பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam
அமெரிக்க அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்க அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஜூலை, 2025

அதென்ன motel ? எப்படி இருக்கும் ?என்ன இருக்கும் ?

Hotel கேள்வி பட்ருக்கோம். Star Hotel கேள்வி பட்ருக்கோம் . அதென்ன motel ?-னு நிறையா பேருக்கு சந்தேகங்கள் இருக்கும்.

Motel அப்டீன்னா , பல மாடிகள் இல்லாத road side ஹோட்டல் . அதுவும் நம்ம பைக் அல்லது கார்களை நம்ம ரூமுக்கு வாசல்லையே நிறுத்திக்க கூடியவகையில வசதியான ஒரு சின்ன ஹோட்டல் தான் மோட்டல் அப்படீன்னு சொல்லுவோம்.

ஹோட்டலுக்கும் மோட்டலுக்கும்

https://www.youtube.com/watch?v=OelqYPkm2FE

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

I Love you -க்கு என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சி தருணம்

 நான் அமெரிக்கால பார்ட் டயம்ல லிஃப்ட் டிரைவர்-ஆ வேல செஞ்சேன் . அதான் நம்ம ஊருல ஊபர் டிரைவர் மாதிரி. இங்கயும் ஊபர் இருக்கு , ஆனா அது போலவே மத்த கம்பெனிகளும் இருக்கு.

நான்  லிஃப்ட் டிரைவர்-ஆ வேல செஞ்சப்போ நிறைய புது புது அனுபவங்கள் கிடைச்சது.அதுல ஒன்னு கொஞ்சம் பயம், காமெடி கலந்த ஒரு அனுபவம் அதைத்தான் இப்போ ஷேர் பண்ணப்போறேன்.

ஒரு நாள் ஒரு லிஃப்ட் ரெக்குஸ்ட் accept பண்ணினேன். அது ஒரு மோட்டல் . பொதுவா இங்க அமெரிக்கால அதிகம் சம்பாதிக்காதவங்க , கொஞ்சம் வறுமைக்கோட்டுக்கு பக்கத்துல அல்லது கீழ இருக்குறவங்க ஒரு வீடு வாடகை எடுக்குறதுக்கு பதிலா இதுமாதிரி மோட்டல்கள்ல  தங்குவாங்க. மாசா மாசம் ரெண்ட் கொடுத்துடனும் . அந்த சின்ன இடத்துலயே ஸ்டவ் வச்சு சமைப்பாங்க வேற. அதுமாதிரி ஒரு மோட்டல்ல ஒருத்தரை பிக்கப் பண்ண நா போனேன். அவரு போய் சேர வேண்டிய இடம் 25 நிமிஷ தொலைவுல இருந்தது.  வண்டில ஏறினதும் கண்டுப்பிச்சுட்டேன் அவரு கொஞ்சம் குடுச்சிருக்காருனு . மோட்டல்ல விட்டு வெளில வரதுக்கு முன்னாடியே கொஞ்சம் நிறுத்து நிறுத்து நான்  பர்ஸ் மறந்துட்டேனு சொல்லி இறங்கி ஓடி எடுத்துட்டு வந்தாரு.

அங்க இருந்து நான் highway -க்கு போகணும் .அதுக்கு நான் ரைட் எடுக்கணும்.ரைட் எடுக்கும்போது வேற யாராவது எதிர்புறம் வராங்களானு செக் பண்ணிட்டு போகணும். நானும் அப்டித்தான் செக் பண்ணினேன். அந்த நின்ன சில வினாடி அவரால வெயிட் பண்ணமுடியல .போலாம் போலாம் நீ போ னு சொன்னாரு. நான் பொதுவா கேட்கமாட்டேன் .கண்டுக்க மாட்டேன். ஏன்னா எனக்கு என் safety, என்ன நம்பி  வண்டி ஏறுறவங்களோட safety ,என்னோட கார்-ஓட safety எல்லாமே முக்கியம்.

அதனால நா சில வினாடி வெயிட் பண்ணிட்டுதான் எடுத்துட்டேன். உடனே பின்னாடி இருந்து அவரு உச்சு கொட்டி தன்னோட அதிருப்தியை வெளிப்படுத்தினார். நான் கண்டுக்கல.  highway-ல போய்க்கிட்டு இருக்கும் போது ஒரு மாதிரி பரபரப்பாவே உக்காந்துட்டு இருந்தார். highway -ல இருந்து அவரு வேல செய்ற இடத்துக்கு ரெண்டு மூணு சிக்னல் தாண்ட வேண்டி இருந்தது . ஒரு சிக்னல்-ல ஆரஞ்சு இருக்கும் போது நான் ஸ்டாப் பண்ண ரெடி ஆனேன் ஆனா அவர் பின்னாடி உக்காந்து போய்டு போய்டு-னு சொன்னார். நான் தான் சொன்னேனே கேட்கமாட்டேன்னு , நா போகல. நின்னுட்டேன் .ரெட் விழுந்துடுச்சு.  மறுபடியும் அவருக்கு அதிருப்தி . நான் தான் சொன்னேனே போகலாம்னு, போயிருக்கலாம்னு கொஞ்சம் எரிச்சலோட சொன்னார். நான்  பதில் சொல்லல.

அவர் ஒரு இண்டஸ்ட்ரி-ல வேல செய்றவர் போல. அதுக்குள்ள போக left, right -னு ரெண்டு சைடு இருக்கு . நான் left எடுத்துட்டேன் . சரி போ போ-னு சொன்னார். உள்ளபோயி gate  கிட்ட நிறுத்திட்டேன். அவர் கார் விட்டு முழுசா இறங்கல . ஒரு கால் உள்ள ஒரு கால் வெளில இருக்கு . அவர் என்ன பாத்து 'hey thanks . you did  a good job. I love you ' அப்டினு சொன்னாரு. 

அவ்ளோதான் எனக்கு வௌ வெளுத்து போச்சு. விவேக் காமெடி -ல சொல்றமாதிரி I love you-சொன்னா அப்பன் அருவாளோட வருவாரு-னு  , வளந்த புள்ள . I love you -ஒரு காதலன் காதலிக்கிட்ட சொல்லணும் அல்லது ஒரு  காதலி காதலன்கிட்ட சொல்லணும் அவ்ளோதான்.இப்படி சினிமா பாத்து கேட்டு வளந்த  புள்ள தான் நானு. என்னபாத்து இவரு இப்படி சொன்னதும் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. 

நா அப்டியீ பாக்குறேன் அவரை. அவரு போகமாட்றாரு . hey , i  said  I love you-னு வேற சொல்றாரு. எனக்கு என்ன சொல்றதுன்னு அப்பவும் தெரியல . ஆனா அந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்பனும்னு மட்டும் நினைக்குறேன். இந்த மனுஷன் இறங்கவும் மாட்டறாரே கார் விட்டு. என்ன பண்றதுனு அவரையே பாக்குறேன்.என்னையும் அறியாம love you too -னு சொல்லி மண்டைய ஆட்டுறேன்  பயத்துல. அப்பறம் தான் அவரு இறங்குறாரு. கைப்புள்ள எடுடா வண்டிய-னு reverse -லயே போய் வண்டிய திருப்பிக்கிட்டு அந்த இண்டஸ்ட்ரி -தாண்டினதுக்கு அப்பறம் தான் ரிலாக்ஸ் ஆகி ஒரு ஓரமா நிறுத்தி என்ன நடந்ததுன்னு யோசிச்சேன்.

என்னது love you too -னு சொன்னியா அவன்கிட்ட . அறிவிருக்கா. உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. இப்படி நீ அவன்கிட்ட சொல்லிட்டு வந்து இருக்கனு என்ன திட்டுறேன். first வீட்டுக்கு போவோம்னு வண்டியை எடுத்துகிட்டு கிளம்பியிட்டேன். offline -போய்ட்டேன் ,so எனக்கு எந்த வண்டி request -ம் வராது.

வழியெல்லாம் இதே மண்டையில ஓடிக்கிட்டு இருக்கு . இப்படி சொல்லிட்டானே பாவி . அதுக்கு நீ பதிலுக்கு இப்படி சொல்லிட்டியே படுபாவினு திட்டிக்கிட்டே வரேன்.

அப்பறம் தான் எனக்கு புரிஞ்சது , நாம நினைக்குற லவ் வேற அவரு சொன்ன லவ் வேற. என் மேல கடுப்பு அடிச்சுக்கிட்டே வந்தாரே அதுக்கு சாரி சொல்லாம அந்த மனுஷன் இப்படி சொல்லிருக்காருனு எனக்கு புரிஞ்சது. அது இந்த நாட்டுல சகஜம் . யாரு யாருக்கு வேணும்னாலும் சொல்லலாம். அது அன்ப சொல்ற விதம் அவ்ளோதான். இளம் வயசுல சொல்ற காதல் இல்ல . அட லூசு பயலே இப்படியா என்ன பயமுறுத்துவனு சொல்லிக்கிட்டு , அட லூசு இப்படியா நீ பயப்படுவ -னு என்ன நானே திட்டிக்கிட்டு வந்தேன். உடனே என் புருஷனுக்கு கால் பண்ணி நடந்ததை சொல்லி  ரெண்டுபேரும் சிருச்சுக்கிட்டு இருந்தோம். அப்பறம் மறுபடியும் online -போயிட்டு வேலைய தொடர்தேன் . 

இப்படி நிறைய சுவாரசியமான அனுபவங்கள் இருக்கு அந்த வேலையில .



















வியாழன், 2 ஜூலை, 2020

Kids car safety seat அவ்வளவு முக்கியமா?

அமெரிக்கால பொறந்த குழந்தையில் இருந்து அந்த குழந்தையின் ஒரு குறிப்பிட்ட உயரம் ,வயசு வரவரைக்கும் கண்டிப்பா  குழந்தைங்களுக்கான கார் சீட் கண்டிப்பா உபயோகிக்கணும்.

அதுதான் இந்த சட்டம். நம்ம நாட்டுல ஒரு சின்ன கார்ல எத்தனைபேர் அடைச்சு உக்கார /உக்காரவைக்க முடியுமோ அத்தனைப்பேரை உக்காரவச்சுருப்போம். ஆனா அந்த கதை எல்லாம் இங்க நடக்காது.

மாடியில உக்கரவச்சு குழந்தைகளை கூப்பிட்டுப் போகவே முடியாது. அப்படி நாம செஞ்சுட்டா அத போலீஸ் எப்படியாவது கண்டுபிடிச்சுடுவாங்க .  இல்ல பொதுமக்களே யாராவது பாத்துட்டாலும் உடனே கார் நம்பரோட நம்மள பத்தி கம்ப்ளைண்ட் பண்ணிடுவாங்க.

அப்படி போலீஸ் ளிட்ட மாட்டினோம்னா பைன் மட்டும் இல்லாம நம்ம லைசென்ஸ்ளையும் மார்க் பண்ணிடுவாங்க.

எந்த மாதிரி கார் செஅட் உபயோகிப்பாங்க எப்படி உபயோகிப்பாங்கனு தான் இந்த. வீடியோவில் நாம பாக்கப் போறோம் .




Subscribe :

ஞாயிறு, 21 ஜூன், 2020

எங்கள் வீட்டுக் குட்டி தோட்டம்

வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு இங்க . இந்த வெயில் காலத்துல முதல் தடவையா சில காய்கறி கீரை செடிகள் வளத்துப்பாக்கலாம்னு விதைகளை போட்ருக்கேன் . நல்லா வளந்துக்கிட்டு இருக்கு . அந்த விடியோவை தான் இன்னைக்கு நீங்க பாக்க போறீங்க.







Subscribe :

வியாழன், 4 ஜூன், 2020

அமெரிக்க மக்கள் அசைவம் அதிகம் சாப்பிட காரணம் என்ன தெரியுமா ?

அமெரிக்கா மக்களுக்கு அசைவம்னா ரொம்பவே பிடிக்கும். இங்க சைவப் பிரியர்களும்  இருக்காங்க. ஆனா அசைவப் பிரியர்கள் ரொம்ப அதிகம் இங்க . ஏன் இவங்கஇவ்வளவு அதிகமா அசைவம் சாப்பிடறாங்கனு தெரிஞ்சுக்கணுமா? அப்போ இந்த வீடியோ பாருங்க




Subscribe :

செவ்வாய், 2 ஜூன், 2020

காலங்கள் கடந்தும் மாறாத வடுக்கள் !! | Racism | Color discrimination

இப்போ அமெரிக்கா முழுக்க கொரோனாவை மறந்து  மக்கள்  வேற ஒரு விஷயத்துக்காக போராடிகிட்டு  இருக்காங்க. அது என்னனு எல்லாருக்குமே தெரிஞ்சு  இருக்கும் .ஆமா , ஜார்ஜ் பிலோய்ட் -ங்குற ஒரு ஆப்ரிக்க இனத்தவர் ஒரு அமெரிக்க காவல் அதிகாரியால கொல்லப்பட்டதுதான்.

இங்க ஏன் இதுமாதிரி நடக்குது?ஏன் வெள்ளையர்களுக்கு கறுப்பினத்தவரை பிடிக்கமாட்டுது
?அவங்க என்ன பண்ணினாங்க? ஆப்ரிக்கர்கள் அமெரிக்காவுக்கு வந்து பலகாலம் ஆகுது. அவங்க எதுக்காக அமெரிக்காவுக்கு வந்தாங்க , அவங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? அமெரிக்கர்கள் எப்படி அவங்களை நடத்தினாங்க.

இதுமாதிரி பல கேள்விக்கு பதில் அவங்களுடைய வாழ்க்கை வரலாறு தெரிஞ்சாதான் நாம சரியா சொல்ல முடியும். அவங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது எப்படி ஆரம்பிச்சதுனு இந்த வீடியோ பாத்தா நீங்க ரொம்ப சரியா தெரிஞ்சுக்கலாம்.



Subscribe :

ஞாயிறு, 31 மே, 2020

காரில் இருந்தபடியே zoo-விற்கு ஒரு visit !

COVID -19 காரணமா இவ்ளோ நாள் மூடியே இருந்த மாகாணங்கள் இப்போ ஒன்னு ஒன்னா திறக்க ஆரம்பிச்சிருக்காங்க அமெரிக்காவில் .

கிட்டத்தட்ட இரண்டரை மாசத்துக்கு மேல எங்கையும் போகாம இருந்த மக்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா வெளில போக ஆரம்பிச்சிருக்காங்க.

 நாங்களும் இரண்டரை மாசத்துக்கு அப்பறம் போனவாரம் டிரைவ் through ஜூ -னு சொல்லப்படுற காரில் இருந்தபடியே  ஜூ சுத்தி பாக்குற மாதிரி இங்க இருக்குற ஒரு ஜூ-வை தற்காலிகமா மாத்தி இருக்காங்க.

அந்த ஜூ தான் இந்த வீடியோவில் பாக்க போறீங்க .




Subscribe :

வியாழன், 21 மே, 2020

அமெரிக்காவில் லாட்டரி கடை !

நம்ம ஊருல லாட்டரி கடைகள் பத்தி நான் கேள்விபட்டருக்கேன், பாத்துருக்கேன். ஆனா வெளிநாடுகள்ல நான் லாட்டரி இருக்கும்னு கேள்விப்பட்டது இல்ல. அதுவும் அமெரிக்கா மாதிரி வளர்ந்த நாடுகள்ல லாட்டரி மேல இப்படி ஒரு பைத்தியமா இருப்பாங்கன்னு நான் நினைச்சது கூட இல்ல.

புளோரிடா ட்ரிப் போயிட்டு வரும்போது ஒரு கடையில லோட்டோரி டிக்கெட்ஸ் விக்குறது பாத்தோம். ஆச்சர்யப்பட்டுட்டோம். அந்த கடையை நிர்வகிப்பவர் நம்ம நாட்டுக்காரர். அந்த கடை முழுக்க அவ்ளோ ஸ்டிக்கர்ஸ் ஒட்டி வச்சுருக்காங்க ஜெயிச்சவங்க யாருனு. ரெண்டு நிமிஷத்துக்கு ஒருதரம் யாராவது வந்து லாட்டரி வாங்கிட்டு போறாங்க.

நாங்க இருந்தபோது கூட ஒருத்தங்க 500 டாலர் ஜெயிச்சாங்க. ஆச்சர்யமா இருந்தது பாக்குறதுக்கு. அது பத்தி நாங்க அந்த கடையை நிர்வகிப்பவர் கிட்ட பேசினோம் . அந்த வீடியோ தான் இப்போ நீங்க பாக்கபோறீங்க.




Subscribe :


செவ்வாய், 19 மே, 2020

சின்ன சின்னதா ஒரு பெரிய வீடியோ !

சின்ன சின்னதா ஒரு பெரிய வீடியோ - என்ன பேரே வித்யாசமா இருக்கா? ஆமாங்க குட்டி குட்டி விடீயோக்களை ஒண்ணா சேத்து தொகுத்து ஒரு பெரிய விடியோவா மாத்திருக்கோம் .

இந்த குட்டி குட்டி விடீயோக்களில் நிறைய சுவாரசியமான குட்டி விடியோக்கள் இருக்கு. அதனால மிஸ் பண்ணாம பாருங்க.


இந்த விடியோவை பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க

                                ↓

https://www.youtube.com/watch?v=M3Ik-MAgeX4




Subscribe :


100 வருஷத்துக்கு முன்னாடி கட்டப்பட்ட 100 மாடி கட்டிடம் !

100 வருஷத்துக்கு முன்னாடி கட்டப்பட்ட 100 மாடி கட்டிடம் தான் இந்த எம்பயர் ஸ்டேட் பில்டிங். இந்த எம்பயர் ஸ்டேட் பில்டிங்யை நாம் பல படத்துல பாத்துருப்போம்.

ஜீன்ஸ் படத்துல 7 அதிசயத்துல ஒரு அதிசயமா பாத்துருப்போம். ஆனா இந்த எம்பயர் ஸ்டேட் பில்டிங் பத்தி நிறைய அறிந்திடாத ,சுவாரசியமான விஷயங்கள் பத்தி உங்களுக்கு தெரியுமா?

அதை தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க். கிளிக் பண்ணி வீடியோ பாருங்க

                       ↓

https://www.youtube.com/watch?v=9nI4e7f2_qc




Subscribe :


பிரான்ஸ் அமெரிக்காவுக்க கொடுத்த சுதந்திர தேவி சிலை.

சுதந்திர தேவி சிலையை நாம நிறையபேர் பாத்துருப்போம். சினிமாவுல இல்ல நேர்ல பாத்துருப்போம். இது பிரான்ஸ் அமெரிக்காவுக்கு குடுத்த அன்பளிப்பு -னு கூட சில பேருக்கு தெரிஞ்சுருக்கும்.சில பேருக்கு தெரியமா இருக்கும்.

ஆனா இந்த சுதந்திர தேவி சிலை இப்போ இருக்குற இந்த  இடத்துல வைக்க எவ்வளவு போராட்டங்கள் நடந்தது,எவ்வளவு கஷ்டங்களை கடந்து இந்த இடம் தேர்வானதுனு நம்மள்ல நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பு இல்ல.

இதை பத்தி முழுசா விவரமா இந்த வீடியோவில்  சொல்லிருக்கோம். கண்டிப்பா இந்த விடியோவை பாருங்க.நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.

இந்த விடியோவை பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க

                                          ↓

https://www.youtube.com/watch?v=wmoFL_E4u5w




Subscribe :


சுவினியர் அப்படீன்னா என்ன தெரியுமா ?

சுவினியர் ஒரு சுவாரஸ்யமான வார்த்தைங்க. நாம ஒரு இடத்துக்கு போனோம்னா அந்த இடம் நினைவா நாம ஏதாவது ஒரு பொருள் வாங்கிட்டுவந்து வீட்ல பத்திரமா வச்சுக்குறது ( அல்லது மத்தவங்களுக்கு gift-ஆ கொடுக்கலாம் ) .

நாம ஸ்கூல் காலேஜ் படிச்சா சமயத்துல நமக்கு பிடிச்சவங்களோட நினைவா நாம எதாவது ஒரு பொருளை (அல்லது பல பொருளை ) அவங்க நியாபகமா வச்சிருப்போம்  இல்லையா அது கூட ஒரு வகைல சுவினியர் தான்.

நாங்க போன புளோரிடா ட்ரிப்ல ஒரு கடைக்கு போனோம் அங்க என்ன ரன்ன பொருட்கள் இருந்தது.என்ன என்ன சுவினியர்களா இருந்ததுன்னு தான் நீங்க இந்த வீடியோவில் பாக்க போறீங்க.


இந்த விடியோவை பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க

                             ↓

https://www.youtube.com/watch?v=qA7qE3Slu08




Subscribe :


எல்லா வகை மீனும் இங்க பாக்கலாம் !!

நாங்க இந்த பிளோரிடா trip-ல ICon பார்க்-க்குனு ஒரு இடம் ஒர்லாண்டோல இருக்கு. அங்க போயிருந்தோம். இந்தஜா பார்க்கு உள்ள Sea life -னு ஒரு aquarium இருக்கு .

