பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

என் பெயர் ஷானு...............என் பேரு ஷானு .நா எங்க  பொறந்தேன்னு எனக்கு தெரியாது..ஆனா எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து நா இவங்க கூடத்தான் இருக்கேன்.
என்னுடைய பெரிய எஜமான் ..சின்ன எஜமான்...என்னோட இரண்டு நண்பர்கள் ...ராம்..ஸ்ரீ...

  என்னோட பெரிய எஜமான பாத்தா எனக்கு கொஞ்சம் பயம் தான்..உண்மைய சொன்னா எனக்கு சில நேரம் அவர பாத்தா டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆகிடும்-னு சொல்லாம்.எதுக்குனா எனக்கு சில நேரம் தர்மஅடி விழுகும்..நா முடி அதிகமா இருக்குற இனம்..அதுனால சில நேரம் சிலவிஷயம்  ஒத்துக்காம எனக்கு முடி கொட்டும்...அது என் பெரிய எஜமானுக்கு பிடிக்காது..எனக்கு எதாவது உடம்பு  முடியாம போய்டுட்சுனா எனக்கு மாத்திரை குடுப்பார்..அவர ஏமாத்தவும் முடியாது..வலுகட்டாயமா குடுத்துடுவார்..அதனால தான் அவர பாத்தா பயம்..ஆனா  என் மேல அன்பாவும் இருப்பார்....

  என் சின்ன எஜமான்..எனக்கு சாப்பாடு போடறது என்ன வெளில கூப்பிட்டு போறது எல்லாம் இவங்கதான் அதிகமா செய்வாங்க...என்ன நல்லா
பாத்துப்பாங்க..சில நேரம் நா சும்மா வெளில போகணும்னு நினைச்சேனா  கூட  இவங்கள ஈஸி-யா ஏமாத்திடுவேன்.சில சமயம் எனக்கு விளையாடனும் போல இருந்தா இவங்கள கூப்பிடுவேன்..அவங்க என்ன சாப்பிட்டாலும் எனக்கும் தருவாங்க.எனக்கு பசிச்சா சமையல் செய்ற இடத்துல போய் உக்காந்துபேன்..
எனக்கு கேரட் ,தேங்காய் ரொம்ப பிடிக்கும்.மாம்பழம்,சப்போட்டா,பலாபழம்,வாழைப்பழம் என்ன ரொம்ப இஷ்டம்,ஸ்வீட்-னா எனக்கு உயிரு..ஐஸ் கிரீம்-ம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.காரமா எது குடுத்தாலும்  சாப்பிடுவேன்.அதுக்காக மிளகா சாப்பிடுவியானு   கேக்காதீங்க நாங்க விவரம்மாக்கும் .  உண்மைய சொல்லனும்னா எனக்கு பிடிக்காதது எதுவும் இல்லைன்னு சொல்லலாம்..என்ன குடுத்தாலும் சாப்பிடுவேன்..எப்ப குடுத்தாலும் சாப்பிடுவேன்...எனக்கு அடிக்கடி குடிக்க பால் என் தட்டுல ஊத்திடுவாங்க.அப்பறம் என்ன வயிர் நிரஞ்சதும் படுத்து தூங்கிடுவேன்...

ஆனா சில நேரம் அவங்க சொல்றத கேக்கலைனா தர்மஅடி விழுகும்...நா என்ன பண்ணுவேன்? எனக்கு நைட் பாத்ரூம் போகணும் போல இருக்கும்...சில நேரம் இவங்கள எழுப்புவேன்..இவங்க நல்ல தூங்குவாங்க...எழுந்திரிக்கமாட்டாங்க..சில நேரம் ரொம்ப அவசரமா இருக்குனு உள்ளேயே யூஸ் பண்ணிப்பேன்..இதை எல்லாம் கண்ட்ரோல் பண்ண முடியுமா?ஒரு நாய் எவ்ளோ நேரம் தான் கன்ட்ரோல் பண்ண முடியும் நீங்களே  சொல்லுங்க ...அதுக்கு போய் எனக்கு அடி விழுகும்...ம்...அடிக்கடி வாங்கினதால் பழகி போச்சு...சில சமயம் ,கடிக்குற மாதிரி பாவ்லா பண்ணினா பயந்து அடிக்கமாட்டாங்கனு நம்பி கடிக்கபோவேன் ஆனா அப்போ விழுகும்   பாருங்க அடி என் வாயிலையே ..உனக்கு தேவையா இதுனு என்ன நானே கேட்டுகிட்டு அமைதியா படுத்துடுவேன்...என்ன பன்றது வலி...ஒரு தரம் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்   இவன்  ரொம்ப நல்லவன்னு சொன்னதால அப்பறம்  இருந்து நா கடிக்கவும் போறது இல்ல..அடிக்குறீங்களா  அடிங்கனு வாங்கிப்பேன்...ஒரு நாய் எவ்ளோதான் அடிவாங்குறது சொல்லுங்க .

   நா யாரையும் கடிக்க மாட்டேன்க..சும்மா என்ன பாத்தா ஒரு பயம் இருக்கனும்னு கடிக்குற  மாதிரி போவேன் அவ்ளோதான்.எனக்கு பில்டிங் ஸ்ட்ராங் பேஸ் மட்டம் வீக்.புதுசா யாரையாவது பாத்தா எனக்கு கொஞ்சம் பயம் வரும் அத வெளில காட்டிக்காம இருக்க நா கடிக்குற மாதிரி காட்டுவன் அவ்ளோதான். எனக்கு ஒரு சின்ன சத்தம்நாளும் பயம். ஓடி  வந்து ஒளிஞ்சுப்பேன்.உண்மைய சொல்லனும்னா எனக்கு கரப்பான் பூச்சிய பாத்தாக்கூட பயம்ங்க. 

 
எனக்கு 2 நண்பர்கள் இருக்காங்க.ராம் ,ஸ்ரீ ..எனக்கு இவங்கள ரொம்ப பிடிக்கும்..அவங்களுக்கும் என்ன ரொம்ப பிடிக்கும்.ராம் எனக்கு சாப்பிட நெறைய வாங்கிட்டு வந்து குடுப்பாங்க.எனக்கு பைக்ல போறது பிடிக்கும்.ராமும் ஸ்ரீ-ம்  என்ன பைக்ல கூபிட்டு போவாங்க.கார்ல போறதும் பிடிக்கும்.ஸ்ரீ எனக்கு விளையாட பால், ரிங் எல்லாம் வாங்கிட்டு வந்து குடுப்பா .எனக்கு ஸ்ரீ-ஐ ரொம்ப பிடிக்கும்.ஏன்னா  என்னை  எதுக்காகவும்  அடிக்கமாட்டா.திட்டுவா ஆனா கண்டுக்கமாட்டேன்.கொஞ்ச நேரத்துல என்ன கூப்பிட்டு விளையாட ஆரம்பிச்சிடுவா.என்னோட நெறையா  விளையாடுறது ஸ்ரீ-ம் ராமும்  தான்.எனக்கும் ரொம்ப பிடிக்கும்..


சின்ன வயசுல இருந்து என் பழக்கம் என்னன்னா அரைமணி நேரம் விளையாண்டேனா   ரெண்டு மணி நேரம் தூங்கிடுவேன்.அப்போவே அப்டினா இப்போ சொல்லனுமா?
 
எனக்கு ஸ்ரீ கிட்ட பிடிக்காதது என்ன எப்படியாவது ஏமாத்தி குளிக்க வச்சுடுவா,எனக்கு எந்த பாஷைலையும் பிடிக்காத வார்த்த 'குளி-ங்கறது..எனக்கு தண்ணியை  கண்டாலே பிடிக்காத அப்பறம்   எப்படி நா குளிப்பேன் .
நானும் எங்கயாவது ஒளிஞ்சுப்பேன் எப்படியாவது என்ன கூப்பிட்டுபோயடுவா.நானும் வரமாட்டேன்னு எவ்ளோ அடம் பண்ணினாலும் அவ கிட்ட இருந்து தப்பிக்க முடியாது.மேல தண்ணியை  ஊத்திடுவா.அப்றம் என்ன சிக்கிடோம் இனி விடவா  போறானு அமைதியா நின்னுடுவேன். ஆனா எப்படித்தான் இந்த மனுஷ பயல்க குளிக்குறான்களோ தினமும்.அப்பப்பா....

  
ஆனா குளிச்சிட்டு வந்ததுக்கு அப்பறம் என்னக்கு நல்ல கவனிப்புதான்.சின்ன எஜமான் பிஸ்கட் ,முட்டை,பால்,இல்ல வேற ஏதாவதுனு என் வயிர் நிரம்ப குடுப்பாங்க.சாப்பிட்டு வழக்கம் போல தூங்கிவேன்.


சோறு கண்ட இடம் சொர்க்கம்னு சொல்றமாதிரி எனக்கு பான்,எ.சி கண்ட இடம் சொர்க்கம்.சில சமயம் ஆண்டவா இதுலாம் அனுபவிகறதா வேணாமா னு இருக்கும்..ஆனா போன ஜென்மத்துல எதோ புண்ணியம் செஞ்சு இருக்கேன் அதான் நா இவங்ககூட சந்தோஷமா இப்படி இருக்கேன்.

எனக்கு எல்லாமே சுத்தமா இருக்கனும்.நான் தூங்குற இடம் ,சாப்பிடு தட்டு ,தண்ணிகுடிக்குற கிண்ணம்னு  எல்லாம் சுத்தமா இருக்கனும்.ஈரம்னாலே எனக்கு பிடிக்காது.மழைபேஞ்சா    வெளில இறங்க கூட  மாட்டேன் .என்ன ஒரு நாள் ராத்திரி கூடதனியா  விடமாட்டாங்க.என்னாலயும் இருக்க முடியாது.

   என் மேல அன்பா இருக்குற என் எஜமான் களுக்காக,என் நண்பர்களுக்காக அவங்கள நான் இருக்குற வரைக்கும் பத்திரமா பாத்துப்பேன்.

4 கருத்துகள்: