பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

ஒரு குமுதம் புத்தகத்திலும்… ஒரு கப் காஃபியிலும் மறைந்திருந்த காதல்!

 பள்ளி விடுமுறை வந்துவிட்டால் போதும். என் மனம் தாத்தா–பாட்டி வீட்டிற்குப் பறந்துவிடும்.

அது ஒரு பெரிய கூட்டுக் குடும்பம். தாத்தா, பாட்டி, எட்டுப் பிள்ளைகள்—சிலருக்குத் திருமணமாகியிருந்தது; சிலர் படித்துக்கொண்டிருந்தார்கள். வீடு முழுவதும் எப்போதும் பேச்சும் சிரிப்பும் சத்தமுமாக இருக்கும். தனிமை என்பதே அந்த வீட்டில் யாருக்கும் கிடையாது.

தாத்தா வாரந்தோறும் ஆனந்த விகடன், குமுதம் போன்ற புத்தகங்களை வாங்கி வருவார். தினமும் தினமலர் செய்தித்தாளும் வரும். அதனுடன் வரும் வாரமலரை நான் விடாமல் படிப்பேன்.

அதிலும் எனக்கு மிகவும் பிடித்தது சினிமா கிசுகிசு!

“பெயரில் நிலவைக் கொண்ட அந்த நடிகை…”

“மூன்றெழுத்து நடிகருடன் நெருக்கமாக இருக்கும் அந்த நாயகி…”

என்று படித்துவிட்டு,

“யாரைச் சொல்கிறார்கள்? இவராக இருக்குமோ? இல்லை, அவராக இருக்குமோ?”

என்று புத்தகத்தை வைத்துக்கொண்டு நானே துப்பறிவாளரைப்போல் யோசித்துக்கொண்டிருப்பேன்.

அந்த வீட்டில் சிரிப்புச் சத்தம் மட்டுமல்ல; சில நேரங்களில் தாத்தாவின் கோபச் சத்தமும் கேட்கும்.

தாத்தாவுக்குக் கோபம் வந்தால் அதை பாட்டியிடம் காட்டுவார். பாட்டியைத் திட்டிவிட்டு வேகமாக வெளியே சென்றுவிடுவார்.

தாத்தா திட்டும்போது பாட்டி பெரும்பாலும் அமைதியாக இருப்பார். பதிலுக்கு எதுவும் பேச மாட்டார். ஆனால் அவர் வெளியே சென்ற பிறகு,

“எல்லாக் கோபத்தையும் என்கிட்டதான் காட்டணுமா?என்கிட்ட கத்தினா எனக்கு எப்படி தெரியும்?”

என்று தாத்தாவைக் கரித்துக் கொட்டுவார். சில நாட்களில் தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பார்.

அதைப் பார்க்கும்போது எனக்குப் பாட்டிக்காக மிகவும் வருத்தமாக இருக்கும்.

ஆனால் சாயங்காலம் வந்ததும் (அன்று மட்டும் அல்ல , என்றுமே )பாட்டியே வேறு மாதிரி மாறிவிடுவார். முகத்தைக் கழுவுவார். முகத்தில் பாண்ட்ஸ் பவுடர் பூசிக்கொள்வார். நெற்றியில் அழகாகப் பொட்டு வைத்துக்கொள்வார்.தலைவாரி பூ வைத்துக்கொள்வார். பிறகு தாத்தாவின் வருகைக்காகக் காத்திருப்பார்.

தாத்தா வந்ததும் ஒன்றுமே நடக்காததுபோல் அவருக்குக் காஃபி போட்டுக் கொடுப்பார்.

இதைப் பார்த்து ஒருநாள் என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“பாட்டி, தாத்தா உங்களை அவ்வளவு திட்டினாரே! நீங்களும் ஒன்றுமே சொல்லவில்லை. இப்போ முகமெல்லாம் கழுவி, பவுடர் போட்டு, பொட்டு வைத்து யாருக்காகக்இத பண்றீங்க? தாத்தாவுக்காகத்தானே?”

பாட்டி பதில் சொல்லவில்லை.

“போடி, அதுலாம் அப்படித்தான்!” என்று சொல்லிவிட்டுத் சிரித்தார்.

ஆனால் அவர் முகத்தில் தோன்றிய அந்தச் சிறிய சந்தோஷத்தையும் வெட்கத்தையும் என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

இன்னொரு நாள் தாத்தாவுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அருகில் அன்றைய குமுதம் புத்தகம் இருந்தது. அதைக் கையில் எடுத்த தாத்தா திடீரென்று என்னைப் பார்த்தார்.

“நான் ஏன் ஒவ்வொரு வாரமும் குமுதம் வாங்குறேன் தெரியுமா?” என்று கேட்டார்.

“கதை படிக்கிறதுக்கா? கிசுகிசு படிக்கிறதுக்கா?” என்றேன்.(அந்த வயதில் எனக்கு தோன்றியது அது மட்டுமே )

“அதெல்லாம் இல்லை.”

“அப்புறம் ஏன்?”

தாத்தா புத்தகத்தின் அட்டையை மெதுவாக வருடினார் .

“உன் பாட்டி பேர் குமுதம் இல்லையா? அதனால்தான் இந்தப் புத்தகத்தை வாங்குறேன்.”

அதைச் சொல்லும்போது வழக்கமாகக் கடுமையாகத் தெரியும் தாத்தாவின் முகத்தில் ஒரு குழந்தையைப் போன்ற சிரிப்பு தெரிந்தது.

அப்போது எனக்கு அது வேடிக்கையாக மட்டுமே இருந்தது. ஓ அப்படியா ?! என்று நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு ஓடிவிட்டேன்.

இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

எப்போதும் மனிதர்களால் நிரம்பிய அந்த வீட்டில் தாத்தாவும் பாட்டியும் தனியாகப் பேசுவதற்கு எப்போது நேரம் கிடைத்திருக்கும்? மனதைத் திறந்து பேசுவதற்கு எந்த இடம் இருந்திருக்கும்? சண்டைக்குப் பிறகு எப்படி ஒருவரிடம் ஒருவர் மன்னிப்புக் கேட்டிருப்பார்கள்? எப்படி மீண்டும் சமாதானம் ஆகியிருப்பார்கள்?

ஒருவேளை அவர்கள் வார்த்தைகளால் சமாதானம் ஆகியிருக்கவே மாட்டார்கள்.

தாத்தா வாங்கிவந்த குமுதம் புத்தகம் அவருடைய “மன்னித்துவிடு” என்பதாக இருந்திருக்கலாம்.

பாட்டி போட்டுக் கொடுத்த ஒரு கப் காஃபி, “பரவாயில்லை, நான் இன்னும் உன்னோடுதான் இருக்கிறேன்” என்ற பதிலாக இருந்திருக்கலாம்.

தாத்தாவின் கோபம் சரியென்று நான் சொல்லவில்லை. பாட்டியின் கண்ணீரை அன்பு என்று அழகுபடுத்தவும் விரும்பவில்லை. உடலில் ஏற்படும் காயம் மட்டுமல்ல; மனதில் ஏற்படும் காயமும் காயம்தான்.

ஆனாலும் அந்தக் காயங்களுக்கு நடுவிலும் அவர்களுக்குள் ஏதோ ஓர் அன்பு இருந்திருக்கிறது. வெளிப்படையாகச் சொல்லப்படாத, மற்றவர்களுக்குப் புரியாத ஓர் அன்பு.

சில பழைய உறவுகளில் காதல் பெரிய வார்த்தைகளில் இல்லை.

அது ஒரு குமுதம் புத்தகத்திலும்…

மாலை நேரத்தில் போட்டுக் கொடுக்கப்பட்ட ஒரு கப் காஃபியிலும்…

யாருக்கும் தெரியாமல் அமைதியாக மறைந்திருந்தது.



இது என் வாழ்க்கையில நடந்தது .என் தாத்தா என்கிட்ட சொன்னது , என் பாட்டியை பாத்து நான் கேட்டது .

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

அனிதா .....

இன்னம் 20 நிமிஷம் இருக்கு ..ஓகே  இந்த கேள்விக்கு இந்த  பாயிண்ட்ஸ்  எல்லாம் முக்கியம்..இந்த கேள்விக்கு இந்த இந்த பாயிண்ட்ஸ் முக்கியம்...ஓகே..இந்த கேள்விக்கு இந்த  எக்ஸ்சாம்பிள்  ரொம்ப முக்கியம்..சரி சரி போதும் ரிலாக்ஸ்-ஆ  இருக்கணும்...நீ நல்லா  எழுதிடுவ..கவலைபடாத ...என்று மனதுக்கும் சொல்லி கொண்டிய காலேஜ்க்குள் நுழைந்தாள் அனிதா..
 


அனிதாவிடம் அனிதாவிற்கு பிடித்ததும் அவள் நண்பர்களுக்கு அனிதாவிடம் பிடித்ததும் இந்த தன்னம்பிக்கை தான்..

ஹாய் ..ஹாய் அனிதா...எப்படி  ப்ரிப்பர் பண்ணி இருக்க?

ம்..நல்லா பண்ணி இருக்கேன் ..கண்டிப்பா நல்லா எழுதிடலாம்..ஆமா இந்த கேள்விக்கு இத  பத்தி இவ்ளோ  எழுதினா   போதும் தானே
-என்று படித்ததை பகிர்ந்து கொண்டார்கள்..
ஓகே ஓகே இன்னம் 10 நிமிஷம் இருக்கு,ரிலாக்ஸ்-ஆ இருப்போம் என்றாள் அனிதா..

அனிதாவின் கண்கள் அலைபாய்ந்தது ...அவள் கண்கள் சந்தோஷை தேடின..ஒரு  முனையில்    நண்பர்களுடன் அனிதா இருக்க மறு  முனையில் நண்பர்களுடன் சந்தோஷ்..அனிதா காலேஜ்குள் நுழைந்ததில்  இருந்து  சந்தோஷின் கண்கள் அனிதாவை விட்டு விலகவில்லை..
ஏன்டா வினோத் நீதான் எப்படியும் இன்னிக்குஎக்ஸாம்-இல் பாஸ் பண்ண போறது இல்ல இல்ல அப்பறம்  ஏன்  வேஸ்ட்-ஆ  வந்து எழுதுற என்று சந்தோஷ்  கேலி செய்ய  ..ஏன்டா அப்படி சொல்ற பாரு    பிட்டுலாம் கூட சரியா-ஆ வச்சுஇருக்கேன் இந்த எக்ஸாம்-கு என்றான் வினோத். அதான் உன் கவனம் எல்லாம் சிகப்பு சுடிதார்  மேல  இருக்கே,பாத்துடா பிட்ட பாக்காம சுடிதார் பாத்துகிட்டே எழுதிடாத  
என்றான் சந்தோஷ். 

கண்டுபிடிச்சுடீங்களா அதானே என்னடா உங்களுக்கு மூக்குல வேர்க்கலையேனு
பாத்தேன் என்றான்,வினோத்.  டேய் இது  தீபா தானே அப்போ மோனமாசம் எல்லாம் நம்ம ஜூனியர் ரம்யாவை பாத்துகிட்டு இருந்தியே என்றான் சந்தோஷ்.  
அது போனமாசம் என்றான் வினோத், அப்போ  கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்ட் அம்மு ?என்றான் சுந்தர் ,அது அதுக்கு முன்னாடி மாசம் என்றான் வினோத் .
து....என்று கோரஸ் ஆகா துப்பி வினோத்தை  கேலி செய்தனர் நண்பர்கள்.

ஏன்டா துப்புறீங்க ? பின்ன இந்த சந்தோஷ் மாதிரி இருக்க சொல்றீங்களா ?  ஏன்டா சந்தோஷ் 4  வருஷமா நீ அனிதாவ  பாக்க அவ உன்ன பாக்க, அவ உன்ன பாக்க நீ அவள பாக்க நாங்க உங்க  ரெண்டுபேரயும் பாக்க..இப்படியே போகுதே இதுக்கு ஒரு முடிவே கிடையாதா ?? என்றான் வினோத் ..
ஏன்டா இப்படி ..பாத்துகிட்டே தான் இருக்கபோரீங்களா நேரா 60 -ஆம் கல்யாணம்னு
சொல்லு .கடைசி வருஷம் இன்னம் ஒரே ஒரு செமஸ்டர் தான் இருக்கு இந்த வருஷமாவது பேசுடா.. பேசினா தான்டா முடிவு தெரியும் என்றனர் , இப்படியே உசுபேத்தி உசுபேத்தி உடம்ப ரணகளம் பண்ணுங்கடா என்றான் சந்தோஷ்.
தன் பள்ளி காலத்தில் இருந்து தோழியான லதாவை பார்த்ததும் என்ன லதா நல்லா  படிச்சு இருக்கியா ?என்றான் சந்தோஷ்..எங்க சந்தோஷ் எனக்கு இந்த எக்ஸாம் முடிஞ்சததும் கல்யாணம்  பண்ணி குடுத்துடணும்னு  அப்பா ஒரே பிடிவாதமா இருக்கார்..என்னால சரியா படிக்க முடியலை.. கொஞ்சம் பயமா இருக்கு என்றால் லதா. பொய் சொல்லாத பயத்துல படிக்கமுடியாம இல்ல சந்தோஷத்துல படிக்கமுடியாம அதுதானே உண்மை என்று சந்தோஷ் கேலி செய்ய ,போ சந்தோஷ் எப்போ பாரு உனக்கு  கிண்டல் தான் என்றாள் லதா.

அனிதா..இவ்ளோ நேரம் தண்ணில நின்னா ஜுரம் வரும் சீக்கிரம் குளி..நேரம் ஆச்சு பாரு என்று தீபாவின்  குரல்..நான்தான் குட்  கேர்ள்  இன்னைக்கு என்று மழலை குரலில் லதா ......
சந்தோஷ்...நேரம் ஆச்சு..எப்போ கிளம்பறது ..ஆபீஸ்க்கு நேரம்  ஆகுது பாரு..சீக்கிரம் சீக்கிரம் என்று வினோத்தின் குரல்...

சந்தோஷ் அவசரமாக கண் விழித்தான்..சந்தோஷ் நேரம் ஆச்சு எந்திரிங்க என்று தன்மனைவி நித்யா மறுபடியும் சொல்ல..குட்  மார்னிங்  அப்பா..நான் குட்  கேர்ள்  ..நீ தான்  பேட்  பாய்  இன்னைக்கு பாத்தியா நா தான்  முதல்ல  குளிச்சேன்  என்று சந்தோஷின் செல்ல மகள் அனிதா சொல்ல..

குட்  மார்னிங் டா ஹனி  செல்லம்...தோ அப்பா கிளம்பிடறேன் என்று சொல்லி கொண்டே அவசரமாக குளித்து கிளம்பினான்..ஆனால் அவன் நினைவு முழுவதும் அனிதாவை பற்றியே இருந்தது...

பின்னாளில் அனிதாவும் சந்தோஷும் ஒரே கம்பெனி-இல் வேலை செய்தனர்.அனிதா அவளது பெற்றோர்களிடம் சந்தோஷை பற்றி கூறினாள்..உனக்கு இன்னம் கொஞ்ச நாள் டைம் தரோம் .நல்ல யோசி..சந்தோஷ் நல்ல பையன் தான் இல்லைன்னு சொல்லல..இருந்தாலும் ரெண்டு பேரும் கடைசி வரை இப்படியே இருப்பீங்களா ..நல்ல யோசிங்க.."என்றனர் அனிதாவின் பெற்றோர்கள்..

சந்தோஷின் வீட்டில்  சந்தோஷின் விருப்பபடி தான் அனைத்தும் நடக்கும்..

அப்பாகிட்ட நாம இன்னம் உறுதியா சொல்வோம் சந்தோஷ்  என்று அனிதா கூறினாள்..

கண்டிப்பா ...இந்த வீக் எண்டு நான் வரேன் உங்க வீட்டுக்கு என்றான் சந்தோஷ்..

ஆனால் அதற்குள்  எதிர் பாராத ஒரு விபத்து ,அனிதா சுய நினைவின்றி மருத்துவமனையில்...

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு இருந்த அனிதாவை பார்க்க   சந்தோஷ் ஓடினான் மருத்தவமனைக்கு..

"டாக்டர் அனிதா எப்படி இருக்கா டாக்டர் சொல்லுங்க ப்ளீஸ் "..

"ஓ !! அந்த ஆக்சிடென்ட்  கேஸ் ஆ பா"..

"ஆமா டாக்டர்"...

நிலைமை கொஞ்சம் கிரிடிகாலா தான் பா இருக்கு .நெறையா பிளட் லாஸ் ஆகிருக்கு.சுய நினவு இல்லாம தான் இருக்காங்க.எங்களால முடிஞ்சத முயற்சி பண்றோம் .கடவுள வேண்டிகோங்க "...

"நா பாக்கலாமா டாக்டர் "..

"தாராளமா ...பட் ரொம்ப டிஸ்ரப் பண்ணாதீங்க"...

சந்தோஷ் அனிதாவின் அருகில் ,உடல் முழுவதும் ஏக பட்ட டியூப்கள் பொருத்தப்பட்ட அனிதாவை பார்க்கவே சந்தோஷ் கலங்கினான்...

அனிதாவின் பெற்றோர்கள்  அங்கு வந்தனர். 

"சந்தோஷ் ...சந்தோஷ் என்னப்பா ஆச்சு அனிதாவுக்கு ...எப்படி பா இருக்கா .."

"அனிதாவுக்கு ஒன்னும் இல்ல ஆன்டி ,அங்கிள் அனிதா நல்லா ஆகிடுவா ...".

அனிதாவின் அம்மா ஐ.சி.யு உள்ளே ஓடினார்.

"ஐயோ அனிதா !! அம்மா வந்துருகேன்மா ,என்ன பாரு ,ஐயோ உன்ன இந்த நிலைமையிலையா பாக்கணும். எல்லோரும் நல்ல இருக்கனும்னு நினைப்பியே ..உனக்கு இப்படியா".கதறினாள் ...

அனிதாவை இந்த நிலைமையில் பார்க்க விருப்பம் இல்லாமல் அனிதாவின் தந்தை வெளியே சென்றார் ...கண்களில் நீர் பொங்க...அவரை பின் தொடர்தான் சந்தோஷ்...

"அங்கிள் இல்ல அங்கிள் ..அனிதாவுக்கு ஒன்னும் இல்ல குணம் ஆகிடுவா .அழாதீங்க அங்கிள்" என்று தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டான்..

உள்ளே இருந்து அனிதாவின் தாய் ,சந்தோஷ் தம்பி ,சந்தோஷ் தம்பி அனிதா உன் பேர் சொல்றாப்பா என்று வெளியே ஓடிவர ...சந்தோஷ் உள்ளே ஓடினான் ..

அனிதாவின் உதடுகள் சந்தோஷின் பெயரை முனுமுனுத்தது ...

"அனி ! அனி ! நா சந்தோஷ் ...இங்க தான் மா இருக்கேன்..உனக்கு ஒன்னும் இல்ல ..உனக்கு எல்லாம் சரியாகிடும்.."

"சந்தோதோதோதோதோதோஷ்.."

"பாரு ,உன் அம்மா ,அப்பா வந்துருக்காங்க ...டாக்டர் உனக்கு குனமாகிடும்னு சொல்லி இருக்கார்.."

"சந்தோதோதோதோதோதோஷ்...."

"இதோ ,நான் இங்க தான் உன் பக்கத்துல தான் இருக்கேன் அனி ..." என்று அனிதாவின் கைகளை பற்றினான் ...

அனிதாவின் கண்கள் மெல்ல திறந்தன ...

"சந்தோதோதோஷ் ...அழாத சந்தோதோஷ் ...எனக்கு ஒன்னும் இல்லலல ...நான்ன்ன்ன் நல்லாலாலாலா ஆகிடுவேன் ..நாநாநாநா உன் கூட வாழனும் சந்தோதோதோதோஷ் ...நாநாநாநா சாககூடாது ...எனக்கு நீ வேணும்..."

"அனி ..கண்டிப்பா நடக்கும் அனி...நாம சந்தோஷமா வாழுவோம் ..."


"சந்தோதோதோதோதோஷ் ....எனக்கு பயமாமாமாமாமா இருக்கு ...எனக்கு ட்ரீட்மென்ட் குடுக்க சொல்லு சந்தோதோதோதோஷ் ..உன் அப்பா அம்மா ,என் அப்பா அம்மா எல்லார் கூடவும் ,நம்ம நினைச்சமாதிரி சந்தோஷமா நாம வாழனும்ம்ம்ம்ம்ம் ..."

"கண்டிப்பா அனி ...நீ எந்திரிச்சு வருவ அனி ...நாம நினச்சது நடக்கும் அனி ...."

"சந்தோதோதோதோதோதோதோஷ் ....."

அனிதாவின் கண்கள் ஒரு இடத்தில் நிலை பெற்றன..அவளது கைகள் சந்தோஷின் கைகளில் இருந்து விடுபட்டன..அனிதாவின் இதயம் துடிக்க மறுத்தது ....


"அனி..................." அலறினான் சந்தோஷ் .....அனிதாவின் தாயும் தந்தையும் சேர்ந்து .......

"டாக்டர் ...டாக்டர் ...எதாவது பண்ணுங்க...இப்போ என்கிட்ட பேசினா டாக்டர் ..ப்ளீஸ் ஏதாவது செயுங்க..அவளுக்கு ஒன்னும் இருக்காது ..."

டாக்டர் நாடி துடிப்பையும் ,இதய  துடிப்பையும் பரிசோதித்தார் ...

"ஐயம் சாரி ..மிஸ்டர் . சந்தோஷ் .."

"இல்ல அங்கிள் ...இப்போ பேசினா அங்கிள் என்கிட்ட..என்னோட வாழனும்னு சொன்னா ஆன்டி..

அழாதீங்க ...நம்ம அனிதா எங்கயும்  போகல .. இப்போ எந்திரிப்பா பாருங்க ...."

"சந்தோஷ் ....மனச தேதிக்கப்பா ...நம்மள விட்டு போயிட்டாப்பா ..."

"அங்கிள் ..இல்ல அங்கிள்....இல்ல அங்கிள்...."

சந்தோஷ் வெளியே வந்தான் ....அவன் மனம் மட்டும் நம்ப மறுத்தது ....உண்மையை உணர்ந்து அழுது புலம்பினான்...

 கிட்டதட்ட ஒரு ஜடமாக மாறிய சந்தோஷை ஒரு வருடத்துக்கு பின்  பழைய நிலைக்கு கொண்டுவந்தனர்.சந்தோஷின் நண்பர்கள் மூலமாக சந்தோஷிற்கு வேலையும் ஏற்பாடு செய்தனர் .மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு மாறினான் சந்தோஷ்.  

5 வருடங்களுக்கு கழித்து மிகுந்த சிரமத்திற்கு பின் சந்தோஷை திருமணதிற்க்கு சம்மதிக்க வைத்தனர். 

நித்யாவிடம்  அனிதாவை பற்றி அனைத்தையும் கூறியே திருமணம் செய்தான் சந்தோஷ்.

"என்னால என் அனிதாவை மறக்க முடியாது ...அவ இன்னம் என் மனசுலையே தான் இருக்கா..உனக்கு இதனால ஏதும்...."

"நா மறக்க சொல்லலையே ...எனக்கு உங்கமேல வருத்தம் இல்ல..உங்க வலி எனக்கு புரியுது ." நித்யாவின் பளிச் பதில் நித்யாவின் மேல் அன்பை ஏற்படுத்தியது...

தன் மகளுக்கு அனிதா என்று பெயர் வைக்க ,கூறியதும் நித்யாதான்...அனிதாகிட்ட இருந்து பிரிச்ச இந்த கடவுள் என்னை அனாதையா விடாம  எனக்கு உன்னை குடுத்துருக்கார்,என்று
பழையநினைவுகளில்மூழ்கினான்,கண்கள் சாலையில் இருக்க,கைகள் ஸ்ட்ரியரிங் இல் இருக்க கால்கள் ஆக்சிலேட்டர்-ல் இருக்க சந்தோஷின் மனம் மட்டும் அனிதாவின்  நினைவுகளில் .......

சந்தோஷின் கண்களில் கண்ணீர்.....அனி..லவ் யு  அனி ,என்று மனதுக்குள் சொல்ல..ஒரு அழகிய கை தன்னை  தொடுவதை உணர்ந்து கால்கள் பிரேக் -ஐ  அழுத்த....லவ் யு அப்பா .பை பை ..என்று சந்தோஷின் கன்னத்தில் முத்தமிட்டு  பள்ளிக்குள்  ஓடினாள்  சந்தோஷின் மகள் அனிதா...கலங்கிய கண்களுடன் தன் மகளை பார்த்துக்கொண்டே இருந்தான் சந்தோஷ். 

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

என் பெயர் ஷானு...............



என் பேரு ஷானு .நா எங்க  பொறந்தேன்னு எனக்கு தெரியாது..ஆனா எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து நா இவங்க கூடத்தான் இருக்கேன்.
என்னுடைய பெரிய எஜமான் ..சின்ன எஜமான்...என்னோட இரண்டு நண்பர்கள் ...ராம்..ஸ்ரீ...

  என்னோட பெரிய எஜமான பாத்தா எனக்கு கொஞ்சம் பயம் தான்..உண்மைய சொன்னா எனக்கு சில நேரம் அவர பாத்தா டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆகிடும்-னு சொல்லாம்.எதுக்குனா எனக்கு சில நேரம் தர்மஅடி விழுகும்..நா முடி அதிகமா இருக்குற இனம்..அதுனால சில நேரம் சிலவிஷயம்  ஒத்துக்காம எனக்கு முடி கொட்டும்...அது என் பெரிய எஜமானுக்கு பிடிக்காது..எனக்கு எதாவது உடம்பு  முடியாம போய்டுட்சுனா எனக்கு மாத்திரை குடுப்பார்..அவர ஏமாத்தவும் முடியாது..வலுகட்டாயமா குடுத்துடுவார்..அதனால தான் அவர பாத்தா பயம்..ஆனா  என் மேல அன்பாவும் இருப்பார்....

  என் சின்ன எஜமான்..எனக்கு சாப்பாடு போடறது என்ன வெளில கூப்பிட்டு போறது எல்லாம் இவங்கதான் அதிகமா செய்வாங்க...என்ன நல்லா
பாத்துப்பாங்க..சில நேரம் நா சும்மா வெளில போகணும்னு நினைச்சேனா  கூட  இவங்கள ஈஸி-யா ஏமாத்திடுவேன்.சில சமயம் எனக்கு விளையாடனும் போல இருந்தா இவங்கள கூப்பிடுவேன்..அவங்க என்ன சாப்பிட்டாலும் எனக்கும் தருவாங்க.எனக்கு பசிச்சா சமையல் செய்ற இடத்துல போய் உக்காந்துபேன்..
எனக்கு கேரட் ,தேங்காய் ரொம்ப பிடிக்கும்.மாம்பழம்,சப்போட்டா,பலாபழம்,வாழைப்பழம் என்ன ரொம்ப இஷ்டம்,ஸ்வீட்-னா எனக்கு உயிரு..ஐஸ் கிரீம்-ம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.காரமா எது குடுத்தாலும்  சாப்பிடுவேன்.அதுக்காக மிளகா சாப்பிடுவியானு   கேக்காதீங்க நாங்க விவரம்மாக்கும் .  உண்மைய சொல்லனும்னா எனக்கு பிடிக்காதது எதுவும் இல்லைன்னு சொல்லலாம்..என்ன குடுத்தாலும் சாப்பிடுவேன்..எப்ப குடுத்தாலும் சாப்பிடுவேன்...எனக்கு அடிக்கடி குடிக்க பால் என் தட்டுல ஊத்திடுவாங்க.அப்பறம் என்ன வயிர் நிரஞ்சதும் படுத்து தூங்கிடுவேன்...

ஆனா சில நேரம் அவங்க சொல்றத கேக்கலைனா தர்மஅடி விழுகும்...நா என்ன பண்ணுவேன்? எனக்கு நைட் பாத்ரூம் போகணும் போல இருக்கும்...சில நேரம் இவங்கள எழுப்புவேன்..இவங்க நல்ல தூங்குவாங்க...எழுந்திரிக்கமாட்டாங்க..சில நேரம் ரொம்ப அவசரமா இருக்குனு உள்ளேயே யூஸ் பண்ணிப்பேன்..இதை எல்லாம் கண்ட்ரோல் பண்ண முடியுமா?ஒரு நாய் எவ்ளோ நேரம் தான் கன்ட்ரோல் பண்ண முடியும் நீங்களே  சொல்லுங்க ...அதுக்கு போய் எனக்கு அடி விழுகும்...ம்...அடிக்கடி வாங்கினதால் பழகி போச்சு...சில சமயம் ,கடிக்குற மாதிரி பாவ்லா பண்ணினா பயந்து அடிக்கமாட்டாங்கனு நம்பி கடிக்கபோவேன் ஆனா அப்போ விழுகும்   பாருங்க அடி என் வாயிலையே ..உனக்கு தேவையா இதுனு என்ன நானே கேட்டுகிட்டு அமைதியா படுத்துடுவேன்...என்ன பன்றது வலி...ஒரு தரம் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்   இவன்  ரொம்ப நல்லவன்னு சொன்னதால அப்பறம்  இருந்து நா கடிக்கவும் போறது இல்ல..அடிக்குறீங்களா  அடிங்கனு வாங்கிப்பேன்...ஒரு நாய் எவ்ளோதான் அடிவாங்குறது சொல்லுங்க .

   நா யாரையும் கடிக்க மாட்டேன்க..சும்மா என்ன பாத்தா ஒரு பயம் இருக்கனும்னு கடிக்குற  மாதிரி போவேன் அவ்ளோதான்.எனக்கு பில்டிங் ஸ்ட்ராங் பேஸ் மட்டம் வீக்.புதுசா யாரையாவது பாத்தா எனக்கு கொஞ்சம் பயம் வரும் அத வெளில காட்டிக்காம இருக்க நா கடிக்குற மாதிரி காட்டுவன் அவ்ளோதான். எனக்கு ஒரு சின்ன சத்தம்நாளும் பயம். ஓடி  வந்து ஒளிஞ்சுப்பேன்.உண்மைய சொல்லனும்னா எனக்கு கரப்பான் பூச்சிய பாத்தாக்கூட பயம்ங்க. 

 
எனக்கு 2 நண்பர்கள் இருக்காங்க.ராம் ,ஸ்ரீ ..எனக்கு இவங்கள ரொம்ப பிடிக்கும்..அவங்களுக்கும் என்ன ரொம்ப பிடிக்கும்.ராம் எனக்கு சாப்பிட நெறைய வாங்கிட்டு வந்து குடுப்பாங்க.எனக்கு பைக்ல போறது பிடிக்கும்.ராமும் ஸ்ரீ-ம்  என்ன பைக்ல கூபிட்டு போவாங்க.கார்ல போறதும் பிடிக்கும்.ஸ்ரீ எனக்கு விளையாட பால், ரிங் எல்லாம் வாங்கிட்டு வந்து குடுப்பா .எனக்கு ஸ்ரீ-ஐ ரொம்ப பிடிக்கும்.ஏன்னா  என்னை  எதுக்காகவும்  அடிக்கமாட்டா.திட்டுவா ஆனா கண்டுக்கமாட்டேன்.கொஞ்ச நேரத்துல என்ன கூப்பிட்டு விளையாட ஆரம்பிச்சிடுவா.என்னோட நெறையா  விளையாடுறது ஸ்ரீ-ம் ராமும்  தான்.எனக்கும் ரொம்ப பிடிக்கும்..


சின்ன வயசுல இருந்து என் பழக்கம் என்னன்னா அரைமணி நேரம் விளையாண்டேனா   ரெண்டு மணி நேரம் தூங்கிடுவேன்.அப்போவே அப்டினா இப்போ சொல்லனுமா?




 
எனக்கு ஸ்ரீ கிட்ட பிடிக்காதது என்ன எப்படியாவது ஏமாத்தி குளிக்க வச்சுடுவா,எனக்கு எந்த பாஷைலையும் பிடிக்காத வார்த்த 'குளி-ங்கறது..எனக்கு தண்ணியை  கண்டாலே பிடிக்காத அப்பறம்   எப்படி நா குளிப்பேன் .




நானும் எங்கயாவது ஒளிஞ்சுப்பேன் எப்படியாவது என்ன கூப்பிட்டுபோயடுவா.



நானும் வரமாட்டேன்னு எவ்ளோ அடம் பண்ணினாலும் அவ கிட்ட இருந்து தப்பிக்க முடியாது.மேல தண்ணியை  ஊத்திடுவா.அப்றம் என்ன சிக்கிடோம் இனி விடவா  போறானு அமைதியா நின்னுடுவேன். ஆனா எப்படித்தான் இந்த மனுஷ பயல்க குளிக்குறான்களோ தினமும்.அப்பப்பா....

  
ஆனா குளிச்சிட்டு வந்ததுக்கு அப்பறம் என்னக்கு நல்ல கவனிப்புதான்.சின்ன எஜமான் பிஸ்கட் ,முட்டை,பால்,இல்ல வேற ஏதாவதுனு என் வயிர் நிரம்ப குடுப்பாங்க.சாப்பிட்டு வழக்கம் போல தூங்கிவேன்.


சோறு கண்ட இடம் சொர்க்கம்னு சொல்றமாதிரி எனக்கு பான்,எ.சி கண்ட இடம் சொர்க்கம்.சில சமயம் ஆண்டவா இதுலாம் அனுபவிகறதா வேணாமா னு இருக்கும்..ஆனா போன ஜென்மத்துல எதோ புண்ணியம் செஞ்சு இருக்கேன் அதான் நா இவங்ககூட சந்தோஷமா இப்படி இருக்கேன்.

எனக்கு எல்லாமே சுத்தமா இருக்கனும்.நான் தூங்குற இடம் ,சாப்பிடு தட்டு ,தண்ணிகுடிக்குற கிண்ணம்னு  எல்லாம் சுத்தமா இருக்கனும்.ஈரம்னாலே எனக்கு பிடிக்காது.மழைபேஞ்சா    வெளில இறங்க கூட  மாட்டேன் .என்ன ஒரு நாள் ராத்திரி கூடதனியா  விடமாட்டாங்க.என்னாலயும் இருக்க முடியாது.

   என் மேல அன்பா இருக்குற என் எஜமான் களுக்காக,என் நண்பர்களுக்காக அவங்கள நான் இருக்குற வரைக்கும் பத்திரமா பாத்துப்பேன்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

பழசு பழசுதான்

"அப்பா ப்ளீஸ் இந்த சம்மர் ஹாலிடேஸ்-கு தாத்தா ,பாட்டி ஊருக்கு போகவேணாம் வேற எங்கயாவது டூர் போகலாம் " என்று கெஞ்சிகொண்டிருந்தான் ராகுல்.

ஏன் ராகுல் தாத்தா,பாட்டியை பாக்க உனக்கு விருப்பம் இல்லையா?உனக்கு விளையாட அங்க ஏரி,தோப்பு,வயல்,மலை-னு எல்லாம் இருக்கு . இங்க இருக்குற வெயில் ,டென்ஷன் நு ஏதும் இல்லாம 20 நாள் சந்தோஷமா இருக்கலாமே என்றான் சந்தோஷ்.அதுலாம் சரிதான் அப்பா,ஆனா பாட்டி சமைச்சு குடுக்குற சமையல் ....அதுதான் அப்பா வேணாம்-நு சொல்றேன் என்றான் ராகுல்.

ஆமாங்க எப்பயும் சம்மர் ஹாலிடேஸ்-கு அங்கதானே போறோம் இந்த முறை வேற எங்கயாவது போவோம்.அதுவும் இல்லாம அத்தை பத்திய சாப்பாடு மாதிரி கேழ்வரகு,கம்பு கூழ் ,மிளகு ரசம்,முடக்கத்தான் கீரை தோசை-னு ...நாக்கே செத்து போய்டும் என்றாள் மலர்.

மலர்,பசங்களுக்கு புரியவைக்கவேண்டிய நீயும் என்ன சின்ன பிள்ளை மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க..நீ ஒரு நாள் புரிஞ்சிப்ப.அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அங்க தோப்பு ,வயல்,தொறவு-நு அத பாத்துக்க நேரம் சரியாய் இருக்கறதால நம்மகூட வந்து இருக்க முடியலை.வருசத்துக்கு ஒரு தடவைதானே போறோம்.நாம போகலைனா அவங்க கஷ்டபடுவாங்க .இந்த நாள் எப்போ வரும் நு காத்துகிட்டு இருக்காங்க .நாம ஏமாத்தலாமா?அதனால நாளைக்கு போறோம்.எல்லாம் எடுத்து வச்சுடு என்றான் சந்தோஷ்.

ஹய்யா நாளைக்கு தாத்தா பாட்டி ஊருக்கு போறோம் - என்று துள்ளி குதித்தவாறே ஓடினால் ராகவி.ராகுலின் தங்கை..

அப்பாவும் ,பொண்ணும் ஒரே மாதிரி இருங்க என்று முனுமுனுத்தவாறே எல்லாம் எடுத்துவைக்க தொடங்கினாள் மலர்.

அடுத்தநாள் ,கிராமத்து வீட்டை அடைந்தனர்.மனம் முழுக்க அன்போடும்,முகம் முழுக்க சந்தோஷாதோடும் சந்தோஷத்தின் பெற்றோர் விசாலாட்சியும் ,கண்ணனும் வரவேற்றனர்.

டே! கண்ணுங்களா பாட்டிய இப்போதான் நியாபகம் வந்ததா?வாப்பா ராஜா நல்லா இருக்கியா?ராஜாதி நல்லா இருக்கியாமா என்று அன்போடு விசாரித்தாள் விசாலாட்சி.நல்லா இருக்கோம் அத்தை.நீங்க எப்படி இருக்கீங்க ?மாமா எப்படி இருக்கீங்க ?என்று விசாரித்தவாறே உள்ளே நுழைந்தனர் .


குளிச்சுட்டு சாபிடுங்கப்பா எல்லாம் தயாரா இருக்கு .சாப்பிட்டு செத்த நேரம் ஓய்வு எடுங்க என்றனர் விசாலாட்சியும் ,கண்ணனும்.
சிறிது நேரத்திற்கு பின் ,பாட்டி ரொம்ப பசிக்குது என்ன இருக்கு சாப்பிட?என்றாள் ராகவி.செல்லத்துக்கு என்ன வேணும் நு சொல்லு பாட்டி செஞ்சு தரேன் என்றாள் விசாலாட்சி.நீங்க என்ன செஞ்சு இருக்கீங்களோ அது போதும் பாட்டி என்றாள் ராகவி.கேழ்வரகு தோசை,கோழி கொழம்பு செஞ்சிருக்கேன் வா சாபிடலாம் என்று அமரவைத்தாள் விசாலாட்சி.
ம் ...உன் சமையலே சமையல் தான் அம்மா ...என்று புகழ்ந்தவரே சாபிட்டான் சந்தோஷ்..ம் பாட்டி சூப்பர் என்று பாராட்டினாள் ராகவி.
பாவம் ராகுலுக்கும்,மலருக்கும் சாப்பிட்டு முடிப்பதற்குள் போதும் என்றாகி விட்டது.
சாப்பிட்டு எழுந்து நிற்க முடியாமல் மெதுவாக காலை பிடித்தவாறே எழுந்தாள் மலர்.ஏன்மா !....உடம்புக்கும் எதுவும் முடியலையா? கால் வலியா?
என்னமா சொல்லு.என்று பதறினாள் விசாலாட்சி.இல்ல அத்தை அதுலாம் ஒன்னும் இல்லை, வீட்ல டேபிள்,சேர், சோபா-னு உக்காந்து கீழ உக்காந்து எந்திரிக்க முடியலை அவ்ளோதான் என்றாள் மலர்.
அப்போ நீ சேர்-லையே உக்காந்து இருக்கலாம் இல்ல.இதுல என்னமா இருக்கு?எங்கள பாரு 60 வயசாகுது எங்களுக்கு. இப்பவும் நாங்க எவ்வளவு திடமா உடம்புலயும் மனசுலயும் தெம்பா இருக்கோம்.நீங்க சின்ன பிள்ளைங்க இப்பவே முடியலைன்னு சொல்றீங்க.
உண்மை தான் அத்தை நகரத்துல இருக்குற சவுகரியம் இங்க வராது இல்ல அத்தை என்றாள் மலர்.அது சரிதான் கண்ணு,இருந்தாலும் நாம உடம்பு முக்கியம் அதான் சொன்னேன்,சரி சரி ராத்திரி முடக்கத்தான் கீரை தோசை செஞ்சு தரேன் முட்டிக்கு ரொம்ப நல்லது என்றாள் விசாலாட்சி..ஐயோ கீரை தோசையா?என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் மலர்.

விசாலம் நீவேற ...பிள்ளைங்கள கீரை தோசை,கேழ்வரகு,கம்பு நு பயமுறுத்தாத.அவங்க அதுலாம் அங்க சாப்பிட்டு இருக்கமாட்டாங்க.கஷ்டபடுத்தாத என்னபா சந்தோஷ் பக்கதுல இருக்குற டாக்டர் கிட்ட கூப்பிட்டு போயிட்டு வா பா என்றார் கண்ணன்.
சும்மா இருங்க..புள்ளைங்க அங்க இதுலாம் சாப்பிட்டு இருகமாட்டாங்கனுதான் இங்க வரும்போது எல்லாம் செஞ்சுதறேன்.இதமட்டும்மா சாப்பிட செய்றேன்.அவங்க விருன்மி சாப்பிடற கரி கொழம்பு,மீன்,முட்டை நு எல்லாம் வேற விதமா வேற ருசியோடதானே செய்றேன். .பாருங்க ஊருக்கு கிளம்பறதுக்குள்ள நா மலரோட கால்வளியை சரி பண்ணி காட்டுறேன் என்றாள் விசாலாட்சி.
இப்படி தினமும் கண் பார்வைக்கு சிறந்த கீரை,வாய்புண் ,வயிற்று புண்ணிற்கு சிறந்த மனத்தக்காளி கீரை ,இரும்பு சத்துள்ள முருங்கை கீரை,வெந்தயக்கீரை ,மிளகு ரசம்,மிளகு கொழம்பு,மிளகு டீ, உடல் ஆரோகியதிர்ற்கு கம்பு ,கேழ்வரகு உணவுகள்,பயதன்கஞ்சி, குளிப்பதற்கு மஞ்சள்,கடலைமாவு பயத்தம்மாவு கலந்த பொடி,தலைக்கு சீகக்காய்,வெந்தயம்,செம்பருத்தி எல்லாவற்றையும் முதல் நாள் இரவே கஞ்சியில் ஊறவைத்து மறுநாள் அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்க சீகக்காய் இப்படி எல்லாம் விசாலாட்சியின் கை பக்குவதிலேயே இருந்தன.
ராகவி,மலர்,ராகுல் எல்லோரையும் கூப்பிட்டு தோப்பு ,வயல் ,மலை அடிவாரம் என்று எல்லா இடமும் சுற்றிக்காட்டினான் சந்தோஷ்..

அத்தை நான் உங்களுக்கு உதவியா இருக்கேன் என்று மலர் சொன்னாலும் இங்க ஒரு வேலையும் இல்லமா எல்லாத்துக்கும் ஆள் இருக்காங்க பாத்துப்பாங்க.சமையல் நான் பண்ணிடுவேன் நீ பிள்ளைங்களோட சந்தோஷமா இரு என்பாள் விசாலாட்சி .
12 நாளும் சென்றது.
சரி அப்பா எனக்கு ஆபீஸ்-இல் வேலை இருக்கு நானும் மலரும் கிளம்புறோம்.பிள்ளைங்க இங்க இருக்கட்டும் 10 நாளுக்கு பிறகு நான் வந்து கூப்பிட்டு போறேன் என்றான் சந்தோஷ்.சரிப்பா என்று வழி அனுப்பினர் கண்ணனும் ,விசாலாட்சியும்.ராகுல்,ராகவி தாத்தா ,பாட்டிக்கு தொந்தரவு தராம சமத்தா இருக்கணும் சரியா?என்றாள் மலர்.நாங்க பாத்துக்குறோம் நீங்க போய்ட்டு வாங்க .டாட்டா டாட்டா ...என்றனர் பிள்ளைகள்.எங்களுக்கு அவங்க என்ன செஞ்சாலும் சந்தோசம் தான் மா ..நாங்க பாத்துக்குறோம் என்றனர் கண்ணனும்,விசாலாட்சியும்.
சந்தோஷும்,மலரும் நகரத்திற்கு திரும்பினர் ..நகரத்தின் எல்லை தொட்டதும் ஆரம்பித்தது போக்குவரத்து நெரிசல்..மாசு,தூசி என நகரத்திற்குள் நுழையவே ஒரு மணி நேரம் ஆனது..பாரு 12 நாள் எவ்ளோ அமைதியான சூழல்ல ,நிம்மதியா இருந்தோம் இங்க வந்ததும் டென்ஷன் தான் என்று புலம்பியவாறே காரை ஓட்டினான் சந்தோஷ்.அதுக்கு என்ன பண்றது என்ன இருந்தாலும் சிட்டி சிட்டிதான் கிராமம் கிராமம் தான் என்றாள் மலர்.
அடுத்த நாள் தன் சிநேகிதி லதாவிடம் பேச லதாவிற்கு போன் செய்தாள் மலர்.
ஹாய் லதா எப்படி இருக்க?நேத்துதான் ஊருல இருந்து வந்தேன் நீ எங்க இருக்க?எப்படி இருக்க? என்றாள் மலர்.ராகுலும் லதாவின் மகன் அகிலனும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள்.ராகுல்,அகிலன் நட்பின் மூலமாகத்தான் லதாவும் மலரும் சிநேகிதி ஆனார்கள் சில வருடங்களுக்கு முன்பு.
அகிலனுக்கு உடம்பு சரி இல்ல மலர் ,ஹாஸ்பிடல்லுக்கும் வீட்டுக்கும் தான் அலையுறேன் என்றாள் கண்ணீருடன் .ஏன் என்னாச்சு எந்த ஹாஸ்பிடல் நான் உடனே வரேன் என்று கிளம்பினாள் ,அடுத்த 40 நிமிஷத்தில் லதாவின் வீட்டை அடைந்தாள்.
வா மலர்...
என்ன நடந்துச்சு லதா ஏன் ஹாஸ்பிடல்? என்று கேட்டாள் மலர்.
டயாபடீஸ் மலர்.நம்ம பாஸ்ட் புட் கலாசாரத்தால இப்படி..மாத்திரை,மருந்து ,ஊசி-னு அகிலனை பாகவே எனக்கு கஷ்டமா இருக்கு.என்று
அழுதாள் லதா..கம்பு,கேழ்வரகு,கோதுமை சத்தான உணவு-னு இப்படி அடிக்கடி சாப்பாட்டுல சேத்துக்காம பிசா,பர்கர்,நூடுல்ஸ்,பாஸ்தா-னு நாமளும் அவங்க போக்குக்கே விட்டு அவங்க ஹெல்த் மேல ரொம்ப அக்கறை எடுத்துக்காம சாப்பிட்டா போதும்-னு விட்டுடுறோம் இப்போ கஷ்டம் நாம கொழந்தைன்களுக்குதான்.அவங்கள பாத்து பாத்து நாமும் கஷ்டபடுறோம் என்று சொல்ல சொல்ல மலரின் நினைவில் அத்தை விசாலாட்சியும் அவரின் சமையல் பக்குவமும் நினைவுக்கு வந்தது.என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதான் என்று நினைத்துக்கொண்டாள்.
அன்று இரவே சந்தோஷிடம் ,ஏங்க பிள்ளைங்கள கூப்பிட்டு வர போகும் போது நானும் வரேங்க.அத்தகிட்ட கேழ்வரகு,கம்பு,கீரை வெரைட்டி சாதம்,தொக்கு எல்லாம் எப்படி செய்யணும்-னு கேட்டு தெரிஞ்சிகிட்டு வரணும் இனி தினம் நாம வீட்லயும் அத்தை செய்றமாதிரி உணவே மருந்து வெரைட்டி ஒன்னு கண்டிப்பா இருக்கும் என்றாள்.பரவாஇல்லையே இப்போதாவது புரிஞ்சுகிட்டியா?அப்படியே செய்யலாம் என்றான் சந்தோஷ் சந்தோஷமாக.

ஆனந்தம்

சஞ்சு குட்டி இங்க பாரு ...இதோ இதோ இந்த பொம்மை பாரேன் ...திர்ர்ரர்ர்ர்ர் ....அஹஹாஹ் நல்லா இருக்கா ...
என்று சாரதா சஞ்சுவிடம் விளையாடி கொண்டிருந்தாள் .. 

அழகான புன்னகை ..மேலே முன் பக்கம் முளைத்திருக்கும் அழகான 2 குட்டி குட்டி பற்கள் ..அழகாக கன்னத்தில் விழும் குழி என சஞ்சு வை பார்த்தாலே சாரதாவிற்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் துன்பம் மறந்து இன்பம் தொற்றிக்கொள்ளும் ....

பிஸ்கட் சாப்பிடறியா  செல்லம் இந்தா இங்க வா இங்க வா இதோ வாங்கிக்கோ-னு சொல்லவும் சஞ்சு எழுந்து
தத்தி தத்தி தன் சிறிய கால்களால் முதன் முறையாக நடக்க ஆரம்பித்ததும் சாரதா சந்தோஷத்தில்...வேகமாக ஓடி எதிர் பிளாட் இல் இருக்கும் சரிதாவை கூப்பிட்டாள்.

சரிதாவை சீக்கிரம் வா ...சீக்கிரம் சீக்கிரம்...

இதோ வந்துட்டேன் ...என்று மாவும் கையுமாக சரிதா வந்து நிற்க ,

மாவு அரட்சுகிட்டு  இருக்கேன் என்ன சொல்லு வந்துட்டேன் என்று சொல்லிக்கொண்டே வர ..

சஞ்சு தத்தி தத்தி நடப்பதை பார்த்து ஆனந்தம் அடைந்தாள் ..சாரதா அதற்குள் தன் மொபைல் போன் இல் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தாள் ...
எவ்ளோ அழாக நடக்க ஆரம்பிச்சுட்டே தங்கம் என்று சொல்லி சஞ்சுவை கட்டி கொண்டாள் சரிதா ..

சரி சாரதா வேலை இருக்கு வரேன் நான்... என்று சொல்லி அவசரமாக ஓடினால் சரிதா ...

சஞ்சுவை தோளில் போட்டுகொண்டு ...சாரதா தன் கணவனுக்கு போன் செய்து இன்னைக்கு சஞ்சு என்ன செய்தாள் தெரியுமா   என்று ..அனைத்தையும் விளக்கி ..சீக்கிரம் வாங்க உங்களுக்கு இந்த வீடியோ காட்டனும் சீக்கிரம் ப்ளீஸ் ப்ளீஸ் என்று கெஞ்ச ...
சரிமா வேலை இருக்கு இல்ல ..நான் சீக்கிரம் வர ட்ரை பண்றேன் என்று சொல்லி போன்-ய் கட் செய்தான் கணேஷ் ...

அதற்குள் சஞ்சு நன்றாக உறங்கிவிட்டாள் ..
 
மாலை கணேஷ் வந்ததும் ..பரவாஇல்லையே இன்னைக்கு சீக்கிரம் வந்துடீங்களே ..இருங்க காபி போட்டு எடுத்துட்டு வரேன்..

இன்னைக்கு உன்ன வெளில  கூப்பிட்டு  போலாம்-னு  சீக்கிரம் வந்தேன்..
வெளிலையா  எங்க ?

நீயே கண்டுபிடி பாக்கலாம் ...

ம்ம்ம் ...சினிமா ..

இல்ல ...

பீச் ...

இல்ல ...

உங்க சிநேகிதன் வீட்டுக்கு போகணும்-னு  சொல்லிகிட்டே இருந்தீங்களே?...

இல்ல ...

கோவிலுக்கு ...

இல்ல ..

அப்போ தெரியல நீங்களே சொல்லுங்க ...

இதோ பாரு..

காட்டுங்க ..

 டிக்கெட்.. 

உனக்கு ரொம்ப பிடிச்ச s.v.சேகர்  டிராமா டிக்கெட் ..போலாமா ? என்று காபியை  குடித்தான் ..

ஹே !! நெஜமாவா?- என்று இன்ப அதிர்ச்சி மாறாமல் டிக்கெட்-ஐ திருப்பி திருப்பி பார்த்தாள்.

இருங்க முதல்ல இந்த வீடியோ பாருங்க,என்று வீடியோ காட்ட..

சோ cute இல்ல ..என்று சொல்லியவாறே எங்க சஞ்சு குட்டி கானம்
 ,என்று கணேஷ் கேட்டான்....

லேசான வருத்ததுடன் சரிதா தூக்கிட்டு போய் இருக்கா என்றாள்..

பாரேன் ..எதுக்கு உனக்கு இபோ வருத்தம் ...சஞ்சு ..சரிதா ,சரத்-ன் மகள் ...ஆனா

அவங்ககிட்ட விட நமகிட்ட தான் அதிக நேரம் இருக்கா ..அவங்களுக்கு எவ்ளோ பெரியமனசு நீ இப்படி வருத்தப்படலாமா?

போ போ சீக்கிரம் கெளம்பு பாப்போம்-னு என்று சாராதவை அவசர படுத்தினான் கணேஷ் ...

ம் ..சரிங்க ...என்று தயாரானாள் சாரதா ...

இருவரும் கிளம்பிய பின் ..

சரிதா... சரிதா... டிராமா-கு டிக்கெட் வாங்கிட்டு வந்துருக்கார் திடிர்னு சொல்லாம ...அதான்
போய்ட்டு வரோம்..சஞ்சு எங்க இன்னம் தூங்குறாளா ? என்று எட்டி எட்டி உள்ளே பார்த்தாள் சாரதா ..

இல்ல அவங்க அப்பா வந்துட்டாங்க இல்ல ஒரே ஆட்டம் தான் என்று சொல்லி ..சஞ்சு இங்க வா யார் வந்துருகாங்க பாரு என்று சொல்ல ..சரத் சஞ்சுவை தூக்கிகொண்டு வெளியே வந்தான் ..

ஹாய் கணேஷ் ...

ஹாய் சரத் ..

சஞ்சு அப்பா ,சஞ்சு நடக்க ஆரம்பிச்ச வீடியோ பாத்தீங்களா? எங்க வீட்லதான் முதல்ல நடக்க ஆரம்பிச்சுருக்கா என்று சாரதா சந்தோஷமாக சொல்ல , ம்..பாத்தேன் ...அவ முதல் முதல்-ல பேசினதும் உங்க வீட்லதானே என்று சரத் சொன்னான்.
சரி நாங்க கெளம்புறோம் ...சஞ்சு குட்டி டாட்டா என்று கணேஷும் ,சாரதாவும் சொல்லிவிட்டு சென்றனர்.

சரிதா ,நா ஒன்னு உன்னை கேக்கட்டுமா என்று சரத் சொல்ல ..

என்ன கேளுங்க என்றாள்..

ஆமா நீ சஞ்சு நம்ம வீட்ல நம்மகிட்ட முதல் முதலா பேசலையே ,நடக்கலையே னு நீ வருதபட்ரியா?என்று சரத் கேட்க..

என்ன பேசுறீங்க நீங்க..எப்படீங்க அப்படி நினைப்பேன்..என்னைவிட அவங்க சஞ்சு மேல அன்பா இருக்காங்க.அவங்க  குழந்தை 2 வயசா  இருக்கும் போது உடம்பு முடியாம இறந்துடுச்சு அதுக்கு அப்பறம்   கொழந்தை பொறக்க வாய்ப்பில்லைனு  டாக்டர் சொல்லிட்டாங்கனு கேள்வி பட்டதும்  எவ்ளோ வேதனபட்டோம்..
நம்ம சஞ்சு மேல 2 பேரும் உயிரா இருக்காங்க.

கணேஷ் அம்மா சாரதா மேல கோவம் செஞ்சுகிட்டு கணேஷுக்கு வேற கல்யாணம் பண்ண பேச்சு எடுத்தது 
தெரிஞ்சுகிட்டு கணேஷ் அவங்க அம்மா அப்பா கிட்ட கோவிச்சுகிட்டு இனி எனக்கு சாரதா சாரதாக்கு   நான் யாரும் வேண்டாம் எங்களுக்குன்னு சொல்லிடு வந்துட்டாங்க-னு  சாரதா சொன்னப்போ ரொம்ப அழுதாங்க.
அதுல இருந்து இப்போ வரைக்கும் அவங்க அம்மா அப்பாகிட்ட பேசலையாம்.சாரதா பல தரம் சொல்லியும் கணேஷுக்கு இன்னம் கோவம் போகலையாம்.நீ அவங்க மேல இறக்கபடுற. ஆனா அவங்க உன் இடத்துல வேற பொண்ண வைக்க நினைச்சாங்க.இப்பவும் எதுவும் சொல்லமாட்டாங்கன்னு  எப்படி நம்புற.வேண்டாம்-னு  சொல்லிட்டாறாம் .

எனக்கு கஷ்டமா போச்சு.எவ்ளோ நல்ல  மனுஷங்க தெரியுமா   2  பேரும்  . 
எங்க போனாலும் அவளுக்கு எதாவது வாங்கிட்டு வந்து குடுப்பாங்க மறக்காம ..என்று சொல்லி கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தாள் ...

சில நாட்களுக்கு பிறகு ,
 காலையில் வழக்கம் போல சஞ்சு-வை எதிர்பாத்து காத்து இருந்தாள் சாரதா ...
இதோ வந்துட்டா... என்று சஞ்சுவை குடுத்தாள் சரிதா  ...
அனால் எப்போதும் இல்லாத மாற்றமாக சிறிது நேரத்தில் சஞ்சுவை சரி சாரதா குளிபாட்டினேன் தூங்கிடுவா..நா தூக்கிட்டு போறேன் .. என்று சொல்லி தூக்கி சென்றாள் ..

ஆமா 3, 4 நாலா dull ஆ இருக்கியே என்னமா ? . .என்ன ஆச்சு உடம்பு முடியலையா?என்று கணேஷ் கேட்க  ..
 
அதுலாம் இலைங்க..சரிதா 4 நாலா சஞ்சுவை சீக்கிரம் சீக்கிரம் தூக்கிட்டு போய்டரா..தூங்கிடுவா ..சொந்தகாரங்க வராங்கனுலாம் சொல்லி ...இத்தனை  நாள் அவங்க வீட்டுக்கு வர்ற சொந்தகாரங்க நம்மையும் பாத்துட்டு தானே போவாங்க ..இப்போ என்ன புதுசா..ஏதோ மாற்றம் தெரியுது.. 3 வருஷமா இப்படி ஒருநாளும் நடந்துகிட்டது இல்ல அதான் புரியாம தவிக்குறேன் என்று சொல்லி புலம்பினாள் ..
அதுலாம் ஒன்னும் இருக்காது மா....நீ தூங்கு என்று சமாதனம் படுத்தினான் சாரதாவை . ..

சரத் ஆபீஸ் -இல் இருந்து வந்ததும் ..
என்ன நானும் 4 நாலா பாக்குறேன் எப்பயும் நா வந்ததுக்கு அப்பறம் தான் சஞ்சுவை கணேஷ் வீட்ல இருந்து துக்கிட்டு வருவ, 4 நாளா இங்க இருக்காளே என்ன விஷயம் ...என்று கேட்க  ...
அதுலாம் ஒன்னும் இல்லைங்க ..நான் தான் சஞ்சுவை அதிகமா அவங்க கிட்ட நெருங்க விடறது இல்ல இப்பலாம் என்றாள்  சரிதா ....
..
ஏன் இப்படி பண்ற ..இவ மேல உயிரா இருக்காங்கனு உனக்கும் தெரியும் தானே ,என்னை விட நீ தானே இதை அதிகமா சொல்வ. பாவம் அவங்க ..மனசு எவ்ளோ வேதனை படும் ....என்று  கோவத்தில் சரத் சரிதாவை திட்டினான் ..
ஆமாங்க ..அதனாலதான் அப்படி பண்ணினேன் ..நீங்க அடுத்த மாசம் புனே branch -கு மாத்திட்டாங்க போகணும்-னு சொன்னிங்களே ...மறந்துட்டீங்களா ?திடீர்-னு  சஞ்சுவை அவங்க பாக்கலேன்னா அவகூட விளையாடலேன்னா அவங்க தாங்க மாட்டாங்க ..சஞ்சுவும் மனசு பாதிச்சுடுவா ..அதுதான் கொஞ்சம் கொஞ்சமா நான் அவங்களுக்கு எடுத்துக்குற பக்குவத்த வரவைக்குறேன் என்று சொல்ல ...

கண் கலங்கி சரிதாவை அணைத்து முத்தமிட்டான் சரத் ....என்ன மன்னிச்சுடுமா ...நா அவசரபட்டுடேன் ..
நீங்க எப்பயுமே அவசரம்தான் படுவீங்கனு எனக்கு தெரியுமே என்று சொல்லி கண்ணீரை துடைத்து சிரித்து கேலி செய்தால் சரிதா ...
அன்று கொலுவிற்கு அழைக்க வந்த சாரதா ,வாசலில் இவர்களது உரையாடலை கேட்டு ஒன்றும் சொல்வதரியாமல் நின்றாள் .

எதேச்சையாக எட்டி பார்த்த கணேஷ் ஏன் மா வாசல்லையே  நிக்குற உள்ள போய் கூப்பிடு என்று  சொல்ல..இல்லைங்க  நான் சரிதாவை தப்பா நெனச்சுட்டேன் ,என்று அவர்களின் உரையாடலை சாரதா கணேஷிடம் சொன்னாள்..

நா மன்னிப்பு கேக்கணும் அவகிட்ட என்று சாரதா சொல்ல ...
வாசலில் யாரோ நிற்பதை அறிந்த சரத்தும் சரிதாவும் பார்க்க ...கணேஷின் தோளில் சாரதா ,கண்களில் கண்ணீர் வடிய நின்று கொண்டிருக்க சாரதா சரிதாவிடம் மன்னிப்பு கேட்க ,ஒன்றும் புரியாத சரிதா மேலும் கணேஷும் சாரதாவும் நடந்தவற்றை விளக்க
சரிதாவும் தான் அவ்வாறு நடந்து கொண்டதன் காரணத்தை மறுபடியும் சொல்லி கட்டி அணைத்து  மன்னிப்பு கேட்டாள்.  
மன்னிப்பு கேட்க .

சந்தோஷத்தில் கணேஷும் ,சரத்தும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர் ...நால்வரும் சந்தோஷத்தில் சிரிக்க ஏதும் புறியாத அந்த மழலை சஞ்சுவும் தன் 2 பற்களை காட்டி சிரித்தாள்