பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

கேம்பஸ் இன்டெர்வியூவும் பொறுப்பில்லா இளைஞர்களும்

சமீபத்துல ஒரு விஷேஷத்துல என் தங்கையை பாத்தேன்.கேம்பஸ்ல செலக்ட் ஆகி இருந்த பொண்ணு இப்போ வேலைல ஜாயின் பண்ணிட்டதா சொன்னா.வொர்க் எப்படி போகுதுன்னு கேட்டேன் , நல்லா இருக்கு பட் காலேஜ் மாதிரியே இருக்கு ..டெய்லி கிளாஸ் எடுக்குறாங்க.சாயந்தரமே அன்னைக்கு நடத்தின கிளாஸ் பேஸ் பண்ணி டெஸ்ட் வைக்குறாங்க..ரெண்டு மெயின் டெஸ்ட் இருக்காம்.அதுல 70% எடுத்தாதான் ஜாப் கன்ஃபார்மாம் இல்லைனா அவ்ளோதானாம்னு சொன்னா..

அப்படி உங்கள கொஞ்சம் ட்ரைன் பண்ணினாதான் வேலையோட அருமை உங்களுக்கு தெரியும்  சொன்னேன்..


நெஜமாவே வருத்தப்படவேண்டிய விஷயம் இது. காலேஜ் முடிச்சதும் வேலைக்கு கேம்பஸ் மூலமா செலக்ட் ஆகிடுறாங்க..செமஸ்டர் லீவ் மாதிரியே மூணு நாலு மாசம் கழிச்சு வேலைல ஜாயின் பண்றாங்க.எடுத்தும் 20,000 முதல் 25,000 வரை சம்பளம்..உடனே தனக்கு எல்லாம் தெரியும், வேலைல இருக்கோம்,நிறையா சம்பாதிக்குறோம், கொஞ்ச நாளுல பைக் வாங்கிடுவோம்,ஒரு வருஷத்துல கார் ,அப்பறம் வீடுனு செட்டில் ஆகிடுவோம்னு தான் முதல்ல நினைக்குறாங்களே தவிர , ஒரு வேல கிடைச்சுருக்கு,நிறையா கத்துக்கணும் , இதுல இருந்து புது புது ஐடியா நமக்கு வரணும்,சாதிக்கணும்னு எண்ணம் ரெண்டாம் பச்சம் தான்.


இப்படி வேலை கிடைச்சு போற 80 % பேருக்கு அந்த வேலையோட அருமை தெரிய மாட்டேங்குது.சீனியர்களை மதிக்கணும் அவங்க கிட்ட இருந்து கத்துக்கணும்னு எண்ணம் வர மாட்டேங்குது.தனக்கு எல்லாம் தெரியும்னு எண்ணம் வருது.கை நிறைய சம்பாதிக்குறோம்னு திமிர் வருது.ஒரு இஷ்யூனா சீனியர்கள் கூட இருப்போம் கத்துப்போம்னு எண்ணம் வரமாட்டேங்குது.

வேலைக்கு நாயா அலஞ்சு ,அம்பது கம்பெனி படி ஏறி எறங்கி அந்த வேலை தனக்கு கிடைக்கும் போது வரும் சந்தோஷம் இவங்களுக்கு கிடைக்காது.அப்படி கஷ்டப்பட்டு வேலை கிடச்சவன்கிட்ட இருக்குற உண்மையும் உழைப்பும் இவங்ககிட்ட இருக்காது,அப்படியே இருந்தாலும் கம்மியாதான் இருக்கும்.

பொறுப்பில்லாம காலேஜ் படிச்ச  இளமையின் வேகத்துலையே இருக்குறது.குடும்பத்தோட சுமைகளை ஏத்துக்கணும் பொறுப்பு வரது இல்ல.படிக்குற வரைக்கும் அப்பாவோட பணம்  வேனும்குறபோது கைக்கு வந்துடும்.இப்போ வேலை ,பணம் ... ஸோ பொறுப்பு,கஷ்டம்னு உணரதுக்கே அவங்களுக்கு வாய்ப்பு கம்மிதான்.(நான் எல்லாரையும் சொல்லல..சில பேர் கும்பத்தை உணர்ந்து பொறுப்போட இருக்காங்க..நான்,அப்படி  இல்லாததுக்கு காரணங்களை தான் சொல்றேன்)..

இப்போ இருந்து தனக்குனு ஒரு குடும்பம்னு ஆகுற வரைக்கும் 5 நாள் வேல பாத்தா ரெண்டு நாள் தண்ணி ,தம் (இதுல இப்போலாம் பொண்ணுங்களும் அடக்கம் ),பொண்ணு ,பையன்,பப்,டிஸ்கோதே,கிளப் இருக்குற அத்தன வேண்டாத வேலையும் செய்ய வேண்டியது.இதுல ஒரு வருஷத்துல ஆன்சைட்-னு வெளிநாடுக்கு ட்ரைன்னிங்... கேக்கவே வேணாம் அப்பறம் ...கஷ்டம் இல்லாத குடும்பமா இருந்தா ,பணத்தோட அருமை தெரியாது பணம் இருந்தா போதும் என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு இருக்குறது...விலைவாசி அதிகமானா என்ன கம்மியானா என்ன...சாப்பாடுக்கு அரிசி,காய்கறி வாங்க பணம் இல்லாதவங்களும் இருக்காங்க,.சாப்ட முடியலை மச்சான் ஜாஸ்தியாகிடுச்சு தூக்கி போட்டுடலாம்னு வேஸ்ட் பண்றவங்களும் இருக்காங்க...யாரும் கேக்குறது கிடையாது..கேக்க கூடாது ...கேட்டா 'முதியோர் இல்லம்' ஜாஸ்தியாகும்...

கேம்பஸ்ங்குற பேர்ல இப்படி பொறுப்பில்லாத இளைஞர்களை தான் இந்த MNC -க்கள் அதிகமா உருவாக்கிக்கிட்டு இருக்காங்கனு  நான் என் தன்கையைகிட்ட சொன்னப்போ ,'நீங்க சொன்னது உண்மைதான்.நீங்க சொல்ற இந்த மைண்ட் செட்டோடதான் நிறையா பேர் இருக்காங்க ஆனா நா அப்படி இல்ல அக்கானு சொன்னாங்க .நீ அப்படி இல்லைன்னு எனக்கும் தெரியும், வேலை இல்லாததோட கஷ்டத்தை நீ உன் வீட்லயே பாத்துருக்க அதனால உன்னால உணரமுடியும்னு சொன்னேன்.

சம்பாதிக்க மட்டும் வேலையை செய்யாம ஆத்ம திருப்த்தியோட வேலை செய்யணும்,இன்னம் சிறப்பா அந்த வேலையை செய்ய முயற்சிக்கணும்  அது எந்த வேலையா இருந்தாலும்...தலைக்கனம் மட்டும் கூடாது .

ஒரு படத்தின் டயலாக் எனக்கு நியாபகம் வருது  "தன்னம்பிக்கைக்கும் தலைகனதுக்கும் ,நூலளவுதான் வித்தியாசம் .... என்னால முடியும்ங்குறது 'தன்னம்பிக்கை'....மட்டும் தான் முடியும்ங்குறது 'தலைக்கனம்' " ...உண்மையான வார்த்தைகள் .....

2 கருத்துகள்: