பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 31 டிசம்பர், 2012

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

இந்த வருஷம் எல்லாரும் எல்லாவிதத்துலயும் சந்தோஷமா ,நிம்மதியா இருக்கணும்னு ஆசைப்படுறேன்.அதுதான் எல்லோருடைய ஆசையாவும்
இருக்கும்னு நம்புறேன்.பிரச்சனைகள் இல்லைனா வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்காது அதனால ,பிரச்சனைகளை எப்படி எடுத்துக்குறது ,சமாளிக்குறது ,அதுல இருந்து எப்படி மீண்டுவரதுன்னு பாத்து தன்னம்பிக்கையை அதிகமா வளத்துக்குவோம்.சந்தோஷமா இருப்போம் .மத்தவங்களுக்கு நம்மளால முடிஞ்ச உதவிகளை செய்வோம்.
பிறக்கும் போது பேரோட பிறக்கறது இல்ல.

ஆனா இறக்கும் போது நாம பேரோட இறக்குறோம்.
அந்த பேர் வெறும் பேறாமட்டும் இருக்ககூடாது
அது ஒரு வரலாரா இருக்கணும்.

--சத்தியமா இது நான் சொல்லல திரு.எ.ஆர் ரஹ்மான் அவர்கள் சொன்னதா  ஒருதரம் படிச்சேன் .எனக்கும் ரொம்ப பிடிச்சது இந்த வரிகள்.அத உங்க கூட ஷேர் பண்ணிக்குறேன்.அவ்ளோதான்.

திங்கள், 24 டிசம்பர், 2012

புதன், 19 டிசம்பர், 2012

நவதிருப்பதி - தலம் 3

திருப்புளியங்குடி (புதன்) :

திருவனகுனமங்கையில் இருந்து அதே பக்கம் கிழக்கு திசையில் அரை கிலோ மீட்டரில் இருக்கு இந்த கோவில்.பஸ் வசதி இருக்கு.

தல வரலாறு :

ஒரு சமயம் திருமால் லக்ஷ்மி தேவியோட இந்த நதி கரையில தனியா இருந்த பொழுது பூமாதேவிக்கு தன்னை ஒதுக்குறாங்களோனு கோவம் வந்து பாதாளலோகம் போக உடனே பூமி இருட்டிபோச்சாம் ,வரண்டுபோச்சாம் .இதபாத்து தேவர்கள் எல்லாரும் திருமாலை வேண்ட அவரும் லக்ஷ்மி தேவியோட பாதளலோகம் போய் ரெண்டுபேரும் சமம் தான்னு ச்வொல்லி சமாதானம் பண்ணி பூமிய காப்பாதினாராம் .பூமி தேவியை சமாதானம் பண்ணி போமிய காபாதினதால 'பூமிபாலகர்' அப்படிங்குற பேரும் வந்துச்சாம் . 
 
இமயமலையில மானுருவத்துல ரிஷியும்,ரிஷிபத்தினியும் தனியா இருக்கும் போது அங்க வந்த இந்திரன் மானுருவத்துல இருந்த ரிஷியை தனது வஜ்ராயுதத்தால அடிச்சு வீழ்த்தி பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானாராம்.வியல பகவானோட யோசனைப்படி இந்திரன் வந்து பூமி பாலனை வேண்டி இந்த தீர்த்தத்துல குளிக்க தோஷம் போயிடுச்சாம்.
இங்க பெருமாள் ஆதிசேஷன் மேல 12 அடில பள்ளி கொண்டுள்ளார்.சயனப் பெருமாளின் திருப்பாதத்தை மூலஸ்தனத்தை சுற்றி வரும்போது இருக்குற ஜன்னல் வழியா பாக்கலாம்.பெருமாள் நாபியில் இருந்து ஒரு தாமரைக்கொடி சுவருல பிரம்மன் உக்காந்திருக்குற தாமரையோட சேருது.இவருக்கு எண்ணை காப்பு செய்ய 250 லிட்டர் எண்ணை தேவைப்படுமாம்.லக்ஷ்மி தேவி பூமா தேவி ரெண்டுபேரும் பெரிய உருவங்களா பெருமாளோட திருப்பாதத்து பக்கத்துல உக்காந்து இருக்காங்க.இங்க குழந்தை இல்லாதவங்க வந்து வேண்டினா குழந்த போர்க்கும்னு சொல்றாங்க.

மூலவர்- காய்சினவேந்தன் ,புஜங்கசயனம் .கிழக்கு பார்த்த திருமுக மண்டல்.உற்சவர் - எம் இடர்களைவான் ,தாயார்- மலர்மகள்,திருமகள் .புளியங்குடிவல்லி என்ற உச்த்தவ தாயாரும் உண்டு.தீர்த்தம்-வருணநீருதி தீர்த்தம்,விமானம்-வதசார விமானம்,பிரத்யட்சம் - வர்ணம் நீருதி,தர்மராஜன்.ஆகமம் - வைகநாசம்,சம்பிரதாயம்-தென்கலை

புதன், 12 டிசம்பர், 2012

இதுலாம் வேண்டாமே .................


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரின் பிறந்தநாள் இன்னைக்கு.ரஜினி சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கோடி கணக்கான ரசிகர்கள் ஒரு திருவிழா மாதிரி இவரது பிறந்தநாளை கொண்டாடுறாங்க.
நமக்காக உயிரையே விட தயாரா இருக்குற ஒருத்தங்க இருந்தாலே அது பெரிய விஷயம்.ஆனா ரஜினி சாருக்கு ஆயிரம்,லட்சம்,கோடி கணக்கான பேர்
இருக்காங்க அப்படி.இந்த மதிப்பும், மரியாதையும்,அன்பும் எல்லாருக்கும் கிடச்சுடாது.

ரஜினி சார் ஒரு பெரிய நடிகர் அப்படிங்குற அந்தஸ்தை விட அவர் ஒரு அருமையான மனிதர்.அதனாலையே அவரை பலருக்கும் பிடிக்கும்.எனக்கும் தான்.நானும் ரஜினி சாரின் 'டை ஹார்ட் பான்' தான்.நான் மட்டும் இல்ல என் அண்ணன் என் மாமா எல்லாரும் தான்.என் அண்ணன் என் மாமா எல்லாம் ரஜினி சாரின் படத்தை முதல்நாள் முதல் ஷோ- வே பாக்கணும்னு பாக்குறவங்க தான்.நானும் விசில் அடிச்சு கைத்தட்டி ரசிக்குற ஆள் தான்.

ஆனா இந்த பால் அபிஷேகம்,அலகு குத்துறது ,வேல் குத்துறது ,தேர் இழுக்குறது இதுலாம் தேவையா?.. என்ன கொடும சார் இது?!!!!கொஞ்சம் யோசிச்சு பாப்போமே நம்மல்ல எத்தன பேர் நம்ம அம்மா, அப்பா, கூடபிறந்தவங்க பிறந்த நாளை ரொம்ப பிரமாதமா கொண்டாடுறோம்?முதல்ல எத்தன பேருக்கு தன் அம்மா அப்பா பிறந்தநாள் தெரியும்?!!!! இல்ல நியாபகம் இருக்கும்?

அவரே நிச்சயம் இதை எல்லாம் விரும்பமாட்டாறு அதுதான் உண்மை.நாம ஒருதங்கமேல வச்சுருக்குற அன்பை இப்படி எல்லாம் காட்டணுமா?

எத்தனைபேர் தன குடும்பத்துக்காக இப்படி செஞ்சு இருப்பாங்க?தன் குடும்பத்துக்காக இப்படி செலவு செஞ்சு இருப்பாங்க.

அட..கேக் வெட்றோம் ,நம்ம அன்பை காட்ட சில நல்ல விஷயங்களை செய்றோம் சரி, எதுக்குங்க நம்மள வருத்திக்கணும்?அத பாக்குற நம்ம குடும்பம் கஷ்டப்படுங்குறதை நினச்சு பாக்குறோமா?

அட ..இப்படி செய்யறதுனால அவர் மட்டும் இத பாத்து சந்தோஷமா இருப்பாரா?அன்ப காட்டுறோம்குற பேர்ல அவர் பிறந்தநாலுள அவரை கஷ்டம் தான் படுத்துறோம்.

மாறுவோம் இனியாவது.அன்பை காட்ட இப்படி முட்டாள் தனமான வேலைகளை செய்யாம இருப்போம்.இதை தான் அவரும் நிச்சயம் விரும்புவார்.

செவ்வாய், 11 டிசம்பர், 2012

நவதிருப்பதி - தலம் 2


திருவரகுணமங்கை (நத்தம்) (சந்திரன்):

ஸ்ரீ வைகுண்டதுல இருந்து 3 கிலோமீட்டர் தூரத்துல கிழக்கு வந்தால் இந்த கோவிலுக்கு வரலாம். கிராமம் தான். பஸ் வசதி இருக்கு.

தல வரலாறு :

ஒரு காலத்துல ரேவா நதிக்கரையில புண்ணிய கோஷம் என்னும் அக்கிரகாரத்துல வேதகி அபடிங்குறவர் மாதா,பிதா ,குருவுக்கு செய்யவேண்டியதுலாம் செஞ்சு முடிச்சுட்டு திருமால நோக்கி ஆஸனதை அப்படிங்குற மந்திரத்த சொல்லி தவம் இருக்கலாம்னு நினைச்சப்போ அவர்கிட்ட திருமால் கீழ் பிராமண வேஷத்துல வந்து ஆஸனதை

மந்திரத சொல்ல வரகுணமங்கை தான் சிறந்ததுன்னு சொல்ல ,வதவி இங்க வந்து கடுமையா தவம் பண்ணி திருமாலோட அருளை பெற்று பரமபதம்
அடஞ்சாராம் .

ஆஸனதை மந்திரம் சொல்லி இறைவன் காட்சிதந்த இடம்கறதால 'விஜயசானார்' என்னும் திருநாமம் திருமாலுக்கு உண்டானதாம் .பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமேசமகரிஷிக்கும் சத்தியத்தால் கணவனின் உயிரை மீட்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியான சாவித்திரிக்கும் அதர்மத்தையும் அக்கிரமத்தையும் சுட்டு பொசுக்கும் அக்கினி தேவனுக்கும் காட்சியளித்த காட்சியளித்த இடம் ,இந்த மூணு பேருக்கும் ஜெயம் அளிப்பவனாக சத்திய நாராயணனாக ஆதி சேடன் குடைபிடிக்க சத்தி ஜெயவிஜயங்களை தன ஆசனமாக கொண்டு 'விஜயாசனர்' என்னும் திரு நாமத்தோட திருமால் உக்காந்து இருக்குற கோலத்துல பரமபத சேவை தந்தருளும் கோவில் இது.இந்த கோவில்ல உயிர் பிரிஞ்சா மோட்சம் கிட்டும்னு ரோமேச முனிவர் சொல்லி இருக்காராம்.
மூலவர் - விஜயாசனபெருமாள் ,ஆதிஷேசன் குடைபிடிக்க வீற்றிருந்த கோலம் ,கிழக்கு பார்த்த திருமுக மண்டலம் ,தாயார் - வரகுணவல்லி தாயார் ,வரகுணமங்கை தாயார் .தீர்த்தம் - அக்னி ,சம்பிரதாய் - தென்கலை

வெள்ளி, 7 டிசம்பர், 2012

நவதிருப்பதி - தலம் 1மஹா விஷ்ணுவின் 108 திவ்விய தேசத்துல பரமபதம் திருபாற்க்கடல் தவிர 106 தலங்கள் இந்தியாவுல இருக்கு.அதாவது சோழநாட்ல 40,தொண்டை நாட்ல 22
,பாண்டிய நாட்ல 18,மலை நாட்ல 13,வாட நாட்ல 11,நடுநாடு 2 இப்படி அமைஞ்சிருக்கு .இதுல பாண்டிய நாட்ல இருக்குற 2 திருப்பதிகளில் தாமிரபரணி நதியோட ரெண்டுபக்கமும் இருக்குற 9 திருத்தலங்கள தான் நவதிருப்பதினு சொல்றோமாம் .

1) திருவைகுண்டம் 2) திருவரகுணமங்கை(நத்தம்) 3)திருப்புளியங்குடி
4)இரட்டை திருப்பதி 5)பெருங்குளம் 6)தென்திருப்பேரை
7)திருக்கோளூர் 8)ஆழ்வார் திருநகரி

முதல்ல திருவைகுண்டம் (சூரியன்) பத்தி தெரிஞ்சுக்குவோம் ...

இந்த கோவில் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில திருநெல்வேலியிலிருந்து 28 கிலோமீட்டர் தூரத்துல இருக்கு.

கோவில் வரலாறு :

ஒரு சமயம் இந்த பூமியில பெரிய பிரளயம் வந்து எங்கபாத்தாலும் தண்ணீர்னுஇருந்த காலத்துல பிரம்மதேவன் வச்சிருந்த (சிருஷ்டி ரகசிய கிரந்தம் ) படைப்பு தொழில் சம்மந்தமான ரகசிய ஏட்டை சோமுகாசுரன் அப்படிங்குற அரக்கன் ஒளிச்சி வச்சுகிட்டானாம் .

என்ன பண்றதுன்னு தெரியாம பிரம்மா அத அவன்கிட்ட இருந்து மீட்டு குடுக்கசொல்லி விஷ்ணுவை வேண்டி தவம் பண்ண முடிவு பண்ணி ,தன்னோட கைல இருந்த தண்டத்தை பெண்ணாக்கி எங்க தவம் செய்யலாம் தெரிஞ்சுகிட்ட வர சொன்னாராம்.அந்த பெண்ணும் தாமிரபரணி ஆற்றங்கரைல சோலைகள் நிறைஞ்ச ஒரு இடத்தை தேர்வு செஞ்சு
சொல்ல பிரம்மாவும் அங்க வந்து ரொம்ப கடுமையா தவம் செஞ்சாராம்.

அவரோட தவத்தை பாத்த பெருமாளும் பெருமாலும் அங்க வந்து பிரமதேவனை வாழ்த்தி அவர் இழந்த ஏடை மீட்டு கொடுத்தாராம்.பிரம்மா திருமால் கிட்ட தனக்கு காசி குடுத்து நின்ன அதே திருக்கோலத்துலயே
இங்க வைகுண்ட நாதனா காட்சி தரணும்னு வேண்ட அவரும் சம்மதிச்சாராம் ...

கால தூஷகன் அப்படிங்குற ஒரு திருடன் எப்பவும் இந்த திருமாலை கும்பிட்டுட்டு திருட போவானாம் .அவன் திருடினதுல பாதிய பெருமாலுக்கு காநிக்கையாவும் குடுப்பானாம்.ஒருதரம் இவனோட கூட்டம் அரண்மனைல திருடும்போது மாட்டிக்கிட்டாங்கலாம் .அப்போ இவன் வைகுண்ட நாதர்கிட்ட சரணடைஞ்சு தன்ன காப்பாத்த சொல்லி கேக்க பெருமாளே கால தூஷகன் வேஷத்துல வர அத அரசன் பாத்தப்போ பெருமாள் தன்னோட சுயரூபத்த காட்டினாராம்.

அப்போ அந்த அரசன் தன கிட்ட கொள்ளை அடிச்ச காரணத்த கேக்க 'தர்மம் காக்காத உன்ன தர்மத்துல ஈடுபட செய்றதுக்காகதான்' தான் வந்ததா சொன்னாராம்.அதனால அரசன் தனக்கு கிடச்ச பாக்கியம் மக்களுக்கும் கிடைக்கணும்னு நினச்சு உட்சவ மூர்த்திய கள்ளபிரான் அப்படினு சொல்லி கும்பிட்டாறாம்.

இந்த கோவில் கொஞ்ச காலத்துக்கு முன்னாடி பூமியில புதஞ்சுபோச்சாம் .அப்பறம் மணப்படை வீட்டை தலைநகரமாக கொண்டு ஆண்ட பாண்டிய மன்னனோட பசுக்களை அத மேய்ப்பவர் இங்க ஓட்டி வந்து மேக்குறதை
வழக்கமா வச்சுருந்தாராம் .அப்போ ஒரு பசு மட்டும் தனியா பெருமாள் புதஞ்சி இருந்த இடத்துல பால் சொறிவதை வழக்கமா வச்சுருந்துசாம் .இத மாடு மேக்குரவனம் பாத்துட்டு மன்னன் கிட்ட சொல்ல மன்னன் பரிவாரத்தோட அங்க வந்து மணலை சுத்தம் செய்ய அங்க வைகுண்ட பெருமாள் சன்னதிய பாது ரொம்ப சந்தோஷப்பட்டு இப்போ இருக்குற இந்த கொவில கட்டினாராம்.

இந்த கோவில்ல பெருமாளை சூரிய ஓளி வருஷத்துக்கு ரெண்டு தடவ சித்திரை 6 ,ஐப்பசி 6 நாள்ல சூரியன் பெருமாளோட பாதத்தை தரிசிச்சு போவாராம்.
இதுக்காக கொடிமரம் தெற்கு நோக்கி கொஞ்சம் தள்ளி தான் வச்சுருக்காங்களாம்.

வீரப்பன் காலத்துல கோடி மரமும் ,சந்தான சபாபதி காலத்துல மண்டபமும் கட்டினாங்களாம் .இங்க இருக்குற உற்சவரை உருவாக்கிய சிற்பி இவரோட அழகுல மயங்கி கன்னத்துல கிள்ள சிற்பியோட ஆத்மார்த்தமான அன்போட அடையாளத்தை கன்னத்துல வடுவா ஏத்துகிட்டாராம் .இப்பவும் இந்த வடுவை உற்சவர்கிட்ட பாக்கலாமாம்.

மூலவர் - வைகுந்தநாதன் - நின்ற திருக்கோலம் .கிழக்கு பார்த்த திருமுக மண்டலம்(மூலவர் கூட தாயார் கிடையாது).உற்சவர் - கள்ளபிரான் ,தாயார் - வைகுண்டவல்லி ,பூதேவி (தனி சன்னதி) தீர்த்தம் - பிருகு தீர்த்தம் ,தாமிரபரணி நதி,விமானம் -சந்திரவிமானம் .

திங்கள், 3 டிசம்பர், 2012

திருச்செந்தூர்

சமீபத்துல திருச்செந்தூர் கோவிலுக்கு போனோம் .எவ்ளளவு அழகா கடலுக்கு பக்கத்துல அம்சமா அமைஞ்சி இருக்கு கோவில்.இந்த கோவில் சென்னைல இருந்து 600 கி.மீ தூரத்துல இருக்கு.கிட்டத்தட்ட 10 மணிநேரம் பஸ்ல போனோம்னா . 2000 வருஷம் பழமையான கோவில்னு சொல்றாங்க.

 
திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கு .

திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது.இக்கோயில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்” அப்படினு முன்னாடி சொன்னங்கலாம் .

இந்த கோவிலோட வரலாறு என்னனு பாத்தோம்னா தேவர்கள் ,அவங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கசொல்லி சிவபெருமான்கிட்ட முறையிட்டாங்கலாம் . அவங்க வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினாராம் . அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினாறாம் . பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தாராம் இந்த நேரத்துல முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்திருக்கார் . அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினாறாம் . அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டாறாம் . அப்போ தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினாராம் . அவன் கேக்கலை. அப்பறம் , முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தாறாம் . வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டாறாம் . அதன்படியே முருகனும் இங்கே தங்கினாறாம். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினாறாம். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றாறாம். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' -னு மாறி இருக்கு . தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மாறி இருக்கு .முருகனுக்குரிய ஆறுபடைவீடுகல்ல திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், மத்த ஐந்தும் மலைக்கோயிலா அமைஞ்சிருக்கு .130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைஞ்சிருக்கு .முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தாறாம் . இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கு . இவருக்கு முதல் தீபாராதனை காட்டினத்துக்கு அப்பறம் தான் , முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கு . இந்த ரெண்டு லிங்கங்களும் இருட்டுல இருக்கறதுனால , தீபாராதனை ஒளியில் மட்டுமே பாக்க முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலதுபக்கதுல "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கு . இவங்கள மார்கழி மாசத்துல தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கு . முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாலதான் கந்த சஷ்டியாக கொண்டாடுறோம் . இது திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. அதனாலதான் , கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.24-12-2004-ல சுனாமி வந்தபோ எல்லா இடத்துலயும் கடல் தண்ணி முன்னாடி வந்ததுனா திருச்செந்தூர்ல மட்டும் கடல் தண்ணி உள்வாங்கிசாம் .அதாவது பின்னாடியே போச்சாம்.அதிசயமா இருக்கு இல்ல .

கண்டிப்பாக இதற்க்கு அறிவியல் ரீதியான காரணம் இருக்கும் அது என்ன என்று தேடி பிடித்து அடுத்த போஸ்ட்ல பாக்கலாம் .

திருசெந்தூரில் நவதிருப்பதி இருக்குறதா கேள்விப்பட்டு ஒன்பது கோவிலுக்கும் போயிட்டு வந்தோம்.அது என்ன என்ன கோவில் என்ன விசேஷம் அங்கனும் அடுத்த போஸ்ட்லசொல்றேன்

தவிப்பு

காத்திருந்து கதிகலங்கி
நின்ற ஓர் இரவில்
தெரிந்தது ...
உன்மீது நான் கொண்ட
அன்பின் எல்லை கோடு !!!!
திரும்பும் உறுதியின்றி
இனி எப்போதும் பிரியாதே !!
உனை சேரும் வரை
இது உயிரில்லா கூடு !!!!!                   -----------என் அண்ணி எழுதியது
உன்னை எத்தனைமுறை
பிரிந்தாலும்
அலுப்பதே இல்லை !
மீண்டும் மீண்டும்
பிரிவதற்கு நீ
அருகிலேயே இருக்கும் வரை !!


                         ------------என் அண்ணி எழுதியது

இன்பம்

கிழக்கு கடற்கரைச் சாலை பயணம்
கிழமைகலற்ற விடுமுறை காலம்
கையில் அழகிய காதல் புதினம்
கண் படும் தூரம் உந்தன் பூமுகம் ...


                                -------என் அண்ணி எழுதியது

 

கால்தடம்

காலையில் போட்ட
கோலத்தை விட
அழகுதான் ..............
சாலையில்
என்னவன் கால்தடம் !!!!!!


                -------என் அண்ணி எழுதியது

நினைவுகள்

நீ விட்டு சென்ற
நினைவு சின்னங்கள்
ஏனோ நம் உறவை விட
பிரிவைத் தான்
அதிகமாய் நினைவு படுத்துகின்றன .........                            ------------என் அண்ணி எழுதியது
(எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை கூட)