பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam
சமையல்/அறுசுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல்/அறுசுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 மே, 2020

செம்ம tasty வாழைப்பூ வடை !

என் அம்மாவுடைய சமையல்ல எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு சாப்பிடற ஐட்டம் இந்த வாழைப்பூ வடை . இது அவ்ளோ ஒரு tasty அவ்ளோ ஒரு healthy .

இதை கண்டிப்பா நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.உங்களுக்கும் இது ரொம்பவே பிடிக்கும்.

இது எப்படி செய்யணும்னு என்னுடைய விடியோல நான் சொல்லிருக்கேன்.கீழ இருக்குற விடியோ லிங்க்  கிளிக் பண்ணி தெரிஞ்சுக்கோங்க.

இந்த விடியோவை பாக்க

            ↓

https://www.youtube.com/watch?v=8wcnIRHH2FU





Subscribe :


செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

2. Fried இட்லி



என்ன என்ன பொருட்கள் தேவை?

1. இட்லி
2. கடுகு
3. சீரகம்
4. உப்பு
5. கருவேப்பிலை
6. சாம்பார் பொடி
7. மிளகாய்ப்பொடி

எப்படி செய்யணும் ?

இட்லியை சின்ன சின்ன துண்டுகளா வெட்டி வச்சுக்கணும்..வாணல்ல எண்ணெய் ஊத்தி எண்ணை காஞ்சதும் கடுகு , சீரகம்,  கருவேப்பிலை  போட்டு தாளிக்கணும்.அடுத்து அதுல வெட்டி வச்ச இட்லியை போட்டு fry பண்ணனும்.அடுத்து அதுல தேவையான அளவு உப்பு , கொஞ்சம் சாம்பார் பொடி  , கொஞ்சம் மிளகாய் பொடி போட்டு நல்லா mix பண்ணனும்.இத அப்டியே  2 நிமிஷம்  வேகவைச்சு எடுத்து சூடா பரிமாறனும்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

1. பச்சை பட்டாணி தேங்காய் மசாலா




என்ன என்ன பொருள் வேணும் ?

1. எண்ணெய்
2. கடுகு
3. உளுந்து
4. இஞ்சி பூண்டு விழுது / இஞ்சி பூண்டு நசுக்கியது
5. தேங்காய்
6. பச்சை மிளகாய்
7. உப்பு

எப்படி செய்றது ?

பச்சை பட்டாணியை 3 மணிநேரம் நல்லா ஊறவச்சு , உப்பு சேர்த்து குக்கர்ல 3 அ 4 விசில் விட்டு வேகவைச்சு எடுத்துக்கணும்.

தேங்காய்,பச்சை மிளகாயை மிக்ஸியில போட்டு நல்லா விழுதாக்கிக்கணும்.

வாணல்ல கொஞ்சம் என்னை ஊத்தி ,எண்ணெய் காஞ்சதும் கடுகு ,உளுந்து போட்டு தாளிக்கணும்.அடுத்து அதுல இஞ்சி பூண்டு விழுது/நசுக்கியது போட்டு வதக்கனும்.  அரைச்ச தேங்காய்,பச்சை மிளகாய் விழுதை அதுல சேத்து நல்லா பச்சை வாசனை போகுறவரைக்கும் வதக்கனும்.
அடுத்து அதுல வேகவச்ச பச்சை பட்டாணியை சேத்து அந்த மசாலாக்கள் பட்டாணியில் நல்லா ஒண்ணா கலக்கவைக்கணும். ..கடைசியா கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை தூவி சூடா பரிமாறுங்க  ..

சத்தான ருசியான ரொம்ப சீக்கிரம் செய்யக்கூடிய ஒரு ரெசிபி மட்டும் இல்ல இது உங்களுக்கு பாராட்டையும் வாங்கித்தர ஒரு  ரெசிபி.