பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஆனந்தம்

சஞ்சு குட்டி இங்க பாரு ...இதோ இதோ இந்த பொம்மை பாரேன் ...திர்ர்ரர்ர்ர்ர் ....அஹஹாஹ் நல்லா இருக்கா ...
என்று சாரதா சஞ்சுவிடம் விளையாடி கொண்டிருந்தாள் .. 

அழகான புன்னகை ..மேலே முன் பக்கம் முளைத்திருக்கும் அழகான 2 குட்டி குட்டி பற்கள் ..அழகாக கன்னத்தில் விழும் குழி என சஞ்சு வை பார்த்தாலே சாரதாவிற்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் துன்பம் மறந்து இன்பம் தொற்றிக்கொள்ளும் ....

பிஸ்கட் சாப்பிடறியா  செல்லம் இந்தா இங்க வா இங்க வா இதோ வாங்கிக்கோ-னு சொல்லவும் சஞ்சு எழுந்து
தத்தி தத்தி தன் சிறிய கால்களால் முதன் முறையாக நடக்க ஆரம்பித்ததும் சாரதா சந்தோஷத்தில்...வேகமாக ஓடி எதிர் பிளாட் இல் இருக்கும் சரிதாவை கூப்பிட்டாள்.

சரிதாவை சீக்கிரம் வா ...சீக்கிரம் சீக்கிரம்...

இதோ வந்துட்டேன் ...என்று மாவும் கையுமாக சரிதா வந்து நிற்க ,

மாவு அரட்சுகிட்டு  இருக்கேன் என்ன சொல்லு வந்துட்டேன் என்று சொல்லிக்கொண்டே வர ..

சஞ்சு தத்தி தத்தி நடப்பதை பார்த்து ஆனந்தம் அடைந்தாள் ..சாரதா அதற்குள் தன் மொபைல் போன் இல் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தாள் ...
எவ்ளோ அழாக நடக்க ஆரம்பிச்சுட்டே தங்கம் என்று சொல்லி சஞ்சுவை கட்டி கொண்டாள் சரிதா ..

சரி சாரதா வேலை இருக்கு வரேன் நான்... என்று சொல்லி அவசரமாக ஓடினால் சரிதா ...

சஞ்சுவை தோளில் போட்டுகொண்டு ...சாரதா தன் கணவனுக்கு போன் செய்து இன்னைக்கு சஞ்சு என்ன செய்தாள் தெரியுமா   என்று ..அனைத்தையும் விளக்கி ..சீக்கிரம் வாங்க உங்களுக்கு இந்த வீடியோ காட்டனும் சீக்கிரம் ப்ளீஸ் ப்ளீஸ் என்று கெஞ்ச ...
சரிமா வேலை இருக்கு இல்ல ..நான் சீக்கிரம் வர ட்ரை பண்றேன் என்று சொல்லி போன்-ய் கட் செய்தான் கணேஷ் ...

அதற்குள் சஞ்சு நன்றாக உறங்கிவிட்டாள் ..
 
மாலை கணேஷ் வந்ததும் ..பரவாஇல்லையே இன்னைக்கு சீக்கிரம் வந்துடீங்களே ..இருங்க காபி போட்டு எடுத்துட்டு வரேன்..

இன்னைக்கு உன்ன வெளில  கூப்பிட்டு  போலாம்-னு  சீக்கிரம் வந்தேன்..
வெளிலையா  எங்க ?

நீயே கண்டுபிடி பாக்கலாம் ...

ம்ம்ம் ...சினிமா ..

இல்ல ...

பீச் ...

இல்ல ...

உங்க சிநேகிதன் வீட்டுக்கு போகணும்-னு  சொல்லிகிட்டே இருந்தீங்களே?...

இல்ல ...

கோவிலுக்கு ...

இல்ல ..

அப்போ தெரியல நீங்களே சொல்லுங்க ...

இதோ பாரு..

காட்டுங்க ..

 டிக்கெட்.. 

உனக்கு ரொம்ப பிடிச்ச s.v.சேகர்  டிராமா டிக்கெட் ..போலாமா ? என்று காபியை  குடித்தான் ..

ஹே !! நெஜமாவா?- என்று இன்ப அதிர்ச்சி மாறாமல் டிக்கெட்-ஐ திருப்பி திருப்பி பார்த்தாள்.

இருங்க முதல்ல இந்த வீடியோ பாருங்க,என்று வீடியோ காட்ட..

சோ cute இல்ல ..என்று சொல்லியவாறே எங்க சஞ்சு குட்டி கானம்
 ,என்று கணேஷ் கேட்டான்....

லேசான வருத்ததுடன் சரிதா தூக்கிட்டு போய் இருக்கா என்றாள்..

பாரேன் ..எதுக்கு உனக்கு இபோ வருத்தம் ...சஞ்சு ..சரிதா ,சரத்-ன் மகள் ...ஆனா

அவங்ககிட்ட விட நமகிட்ட தான் அதிக நேரம் இருக்கா ..அவங்களுக்கு எவ்ளோ பெரியமனசு நீ இப்படி வருத்தப்படலாமா?

போ போ சீக்கிரம் கெளம்பு பாப்போம்-னு என்று சாராதவை அவசர படுத்தினான் கணேஷ் ...

ம் ..சரிங்க ...என்று தயாரானாள் சாரதா ...

இருவரும் கிளம்பிய பின் ..

சரிதா... சரிதா... டிராமா-கு டிக்கெட் வாங்கிட்டு வந்துருக்கார் திடிர்னு சொல்லாம ...அதான்
போய்ட்டு வரோம்..சஞ்சு எங்க இன்னம் தூங்குறாளா ? என்று எட்டி எட்டி உள்ளே பார்த்தாள் சாரதா ..

இல்ல அவங்க அப்பா வந்துட்டாங்க இல்ல ஒரே ஆட்டம் தான் என்று சொல்லி ..சஞ்சு இங்க வா யார் வந்துருகாங்க பாரு என்று சொல்ல ..சரத் சஞ்சுவை தூக்கிகொண்டு வெளியே வந்தான் ..

ஹாய் கணேஷ் ...

ஹாய் சரத் ..

சஞ்சு அப்பா ,சஞ்சு நடக்க ஆரம்பிச்ச வீடியோ பாத்தீங்களா? எங்க வீட்லதான் முதல்ல நடக்க ஆரம்பிச்சுருக்கா என்று சாரதா சந்தோஷமாக சொல்ல , ம்..பாத்தேன் ...அவ முதல் முதல்-ல பேசினதும் உங்க வீட்லதானே என்று சரத் சொன்னான்.
சரி நாங்க கெளம்புறோம் ...சஞ்சு குட்டி டாட்டா என்று கணேஷும் ,சாரதாவும் சொல்லிவிட்டு சென்றனர்.

சரிதா ,நா ஒன்னு உன்னை கேக்கட்டுமா என்று சரத் சொல்ல ..

என்ன கேளுங்க என்றாள்..

ஆமா நீ சஞ்சு நம்ம வீட்ல நம்மகிட்ட முதல் முதலா பேசலையே ,நடக்கலையே னு நீ வருதபட்ரியா?என்று சரத் கேட்க..

என்ன பேசுறீங்க நீங்க..எப்படீங்க அப்படி நினைப்பேன்..என்னைவிட அவங்க சஞ்சு மேல அன்பா இருக்காங்க.அவங்க  குழந்தை 2 வயசா  இருக்கும் போது உடம்பு முடியாம இறந்துடுச்சு அதுக்கு அப்பறம்   கொழந்தை பொறக்க வாய்ப்பில்லைனு  டாக்டர் சொல்லிட்டாங்கனு கேள்வி பட்டதும்  எவ்ளோ வேதனபட்டோம்..
நம்ம சஞ்சு மேல 2 பேரும் உயிரா இருக்காங்க.

கணேஷ் அம்மா சாரதா மேல கோவம் செஞ்சுகிட்டு கணேஷுக்கு வேற கல்யாணம் பண்ண பேச்சு எடுத்தது 
தெரிஞ்சுகிட்டு கணேஷ் அவங்க அம்மா அப்பா கிட்ட கோவிச்சுகிட்டு இனி எனக்கு சாரதா சாரதாக்கு   நான் யாரும் வேண்டாம் எங்களுக்குன்னு சொல்லிடு வந்துட்டாங்க-னு  சாரதா சொன்னப்போ ரொம்ப அழுதாங்க.
அதுல இருந்து இப்போ வரைக்கும் அவங்க அம்மா அப்பாகிட்ட பேசலையாம்.சாரதா பல தரம் சொல்லியும் கணேஷுக்கு இன்னம் கோவம் போகலையாம்.நீ அவங்க மேல இறக்கபடுற. ஆனா அவங்க உன் இடத்துல வேற பொண்ண வைக்க நினைச்சாங்க.இப்பவும் எதுவும் சொல்லமாட்டாங்கன்னு  எப்படி நம்புற.வேண்டாம்-னு  சொல்லிட்டாறாம் .

எனக்கு கஷ்டமா போச்சு.எவ்ளோ நல்ல  மனுஷங்க தெரியுமா   2  பேரும்  . 
எங்க போனாலும் அவளுக்கு எதாவது வாங்கிட்டு வந்து குடுப்பாங்க மறக்காம ..என்று சொல்லி கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தாள் ...

சில நாட்களுக்கு பிறகு ,
 காலையில் வழக்கம் போல சஞ்சு-வை எதிர்பாத்து காத்து இருந்தாள் சாரதா ...
இதோ வந்துட்டா... என்று சஞ்சுவை குடுத்தாள் சரிதா  ...
அனால் எப்போதும் இல்லாத மாற்றமாக சிறிது நேரத்தில் சஞ்சுவை சரி சாரதா குளிபாட்டினேன் தூங்கிடுவா..நா தூக்கிட்டு போறேன் .. என்று சொல்லி தூக்கி சென்றாள் ..

ஆமா 3, 4 நாலா dull ஆ இருக்கியே என்னமா ? . .என்ன ஆச்சு உடம்பு முடியலையா?என்று கணேஷ் கேட்க  ..
 
அதுலாம் இலைங்க..சரிதா 4 நாலா சஞ்சுவை சீக்கிரம் சீக்கிரம் தூக்கிட்டு போய்டரா..தூங்கிடுவா ..சொந்தகாரங்க வராங்கனுலாம் சொல்லி ...இத்தனை  நாள் அவங்க வீட்டுக்கு வர்ற சொந்தகாரங்க நம்மையும் பாத்துட்டு தானே போவாங்க ..இப்போ என்ன புதுசா..ஏதோ மாற்றம் தெரியுது.. 3 வருஷமா இப்படி ஒருநாளும் நடந்துகிட்டது இல்ல அதான் புரியாம தவிக்குறேன் என்று சொல்லி புலம்பினாள் ..
அதுலாம் ஒன்னும் இருக்காது மா....நீ தூங்கு என்று சமாதனம் படுத்தினான் சாரதாவை . ..

சரத் ஆபீஸ் -இல் இருந்து வந்ததும் ..
என்ன நானும் 4 நாலா பாக்குறேன் எப்பயும் நா வந்ததுக்கு அப்பறம் தான் சஞ்சுவை கணேஷ் வீட்ல இருந்து துக்கிட்டு வருவ, 4 நாளா இங்க இருக்காளே என்ன விஷயம் ...என்று கேட்க  ...
அதுலாம் ஒன்னும் இல்லைங்க ..நான் தான் சஞ்சுவை அதிகமா அவங்க கிட்ட நெருங்க விடறது இல்ல இப்பலாம் என்றாள்  சரிதா ....
..
ஏன் இப்படி பண்ற ..இவ மேல உயிரா இருக்காங்கனு உனக்கும் தெரியும் தானே ,என்னை விட நீ தானே இதை அதிகமா சொல்வ. பாவம் அவங்க ..மனசு எவ்ளோ வேதனை படும் ....என்று  கோவத்தில் சரத் சரிதாவை திட்டினான் ..
ஆமாங்க ..அதனாலதான் அப்படி பண்ணினேன் ..நீங்க அடுத்த மாசம் புனே branch -கு மாத்திட்டாங்க போகணும்-னு சொன்னிங்களே ...மறந்துட்டீங்களா ?திடீர்-னு  சஞ்சுவை அவங்க பாக்கலேன்னா அவகூட விளையாடலேன்னா அவங்க தாங்க மாட்டாங்க ..சஞ்சுவும் மனசு பாதிச்சுடுவா ..அதுதான் கொஞ்சம் கொஞ்சமா நான் அவங்களுக்கு எடுத்துக்குற பக்குவத்த வரவைக்குறேன் என்று சொல்ல ...

கண் கலங்கி சரிதாவை அணைத்து முத்தமிட்டான் சரத் ....என்ன மன்னிச்சுடுமா ...நா அவசரபட்டுடேன் ..
நீங்க எப்பயுமே அவசரம்தான் படுவீங்கனு எனக்கு தெரியுமே என்று சொல்லி கண்ணீரை துடைத்து சிரித்து கேலி செய்தால் சரிதா ...
அன்று கொலுவிற்கு அழைக்க வந்த சாரதா ,வாசலில் இவர்களது உரையாடலை கேட்டு ஒன்றும் சொல்வதரியாமல் நின்றாள் .

எதேச்சையாக எட்டி பார்த்த கணேஷ் ஏன் மா வாசல்லையே  நிக்குற உள்ள போய் கூப்பிடு என்று  சொல்ல..இல்லைங்க  நான் சரிதாவை தப்பா நெனச்சுட்டேன் ,என்று அவர்களின் உரையாடலை சாரதா கணேஷிடம் சொன்னாள்..

நா மன்னிப்பு கேக்கணும் அவகிட்ட என்று சாரதா சொல்ல ...
வாசலில் யாரோ நிற்பதை அறிந்த சரத்தும் சரிதாவும் பார்க்க ...கணேஷின் தோளில் சாரதா ,கண்களில் கண்ணீர் வடிய நின்று கொண்டிருக்க சாரதா சரிதாவிடம் மன்னிப்பு கேட்க ,ஒன்றும் புரியாத சரிதா மேலும் கணேஷும் சாரதாவும் நடந்தவற்றை விளக்க
சரிதாவும் தான் அவ்வாறு நடந்து கொண்டதன் காரணத்தை மறுபடியும் சொல்லி கட்டி அணைத்து  மன்னிப்பு கேட்டாள்.  
மன்னிப்பு கேட்க .

சந்தோஷத்தில் கணேஷும் ,சரத்தும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர் ...நால்வரும் சந்தோஷத்தில் சிரிக்க ஏதும் புறியாத அந்த மழலை சஞ்சுவும் தன் 2 பற்களை காட்டி சிரித்தாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக