பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

தில்லி எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் செவிலியர் பணி!


புதுதில்லியில் செயல்பட்டு வரும் அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை (AIIMS)-ல் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sister Grade-II

மொத்த காலியிடங்கள்: 1004

சம்பளம்: ரூ.9,300 - 34,800 + ரூ.4,600

வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் General Nursing மற்றும் Midwifery பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு தகுதியுடைய ஆண்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: புதுதில்லியில் வைத்து நடைபெறும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு ரூ.100. இதனை ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ள செல்லானை பயன்படுத்தி ஏதாவதொரு பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்தலாம். டெபிட் கார்டு அல்லது கிரிடிட் கார்டு பயன்படுத்தியும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.08.2013

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 25.08.2013

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.08.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsexams.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக