பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

சோஷியல் நெட்வொர்க்ஸும் இந்த பொண்ணுங்களும்இந்த சோஷியல் நெட்வொர்க்ஸ் நல்லதுக்கும் உபயோகமா இருக்கும் கெட்டதுக்கும் உபயோகமா இருக்கும்.

நல்லாலாலாலா லைக்-ம் +1-ம் கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிச்சாங்க ,எது எதுக்கு லைக் குடுக்குறது எது எதுக்கு +1 குடுக்குறதுங்குற விவஸ்தையே இல்லாம போச்சு..அதோட அர்த்தம் கூட மறந்துபோச்சு,மாறிப்போச்சு..

நான் காலைல இட்லி சாப்ட்டேனு ஸ்டேட்டஸ் போடறாங்க அதுக்கு லைக் போடுறாங்க.எங்க அம்மா கீழ விழுந்துட்டாங்கனு ஸ்டேட்டஸ்  போடறாங்க அதுக்கும் லைக் போடுறாங்க!!!

டிவி பாக்குறேன்,சாப்டறேன் ,சினிமாவுக்கு போறேன் (ஏன் அப்படியே அட்ரஸ் குடுத்துட்டு போங்களேன்),துப்பட்டா கானம் தேட்றேன் , தோடு காணம் தேடறேன்,வளையலை எண்ணிகிட்டு இருக்கேன்....இதுலாமா ஸ்டேட்டஸ்ல போடுவாங்க..இதுமாதிரி வெட்டியா ஸ்டேட்டஸ்ல போடுறது பொண்ணுங்கதான் அதிகம் ..ஆனா அதுக்கு வெட்டியா லைக் ,கமெண்ட் பண்றது பசங்க தான் அதிகம்..


ஆனா இந்த பொண்ணுங்க ஆர்வக்கோளாருல சில தப்பு பண்றாங்க..எல்லா சோஷியல் நெட்வொர்க்ஸ்ளையும் போட்டோஸ் அப்லோட் பண்ண ஆப்ஷன் இருக்கு.ஆனா அத எதுஎதுக்கு யூஸ் பண்ணிக்குறோம்னு இருக்கு இல்லையா ?

போட்டோஸ் அப்லோட் பண்ற ஆப்ஷன் எதுக்கு?போட்டோஸ் அப்லோட் பண்ணத்தான் நான் இல்லைனு  சொல்லல. அதுக்கும் ஒரு எல்லை  இருக்கு இல்லையா?

பெண்களே !தாய்மார்களே ! சகோதரிகளே! நீங்க உங்க போட்டோக்களை போஸ்ட் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க அது உங்க  விருப்பம்,உங்க உரிமை உங்க சுகந்திரம்..ஆனா இந்த சோஷியல் நெட்வொர்க்ஸ்தான் எல்லாஆப்ஷனும் குடுக்குறாங்க இல்ல.அதான் ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட்னு இருக்குஇல்ல.மானாவாரியா பிரிச்சு லிஸ்ட் கிரியேட் பண்ணிக்குற வசதியும் குடுக்குறாங்களே அத யூஸ் பண்ணி தெரிஞ்சவங்களுக்கு ,தேவையானவங்களுக்கு மட்டும்  உங்க பர்சனல் போட்டோக்களை ஷேர் பண்ணிக்கோங்களேன்.

என்ன உங்க லிஸ்ட்ல குறைஞ்சது 1000 ஃப்ரண்ட்ஸ் இருக்காங்கனா 1000 அந்த பேர் பாக்க உங்க போட்டோக்களை போட்டா பத்தாதா ?

குடும்பத்தோட ,ஃப்ரண்ட்ஸ் கூட ,புருஷன் கூட,லவ்வர் கூட,ஃபியான்சி கூட,அண்ணன்,தம்பி,தங்கச்சி கூட,இல்ல  மறக்க முடியாத இடத்துக்கு   போறீங்க அங்க போட்டோ எடுக்குறீங்க அத எல்லாரும்  பாக்க ஷேர் பண்றீங்களா  ஒரு  நியாயம் இருக்கு ,ஒரு அழகான இடத்துக்கு போறீங்க அங்க போட்டோ எடுத்து(இயற்கை போட்டோ இல்லங்க ,உங்க போட்டோ தான்) அதை பப்ளிக்கா ஷேர் பண்றீங்களா அதுல ஒரு நியாயம் இருக்கு , ப்ரொஃபைல் போட்டோ போடறீங்களா அதுலையும் ஒரு நியாயம் இருக்கு, அத விட்டுட்டு ,நிக்குறது நடக்குறது தூங்குறது சாப்பிட்ரதுன்னு போட்டோ எடுக்க வேண்டியது அப்பறம் திருமலை திருப்பதி தேவஸ்தான சாமியோட போட்டோஸ் மாதிரி தினமும் ஒன்னு பப்ளிக்கா  ஷேர் பண்ணி நான் நல்லா இருக்கேனானு கேக்காம கேக்க வேண்டியது ?எதுக்கு இந்த பொழப்பு?

எப்படி  வேணும்னாலும்  போஸ் குடுங்க ,எப்படி வேணும்னாலும் டிரஸ் பண்ணுங்க எப்படி வேணும்னாலும் போட்டோ எடுங்க ,ஆனா அத உங்களுக்கானவங்களுக்கு,உங்களுக்குனு இருக்குறவங்களுக்கு அது உங்க அண்ணனா,தம்பியா,மாமனா ,மச்சானா, ஃப்ரண்டா ,லவ்வரா,ஃபியான்சியா ,புருஷனா கூட இருக்கலாம் அவங்களுக்கு அனுப்புங்க எப்படி இருக்குனு கேளுங்க,அத விட்டுட்டு ஊரு பேரு நாடு நகரம் தெரியாதவன் எல்லாம் பாக்குற மாதிரி போட்டோவை போட்டுட்டு அப்பறம் யாராவது லிமிட் கிராஸ் பண்ணி கமெண்ட்ஸ் போட்டுட்டா 'கோ டு ஹெல்',' கெட் அவுட் ஆஃப் தி லிஸ்ட்','டோன்ட் யு ஹாவ் சிஸ்டர்ஸ்'-னு திட்டி ரிப்ளை பண்ண வேண்டியது...(ஆ ...நல்ல அண்ணன் ,தம்பி,லவ்வர்,ஹஸ்பண்ட்டா இருந்தா அர குறையா டிரஸ் பண்ணி இப்படி 'பப்ளிக்கா' போட்டா செவுல்லையே அறைவாங்க.)..இப்படி நாம தப்பு செஞ்சுட்டு 'நீங்கலாம் அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா'னு கேட்டா அவங்க , 'அதுக்குள்ள மாமியாரப் பாக்கணுமாம், நாத்தனாரையும் பாக்கனும்மாம்டா'னு கிண்டல் பண்ணதான்  செய்வாங்க.

சிங்கத்தோட வாய்க்குள்ள கையை விட்டுட்டு ஆனா  அது கடிக்க கூடாதுன்னு சொன்னா என்ன நியாயம்?நாம பேச கமெண்ட்ஸ் குடுக்க இடம் குடுத்துட்டு அப்பறம் இப்படி பேசுறாங்க,அப்படி அனுப்புறாங்கனு ஃபீல் பண்றதுல என்ன யூஸ் சொல்லுங்க.

எப்படி டிரஸ் பண்ணினாலும் கிண்டல் பண்ண,தவறான பார்வையில பாக்க ஒரு கூட்டம் இருக்கு தான் (நா எல்லாரையும் சொல்லல சகோதரர்களே) நான் இல்லைன்னு சொல்லல, நாமளும் அட்லீஸ்ட் ஓரளவுக்காவது சரியா நடந்துக்கணும் இல்ல...

இந்த தப்பை அதிகமா செய்றது காலேஜ் படிக்குற பொண்ணுங்கதான்.அது அந்த வயசுக்கே உரிய வேகம் ,ஆர்வம் .தன்ன அழகா இருக்குறதா சொன்னா பிடிக்கும்  தான் , அதுவும் இப்போ  நல்ல வசதியா லைக்-ம், +1-ம் இருந்தா கேக்கவே வேணாம்,இத வச்சு காலேஜ்ல ஒரு போட்டியே நடக்கும்.இது அந்த வயசுக்கு உரிய இயல்பு அதுக்காக போட்டோவை போட்டு லைக் கேக்குறது கமெண்ட் கேக்குறது முட்டாள் தனம்..

இந்த ஆசாமிகள் இருக்காங்களே ,'இந்தியாவின் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது'னு போட்டா கண்டுக்க மாட்டாங்க.அதே ஒரு பொண்ணு போட்டோ போட்டு லைக் கேட்டா , லைக் மட்டும் குடுக்காம ,'பியூட்டிஃபுல்','குயீன்','ஹாட்',செக்ஸி','நைஸ்' னு கமெண்ட்ஸும் சேத்து போடுவாங்க .

எல்லா சமயமும் நல்லதாவே நடக்காது.நாமளும் ஸேஃபா இருக்கணும்..நமக்கு பிடிச்சவங்க நல்லா இருக்க-னு  சொன்னா போதாதா?அழகு வெளி தோற்றத்துல மட்டும் இல்ல ,நம்ம மனசுலையும் தான் இருக்கு.இந்த உலகத்துல பிறந்த ஒரு ஒரு ஜீவராசிகிட்டையும் ஒரு அழகு இருக்கு..

எவ்வளவு தவறான வழியில பொண்ணுங்க புகைப்படத்தை சிலபேர் உபயோகப்படுத்திக்கிறாங்கனு அடிக்கடி பேப்பர்,நியூஸ்-லனு  படிக்கிறோம் ,பாக்குறோம் தானே, கொஞ்சம் ஜாக்கரதையா  இருங்க..,,

சகோதரர்களே ,உங்க தங்கை,அக்கா,அத்தப் பொண்ணு மாமா பொண்ணு,லவ்வர்,ஃபியான்சி யார் இப்படி ஆர்வக்கோளாருல பப்ளிக்கா தான் மட்டும் இருக்குற போட்டோ (நா சொல்றது ஒரு சில தேவை இல்லாத ,சும்மா பொழுது போகாம நிக்குறது நடக்குறது தூங்குறது சாப்பிட்ரதுன்னு எடுத்துக்குற போட்டோ) போட்டாங்கனா தயவு செஞ்சு சொல்லுங்க இப்படி போஸ்ட் பண்ணாதனு..அது உங்க கடமையும் கூட..விளையாட்டு தனமா செய்றது தப்பா  போய்டக்கூடாது...

எவ்ளவோ உபயோகமா பயன்படுத்தலாம் இந்த சோஷியல் நெட்வொர்க்கை ..எத்தனையோ பேர் உபயோகமா பயன்படுத்திக்கிட்டு தான் இருக்காங்க..சில பேர் இப்படி....

நான் சொல்றது இதுதான் உங்க விருப்பம் உங்க சுகந்திரம் போட்டோ எடுத்துக்குறது ஆனா உங்க போட்டோக்களை பப்ளிக்கா போட்டு லைக் கமெண்ட் கேக்காதீங்க..அதுக்கு ரிப்ளை பண்ணாதீங்கனு தான் சொல்றேன்.... யோசிங்க ......

3 கருத்துகள்:

 1. லைக்-கு பொருள் மாறி பல நாள் ஆகிவிட்டது .. ஒரு பொண்ணு 'ஹ்ம்ம்'
  போட்டதுக்கு 43 லைக், 27 கமெண்ட்ஸ்..

  பதிலளிநீக்கு
 2. Enna oru kolaveri kovam.. :) en studentse silathugal irukku.. translate panninen.. avlothaan.. neenga engirundhu varinga avatar pandoravanu keppanga.. :)

  elimaiya sollanumna idhu privace level kurithaana post, neengal oruvelai, level 5 privacy recommend pannuringanu vachukonga, neenga kuripitta nabargal level 3 or 2 la irukkalam.

  Neengal sonnadu ellam sari, aana nammal solla mattum thaan mudiyum, kekuradhu avanga ishtam.. neengal sariyana oru sisterly, motherly, fatherly (konjam bruce lee) advise sollirukinga.. nanri...

  Evlo peru kekuranga paakkalaam.. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Din unaku en intha kola veri.... puriyura maahtiri ethavathu solriya? level 5 4 nu ,enaku irukkurathu kutti brain confuse pannatha.....athenna nammal kammal nu settu pesura maathiri anupura.......nammal kite 10000 kadan vaangi kaanaappottaan... :D :D :D

   நீக்கு