பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 31 டிசம்பர், 2012

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

இந்த வருஷம் எல்லாரும் எல்லாவிதத்துலயும் சந்தோஷமா ,நிம்மதியா இருக்கணும்னு ஆசைப்படுறேன்.அதுதான் எல்லோருடைய ஆசையாவும்
இருக்கும்னு நம்புறேன்.பிரச்சனைகள் இல்லைனா வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்காது அதனால ,பிரச்சனைகளை எப்படி எடுத்துக்குறது ,சமாளிக்குறது ,அதுல இருந்து எப்படி மீண்டுவரதுன்னு பாத்து தன்னம்பிக்கையை அதிகமா வளத்துக்குவோம்.சந்தோஷமா இருப்போம் .மத்தவங்களுக்கு நம்மளால முடிஞ்ச உதவிகளை செய்வோம்.
பிறக்கும் போது பேரோட பிறக்கறது இல்ல.

ஆனா இறக்கும் போது நாம பேரோட இறக்குறோம்.
அந்த பேர் வெறும் பேறாமட்டும் இருக்ககூடாது
அது ஒரு வரலாரா இருக்கணும்.

--சத்தியமா இது நான் சொல்லல திரு.எ.ஆர் ரஹ்மான் அவர்கள் சொன்னதா  ஒருதரம் படிச்சேன் .எனக்கும் ரொம்ப பிடிச்சது இந்த வரிகள்.அத உங்க கூட ஷேர் பண்ணிக்குறேன்.அவ்ளோதான்.

திங்கள், 24 டிசம்பர், 2012

புதன், 19 டிசம்பர், 2012

நவதிருப்பதி - தலம் 3

திருப்புளியங்குடி (புதன்) :

திருவனகுனமங்கையில் இருந்து அதே பக்கம் கிழக்கு திசையில் அரை கிலோ மீட்டரில் இருக்கு இந்த கோவில்.பஸ் வசதி இருக்கு.

தல வரலாறு :

ஒரு சமயம் திருமால் லக்ஷ்மி தேவியோட இந்த நதி கரையில தனியா இருந்த பொழுது பூமாதேவிக்கு தன்னை ஒதுக்குறாங்களோனு கோவம் வந்து பாதாளலோகம் போக உடனே பூமி இருட்டிபோச்சாம் ,வரண்டுபோச்சாம் .இதபாத்து தேவர்கள் எல்லாரும் திருமாலை வேண்ட அவரும் லக்ஷ்மி தேவியோட பாதளலோகம் போய் ரெண்டுபேரும் சமம் தான்னு ச்வொல்லி சமாதானம் பண்ணி பூமிய காப்பாதினாராம் .பூமி தேவியை சமாதானம் பண்ணி போமிய காபாதினதால 'பூமிபாலகர்' அப்படிங்குற பேரும் வந்துச்சாம் . 
 
இமயமலையில மானுருவத்துல ரிஷியும்,ரிஷிபத்தினியும் தனியா இருக்கும் போது அங்க வந்த இந்திரன் மானுருவத்துல இருந்த ரிஷியை தனது வஜ்ராயுதத்தால அடிச்சு வீழ்த்தி பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானாராம்.வியல பகவானோட யோசனைப்படி இந்திரன் வந்து பூமி பாலனை வேண்டி இந்த தீர்த்தத்துல குளிக்க தோஷம் போயிடுச்சாம்.
இங்க பெருமாள் ஆதிசேஷன் மேல 12 அடில பள்ளி கொண்டுள்ளார்.சயனப் பெருமாளின் திருப்பாதத்தை மூலஸ்தனத்தை சுற்றி வரும்போது இருக்குற ஜன்னல் வழியா பாக்கலாம்.பெருமாள் நாபியில் இருந்து ஒரு தாமரைக்கொடி சுவருல பிரம்மன் உக்காந்திருக்குற தாமரையோட சேருது.இவருக்கு எண்ணை காப்பு செய்ய 250 லிட்டர் எண்ணை தேவைப்படுமாம்.லக்ஷ்மி தேவி பூமா தேவி ரெண்டுபேரும் பெரிய உருவங்களா பெருமாளோட திருப்பாதத்து பக்கத்துல உக்காந்து இருக்காங்க.இங்க குழந்தை இல்லாதவங்க வந்து வேண்டினா குழந்த போர்க்கும்னு சொல்றாங்க.

மூலவர்- காய்சினவேந்தன் ,புஜங்கசயனம் .கிழக்கு பார்த்த திருமுக மண்டல்.உற்சவர் - எம் இடர்களைவான் ,தாயார்- மலர்மகள்,திருமகள் .புளியங்குடிவல்லி என்ற உச்த்தவ தாயாரும் உண்டு.தீர்த்தம்-வருணநீருதி தீர்த்தம்,விமானம்-வதசார விமானம்,பிரத்யட்சம் - வர்ணம் நீருதி,தர்மராஜன்.ஆகமம் - வைகநாசம்,சம்பிரதாயம்-தென்கலை

புதன், 12 டிசம்பர், 2012

இதுலாம் வேண்டாமே .................


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரின் பிறந்தநாள் இன்னைக்கு.ரஜினி சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கோடி கணக்கான ரசிகர்கள் ஒரு திருவிழா மாதிரி இவரது பிறந்தநாளை கொண்டாடுறாங்க.
நமக்காக உயிரையே விட தயாரா இருக்குற ஒருத்தங்க இருந்தாலே அது பெரிய விஷயம்.ஆனா ரஜினி சாருக்கு ஆயிரம்,லட்சம்,கோடி கணக்கான பேர்
இருக்காங்க அப்படி.இந்த மதிப்பும், மரியாதையும்,அன்பும் எல்லாருக்கும் கிடச்சுடாது.

ரஜினி சார் ஒரு பெரிய நடிகர் அப்படிங்குற அந்தஸ்தை விட அவர் ஒரு அருமையான மனிதர்.அதனாலையே அவரை பலருக்கும் பிடிக்கும்.எனக்கும் தான்.நானும் ரஜினி சாரின் 'டை ஹார்ட் பான்' தான்.நான் மட்டும் இல்ல என் அண்ணன் என் மாமா எல்லாரும் தான்.என் அண்ணன் என் மாமா எல்லாம் ரஜினி சாரின் படத்தை முதல்நாள் முதல் ஷோ- வே பாக்கணும்னு பாக்குறவங்க தான்.நானும் விசில் அடிச்சு கைத்தட்டி ரசிக்குற ஆள் தான்.

ஆனா இந்த பால் அபிஷேகம்,அலகு குத்துறது ,வேல் குத்துறது ,தேர் இழுக்குறது இதுலாம் தேவையா?.. என்ன கொடும சார் இது?!!!!கொஞ்சம் யோசிச்சு பாப்போமே நம்மல்ல எத்தன பேர் நம்ம அம்மா, அப்பா, கூடபிறந்தவங்க பிறந்த நாளை ரொம்ப பிரமாதமா கொண்டாடுறோம்?முதல்ல எத்தன பேருக்கு தன் அம்மா அப்பா பிறந்தநாள் தெரியும்?!!!! இல்ல நியாபகம் இருக்கும்?

அவரே நிச்சயம் இதை எல்லாம் விரும்பமாட்டாறு அதுதான் உண்மை.நாம ஒருதங்கமேல வச்சுருக்குற அன்பை இப்படி எல்லாம் காட்டணுமா?

எத்தனைபேர் தன குடும்பத்துக்காக இப்படி செஞ்சு இருப்பாங்க?தன் குடும்பத்துக்காக இப்படி செலவு செஞ்சு இருப்பாங்க.

அட..கேக் வெட்றோம் ,நம்ம அன்பை காட்ட சில நல்ல விஷயங்களை செய்றோம் சரி, எதுக்குங்க நம்மள வருத்திக்கணும்?அத பாக்குற நம்ம குடும்பம் கஷ்டப்படுங்குறதை நினச்சு பாக்குறோமா?

அட ..இப்படி செய்யறதுனால அவர் மட்டும் இத பாத்து சந்தோஷமா இருப்பாரா?அன்ப காட்டுறோம்குற பேர்ல அவர் பிறந்தநாலுள அவரை கஷ்டம் தான் படுத்துறோம்.

மாறுவோம் இனியாவது.அன்பை காட்ட இப்படி முட்டாள் தனமான வேலைகளை செய்யாம இருப்போம்.இதை தான் அவரும் நிச்சயம் விரும்புவார்.

செவ்வாய், 11 டிசம்பர், 2012

நவதிருப்பதி - தலம் 2


திருவரகுணமங்கை (நத்தம்) (சந்திரன்):

ஸ்ரீ வைகுண்டதுல இருந்து 3 கிலோமீட்டர் தூரத்துல கிழக்கு வந்தால் இந்த கோவிலுக்கு வரலாம். கிராமம் தான். பஸ் வசதி இருக்கு.

தல வரலாறு :

ஒரு காலத்துல ரேவா நதிக்கரையில புண்ணிய கோஷம் என்னும் அக்கிரகாரத்துல வேதகி அபடிங்குறவர் மாதா,பிதா ,குருவுக்கு செய்யவேண்டியதுலாம் செஞ்சு முடிச்சுட்டு திருமால நோக்கி ஆஸனதை அப்படிங்குற மந்திரத்த சொல்லி தவம் இருக்கலாம்னு நினைச்சப்போ அவர்கிட்ட திருமால் கீழ் பிராமண வேஷத்துல வந்து ஆஸனதை

மந்திரத சொல்ல வரகுணமங்கை தான் சிறந்ததுன்னு சொல்ல ,வதவி இங்க வந்து கடுமையா தவம் பண்ணி திருமாலோட அருளை பெற்று பரமபதம்
அடஞ்சாராம் .

