பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

நியூயார்க்கிலும் அஞ்சப்பர் ....

அஞ்சப்பர் ஹோட்டல் இப்போ நியூயார்க்கிலும் கிளையை தொடங்கி இருக்காங்களாம்.
நியூயார்க்குல இருக்குற இந்த அஞ்சப்பர் ஹோட்டல்ல அந்த மேஜை மேல விரிசிருக்குற வெள்ளை துணி,கண்ணை உறுத்தாத தொங்கும் சாரா விளக்கு,சித்திர வேலைப்பாடோட தட்டுன்னு ,சிகப்பு பின்னணில ஹோட்டலோட உள்அலங்காரம் பாக்குறதுக்கே அவ்வளவு அழகா இருக்காம்.

வெஜிடபிள் குருமா,கத்திரிக்காய் குழம்பு,பூண்டு குழம்பு,குழிப்பணியாரம்,சமோசா,கோழி,நண்டு,ஆட்டு எலும்பு சூப்,சிக்கன் லாலி பாப்,இறால் 65,மிளகு சிக்கன்,இறால் பக்கோடா,தந்தூரி சிக்கன் .சிக்கன் டிக்கானு ஏகப்பட்ட ஐட்டம் கிடைக்குதாம்.

                    நியூயார்க்-ல இருக்குற நண்பர்களே என்ஜாஜாஜாஜாஜாஜாஜாஜாஜாய்....................

சமீபத்தில் படித்ததில் பிடித்தது

வியாழன், 21 பிப்ரவரி, 2013

பறை இசை கற்றுக்கொடுக்கும் ‘புத்தர் கலைக்குழு’
விருப்பமுள்ள அனைவருக்கும்  பறையிசைப் பத்தாண்டுகளாக கத்துக்குடுத்துகிட்டு வராங்களாம் இந்த குழு .

இவங்க என்ன சொல்றாங்கனா ..
 தமிழருடைய ஆதி கலை வடிவம். எப்படியோ சாவுக்கு மட்டுமே வாசிக்க கூடிய ஒன்றாக, அமங்கலமான விஷயங்களுக்கென இது மாறிடுச்சு. அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும்தான் வாசிக்கணும் அப்படீங்குற நிர்பந்திக்கப்பட்ட ஒன்றாக மாத்தப்பட்டுடுச்சு . ஆனால், இது நம் வாழ்க்கையின் இசை. கொண்டாட்டத்தின் இசை. விலங்குகளை வெற்றி கொண்டபோது முழங்கிய இசை. ஊரெங்கும் நல்ல செய்தியை சொல்வதற்குப் பயன்பட்ட இசை. வெற்றியின் இசை.இத அனைவருக்குமான கலையாக, தமிழர்களின் இசையாக மாற்றுவதுதான் எங்கள் புத்தர் கலைக்குழுவின் நோக்கம் அப்படீன்னு சொல்றாங்க மணிமாறன் மகிழினி. புத்தர் கலைக்குழுவை உருவாக்கி, வழிநடத்திச் செல்லும் பறையிசைக் கலைஞர் (‘கும்கி திரைப்படத்தில் வருகிற, ‘சொய்ங்... சொய்ங்...’ பாடல் மூலமாகப் புகழ்பெற்றுள்ள பின்னணிப் பாடகி மகிழினியின் கணவர்).

இந்த பறையிசையில சாவுக்கு ஒரு தாளம், திருமணத்துக்கு ஒரு தாளம், மாடுபிடிக்கு ஒரு தாளம்னு ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு தாளம் உண்டுனு சொல்றாங்க . இந்தத் தாளங்கள் எல்லாமே நம்முடைய அன்றாட வாழ்க்கையிலிருந்து உருவானதுதான் . தமிழ் இசையில இசைக்குறிப்புகள் இருப்பதுபோல பறையிசைக்கும் இசைக்குறிப்புகளை உருவாக்கி இருக்காங்க இவங்க.இதுல ஆர்வம் உள்ள இளைஞர்களும் இவரோடு இணைந்து கொள்ள, இப்போது இவருடைய குழுவில் 25 பேர் இருக்கிறார்கள். இதில் 12 பேர் நிரந்தரமாகவும் மீதிப்பேர் வேலைக்குப் போய்க்கொண்டே பகுதிநேரமாக இதை செய்றாங்களாம் .இந்த புத்தர் கலைக்குழுவினர் தங்களுக்கென்று சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். ‘சாவுக்கு பறை வாசிக்க மாட்டோம். குடிக்க மாட்டோம்’ அப்படீன்னு .

இப்படி நிகழ்ச்சிகள் நடத்துறது மூலமா கிடைக்கிற தொகையில ஒரு பங்கினை சேரிப்பகுதி மக்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துறாங்க புத்தர் கலைக்குழு. அதோடு அந்தப் பகுதிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்துறாங்க . இந்த நிகழ்ச்சிகளின் ஆதாரமான ஒரே குரல், அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் அப்படீங்குறதுதான் .

இவை தவிர, தொடர்ந்து பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறது இந்தக் கலைக்குழு. இந்தப் பயிற்சிப் பட்டறை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் பறையிசைத்தல், அதற்கேற்ப நடனமாடுதல், பாட்டிசைத்தல், பறையைக் கையாளுதல், பறையை உருவாக்குவது என ஏகப்பட்ட சமாச்சாரங்களின் அடிப்படைகளைக் கற்றுத்தறாங்க .

இந்தப் பயிற்சிக்கு மிகக் குறைவான கட்டணத்தையே வசூலிக்குறாங்க இந்தக் கலைக்குழு. மூன்று நாட்கள் நடக்கிற இந்தப் பயிற்சியை வேடந்தாங்கலிலேயே தங்கியிருந்து பலர் கத்துக்குறாங்க. நிறைய கார்ப்பரேட் நிறுவனங்களும் பள்ளிகளும் கூட ஆர்வத்தோட அவங்களோட இடத்துல இந்தப் பயிற்சியைத் தங்களுடைய மாணவர்களுக்கும், பணியாளர்களுக்கும் குடுக்குறாங்கலாம்.

இந்தப் பயிற்சியில் தற்போது ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் கூட ஆர்வத்துடன் கலந்துகுறாங்க. ஃபேஸ்புக்கில் இருக்கிற புத்தர் கலைக்குழுவின் பக்கத்தில் இந்தப் பயிற்சிகுறித்து, அறிந்துகொண்டு நிறைய நகரத்து இளைஞர்கள் வரதா சொல்றாங்க.

புத்தர் கலைக்குழு தொடர்புக்கு:98427 75655
                                                         
                                                                     ---------நன்றி வார இதழ் 

புதன், 20 பிப்ரவரி, 2013

மாவட்ட கலெக்டர்.....................!!பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தாரேஸ் அஹம்மது இவரபத்தி என்ன ஸ்பெஷல்-னு கேக்குறீங்களா , இருக்கு.
இவர் மக்களோட பிரச்சனைகளை எப்படி எல்லாம் விராரிச்சு சரி செய்றாருன்னு தெரியுமா?
ஒரு நாள் பஸ்-ல மக்களோடு மக்களாக பயணம் பண்ணிகிட்டே அவர்களுடைய பிரச்சினைகளை விசாரிப்பாராம்.

இன்னொரு நாள் மாறு வேஷத்தில திரை அரங்குகளுக்கு போய் டிக்கெட்டுகளுக்கு சரியான பணம் தான் வசூலிக்கிறாங்களானு  விசாரிப்பாராம்,

ஒரு ஒரு நாளும் ஏதாவது ஓரு அலுவலகத்திற்கு அதிகாரிகளுக்கே தெரியாமல் விசிட் அடிப்பாராம் ,

பெரம்பலூர் மாவட்டத்தில மக்கள் பிரச்சினைகளுக்காக இயங்குறவங்க  கைல நிச்சயம் தாரேஸ் அஹம்மது சார்ரோட  மொபைல் எண்கள் இருக்குமாம்.

குடி நீர் பிரச்சினையில் தொடங்கி, சாதிச் சண்டைகள் வரை எங்க  எது நடந்தாலும் ஒரே ஓர் அழைப்பில் பிரச்சினையை முடிச்சுகிறாங்கலாம்   பெரம்பலூர் மாவட்ட மக்கள்

பதவி ஏத்து 5 மாசத்துல மக்களை தேடி 45 ஆயிரம் மனுக்களை வாங்கி இருக்காருனா பாத்துக்கோங்க , அதில் 75 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுடுச்சாம்

இவரோட இந்த பணியை பாராட்டி முதல்வர் பரிசு வழங்கி  இருக்காங்களாம்.

 

நாமளும் வாழ்த்துக்களை சொல்வோம் .
நன்றி சார்..உங்கள மாதிரி கலெக்டர்கள் எல்லா மாவட்டதுலயும் நாங்க எதிர் பாக்குறோம்.

               ---நன்றி என்விகடன் .http://www.vikatan.com/article.php?aid=14197&sid=384&mid=1

திங்கள், 18 பிப்ரவரி, 2013

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.அவைகளில் சில.........1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.


திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
 4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.
8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார் 80 ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருடைய நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை, சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் ,ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கினார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன
                                               -------facebook -ல் இருந்து

பாக்கவேண்டிய இடங்கள் :

அநேகபேர் திருமலைக்கு மட்டும் சாமியை பார்த்துட்டு வந்தாலே போதும் அதுக்கே நேரம் ஆகிடும்னு திருமலையை சுற்றி பாக்க வேண்டிய இடங்களை பாக்காம போயிடுறோம் .ஒரு தரம் போய் தான் பாருங்களேன் எல்லா இடத்துக்கும் .

  • முதல்ல திருமலையில் இருந்து பாபநாசம் போகுற வழியில வேணுகோபால சுவாமி திருக்கோயில் இருக்கு.

இங்க ராமர்,லக்ஷ்மர்,சீதா தெய்வங்களுக்கு சன்னதியும் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதியும் இருக்கு.

  • இதுக்கு அடுத்தது ,ஜேப்பலி ஆஞ்சநேயர் கோயில் இருக்கு. 

இந்த கோவிலுக்கு கொஞ்ச தூரம் நடக்கணும்ங்க ,அதுவும் செங்குத்தான பாதைல நிறையா படிக்கட்டுகள் ஏறி போனா ,சமதளமான பாதை வரும் அதுக்கு அடுத்து மறுபடியும் செங்குத்தான பாதைல இறங்கணும், கோவிலுக்கு பக்கத்துல பாதை வந்ததும் படிகட்டுகளோ சிமென்ட் தரைகளோ இல்லாம வெறும் கல்,பாறைகலால பாதை இருக்கு அதை கடந்து போனோம்னா அழகான ஆஞ்சநேயர் கோவிலுக்கு போகலாம்.
இங்க அர்ச்சனை செய்ய பொருள்கள் வாங்க கடைகள் இருக்கு,எப்போ போனாலும் பிரசாதம்(பொங்கல்,தயிர் சாதம்,புலி சாதம்,சாம்பார் சாதம்-னு எதாவது ஒண்ணு ) தந்துகிடே இருக்காங்க.இந்த கோவிலின் அடிவாரத்துல ஆகாசகங்கா அணை இருக்கு.


  • அடுத்து ஒரு பத்து நிமிஷ பயணத்துல ஆகாசகங்கா-ங்கற இடத்தை அடையலாம்.

வரலாறு :
தினமும் திருமாலுக்கு தீர்த்த கைங்கர்யம் பணி செய்து கொண்டிருந்த மகா புருவா ஆர்ய பெரிய திருமலை நம்பிகள் அவர்கள் தினமும் அதிகாலையில் பாபவிநாசனம் சென்று நீராடி திருவேங்கடமுடையானின் திருமஞ்சனதிற்க்கும் திருவாராதனைக்கும் தீர்த்தம் கொண்டுவந்து கைங்கர்யம் பண்ணி கொண்டிருந்தார்.வயோதிக நிலையிலும் அவரது இந்த பணி தொடர்வது கண்ட எம்பெருமான் ,ஸ்ரீனிவாச சுவாமி அவரது அந்த சிரமத்தை எளிதாக்கும் பொருட்டு ஒரு நாள் ஒரு வேடுவ சிறுவனின் வேடம் கொண்டு,நம்பிகள் தீர்த்தம் கொண்டுவரும் வழியில் அவரை இடை மறித்து, "தாத்தா ,தாகத்துக்கு தண்ணீர் வேண்டும்" என கேட்க ,பிள்ளாய் இது எம்பெருமானுக்கு கொண்டுபோகிறேன் ,உனக்கு தந்தால் வினர்த்தம் ஆகிவிடும் என்று மறுக்க அந்த சிறுவன் பாணத்தால் தீர்த்த பாத்திரத்தில் துளை இட்டு அவர் அறியாமல் நீரை பருகிவிட்டான்.நடந்ததை அறிந்த நம்பிகள் இனி அவ்வளவு தூரம் சென்று திரும்புவதற்குள்
கால தாமதம் ஆகிவிடுமே என்று வருந்தினார்.அதற்க்கு அந்த சிறுவன் ,"தாத்தா ,கவலை வேண்டாம் என்று கூறி ,அருகில் இருந்த அஞ்சனாத்ரி மலையில் ஒரு பாணத்தால் அடிக்க ,குபீர் என்று தண்ணீர் பெருகியது .இதுவே ஆகாச கங்கை இனி இதிலிருந்து தண்ணீர் கொண்டுசெல்லலாம் என கூறி மறைந்தான் அந்த சிறுவன் .அன்று முதல் நம்பிகள் பெருமான் அத்தீர்த்தத்தில் இருந்தே இறைவனின் கைங்கர்யத்துக்கு நீர் கொண்டுவர தொடங்கினார்.அவரது சந்ததிகளும் இன்று வரை ஆகாச கங்கை தீர்த்ததையே திருவேங்கடவுடையானின் கைங்கர்யதிர்க்காக கொண்டுவருகிறார்கள் .

  • அடுத்து ,பத்து நிமிஷ பயணத்துல ,பாபநாசத்தை அடையலாம்.
பாபநாசம் (அ ) பாபவிநாசம் திருமலையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்குற அணைக்கட்டு. திருமைலைக்கு வரும் பக்தர்கள் இந்த புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும்னு நம்பரதால இந்த இடத்துக்கு இப்படி பேர் வந்துச்சாம். இந்த தீர்த்தத்தின் மேற்கு பக்கத்துல கட்டபட்டிருக்குர அணைகட்டுல இருந்து தான் திருமலைக்கு தண்ணீர் விநியோகம் நடக்குது.அதனால திருமலைல எங்க குளிச்சாலும் பாபனாசத்துல குளிச்ச புண்ணியம் கிடைக்கும்னு சொல்றாங்க.

திருப்பதியில் மொத்த 14 தீர்த்தங்கள் இருக்காம். அது என்ன என்னனு தெரியுமா?

1.  சுவாமி புஷ்கரணி:- இது சரஸ்வதிதேவி தவமிருந்த இடமாம் இங்கதான் ஆதிவாராக மூர்த்தி எழுந்தருளி இருக்கார் . மார்கழி மாத வளர்பிறையில் துவாதசி நாளில் சூர்ய உதயதத்திற்கு 6 நாழிகை முன்பும், சூர்யோதயத்திற்கு நாழிகை பின்பும் இம்மலையிலுள்ள மற்ற எல்லா தீர்த்தங்களும் இங்கு சங்கமம் ஆகுதாம்.

2.  பாபவிநாசம்: மலையிலேயே இன்னொரு புண்ணிய தீர்த்தம். ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியில் உத்திராட நட்சத்திரம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு தீர்த்தங்கள் சங்கமமாகின்றனவாம். அன்றைய தினம் இந்த தீர்த்தத்தில் நாம் நீராடினால் இக்கலியுகத்தில் செய்த பாவங்கள் எல்லாம் போய்டும் அப்படீங்குறது ஐதீகம்.   


3. ஆகாய கங்கை:- தினம் தோறும் அதிகாலைல பிரம்ம முகூர்த்தத்தில் இந்த தீர்த்தத்தாலே வெங்கடவனுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறுதாம் . இங்கு சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமியில் நீராடுவது விசேஷமாம்.
4. ராமகிருஷ்ண தீர்த்தம்:- தை மாத பவுர்ணமியன்று இதில் நீராடினால் சித்திகள் சித்தியாகுமாம்.

5. பாண்டவ தீர்த்தம்:- வைகாசி மாத சுக்லபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமைகள் இதில் நீராடினால் பல பாவங்களிலிருந்து விடுபட முடியுமாம்.

 6.தும்புரு தீர்த்தம்:- பங்குனி மாத பவுர்ணமியன்று இதில் நீராடினால் தும்புரு முனிவரின் நல்லாசி கிடைக்கும். இவையல்லாது,

7, வைகுண்ட தீர்த்தம்,

8. ஜடாயு தீர்த்தம்,

9. சகஸ்ந்தன தீர்த்தம்,

10. கோனேரி தீர்த்தம்,

11. சக்ர தீர்த்தம்,

12.வகுள தீர்த்தம்,

13. சேஷ தீர்த்தம்,

14. மொரதீர்த்தம்

என பதினான்கு வகை தீர்த்தங்கள் மலை மீது இருக்காம்.
.
  • ஸ்ரீவாரி பாதம் :
திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழு மலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.இங்க இருந்து பார்த்தா திருமலையோட முழு வ்யூ -ம் அவ்ளோ அழகா தெரியும்.

  • அன்னப்பிரசாதம் :

திருமலைல அன்னப்பிரசாதம் ,விசேஷமான ஒண்ணு.தினமும் பல ஆயிர கணக்கான பேர் வந்து சாப்பிடுறாங்க.கவுண்ட்டர் 1,கவுண்ட்டர் 2-னு நிறையா கவுண்ட்டர்கள் இருக்கு.ஒரு கவுண்ட்டரில் மட்டும் கிட்டத்தட்ட 1000 பேர் உக்காந்து சாப்படற அளவுக்கு பெரிய ஹால். அப்போ அங்க இருக்குற அத்தனை கவுண்ட்டர்லையும் எவ்ளோ பேர் சாப்பிட்ராங்கனு பாருங்க.அங்கேயே இந்த வருஷத்துக்கான அன்னப்ப்ரசாத ஸ்பான்சர்கள் யார் யார்னு LED டிஸ்ப்ளே வச்சுருக்காங்க.

தானத்துலையே சிறந்த தானம் அன்னதானம்னு சும்மாவா சொன்னாங்க.

திருப்தி போயிட்டு திருமாலை மட்டும் பாத்துட்டு வராம,அங்க இருக்குற மத்த கோவிலுக்கும் போய்ட்டு ,இயற்க்கை அழகை ரசிச்சிட்டு கடவுளோட +  இயற்கையோட அருள் பெற்று வாங்க..

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

கண்டுபிடிங்க!!!!!!!!!!!!அற்புதமான க்ரியேடிவிட்டி பாருங்களேன்..
சரி  இந்த படத்துல எத்தனை குதிரைகளை கண்டுபிடிக்குறீங்கனு பாக்கலாமா?


மனதார பாராட்டுவோம்


கோவை மகேந்திரன்,இவர பத்தி என்ன சொல்ல போறான்னு பாக்குறீங்களா?இருக்குங்க..

தெருவுல அனாதையா விடப்பட்ட கொழந்தைங்க,பெரியவங்க,வயசானவங்கனு எத்தனையோ பேர நாம பாத்துருக்கோம் .அவங்களுக்கு சாப்பாடு வாங்கி தந்து,சாப்பிடவச்சு,அவங்க கிட்ட அவங்க யாரு என்னனு கேட்டு அவங்கள அவங்க வீட்ல பத்திரமா சேக்குறது,ஆதரவு இல்லாதவங்களா இருந்தா காப்பகத்துல சேக்குறது,மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தா ஹோச்பிட்டல்ல சேக்குறது,சேக்குறது மட்டும் இல்லாம அடிக்கடி அவங்கள போய் பாத்து எப்படி இருக்காங்கனு விசாரிக்குறது,ஹோச்பிடல்ல அநாதை பிணங்களை கேட்டு வாங்கி அவங்க உடலை மாலை மரியாதையோட அடக்கம் செய்றது,தீபாவளி பொங்கல் சமயத்துல அரவாணிகள்,உடல் ஊனமுற்றவர்கள்,வயசானவங்க எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைக்குறது-னு இவ்வளவு நல்ல விஷயத்தையும் 'ஈர நெஞ்சம்'-னு அமைப்பை ஆரம்பிச்சு அதன் மூலமா இதை எல்லாம் செய்றாராம்.

இவரால குணம் அடைஞ்சவங்க ஏராளமானவங்கலாம் .இறந்து போய்ட்டதா நினச்சு 18 வருஷமா மகனை நினச்சு நினச்சு அழுதுகிட்டு இருந்த கிட்ட அவங்க பையனை கொண்டுபோய் நிறுத்தினா அந்த நிமிஷம் அவங்களுக்கு எப்படி இருக்கும்னு நினச்சு பாருங்களேன்,இந்த நல்ல விஷயத்தையும் இவரோட முயற்சி மூலமா செஞ்சு இருக்கார்.

இது மாதிரி எல்லாரும் செஞ்சுட மாட்டோம்.வேலை ,நேரமே இல்ல அது இதுன்னு காரணத்தை தேடுறவங்கதான் நம்மள்ள பலபேர் அதுதான் உண்மை . நம்மளால இது மாதிரி செய்ய முடியலைனாலும் atleast செய்றவங்களயாவது பாராட்டுவோம்

எல்லாரும் எதிர்பாக்குறது என்ன தெரியுமா ,ஒரு சின்ன பாராட்டு,சின்ன ஊக்குவிப்பு இவ்வளவு தான்ங்க.அது நம்மள இன்னும் பல சாதனைகளை செய்ய தூண்டும்.
சின்ன குழந்தைங்க ஒரு விஷயம் செஞ்சா சூப்பர்,நல்லா இருக்கே ,நல்லா பண்ணி இருக்கியே வெரி குட்-னு சொன்னா அந்த பாராட்டு அவங்களுக்கு எவ்வளவு உற்சாகத்தை குடுத்து அவங்களை அதுக்கு மேல இன்னம் பெட்டெரா பல விஷயம் செய்ய ஒரு தூண்டுகோளா அமையும் இல்லையா,அது மாதிரி தான் நமக்கு நல்லதுன்னு பட்டா மனச விட்டு பாராட்டனும்

திரு .மகேந்திரன் அவர்களையும் மனதார வாழ்த்துவோம்.பாராட்டுவோம்.

Salute Sir ..............உங்கள நினச்சு பெருமை படுறோம்..

அப்போதான் அவங்களால இன்னம் உற்சாகமா நிறைய செய்வாங்க.

நா நல்ல விஷயம்னா உடனே பாராட்டிடுவேன்க ...நீங்க....

நீங்களும் வாழ்த்தனும்னு நினச்சா இதோ அவரோட போன் நம்பர் :
9843344991 and 9600400120

                            -----நன்றி வார  இதழ் 

வியாழன், 14 பிப்ரவரி, 2013

சுயதொழில் செய்யும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக இரண்டு நாள் கருத்தரங்கு சென்னையில் நடக்கபோகுது.இளைஞர் மேம்பாட்டிற்காகவும், கிராமப்புறக் கல்விக்காகவும் பணியாற்றி வரும் ‘புதிய தலைமுறை’ அறக்கட்டளை, குறு, சிறு மற்றும் நடுத்தர வளர்ச்சி நிலையத்துடன் (–MSME-Di – Micro Small and Medium Enterprises – Develop Institute ) சேந்து இளைஞர்களுக்காக, ‘சுயதொழில் 2013’ என்கிற கருத்தரங்கம், கண்காட்சி, கையேடு ஆகியவற்றை நடத்துறாங்களாம் .

வர்ற மார்ச் 1 மற்றும் 2ம் தேதியில் இரண்டு நாட்கள், சென்னை கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலைய வளாகத்தில் நடத்த போறாங்களாம் . இந்தக் கண்காட்சியினை தமிழக ஆளுநர் துவக்கி வைக்கிறாராம் .

இளைஞர்கள் சொந்தமாக சுயதொழில் செய்து வாழ்க்கைல முன்னேற வழி செய்ற வகையில், சுயதொழில் முனைவோருக்கான வழிகாட்டி நிகழ்ச்சியாக, இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்காம் .

பட்டதாரிகள், தொழிற்கல்வி கற்போர், புதிதாக சுயதொழில் தொடங்குவோர், கிராமப்புற இளைஞர்கள், சுய உதவிக்குழுக்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்கள், பகுதி நேர தொழில் செய்ய விரும்புபவர்கள் ஆகியோர், ‘சுயதொழில்-2013’ ல் பங்கேற்கலாமாம் .

தகவல் தொழில்நுட்பம், தையல் கலை, மெக்கானிக்கல், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரித்தல், வேளாண்மை உற்பத்தி, எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெட்ரானிக்ஸ் போன்ற துறை சார்ந்த சுய தொழில் வேலை வாய்ப்புகள் கண்காட்சியில் இடம்பெறுதாம் .

மேலும், தர மதீப்பீடு எப்படிச் செய்றது , வங்கிக்கடன் வாங்க வழிமுறைகள் என்ன , புதிய உத்திமுறைகளை பயன்படுத்துதல், தன்னார்வத் திறமையை எப்படி முன்னிலைப்படுத்துவது போன்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற இருக்காம் .

‘சுயதொழில்-2013’ கண்காட்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்யனுமாம் . மேலும், நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு 50 ரூபாய். பதிவு செய்பவர்களுக்கு ஒரு கையேடும், அனைத்துக் கருத்தரங்குகளிலும் கலந்து கொள்ள அனுமதியும் வழங்கப்படுமாம் .

முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள: புதிய தலைமுறை அறக்கட்டளை

87544 17500, 87544 17338

மின்னஞ்சல் : contact@ptfindia.org

திங்கள், 11 பிப்ரவரி, 2013

செல்போனிலும் தமிழ் !!!!!!!!!!


செல்லினம் : இந்த செல்லினம் மூலமா தமிழில் SMS ,ஈமெயில் எல்லாம் அனுப்பலாம்.இதுவரை ஜாவா நிரலி (OS) மூலமா இயங்குற செல்போன்ல தான் இந்த செல்லினம் பயன்படுத்தமுடியும்.2009-ம் வருஷம் ஐபோன்-னிலும் இயங்க ஆரம்பிச்சது.இப்போ ஆண்ட்ராய்டு வகை போனிலும் இயங்க ஆரம்பிச்சாச்சு.ஆண்ட்ராய்டு போன் வச்சு இருக்குறவங்க 'கூகிள் ப்ளே' மூலமா இத இலவசமா டவுன்லோட் பண்ணிக்கலாம்.

இதை www.play.google.com முகவரிக்கு போய் செல்லினம் -னு தேடி ஆண்ட்ராய்டு போனுக்கு டவுன்லோட் பண்ணலாம்.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

பாடலின் வரிகள் - லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன் -கண்ணா லட்டு தின்ன ஆசையா

படம் : கண்ணா லட்டு தின்ன ஆசையா
பாடல் : லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன்
பாடியவர் : கானா பாலா, முகேஷ்
இசை : S .தமன்லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன் இன்னும் எழுதல
அத உங்கிட்ட குடுக்க ஆசைப்பட்டேன் குடுக்க முடியல
கானா கத்துக்க வந்தேன் நா உங்க வீட்டுல
பெட்ரோல் இல்லாத காராட்டம் நின்னேன் ரோட்டுல
லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன் இன்னும் எழுதல
அத உங்கிட்ட குடுக்க ஆசைப்பட்டேன் குடுக்க முடியல

உன் சித்தி டார்சர் நா தாங்கி
உன் சித்தப்பன் கிட்ட அடிவாங்கி
லவ் பண்ணேன் உன்னதான்...
உன் தம்பி வந்தான் எமனாட்டம்
தினமும் எனக்கு போராட்டம்
கிழிஞ்சு போச்சு என் பெல் பாட்டம் ...
தொரத்தி தொரத்தி காதலிச்சேன் வெறி புடிச்ச நாயாட்டம்
எகிறி குதிச்சு ஓடுறியே வண்டலூரு மானாட்டம் ..
நா அப்பா டக்கரு...இந்தா வாங்கிக்கோ லெட்டெரு ...
லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன் இன்னும் எழுதல
அத உங்கிட்ட குடுக்க ஆசைப்பட்டேன் குடுக்க முடியல


அன்ன நட போடதே
என்ன ஆட்டி படைக்காதே
என் வைப்பா வந்திடு..
ஆசைய மூடி மறைக்காதே
உன் அப்பன் பேட்ச மதிக்காதே
ஐ லவ் யு சொல்லிடு
விளம்பரத்த பாத்துபுட்டு விழுந்துடாத ஆத்துக்குள்ள
நடனம் ஆடி காட்டிடுவான் மாட்டிக்காத சேத்துக்குள்ள ..
அவன் சைனா மேடுமா
இவன் பக்கா ப்ராடுமா

லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன் இன்னும் எழுதல
அத உங்கிட்ட குடுக்க ஆசைப்பட்டேன் குடுக்க முடியல
கானா கத்துக்க வந்தேன் நா உங்க வீட்டுல
பெட்ரோல் இல்லாத காராட்டம் நின்னேன் ரோட்டுல
லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன் இன்னும் எழுதல
அத உங்கிட்ட குடுக்க ஆசைப்பட்டேன் குடுக்க முடியல

வியாழன், 7 பிப்ரவரி, 2013

வாழை விவசாயிகளுக்கு மானியம்மிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி மையத் தலைவர் ஆர்.வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

‘திண்டிவனம் வேளாண் பகுதிக்கு உட்பட்ட மல்லவாடி, வேள்விக்கால், சமுத்திரம், வெரையூர், கோணலூர், காட்டுமருதூர், விளந்தை, வேட்டவலம் ஆகிய பகுதி விவசாயிகளுக்கு 2.5 ஹெக்டேர் நிலத்திற்கு திசு வாழைக் கன்றுகள் இலவசமாகவும் 75 சதவிகிதம் மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனமும் செய்து தரப்படுது. ஆர்வமுள்ள விவசாயிகள் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள்ள வேளாண் அலுவலர்களை அணுகிப் வாங்கிக்கலாம். இதே அளவு நிலத்திற்கு காய்கறி விதைகள் இலவசமாக வழங்கப்படுதாம் ’.

தொடர்புக்கு: உதவிப் பேராசிரியர் டாக்டர். வி.ராதாகிருஷ்ணன் - 99525 17010


                                                                                   -----நன்றி வார இதழ்
 

புதன், 6 பிப்ரவரி, 2013

செவித்திறன் குறைபாடு உள்ளவங்களும் இனி செல்போன்ல பேசலாம்!!!!!!!!


 செவித்திறன் குறைபாடு உள்ளவங்களும் செல்போன்ல பேசகூடிய வகையில ஒரு கருவியை ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பொறியில் பட்டதாரியான ஷேக் அப்துல்லா 'compressing air mechanism' என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கக்கூடிய கண்டுபிடிச்சு இருக்காறாம்.இவர் திருச்சி ஜெ.ஜெ கல்லூரியில் M .E (power electronics ) படிக்குறாராம் .இந்த கருவி மூலமா காதுகேக்காதவங்களும் செல்போன்ல பேசலாம்,பாட்டு கேக்கலாமாம்.

ஷேக் அப்துல்லாவை தொடர்புகொள்ள : 8643841486

ஈமெயில் : sabdullah787@gmailcom

இதேமாதிரி செவித்திறன் குறைபாடு இருக்குறவங்க செல்போன்ல பேசுற வகையில , புதுக்கோட்டை செந்தூரன் பொறியியல் கல்லூரி எலெக்ட்ரிக்கல்,எலெக்ட்ரானிக்ஸ் மாணவர்களாகிய சிவனேஷ்,வேலரசன்,செல்வராஜ் 'ஆடியோ பிளேயர்' -ஐ கண்டுபிடிச்சு இருக்காங்களாம்.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

மாற்று திறனாளிகளுக்கு இலவச கல்வி,தொழிற்பயிற்சி ,வேலைவாய்ப்பு !!!!!


வேலூர் பக்கத்துல காட்பாடியில இருக்குற 'ஒர்த்'-ங்குற தன்னார்வ தொண்டு நிறுவனம்,மாற்று திறனாளிகளுக்கு இலவச கல்வி,தொழிற்பயிற்சி ,வேலைவாய்ப்பை இலவசமா கடந்த 49 வருஷங்களா செஞ்சுகிட்டு வராங்களாம்.இங்க ,காது கேக்காத,வாய் பேச முடியாத குழந்தைங்களுக்கான சிறப்பு பள்ளி ,மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்காக பகல் நேர பயிற்சி மையம் அப்படீன்னு ரெண்டு மையம் ஒரே வளாகத்துள நடத்துறாங்களாம்.ஹாஸ்டல் வசதியும் இருக்காம்.

கை,கால் பாதிக்கப்பட்ட மற்றும் காத்து கேக்க முடியாத வாய் பேச முடியாத மாற்று திறனாளிக்கு 'ஒர்த்' தொழிற்பயிற்சி மையம் மூலமா கடைசல்,மின்னனுவியல் போன்ற 2 வருட பயிற்சி இலவசமா தராங்களாம்.12-ம் வகுப்பு முடித்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு வருட கணிப்பொறிப் பயிற்சியும் சி.என்.சி இயந்திரம் மூலமா தராங்களாம்.
இந்த நிறுவனத்தோட கிளை சென்னை,திருச்சி,புதுச்சேரியில இருக்காம்.
சென்னை கிளையில பார்வை இல்லாதவங்களுக்கான கணிணிப் பயிற்சியும் குடுக்குறாங்களாம்.பயிற்சியின் முடிவுல 'ஒர்த்' அறக்கட்டளையின் தொழில் நிறுவனங்களிலும் மற்ற நிறுவனங்களிலும் வேலையில சேர வழி செய்றாங்களாம் .
இவங்க செய்ற தொண்டுக்காக தேசிய விருதும் வாங்கி இருக்குக்காங்க.

பாடலின் வரிகள் - வாய மூடி சும்மா இருடா - முகமூடி

படம் : முகமூடி
பாடல் :வாய மூடி சும்மா இருடா!
பாடியவர் :ஆலப் ராஜ்
இசை "கிருஷ்ணகுமார் (கே கே )
எழுதியவர் :மதன் கார்கி


வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!


வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!


கடிகாரம் தலைகீழாய் ஓடும்
இவன் வரலாறு எதுவென்று தேடும்
நெடுவானில் பணியாது போகும்
இவன் கடிவாளம் இல்லாத மேகம்

பல நிலவொளிகளில் தலை குதித்திடும் போது
இவன் மன வெளிகளில் கனவுகள் இல்லை ஏதும்
காணாமலே போனானடா ஏனென்று கேட்காதே போடா!!!!!

வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!


பார்வை ஒன்றில் காதல் கொண்டால்
எந்தன் நெஞ்ஜெங்கும் நுண் பூகம்பம்
பேரே இல்லா பூவை கண்டா
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்
என் தோட்டத்தில் மாற்றம் காற்றெங்கும் வாசம்
தானாக உண்டானதேனோ ?
நீவாழவென்று என் நெஞ்சம் இன்று தானாக ரெண்டானதேனோ ?
ஓயாமலே பெய்கின்றதே என் வாழ்வில் ஏன் இந்த காதல் ?!!!!!!!!!!!!!

வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!


நாளை என் காலை கீற்றே நீதானே
கையில் தேனீரும் நீதானடி!
வாசல் பூவோடு பேசும் நம் பிள்ளை
கொல்லும் இன்பங்கள் நீதானடி!!!

கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்.
காலம் அருகினில் தானோ?
கண் மூடிடும், அவ்வேளையும்.
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!


வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!

ஓயாமலே பெய்கின்றதே ..என் வாழ்வில் ஏன் இந்த காதல் ?!!!!

திங்கள், 4 பிப்ரவரி, 2013

மீட்டர் ரீடிங் எடுக்கும் புதிய கருவி.....
ஒரு ஒரு வீட்டுக்கும் போய் மின் பயனீட்டு அளவை எடுக்குறதுக்கு பதிலா தெருவுல இருந்தே ஒரு மீட்டர் ரீடிங் எடுக்குற வசதியுள்ள புதிய கருவியை தமிழ்நாடு மின்சாரவாரியம் அறிமுகப்படுத்தப் போறாங்களாம்.

இந்த கருவி எப்படி செயல்படும்னா, நம்ம செல்போன்ல இருக்குற ப்ளூ டூத் தோலுள் நுட்பம் தான் இதுலயும் பயன்படுத்துறாங்கலாம். இத தெருவுக்கு கொண்டுபோகும் போதே அந்த தெருவுல இருக்குற 
எல்லா வீட்டோட பயனீட்டு அளவும் அலைக்கற்றைகள் மூலமா இந்த நவீன கையடக்க கருவிக்கு பதிவேற்றப்படுமாம்.ஆனா இத பயன்படுத்தணும்னா   
நம்ம வீட்ல இருக்குற மீட்டர்ல சில மாற்றம் பண்ணணுமாம்.அதுக்கு அப்பறம் அலுவலகத்துல இருக்குற கணிணிக்கு இதே ப்ளூ டூத் முறையில கணக்கீடுகள் பதிவிறக்கப்ப்படுமாம்.அந்த கணினியில இருந்து பயனீட்டாளர்களோட செல்போனுக்கு பயனீட்டு அளவும் அதற்க்கான தொகையும் SMS -ஆக அனுப்படுமாம்.

சமீபத்தில் படித்ததில் பிடித்தது....

புலிக்குட்டிக்கு பால் குடுக்கும் குரங்கு குட்டிஎன்ன பண்றாங்கன்னு பாக்குறீங்களா?பள்ளத்துல விழுந்த ஒரு ஆட்டை காப்பாத்துறாங்க.வெள்ளத்துல இருந்து பூனை குட்டிகளை காப்பாத்துறாறு
 
 
 
வெள்ளத்துல இருந்து நாய் குட்டிகளை காப்பாத்துறாறு


-----------------
நன்றி வார இதழ்
  

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

என்ன கொடுமை சார் இது?


ஒரு நாள் நான் பஸ்ல போயிட்டு இருந்தப்போ ,ஒரு பிரபலமான கோவில் இருக்குற ஸ்டாப்ல  ஒரு பொண்ணு ஏறினா ..20-ல் இருந்து 30-குள்ள தான் அந்த பொண்ணு வயசு இருக்கும்.

கண் கருவிழி ரெண்டும் கண்ணோட மேல போய் தொடர்ந்து கண்ண சிமிட்டிகிட்டே இருந்தா.பஸ்ல ரொம்ப கூட்டம்.அந்த பொண்ண நிக்க கஷ்டப்படுரத்தை பாத்து நான் உக்காந்து இருந்த சீட்டை விட்டு எந்திரிச்சு அந்த பொண்ணை உக்காரவச்சேன்.ரொம்ப டிராபிக் இருந்ததால ரொம்ப மெதுவாதான் டிரைவர் பஸ்-ஐ ஓட்டினார்.சில நிமிஷம் கழிச்சு அந்த பொண்ணு தனக்கு கண் தெரியாதுன்னு சொல்லி சாப்படல ரொம்ப பசிக்குது எதாவது பணம் குடுங்கன்னு கேட்டுச்சு.

நாமதான் இளகி உருகி ஓடுற மனசுக்காரங்களாச்சா ..அப்படியாப்பானு கேட்டு என் ஹேன்ட்பாகில் இருந்து பணம் எடுத்து குடுத்தேன்.அடுத்து ஒரு நாலாவது ஸ்டாப்-இல்  வேகமா கொஞ்சம் கூட தடுமாறாம எறங்கி எல்லாரையும் தள்ளிகிட்டு வேகமா நடந்தது அப்போதான் தெரிஞ்சது நான் எமாந்துட்டேன்னு அந்த பொண்ணுக்கு கண்ணு தெரியும் என்னை ஏமாத்திட்டு போயிருக்குனு. அட கொடுமையே இப்படியா காலங்காத்தால ஏமாறனும்.எப்படில்லாம் ஏமாத்துறாங்க என்ன நானே திட்டிகிட்டு போனேன்.

கொஞ்சம் நாள் கழிச்சு அதே பொண்ணு வேற ஒரு ஸ்டாப்ல ஏறினது.நான் பாத்துட்டு என்ன பண்றான்னு பாக்கலாம்னு திரும்பி நின்னுகிட்டு இருந்தேன்.லாஸ்ட் சீட்ல உக்காந்து இருந்த
ரெண்டு பசங்ககிட்ட சில நிமிஷம் கழிச்சு அதே டயலாக் சொன்னிச்சு வந்ததே கோவம் அந்த பொண்ணை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினேன்.எல்லாருக்கும் ஹெல்ப் பண்ற மனசு இருக்கு ,உன்ன மாதிரி ஆளாலதான் ஹெல்ப் பண்ண கூட நிறையபேர் பயபடுறாங்கனு சொல்லி அந்த பசங்ககிட்ட ஏதும் குடுக்காதீங்கன்னு சொன்னேன்.அடுத்த ஸ்டாப்ல எறங்கி வேகமா போய்டுச்சு அந்த பொண்ணு.அதுக்கு அப்பறம் அந்த சைடு ரொம்ப நாலா இல்ல மாசமாவே நான் பாக்கள.

ஏதோ என்னால முடிஞ்சது அண்ணைக்கு ரெண்டு பசங்க பணத்தை காப்பாத்தினேன் ,ஆனா வேற பஸ்ஸே இல்லையா  இல்ல வேற பஸ் ரூட்டே இல்லையா என்ன ?!!!எத்தன பேரை அந்த பொண்ணு இப்படி ஏமாதிச்சோ என்ன மாதிரி எத்தன பேர் ஏமாந்தாங்களோ?!!!

உழச்சு சம்பாரிக்காம மத்தவங்கள ஏமாத்தி ஏன்தான் இப்படி பண்றாங்களோ ...ஏமாறுறவங்க இருக்குறவரைக்கும் ஏமாத்துறவங்க இருப்பாங்கதான்.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

குழந்தைகளை தத்தெடுக்க:


குழந்தைகளை தத்தெடுக்க விரும்புறவங்க தமிழக அரசால அங்கீகரிக்கப்பட்ட 22 மையங்கள்ல எங்க வேணும்னாலும் போய் குழந்தையை தாது எடுக்கலாமாம்.
தொடர்புக்கு: இயக்குனர்,சமூகநலத்துறை அலுவலகம் ,சிந்தாதரிப்பேட்டை ,சென்னை.
போன் : 044 2845 4638
வெப்சைட் : http://www.tn.gov.in/adoption

ஏரி மறுசீரமைப்பு வேலையை செய்யும் அருண்

கூகிள் நிறுவனத்துல செஞ்ச வேலையை விட்டுட்டு,25 வயதான அருண்  கிருஷ்ணமூர்த்தி ,சுற்று சூழலை பாதுகாக்க ஏரிகளை சுத்தம் செஞ்சுகிட்டு வராறாம்.இதுவரை தமிழ்நாடு,ஆந்திரா,டெல்லி என இந்தியா முழுக்க 12 ஏரிகளை மறு சீரமைப்பு செஞ்சு இருக்காராம்.இதுக்காக யாரோட உதவியும் எதிர்பாக்கலையாம்,யார்கிட இருந்தும் நன்கொடை வாங்கலையாம் ,பள்ளி மாணவர்களை ஒன்று திரட்டி தன சொந்த முயற்சியால இத செஞ்சுகிட்டு வராறாம் அருண் .இவரோட முயற்சியை பாராட்டி ஸ்விச்சர்லாந்தின் ரோலக்ஸ் நிறுவனம் ஒரு விருதையும்,இளைஞர் சங்கமும் விருது   குடுத்து கவுரவிச்சு  இருக்காங்கானா பாத்துகோங்களேன்.இதுவரை 900 மாணவர்கள் அருணோட சேர்ந்து இந்த ஏரி மறுசீரமைப்பு வேலையை செஞ்சுகிட்டு இருக்காங்களாம்.


இந்த மாணவர்கள் மூலமா தெருக்கூத்து நடத்தி மக்களுக்கு ஏரிகளை பத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துறது,பேர்ட் (Bird) வாட்சிங் மூலமா பறவையை அறிதல்,இயற்கையை படம் பிடிக்குறதுன்னு எல்லா வேலையும் செய்ராங்கலாம் இந்த அமைப்பு.இவர் ரெண்டு டாக்குமெண்டரி படமும் எடுத்து இருக்காறாம்.அது சர்வதேசப் போட்டிகள்ல கலந்துக்கிட்டு பல விருதையும் வாங்கி இருக்காம்.
2011-ல் என்விரான்மெண்ட் பவுண்டேஷன் ஆப் இந்தியா (EFI) அப்படீங்குற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தனியா ஆரம்பிச்சு இருக்காறாம்.