பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam
செலிபிரிட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செலிபிரிட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

ஒரே மாதிரி இருக்காங்களே !!!

உலகத்துல ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கனு சொல்வாங்க..இங்க ஒரே மாதிரி இருக்குற ரெண்டுபேரை பாருங்க..அதுவும் அவங்க நமக்கு தெரிஞ்ச பிரபலங்களா இருந்தா ??






செவ்வாய், 22 ஜூலை, 2014

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 13

விஜய் தொலைக்காட்சியின் "விஜய் விருதுகள்" எனும் விருது விழாவில் 2013-ஆம் வருடத்திற்கான சிறந்த பொழுதுபோக்காளர் என்னும் விருதை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கி கவுரவித்தது விஜய் தொலைக்காட்சி.அந்த காணொளி இதோ..



செவ்வாய், 17 ஜூன், 2014

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 13

சமீபத்தில் நடந்த "விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்" நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுக்கு "ப்ரைட் ஆஃப் தி சேனல்" எனும் விஜய் டிவியின் பெருமைக்குரிய அந்த விருதை நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு விஜய் டிவி கொடுத்து கவுரவித்தது..


வியாழன், 17 ஏப்ரல், 2014

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 12

 தமிழ் புத்தாண்டுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய "மான் கராத்தே" திரைப்படம் பற்றிய  சிறப்பு நிகழ்ச்சியின் தொகுப்பு..




திங்கள், 7 ஏப்ரல், 2014

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 11

விஜய் டிவியின் 'காஃபி வித் டிடி' நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கிட்ட  நிகழ்ச்சியின் வீடியோ ..


வியாழன், 6 பிப்ரவரி, 2014

வியாழன், 16 ஜனவரி, 2014

வெற்றிநாயகன் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி

ஜெயா டிவியில் பொங்கல் தினத்துல ஒளிபரப்பான , நான் பாத்து என்ஜாய் பண்ணின 'வெற்றிநாயகன் சிவகார்த்திகேயன் ' நிகழ்ச்சியின் வீடியோ  இங்க ,




புதன், 15 ஜனவரி, 2014

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 11

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய சிவகார்த்திகேயன் பங்குபெற்ற 'எங்கள் வீட்டு பிள்ளை'  நிகழ்ச்சி இங்கே....

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 10

இந்த எபிசோட் பாருங்க..வழக்கம் போல சிவகார்த்திகேயன் எல்லாரையும் கலாய்க்குறது சிவகார்த்திகேயனை எல்லாரும் கலாய்க்குறது இதுதான் ..ஆனா கண்டிப்பா உங்களால சிரிக்காம இருக்கமுடியாதுனு மட்டும் நான் உறுதியா சொல்றேன் ..


வியாழன், 26 டிசம்பர், 2013

விகடனில் சிவகார்த்திகேயன் இன்டர்வியூ

விகடனின் 2013 டாப் 10 மனிதர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயன் ...

குபீர் ஹீரோவாகக் கிளம்பி தமிழ் சினிமாவையும் அதன் ரசிகர்களையும் தன்வசப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். கமர்ஷியல் கலெக்ஷனில் கல்லா கட்டுவதால், தயாரிப்பாளர்கள் சிவாவின் கால்ஷீட்டுக்கு வரிசை கட்டுகின்றனர். ஃபேமிலி ஆடியன்ஸ், டீனேஜ் பட்டாளம், 'சி’ சென்டர்... என அத்தனை பேரையும் பாக்கெட் செய்கிறது சிவகார்த்திகேயனின் மெஸ்மரிசம். சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து முன்னணி இடம் பிடித்திருக்கும் இவரது ஒவ்வோர் அத்தியாயத்திலும் ஒளிந்திருக்கிறது கடும் உழைப்பு!
                                     --விகடன்
வாழ்த்துக்கள் சார் ....


விகடனில் சிவகார்த்திகேயன் இன்டர்வியூ ...

வியாழன், 12 டிசம்பர், 2013

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா ..!!!

நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்னைக்கு.தலைவரோட பிறந்தநாள்ல அவர் ரசிகர்களாகிய நமக்கு சொன்ன சில அறிவுரைகள் ,அவர் பத்தி அவர் கூட பழகினவங்க,அவர் பக்கத்துல இருந்து பாத்தவங்க சொன்ன விஷயங்கள் மேலும் அவர பத்தி சில சுவாரசியமான விஷயங்களை உங்க கூட ஷேர் பண்றேன்..
மது, சிகரெட் பழக்கத்தை விட்டுவிடுங்கள். இதனால், எனது வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இப்போது மறுபிறவி எடுத்துள்ளேன். வாழ்க்கையில் சந்தித்த, கெட்ட நண்பர்கள் மூலம், குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன். என் திருமணத்திற்கு பிறகு, குடியை குறைத்துக் கொண்டேன்.ஆனால், முழுமையாக விடவில்லை. அதே போல், சிகரெட் பழக்கமும், என்னை விட்டு, அகலவில்லை.கடந்த ஆண்டு, எனது நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுயநினைவை இழந்துவிட்டேன்.இதற்கு சிகிச்சையளிக்கும் நேரத்தில், எனது சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இரண்டிற்கும் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றேன். இதற்காக, அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளினால், எனது உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது.இந்த எதிர்விளைவில் இருந்து, கடந்த இரு மாதங்களாகத்தான், விடுபட்டுள்ளேன். எனவே, ரசிகர்கள் மது மற்றும் சிகரெட் பழக்கத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள்
                                      -ரஜினிகாந்த்


காஸ்ட்யூம் ஆர்கனைசர் முருகன் இந்து தமிழ் நாளிதழின் தீபாவளி மலரில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கட்டுரையிலிருந்து ..

திங்கள், 18 நவம்பர், 2013

ஒரு சகாப்தத்தின் பிரியாவிடை -சச்சின்


கிரிக்கெட் விட்டு விடை பெறுவதுக்கு முன்னாடி சச்சின் அவர்கள் பேசின வார்த்தைகள்.தன் வாழ்க்கைல யார் யாருக்கு நன்றி சொல்லனும்னு நினச்சாரோ அத்தனை பேருக்கும் சொன்னார்.வேற என்ன சொல்ல நான் :((  .
அந்த ஃபேர்வெல்  ஸ்பீச்  இங்க ...



அவரைப்பத்தி உலகத்துக்கே தெரியும் புதுசா என்னத்த சொல்ல...ரொம்ப சுருக்கமா சொல்லனும்னா இந்த படத்தை பாருங்க..


சனி, 9 நவம்பர், 2013

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 8

விஜய் டிவியின் ஜோடி No 1 நிகழ்ச்சியில சிவகார்த்திகேயன் பங்கேற்பாளராவும் இருந்துருக்காரு நிகழ்ச்சி தொகுப்பாளராவும் இருந்துருக்காரு வேற வேற சீசன்ல ..

அவர் நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்த சீசன்ல ,பாவம் இவர அங்க இருந்த அத்தனைபேரும் ஒரு காமெடி பீஸ்ஸாவே நினச்சு கலாய்க்க ,அவர் எத பத்தியும் கவலைப்படாம யார் என்ன மாதிரி நடிக்க சொன்னாலும் பேச சொன்னாலும் எல்லாத்தையும் செஞ்சாரு அதனாலதான் இன்னைக்கு லச்சக்கணக்கான ரசிகர்களோட சப்போர்ட்டோட   ஒரு நல்ல நிலைமைக்கு வந்துருக்காரு.. அதுவும்   அவரோட காமெடிஸ் அந்த டைமிங் சென்ஸ் , அபாரம்....சான்ஸ்யே இல்ல...அந்த எபிசோட் இங்க ...




திங்கள், 28 அக்டோபர், 2013

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 7

இந்த வாரம் காஃபி வித் DD( 10/27/2013 ) நிகழ்ச்சியில் தனுஷ்கூட  கலந்துகிட்டு நம்ம சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியையே கலகலப்பாக்கிட்டார் ...அந்த எபிசோட்  இங்க....




வியாழன், 19 செப்டம்பர், 2013

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 5 & 6

விநாயகர் சதுர்த்தி அப்போ,விஜய் டிவியில் ஃகாபி வித் DD நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் மற்றும் சத்தியராஜ் அவர்களின் இன்டர்வியூ ...






6.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இமான் அவர்கள் மற்றும் சிவகார்த்திகேயன்  கலந்துகிட்ட இந்த எபிசோட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச அழகேசன் சார் + மா கா பா + சிவகார்த்திகேயயின் காமெடி



செவ்வாய், 17 செப்டம்பர், 2013

விர்ர்... விர்ர் ... வீராங்கனை அலீஷா ...

கார்,பைக் ரேஸில் பட்டையை கிளப்பிக்கிட்டு இருக்கும் அலீஷா அப்துல்லா , இவர் இந்தியாவின் ஒரே பெண் ரேஸர்  ..
இவரின் அப்பா அப்துல்லாவும் ஒரு சிறந்த பைக் ரேஸர்..அவரை பார்த்து பார்த்து ரேஸிங் மேல அலாதி ஈர்ப்பு வந்துடுச்சுன்னு சொல்ற இவர்  தன்னோட 8 வயசுல இருந்து பைக் ஓட்ட ஆரம்பிச்சுருக்காங்க .
தன்னோட அப்பாவைதான் தனக்கு  ரோல் மாடல்னு  அலீஷா  சொல்றாங்க.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 4

விஜய் டி.வியின் ஜோடி நம்பர் 1 சீசன் 6-ல் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினரா கலந்துகிட்டார்..அவரோட 'வருத்தப்படாத வாலிப சங்கம் ' படத்தோட சிறப்பு நிகழ்ச்சி ...

அந்த படத்துல 'ஊதா கலரு ரிப்பன் ..உனக்கு யாரு அப்பன் '-னு ஒரு பாட்டு இருக்கும்..அதோட டான்ஸ் நல்லா  இருக்கும் அதை , ஜோடி நம்பர் 1 சீசன் 6-ன் சில போட்டியாளருக்கு கத்துக்குடுக்குராறு பாருங்க ..அதுல ரோபோ ஷங்கரும் சிவகார்த்திகேயனும் பண்ற கலாட்டா இருக்கே.....அதப் பாத்து சிரிச்சு சிரிச்சு போதும்னு ஆகிடுச்சு....

யாரையும் புண்படுத்தாம அதே நேரம் எல்லாரையும் சிரிக்க வைக்குறது சாதாரண காரியம் இல்ல..அது சிவகார்த்திகேயன்கிட்ட நிறையாவே இருக்கு...

திறமை,உழைப்பு,அதிஷ்டம் எல்லாமே  இருக்கணும் அப்போதான் வாழ்க்கைல முன்னேற முடியும்..அதுக்கு இவரும் ஒரு உதாரணம்


சனி, 4 மே, 2013

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 1

மே தினத்துக்கு ,விஜய் டிவி-ல் ,மே 1-ல் ரிலீஸ் ஆன 'எதிர் நீச்சல்' படத்தோட சிறப்பு பார்வை ஒளிபரப்பினாங்க.

எனக்கு சிவகார்த்திகேயனை விஜய் டிவி-ல் காம்பியர் பண்ணும்போது இருந்து பிடிக்கும்.அவரோட அந்த டைமிங் சென்ஸ்-காகத்தான் 'அது இது அது' நிகழ்ச்சி பாக்கவே ஆரம்பிச்சேன்.இப்போ அது எனக்கு பிடிச்ச ப்ரோக்ராம்ல ஒன்னு.(அதே மாதிரி சந்தானமும் பிடிக்கும் )

சரி, என்ன சொல்ல வந்தேனா ,சிவாகார்த்திகேயன் இந்த படத்துல நெஜமாவே நல்லா நடிச்சுருக்கார்.ரொம்ப மெச்சூர்டா தெரியுறார்.படம் சீக்கிரம் பாத்துடனும்னு ஒரு ஆவலை ஏற்படுத்திடுச்சு இந்த நிகழ்ச்சி.

எனக்கு தனுஷும் பிடிக்கும் ப்ரியா ஆனந்தும்( வாமனன் ,இங்கிலீஷ் விங்க்லிஷ் ,180,சில தெலுகு படத்துல பாத்துருக்கேன் )அவங்களையும் பிடிக்கும், அனிருத் இசை .ஸோ ,ஒரு நல்ல காம்பினேஷன் இருக்கு இந்த படத்துல.எதிர்பாப்போம்.

இப்போ அந்த நிகழ்ச்சி பாருங்க.


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி :(மே -10-13 - மே -13-13)

போனவாரம் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சில  கலந்துகிட்டாரு சிவா.அவருக்கான கேள்விகள் ஈஸியா தான் இருந்தது.ஆனா ஒரு ஒரு கேள்விக்கும் ஆவர் பதில் சொன்ன விதம் ,சிரிச்சு சிரிச்சு போதுன்னு ஆகிடுச்சு..எல்லாராலயும் எல்லாரையும் சிரிக்க வச்சுட முடியாது.அதுவும் மத்தவங்கள புண்படுத்தாம ,அதே நேரம் டயமிங்கும் மிஸ் ஆகாம சிரிக்க வைக்குறது ரொம்ப கஷ்டம்.ஆனா இவருக்கு இந்த விதம் ஈஸியா வருது.இது சிவகார்த்திகேயனோட ஸ்பெஷாலிட்டி.'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - எபிசோட் 1 'இங்க உங்களுக்கு

மே -10-13 எபிசோட்  :




நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி :(மே -13-13)


சிவா அவர்கள்  மேலும் மேலும் பெரிய நிலைக்கு வருவதற்கு வாழ்த்துக்கள் 

திங்கள், 5 நவம்பர், 2012

ஆராதயா






ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சன் குழந்தையை நம்ம மீடியா காரங்க இந்த குழந்தை பொறந்ததுல இருந்து  போட்டோ எடுக்க படாத பாடு பட்டு கண்ணுமட்டும் தெரியுர மாதிரி,கன்னம் மட்டும் தெரியுர மாதிரின்னு போட்டோ எடுத்து(ப்யூசர்  ஹீரோயின் இன்ட்ரோடக்க்ஷன் இப்போவே குடுத்துட்டாங்க  இல்ல ) கடைசியா ஒரு வழியா போட்டோ எடுத்துட்டாங்க .


என்ன  பண்றது நமக்கு அந்த குழந்தை எப்படி இருக்கு யார் மாதிரி இருக்குனு பாக்க ஆர்வம் அவங்களுக்கு மீடியா கிட்ட இருந்து விலகி ஒரு சாதாரண குழந்தையா வளக்கணும்னு ஆசை , அமிதாப் ,அபிஷேக் ,ஐஸ்-னு ஒரு செலிபிரிட்டி குடும்பத்து வாரிசு அந்த குழந்தையே சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் மாதிரி வளரனும்னு நினச்சாலும் நாம விடமாட்டோம் இல்ல.


இந்த குழந்தை கொஞ்சம் வளந்ததும் முகம் எப்படி இருக்கும்,பத்து வயசுகிட்ட முகம் எப்படி இருக்கும்னு எல்லாம் இப்பவே மார்பிங் எல்லாம் செஞ்சு நெட்-ல போட்டு இருக்காங்க நம்ம ஆளுங்க.எப்புடி.....!!!!!!!!!!!அந்த குழந்தைய பெத்தவங்க கூட இத இன்னும் யோசிச்சு இருக்கமாட்டாங்க.


-------என்ன பண்றது பிரபலம் நாவே  ப்ராபளம் தான்