ஆஸனதை மந்திரம் சொல்லி இறைவன் காட்சிதந்த இடம்கறதால 'விஜயசானார்' என்னும் திருநாமம் திருமாலுக்கு உண்டானதாம் .பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமேசமகரிஷிக்கும் சத்தியத்தால் கணவனின் உயிரை மீட்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியான சாவித்திரிக்கும் அதர்மத்தையும் அக்கிரமத்தையும் சுட்டு பொசுக்கும் அக்கினி தேவனுக்கும் காட்சியளித்த காட்சியளித்த இடம் ,இந்த மூணு பேருக்கும் ஜெயம் அளிப்பவனாக சத்திய நாராயணனாக ஆதி சேடன் குடைபிடிக்க சத்தி ஜெயவிஜயங்களை தன ஆசனமாக கொண்டு 'விஜயாசனர்' என்னும் திரு நாமத்தோட திருமால் உக்காந்து இருக்குற கோலத்துல பரமபத சேவை தந்தருளும் கோவில் இது.இந்த கோவில்ல உயிர் பிரிஞ்சா மோட்சம் கிட்டும்னு ரோமேச முனிவர் சொல்லி இருக்காராம்.
மூலவர் - விஜயாசனபெருமாள் ,ஆதிஷேசன் குடைபிடிக்க வீற்றிருந்த கோலம் ,கிழக்கு பார்த்த திருமுக மண்டலம் ,தாயார் - வரகுணவல்லி தாயார் ,வரகுணமங்கை தாயார் .தீர்த்தம் - அக்னி ,சம்பிரதாய் - தென்கலை

வெள்ளி, 7 டிசம்பர், 2012

நவதிருப்பதி - தலம் 1மஹா விஷ்ணுவின் 108 திவ்விய தேசத்துல பரமபதம் திருபாற்க்கடல் தவிர 106 தலங்கள் இந்தியாவுல இருக்கு.அதாவது சோழநாட்ல 40,தொண்டை நாட்ல 22
,பாண்டிய நாட்ல 18,மலை நாட்ல 13,வாட நாட்ல 11,நடுநாடு 2 இப்படி அமைஞ்சிருக்கு .இதுல பாண்டிய நாட்ல இருக்குற 2 திருப்பதிகளில் தாமிரபரணி நதியோட ரெண்டுபக்கமும் இருக்குற 9 திருத்தலங்கள தான் நவதிருப்பதினு சொல்றோமாம் .

1) திருவைகுண்டம் 2) திருவரகுணமங்கை(நத்தம்) 3)திருப்புளியங்குடி
4)இரட்டை திருப்பதி 5)பெருங்குளம் 6)தென்திருப்பேரை
7)திருக்கோளூர் 8)ஆழ்வார் திருநகரி

முதல்ல திருவைகுண்டம் (சூரியன்) பத்தி தெரிஞ்சுக்குவோம் ...

இந்த கோவில் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில திருநெல்வேலியிலிருந்து 28 கிலோமீட்டர் தூரத்துல இருக்கு.

கோவில் வரலாறு :

ஒரு சமயம் இந்த பூமியில பெரிய பிரளயம் வந்து எங்கபாத்தாலும் தண்ணீர்னுஇருந்த காலத்துல பிரம்மதேவன் வச்சிருந்த (சிருஷ்டி ரகசிய கிரந்தம் ) படைப்பு தொழில் சம்மந்தமான ரகசிய ஏட்டை சோமுகாசுரன் அப்படிங்குற அரக்கன் ஒளிச்சி வச்சுகிட்டானாம் .

என்ன பண்றதுன்னு தெரியாம பிரம்மா அத அவன்கிட்ட இருந்து மீட்டு குடுக்கசொல்லி விஷ்ணுவை வேண்டி தவம் பண்ண முடிவு பண்ணி ,தன்னோட கைல இருந்த தண்டத்தை பெண்ணாக்கி எங்க தவம் செய்யலாம் தெரிஞ்சுகிட்ட வர சொன்னாராம்.அந்த பெண்ணும் தாமிரபரணி ஆற்றங்கரைல சோலைகள் நிறைஞ்ச ஒரு இடத்தை தேர்வு செஞ்சு
சொல்ல பிரம்மாவும் அங்க வந்து ரொம்ப கடுமையா தவம் செஞ்சாராம்.

அவரோட தவத்தை பாத்த பெருமாளும் பெருமாலும் அங்க வந்து பிரமதேவனை வாழ்த்தி அவர் இழந்த ஏடை மீட்டு கொடுத்தாராம்.பிரம்மா திருமால் கிட்ட தனக்கு காசி குடுத்து நின்ன அதே திருக்கோலத்துலயே
இங்க வைகுண்ட நாதனா காட்சி தரணும்னு வேண்ட அவரும் சம்மதிச்சாராம் ...

கால தூஷகன் அப்படிங்குற ஒரு திருடன் எப்பவும் இந்த திருமாலை கும்பிட்டுட்டு திருட போவானாம் .அவன் திருடினதுல பாதிய பெருமாலுக்கு காநிக்கையாவும் குடுப்பானாம்.ஒருதரம் இவனோட கூட்டம் அரண்மனைல திருடும்போது மாட்டிக்கிட்டாங்கலாம் .அப்போ இவன் வைகுண்ட நாதர்கிட்ட சரணடைஞ்சு தன்ன காப்பாத்த சொல்லி கேக்க பெருமாளே கால தூஷகன் வேஷத்துல வர அத அரசன் பாத்தப்போ பெருமாள் தன்னோட சுயரூபத்த காட்டினாராம்.

அப்போ அந்த அரசன் தன கிட்ட கொள்ளை அடிச்ச காரணத்த கேக்க 'தர்மம் காக்காத உன்ன தர்மத்துல ஈடுபட செய்றதுக்காகதான்' தான் வந்ததா சொன்னாராம்.அதனால அரசன் தனக்கு கிடச்ச பாக்கியம் மக்களுக்கும் கிடைக்கணும்னு நினச்சு உட்சவ மூர்த்திய கள்ளபிரான் அப்படினு சொல்லி கும்பிட்டாறாம்.

இந்த கோவில் கொஞ்ச காலத்துக்கு முன்னாடி பூமியில புதஞ்சுபோச்சாம் .அப்பறம் மணப்படை வீட்டை தலைநகரமாக கொண்டு ஆண்ட பாண்டிய மன்னனோட பசுக்களை அத மேய்ப்பவர் இங்க ஓட்டி வந்து மேக்குறதை
வழக்கமா வச்சுருந்தாராம் .அப்போ ஒரு பசு மட்டும் தனியா பெருமாள் புதஞ்சி இருந்த இடத்துல பால் சொறிவதை வழக்கமா வச்சுருந்துசாம் .இத மாடு மேக்குரவனம் பாத்துட்டு மன்னன் கிட்ட சொல்ல மன்னன் பரிவாரத்தோட அங்க வந்து மணலை சுத்தம் செய்ய அங்க வைகுண்ட பெருமாள் சன்னதிய பாது ரொம்ப சந்தோஷப்பட்டு இப்போ இருக்குற இந்த கொவில கட்டினாராம்.

இந்த கோவில்ல பெருமாளை சூரிய ஓளி வருஷத்துக்கு ரெண்டு தடவ சித்திரை 6 ,ஐப்பசி 6 நாள்ல சூரியன் பெருமாளோட பாதத்தை தரிசிச்சு போவாராம்.
இதுக்காக கொடிமரம் தெற்கு நோக்கி கொஞ்சம் தள்ளி தான் வச்சுருக்காங்களாம்.

வீரப்பன் காலத்துல கோடி மரமும் ,சந்தான சபாபதி காலத்துல மண்டபமும் கட்டினாங்களாம் .இங்க இருக்குற உற்சவரை உருவாக்கிய சிற்பி இவரோட அழகுல மயங்கி கன்னத்துல கிள்ள சிற்பியோட ஆத்மார்த்தமான அன்போட அடையாளத்தை கன்னத்துல வடுவா ஏத்துகிட்டாராம் .இப்பவும் இந்த வடுவை உற்சவர்கிட்ட பாக்கலாமாம்.

மூலவர் - வைகுந்தநாதன் - நின்ற திருக்கோலம் .கிழக்கு பார்த்த திருமுக மண்டலம்(மூலவர் கூட தாயார் கிடையாது).உற்சவர் - கள்ளபிரான் ,தாயார் - வைகுண்டவல்லி ,பூதேவி (தனி சன்னதி) தீர்த்தம் - பிருகு தீர்த்தம் ,தாமிரபரணி நதி,விமானம் -சந்திரவிமானம் .

திங்கள், 3 டிசம்பர், 2012

திருச்செந்தூர்

சமீபத்துல திருச்செந்தூர் கோவிலுக்கு போனோம் .எவ்ளளவு அழகா கடலுக்கு பக்கத்துல அம்சமா அமைஞ்சி இருக்கு கோவில்.இந்த கோவில் சென்னைல இருந்து 600 கி.மீ தூரத்துல இருக்கு.கிட்டத்தட்ட 10 மணிநேரம் பஸ்ல போனோம்னா . 2000 வருஷம் பழமையான கோவில்னு சொல்றாங்க.

 
திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கு .

திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது.இக்கோயில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்” அப்படினு முன்னாடி சொன்னங்கலாம் .

இந்த கோவிலோட வரலாறு என்னனு பாத்தோம்னா தேவர்கள் ,அவங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கசொல்லி சிவபெருமான்கிட்ட முறையிட்டாங்கலாம் . அவங்க வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினாராம் . அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினாறாம் . பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தாராம் இந்த நேரத்துல முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்திருக்கார் . அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினாறாம் . அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டாறாம் . அப்போ தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினாராம் . அவன் கேக்கலை. அப்பறம் , முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தாறாம் . வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டாறாம் . அதன்படியே முருகனும் இங்கே தங்கினாறாம். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினாறாம். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றாறாம். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' -னு மாறி இருக்கு . தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மாறி இருக்கு .முருகனுக்குரிய ஆறுபடைவீடுகல்ல திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், மத்த ஐந்தும் மலைக்கோயிலா அமைஞ்சிருக்கு .130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைஞ்சிருக்கு .முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தாறாம் . இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கு . இவருக்கு முதல் தீபாராதனை காட்டினத்துக்கு அப்பறம் தான் , முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கு . இந்த ரெண்டு லிங்கங்களும் இருட்டுல இருக்கறதுனால , தீபாராதனை ஒளியில் மட்டுமே பாக்க முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலதுபக்கதுல "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கு . இவங்கள மார்கழி மாசத்துல தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கு . முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாலதான் கந்த சஷ்டியாக கொண்டாடுறோம் . இது திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. அதனாலதான் , கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.24-12-2004-ல சுனாமி வந்தபோ எல்லா இடத்துலயும் கடல் தண்ணி முன்னாடி வந்ததுனா திருச்செந்தூர்ல மட்டும் கடல் தண்ணி உள்வாங்கிசாம் .அதாவது பின்னாடியே போச்சாம்.அதிசயமா இருக்கு இல்ல .

கண்டிப்பாக இதற்க்கு அறிவியல் ரீதியான காரணம் இருக்கும் அது என்ன என்று தேடி பிடித்து அடுத்த போஸ்ட்ல பாக்கலாம் .

திருசெந்தூரில் நவதிருப்பதி இருக்குறதா கேள்விப்பட்டு ஒன்பது கோவிலுக்கும் போயிட்டு வந்தோம்.அது என்ன என்ன கோவில் என்ன விசேஷம் அங்கனும் அடுத்த போஸ்ட்லசொல்றேன்

தவிப்பு

காத்திருந்து கதிகலங்கி
நின்ற ஓர் இரவில்
தெரிந்தது ...
உன்மீது நான் கொண்ட
அன்பின் எல்லை கோடு !!!!
திரும்பும் உறுதியின்றி
இனி எப்போதும் பிரியாதே !!
உனை சேரும் வரை
இது உயிரில்லா கூடு !!!!!                   -----------என் அண்ணி எழுதியது
உன்னை எத்தனைமுறை
பிரிந்தாலும்
அலுப்பதே இல்லை !
மீண்டும் மீண்டும்
பிரிவதற்கு நீ
அருகிலேயே இருக்கும் வரை !!


                         ------------என் அண்ணி எழுதியது

இன்பம்

கிழக்கு கடற்கரைச் சாலை பயணம்
கிழமைகலற்ற விடுமுறை காலம்
கையில் அழகிய காதல் புதினம்
கண் படும் தூரம் உந்தன் பூமுகம் ...


                                -------என் அண்ணி எழுதியது

 

கால்தடம்

காலையில் போட்ட
கோலத்தை விட
அழகுதான் ..............
சாலையில்
என்னவன் கால்தடம் !!!!!!


                -------என் அண்ணி எழுதியது

நினைவுகள்

நீ விட்டு சென்ற
நினைவு சின்னங்கள்
ஏனோ நம் உறவை விட
பிரிவைத் தான்
அதிகமாய் நினைவு படுத்துகின்றன .........                            ------------என் அண்ணி எழுதியது
(எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை கூட)

புதன், 21 நவம்பர், 2012

சைவம் சாப்பிடுங்க நீண்ட ஆயுளோட வாழுங்க..

சைவ சாப்பாடு சாப்பிடுறவங்க ரொம்ப நாள் வாழலாம்னு கலிபோர்னியாவுல இருக்குற லோமா லிண்டா பல்கலைகழக விஞ்ஞானிகள்
நிரூபிச்சு இருக்காங்களாம்.

 • சைவ உணவு மட்டுமே சாப்பிடற ஆண்கள் சராசரியா 83 . 3 ஆண்டுகளும் ,பெண்கள் 85 . 7 ஆண்டுகளும் ஆரோக்கியாமா வாழுராங்கலாம்.அசைவ சாப்பாடு சாப்பிடறவங்கள விட இவங்க 8 வருஷம் அதிகமாவாழுராங்கலாம்.
 • சைவ சாப்பாடு சாப்பிடுறவங்க அசைவ சாப்பாடு சாப்பிடுறவங்கல விட 15 கிலோ எடை கம்மியாதான் இருக்காங்களாம்.
 • சைவ சாப்பாடு சாப்பிடுறவங்களுக்கு சிகரெட் பழக்கம் கம்மியாதான் இருக்காம்.
 • சைவ சாப்பாடு சாப்பிடுறவங்க தொடர்ந்து உடற்பயிற்சி பண்றாங்களாம்.
 • சர்க்கரை நோய் இருந்தாலும் இன்சுலின் சுரக்கறது அசைவ சாப்பாடு சாப்பிடுறவங்கல விட அதிகமாவே சுரக்குதாம்.
-----என்னதான் இப்படி நல்லத படிச்சாலும் சிக்கனையும் பிஷ்-ஐயும் ப்ரை பண்ணி வச்சா சாப்பிடாம இருககமுடியுமா சொல்லுங்க.நியூ இயர் ரெசொலுஷன் மாதிரி காணாம போய்டுதுங்க

திங்கள், 19 நவம்பர், 2012

இதுவும் அழகுதான் ...


  நிறையபேர் நினச்சுகிட்டு இருக்காங்க வெள்ளையா இருந்தாதான் அழகு கருப்பு அழகு இல்லைன்னு .

ஆரம்பத்துல இருந்தே சிகப்பு கலர்ல நமக்கு இருக்குற மோகம் , அதான் நம்மள கருப்பு கலரை ரசிக்க விடமாட்டே.ங்குது.கருப்பு அழகு இல்ல கருப்பா இருந்தா நம்மள யாரும் கவனிக்க மாட்டாங்கனு எண்ணம் நம்ம மனசுல தானா விதஞ்சிடுது .இதுக்கு யார காரணமா சொல்றது? கருப்பு அழகில்லைன்னு சொல்றது எப்படி நியாயம் ஆகும்?

இந்த மீடியாக்களில் ,இந்த கிரீம் போடுங்க அந்த கிரீம் போடுங்க இதனை நாளுல இதனை வாரத்துல சிகப்பாகிடுவீங்கனு விளம்பரம் பண்றாங்களே ..அவங்க இப்படி விளம்பரம் பண்ணி சிகப்புதான் அழகுன்னு நம்ம மனசுல பதிய வச்சுட்டாங்களா? இல்ல கருப்ப அவமானமா நினச்சு சிகப்பாகனும்னு அனேகபேர் விருப்பபடுரதால புதுசு புதுசா கிரீம்கள் தயாரிச்சு விளம்பரபடுதுரான்களா? கலர்-ல என்னங்க இருக்கு?எல்லாமே நம்ம மனசுலதனே இருக்கு.

ஒருத்தங்க கலர் வச்சு அவங்க குணத்தை தீர்மானம் பண்ணிட முடியுமா ? நம்ம நாட்டோட உண்மையான நிறம் கருப்புதானே.நம்ம நிறத்துக்கு காரணம் நம்ம உடம்புல சுரக்குற நிறமி செல்லான மெலனின் அளவு அதிகமா இருக்குறது தான்.

கருப்பும் அழகுதாங்க.எல்லாரையும் தன அழகால தன் காலடியில கிடத்தின 'கிளியோபாட்ரா' கருப்புன்னு தான் கேள்விப்பட்டு இருக்கேன்.கருப்போ சிகப்போ நமக்கு நாமதான் அழகுன்னு நினைக்கணும். (நாம மட்டும் தான் அழகுன்னு நினைக்கறதுக்கும் நாமளும் அழகுதான்னு நினைக்கறதுக்கும் வித்யாசம் இருக்கு).

எந்த விஷயத்துலயுமே மத்தவங்களோட எப்போ கம்பேர் பண்றோமோ அன்னைக்கு வீனாப்போக ஆரம்பிக்குறோம் நாம் .இத எத்தன பேர் ஒத்துக்குறீங்கனு தெரியல. பிறக்கும் போதே யாரும் செலிபிரிட்டியாக பொறக்குறது இல்ல.

செலிபிரிட்டிக்களின் குழந்தையா பொறக்குறாங்க இல்லைன்னு சொல்லல .அதுக்காக அவங்க செலிபிரிட்டி ஆகிட முடியாது.நம்முடைய நடை ,உடை,பேச்சு ,போடி லாங்குவேஜ் ,மத்தவங்ககிட்ட பழகுற விதம்,பேசுற விதம் இத நாம மாத்தினாலே நாமும் ஒரு செலிபிரிட்டிதான் .

எத்தனையோ வீட்ல பொண்டாட்டியை புருஷனும் புருஷனை பொண்டாட்டியும் சினிமாவுல ,டி.வி -ல பாக்குற அவங்கள மாதிரி இல்ல நீ இவங்கள மாதிரி இல்ல நீ -னு மனசலவுல கஷ்டப்படுத்துறது நடந்துகிட்டு தான் இருக்கு. முதல்ல நாம அழகுன்னு நினைக்கணும் .அந்த தன்னம்பிக்கை வரணும்.

நம்மகிட்ட எது மைனஸ்னு மத்தவங்க சொல்றாங்களோ அதுக்காக மனசு உடஞ்சுடாம கண்ணாடி முன்னாடி நின்னு இதுவும் அழகுதான்னு ரசிக்க ஆரம்பிக்கணும்.அது நமக்கு கொஞ்சம் கொஞ்சமா பிளஸ் ஆகிடும்.முதல்ல மத்தவங்களுக்காக வாழாம நமக்காக வாழனும்.

நல்ல சத்தான சாப்பாடு சாப்பிடுவோம் இயற்கையான முறையில நம்ம அழகை பாதுகாத்துக்குவோம் .

எல்லாருகிட்டயும் ஒரு அழகு இருக்கும் ,எல்லார் கிட்டயும் ஒரு திறமை இருக்கும் ,அதை ரசிப்போம் ,அழிஞ்சு போற மேலோட்டமான நிறத்தையோ அழகையோ ஒஎருசா நினச்சு ஒருதங்களை ஜட்ஜ் பண்ணாம எல்லாரையும் ரசிக்க கத்துப்போம்...சந்தோஷமா தன்னம்பிக்கையோட வாழுவோம்.
Untitled Document
இங்க பாருங்க செலிபிரிடிகள் மேக்கப் இல்லாம எப்படி இருக்காங்கனு.அதுக்காக இவங்க அழகா இல்லைன்னு சொல்லிட முடியுமா?மேக்கப்போட பாத்து பாத்து நமக்கு மேக்கப் இல்லாம பாக்க வித்தியாசமா இருக்கும் அவ்ளோதான்.நமக்கு ரசிக்க தெரியலைன்னு வேணும்னா சொல்லலாம்.

திங்கள், 12 நவம்பர், 2012

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்பட்டாசு வெடிக்கலைனா ரொம்ப சந்தோஷம் , அதெல்லாம் முடியாது நான் வெடிப்பேன்தான்னு அடம்பிடிக்குறவங்க பாத்து ஜாக்கரதையா வெடிங்க..சந்தோஷமா தீபாவளியை கொண்டாடுங்க .

வெள்ளி, 9 நவம்பர், 2012

இன்றும் இனியவை ......


இசை தெய்வத்துக்கு சமம்னு சொல்லுவாங்க. எல்லாராலயும் பாடமுடியும் .ஆனா சிலபேராலதான் உணரவைக்க முடியும் .வரிகளுக்கு தன் குரலால உயிர் குடுக்கமுடியும்.அவங்களதான் நாம பாடகர்களா ஏத்துகிறோம் .ஒரு சந்தோஷமான துள்ளலான பாட்ட கேக்கும்போது நாமும் அந்த மூடுக்கு போகுறதும் ஒரு சோகமான அழுகையான பாட்ட கேக்கும்போது நாமும் சோகம் ஆகிட்றதும் அழுகுறதும் நல்ல இசை + பாடல் வரிகள் + பாடும் விதம் எல்லாம் சேரும்போதுதான் அமையும் .அதனாலதான் இசை கலைஞர்களை கடவுளோட அருள் இருக்குறவங்கனு கூட சொல்வாங்க .உடனே மத்தவங்களுக்கு அருள் கிடையாதான்னு எல்லாம் கேக்கக்கூடாது .சில சமயம் சில விஷயங்கள ஒத்துகிட்டுதான் ஆகணும் .


கண் போன  போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேணும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேணும்
வாலி அவர்களின் முத்தான வரிகளில் ,TMS அவர்களின் குரலில் ,MSV அவர்களின் இசையில் 1960-களில் வெளிவந்த பணம் படைத்தவன் திரைபடத்தின் பாடல் . 


மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்  
ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று
போற்றி புகழவேண்டும்


கண்ணதாசன் அவர்களின் வரிகளில்...


ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம்  பாடி
நாளைபோழுதை இறைவனுக்களித்து
நடக்கும்வாழ்வில் அமைதியை தேடு
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதிவரைக்கும் அமைதி இருக்கும்
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்கையில் நடுக்கமா

சுமைதாங்கி படத்தில் திரு.P .B .ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலில் ,கண்ணதாசனின் வரிகள்
கிட்ட தட்ட 50 வருஷம் ஆகுது இப்பவும் இந்த பாட்ட கேட்டா மறுபடியும் மறுபடியும் கேக்கணும் போலவே இருக்கு. அவ்வளவு அழகான இசை, அர்த்தம் உள்ள வரிகள்.எவ்வளவு பெரிய மேதைகள் இவங்களாம் .இந்த பாட்ட கேக்கும் போது வர சந்தோஷத்த சொல்ல வார்த்தைகளே இல்ல .

கிட்ட தட்ட 3000 பாடலுக்கு மேல பாடின SPB அவர்கள்,ஜானகி அம்மா அவர்கள் ,சுசீலா அம்மா அவர்கள்,லதா மங்கேஷ்கர் அவர்கள் ,சித்ரா அம்மா அவர்கள்  எல்லாம் இப்பவும் அமைதியா,அடக்கமா இருக்காங்க .ஜானகி அம்மா பாடும் போது முகத்துல ஒரு சின்ன எக்ஸ்ப்ரஷன் கூட கொடுக்காம தன் குரலிலேயே அத்தனை  எக்ஸ்ப்ரஷன்-யும் குடுக்குறவங்க.இவங்ககிட்ட எல்லாம் இருந்து இப்போ இருக்குற ஜெனரேஷன் கத்துக்கவேண்டியது நிறையா இருக்கு

செவ்வாய், 6 நவம்பர், 2012

எப்படி அல்சர் உருவாகுதுன்னு தெரியுமா ?
--இதனால் தெரிவிப்பது என்னவென்றால் ,அதாங்க என்ன சொல்லவறேன்னா.....வயிறுக்கு  சரியான நேரத்துக்கு சாப்பிட்டு அல்சர் வராம பாத்துக்குவோம்

:)-----ஒரு நாளிதழில் இருந்து

:)


-----ஒரு நாளிதழில் இருந்து

திங்கள், 5 நவம்பர், 2012

ஆராதயா


ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சன் குழந்தையை நம்ம மீடியா காரங்க இந்த குழந்தை பொறந்ததுல இருந்து  போட்டோ எடுக்க படாத பாடு பட்டு கண்ணுமட்டும் தெரியுர மாதிரி,கன்னம் மட்டும் தெரியுர மாதிரின்னு போட்டோ எடுத்து(ப்யூசர்  ஹீரோயின் இன்ட்ரோடக்க்ஷன் இப்போவே குடுத்துட்டாங்க  இல்ல ) கடைசியா ஒரு வழியா போட்டோ எடுத்துட்டாங்க .


என்ன  பண்றது நமக்கு அந்த குழந்தை எப்படி இருக்கு யார் மாதிரி இருக்குனு பாக்க ஆர்வம் அவங்களுக்கு மீடியா கிட்ட இருந்து விலகி ஒரு சாதாரண குழந்தையா வளக்கணும்னு ஆசை , அமிதாப் ,அபிஷேக் ,ஐஸ்-னு ஒரு செலிபிரிட்டி குடும்பத்து வாரிசு அந்த குழந்தையே சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் மாதிரி வளரனும்னு நினச்சாலும் நாம விடமாட்டோம் இல்ல.


இந்த குழந்தை கொஞ்சம் வளந்ததும் முகம் எப்படி இருக்கும்,பத்து வயசுகிட்ட முகம் எப்படி இருக்கும்னு எல்லாம் இப்பவே மார்பிங் எல்லாம் செஞ்சு நெட்-ல போட்டு இருக்காங்க நம்ம ஆளுங்க.எப்புடி.....!!!!!!!!!!!அந்த குழந்தைய பெத்தவங்க கூட இத இன்னும் யோசிச்சு இருக்கமாட்டாங்க.


-------என்ன பண்றது பிரபலம் நாவே  ப்ராபளம் தான்

வெள்ளி, 2 நவம்பர், 2012

நம்ம ஊரு நாய்கள் ...

வெள்ளக்காரங்களுக்கு எதிரான போர்ல மருது சகோதரர்கள் வெள்ளக்காரங்களோட குதிரைபடைக்கு எதிரா ராஜபாளையம் வகை   'நாய்படையை'  பயன்படுத்தி அவங்க குதிரை படையை விரட்டினாங்கலாம் .

ஹே...என் ப்ளாக்-ம் விகடனில் வந்துருக்கு பாத்துக்கோ... பாத்துக்கோ.... பாத்துக்கோ...


எனக்கு முதல் முதல்ல பேசிக் கோடிங் சொல்லிக்குடுத்து அதுமேல எனக்கு ஆர்வம் வரவச்ச என் குருவில் இருந்து என்னை என்கரேஜ் செஞ்ச என் நண்பர்கள்,என் குடும்பம் ,சொந்தகாரங்க  மேலும் என்னை இன்னும்  என்கரேஜ் பண்ற விதமா இதை என்விகடன்-வளையோசை பகுதியில் பப்ளிஷ் பண்ணின ஆனந்த விகடன்..,இவங்க  எல்லாருக்கும் என்னோட நன்றிகள்...


ஞாயிறு, 14 அக்டோபர், 2012

மின்சாரமே ...

சென்னை தவிர மத்த இடத்துல எல்லாம் 8  மணி நேரம் பவர் கட்-னு டி.வி-யில் பார்க்கும் போதும் பேப்பர்-ல படிக்கும்போதும் அது அவ்ளோ பெரிய விஷயமா தெரியல.எட்டு மணி நேரம் பவர் கட்டாம் போ ...அப்படினு மட்டும் தான் தோனுச்சு..ஆனா அதை அனுபவிக்கும் போதுதான் கரண்ட்டோட அருமையும் ,பவர் கட்டால பாதிக்குற கஷ்டமும் புரியுது.இப்போலாம் எட்டு மணி நேரம் பவர் கட்னு  சொல்ல  முடியல.எட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு மணிநேரம் பவர் கட்னு தானாக  சொல்றோம்.
அதென்ன சென்னைல மட்டும் ஒரு மணிநேரம் பவர் கட் மத்த இடத்துல எல்லாம் 8 மணிநேரம் 14 மணிநேரம் பவர் கட்.ஏன் சென்னைல மட்டும் தான் கம்பெனி நடக்குதா?ஸ்கூல் நடக்குதா?அங்க   மட்டும் தான் படிக்குறாங்களா?அங்க மட்டும் தான் மக்கள்  வேலைக்கு போறாங்களா?ஏன் இவ்ளோ பாரபட்சம்?
எல்லா இடத்துலயும் சமமா பவர் கட் பண்ணலாமே.சரி அட்லீஸ்ட் நாளில் ரெண்டு பங்காவது பண்ணலாமே.
சென்னை தவிர   மத்த இடத்துல இருக்குறவங்கலாம் என்னவோ பாவம் பண்ணினவங்க மாதிரியும் அங்க இருக்குறவங்க மட்டும் தான் புண்ணியம் பண்ணினவங்க மாதிரியும் இல்ல  இருக்கு இதுலாம் பாத்தா.இது என்ன நியாயமோ?
சரி, சென்னைல இருக்குற ஐ.டி கம்பெனி எல்லாம் கரண்ட் மிச்ச படுத்துறாங்களா?எத்தன கம்பெனில  யாருமே இல்லாத கேபின்-ளையும் வெட்டியா லைட் ,ப்பான்/ஏ.சி  ஓடிகிட்டு இருக்கு.ஒருநாளாவது அவங்க இந்த 8 மணிநேரம் பவர் கட் ஆகுற ஊரை எல்லாம் நினச்சு பாக்குறாங்களா?இதுமாதிரி மின்சாரத்த வீணாக்குற கம்பெனிகளுக்கு அட்லீஸ்ட் 2 நாளாவது கரண்ட் கட் பண்ணினா தான் அவங்களுக்கு அடுத்தமுறை மின்சாரத்தை மிச்சபடுத்தணும்னு எண்ணம் வரும்..மத்த ஊருகளையும் நினச்சு பாப்பாங்க.
கண்டிப்பா ஒரு ஒரு மெட்ரோ சிட்டிகல்ளையும் ,ஒரு ஒரு பன்னாட்டு நிருவனத்துளையும் பல கிராமங்களில் இருந்து ,பல டவுன்களில் இருந்து வேலை 
செய்றவங்க நிறைய பேர் இருப்பாங்க.அவங்க ஜஸ்ட் தன் சொந்த ஊரை நினச்சு பாத்து, தன் தம்பி, தங்கை ,தன் உறவுக்காறங்க இத்தனை மணி நேரம் பவர் இல்லாம கஷ்டபடுராங்லேன்னு நினச்சு பாத்து தேவை இல்லாத நேரத்துல தேவை இல்லாத இடத்துல ஓடிகிட்டு இருக்குற ப்பான்/ஏ.சி
லைட் எல்லாம் நிறுத்தலாமே.தன் நண்பர்களுக்கும் இதை அறிவுருத்தலாமே.கம்பனிகள் ஓவர் டைம் பாக்கவைக்குறதை குறைக்கலாமே.எத்தனையோ பேர் ஓவர் டைம் பாத்தா அதுல கூடுதலா ஒரு கணிசமான வருமானம் வரும்னு தேவை இல்லாம ஓவர் டைம் பக்குறவங்களும் இருக்காங்கதானே.அதை தவிர்க்கலாமே.
சில நேரம் இதை நினைக்கும் போது ,சின்னதம்பி படத்துல கவுண்டமணி சொல்வாரே ,'டே அப்பா ,உன்னால ஒரே ஒரு நல்ல விஷயம் நடக்குறது என்னனா ,கரண்ட் பில் இதுவரைக்கும் நா கட்டினதே இல்லடா' - னு அதுமாதிரி சொல்லி
 நாமலே சிரிச்சுக்கவேண்டியாத இருக்கு  ..
 
என்னுடைய தம்பி தங்கைகள் இதுமாதிரி பவர் கட்டால படிக்க கூட முடியாம அவதிபடுறாங்க..என்னால முடிஞ்ச அளவுக்கு மின்சாரத்த சிக்கனமா உபயோகபடுதுறேன் தேவை இல்லாத சமயத்துல தேவை இல்லாத நேரத்துல ஓடிகிட்டு இருக்குற ப்பான்/ஏ.சி
லைட் எல்லாம் நிறுத்திடறேன்..என் நண்பர்களுக்கும் சொல்லி இதே முறையை பாலோ பண்ணவைக்குறேன்.அப்போ நீங்க....

சாதனை தமிழர்கள்

கடலூர்-ரை சேர்ந்த முதல் நிலை காவலர் மணிகண்ட  பிரபு,இவர் அகில இந்திய அளவில் காவலர்களுக்கான துப்பாக்கி சுடுற போட்டில ரெண்டு தடவ தங்கம் ஜெயிச்சு இருக்காராம்.இப்படி ரெண்டு தடவ தங்கம் வாங்கின முதல் தமிழக்காவலர் இவர் தானாம்.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

'ஆக்ஸஸ் மேப்' ....


'ஆக்ஸ்  மேப்' அப்படினா என்னனு கேக்குறீங்களா?நடக்கமுடியாம ,நடக்குறதுல பிரச்சனை இருக்குறவங்க இந்த 'ஆக்ஸ்  மேப்' -ஐ
பயன்படுத்தி தான் உபயோகபடுத்த எளிமையா இருக்குற கட்டிடத்தை தேர்ந்தெடுக்க தான் இந்த 'ஆக்ஸ்  மேப்'  .
அதாவது மாற்றுதிரனாளிகள் பயன்படுதுறதுக்கு ஏற்ற வசதிகள் இருக்குற பொது இடங்களை வரைபடமா குறிப்பிட உதவுதுற இணையம் தான் 'ஆக்ஸ்  மேப்' .
நடக்கமுடியாம இருக்குற ,'வீல் சேர்' உபயோகப்படுத்துற மாற்றுதிரனாளிகள் ஒரு கட்டிடத்தை எப்படி அணுகுறது ,எந்த அளவுக்கு அந்த கட்டிடம் அவங்க உபயோகபடுத்த எளிமையா இருக்குனு பாத்து அதுக்கு தகுந்த மாதிரி மார்க் போடுறாங்க.
உதாரணமா , ஒரு கட்டிடத்துக்கு வாசல்ல வெறும் படிக்கட்டு தான் இருக்குனா அதுக்கு ஒரு மார்க்.நல்ல சாய்வுப்பாதை இருந்தா அதுக்கு 2 மார்க்,அங்க இருக்குற லிப்ட்-ல சரக்கற நாற்காலி போகுற அளவுக்கு இடம்  இருந்தா இன்னம் ஒரு மார்க்,கட்டிடத்துக்குள்ள அதிகமா இட நெருக்கடி இல்லாம அவங்க எளிமையா சுத்தி வர வசதி இருந்தா இன்னம் ஒரு மார்க்,மாற்றுதிரனாளிகளுக்காக தனியா டாய்லெட் வசதி இருந்தா இன்னம் ஒரு மார்க்-னு இப்படி எல்லா வசதியும் இருந்தா முழுசா 5 மார்க்-னு இப்படி ஒரு ஒரு கட்டிடத்துக்கும் பொது மக்களை மார்க் போடா சொல்றாங்க.இவற்றை மொத்தமா கூட்டி சராசரி பாத்து அதன் அடிபடையில  ஒரு ஒரு நகரதுலையும் ஆக்ஸ் எளிதாக இருக்குற இடங்களை ஒரு வரைபடமா குறிப்பிடுறாங்க.
இப்போ ஒரு தெருவுல நாலு உணவகம் இருந்தா அதுல ஒண்ணுதான் சாய்வுபாதையோட இருந்தா இந்த 'ஆக்ஸ்  மேப்' அந்த உணவகத்தை மட்டும் விசேஷமா காட்டுமாம்.மற்ற இடத்தை சிகப்பு வட்டம் போட்டு எச்சரிக்குமாம்.
இதன் மூலமா ,இந்த மாதிரியான மாற்றுதிரனாளிகள் ,இந்த  மேப் பாத்து அவங்க போகுறதுக்கு எளிமையான இடம் பாத்து அதுக்க தகுந்த மாதிரி அவங்க திட்டமிடலாம்னு சொல்றாங்க.
இது அமெரிக்கா போன்ற நாட்ல வேகமா பரவிகிட்டு இருக்காம்.இந்தியாவிலயும் இந்த  'ஆக்ஸ்  மேப்'  வசதி இருக்கு ,ஆனா நம்ம மக்கள் கட்டடத்தை  பாத்து இன்னம் மார்க் போட ஆரம்பிக்கலையாம்.
நம்மளால முடிஞ்ச நல்லத மத்தவங்களுக்கு செய்வோம்.நம்மளால இதுமாதிரி  மாற்றுதிரனாளிகளுக்கு நேரடியா உதவமுடியலைனாலும் அட்லீஸ்ட் இந்தமாதிரி மறைமுகமாவாவது உதவுவோமே.நெட்-ல அதிக நேரம் சாட் பண்ண செலவு பண்ற நேரத்துல ரொம்ப கொஞ்ச நேரத்தை இதுக்கு செலவு பண்ணுவோம் .

இணையம் : www.axsmap.com

நன்றி வார இதழ் ..............

ஒலி (sound ) கேக்குறதுக்கு மட்டும் இல்ல பாக்குறதுக்கும் தான்.

ஒலி (sound ) கேக்குறதுக்கு மட்டும்னு நினைச்சீன்களா ?ஒலி மூலமா பாக்கலாம்னு சொன்னா நம்புவீங்களா?
உண்மைதாங்க.'டேனியல் க்ரிஷ்'(46 ) அப்படிங்கிற அமெரிக்கர்தாங்க ஒலி-ஐ பயன்படுத்தி தன் தினசரி   வேலைகளை செய்றாரு.இதற்க்கு பேர்  எக்கோலொக்கேஷன் (echolocation).இவரை 'வாழும் அதிசயம்'-னு சொல்றாங்க.ஆச்சர்யமா இருக்கு தானே.
இவரை உதாரணமா எடுத்துகிட்டு தான் இப்போ வெளிவந்து இருக்குற 'தாண்டவம்' படத்தோட கதாநாயகன் கதாபாத்திரத்துக்கு இவரோட இந்த இயல்பை தான் சித்தரிச்சு  இருக்காங்களாம்.  
இவர் பிறந்து 13 மாதத்துலையே கேன்சரால  கண் பார்வை போயிடுச்சாம்.அதனால அவர் கேக்குற ஒலியை துல்லியமா உணர்ந்து அது எந்த மாதிரி பொருளா இருக்கும்னு  கற்பனைல  அதுக்கு உருவம்   குடுக்க  ஆரம்பிச்சு இருக்கார்.அப்பறம் 'விசில்' அடிச்சு அது சுவருல பட்டு எதிர்ஒலிக்குரதை வச்சு அவருக்கும் அங்க இருக்குற பொருளுக்கும் இடையில இருக்குற தூரத்தை கணிக்க ஆரம்பிச்சவர் அது அப்படியே பழகிபோய் ஒலி மூலமாவே  தன் தினசரி   வேலைகளை செஞ்சு பார்வை உள்ளவங்களுக்கு இணையா இன்னைக்கு வாழ்ந்துகிட்டு இருக்கார்  .
இவர் லேப்டாப் கூட பயன்படுதுறார்.பார்வை இருக்குறவங்க உபயோகபடுதுற லேப்டாப் (எப்படினா ,கட்டளைகளை ஒலியாக மாத்தக்கூடிய சிறப்பு மென்பொருள் மூலமா)  பார்வை இல்லாதவங்க உபயோகப்படுதக்கூடிய லேப்டாப் -னு ரெண்டு வகையும் பயன்படுதுறாராம்.
"வேர்ல்ட் ஆச்சஸ்  பார் ப்ளையண்ட் "-னு ஓர் நிறுவனத்தை 12 வருஷமா நடத்திகிட்டு இருக்காராம்.உலகத்துல இருக்குற பார்வையற்ற கொழந்தைன்களோட  திறமையை இன்னம் அதிகமாக்குறதுதான் இவரோட நோக்கமாம்.இந்த  
எக்கோலொக்கேஷன் முறையை இதுவரை 500 பார்வையற்றவங்களுக்கு சொல்லிகுடுத்து இருக்காறாம்.இவரை பத்தி பல்கலைகழகங்கள்  தீவிரமா ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்.எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துபாத்தப்போ  இவர் மூளை எக்கோலொக்கேஷன் முறைக்கு தகுந்தமாதிரி மாறி இருக்கறதை ஒத்துக்குறாங்கலாம்.

இவரை  தொடர்பு கொள்ள ....
மின்னஞ்சல் : daniel.kish@worldaccessfortheblind .org 
இணையத்தளம் : www.worldaccessfortheblind.org 

(நெஜமாவே அதிசமானவர்தானேங்க.எந்த குறைபாடுமில்லாதவங்கள விட இதுமாதியானவங்கிட்ட திறமை அதிகமா இருக்கும்னு மறுபடியும் நிரூபிக்குறாங்க பாருங்க ).
 
நன்றி வார இதழ் ..............

சனி, 29 செப்டம்பர், 2012

இணையம்

1957-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் 'ஸ்புட்னிக்' என்ற முதல் செயர்க்கைகோளை  விண்வெளிக்கு    அனுப்பியது  .அமெரிக்கா  அடுத்த ஆண்டு ARPA (Advance Research Projects Agency ) என்ற அமைப்பை தன் ராணுவத்தின் செயல் பாடுகளுக்காக உருவாக்கியது.உலகின் பல பகுதிகளில் இருக்கும் கணினிகளை இணைக்க உருவாக்கிய அற்பநெட் என்ற வலைப்பின்னல் தான் இன்று நாம் உபயோக்கிக்கும் இணையம்

சிலிண்டர்

 சிலிண்டர் பத்தி நம்ம எல்லாருக்குமே ஓரளவுக்கு  தெரியும் ,  ஆனா நமக்கு தெரியாத சில முக்கியமான ,நாம கவனிக்க வேண்டிய விஷயம் இருக்கு..இத பத்தி ஒரு மாத நாளிதழ்ல படிச்சப்போ அடடா இதனை நாள் நாம கவனிக்கலையேனு தோணிச்சு , என்ன மாதிரி தெரியாதவங்க தெரிஞ்சிக்கணும்னு இத போஸ்ட் பண்றேன் ..
 
சிலிண்டர்ல அந்த சிலிண்டர் எப்போ காலாவதி(expire) ஆகும்னு ,இருக்கும் .இதை நாம கவனிச்சு இருக்கோமா ?
 
அதாவது சிலிண்டர் கைப்பிடி வளையத்துக்கு கீழ சிலிண்டர்-ஐ இணைக்குற கம்பி இருக்குல ,அதுல அது எப்போ கலாவதி (expire) ஆகும்னு இருக்கும்.மூணு மூணு மாசம் இடைவெளியில் நாலா பிரிச்சுருக்காங்க. அதாவது ஜனவரி - மார்ச்
-> A ,ஏப்ரல்-ஜூன் -> B ,ஜூலை-செப்டெம்பர் ->C ,அக்டோபர் - டிசம்பர் -> D . அதன் பக்கத்துல எந்த வருடம்னும் குறிப்பிட்டு இருப்பாங்க. உதாரணம் : D -14  அப்படினா ,2014 டிசம்பர் வரை அந்த சிலிண்டர்ருக்கு உத்தரவாதம்னு அர்த்தம்.ஒரு வேளை காலாவதி (expire ) ஆனா சிலிண்டர் நமக்கு குடுத்தா நாமா அவங்ககிட்ட சொல்லி மாதிக்கலாமாம்.
 
 

 அப்பறம் இப்ப கூட சமீபத்துல நியூஸ் -ல சொன்னாங்க , பச்சை கலர் டியூப் ஆபத்தானது ,ஆரஞ்சு கலர் டியூப் உபயோகபடுத்துங்கனு அதையும் கொஞ்சம் கடைபிடிப்போமே.
 
என்ன சிலிண்டர் பத்தி செய்தி உபயோகமா இருந்ததா?
 
 
---------------நன்றி மாதஇதழ் .....
 
 
 
 
 

வியாழன், 27 செப்டம்பர், 2012

சுற்றுலா

உலகத்துல  தொழில் முறை சுற்றுலாவை முதல் முதலா அறிமுகப்படுத்தியவர் யாருன்னு தெரியுமா?இங்கிலாந்தை சேர்ந்த 'தாமஸ் குக்' என்பவர்தானாம். இவரை தான் சுற்றுலாவின் தந்தைனு சொல்றாங்க.

இவர்தான் கி.பி 1841 ல் லண்டன்ல நடந்த உலக பொருட்காட்சியை பாக்குறதுக்கு ஒன்றரை  
 ச்சம்    பொதுமக்களை அழச்சுக்கிட்டுபோனாராம் .இவர்தான் முதல் முதலா பொதுமக்களை திரட்டி   இன்ப சுற்றுலாவுக்குஅழச்சுக்கிட்டுபோனாராம் .

இதுதான்  காலத்துக்கு தகுந்தமாதிரி பொருளாதார வளர்சிக்கு தகுந்த மாதிரி,வசதிக்கு தகுந்த மாதிரி  இன்னைக்கு வளர்ந்து நிக்குது.இன்னைக்கு சுற்றுலாவுக்கு காரணமான 'தாமஸ் குக்'  ஆரம்பிச்ச நிறுவனம் உலகத்துல மிக பெரிய சுற்றுலா ஏற்பாடு செஞ்சு தர நிறுவனமா வளர்ந்து இருக்காம்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தண்ணீர்


ஒரு மனுஷனுக்கு தண்ணீர் எவ்ளோ முக்கியம்-னு நமக்கு நல்லாவே தெரியும்.தினம் தினம் தண்ணீரின்  முக்கியத்துவத்தை பத்தி நாம கேள்விப்ட்டுகிட்டு தான் இருக்கோம் .ஒரு நாளைக்கு 8 லிட்டர் தண்ணீர் குடிக்கணும் .இது நமக்கும் தெரியும் .ஆனா இதை நாம கடைபிடிக்குறோமா?அனேக பதில் இல்லை-னு தான் வரும்.நாம எவ்ளோ தண்ணீர் குடிக்கிறோமோ அவ்வளவு உடம்புக்கு நல்லது. தண்ணீர் குடிக்கிறதால நாம
எப்படி எல்லாம் ஆரோக்கியமா இருக்க முடியும்னு  பாருங்க. 
 • மாரடைப்பு ஏற்ப்றத தடுக்க கூட உதவுது.
 • சாப்பாட்டின் அளவை கம்மி பண்ணிட்டு தண்ணீர் குடிக்குற  அளவை அதிக படுத்தினோம்னா உடல் எடையை கம்மி பண்ணலாம்.
 • முகம் மற்றும் நம்ம உடம்பு பளபளப்பா இருக்கும்.
 • சிறுநீரக கல் இருக்குறவங்களுக்கு அந்த கல் வெளியேறும்.
 • நம்ம உடம்புல சராசரி வெப்ப நிலையை தொடர வைக்கும்.
 • கோவத்தை கட்டுபடுத்தும்.
 • மனசுல தெளிவான சிந்தனை வரும் .
 • ராத்திரி நேரதுல தூக்கம் வராதவங்க தண்ணீர் குடிச்சிட்டு படுத்தா நிம்மதியா தூங்கலாம்.
 • தலைவலி ,மூட்டுவலி,நெஞ்செரிச்சல் ,உடல்  சோர்வு இது எல்லாம் உடம்புல தண்ணியின் அளவு கம்மியாகுறதால வர்றதுதான்.இந்த மாற்றி பிரச்சனை இருக்குறவங்க குறைஞ்சது 3 லிட்டர் தண்ணியாவது ஒருநாளைக்கு குடிக்கணும்.

அனிதா .....

இன்னம் 20 நிமிஷம் இருக்கு ..ஓகே  இந்த கேள்விக்கு இந்த  பாயிண்ட்ஸ்  எல்லாம் முக்கியம்..இந்த கேள்விக்கு இந்த இந்த பாயிண்ட்ஸ் முக்கியம்...ஓகே..இந்த கேள்விக்கு இந்த  எக்ஸ்சாம்பிள்  ரொம்ப முக்கியம்..சரி சரி போதும் ரிலாக்ஸ்-ஆ  இருக்கணும்...நீ நல்லா  எழுதிடுவ..கவலைபடாத ...என்று மனதுக்கும் சொல்லி கொண்டிய காலேஜ்க்குள் நுழைந்தாள் அனிதா..
 


அனிதாவிடம் அனிதாவிற்கு பிடித்ததும் அவள் நண்பர்களுக்கு அனிதாவிடம் பிடித்ததும் இந்த தன்னம்பிக்கை தான்..

ஹாய் ..ஹாய் அனிதா...எப்படி  ப்ரிப்பர் பண்ணி இருக்க?

ம்..நல்லா பண்ணி இருக்கேன் ..கண்டிப்பா நல்லா எழுதிடலாம்..ஆமா இந்த கேள்விக்கு இத  பத்தி இவ்ளோ  எழுதினா   போதும் தானே
-என்று படித்ததை பகிர்ந்து கொண்டார்கள்..
ஓகே ஓகே இன்னம் 10 நிமிஷம் இருக்கு,ரிலாக்ஸ்-ஆ இருப்போம் என்றாள் அனிதா..

அனிதாவின் கண்கள் அலைபாய்ந்தது ...அவள் கண்கள் சந்தோஷை தேடின..ஒரு  முனையில்    நண்பர்களுடன் அனிதா இருக்க மறு  முனையில் நண்பர்களுடன் சந்தோஷ்..அனிதா காலேஜ்குள் நுழைந்ததில்  இருந்து  சந்தோஷின் கண்கள் அனிதாவை விட்டு விலகவில்லை..
ஏன்டா வினோத் நீதான் எப்படியும் இன்னிக்குஎக்ஸாம்-இல் பாஸ் பண்ண போறது இல்ல இல்ல அப்பறம்  ஏன்  வேஸ்ட்-ஆ  வந்து எழுதுற என்று சந்தோஷ்  கேலி செய்ய  ..ஏன்டா அப்படி சொல்ற பாரு    பிட்டுலாம் கூட சரியா-ஆ வச்சுஇருக்கேன் இந்த எக்ஸாம்-கு என்றான் வினோத். அதான் உன் கவனம் எல்லாம் சிகப்பு சுடிதார்  மேல  இருக்கே,பாத்துடா பிட்ட பாக்காம சுடிதார் பாத்துகிட்டே எழுதிடாத  
என்றான் சந்தோஷ். 

கண்டுபிடிச்சுடீங்களா அதானே என்னடா உங்களுக்கு மூக்குல வேர்க்கலையேனு
பாத்தேன் என்றான்,வினோத்.  டேய் இது  தீபா தானே அப்போ மோனமாசம் எல்லாம் நம்ம ஜூனியர் ரம்யாவை பாத்துகிட்டு இருந்தியே என்றான் சந்தோஷ்.  
அது போனமாசம் என்றான் வினோத், அப்போ  கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்ட் அம்மு ?என்றான் சுந்தர் ,அது அதுக்கு முன்னாடி மாசம் என்றான் வினோத் .
து....என்று கோரஸ் ஆகா துப்பி வினோத்தை  கேலி செய்தனர் நண்பர்கள்.

ஏன்டா துப்புறீங்க ? பின்ன இந்த சந்தோஷ் மாதிரி இருக்க சொல்றீங்களா ?  ஏன்டா சந்தோஷ் 4  வருஷமா நீ அனிதாவ  பாக்க அவ உன்ன பாக்க, அவ உன்ன பாக்க நீ அவள பாக்க நாங்க உங்க  ரெண்டுபேரயும் பாக்க..இப்படியே போகுதே இதுக்கு ஒரு முடிவே கிடையாதா ?? என்றான் வினோத் ..
ஏன்டா இப்படி ..பாத்துகிட்டே தான் இருக்கபோரீங்களா நேரா 60 -ஆம் கல்யாணம்னு
சொல்லு .கடைசி வருஷம் இன்னம் ஒரே ஒரு செமஸ்டர் தான் இருக்கு இந்த வருஷமாவது பேசுடா.. பேசினா தான்டா முடிவு தெரியும் என்றனர் , இப்படியே உசுபேத்தி உசுபேத்தி உடம்ப ரணகளம் பண்ணுங்கடா என்றான் சந்தோஷ்.
தன் பள்ளி காலத்தில் இருந்து தோழியான லதாவை பார்த்ததும் என்ன லதா நல்லா  படிச்சு இருக்கியா ?என்றான் சந்தோஷ்..எங்க சந்தோஷ் எனக்கு இந்த எக்ஸாம் முடிஞ்சததும் கல்யாணம்  பண்ணி குடுத்துடணும்னு  அப்பா ஒரே பிடிவாதமா இருக்கார்..என்னால சரியா படிக்க முடியலை.. கொஞ்சம் பயமா இருக்கு என்றால் லதா. பொய் சொல்லாத பயத்துல படிக்கமுடியாம இல்ல சந்தோஷத்துல படிக்கமுடியாம அதுதானே உண்மை என்று சந்தோஷ் கேலி செய்ய ,போ சந்தோஷ் எப்போ பாரு உனக்கு  கிண்டல் தான் என்றாள் லதா.

அனிதா..இவ்ளோ நேரம் தண்ணில நின்னா ஜுரம் வரும் சீக்கிரம் குளி..நேரம் ஆச்சு பாரு என்று தீபாவின்  குரல்..நான்தான் குட்  கேர்ள்  இன்னைக்கு என்று மழலை குரலில் லதா ......
சந்தோஷ்...நேரம் ஆச்சு..எப்போ கிளம்பறது ..ஆபீஸ்க்கு நேரம்  ஆகுது பாரு..சீக்கிரம் சீக்கிரம் என்று வினோத்தின் குரல்...

சந்தோஷ் அவசரமாக கண் விழித்தான்..சந்தோஷ் நேரம் ஆச்சு எந்திரிங்க என்று தன்மனைவி நித்யா மறுபடியும் சொல்ல..குட்  மார்னிங்  அப்பா..நான் குட்  கேர்ள்  ..நீ தான்  பேட்  பாய்  இன்னைக்கு பாத்தியா நா தான்  முதல்ல  குளிச்சேன்  என்று சந்தோஷின் செல்ல மகள் அனிதா சொல்ல..

குட்  மார்னிங் டா ஹனி  செல்லம்...தோ அப்பா கிளம்பிடறேன் என்று சொல்லி கொண்டே அவசரமாக குளித்து கிளம்பினான்..ஆனால் அவன் நினைவு முழுவதும் அனிதாவை பற்றியே இருந்தது...

பின்னாளில் அனிதாவும் சந்தோஷும் ஒரே கம்பெனி-இல் வேலை செய்தனர்.அனிதா அவளது பெற்றோர்களிடம் சந்தோஷை பற்றி கூறினாள்..உனக்கு இன்னம் கொஞ்ச நாள் டைம் தரோம் .நல்ல யோசி..சந்தோஷ் நல்ல பையன் தான் இல்லைன்னு சொல்லல..இருந்தாலும் ரெண்டு பேரும் கடைசி வரை இப்படியே இருப்பீங்களா ..நல்ல யோசிங்க.."என்றனர் அனிதாவின் பெற்றோர்கள்..

சந்தோஷின் வீட்டில்  சந்தோஷின் விருப்பபடி தான் அனைத்தும் நடக்கும்..

அப்பாகிட்ட நாம இன்னம் உறுதியா சொல்வோம் சந்தோஷ்  என்று அனிதா கூறினாள்..

கண்டிப்பா ...இந்த வீக் எண்டு நான் வரேன் உங்க வீட்டுக்கு என்றான் சந்தோஷ்..

ஆனால் அதற்குள்  எதிர் பாராத ஒரு விபத்து ,அனிதா சுய நினைவின்றி மருத்துவமனையில்...

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு இருந்த அனிதாவை பார்க்க   சந்தோஷ் ஓடினான் மருத்தவமனைக்கு..

"டாக்டர் அனிதா எப்படி இருக்கா டாக்டர் சொல்லுங்க ப்ளீஸ் "..

"ஓ !! அந்த ஆக்சிடென்ட்  கேஸ் ஆ பா"..

"ஆமா டாக்டர்"...

நிலைமை கொஞ்சம் கிரிடிகாலா தான் பா இருக்கு .நெறையா பிளட் லாஸ் ஆகிருக்கு.சுய நினவு இல்லாம தான் இருக்காங்க.எங்களால முடிஞ்சத முயற்சி பண்றோம் .கடவுள வேண்டிகோங்க "...

"நா பாக்கலாமா டாக்டர் "..

"தாராளமா ...பட் ரொம்ப டிஸ்ரப் பண்ணாதீங்க"...

சந்தோஷ் அனிதாவின் அருகில் ,உடல் முழுவதும் ஏக பட்ட டியூப்கள் பொருத்தப்பட்ட அனிதாவை பார்க்கவே சந்தோஷ் கலங்கினான்...

அனிதாவின் பெற்றோர்கள்  அங்கு வந்தனர். 

"சந்தோஷ் ...சந்தோஷ் என்னப்பா ஆச்சு அனிதாவுக்கு ...எப்படி பா இருக்கா .."

"அனிதாவுக்கு ஒன்னும் இல்ல ஆன்டி ,அங்கிள் அனிதா நல்லா ஆகிடுவா ...".

அனிதாவின் அம்மா ஐ.சி.யு உள்ளே ஓடினார்.

"ஐயோ அனிதா !! அம்மா வந்துருகேன்மா ,என்ன பாரு ,ஐயோ உன்ன இந்த நிலைமையிலையா பாக்கணும். எல்லோரும் நல்ல இருக்கனும்னு நினைப்பியே ..உனக்கு இப்படியா".கதறினாள் ...

அனிதாவை இந்த நிலைமையில் பார்க்க விருப்பம் இல்லாமல் அனிதாவின் தந்தை வெளியே சென்றார் ...கண்களில் நீர் பொங்க...அவரை பின் தொடர்தான் சந்தோஷ்...

"அங்கிள் இல்ல அங்கிள் ..அனிதாவுக்கு ஒன்னும் இல்ல குணம் ஆகிடுவா .அழாதீங்க அங்கிள்" என்று தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டான்..

உள்ளே இருந்து அனிதாவின் தாய் ,சந்தோஷ் தம்பி ,சந்தோஷ் தம்பி அனிதா உன் பேர் சொல்றாப்பா என்று வெளியே ஓடிவர ...சந்தோஷ் உள்ளே ஓடினான் ..

அனிதாவின் உதடுகள் சந்தோஷின் பெயரை முனுமுனுத்தது ...

"அனி ! அனி ! நா சந்தோஷ் ...இங்க தான் மா இருக்கேன்..உனக்கு ஒன்னும் இல்ல ..உனக்கு எல்லாம் சரியாகிடும்.."

"சந்தோதோதோதோதோதோஷ்.."

"பாரு ,உன் அம்மா ,அப்பா வந்துருக்காங்க ...டாக்டர் உனக்கு குனமாகிடும்னு சொல்லி இருக்கார்.."

"சந்தோதோதோதோதோதோஷ்...."

"இதோ ,நான் இங்க தான் உன் பக்கத்துல தான் இருக்கேன் அனி ..." என்று அனிதாவின் கைகளை பற்றினான் ...

அனிதாவின் கண்கள் மெல்ல திறந்தன ...

"சந்தோதோதோஷ் ...அழாத சந்தோதோஷ் ...எனக்கு ஒன்னும் இல்லலல ...நான்ன்ன்ன் நல்லாலாலாலா ஆகிடுவேன் ..நாநாநாநா உன் கூட வாழனும் சந்தோதோதோதோஷ் ...நாநாநாநா சாககூடாது ...எனக்கு நீ வேணும்..."

"அனி ..கண்டிப்பா நடக்கும் அனி...நாம சந்தோஷமா வாழுவோம் ..."


"சந்தோதோதோதோதோஷ் ....எனக்கு பயமாமாமாமாமா இருக்கு ...எனக்கு ட்ரீட்மென்ட் குடுக்க சொல்லு சந்தோதோதோதோஷ் ..உன் அப்பா அம்மா ,என் அப்பா அம்மா எல்லார் கூடவும் ,நம்ம நினைச்சமாதிரி சந்தோஷமா நாம வாழனும்ம்ம்ம்ம்ம் ..."

"கண்டிப்பா அனி ...நீ எந்திரிச்சு வருவ அனி ...நாம நினச்சது நடக்கும் அனி ...."

"சந்தோதோதோதோதோதோதோஷ் ....."

அனிதாவின் கண்கள் ஒரு இடத்தில் நிலை பெற்றன..அவளது கைகள் சந்தோஷின் கைகளில் இருந்து விடுபட்டன..அனிதாவின் இதயம் துடிக்க மறுத்தது ....


"அனி..................." அலறினான் சந்தோஷ் .....அனிதாவின் தாயும் தந்தையும் சேர்ந்து .......

"டாக்டர் ...டாக்டர் ...எதாவது பண்ணுங்க...இப்போ என்கிட்ட பேசினா டாக்டர் ..ப்ளீஸ் ஏதாவது செயுங்க..அவளுக்கு ஒன்னும் இருக்காது ..."

டாக்டர் நாடி துடிப்பையும் ,இதய  துடிப்பையும் பரிசோதித்தார் ...

"ஐயம் சாரி ..மிஸ்டர் . சந்தோஷ் .."

"இல்ல அங்கிள் ...இப்போ பேசினா அங்கிள் என்கிட்ட..என்னோட வாழனும்னு சொன்னா ஆன்டி..

அழாதீங்க ...நம்ம அனிதா எங்கயும்  போகல .. இப்போ எந்திரிப்பா பாருங்க ...."

"சந்தோஷ் ....மனச தேதிக்கப்பா ...நம்மள விட்டு போயிட்டாப்பா ..."

"அங்கிள் ..இல்ல அங்கிள்....இல்ல அங்கிள்...."

சந்தோஷ் வெளியே வந்தான் ....அவன் மனம் மட்டும் நம்ப மறுத்தது ....உண்மையை உணர்ந்து அழுது புலம்பினான்...

 கிட்டதட்ட ஒரு ஜடமாக மாறிய சந்தோஷை ஒரு வருடத்துக்கு பின்  பழைய நிலைக்கு கொண்டுவந்தனர்.சந்தோஷின் நண்பர்கள் மூலமாக சந்தோஷிற்கு வேலையும் ஏற்பாடு செய்தனர் .மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு மாறினான் சந்தோஷ்.  

5 வருடங்களுக்கு கழித்து மிகுந்த சிரமத்திற்கு பின் சந்தோஷை திருமணதிற்க்கு சம்மதிக்க வைத்தனர். 

நித்யாவிடம்  அனிதாவை பற்றி அனைத்தையும் கூறியே திருமணம் செய்தான் சந்தோஷ்.

"என்னால என் அனிதாவை மறக்க முடியாது ...அவ இன்னம் என் மனசுலையே தான் இருக்கா..உனக்கு இதனால ஏதும்...."

"நா மறக்க சொல்லலையே ...எனக்கு உங்கமேல வருத்தம் இல்ல..உங்க வலி எனக்கு புரியுது ." நித்யாவின் பளிச் பதில் நித்யாவின் மேல் அன்பை ஏற்படுத்தியது...

தன் மகளுக்கு அனிதா என்று பெயர் வைக்க ,கூறியதும் நித்யாதான்...அனிதாகிட்ட இருந்து பிரிச்ச இந்த கடவுள் என்னை அனாதையா விடாம  எனக்கு உன்னை குடுத்துருக்கார்,என்று
பழையநினைவுகளில்மூழ்கினான்,கண்கள் சாலையில் இருக்க,கைகள் ஸ்ட்ரியரிங் இல் இருக்க கால்கள் ஆக்சிலேட்டர்-ல் இருக்க சந்தோஷின் மனம் மட்டும் அனிதாவின்  நினைவுகளில் .......

சந்தோஷின் கண்களில் கண்ணீர்.....அனி..லவ் யு  அனி ,என்று மனதுக்குள் சொல்ல..ஒரு அழகிய கை தன்னை  தொடுவதை உணர்ந்து கால்கள் பிரேக் -ஐ  அழுத்த....லவ் யு அப்பா .பை பை ..என்று சந்தோஷின் கன்னத்தில் முத்தமிட்டு  பள்ளிக்குள்  ஓடினாள்  சந்தோஷின் மகள் அனிதா...கலங்கிய கண்களுடன் தன் மகளை பார்த்துக்கொண்டே இருந்தான் சந்தோஷ். 

வியாழன், 20 செப்டம்பர், 2012

செப்டம்பர் 16 ஓசோன் படலம் பாதுகாப்பு தினம்

பூமியில் வாழ்ற உயிரினங்களை பாதுகாக்கும் சூரியனின் புற ஊதாக் கதிர்களை உட்கிரகிக்க 
கூடிய ஓசோன் படலம்  தேஞ்சுகிட்டு வருதுன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்.கார்,ஏ.சி குண்டு பல்பு போன்றவற்றோட பயன்பாட்டை குறைக்கறதின்  மூலமா இந்த ஓசோன் படலம் தேய்வைகம்மிபண்ண  முடியும்.இந்த வீடியோ  பாருங்க,சின்ன குழந்தைங்களுக்கு கதை 
சொல்றமாதிரி சொன்னாலாவது நாம புரிஞ்சிப்போமானு யோசிச்சுதான் ரொம்ப எளிமையா 
சுலபமா புரியக்கூடியவகையில்  சின்ன குழந்தைங்களுக்கான  வீடியோ-வை இங்க இணைச்சுருக்கேன் .


 ஏ.சி, குண்டுபல்பு எல்லாம்இப்போஅதிகமா உபயோகபடுறது இல்ல.அட அதான் கரண்ட் 
இருக்குறதே இல்லையே. கார் வச்சிஇருக்குற எல்லாரும் அத்தியாவசிய நேரம் மட்டும்
கார்-ஐ உபயோகிசோம்னா நல்ல இருக்கும்.இதுகூட இனி சாத்தியம்னு தோணுது.அதான் பெட்ரோல்,டீசல் விலையும் ஏறிடுச்சே.

டால்பின்டால்பின் நம்ம எல்லாருக்குமே பிடிச்ச ஒரு விலங்கு.சரிதானே.டால்பின் பாலூட்டி வகையை சேந்தது.37 வகை டால்பின்கள் இருக்காம் மொத்தம். அதுல 32  வகை  டால்பின்கள் கடலில் வாழுது.5 வகை டால்பின் இனங்கள் ஏரிகளில் காணப்படுகின்றன.டால்பின்கள் கடல் மட்டத்தில் இருந்து 260 மீட்டர் ஆழம் வரை வாழும் தன்மை பெற்றது.அது சுவாசிப்பதற்காக அடிக்கடி கடல் மட்டதிற்க்கு வந்து  டைவ்  அடித்துவிட்டு செல்லுமாம்.

ஆபத்து சமயங்களில் 15 நிமிடம் வரை தண்ணீரில் மூழ்கி இருக்குமாம்.டால்பின்கள் எகொலோகேசன் எனும் முறையில் எதிரொலி முறைப்படி உணவு தேடல் மற்றும் இடபெயர்சியை மேற்கொள்ளுமாம்.'கில்லர் வேல்' என்று அழைக்கப்படும் ஆர்கா டால்பின்கள் தான் டால்பின்கள் இனத்துலையே   ரொம்ப பெரியதாம்.இவை 6 . 1 மீட்டர் நீளம்  வரை வளர கூடியதாம்.

'பட்டன் நோஸ்'   என்று அழைக்கப்படும் டால்பின் வகை ரொம்ப பிரபலம்.இதுதான் நாம டி.வி ,கண்காட்சியில் பாக்குற துருதுருனு விளையாடுமே அந்த டால்பின்களாம்.இது மனுஷங்களோட ரொம்ப ஜாலியா பழகுமாம்,ரொம்ப சூப்பரா நம்மளை மாதிரியே விசில் அடிக்குமாம்.பலவிதமான  சத்தத்தின்  மூலமா மற்ற டால்பின்களோட தொடர்பு கொள்ளுமாம்.இதோட உடல் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் .

இதோட தோலுக்கு அடியில இருக்குற பிளப்பர் என்னும் கொழுப்பு அடுக்கு  இதோட  வெப்பநிலையை கட்டுக்குள்ள வைக்குதாம்.டால்பின்கள் மணிக்கு 5  முதல் 2 கிலோ மீட்டர்  தூரம்  நீந்தக்கூடியது.அதிபட்சமா 32  கிலோ மீட்டர் தூரம் நீந்துமாம்.  இதோட வேகம் அதோட வகை ,சூழல் பொருத்து மாறுமாம்.

விநாயக சதுர்த்தி


விநாயக சதுர்த்தி  எப்படி   வந்தது தெரியுமா?  
ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிக்கச்சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானை தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் அச்சமுற்று, தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார்.பொதுவாக விநாயக சதுர்த்தி விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.ஆண்டுதோறும் ஆவணி  மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.

புதன், 5 செப்டம்பர், 2012

அறிவோம் நம் கலையை...

பரதநாட்டியம் :
 
பரதநாட்டியம் -திற்கு புகழ் பெற்ற ஊர்னாலே தமிழ் நாடுதான்ங்க.தமிழ் நாட்டிற்கு பாரம்பரிய பெயர் சேக்குறதுல இந்த பரதநாட்டியமும் ஒன்று.இந்த பரத நாட்டியத்தை பற்றி சில விஷயங்களை தெரிஞ்சிக்குவோமே..
 
புராணப்படி சொல்லனும்னா பரத முனிவரால உருவானதால பரதம்னு பெயர் வந்ததாகவும் ,அதே நேரத்துல பரதம் அப்படினா ப-பாவம்,ர-ராகம்,த-தாளம் என்ற 3 -ஐயும் குரிப்பிட்ரதாகவும் சொல்லபடுது.
 
உடல் அசைவுகளும் ,கை முத்திரைகளையும் சேர்த்து 'அடவு'  என்று  வழங்கப்படுகிறது.சுமார் 120 அடைவுகள் உள்ளன.பல அடைவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும்.
 
பாரதனாட்டியதுல ரொம்ப முக்கியமானது 'அபிநயம்'.கருதியோ,உணர்வையோ வெளிப்படுத்த இது ரொம்ப உதவுது.அபிநயம் மூலமா ஒரு கருத்தை மத்தவங்களுக்கு நாம உணர்த்தலாம்.அபிநயம் இரண்டு வழிகளால்   சித்தரிக்கப்படுது.  ஒன்று உலக வழக்கு.இது 'லோகதர்மி' எனப்படும்.மற்றொன்று நாடக வழக்கு.இது 'நாடக தர்மி' எனப்படும்.பரதநாட்டியத்தில்ஆகார்ய   அபிநயம்,வாசிக அபிநயம்,ஆங்கிக அபிநயம்,சாத்விக அபிநயம் என  நான்கு விதமான அபிநயங்கள் பயன்படும்..
 
ஆகார்ய   அபிநயம் :
  அலங்காரம்  மூலமா  அபிநயிக்கறது .அதாவது முக ஒப்பனை,உடை,அணி அலங்காரம்,மேடை அமைப்பு ஆகியவை இந்த  பரதநாட்டியத்தில் முக்கிய இடம் பெரும். வேற ஒருத்தங்கள போல வேஷம் போட்டு ஆடறது.
 
வாசிக அபிநயம்:
           இதுல பாடல் தான் முக்கியம்.அந்த பாட்டோட பொருளுக்கு(அர்த்தத்துக்கு) ஏத்தமாதிரி அபிநயிப்பாங்க.
ஆடுரவங்களே   பாட்டு பாடியும் அபிநயிக்கலாம்,இல்ல வேற ஒருத்தங்க பாட அந்த பாட்டுக்கு ஆடுறவங்க அபிநயிக்கலாம்.
 
ஆங்கிக அபிநயம்:
   உடல் உறுப்புகாளால உள்ளதுல இருக்குற உணர்வை அபிநயிக்கறது.அதாவது ஒரு ஒரு உடல் உறுப்புக்கும் தனி தனி செய்கைக உண்டு.இதுல கை முத்திரை சிறப்பிடம் பெரும்.கைமுதிரைனா  விரல்களின் செய்கைகள்.பாரதனாட்டியதுல ஒற்றைக்கை முத்திரை .இரட்டைக்கை முத்திரை உண்டு.
 
சாத்விக அபிநயம்
 உள்ளத்தில் எழும் உணர்சிகளால் உடலில் மாற்றங்கள் ஏற்ப்படும் .அதாவது நமக்கு பயமா இருந்ததுனா உடல் வேர்க்கும்,நடுங்கும்,கண் சொருகும் இதை ஆடலில் காட்டுவது தான்  சாத்விக அபிநயம்..
 
   9 சுவை உணர்வுகள் உண்டு அதை தான் நவரசம்னு சொல்வாங்க.ஒன்பான் சுவை-னும் சொல்வான.அது என்னென்னனா பயம்,வீரம்,இழிப்பு,அற்புதம்,இன்பம்,அவலம்,நகை,கோவம்,நடுநிலை .இஹை எல்லாம் கண்கள்,உடலசைவு,உடல்நிலை,கைமுதிரைகள் மூலமா அபிநயிக்கறது.
 
பாவங்கள்:
   அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் அதாவது  உணர்வுகள் 9 வகைப்படும்.ஸ்ருங்காரம்(வெட்கம்),வீரம்,கருணை,அற்புதம்,ஹாஸ்யம்(சிரிப்பு),பயானகம்(பயம்),பீபல்சம்(அருவருப்பு),ரௌத்ரம்(கோபம் ),சாந்தம்(அமைதி)