பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 28 ஆகஸ்ட், 2013

நம்ம முகம் பதிச்ச தபால்தலை (போஸ்டல் ஸ்டாம்ப்)

'தமிழன்' படம் பாத்தப்போ , ச்ச ...நாமளும் எதாவது செய்யணும் நாட்டுக்கு உபயோகமா...நம்ம முகமும் தபால்தலையில வரணும்னுலாம் ஏக போக ஆசைகள் மனசுக்குள்ள இருந்தது...ஆக்சுவலா அந்த படம் நல்ல கான்செப்ட் உடைய படம் .. அத ஷங்கர் சார் எடுத்திருந்தாருனா மெகா ஹிட் ஆகிருக்கும் ..சில பல சொதப்பல்களால படம் நல்லா போகல..சரி அத விடுங்க , என்ன சொல்ல வந்தேனா , அவ்ளோ எல்லாம் கஷ்டப்படாமலேயே நம்ம முகமும் தபால்தலையில இடம்பெற செய்ய முடியும்...


எப்படி தெரியுமா?

தபால்தலையோட லாபத்தை உயர்த்த , நம்ம முகமும் பதிச்ச தபால்தலையை பயன்படுத்திக்கும் ஒரு திட்டத்தை அறிமுகபடுத்தி இருக்காங்க தபால் துறை...அந்த திட்டத்தின் பெயர் ' எனது அஞ்சல் தலை'...

தமிழ்நாட்ல இருக்குற சிறப்பு தபால் தலை சேகரிப்பு மையத்துல ஒரு விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செஞ்சு ,இந்திய அரசால கொடுக்கப்பட்ட எதாவது ஒரு அடையாள அட்டையின் நகலுடன் ,நம்ம புகைப்படத்தை இணைத்து விண்ணப்ப கட்டணமா 300 ரூபாய் கட்டணும்..அவ்ளோதான்...

விண்ணப்பத்தை கொடுத்த நாளுல இருந்து அதிகபச்சமா 15  நாளுக்குள்ள நம்ம புகைப்படம் அச்சடிக்கப்பட்ட 12 தபால்தலை நமக்கு வந்துடும்..

எப்புடிடிடிடிடிடிடிடிடிடிடி !!!!

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

இலவச காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை

பிறவியிலேயே காது கேளாமையால் ,வாய் பேசமுடியாத குழந்தைகளுக்கு இலவசமாக காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை ..


முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை செய்ய பூந்தமல்லி சாலையில் உள்ள கே.கே.ஆர் காது மூக்கு தொண்டை மருத்துவமனை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது .

இந்த திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பிக்கிண்றவர்கள் பிறப்புச் சான்றிதழ் ,குடும்ப அடையாள அட்டை மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டஅட்டை முதலியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

6 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் மட்டுமே இந்த அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அறுவை சிகிச்சைக்கு முன் செய்யப்படும் பரிசோதனைகள் அறுவை சிகிச்சைக்கு பின் பேச்சு பயிற்சி இலவசமாக செய்யப்படும்.

கே கே ஆர் காது மூக்கு தொண்டை மருத்துவமனை ,எண்.274,பூந்தமல்லி நெடுஞ்சசாலை ,கீல்பாக்கம்.. சென்னை 10. போன் - 044 26411444 /26411987 /9840350079 /9094540055

Email - kkrenthospital@gmail.com
Website - kkrenthospital.org

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

இதுக்கு தீர்வே கிடையாதா?என்ன தண்டனை கொடுக்கலாம் ?

டிசம்பர் மாதம் தான் டெல்லியில் ஒரு கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளானாள்.அடுத்து இப்போ மும்பைல பத்திரிக்கை துறைல வேலை செய்யும் ஒரு பெண் புகைப்படக்கலைஞரை ஐந்து பேர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி இருக்காங்க..என்ன ஜென்மங்கள் இவன்கள் எல்லாம்?!!!இதுக்கு தீர்வே கிடையாதா?

எவ்வளவு கேவலமான விஷயம்....டெல்லியில நடந்த சம்பவத்துக்கு இந்தியா முழுக்க ஆர்ப்பாட்டம் அது இதுன்னு கொதிச்சிருந்துச்சு. எத்தன நாளுக்கு?அப்பறம் நாமும் அப்படியே மறந்துட்டோம்..இப்போ மும்பைல ....இதையும் மறந்துடுவோம்....

ஆண்மகனா பிறந்துட்டாலோ இல்ல அவனுக்கு ஒரு குழந்தை பிறந்துட்டாலோ/இல்ல பிறக்க வாய்ப்பிருந்துட்டா மட்டும் அவன் ஆண்மகன் ஆகிட முடியாது.விருப்பம் இல்லாத பெண்ணை தொடணும்னு நினைக்குற எவனுமே ஆண்மகன் கிடையாது.

ஒரு பொண்ணுகிட்ட கண்ணியமா நடந்துக்கிறவன் தான் உண்மையான ஆண்மகன்.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

பாடலின் வரிகள் - காதல் ரோஜாவே - ரோஜா

படம் :ரோஜா 
பாடல் : காதல் ரோஜாவே 
பாடியவர்கள் : s .p .b 
பாடலாசிரியர் :வைரமுத்து 
இசை : A .R .ரஹ்மான் 

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணில் வழியுதடி கண்ணீர்
கண்ணுக்குள் நீ தான்
கண்ணீரில் நீதான்
கண் மூடிப்பார்த்தால்
நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல்
காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணில் வழியுதடி கண்ணீர்

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

பார் கோடு

பார்கோடு நாம வாங்குற பல பொருள்களின் பாக்கெட்க்கு பின்னாடி பாத்துருப்போம்.

* இந்த பார்கோடுகளை நேரோட்ட பார்கோடு ,2டி பார்கோடுனு ரெண்டு வகையா பிரிக்குறாங்க .

*வர்த்தக பயன்பாட்ல இருக்குற பார்கோடு பொதுவா யு.பி.சி வகை சேர்ந்தது.
*மருத்துவமனைல நோயாளிகளோட விபரம் ,அவங்க  நோய் பத்தின விபரம் ,அதே மாதிரி வங்கி ,நூலகம் இதுல உபயோகிக்குற பார்கோடு 'கோட்பார்' அப்படீங்குற பழைய பார்கோடு வகை.

*'இன்டர் லீட் 2' என்ற ஒரு வகை பார்கோடு இருக்கு அதுதான் நூலகங்கள் ,மொத்த விற்பனை நிலையங்கல்ள பயன்படுத்துறாங்க.

* 'நான் இன்டர் லீட் 2' என்ற ஒரு வகை பார்கோடு இருக்கு அது தொழில் துறைல பயன்படுத்துறாங்க.

*இது ரெண்டுமே நேரோட்ட  பார்கோடு .

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

தொடுதிரை

தொடுதிரை  (டச் ஸ்க்ரீன்) தொழில்நுட்பம்தான் இப்போ எங்க பாத்தாலும் உபயோகத்துல இருக்கு .இத கண்டுபிடிச்சது யாருன்னு தெரியுமா?

இந்த பிரபஞ்ச தோற்றம் பத்தின ஆய்வுகள நிகழ்த்திகிட்டு இருக்குற செர்ன் ஆய்வுக்கூடத்துல தான் இந்த தொடுதிரை  (டச் ஸ்க்ரீன்) தொழில்நுட்பம் முதல்ல உருவானது.

இது இந்த ஆய்வுக்கூட அறிவியலாளர் பென் ஸ்டம்பெ (Bent stumpe) மற்றும்
ஃபிரான்க்  பெக் (Frank Beck ) 1970-ல இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினாங்க.

இப்போ இந்த தொழில்நுட்பத்துல 3 வகையான தொடுதிரைகள் இருக்கு.

* கொஞ்சம் அழுத்தி தொடுறமாதிரி இருக்குறதுக்கு ரெசிஸ்ஸ்டிவ்  (Resistive ) வகை .இதுல மெல்லிய பாலியஸ்டர் ஃபிலிம் அல்லது பூச்சு பூசபட்ருக்கும்.இது வேகமா இருக்காது .


ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

தமிழக அரசின் வெப்சைட்ஸ்கள்......!!


சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdfhttp://www.tn.gov.in/appforms/death.pdf

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

ஆஞ்சநேயரும் அவரோட மாலையும்

ஆஞ்சநேயருக்கு வேண்டிகிட்டு வடைமாலை ,வெற்றிலை மாலை,துளசி மாலைனு சாத்துறோம் இல்லையா.,இந்த மாலைகளுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?

வடைமாலை - எதிரிகளோட தொல்லைகள் நீங்குமாம்,வழக்குகள்ல சாதகமான தீர்வு கிடைக்குமாம்

வெற்றிலை மாலை-சுபநிகழ்ச்சிகள் நடக்குறதுக்கு இருந்த தடைகள் நீங்குமாம்,தொழிலில் வெற்றி கிடைக்குமாம்

துளசி மாலை - சகல பாவங்களிலும் இருந்து நிவர்த்தி கிடைக்குமாம்.

நைட் தூங்குறதுக்கு முன்னாடி 'ராமதாச ஆஞ்சநேயா' அல்லது 'ஸ்ரீராமஜெயம்' அஞ்சு தடவ சொல்லிட்டு தூங்கினா கெட்ட கனவு வராதாம்.

சரி இவருக்கு வடைமாலை அணிவிக்குறோமே அது ஏன்னு தெரியுமா?

ராமரோட பட்டாபிஷேகத்தப்போ சீதாதேவி ஆஞ்சநேயருக்கு முத்து மாலை ஒன்னு பரிசா குடுத்துருக்காங்க.இதை வடநாடுல 'வடமால்யா'-னு சொல்வாங்களாம்.இதத்தான் அப்படியே மருவி தென்னகத்துல 'வடைமாலை' னு சொல்ல ஆரம்பிச்சுருக்காங்க..ஸோ ,வடைல மாலை செஞ்சு சாத்த ஆரம்பிச்சுருக்காங்க ஆளுங்க..

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

பாடலின் வரிகள் - வந்தே மாதரம்

ஆல்பம் :வந்தே மாதரம்  
பாடல் : வந்தே மாதரம்  
இசை : A .R .ரஹ்மான் 
பாடியவர் : A .R .ரஹ்மான் 
பாடலாசிரியர் : வைரமுத்து அங்கும் அங்கும்  இங்கும் இங்கும்
சுற்றி சுற்றி திரிந்தேன்
சின்ன சின்ன பறவைப்போல்
திசை எங்கும்  பறந்தேன்
வெயிலிலும் மழையிலும்
விட்டு விட்டு அலைந்தேன்
முகவரி எது என்று முகம் துலைத்தேன்
மனம் பித்தை போனதே ...
உன்னை கண்கள் தேடுதே ..
தொட கைகள்  நீளுதே ...
இதயம் இதயம் துடிக்கின்றதே
எங்கும் உன்போல்
பாசம் இல்லை ...
ஆதலால் உன்மடி தேடினேன்...

புதன், 14 ஆகஸ்ட், 2013

பாப்கார்ன் உருவான வரலாறு !!!


இன்று நாம் திரைப்படம் பார்க்கும்போது சுவாரஸ்யமாக கொறித்துத் தின்னும் பாப்கார்ன் எப்போது பிறந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

சொன்னால் நம்புவதற்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆம், பாப்கார்னின் வயது சுமார் 6 ஆயிரம் ஆண்டுகள்.

மெக்சிகோ மக்கள்தான் இந்த சூப்பர் நொறுக்கித் தீனியை கண்டுபிடித்தவர்கள்.

நியூ மெக்சிகோவில் உள்ள வவ்வால் குகையில் இருந்து 5600 ஆண்டுகள் பழமையான பாப்கார்னை 1948ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

சோஷியல் நெட்வொர்க்ஸும் இந்த பொண்ணுங்களும்இந்த சோஷியல் நெட்வொர்க்ஸ் நல்லதுக்கும் உபயோகமா இருக்கும் கெட்டதுக்கும் உபயோகமா இருக்கும்.

நல்லாலாலாலா லைக்-ம் +1-ம் கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிச்சாங்க ,எது எதுக்கு லைக் குடுக்குறது எது எதுக்கு +1 குடுக்குறதுங்குற விவஸ்தையே இல்லாம போச்சு..அதோட அர்த்தம் கூட மறந்துபோச்சு,மாறிப்போச்சு..

நான் காலைல இட்லி சாப்ட்டேனு ஸ்டேட்டஸ் போடறாங்க அதுக்கு லைக் போடுறாங்க.எங்க அம்மா கீழ விழுந்துட்டாங்கனு ஸ்டேட்டஸ்  போடறாங்க அதுக்கும் லைக் போடுறாங்க!!!

டிவி பாக்குறேன்,சாப்டறேன் ,சினிமாவுக்கு போறேன் (ஏன் அப்படியே அட்ரஸ் குடுத்துட்டு போங்களேன்),துப்பட்டா கானம் தேட்றேன் , தோடு காணம் தேடறேன்,வளையலை எண்ணிகிட்டு இருக்கேன்....இதுலாமா ஸ்டேட்டஸ்ல போடுவாங்க..இதுமாதிரி வெட்டியா ஸ்டேட்டஸ்ல போடுறது பொண்ணுங்கதான் அதிகம் ..ஆனா அதுக்கு வெட்டியா லைக் ,கமெண்ட் பண்றது பசங்க தான் அதிகம்..

சனி, 10 ஆகஸ்ட், 2013

இதுக்காகவும் தான் கோவிலுக்கு போறோம் !!!!!!தமிழர்களோட வரலாற்றை பத்தி படிச்சுக்கிட்டு இருந்தப்போ என் கண்ணுல பட்ட இந்த போஸ்ட் , படிச்சுட்டு ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே போனேன் நான்...எப்படி பட்ட திறமைசாலிகளா , அறிவாளிகளா இருந்துருக்காங்க நம்ம முன்னோர்கள்..ச்ச...அந்த காலத்துல வாழணும்னு எனக்கு ஆசையே வந்துடுச்சு...அட்லீஸ்ட் ,பிற்காலத்துக்கு போக  ஒரு காலச்சக்கரம் இருந்தா எப்படி இருக்கும் ?????

கோவிலுக்கு போ கோவிலுக்கு போனு ,பெரியவங்க சொல்லும்  போது ..எப்ப பாரு கோவிலுக்கு போக சொல்லுங்க..அப்டியே சாமியாரா போய்டுறேன்னு சொல்லி கிண்டல் பண்ற இந்த காலத்து பிள்ளைங்க ஏன் கோவிலுக்கு போக சொல்றாங்கன்னு அறிவியல் ரீதியா புரிஞ்சுகிட்டாங்கனா இனி அப்படி சொல்லமாட்டாங்க..

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

மாற்றுத் திறனாளி மற்றும் அவர்களுக்கு உதவ விரும்பும் நண்பர்களின் கவனத்திற்கு..அரசால் அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தமிழ்நாட்டில் எங்கு இருந்தாலும், அவர்களுக்கு தேவையான காது கேட்கும் கருவி தொடங்கி வீல் சேர், ட்ரை சைக்கிள், ஸ்டிக் மற்றும் பார்வையற்றோருக்கு கண்ணாடி என இதில் எது தேவையாக இருந்தாலும் இலவசமாக கிடைக்கும்.

இந்த வாய்ப்பை 11.8.13 - 14.8.13 தேதிக்குள் பயன்படுத்திக்கொள்ளவும்..

தொடர்புக்கு, ரத்னம் 9500399670 .

அல்லது ராஜ்குமார் 9566129592

இப்படியும் ஒரு ஆட்டோ டிரைவர்

ஒரு தொழில்ல மத்தவங்களை விட வித்தியாசமா இருக்குற இவரப்பத்தி படிச்சப்போ  என்னால ஆச்சர்ய படாம இருக்கமுடியல ...இப்படியும் இருக்காங்களானு தோணுது..யாரப்பத்தி சொல்றேன் ? அப்படி என்ன அவர் பண்ணிட்டாருனு கேக்குறீங்களா?


அண்ணாதுரை -29 வயதே ஆனா இவர் ஒரு ஆட்டோ டிரைவர் .சென்னைல திருவான்மியூர்ல இருந்து சோழிங்கநல்லூர் வரை ஆட்டோ ஓட்றார்..இவர் தன் ஆட்டோவில் பயணிக்குறவங்களுக்கு தனது ஆட்டோவில் என்ன என்ன வசதிகள் செய்துகுடுக்குறாருனு தெரியுமா?

ரம்ஜான் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள் ....

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

கேம்பஸ் இன்டெர்வியூவும் பொறுப்பில்லா இளைஞர்களும்

சமீபத்துல ஒரு விஷேஷத்துல என் தங்கையை பாத்தேன்.கேம்பஸ்ல செலக்ட் ஆகி இருந்த பொண்ணு இப்போ வேலைல ஜாயின் பண்ணிட்டதா சொன்னா.வொர்க் எப்படி போகுதுன்னு கேட்டேன் , நல்லா இருக்கு பட் காலேஜ் மாதிரியே இருக்கு ..டெய்லி கிளாஸ் எடுக்குறாங்க.சாயந்தரமே அன்னைக்கு நடத்தின கிளாஸ் பேஸ் பண்ணி டெஸ்ட் வைக்குறாங்க..ரெண்டு மெயின் டெஸ்ட் இருக்காம்.அதுல 70% எடுத்தாதான் ஜாப் கன்ஃபார்மாம் இல்லைனா அவ்ளோதானாம்னு சொன்னா..

அப்படி உங்கள கொஞ்சம் ட்ரைன் பண்ணினாதான் வேலையோட அருமை உங்களுக்கு தெரியும்  சொன்னேன்..


நெஜமாவே வருத்தப்படவேண்டிய விஷயம் இது. காலேஜ் முடிச்சதும் வேலைக்கு கேம்பஸ் மூலமா செலக்ட் ஆகிடுறாங்க..செமஸ்டர் லீவ் மாதிரியே மூணு நாலு மாசம் கழிச்சு வேலைல ஜாயின் பண்றாங்க.எடுத்தும் 20,000 முதல் 25,000 வரை சம்பளம்..உடனே தனக்கு எல்லாம் தெரியும், வேலைல இருக்கோம்,நிறையா சம்பாதிக்குறோம், கொஞ்ச நாளுல பைக் வாங்கிடுவோம்,ஒரு வருஷத்துல கார் ,அப்பறம் வீடுனு செட்டில் ஆகிடுவோம்னு தான் முதல்ல நினைக்குறாங்களே தவிர , ஒரு வேல கிடைச்சுருக்கு,நிறையா கத்துக்கணும் , இதுல இருந்து புது புது ஐடியா நமக்கு வரணும்,சாதிக்கணும்னு எண்ணம் ரெண்டாம் பச்சம் தான்.

புதன், 7 ஆகஸ்ட், 2013

நல்ல யோசனை

FB  இருந்தப்போ நண்பர் கார்த்திக்கின் போஸ்ட் படிக்குற வாய்ப்பு கிடைச்சது.. விமானத்துல அடிக்கடி பண்ணும் இவருக்கு தாய்மொழிப் பற்றும் இருக்கு .. அதனால தான் தமிழ்நாட்டுக்கு வரும்  விமானத்துல பணிப்பெண்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் பேசுறாங்க அறிவிப்பு பண்றாங்க, தமிழ்லையும் பேசினா உதவியா இருக்குமேன்னு ஆதங்கப்படுவதோட இல்லாம தமிழ்லையும் பேசனும்னு பசிந்துரை பண்ணிட்டு வந்திருக்காரு  ..அவரோட அந்த போஸ்ட் இங்க...

கடந்த 2 வருடத்தில், 20 முறைக்கு மேல் விமானத்தில் ,சென்னை -டெல்லி மார்க்கத்தில் ,பயணம் செய்திருப்பேன்...

விமானத்தினுள் , 'அவசரகாலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி தப்பிக்க வேண்டும்' னு முகத்துக்கு பெயிண்ட் அடிச்சியிருக்குற பணிப்பெண் 15 நிமிட விளக்கம் மற்றும் செய்முறை தருவார்.ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில்..ஒரு முறை கூட அந்த அறிவிப்பு தமிழில் தரப்படவில்லை...

சென்னை -டெல்லி மார்க்கத்தில் (எனது கணிப்பின் படி ) 50 % க்கும் மேற்பட்ட பயணிகள் தமிழர்கள்.. பணிப்பெண் பேசும் ஆங்கிலத்தின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை.. பல முறை அவர்களிடம் விளக்கும்படி கேட்பேன்.பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் (தமிழர் தான்) நம்மை ஏளனமாக பார்ப்பார்...

பார்வையற்றவங்க படிக்க இலவச கம்ப்யூட்டர் டிப்ளமோ..

சென்னையைச் சேர்ந்த தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் (Tamilnadu Association of the Blind) சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக கம்ப்யூட்டர் டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படவுள்ளன. 01.10.2013 முதல் 30.09.2014 வரை ஓராண்டுக்கு நடைபெறும். 21 முதல் 40 வயதுக்குட்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசும் திறமையும், புரிந்துகொள்ளும் திறமையும் பெற்றவர்களாக இருக்கவேண்டும். கம்ப்யூட்டர் டிப்ளமோ படிப்புடன், ஹிந்தி மொழியில் பேச்சுப் பயிற்சியும், தகவல் தொடர்பு போன்ற ஸாஃப்ட் ஸ்கில் பயிற்சியும் அளிக்கப்படும். இந்தப் படிப்பில் மொத்தம் 15 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவர். படிப்பு முடிந்தவுடன், மாணவர்களின் திறமைக்கேற்ப வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும்.

பாடலின் வரிகள் - ஹே காற்றில் ஏதோ - வணக்கம் சென்னை (vanakkam Chennai movie Song Lyrics )

படம் : வணக்கம் சென்னை  (vanakkam Chennai movie Song Lyrics )
பாடல் : ஹே காற்றில் ஏதோ 
இசை : அனிருத் 
பாடியவர்கள் : பபோன் ,மரியா 
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் 

ஹே காற்றில் ஏதோ புது  வாசம்
ஹே ..நேற்றில் இல்லா சந்தோஷம்
ஹே ..நெஞ்சில் உள்ள உல்லாசம்
ஹெய்ஹே .. கண்கள் வாங்கி கத பேசும்

நான் காணும் கனவை யாவையும்
தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம்
ஒரு நண்பன் போலே ...
என் தன்னந்தனிமை போனது
என் வாழ்வில்மாற்றம் வந்தது
என் கால்கள் மேலே ...

பாடலின் வரிகள் - பெண்ணே பெண்ணே - வணக்கம் சென்னை (vanakkam Chennai movie Song Lyrics )

படம் : வணக்கம் சென்னை  (vanakkam Chennai  movie Song Lyrics )
பாடல் : பெண்ணே பெண்ணே 
இசை : அனிருத் 
பாடியவர்கள் : அர்ஜுன் 
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் 


I wanna hold you
lie on your shoulder
you're all i see when i dream
you're the air that i breath

girl just close your eyes
put your hand in mine
and let the world fade away
here is just you and me

that's enough into you
spin my world into two
so my heart beats with your beat
singing my melody

under the candle light
our body stands to tight
what the world cannot see
that's what you found in me

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

டவுன்லோட் ரிங்டோன் - Download 'Vanakkam Chennai' movie song Ringtones

அனிருத்தின் இசைல வந்திருக்கும் 'வணக்கம் சென்னை' படத்தோட பாட்டு எனக்கு ரொம்ப  பிடிச்சுருக்கு ... அவரோட முந்தைய படங்களின் சில பாடல்களை சில பாடல்கள் நியாபகப்படுத்தினாலும் ,"ராக்கிங் ஆல்பம்" குடுத்துருக்கார் ..

கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாளுக்கு அந்த பாடல்கள் தான் எல்லோருடைய மொபைல்லயும் ரிங்டோனா இருக்க போகுது..ஸோ ... அந்த படத்துடைய பாடல்களின் சில ரிங்டோன்களை  டவுன்லோட் பண்ண , கீழ இருக்குற லிங்க்-ஐ கிளிக் பண்ணுங்க...


Click here to download 'Vanakkam Chennai' movie song Ringtones

download here!

பாடலின் வரிகள் - ஹே எங்கடி பொறந்த - வணக்கம் சென்னை (vanakkam Chennai movie Song Lyrics )

படம் : வணக்கம் சென்னை  (vanakkam Chennai  movie  Song Lyrics )
பாடல் : ஹே எங்கடி பொறந்த
இசை : அனிருத் 
பாடியவர்கள் : அனிருத் ,ஆண்ட்ரியா 
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன் ஹே எங்கடி பொறந்த எங்கடி வளந்த
எங்கடி எங்கடி
ஹே எப்ப டி  பொறந்த எப்ப டி  வளந்த
எப்ப டி எப்ப டி

ஹே எங்கடி பொறந்த எங்கடி வளந்த
எங்க டி எங்க டி
ஹே எப்ப டி  பொறந்த எப்ப டி  வளந்த
எப்ப டி எப்ப டி

பாடலின் வரிகள் - ஐலசா ஐலசா - வணக்கம் சென்னை (vanakkam Chennai movie Song Lyrics )

படம் : வணக்கம் சென்னை  (vanakkam Chennai  movie  Song Lyrics )
பாடல் : ஐலசா ஐலசா 
இசை : அனிருத் 
பாடியவர்கள் : அனிருத் ,சுசித்ரா 
பாடலாசிரியர் : மதன் கார்க்கி 
ஐலஸா   ஐலே ஐலஸா
ஐலேஸா  ஐலஸா   ஐலேஸா   ஐலஸா

ஐலஸா   ஐலே ஐலஸா
ஐலேஸா  ஐலஸா   ஐலேஸா    ஐலஸா

நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே
நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே
நங்கூரம் பாய்த்தால் நான் என்னாகுவேன்
நியாயம் பார்க்காமல் நீயும் என்னுள்ளே
கூடாரம் போட்டால் நான் என்னாகுவேன்
இன்றா நேற்றா கேட்க்காதே
என்னால் சொல்ல முடியாதே
நேரம் காலம் பார்த்தாலே
அதுவோ காதல் கிடையாதே

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

பாடலின் வரிகள் - சென்னை சிட்டி கேங்க்ஸ்டர் -வணக்கம் சென்னை (vanakkam Chennai movie Song Lyrics )

படம் : வணக்கம் சென்னை  (vanakkam Chennai  movie  Song Lyrics )
பாடல் : சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்  
இசை : அனிருத் 
பாடியவர்கள் : ஹார்ட் கௌர்,ஹிப் ஹாப் தமிழா ,அனிருத் 
பாடலாசிரியர் : ஹிப் ஹாப் தமிழா 


hey yo oh madrasi people
this is hard kaur
all the way from mumbai
listen you hear this peppy song
you better pump up the volume
turn up the volume
better pump up the volume
here we got that gaana swag
mumbai town is very sad
make you rain like super stars
too with models of hip hop
to the banner like punjabi
sound like sona bhaabi
here we show you how to drink
and we show you how to party
you ain't got no goa beach
you ain't got no sharukh khan
you ain't got no India gate
and we shoot questions you are so late
show what you wanna say
saala Hip Hop Tamizha

‘ராகிங்’கா பண்றீங்க ??உங்க கல்லூரில ‘ராகிங்’ பிரச்சினை இருக்கா.நீங்க ராகிங் தடுப்புப் பிரிவுக்கு போன் செய்யலாம்.

மாணவர்கள், பெற்றோர்கள், ஹாஸ்டல் ஊழியர்கள் என்று யார்வேணும்னாலும் இரவோ, பகலோ எப்போ வேணும்னாலும் இந்த பிரிவுக்கு போன் செய்யலாம்.

ஒரு மாணவனிடமோ/மாணவியிடமோ புகார் பெறப்பட்ட பதினைந்தாவது நிமிடத்திலிருந்து, நடவடிக்கை ஆரம்பம் . புகார் தரவங்க தன்னுடைய பெயர் வெளியில் தெரியக்கூடாதுனு விரும்பும் பட்சத்தில், அவரது பெயர் பரம ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.

தொடர்புக்கு - 1800-180-5522

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

பாடலின் வரிகள் - ஒசக்க ஒசக்க - வணக்கம் சென்னை (vanakkam Chennai movie Song Lyrics )

படம் : வணக்கம் சென்னை  (vanakkam Chennai  movie  Song Lyrics )
பாடல் : ஒசக்க ஒசக்க 
இசை : அனிருத் 
பாடியவர்கள் : அனிருத் ,பிரகதி குருபிரசாத் 
பாடலாசிரியர் : மதன் கார்க்கி தேனீ காதில் ...தேனீ காதில் ...தேன்
தெளிச்சாலோ... தெளிச்சாலோ ...

தேனீ காத்தோட தேன தெளிச்சாலே
தேளாக  என் நெஞ்ச கொட்டிப்புட்டா
தேங்கா நாறாக என்ன உறிச்சாலே
உள்ளார என்னனு காட்டிப்புட்டா

எகன மொகன பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெக்கா மேற்க்கா கேக்காம
ரெக்கக் கட்டி பறந்தேனே

பாடலின் வரிகள் - பெண்ணே பெண்ணே - வணக்கம் சென்னை (vanakkam Chennai movie Song Lyrics )

படம் : வணக்கம் சென்னை  (vanakkam Chennai movie Song Lyrics )
பாடல் :ஓஹ் பெண்ணே பெண்ணே 
இசை : அனிருத் 
பாடியவர்கள் : விஷால் டட்லானி 
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் 
உன்கைகள் கோர்த்து உன்னோடு  போக
என் நெஞ்சம் தான்  ஏங்குதே
தினமும் உயிர்வாங்குதே
உன் தோளில் சாய்ந்து  கண்மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ..
ஐயோ தடுமாறுதே ..

உன் கன்னம் மேலே மழை நீரை  போலே
முத்தக்கோலம் போட ஆசை அல்லாடுதே
நீபேசும் பேச்சு நாள் தோரும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

கோயில் கோபுர உண்மைகள்

 “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” னு சொல்றதை கேள்விப்பட்ருக்கேன் .அதுக்குள்ள எவ்வளவு அர்த்தங்கள் இருக்குனு இத படிச்சதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

அப்போலாம்  ஊர்ல கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாதுனு  சொல்வாங்க.கோவில்களையும்  அதோட உயரமான கோபுரங்களையும் அதுக்கு  மேல இருக்கும் கலசங்களையும் பாக்குறோம்.அதுக்கு என்ன காரணம்?இதுக்கு  பின்னாடி எவ்வளவு அறிவியல் விஷயம் ஒளிஞ்சிருக்குன்னு தெரியுமா?


கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களில்  கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

சனி, 3 ஆகஸ்ட், 2013

மொபைல் நம்பர் மறந்துபோச்சா !!!!

உங்கள் மொபைல் நம்பர் மறந்துபோச்சா,உங்கள் மொபைல் நம்பர் ஸ்க்ரீன்ல தெரிய,நீங்க யூஸ் பண்ற நெட்வொர்கை பொருத்து கீழ கொடுக்கப்பட்டு இருக்குற ஃபார்மெட்ல டைப் பண்ணி கால் பட்டன்-ஐ அழுத்துங்க ....


Idea நெட்வொர்க் பயன்படுத்துறவங்க   *1#
Bsnl நெட்வொர்க் பயன்படுத்துறவங்க *888#
Aircel நெட்வொர்க் பயன்படுத்துறவங்க  *131#
Videocon நெட்வொர்க் பயன்படுத்துறவங்க *1#
Airtel நெட்வொர்க் பயன்படுத்துறவங்க *121*9#
Reliance நெட்வொர்க் பயன்படுத்துறவங்க  *1#
Virgin Mobile நெட்வொர்க் பயன்படுத்துறவங்க *1#
Vodafone நெட்வொர்க் பயன்படுத்துறவங்க *131*0#
Tata Dcomo நெட்வொர்க் பயன்படுத்துறவங்க *580#

இந்த வழியை யூஸ் பண்ணி உங்களுக்கு யார் நம்பராவது வேணும்னா அவங்க மொபைல்ல இத ட்ரை பண்ணிட கூடாது ..அது தப்புபுபுபுபுபுபுபுபுபுபு........... 

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

நன்றி - ஒரு வருஷம் ஆகிடுச்சு

ப்ளாக் எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகிடுச்சு(ஆகஸ்ட் 2).இதுவரைக்கும் என் ப்ளாக் பார்த்தவங்க/படிச்சவங்க எண்ணிக்கை 41000-றக்கும் மேல்  ..

என்னை என்கரேஜ் பண்ணின என்னோடநண்பர்களுக்கும் ,எனக்கு கோடிங் சொல்லி குடுத்து எனக்கு அதன் மேல ஆர்வத்தை வரவச்ச என்னோட ஆசிரியர்களுக்கும் ,என் ப்ளாக் போஸ்ட் பார்த்த/படிச்ச, கமெண்ட்ஸ் பண்ணி என்கரேஜ் பண்ணின உங்க எல்லாருக்கும், மற்றும் டிஸ்கரேஜ் பண்ணின சில பேருக்கும் (என்கரேஜ் பண்ணினப்போ என்னை சந்தோஷமா என்னை ஊக்கப்படுதிக்கிட்டேன் ,டிஸ்கரேஜ் பண்ணினப்போ என்ன தப்புனு யோசிச்சு என்னால முடிஞ்சதை சரி பண்ணிகிட்டேன்)., என் ஃபேமிலி  ,என் அத்தை ,அண்ணன்,எனக்குள்ள இருக்குற சின்ன சின்ன திறமைகளையும் ஐடியா-க்களையும் வெளில கொண்டுவர அதிக ஊக்கப்படுத்தின,சின்ன சின்ன ஐடியா-க்களை கொடுத்த என் அண்ணிக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவிச்சுக்கிறேன்  ..

இந்த ஒரு வருடத்துல எனக்கு பிடிச்ச சில போஸ்ட்களை உங்க கூட ஷேர் பண்ணிக்குறேன்

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

தில்லி எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் செவிலியர் பணி!


புதுதில்லியில் செயல்பட்டு வரும் அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை (AIIMS)-ல் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sister Grade-II

மொத்த காலியிடங்கள்: 1004

சம்பளம்: ரூ.9,300 - 34,800 + ரூ.4,600

வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் General Nursing மற்றும் Midwifery பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு தகுதியுடைய ஆண்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: புதுதில்லியில் வைத்து நடைபெறும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு ரூ.100. இதனை ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ள செல்லானை பயன்படுத்தி ஏதாவதொரு பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்தலாம். டெபிட் கார்டு அல்லது கிரிடிட் கார்டு பயன்படுத்தியும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.08.2013

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 25.08.2013

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.08.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsexams.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

சிதம்பர ரகசியம்....அப்படீனா !!!!

FB-ல வலம் வந்தப்போ தமிழ்நாட்டை பத்தி ஒரு பக்கத்தை படிக்குற வாய்ப்பு கிடைச்சது.அதுல சிதம்பர ரகசியம் பத்தி குறிப்பிட்டு இருந்தாங்க.நான் 'சிதம்பர ரகசியம்'னு கேள்விப்பட்டு இருக்கேன் .ஆனா அது என்னனு எனக்கு தெரியாது.இதை படிச்சப்போ அதற்கான விளக்கமும் கிடைச்சது , ஆச்சர்யமாவும் இருந்தது.அத உங்க கூட ஷேர் பண்றேன்..


சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விஷயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.