இந்த aquarium-ல எல்லா வகை கடல் வாழ் உயிரினங்களும் நாம பாக்கலாம்.அவ்ளோ அழகா இந்த aquarium-ஐ maintain பண்ணிருக்காங்க.

ரொம்ப ரொம்ப அழகா , ஒரு நஃபுது அனுபவமா இருக்கும் இத பாக்க .இந்த விடியோவை தான் நீங்க கீழ இருக்குற லிங்க்ல பாக்கப்போறீங்க .

இந்த விடியோவை பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க

                                         ↓

https://www.youtube.com/watch?v=WjGrbCpVy3I




Subscribe :


அமெரிக்காவில் ஸ்டார் ஹோட்டல் !!

நாங்க பிளோரிடாவுக்கு ஒரு trip  போயிருந்தோம் 4 மாசம் முன்னாடி. அங்க நாங்க ஒருன்ஸ்டார்ட் ஹோட்டல்ல தங்கினோம்.

அமெரிக்கால  ஸ்டார் ஹோட்டல என்ன என்ன வசதிகள் இருக்கு .என்ன என்ன வசதிகள் நமக்கு செஞ்சுதாரங்கனு ரொம்ப அழகா விளக்கமா நீங்க இந்த வீடியோவை பாத்து தெரிஞ்சுக்கலாம்.

இந்த விடியோவை நீங்க பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க

                        ↓

https://www.youtube.com/watch?v=ylgm9mH7254



ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

Rest Area In the USA !

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நாங்க Florida-வுக்கு ஒரு Road Trip போனோம் . அங்க என்ன என்ன விஷயங்கள் பாத்தோம் .எங்க  எங்க தங்கினோம் எப்படி இருந்ததுனு நிறையா விஷயங்கள் இனிவரப்போற  வீடியோகள்ல பாக்க போறோம் . அந்த வரிசையில இப்போ பாக்க போறது Rest Area பத்தி பாக்கபோறோம்.

Rest Area - இதுலையே உங்களுக்கு அர்த்தம் புரிஞ்சிருக்கும் . இங்க பொதுவா High Way -ல ஒரு ஒரு 1 மணி நேரத்துக்கு ஒண்ணுனு விகிதத்துல ஒரு Rest Area இருக்கும். இங்க Rest  Area எப்படி இருக்கும் ?  என்ன என்ன Facility இருக்கும் ?னு Rest Area பத்தி தெரிஞ்சுக்க கீழ  இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க


Rest  Area எப்படி இருக்கும் ? 

            ↓

https://www.youtube.com/watch?v=sNUv5yVZWlM




ரொம்ப ரொம்ப easy இந்த வேலை !

அமெரிக்காவுல பாத்திரம் கழுவவும் mechine இருக்குனு சொன்னா கொஞ்சம் ஆச்சர்யமாதான் இருக்கும். ஆனா ஆதித்தன் உண்மை . இங்க இந்த mechine இல்லாத வீடே இருக்காது. எப்படி ஒரு வீடுன்னா கதவு ஜன்னல் முக்கியமோ அதே மாதிரிதான் இங்க ஒரு வீடுன்னு எடுத்துக்கிட்டா fridge , washing  mechine ,dryer , ovan , microwave , dishwasher இதுலாமும் ரொம்ப முக்கியம் . அப்படி என்ன இந்த dishwasher-ல இருக்கு? அத எப்படி use பண்றது? அது எவ்ளோ நல்லா clean பண்ணும்?எத clean clean பண்ணும் எத clean பண்ணாது ?!இப்படி dishwasher பத்திய  விஷயங்கள் தெரிஞ்சுக்கணுமா , அப்போ கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க.


 Dish  Washer எப்படி உபயோகிக்கிறது ?

                         ↓

https://www.youtube.com/watch?v=ntZlivBHxAU




கடல்லையே இல்லையாம் !!

இந்த கொரோனாவால எங்கையும் வெளில போக முடியல . இன்னைக்கு கடைக்கு போயிட்டு கொஞ்சம் வீட்டுக்கு தேவையான பொருள் வாங்கிட்டு வரலாம் னு கிளம்பினேன் . நான் பட்ட பாட நீங்க தெரிஞ்சுக்கணுமா ,அப்போ கீழ இருக்குற லிங்க் போய் பாருங்க

                     ↓

கொரோனாவால கடை எல்லாம் எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கணுமா ?




வியாழன், 19 மார்ச், 2020

அமெரிக்காவில் அண்ணாச்சி கடை !!

பொதுவா பிள்ளைங்க அமெரிக்காவுக்கு போறாங்கணா உடனே அம்மா அப்பா ,ஹையோ இவ்வளவு தூரம் போறாங்களே நம்ம  பிள்ளைங்க    பொய் நம்ம சாப்பாடு சாப்பிடமுடியாதே , அங்க அது கிடைக்காதே , இது கிடைக்காதே ! நம்ம ஸ்வீட் மிஸ் பண்ணுவாங்களே , நம்ம காரம் மிஸ் பண்ணுவாங்களே . நம்ம ஊரு சுவையான சாப்பாடு அங்க கிடைக்காதே இது மாதிரி ஆயிரம் எண்ணங்களோடு வழியனுப்பிவைப்பாங்க .

ஆனா உண்மையா சொல்லனும்னா அப்படி எதையுமே இங்க நாம மிஸ் பண்ண மாட்டோம் . அப்பா அம்மா தவிர . ஏன்னா இங்க இந்தியன்ஸ் அதிகமா இருக்காங்கனு தெரிஞ்சா உடனே அங்க நம்ம ஊரு மளிகை  கடை , நம்ம ஊரு ஹோட்டல் எல்லாமே அமஞ்சிருக்கும். இந்தியன் சூப்பர் மார்க்கெட்னு எடுத்துகிட்டோம்னா அங்க நம்ம நாட்டுல என்ன என்ன நாம உபயோகிப்போமோ அது எல்லாமே அங்க கிடைக்கும்.

நம்ம நாட்டோட விலையோட இந்த நாட்டுல கிடைக்குற பொருளோட விலையோட compare பண்ணி பாக்க கூடாது.அப்படி பாத்தோம்னா நம்மால கொஞ்சம் கூட எதையும் வாங்க முடியாது. அதனால தேவையானதுக்கு compare பண்ணிட்டு இது மாதிரி சாப்பிடற சமைக்குற விஷயத்துல compare பண்ணாம இருந்தா நாம கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்.

நாங்க இங்க FLORIDA -ல ஒரு இந்தியன் சூப்பர் மார்க்கெட்க்கு போனோம் .அங்க நம்முடைய என்ன என்ன பொருள் கிடைக்குது அதன் விலை என்னனு வீடியோவில் காட்டிருக்கோம். நீங்க இந்த வீடியோ பாத்தீங்கன்னா உங்களுக்கு. ஒரு ஐடியா இதைப்பத்தி கிடைக்கும் .

இந்த் விடியோவை பாக்க கீழ இருக்குற லிங்க்  கிளிக் பண்ணுங்க

                                           ↓

அமெரிக்காவில் அண்ணாச்சி கடை !!




செவ்வாய், 10 மார்ச், 2020

ஒரு குட்டி drive போலாமா?

அமெரிக்காவில் நாம அவ்வளவு ஈஸியா  இல்ல ஈஸியானு சொல்றதை விட casual -ஆ டிரைவ் பண்ணிட முடியாது.1008 rules and regulations வச்சிருக்காங்க.ஒரு 6 நிமிஷ குட்டி டிரைவ் மூலமா என்ன என்ன driving rules நாம பாக்குறோம் follow பண்றோம்னு இந்த வீடியோவில் சொல்லிருக்கேன். இந்த வீடியோ பாருங்க நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.

இந்த வீடியோ பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க .
                           
                       ↓

    ஒரு குட்டி drive போலாமா?



வியாழன், 5 மார்ச், 2020

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் எப்படி இருக்கு ? அமெரிக்க மக்களின் மனநிலை எப்படி இருக்கு ? இங்கு இன்னும் அதிகமா இந்த வைரஸ் பரவ வாய்ப்புக்கள் இருக்கா? இது பரவாமல் தடுக்க அரசு என்ன என்ன நடவடிக்கை எடுத்துக்கிட்டு இருக்காங்க ? இதுபோன்ற பல விஷயங்களை தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க்  கிளிக் பண்ணுங்க

                                                 ↓


                         அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம்