பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

ஈகோ ATM :


  ATM  குள்ள கூட ஈகோ வா நு கிண்டல் பண்ண தோணுது இல்ல..இது என்ன இயந்திரம் தெரியுமா? இது நம்ம கிட்ட இருக்குற பழைய எலெக்ட்ரானிக் பொருளை வாங்கிகிட்டு அதுக்கு பணம் தருகிற மிஷின்னாம்.இதுல ஒரு ட்ரே இருக்குமாம் அதுல நமக்கு தேவை இல்லாத செல்போன் ,ஐபாட் ,ஐபேட்,MP 3 பிளேயர் மாதிரி
அயிட்டம் இதுல போட்டுட்டா சில வினாடிகள்ள
இந்த மிஷின் அதை உள்ள வாங்கிகிட்டு அத பல கோணத்துல ஸ்கேன் செஞ்சு அதோட தரத்தை மதிப்பிடுமாம் .அதுக்கு எவ்ளோ பணம் கிடைக்கும்னு திரைல வருமாம்  அந்த பணம் நமக்கு ok -னா அதுக்கான பட்டன் அழுத்தனுமாம் .வேண்டாம்னா  கேன்சல் பட்டன்-ஐ அழுத்துனா போதுமாம் பொருள் வெளில வந்துருமாம் .இதை 'பில்  போவெல்'- என்ற விஞ்ஞானி வடிவமைசிருக்காராம்.கணிசமான பொருள் சேந்ததுக்கு அப்பறம் சுற்றுசூழலை பாதிக்காத வகையில அந்த பொருள்களில் இருந்து பிளாஸ்டிக்,உலோகம் என தனி தனிய பிரிச்சு மறு சுழற்சி செய்யப்படுமாம்.

                      -----என்னாமா யோசிக்குறாங்கையா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக