பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 22 ஜூன், 2014

16 பேறுகள்..!

பெரியவர்கள் வாழ்த்தும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள். இது கீழ்கண்ட 16 வகையான செல்வங்களைக் குறிக்கும்.சோடக லட்சுமி என்ற மகாலட்சுமி தேவி நமக்கு பதினாறு ரூபங்களில் காட்சி தருபவள். பெரியோர்கள் நம்மை வாழ்த்தும் போது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.., என்று வாழ்த்துவர். அந்த 16 என்ன என்று தெரிந்து கொள்ளுவோம் .


1. வாழ்க்கையில் நமக்கு வழிகாட்டக்கூடிய கல்வி,

2. நீண்ட ஆயுள்,

3. நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள்,

4. வாழ்க்கைக்கு தேவையான செல்வம்,

5. உழைப்புக்கு தேவையான ஊதியம்,

6. நோயற்ற வாழ்க்கை,

7. எதற்கும் கலங்காத மனவலிமை,

8. அன்புள்ள கணவன் மனைவி,

9. அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள்,

10.மேன்மேலும் வளரக்கூடிய புகழ்,

11. மாறாத வார்த்தை,

12. தடங்கலில்லாத வாழ்க்கை,

13. வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல்,

14. திறமையான குடும்ப நிர்வாகம்,

15. நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு,

16. பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல்.

இந்தப் பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக