பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

ஆன்மீக கேள்வி பதில்

வாமனன் என்பதன் பொருள்    -    அழகானவன் 

திருவிக்ரமர் தன திருவடிகளால் அளந்த இரு அடிகள்    -  பூலோகம் , மேல் லோகம் 

திருமாலின் மூன்றாம் அடியாள் நிகழ்ந்தது என்ன  -  மகாபலி பாதாளம் அனுப்பப்பட்டான் .

உத்தமன் என்று வாமன மூர்த்தியை போற்றுபவள்    -  ஆண்டாள் 

வாமனர் அவதரித்த தினம்   -  திருவோண நட்சத்திரம்,துவாதசி திதி

வாமனமூர்தியின் தனிச்சிறப்பு   -  மகாபலியை கொள்ளாமல் நற்கதி அளித்தார் 

வாமனரை தமிழில் எப்படி அழைப்பர்   -  குறளன் 

மகாபலி அஸ்வமேத யாகம் நடத்திய இடம்   -  நர்மதா நதிக்கரை

மகாபலி ஆண்டநாடு   -  மலைநாடு 

கேரளாவின் புகழ்பெற்ற நடனம்   -  கதகளி 

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

ஆன்மீக கேள்வி பதில்

முருகனை வணங்க நாலாயிரம் கண்வேண்டும் எனப்பாடியவர்  - அருணகிரிநாதர் 

பூலோக திருப்பதிகள் எத்தனை - 106

சிவனுக்குரிய சாத்திர நூல்களைப் பாடியவர்கள்  - சந்தானக் குரவர்கள்

கமலாலயம் என்னும் தெப்பக்குளம் உள்ள தலம் - திருவாரூர் 

வால்மீகிக்கு ராமனின் வரலாற்றை கூறியவர் - நாரதர் 

மாய மானாக வந்த மாரீசனின் தாய் - தாடகை 

கும்பகோணத்தை தமிழில் எப்படி குறிப்பிடுவர் - குடந்தை , குடமூக்கு

ஆடும்,யானையும் சிவனை வழிபட்ட தலம் - திருவாடானை

விஷ்ணுவுக்குரிய துவாதச (12 எழுத்து) மந்திரம் - ஓம் நமோ பகவதே வாசுதேவாய 

குமாரசம்பவம் என்னும் காவியத்தை எழுதியவர்  - காளிதாசர் 

வியாழன், 8 மே, 2014

ஆன்மீக கேள்வி பதில்

கிளிமூக்கு கொண்ட சுகபிரம்ம முனிவரின் தந்தை    -  வியாசர் 

ஆதிசங்கரர் ஸ்தாபித்த கிருஷ்ணர் கோவில்  -  கேரளாவிலுள்ள காலடி 

தினமும் முருகனை அரைநிமிடம் தியானிக்க சொல்பவர்  -  அருணகிரிநாதர் 

திருப்பதி மலையில் உள்ள படிகளின் எண்ணிக்கை   -  400

சிவனுடன் நடனமாடி அம்பிகை தோற்ற தலம்  -   திருவாலங்காடு 

யோகாசன கோலத்தில் காட்சிதரும் அம்பிகை  -  திருவாரூர் கமலாம்பாள் 

ராமபக்தரான தியாகராஜர் பூஜித்த விக்ரஹம்  -  ராம பஞ்சாயதன்

சப்தாஸ்வன் என்று சொல்வதன் பொருள்  -  ஏழு குதிரை பூட்டி தேர் கொண்டவன் (சூரியன்)

அடித்த கையை பிடித்த பெருமாள் - நரசிம்மர் 

கிருதயுகத்தில் தர்மதேவதையின் ஆட்சி நடந்தது 

திங்கள், 14 ஏப்ரல், 2014

அர்ச்சனைத் தட்டு

கோவில்ல அர்ச்சனை பண்ணும் போது  தேங்காய் ,வாழைப்பழம் ,வெற்றிலைப்பாக்கு கொடுத்து அர்ச்சனை பண்றதோட நோக்கம் என்ன தெரியுமா?


தேங்காயோட  மேல இருக்குற மட்டை ,நார் உறிச்சி தேங்காயோட ஓட்டை உடைக்கிறோம் .உள்ள இனிப்பான தேங்காய் இருக்குது இல்லையா , அது மாதிரி மனிதன் தனக்குள்ள இருக்குற ஆணவம் ,கன்மம் அதாவது முற்பிறவி பாவம்  மற்றும் மாயை அதாவது இந்த பிறவியில செய்யுற தவறுகள் இந்த மூன்றையும் நீக்கினால் இனிய இறைவனை பாக்கலாம்னு சொல்றதோட அர்த்தம் தான் அது.

வாழைப்பழத்தை ஏன் அர்ச்சனைக்கு கொடுக்குறோம்னா அல்லது நாம வீட்ல சாமிகும்பிடும்போது வாழைப்பழத்தை வச்சு படைக்கிறோம்னா  ...வாழைமரத்தை சுத்தி பல வாழைக்கன்றுகள் வந்துகிட்டே இருக்கும் .இததான் வாழையடி வாழைனு (வாழையடி வாழையாய் வாழனும்) சொல்றாங்க.அதுபோல நம் வம்சம் விருத்தியடையவும் முதிர்ந்த வயசுல நிம்மதியா இறைவனின் திருவடி சென்று சேரவும் வாழைப்பழத்தை வச்சு படைக்கிறோம்.

வெற்றிலைப்பாக்கு- லட்சுமி கடாட்சியதுக்காக வெற்றிலைப்பாக்கு எனும் தாம்பூல நைவேத்தியம் செய்யப்படுது.


திங்கள், 24 மார்ச், 2014

ஆன்மீக கேள்வி பதில்

சத்தி பீடங்கள் மொத்தம் எத்தனை - 51

சத்தி பீடங்களில் மந்த்ரிணி பீடமாகத் திகழ்வது  - மதுரை

காமாட்சியை ஏலவார் குழலி என்று குறிப்பிடுபவர்  - சுந்தரர் 

சத்தி பீடமான சியாமளா பீடம் தற்போது சிம்லா பீடமாக மாறிவிட்டது

மகிஷினை வதம் செய்த அம்பிகையை போற்றும் துதி - மகிஷாசுற மர்தினி ஸ்தோத்திரம்

வள்ளலாருக்கு அண்ணியாக வந்து உணவிட்டவள்  - திருவொற்றியூர் வடிவுடைநாயகி

காளிதாசருக்கு கவிபாட அருபுரிந்த அம்பிகை  - உஜ்ஜயனி காளி 

அர்ச்சகர் அம்பாளாக வேடமணிந்து சிவபூஜை செய்யும் தலம்  - திருவானைக்காவல்

மகாசத்தி பீடமாக போற்றப்படும் தலம்  - கொடுங்களூர் பகவதி கோவில்

சங்கரர் அம்பிகை மீது பாடிய புகழ் பெற்ற நூல்  - சவுந்தர்ய லஹரி


வெள்ளி, 21 மார்ச், 2014

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள்


தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களும் அந்த கோவிலுக்கு செல்வதற்க்கு தேவையான குறிப்புகளையும் ஆன்மீக மலரில் படித்தேன்..அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கில் இங்கு பகிர்கிறேன்..


தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள்