பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 31 மே, 2014

சொற்களுக்கான அர்த்தத்தை புகைப்படம் மூலம் விளக்கும் இணையதளம்

வோர்டியா என்கிற இணையதளம் வழக்கமான இணைய அகராதிகளைப் போல சொற்களுக்கான அர்த்தங்களை தருவதோடு மட்டுமில்லாம, அதற்கான படக்காட்சிகயையும் தந்து விளக்குது.


வோர்டியா தளத்திற்குச் சென்று இலவச உறுப்பினர் கணக்கு ஒன்றை தொடங்கிக் கொள்ள வேண்டும். கூடவே, உறுப்பினர் மாணவரா அல்லது ஆசிரியரா என்பதையும் குறிப்பிட வேண்டும். தேடுபெட்டியில் எந்த வார்த்தைக்கான பொருள் தேடினாலும் அதற்கான அர்த்தத்தோடு, படக்காட்சியும் வந்து நிற்க்கும் . கூடவே, அச்சொல்லின் முழு வரையறை, சொற்பிறப்பு, உதாரணங்கள் மற்றும் சொல்லின் தொடர்புடைய வார்த்தைகள் வரும் . உதாரணமாக,School என்ற வார்த்தைக்கான வீடியோ விளக்கத்தில், நிபுணர் ஒருவர், பள்ளியின் சிறப்பம்சம் குறித்து விளக்குவார்.

பெரும்பாலான வார்த்தைகளுக்கு வீடியோ விளக்கம் கிடைத்து விடுகிறது. எனினும், சில வார்த்தைகளுக்கு வீடியோ விளக்கம் பதிவு செய்யப்படாமல் உள்ளது . அது போன்ற சொற்களுக்கு நாமே கூட வீடியோ விளக்கத்தை தரவேற்றலாம். மேலும், இணையப் பயனாளர்கள், தங்களுக்குப் பிடித்த, தங்களிடம் உள்ள சொல்லுக்கான வீடியோ விளக்கத்தை இந்தத் தளத்தில் சமர்ப்பிக்கலாம்.

தற்போது பள்ளி மாணவர்களை ஈர்க்கும் வகையில் கணினி விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. மேலும், தினமும் ஆன்லைனில் மாணவர்களுக்கான போட்டி நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

இணையதள முகவரி: www.wordia.com அதே போல், www.enchantedlearning.com / Dictionary.html என்ற இணையதளம், சொற்களுக்கான அர்த்தத்தை புகைப்படம் மூலம் விளக்குகிறது.

வியாழன், 29 மே, 2014

சூரிய குடும்பம்

புதன் : அதிவேகம் 

   சூரியனை மிக வேகமாகச் சுற்றி வரும் கோள்.விநாடிக்கு 48 கி.மீ வேகத்தில் 88 நாட்களில் சூரியனை சுற்றிவருகிறது.

வெள்ளி : அதிவெப்பம்

   சூரியக் குடும்பத்தின் வெப்பமான கோள்.இதோட வளிமண்டலத்தில 96 சதவிகிதம் கார்பன்டை ஆக்சைடு நிரம்பியிருக்குறதே இதனோட வெப்பத்துக்கு காரணம்.சராசரி வெப்ப நிலை 4600 டிகிரி செல்சியஸ்

செவ்வாய் : சிவந்த மண்

  செவ்வாய்க் கோள் சிவப்பு நிறத்துல இருக்குறதுக்கு காரணம் அதுல இரும்பு ஆக்சைடு நிரம்பியிருக்குறதுதான்.

வியாழன் : புயல் 

  வாயு மிகுந்த இந்த கோளோட எடையில்லா வளி மண்டலமும் வலுவான ஈர்ப்பு விசையும் பெரும் புயல் மேகங்கள் உருவாகக் காரணமா இருக்குது.பூமியில உருவாகுற புயலை விட மூணு மடங்கு வலுவான புயலா அது இருக்கும்.

சனி : மீதேன் மழை

  சனி கோளோட மிகப்பெரிய நிலவான டைட்டன்ல பெய்யும் மீத்தேன் மழை மூலமா ராக்கெட்டே ஓட்டலாமாம்.

நெப்டியூன் : அடர்த்தி 

  வாயுக்களால நிரம்பிய வெளிப்புறம் பனிப்படலத்தை கொண்ட நாலு கோள்கள்ல நெப்டியூன்னும் ஒன்னு.அந்த வகையில ரொம்ப அடர்த்தியானது.

நிலவு : குளிர்ச்சி 

  இங்க வளிமண்டலமே இல்லாத காரணத்தால ரொம்ப குளிர்ச்சியான துணைக்கோள் இது.இந்த நிலவோட மறுபக்கதுல இருக்குற சூரியனை பாக்காத பெருங்குழிகள் குளிர் சுரங்கங்களாக இருக்காம்.

யூரேனஸ் : தொலைவு 

  சூரியன்ல இருந்து ரொம்ப தூரத்துல இருக்குறதால இந்த துணைக்கோள் சூரியன்ல இருந்து பெறும் வெப்பதுல வெறும் 5 சதவிகிதத்தை மட்டுமே இது திரும்ப எதிரொளிக்குது.
   

செவ்வாய், 27 மே, 2014

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன் ?

புதுமணத்தம்பதிகள் அம்மி மிதிச்சு அருந்ததி பாக்குறது எதுன்னு தெரியுமா?

ராமரின் குலகுருவான வஷிஷ்டரின் மனைவி அருந்ததி..இவங்க ரொம்ப ஒற்றுமையா வாழ்ந்து வந்தாங்க..அதனாலதான் வானத்துல நட்சத்திரமா வாழுற அதிஷ்டம் அடைஞ்சாங்க..இவங்களமாதிரி தம்பதிகள் ஒத்துமையா இருக்கணும்னு தான் அருந்ததி நட்சத்திரம் பாக்குறத ஒரு சடங்கா செய்றாங்க..

அறிவியல் ரீதியா பாத்தோம்னா ... "சப்தரிஷி மண்டலம்" .."சப்தம்" என்றால் "ஏழு" ..ஏழு ரிஷிகள் ஒன்னா சேந்து வசிக்குறாங்கனு புராணங்களில் சொல்றாங்க..

வானவியல் விஞ்ஞானிகள் "The  great bear constellation "-னு சொல்றாங்க..இந்த ஏழு நட்சத்திரங்களில் நாலு நாற்கோண வடிவத்தின் முனைகளாக இருக்கும்..மற்ற மூன்றும் பட்டம் போல இருக்கும்..இந்த பட்டத்தோட வாலில் நடுவுல இருக்குறது 'வஷிட்ட' நச்சத்திரம் என்னும் 'மிசார்' ..அதை ஒட்டி மெல்லியதாக இருக்குறது 'அருந்ததி' என்னும் 'அல்கார்'..இந்த ரெண்டு நட்சத்திரமும் ஒரே ஈர்ப்பு மையத்தோட சுழல்பவை..அதாவது ஒன்றுக்கொன்று ஈர்ப்பு உடையவை.இந்த நட்சத்திரத்தைப் போல புதுமணதம்பதிகள் ஒருத்தருக்கொருத்தர் ஈர்ப்போட எப்பவும் வாழனும்னு சொல்றதுதான் அருந்ததி நட்சத்திரம்  பாக்குறதோட நோக்கம்..

ஞாயிறு, 25 மே, 2014

கூகுள் பற்றி கூகுள் பண்ணுவோமா?

கூகுள்ல எதப் பத்தி தேடினாலும் சுவாரசியமான விஷயத்தை அள்ளிக்கொடுக்கும் கூகுள் நிறுவனத்தைப் பற்றி சில சுவாரசியமான தகவல்கள் இங்க...


- > கூகுள் தேடுதல் தளத்தில் உள்ள சர்ச் இஞ்சினுக்கு, இந்நிறுவனத்தினை நிறுவிய லாரி பேஜ் மற்றும் பிரின் இட்ட பெயர் பேக்ரப் (BackRub).

- > கூகுள் நிறுவனத்தில், முதல் முதலாக நியமிக்கப்பட்ட அலுவலர் பெயர் கிரெய்க் சில்வர்ஸ்டெய்ன் (Craig Silverstein) ஆவார்.

- > கூகுள் நிறுவனத்தின் முதல் அலுவலகம் இன்டெல் நிறுவன மேனேஜர் வீட்டில் இருந்த கார் ஷெட்டில் இயங்கியது.

- > ஓர் இணைய தளத்தின் தரத்தினை அளக்க பேஜ் ரேங்க் (Page Rank)என்ற அலகினை கூகுள் பயன்படுத்துகிறது. ஸ்மார்ட் போன் கேலரிக்கு ஸ்மார்ட் போன் கேலரிக்கு

- > ஜிமெயிலை உருவாக்கிய கூகுள் பொறியாளர் பால் புக்ஹெய்ட் (Paul Buchheit). இவர் தான் கூகுள் நிறுவனத்தின் புகழ் பெற்ற "Don't be evil" என்ற வாசகத்தைக் கொண்டு வந்தவர்.

- > கிராண்ட் சென்ட்ரல் (GrandCentral) என்ற நிறுவனத்தினைக் கையகப்படுத்தி, கூகுள், கூகுள் வாய்ஸ் (Google Voice) என்ற சேவையைக் கொண்டு வந்தது.

- > கூகுள் நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டம் Google I/O என அழைக்கப்படுகிறது.

- > இந்த ஆண்டு Google I/O கூட்டத்தின் போது, இதன் நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி பிரின், ஸ்கை டைவிங் செய்து, உலகத்தில் உள்ள பத்திரிக்கைகளில் செய்தியாக இடம் பெற்றார்.

வெள்ளி, 23 மே, 2014

பேஸ்புக் மூலம் பண பரிவர்தனை


பல புதுமைகளையும் புது புது ஆப்ஷன்கள் வழங்கும் பேஸ்புக், சீக்கிரமே இன்னும் ஒரு புதிய ஆப்ஷன் வழங்கப்போகுது .

அதுதான் பேஸ்புக்கின் மூலம் பண பரிவர்தனை.அதாவது பேஸ்புக்கின் மூலம் பணபரிவர்தனைகளை மேற்கொள்ளலாம் என்பதே அந்த  புதிய ஆப்ஷன் .அதாவது நெட்பேங்கிங் மாதிரி.

இதன் மூலம் யாருக்கு வேணும்னாலும் சில நொடிகள்ல நாம பணம் அனுப்பலாம் அல்லது பெறலாம்.இதுக்கு பேஸ்புக்கில் அக்கவுன்ட் இருந்தா போதும் .

முதல்ல இந்த திட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கு வரப்போகுது .அதுக்குஅப்பறம் உலகின் அனைத்து நாடுகளுக்கும் வரும்னு சொல்றாங்க..புதன், 21 மே, 2014

நீர்நிலைகளிலும் செல்லக் கூடிய சைக்கிள்

நீர்நிலைகளிலும் செல்லக் கூடிய சைக்கிளை கண்டுபிடித்திருக்கிறார்கள், தரங்கம்பாடியைச் சேர்ந்த ஹை-டெக் ரிசர்ச் ஃபவுண்டேஷன் நிறுவனத்தார். ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் கடக்க முயன்று அடித்துச் செல்லப்பட்டவர்களும் அதிகம். இந்தப் பிரச்சினைக்கு மக்களுக்கு உதவக்கூடிய எளிமையான கண்டுபிடிப்பு இந்த சைக்கிள்" என்கிறார், ஹை-டெக் நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான பாலசுந்தரம்.

இரண்டாகப் பிரிக்கப்படும் பழைய லாரி டயர் டியூப், சைக்கிளின் முன் மற்றும் பின் சக்கரங்களில் இணைக்கப்படுகிறது. சைக்கிளின் பின் சக்கரத்தில் இரும்புத் தகடால் செய்யப்பட்ட சிறப்பு விசிறி ஒன்றும் இணைக்கப்படுகிறது. காற்று நிரப்பப்பட்ட லாரி டயர் டியூப்பினால் மிதக்கும் சைக்கிள், பெடலை அழுத்தும் போது சுழலும் விசிறியினால் நீரில் முன்னோக்கிச் செல்கிறது. மணிக்கு 15 முதல் 20 கி.மீ. வேகத்தில் இதில் தண்ணீரில் செல்ல முடியும். இந்த சைக்கிளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களும் உள்ளூர் சந்தைகளில் கிடைக்கக் கூடிய விலை மலிவான பொருட்கள். எனவே, சாதாரண சைக்கிளை மிதக்கும் சைக்கிளாக மாற்ற ஆகும் செலவு, தோராயமாக ஆயிரத்து ஐநூறு ரூபாய் மட்டுமே.

இம்முயற்சியில் ஹை-டெக் நிறுவனத்தினரோடு வேதாரண்யம் செம்போடை ஆர்.வீ. பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் சூர்யா, விஜய், சூர்ய பிரகாஷ், முகுந்தன், முருகதாஸ் மற்றும் வல்லவராயன் ஆகியோரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

திங்கள், 19 மே, 2014

பூச்சிக்கொல்லிகளும் பாதிப்புகளும்

விவசாயத்துல பயன்படுத்துற பூச்சிக்கொல்லிகலில் சில மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது. இந்தியாவில் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள 67 வகை பூச்சிக்கொல்லிகள் தடையின்றி உபயோகப்படுத்தப்படுது. இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளால மனிதனுக்கு பாதிப்பு வரும்னு சொல்றாங்க தெரியுமா ??

நாளமில்லா சுரப்பிகளைப் பாதிக்கும் பூச்சிக்கொல்லிகள்

அசிபெட், மிதொமைல், திறம், பைபென்த்ரின், பாஸ்போமிடன், சைனெப், கார்பரில், குனல்போஸ்,சைரெம், கார்போபுரன், ட்ரைக் லோரன், டி.டி.டீ., அட்ரசின், டியாசினான், டயுரோன், டைகொப்ஹல், ட்ரை ப்ளுரலின், என்டோசல்பான், கார்பெண்டசிம்,பநிதரோதியன், லின்டேன், பினரிமொல், மலத்தியன், மன்கோசப்.

இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் பூச்சிக்கொல்லிகள்

பைபென்த்ரின், டெல்டா மேத்ரின், டைமிதொயட், பிந்த்ரோதியன், லினுரன், பெநோமில், கார்பெண்டசிம், டைநோக்கப், திறம், ட்ரை டிமொர்ப்.

மரபணுவைப் பாதிக்கும் பூச்சிக்கொல்லிகள்

கார்பரில், ட்ரை ப்ளுரலின், பெநோமில், கார்பெண்டசிம், திறம், டைக்லோர்வோஸ், டைமிதொயட், ஜிரம்

கருவினைப் பாதிக்கும் பூச்சிக்கொல்லிகள்

கார்பரில், திறம், ட்ரை டிமொர்ப், பெநோமில், டினோக்கப், டைமிதொயட் ஜிரம்,

இந்த பட்டியலை தொகுத்த லட்சுமி நரசிம்மன் மற்றும் குழுவின் தொடர்புக்கு: 94453 77575

                                            --- வார இதழில் இருந்து

சனி, 17 மே, 2014

"வாட்ஸ் அப்" உடன் இணையும் ஏர்டெல்


ஸ்மார்ட் போன்கள் வச்சிருக்குற அனேகப்பேர் இப்போ "வாட்ஸ் அப்" அப்ளிக்கேஷன் உபயோகிக்குறாங்க..இந்த  "வாட்ஸ் அப்"  உபயோகத்துக்காக மட்டுமே பலர் இன்டர்நெட் கார்டு இணைப்பை செல்பேசியில் வாங்குறாங்க.

இத கவனிச்ச ஏர்டெல் நிறுவனம் வாட்ஸ் ஆப்பிற்கு தனியாக நெட் கார்டு வசதி செய்யப்போறாங்க.இந்த நெட்கார்டை பயன்படுத்தி வாட்ஸ் ஆப்பை மட்டுமே மொபைலில் இயக்க முடியும்.

 இந்த நெட் கார்டின் வேலிடிட்டி 1 மாதம் . இனி வாட்ஸ் ஆப்பில் மட்டும் இயங்க அதிக விலை கொடுத்து நெட் பேக் போட தேவையில்ல இந்த வாட்ஸ் ஆப் கார்டு மட்டும் போட்டா போதும் .
வெள்ளி, 16 மே, 2014

சோனி ஸ்மார்ட்பேண்ட் SWR10

சோனி நிறுவனம் கையில் அணிந்துகொள்ளும் வகைல ஒரு ஸ்மார்ட்பேண்ட் SWR10 -ஐ அறிமுகப்படுத்தியிருக்கு.இது ஆன்ட்ராய்டு வகை செல்பேசிகளுக்கு மட்டும் பொருந்தக்கூடியது. ..


நீரில் நனைந்தாலும் வேலைசெய்யக்கூடிய இந்த ஸ்மார்ட்பேண்ட் நம்முடைய தினசரி நடவடிக்கைகள் அதாவது சமூக மற்றும் பொது நடவடிக்கைகளை கண்காணிச்சுக்கிட்டே வரும்.அதாவது  எவ்வளவு தூரம் நடந்தோம் ,எவ்வளவு கலோரிகள் நிறைந்த உணவு எடுத்துகிட்டோம்,நாம தூங்குற நேரம் என எல்லாத்தையும் இது பதிவு செஞ்சு வச்சுக்கும்.

அதுமட்டும் இல்லாம நாம கேக்குற இசை,நாம எடுக்குற புகைப்படங்கள்,நாம விளையாடும் கேம்-னு எல்லாத்தையும் கலெக்ட் செஞ்சு வச்சுக்கும்.


நாம ஒரு பாட்டுக் கேக்குறோம்னா அதை இந்த ஸ்மார்ட்பேண்ட்  மூலமாகவே கட்டுப்படுத்தமுடியும்.சேகரித்த விவரங்களை ஸ்மார்ட்பேண்ட்ல் இருந்து செல்பேசிக்கு NFC அல்லது ப்ளுடூத் வழியாக அனுப்பிக்கொள்ளலாம்.

நமக்கு போன் அழைப்புகள் அல்லது மெசேஜ் வந்தா ,இந்த ஸ்மார்ட்பேண்ட் வைப்ரேட் (அதிர்ந்து) ஆகி நமக்கு அதைதெரியப்படுத்தும்..அலாரம் செட் செய்து அதை ஸ்மார்ட்பேண்ட்  மூலம் இயக்கும் வசதியும் இருக்கு .

பலவண்ணகளில் இந்த ஸ்மார்ட்பேண்ட்  கிடைக்கும்.

இதற்க்கான App கூகிள் ப்ளே ஸ்டோர் (Google Play Story )-ல் இலவசமாக கிடைக்கும்.

இதனோட விலை சந்தை நிலவரப்படி Rs .5990/-

வியாழன், 15 மே, 2014

ஃபோல்டர் வடிவத்தை மாற்ற

நாம நிறையா ஃபோல்டர் வச்சிருப்போம்..அந்த ஃபோல்டர் எல்லாம் பொதுவா மஞ்சள் நிறத்துலதான்  இருக்கும்..இந்த ஃபோல்டரில் நமக்கு பிடிச்ச புகைப்படத்தையோ  இல்ல எப்போ பாரு இந்த ஃபோல்டர் ஒரே ஸ்டைல்ல இருக்கு இதை வேற ஸ்டைல்க்கு மாத்தணும்னு நினைக்குறீங்களா? அதுக்கும் வழி இருக்கு ....


1. உங்க ஃபோல்டர் மேல ரைட் கிளிக் பண்ணுங்க

2. Properties போங்க அதுல Customize -  னு  ஒரு Tab இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க

3. இப்போ நீங்க ,'Choose Picture ' -னு ஒரு பட்டன் இருக்கும்..அதை கிளிக் செஞ்சு உங்களுக்கு விருப்பப்பட்ட புகைப்படம் எந்த டிரைவ்ல எந்த  இடத்துல இருக்கோ அத செலக்ட் செஞ்சு OK  குடுங்க.

4. உங்களுக்கு புகைப்படம் வேண்டாம் , திரும்ப பழைய படியே இருக்கட்டும்னு நினச்சா , 'Restore Default' -பட்டன் கிளிக் பண்ணுங்க..

4. இந்த ஃபோல்டரை உங்களுக்கு விருப்பப்பட்ட வடிவத்துல மாத்தனும்னா
'Change Icon ' பட்டன் கிளிக் செஞ்சீங்கனா , ஒரு சின்ன விண்டோ ஓப்பன் ஆகும் ..அதுல இருந்து நீங்க செலக்ட் செஞ்சுக்கலாம்..அதும் பிடிக்கல திரும்ப பழைய படியே இருக்கட்டும்னு நினச்சா , 'Restore Defaults' -பட்டன் கிளிக் பண்ணுங்க..

செவ்வாய், 13 மே, 2014

கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இலவசப் புத்தக வங்கிகள்!

கல்லூரியில் படிக்குற ஏழை மாணவர்கள் படிக்குறதுக்கு உதவுற வகைல புத்தகங்களை இலவசமா சில புத்தக வங்கிகள் கொடுத்துக்கிட்டு இருக்காங்கனு படிச்சப்போ அந்த விவரத்தை அப்படியே ஷேர் பண்ணின்னா புத்தகங்கள் வாங்க வசதி இல்லாத ஏழை மாணவர்கள் பயனடைவாங்கனு தோணுச்சு அதனால அதை அப்படியே ஷேர் செய்றேன்..நீங்களும் இந்த விவரத்தை பகிர்ந்து மாணவர்களுக்கு உதவுங்க...ஆனா படிச்சு முடிச்சதும் பத்திரமா புத்தகத்தை திரும்ப தந்துடணும்..


 புத்தக வங்கியின் விவரங்கள் :


ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் புத்தக வங்கி

சென்னையில் 1964-ல் தொடங்கப்பட்ட இந்த புத்தக வங்கியில் தற்போது 70 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. புதிய புத்தகங்கள் வாங்குவதற்காக இந்த அமைப்பின் மூலம் ஆண்டுக்கு ரூ.9 லட்சம் செலவிடப்படுகிறது. இந்தப் புத்தக வங்கி மூலம் இதுவரை 85 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். கலை, அறிவியல், பொறியியல் துறை படிப்புகளுக்கான புத்தகங்கள் இங்கு இருக்கின்றன.

திங்கள், 12 மே, 2014

பயோ கேஸ்

ஜெனரேட்டர்களுக்கு பதிலா பயோ கேஸ் பயன்படுத்தி, இயந்திரங்களை எந்தத் தொந்தரவும் இல்லாமல் இயக்குகிறார் நெல்லை மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சலவை சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தும் செல்வப்பாண்டி.

"இருபது லட்சம் ரூபாய் செலவானது. மத்திய அரசின் மானியம் 40 சதவிகிதம். கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் பயோ கேஸ் மூலம் ஜெனரேட்டர்களை (400 கனமீட்டர்) இயக்கத் தொடங்கி, இதன் மூலம் 125 கிலோவாட் திறன் கொண்ட 2 ஜெனரேட்டர்கள் 10 மணி நேரமும், 62.5 கிலோவாட் திறன் கொண்ட ஒரு ஜெனரேட்டர் 8 மணி நேரமும் இயங்குது . ஒரு நாளைக்கு 1,000 கிலோவாட்டிற்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி ஆகுது. எனவே, 24 மணி நேரமும் தங்குதடையின்றி மின்சாரம் கிடைக்குது.

மணிக்கு 14 லிட்டர் டீசலில் இயங்கி வந்த 125 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டர், தற்போது 3 லிட்டர் டீசலிலும், மணிக்கு 8 லிட்டர் டீசலில் இயங்கி வந்த 62.5 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டர், தற்போது 4 லிட்டர் டீசலிலும் இயங்குது. இதனால், ஒரு மணி நேரத்துக்கு 500 ரூபாய்க்கும் அதிகமாக லாபம் கிடைக்குது . தற்போது இவ்வாயுவை சிலிண்டரில் அடைத்து, தொழிற்சாலை வாகனங்களையும் இயக்குறோம். மூன்று வாகனங்கள் பயோ கேஸ் மூலம் இயங்குது. ஒரு சிலிண்டரில் (2 கிலோ) 250 கி.மீ., தூரம் வரை பயணிக்கலாம். ஒரு லிட்டர் டீசலில் 4 கி.மீ., வரை இயங்கிய வாகனங்கள், பயோ கேஸில் 8 கி.மீ., தூரத்துக்கு போகும்.. ஜெனரேட்டருக்கு டீசல் பயன்படுத்துவதில் இருந்து 80 சதவிகிதமும், வாகனங்களுக்கு டீசல் பயன்படுத்துவதில் இருந்து, 50 சதவிகிதமும் சேமிக்கிறோம்.

சனி, 10 மே, 2014

ஸ்மைலிகளும் அதன் அர்த்தங்களும்

நாம மெயில் அனுப்பும் போது இல்ல சாட் செய்யும் போது நம்ம உண்ணர்வுகளை வெளிப்படுத்துற வகைல ஏதாவது ஒரு ஸ்மைலி சேர்த்து அனுப்புவோம் .


பலவிதமான ஸ்மைலி கள் இருக்கு .. ஸ்மைலிகளை எப்படி டைப் செய்றது ,எந்த எந்த ஸ்மைலிக்கு என்ன என்ன அர்த்தம்னு இப்போ பாப்போம்...

:-)          -       சிரிப்பு

:-(          -      வருத்தம்

;-)          -      கண்சிமிட்டல்

:-o         -       வியப்பு

:-|          -       உணர்ச்சியற்ற முகம்

வியாழன், 8 மே, 2014

ஆன்மீக கேள்வி பதில்

கிளிமூக்கு கொண்ட சுகபிரம்ம முனிவரின் தந்தை    -  வியாசர் 

ஆதிசங்கரர் ஸ்தாபித்த கிருஷ்ணர் கோவில்  -  கேரளாவிலுள்ள காலடி 

தினமும் முருகனை அரைநிமிடம் தியானிக்க சொல்பவர்  -  அருணகிரிநாதர் 

திருப்பதி மலையில் உள்ள படிகளின் எண்ணிக்கை   -  400

சிவனுடன் நடனமாடி அம்பிகை தோற்ற தலம்  -   திருவாலங்காடு 

யோகாசன கோலத்தில் காட்சிதரும் அம்பிகை  -  திருவாரூர் கமலாம்பாள் 

ராமபக்தரான தியாகராஜர் பூஜித்த விக்ரஹம்  -  ராம பஞ்சாயதன்

சப்தாஸ்வன் என்று சொல்வதன் பொருள்  -  ஏழு குதிரை பூட்டி தேர் கொண்டவன் (சூரியன்)

அடித்த கையை பிடித்த பெருமாள் - நரசிம்மர் 

கிருதயுகத்தில் தர்மதேவதையின் ஆட்சி நடந்தது 

புதன், 7 மே, 2014

கீபோர்டு வாசிக்கக் கத்துக்கலாமா?

இசையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்காக இணையதளம் மூலமாக இலவசமாக கீபோர்டு வாசிக்கக் கற்றுத் தருகிறது ஓர் இணையதளம்.


www.bgfl.org/custom/resources_ftp/client_ftp/ks2/music/piano/ என்கிற இந்த இணையதளத்திக்கு போனா , 1 1/2 ˆOctave கொண்ட ஒரு கீபோர்டு திரையில் தோன்றும் (ஒரு ˆOctave என்பது 12 கீகள் அதாவது 5 கறுப்பு மற்றும் 7 வெள்ளை கீகள்). கணினியின் mouse அல்லது கீபோர்டினை பயன்படுத்தி திரையிலுள்ள கீபோர்டினை நாம் இயக்கலாம். அப்படி நாம் வாசிக்கும் இசையை ஹெட் போன் அல்லது ஸ்பீக்கர் மூலம் கேட்டு மகிழலாம்.

இதில் இசைக் கருவி கீபோர்டுகளை இயக்க எந்தெந்தக் கணினி கீபோர்டு keyகள் பயன்படுத்தப்படும் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கீபோர்டு மூலம் இயக்கும்போது Capslock-இல் இருக்கக்கூடாது. இதில் பியானோ, கிதார், புல்லாங்குழல், சாக்ஸபோன் போன்ற 9 வகையான கருவிகளின் இசையை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக guitar என்பதை கிளிக் செய்தால் அதற்கு மேலே பச்சை லைட் எரியும். இது தவிர நாம் வாசிக்கும் இசைக்கு ஏற்றவாறு Drum Beat-களும் போட்டுக்கொள்ளலாம்.

இதற்கு 6 வகையான Beat-கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. Chord Mode என்கிற optionஐ click செய்வதன் மூலம் 7 ஸ்வரங்களின் chord-களையும் நாம் வாசிக்கலாம். முதலில் கீக்களை கிளிக் செய்த பின் play mode என்கிற option-ஐ click செய்தால் அந்த Chord-ன் இசையை கேட்டுக்கொள்ளலாம்.

மேலும் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் Instruction option-ஐ click செய்து பார்த்துக்கொள்ளலாம். இந்த கீபோர்டை வாசித்து மகிழ www.bgfl.org/custom/resources_ftp/client_ftp/ks2/music/piano/ என்கிற தளத்திற்குச் செல்லவும். இது தவிர இணையத்தில் இலவசமாக கீபோர்டு வாசிக்கும் முறைகளும் பாடங்களும் உள்ளன (www.musiclegato.com). 

திங்கள், 5 மே, 2014

விஜய் டி.வி -கோபிநாத் - நீயா நானா - 4

நேத்து "நீயா நானா !! " தலைப்பு "நகைச்சுவை கலைஞர்கள் VS பொது மக்கள்..வித்யாசமாகவும் அதேசமயம் காமெடியாகவும் நிகழ்ச்சி போனது..

விஜய் டிவியின் நிகழ்ச்சிகள்ல நாம பாத்து ரசிச்ச பல காமெடியன்கள் கலந்துகிட்டாங்க இதுல..

அவங்க பேசினப்போதான் தெரிஞ்சது அவங்க ஒரு ஒருத்தரும் எவ்வளவு படிச்சிருக்காங்கனு..அடப்பாவிகளா இவ்வளவு படிச்சிருக்கீங்களா நீங்க உங்கள சாதாரணமா நினச்சுட்டோமேனு யோசிச்சேன் நான்..

அவங்களுக்குள்ல இத தவிர எவ்வளவு திறமை இருக்கு ,இதுக்கு பின்னாடி எவ்வளவு கஷ்டங்களும் வேதனைகளும் இருக்குனு நான் பார்த்து ரசிச்சு... சிரிச்சு... வியந்த ... அந்த எபிசோட் இங்க  .....


ஞாயிறு, 4 மே, 2014

சில தகவல்கள்

விவசாயத்துல அறிமுகமாகியிருக்குற புதிய தொழில்நுட்பங்கள், இயற்கை வேளாண் முறைகள், பயிர்களை சந்தைப்படுத்த மார்க்கெட் நிலவரங்கள், நீர் மேலாண்மை போன்ற வேளாண் தகவல்களை ஒலிபரப்புவதற்காகவே பசுமை 90.4 என்ற எஃப்.எம்., திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் இயங்கி வருது. இந்தப் பண்பலை வானொலி நிலையத்தை பால்பாஸ்கர் என்ற விவசாயியே நடத்தி வரார்.

திண்டுக்கல் மட்டுமில்லாம, அருகிலுள்ள மாவட்ட விவசாயிகளுக்கும் விவசாய நிகழ்ச்சிகள் தெளிவா கேட்கணும்ங்கிறதுக்காக சிறுமலை மேல பசுமை வானொலியை அமைச்சிருக்காங்க .

விவசாயத்துல புதிய உத்திகள், இயற்கை உணவு தயாரிப்பு முறைகள்,விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்த மார்க்கெட் நிலவரங்கள், இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்க ஆலோசனைகள்னு ஒவ்வொரு நிகழ்ச்சியாக வழங்குவதோடு, விவசாயத்துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு லைவ்வாகவும் போன் மூலமும் பதிலளிக்க வைக்கிறாங்க . எஃப்.எம். ஆரம்பிச்ச புதுசுல குறைஞ்ச நேயர்கள்தான் இருந்துருக்காங்க . தொடர்ந்து புதுசு புதுசா விவசாயத் தகவல்களைச் சொல்லவே, இப்போ திண்டுக்கல் மட்டுமில்லாம திருச்சி, கரூர், திருப்பூர், மதுரை மாவட்ட விவசாயிகள் என்று ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிங்க நேயர்களா இருக்காங்க...

சனி, 3 மே, 2014

உணவே மருந்து* கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றைத் தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி குடித்தால் அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிட்டும்.

* அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றைக் குறைக்க மிளகு அருமருந்து.

* உணவில் மிளகைச் சேர்த்துக் கொள்வதால் இவை ஏற்படாமல் தவிர்க்கப்படும். ஏற்பட்டால் குணமாகும்.

வியாழன், 1 மே, 2014

TeamViewer - ஒரு பார்வை


Team Viewer மென்பொருளின் எதுக்காக பயன்படுத்துறோம்னா, ஒரு இடத்துல இருக்கும் கணினியை நாம இருக்கும் இடத்துல இருந்து கையாளுவதற்கு/Access செய்வதற்க்கு .

உதாரணத்துக்கு , இப்போ உங்க நண்பரோட கணினியில ஏதோ ஒரு பிரட்சனை அத எப்படி சரி பண்றதுனு உங்க நண்பருக்கு தெரியல.ஆனா உங்களுக்கு தெரியும்.நீங்க Chat /message /phone call மூலமா உங்க நண்பருக்கு சொல்லியும் அவருக்கு சரிபண்ண தெரியலைன்னு வச்சுப்போம் அந்த சமயத்துல நீங்க இந்த மென்பொருள் மூலமா நீங்க இருக்குற இடத்துல இருந்து உங்க நண்பரோட கணினியை இயக்கி அந்த பிரச்சனையை என்னனு பாத்து சரிபண்ண முடிஞ்ச பிரச்சனைனா சரிபண்ணிடலாம்.

அல்லது இப்போ  நீங்க ஒரு File உங்க நண்பர்கிட்ட கேக்குறீங்க அது தன்னோட கணினியில எங்க இருக்குனு உங்க நண்பருக்கு தெரியலனு வச்சுப்போம் அத நீங்க இருக்குற இடத்துல இருந்து  உங்க நண்பரோட கணினியில தேடுவதன் மூலமா  உங்களுக்கு தேவையான File கண்டுபிடிச்சு உங்க கணினிக்கு அனுப்பிக்கலாம்.