பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 8 ஆகஸ்ட், 2012

நம்ம  அபிமான  நடிகர்கள்ல யார் ரொம்ப அழகா கச்சிதமா பாடல்களுக்கு வாய் அசைக்குறாங்கனு  சொல்லுங்க ....
இப்போ நம்ம விஜய் எடுத்துகோங்க ...எப்படித்தான் அவரால மட்டும் எவ்ளோ 'எமோஷனல்' பாட்டுக்கும் யாரையோ வாய்க்குள்ள திட்ற மாதிரி முனுமுனுக்க முடியுது-னு தெரியல.உதாரணத்துக்கு பாருங்களேன் ... 


     'சர்க்கரை நிலவே' பாட்டு ஹரிஷ் ராகவேந்திரர் குரலே ஒரு தனித்துவமான குரல் .அவர் எவ்ளோ 'எமோஷனல்' -லா அந்த பாடு பாடி இருப்பார் அதுக்கு அவ்ளோ ஒரு லைட் லிப் மூவ்மென்ட் குடுத்துருப்பார் நம்ம விஜய்.
  
அது மாதிரி ஷங்கர் மகாதேவன் குரல் எப்படியா பட்ட கண்ணீர் குரல்.எவ்ளோ ஹை பிட்ச் ,உச்ச ஸ்தானத்துல பாடுவர் நம்ம விஜய்-காக அவர்  பாடிய 'நீ என்பது எதுவரை எதுவரை' பாட்டுக்கு நம்ம விஜய் வாய்க்குள்ளே முணுமுணுத்து லிப் மூவ்மென்ட் குடுத்துருப்பார் .
அதே நம்ம அஜித் எடுத்துகோங்க அப்படியே எதிர்மாறா இருப்பார்.அவர் மென்மையான குரலுக்கு சொந்தக்காரரான ஹரிஹரன்-ஜி
பாடலில்  கூட ரொம்ப 'எமோஷனல்' -லா லிப் மூவ்மென்ட் குடுத்துருப்பார் .உதாரணத்துக்கு 'சொல்லாமல் தொட்டு சென்ற  தென்றல்' பாட்டு.  அஜித் இந்த பாட்டுன்னு இல்ல எல்லா  பாட்டுக்கும் ஓவர் 'எமோஷனல்' -லா தான் நடிப்பார்.   
   
 நம்ம விஜய் பாட்டை அஜித்தும் , அஜித்  பாட்டை விஜய்-ம் பாடினா எப்படி இருக்கும்-னு !!!! ஒரு கற்பனை பண்ணுங்க பாப்போம்..
                              சத்தியமா நான் தல தளபதி ரசிகை தாங்க.

1 கருத்து: