பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 21 ஜூன், 2026

என்ன ஒரு கஷ்டம் பாருங்களேன் இந்த பொண்ணுங்களோட நிலைமை .

 ஒரு ஒரு பொண்ணோட நிலையும்  என்ன தெரியுமா? அவ பொறந்து 25 வருஷம் அப்பா, அம்மா, கூட பிறந்தவங்க, செல்ல நாய்க்குட்டி, பூனைக்குட்டி , தன்னோட ஊஞ்சல், தனக்கு பிடிச்ச தோட்டம், பால்கனினு எல்லாத்தையும் விட்டுட்டு கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டுக்கு போறா. 

அந்த வீடு தன்னுடைய in -laws வீடுன்னா அவ அந்த வீட்ல அவளோட ரூமை தவிர வேற எங்கேயும் எந்த உரிமையையும் எடுத்துக்க முடியாது . அவளுக்கு அந்த வீட்டோட full control எப்போ தெரியுமா வரும் , அவளுக்கு பிள்ளைகள் பிறந்து அவங்க  வளந்து கல்யாணம் ஆகி அவங்களுக்கு பிள்ளைகள் பிறந்ததுக்கு  அப்பறம் அதாவது பேரன் பேத்தி வந்ததுக்கு அப்பறம் அவளோட in -laws போனதுக்கு அப்பறம் அல்லது அவங்களுக்கு ரொம்ப வயசானத்துக்கு அப்பறம் தான் அந்த வீட்டோட முழு control -ம் அவளுக்கு கிடைக்கும். 

சில நேரம் தன் பையனுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம்  கூட கிடைக்கலாம் . அப்படி அந்த சமயத்துல அந்த பெரியவங்க எப்படி தன்னோட வீட்டுக்கு வந்த மருமகளுக்கு தன்னோட இடத்தை குடுப்பாங்க? ஏம்மா எனக்கே இப்போதான்மா இந்த இடம் கிடைச்சிருக்கு கைக்கு வைத்ததும் நீ வந்து வாங்கிட்டா எப்படினு குடுக்க மாட்டாங்க. same இதே நிலைமை அந்த வீட்டுக்கு வந்த  பெண்ணுக்கு  தொடரும் , அந்த பொண்ணு இதையே தன்னோட மருமகளுக்கு செய்வாங்க.இப்படித்தான் போயிகிட்டு இருந்தது . காலம் இப்போ எவ்வளவோ மாறிடுச்சு. 

நீ உன் வாழக்கையை பாரு நான் என் வாழ்க்கையை பாக்குறேன்ன்னு போகுறாங்க. (சில நேரம் புருஷன் பொண்டாட்டியே அப்படி போகிடுறாங்க ).

கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன், அந்த பொண்ணு friends family -னு எல்லாத்தையும் விட்டுட்டு இன்னோர் வீட்டுக்கு போறா , அவளுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்க யாரும் இருக்க மாட்டாங்க. அவளுக்கு என்ன பிடிக்காதுன்னு தெரிஞ்சுக்க யாரும் இருக்கமாட்டாங்க .கல்யாணம் பண்ணினா உடனே புருஷன் எல்லாத்தையும் தெரிஞ்சு புரிஞ்சு வச்சுப்பாங்களாக்கும்? கண்டிப்பா கிடையாது .

அவளுக்கு என்ன திறமை இருக்கு? அவ எப்படி படிச்சா? அவளுக்கு என்ன விளையாட பிடிக்கும்? அவ ஸ்கூல் இல்ல college இல்ல வேல செஞ்ச இடத்துல கிண்டல் கேலியா இருந்தாளா?இல்ல ரொம்ப அமைதியா  சமத்து பொண்ணா இருந்தாளா? இல்ல அறந்தவாலா இருந்தாளா? இது எதுவுமே புகுந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு தெரியாது . தெரிஞ்சுக்கவும் விரும்ப மாட்டாங்க.

ஆனா அந்த வீட்ல இருக்குறவங்கள பத்தி அந்த பொண்ணு எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கணும் . இல்லைனாலும் எப்படியும் தன்னோட பிள்ளைங்களை புராணத்தை மாமியாரும் மாமனாரும் பேசிக்கிட்டே இருப்பாங்க , இல்ல புருஷன் கொழுந்தனார் ,கொழுந்தியானு அவங்கல பத்தியே பேசிக்கிட்டே இருப்பாங்க ,அது கேட்டு கேட்டு அவளுக்கு பழகிடும் .

இன்னோர் கொடுமையான விஷயம் என்னனா ,பொறந்த  வீட்டுக்கு போயி ஒரு நாலு நாள் மறுபடியும் இளவரசி மாதிரி இருந்துட்டு வரலாம்னு பாப்பா , ஆனா அவளுக்கு அண்ணன்கள் இருந்து அவங்களுக்கு கல்யாணம் ஆகி இருந்தாலோ, இல்ல தம்பிகள் இருந்து அவங்களுக்கு கல்யாணம் ஆகிருந்தாலோ அல்லது அக்கா தங்கைனு இருந்து அவங்களும் அதே நேரத்துக்கு வந்தாலோ அவளுக்கு காட்டப் படுற கவனிப்பு கம்மியாகும் .அதுவும் தன்  கணவனும் கூட வந்தா சத்தியமா அவளை அவங்க வீட்லையே கவனிக்கமாட்டாங்க ,மாப்பிள்ளைக்கு தான் முதல்ல எல்லாமே. ஆக, ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் அவளுக்கு பிறந்த வீடும் இல்ல , புகுந்த வீட்லயும்  அவளுக்கு priority கடைசிதான். அதுவும் பேர பிள்ளைங்க இருந்தா சுத்தம் , அவளுக்கு கடைசி priority-தான் ரெண்டு வீட்லயும்.

என்ன ஒரு கஷ்டம் பாருங்களேன் இந்த பொண்ணுங்களோட நிலைமை .

ஞாயிறு, 14 ஜூன், 2026

தலைவரா? சூப்பர் ஸ்டாரா ?

எனக்கு வந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சாரை ரொம்ப பிடிக்கும் .அவர ஒரு தரமாவது லைஃப் டைம்ல பாக்கணும் போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கு. ஆனா அவரை வந்து சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடுவதற்கு தான் எனக்கு ஆசையே தவிர தலைவர்னு கூப்பிடுவதற்கு எனக்கு விருப்பமில்லை .அவர் அரசியலுக்கு வராதா இருந்தது, அப்போ நாங்க தலைவர்னு கூப்பிட்டோம் .ஆனா அவர்தான் வரலையே.

 தலைவர்னு யாரை சொல்லுவோம் தன்னோட மக்களை சரியான முறையில அவங்களை வழி நடத்துறவங்களை தான் தலைவர்னு சொல்லணும். 

அவருடைய பொண்ணு சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தான் எப்பயும் வந்து எந்த போஸ்ட் போடும் பொழுதும் தலைவர் அப்படின்னு மென்ஷன் பண்ணி போடுறாங்க .எதுக்காக அவரை நாங்க தலைவர்னு கூப்பிடனும் ?அவர் எந்த அரசியலையும் இல்ல .அவர் இளைஞர்களையோ  இல்ல அவருடைய ரசிகர்களையோ  வழி நடத்தல. அவங்களை ஒழுங்கு படுத்தல. 

இப்போ நடிகர் அஜீத் குமாரை சாரை எடுத்துக்கிட்டோம் அப்படின்னா ,ஒரு கோயிலுக்குப் போகும் பொழுது அங்கு அவரைப் பார்த்து விசில் அடிக்கிறவங்களை அப்படி செய்யாத ! இது அந்த இடம் கிடையாது !,அப்படின்னு சைகையால் சொல்றாரு .ஒரு போட்டோ எடுக்குறதுக்கு கூட நீங்க வரிசையில நின்னாதான் முதல்ல நான் போட்டோ எடுக்க அனுமதியே தருவேன் அப்படின்னு சொல்றாரு. இந்த இடத்துல கத்தாதீங்க ,இந்த இடத்துல எனக்காக சத்தம் கொடுக்காதீங்க அப்படின்னு சொல்றாரு. எனக்காக சண்டை போடாதீங்க .உங்களுடைய வாழ்க்கையை நீங்க பாருங்க இப்படி பல வகைகளில் அவருடைய ரசிகர்களை அவர் வழிநடத்துறாரு.இதுதான் ஒரு தலைவன் பண்றது. இந்த மாதிரி போன்றவர்களை தலைவர்னு  சந்தோஷமா சொல்லலாமே, ஆனா ரஜினி சாரை  எதுக்கு தலைவர்னு சொல்லணும் நாங்க? சூப்பர் ஸ்டார்னு மட்டும் சந்தோஷமா சொல்றோமே . 

புதன், 10 ஜூன், 2026

இதுல எது உண்மை ? எது பொய் ?

 எனக்கு ஒரு விஷயம் புரியல . முன்னாடி நான் அந்த நடிகருக்கு போட்டி கிடையாது , அந்த நடிகரும் எனக்கு போட்டி கிடையாதுன்னு சொன்னீங்க . நா அவரை compare பண்ணிக்கிட்டா அது  எனக்கு அசிங்கம் அவர் என்னை compare  பண்ணிக்கிட்டா அது அவருக்கு அசிங்கம்னும் சொன்னீங்க . அப்பறம் காக்கா கழுகு கதையை சொன்னீங்க. அப்புறம் இத நான் எந்த நடிகரையும் நினச்சு சொல்லலைனு சொன்னீங்க. நா சொன்னாலும் நீங்க கேக்கவா போறீங்கனும் சொன்னீங்க. 

இப்போ அரசியல்ல ஜெயிச்சு முதலமைச்சர் ஆகிட்டார். அவரை பாத்து பொறாமைப்படல ,ஒரு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் -னு சொன்னீங்க. நான் அரசியலை விட்டு விலகிட்டேனு சொன்னீங்க. அதுக்கு சரியான காரணமும் சொன்னீங்க. 

எல்லாம் சரி , அப்பறம் இப்போ ஏன் தனி இயக்கம் ஆரம்பிக்குறீங்கன்னு சொல்றாங்க ?(direct -ஆ நீங்க இல்லைனாலும் உங்க குடும்பம் தானே) .அந்த நபருக்கு  ஆதரவு தரப்போறீங்கன்னு சொல்றாங்க .ஆன்மீக அரசியல் அவரை வச்சு பண்ணபோறீங்கன்னு சொல்றாங்க . உங்க குடும்ப உறுப்பினர்கள் அதுல இணையப்போறாங்கனு சொல்றாங்க.

இதுல எது உண்மை ? எது பொய் ?

நீங்க வந்துருந்தா கண்டிப்பா ஜெயிச்சுருப்பீங்க .சந்தேகமே இல்ல . ஆனா வரல இல்ல.. இனிமே வேணாமே . உங்கள நாங்க திரையிலையே ரசிச்சுட்டு போறோமே . அதுவே எங்களுக்கு எப்பவும் அளவில்லாத சந்தோஷம்.


திங்கள், 9 மார்ச், 2026

என்னத்த சொல்ல ...

 காலம் காலமா மக்கள் மனசுல நீங்கா இடம் பிடித்திருக்கிற கருணாநிதி ,எம்ஜிஆர் இவங்களை மாதிரியான தலைவர்களுக்கெல்லாம் ஒரு மனைவி மட்டும் கிடையாது ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்தாங்க .அது மக்களுக்கும் தெரியும். மக்கள் அதை பெருசா எடுத்துக்கல. ஏன்னா அப்போ இருந்த மக்களுடைய மனநிலை அப்படித்தான் இருந்தது. அப்போ சாதாரணமாவே ஆண்கள் ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிறது ஒரு சாதாரண விஷயமா தான் இருந்தது. சாதாரண ஆண்களுக்கே அது ஓகே அப்படின்னா இந்த மாதிரியான பெரிய தலைவர்கள் எல்லாம் கேட்கவே வேண்டாம். அதனால மக்கள் அதை பெருசா எடுத்துக்கல, பெருசா கண்டுக்கல, அது ஒரு பெரிய விஷயமா பார்க்கல. 

ஆனா இப்ப இருக்கிற காலம் வேற. மக்கள் கொஞ்சம் தெளிவா இருக்காங்க. மக்களுக்கு படிப்பறிவு இருக்கு முக்கியமா . ஆண்களுக்கு சமமா பெண் இருக்காங்க அப்படிங்கறதை சொன்னது போக இப்போ ஆண்களுக்கும் மேலாக பெண்கள் இருக்காங்க ("எல்லா விஷயத்திலும்") அப்படின்னு சொல்ற ஒரு காலகட்டத்தில் நம்ம இருக்கோம்.

 பர்சனல் லைஃப் பர்சனல் லைஃப் இருக்கிற வரைக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது . ஆனா பர்சனல் லைப் பொதுக்கு கொண்டு வந்துட்டாங்க அப்படின்னா அது பேசும் பொருள் ஆகும் தான். நீங்க அரசியலுக்கு வந்த பொழுது உங்க இண்டஸ்ட்ரில இருந்தவளே உங்கள அப்படி வரவேற்றார்கள் .சாதாரணமான நாங்கள் மட்டும் கிடையாது ,உங்க இண்டஸ்ட்ரில இருந்தவர்களே அவ்வளவு சந்தோஷ பட்டாங்க. வரவேற்றார்கள். ஏன்னா எல்லாருமே ஒரு மாற்றத்துக்காக காத்துக்கிட்டு இருந்தோம். உங்க இண்டஸ்ட்ரில உங்களை வரவேற்ற மங்களே ,இன்னைக்கு என்னடா இது அப்படின்னு நினைக்கிற அளவுக்கு தான் நீங்க செஞ்சிட்டு இருக்கீங்க.உங்களுடைய பர்சனல் வாழ்க்கை உங்களுடைய இஷ்டம் இல்லைன்னு சொல்லல ஆனா எதையும் சட்டபூர்வமாக அணுகி முடிவெடுத்து அதுக்கப்புறம் நீங்க வெளிப்படுத்தலாமே