பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ஒலிம்பிக்கில் தமிழன் இசை:


சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் இசைக்குழு, பத்தாயிரம் பேருடன் போட்டியிட்டு ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

ந்த ஆண்டு  ஒலிம்பிக்கில் அபாரமாய் ஒரு சாதனையைச் செய்திருக்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த 15 இளைஞர்கள்.  இந்தச் சாதனைக்காக அவர்கள் தங்களோடு ஆசிய அளவில் போட்டியிட்ட பத்தாயிரம் பேரைப் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்திருக்கிறார்கள். சாதனை செய்திருப்பவர்கள் விளையாட்டு வீரர்கள் அல்ல, இசைக் கலைஞர்கள்.
 சென்னை செட்டிநாடு தர்ஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அஜய், விக்ரம் சாரதி, பாலசுப்ரமணியம், ஸ்ருதி சாகர் ஆகிய நான்கு மாணவர்கள் சேர்ந்து,  ‘Sustain fort’ என்ற பெயரில் சிறிய இசைக்குழுவை 2005ம் ஆண்டு துவக்கினார்கள்.
லண்டன் ஒலிம்பிக் அமைப்பாளர்கள் நடத்திய போட்டிக்கு, ’sounds of air’ (காற்றின் ஒலி) மற்றும்  ’salsa’  (சால்சா) என்ற இவர்களின் இசை வடிவத்தை அனுப்பி வைத்தார்.
சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்த இந்தப் போட்டியில், ஆசியாவிலிருந்து இரண்டே குழுக்கள்தான் தேர்வு பெற்றுள்ளன. ஒன்று சீனா, இன்னொன்று சென்னையைச் சேர்ந்த இளைஞர்களின் குழுவான ஸ்டேக்கடோ.

                                          ----அப்படி போடுபோடுபோடு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக