ   ணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். அவர்களைக் கொண்டு அடுத்த ஓர் ஆண்டில் மதுரையிலுள்ள அனைத்துக் கண்மாய்களையும் சீரமைக்க வேண்டும் என்பதே எங்களது தற்போதைய இலக்கு"னு சொல்றாங்க இவங்க..

தொடர்புக்கு: 78717 11178, 86430 50002


                                                         -- நன்றி புதியதலைமுறை 

திங்கள், 10 மார்ச், 2014

புலி

பூனை குடும்பத்துல மிகப்பெரிய விலங்குதான் இந்த வேங்கைப் புலிகள்

- புலி 3.3 மீட்டர் வரை நெலமா வளரும்.300கிலோகிராம் வரை எடை இருக்கும்.

- புலிகள்ல எத்தனை வகை இருக்குனு தெரியுமா?சுமத்ரா புலி,சைபீரியா புலி ,வங்காள புலி,தென் சீனப் புலி,மலேயப் புலி மற்றும் இந்தோனேஷியாப் புலினு இத்தனை வகைகள் இருக்கு.

- புலிக்குட்டிகள்ல அரைப்பங்கு ரெண்டுவயசுக்கு மேல உயிர்வாழ்றது இல்லையாம்.

வெள்ளி, 7 மார்ச், 2014

ஸ்க்ரீன் சேவருக்கு (Screen Saver) பாஸ்வோர்ட் எப்படி செட் பண்ணலாம்

ஸ்க்ரீன் சேவருக்கு (Screen Saver) பாஸ்வோர்ட் வைக்கலாம் .எப்படி தெரியுமா?
1. Control Panel - >Display - > Screen Saver போங்க.

2, இப்போ  எந்த Screen Saver வேணுமோ அதை தேர்வு செஞ்சு தேவையான நிமிட இடைவெளியையும் தேர்வு செய்யுங்க..

3.அதுக்கு பக்கத்துல ஒரு குட்டி பாக்ஸ் 'On resume,password protect' -னு இருக்கும் அதை டிக் பண்ணுங்க .

4.Apply - >ok கொடுங்க..அவ்வளவுதான்.

வியாழன், 6 மார்ச், 2014

தக்காளி செடியை தலை கீழா வளக்கலாம் -What an idea sir ji

அமெரிக்காவுல தக்காளி செடியை தலை கீழா வளக்குறாங்கலாம்.

தக்காளியைச் செடியை தலைகீழாக வளக்குறதுல என்ன பயன் தெரியுமா?

தக்காளிச் செடியின் தண்டுப்பகுதியில் பலம் கிடையாது. அதனால்தான் தக்காளி காய்க்கத் தொடங்கினதும், காயின் கனம் தாங்காம செடி தரையில் தொய்ந்துடுதாம் . இதனால் காய்கள் நீரிலோ, ஈரமண்ணிலோ பட்டு அழுகிடும். மேலும் செடியின் ஆரோக்கியமும் பாதிப்படையும்.

ஒரு செடி வளரும்போது, அது நீர் மற்றும் மண்ணிலிருந்து உறிஞ்சும் சத்துக்களை புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து கீழிருந்து மேல்நோக்கி அனுப்ப வேண்டியுள்ளது. இதனால், செடியின் வளர்ச்சிக் காலம் நீள்கிறது. மாறாக, செடியை மேலிருந்து கீழ்நோக்கி வளர்க்கும்போது, நீர் மற்றும் மண்ணிலிருந்து உறிஞ்சப்படும் சத்துக்கள், செடியின் பாகங்கள்எல்லாத்துக்கும் சீக்கிரமே வந்து சேரும் .. இதனால், காய் பிடிப்பும் சீக்கிரமே கிடைக்குறதோட , தண்டுப்பகுதி தொய்வதற்கும் வாய்ப்பில்லை.

இதே முறையில் மிளகாய், கத்திரி போன்ற காய்கறிப் பயிர்களையும் வளர்க்குறாங்கலாம் டாப்சி தர்வே என்ற நிறுவனம், தலைகீழாக வளர்ப்பதற்கான பிரத்யேக தொட்டியை வடிவமைத்து, சந்தையில் விற்பனை செய்து.

இதுபோன்ற மாதிரிகளை உருவாக்குவது ரொம்ப ஈஸி . வீட்ல பயனில்லாம இருக்குற தொட்டி வடிவமுள்ள பொருட்களை, மேற்பகுதி திறந்து இருக்குறமாதிரி , கீழ்ப்பகுதி சின்ன ஓட்டை இருக்குறமாதிரி வடிவமைச்சு , மண்ணை நன்கு அழுத்தி நிரப்பிக்கணும் . இப்போது சிறு துளை இருக்கும் கீழ்ப்பகுதியில், செடியை ஆழமாக நடவு செய்து, தொங்கவிடனும் . நீர் வெளியேறுவதற்கு வசதியாக, கீழ்ப்பகுதியின் ஓரத்தில்சின்ன ஓட்டை ஒன்னு போட்டுக்கணும் . அவ்வளவுதான், செடி ரெடி.

செடிகளை எப்படி தலைகீழாய் நடவு செய்வது, அதற்குத் தேவையான தொட்டிகளை எப்படி வடிவமைப்பது என்பதைப் பற்றி விளக்கும் வீடியோ காட்சி www.topsygardening.com இணையதளத்தில் உள்ளது.

                                                    ---நன்றி வார இதழ்

புதன், 5 மார்ச், 2014

டாம் & ஜெர்ரி


1940களில் ஹாலிவுட்டின் எம்.ஜி.எம்.(மெட்ரோ கோல்டுவின் மேயர்) என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஜோஸஃப் பார்பரா, வில்லியம் ஹன்னா என்ற கார்ட்டூன் உலக ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கிய பாத்திரங்கள்தான் டாம் என்ற பூனையும், ஜெர்ரி என்ற குட்டி எலியும்.

செவ்வாய், 4 மார்ச், 2014

கரண்ட் இல்லாம வேலைசெய்யும் மின்விசிறி

கரண்ட் இல்லாம வேலைசெய்யும் மின்விசிறியை ( SOLAR & ENERGY FAN) தரங்கம்பாடி ஆர்.கே.தொழிற்பள்ளி, ஒழுகை மங்களம் மற்றும் ஹைடெக் பிராக்ட்டிகல் சயின்ஸ் அகாதெமியில் படிக்குற மாணவர்கள் விவேக், புருசோத்தமன் மற்றும் மங்களராஜ் கண்டுபிடிசுருக்காங்க.பகலில் சோலார் மூலமும் இரவில் காற்றாலை மூலமும் இயங்குகிறது இந்த மின்விசிறி.

இந்த மின்விசிறியில பொருத்தப்பட்டுள்ள 12 வோல்ட் டி.சி. மோட்டார் ஒன்று நேரடியாக 50 வாட்ஸ் திறனுள்ள சோலார் மின் தகடுடன் இணைக்கப்பட்டுள்ளது.இதனால் சூரிய ஒளி சோலார் தகட்டில் படும்போது மின்விசிறி சுழல ஆரம்பிக்கும். சூரிய ஒளி குறைந்ததும் வீட்டின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறிய காற்றாலையின் உதவியால் மின்விசிறி இயங்கத் தொடங்குது . சாதரணமாக வீசும் காற்றே இந்தக் காற்றாலை இயங்கப் போதுமானது.பேட்டரி உதவியின்றி நேரடியாக சூரிய ஒளியிலும், காற்றாலையிலும் இந்த மின்விசிறி இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் காலை, மாலை என அனைத்து நேரங்களிலும் தங்கு தடையின்றி இந்த மின்விசிறியை இயக்க முடியும்.

பகல் முழுவதும் சூரிய ஒளியால் இயங்கும் இந்த மின்விசிறி சூரிய ஒளி மங்கியவுடன் light dependent resistor (LDR)என்ற தொழில்நுட்பத்தின் உதவியால் தானாக காற்றாலையில் இயங்கத்தொடங்கி விடும். பேட்டரி வேண்டுமென்றாலும் இணைத்துக் கொள்ளலாம்.

தொடர்புக்கு: 95666 68066

                                                         ---நன்றி புதியதலைமுறை

சனி, 1 மார்ச், 2014

தேங்காயின் நன்மைகள்

தேங்காயில எவ்ளோ நல்ல விஷயங்கள் இருக்குனு தெரியுமா?

- தேங்காய் பால் உடல் வலிமைக்கு நல்லது

- தேங்காய் எண்ணை சித்தமருத்துவத்துல பல்வேறு மருந்துகல்ள சேர்க்கப்படுது .

- தேங்காய் எண்ணை தீப்புண் மேல தடவினா சீக்கிரம் குணமாகும்.

- முடிவளருவதுக்கு தேங்காய் எண்ணை மிக சிறந்தது.

- தேமல் ,படை,சிரங்கு போன்ற நோய்களுக்கு தயாரிக்கப் படுற மருந்துல தேங்காய் எண்ணை சேர்க்கப்படுது.

- தேங்காய் எண்ணை தயாரிக்குற போது கிடைக்குற புண்ணாக்கோட கருஞ்சீரகத்த சேத்து தோல் நோய்;களுக்கான மருந்து தயாரிக்குறாங்க.

- தேங்காய் எண்ணையின் வெளிப்புற ஓடுல இருந்து தயாரிக்கப் படுற எண்ணை தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுது.

- தேங்காய் பால் நச்சு முறிவாக செயல்படுது.

- தேங்காய் எண்ணை மூலமா தயாரிக்கப் படுற தைலங்கள் பல நோய்களுக்கு மருந்தாக செயல்படுது.