பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 15 ஜூன், 2014

உங்க பவர்பாயின்ட் பிரசண்டேஷனை இன்டர்நெட் மூலமா எங்க இருந்து வேணும்னாலும் பாக்கலாம் ...

பவர்பாயின்ட் பிரசண்டேஷனை   இன்டர்நெட்ல எப்படி பயன்படுத்துறதுன்னு பாப்போம்..

1.முதல்ல நாமக்கு தேவையான பவர்பாயின்டை பிரசண்டேஷனை ஒப்பன் செஞ்சுக்கோங்க .

2.File மெனுவை கிளிக் பண்ணி 'Save As '  ஆப்ஷன் கிளிக் பண்ணுங்க


3. அடுத்து வர டயலாக் பாக்ஸ் -ல 'Save as Type '-ல 'web page ' -னு  செலக்ட் பண்ணிக்கோங்க 



4. அதுக்கு கீழ இருக்குற 'Change Title '-ல நமக்கு என்ன title குடுக்கணுமோ அதை குடுக்கணும்.



5. அடுத்து ,'publish' பட்டன்-ஐ கிளிக் பண்ணுங்க...இப்போ ஒரு டயலாக் பாக்ஸ் வரும் (இந்த மாதிரி வரும் சின்ன விண்டோவுக்கு பெயர் தான் டயலாக் பாக்ஸ்)

6. அதுல நமக்கு என்ன என்ன ஆப்ஷன் வேணுமோ உதாரணத்துக்கு எந்த ப்ரௌசர்(அதாவது வெப் தளங்களை பாக்க உதவக்கூடிய Internet Explorer,Fire Fox ,Chrome,இதுபோல் இன்னும் பல , இதுலாம் தான்  ப்ரௌசர்)சப்போர்ட் பண்ணனும்ங்குறதை குடுக்கணும்..'Web options' னு  ஒரு பட்டன் இருக்கும்..அதை கிளிக் பண்ணினா அதுல இன்னம் சில ஆப்ஷன்ஸ் இருக்கும் அதுக்கு எல்லாம் நமக்கு என்ன மாதிரி  தேவையோ அதை ஃபில் செஞ்சு ,'File name ' -னு இருக்குற இடத்துல எங்க இந்த  பிரசண்டேஷன் வெப் பக்கமா save ஆகணும்னு குடுக்கணும்.கடைசியா 'Publish' பட்டனை கிளிக் பண்ணனும்.


7. இப்போ உங்க பிரசண்டேஷன் கீழ இருக்குற படத்துல இருக்குறமாதிரி வடிவத்துல 'Save' ஆகி இருக்கும் 


8. இப்போ அந்த ஃபைல்-ஐ டபுள் கிளிக் பண்ணினா அது அழகா வெப் பக்கமா ஒப்பன் ஆகும்


9.இது ஒரு HTML  ஃபைலா Save ஆகிருக்கும்..இதை உங்க வெப்சைட்ல இணைச்சுக்கலாம்..இல்ல இதை ரைட் கிளிக் பண்ணினா 'View Source ' இருக்கும் அதை குடுத்தா இந்த பேஜ்க்கான கோடிங் மொத்தமும் இருக்கும் அதை காப்பி பண்ணி உங்க தளத்துல பேஸ்ட் பண்ணிக்கலாம்..

இப்போ உங்க பவர்பாயின்டை பிரசண்டேஷன்  இன்டர்நெட்ல பயன்படுத்த ரெடி !!!!

1 கருத்து: